episode 03
இரண்டு நாட்களும் நிமிடங்களாய் கரைய …தனது தேன்நிலவு ஆசைகளை திகட்ட திகட்ட தீர்த்துக்கொண்டான் ரிஷி…மனதிர்க்குள் ரசித்திருந்த தருணங்கள்.பொக்கிஷமான நிமிடங்கள்…
“நிலா… “
“ம்ம்ம்மம்ம்… “
“நாம குழந்தை பெத்துக்கலாமா ..நமக்கு கல்யாணம் முடிஞ்சு நாலு வருஷங்கள் ஆகிடுச்சு..எனக்கு உன்ன மாதிரி குழந்தை வேணும் நிலா.. “
மோகத்தின் உச்சியில் அவளும் மாற்றிபேச மனமில்லாமல் சரி என்றாள்..கணவன் தன்னை கொண்டாடும் கட்டில்லின்பம் அவளுக்குள் இருக்கும் உண்மை நிலவை சிறிது ஆழ்நிலை மயக்கத்தில் வைத்து இருந்தது போலும்.ஏற்கனவே அவனது ஆசை ..அவன் மனைவியின் அலட்சியத்தால் சிதைந்துவிட்டது தெரிந்தால்… தான் மனைவிக்கு தனது ஆண் நண்பர்கள் பழக்கத்தால் கருக்கலைப்பு சகஜமானது புரியும்பொழுது அவன் எப்படி உணர்வான்…நினைக்கும் பொழுதே நான் பதறுகிறேன்…அதற்க்குப்பிறகு அவனால் இதே ஆழ்ந்த அன்புடன் நிலாவிடம் கூடி களிக்க இயலுமா? நிச்சயம் அவன் தாம்பத்திய வாழ்வு தோல்வியை தழுவும்..எதற்க்கு அவனுக்கு இவ்வளவு பெரிய தண்டனை…அவள் எதிர்பார்க்கும் சிற்றின்பம் அவள் கணவனிடமிருந்து நிச்சயம் கிடைக்கிறது.அவன் விரும்பும் பேரின்ப வாழ்க்கை இவளிடமிருந்து நிச்சயம்அவளுக்கு கிடைக்கப் போவதில்லை ..
“தேனு ….நா உன்ன ரொம்ப விரும்புறேன்…உன்கிட்ட காதல் பிச்சை கேக்குறேன்…பிளீஸ் அக்சப்ட் மீ…(accept me) கையில் ஒற்றை ரோஜாவுடன் மண்டிபோட்டு காதல் பிச்சை கேட்கும் சினிமா பார்த்து பார்த்து கெட்டு போன இளைய சமுதாய பிரதிநிதி பிரபாகர். பிரயாண அலுவலகத்தில் வேலை பார்ப்பவன். பொதுவாகவே கீழ்க்கண்ணால் பார்க்கும் அவன் பெண்களின் நடுவே அவ்வளவாக நல்ல பெயர் இல்லை.அதைப் பற்றிய கவலையும் அவனுக்கு கிடையாது.. திறமைசாலி.அவனால் நிறுவனத்திற்க்கு இலாபம் அதிகம்..நிர்வாகம் அவனைக் கண்டுகொள்ளவில்லை.
“ஸார்…உங்கள எனக்கு ரொம்பத் தெரியாது.. அந்த நிறுவனதுக்கு போகுற வழியுல பாத்திருக்கேன்.எனக்கு என்னோட அப்பா நல்ல வாழ்க்கைய அமைச்சுத்தருவாரு. காதலிச்சு,கல்யாணம் பண்ணுறதுல எனக்கே நம்பிக்கை இல்ல..விட்டுருங்க…என்று தன் பிடித்தமின்மையை நயமாகவே கூறி சென்றாள் தேனு.. பயிற்சி முடியும் நிலையில் இருந்ததால் பிரபாகரை கண்டுகொள்ளவில்லை. சிறிது பொறுத்து பார்த்து …திரும்பவும் காதல் பிச்சை கேட்க எப்படி கையாள்வது எனத் தெரியாமல் தன் அப்பாவிடம் போனில் சொல்லி ..வாறீங்களாப்பா….ரொம்ப பயமாவும் குழப்பமாவும் இருக்கு என முறையிட. இதுக்குத்தான்மா,சென்னை வேணாம்னு சொன்னேன்..என அங்கலாய்த்தவாறே,சரி…எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வரேன்.அதுவரைக்கும் சமாளி.முடிஞ்சவரைக்கும் அவன் கண்ணுல படாதே..என அறிவுரையுடன் முடித்துக்கொண்ட வெற்றி வேலிர்க்கு தெரியவில்லை.அவர் கையாள கிளம்புவது கருநாகமென்று.காலை சுற்றிய நாகம் கடிக்காமல் விடுமா…?
வாரம் ஒருமுறையாவது அழைத்து பேசும் ரிஷி தன் மனம் நிலவிடம் அடிவாங்குவதை இன்றுவரை தன் பெற்றோரிடம் சொல்லவில்லை…தனிப்பட்ட வாழ்க்கையை அணுகும் முறையும் தெரியவில்லை.ஒருவேளை தன் பிரச்சனைகளை பெற்றோரிடம் சொல்லி தீர்வு கண்டிருக்கலாம். அவர்களுக்கு குற்ற உணர்வு ஏற்படக்கூடாது என்று நினைக்கும் அவனுக்கு தெரியுமா…வரும்காலம் அவனுக்கு கொடுக்கப்போகும் பரிசு?
தனது மாப்பிள்ளை மற்றும் உடன் வேலை பார்க்கும் மூன்று நண்பர்களுடன் சென்னை வந்திறங்கிய வெற்றிவேலிர்க்கு மனம் முழுதும் சொல்லொணா துன்பம்..பொட்ட புள்ளைய பெத்து காபந்து செஞ்சு வளத்து ஒருத்தன் கையுல புடிச்சு தரத்துக்குள்ளார மனுஷ ஜீவன் வத்திரும்…பொண்ணு பெத்து வச்சிருக்கருவனுக்குத்தான் என்னோட மனசு படும் பாடு புரியும் என உடன் வந்தவர்களுடன் அங்கலாய்த்தவாறே தேனு இருக்கும் விடுதி வந்தனர்.தான் பெற்ற மகளை காக்க விரைந்து வந்திருக்கும் அப்பாவை பார்த்து கண்ணீரில் கரைந்தாள் மகள்.
“அப்பா…எம்மெல வருத்தமோ சந்தேகமோ இருக்காப்பா?”
“நிச்சயமா இல்லம்மா….பெத்தவங்களோட கண்காணிப்பும் முறையான வழிகாட்டுதலும் இல்லாத குழந்தைகள் தடுமாறுறது சகஜம்.எப்போ நீ தைரியமா உன்னோட நிலையை என்கிட்ட சொன்னியோ அப்பவே நீ தப்பு பண்ணலன்னு நிரூபணம் ஆகிடுச்சு…இனி ஆக வேண்டியத பாப்போம்…அந்தப் பையன காட்டு…பேசிபாக்குறோம் “
தான் மகளின் கண்ணீர் அந்த தகப்பனை அசைத்துப் பார்த்தது.உள்ளூர வெடிக்கும் நிலையிலான கோவத்தை அவரே புரிந்து கொள்ளவில்லை..புரிந்திருந்தா தன்னை சமன் செய்துக்கொண்டு பிறகு சென்றிருப்பார்.. எனக்குத் தெரிந்தவரை பெற்றோர் தங்களிடம் உணர்வுகளை வெளிப்படையாக பகிர்ந்துக்கொள்ள பிள்ளைகளை அனுமதித்தல் அவசியம்.வெற்றி சிறந்த தகப்பன் .மகளிடம் சந்தேகம் கொள்ளாமல் அவளது துயர் துடைக்க விரையும் உன்னத தகப்பன்.
“நீங்கத்தான் பிரபாகரனா?” கேள்வியுடன் வந்த நான்கு ஆண்களைக்கண்ட நரி பதுங்கியது..
”ஆமாம்…நீங்க?”
“நாங்க தேனுவோட சம்மந்தப்பட்டவங்க..உங்களோட பேசணும்…வெளிய வர முடியுமா?”
அலுவலகத்துள் ரசாபாசம் ஆவதை இரு தரப்பினரும் விரும்பாததால் அரைநாள் விடுப்பு எடுத்து வந்தான் பிரபாகர். அருகில் இருந்த பூங்காவினுள் சென்று பேசத் தொடங்கினார் வெற்றி.அமைதியாக தொடங்கிய பேச்சுவார்தை பிரபாகரனின் பதில்களாய் வெற்றியை வெறி ஏற்றியது.உடன் வந்தவர்களாலும் கோவத்தை கட்டுபடுத்த இயலவில்லை. முதலில் தேனுவும் தன்னைக் காதலிப்பதாகக் கூறியவன் நேரம் ஆக ஆக வேறுமாதிரி தன்னையும் அறியாமலே தன்னை வெளிப்படுத்தலானான். அதுவும் சரிதான். எவ்வளவு நேரம்தான் தன்னை மறைத்து பொய் புகலவும், வேஷமிடவும் இயலும்? மறைத்தாலும் தானே வெளிவந்தது அவனது விஷம்..ஆம்…விஷம்தான்.
“பொண்ண பெத்து ஊருலயே வச்சிக்காம சென்னை அனுபினது அவள வச்சி பணம் பாக்கத்தானே…பொம்பள புள்ளக்கி இவ்ளோ தூரம் தனியா வந்து தங்க அவசியமென்ன?பெரிய பத்தினி வேஷம் எதுக்கு?”என்று பெண்ணினத்தையே தன் வார்த்தைகளால் அவமதிக்க..மற்ற நான்கு ஆண்களாலும் அவனை நய்ய புடைக்காமல் இருக்க முடியவில்லை…
அந்த நிலையிலும் நல்லவேளை..தன் மகள் இவனைப்போன்ற தகாதவனிடம் காதலில் விழவில்லை என்றே வெற்றிவேலின் மனம் நிம்மதி அடைந்தது. பெண்ணை அடைய காதல் நாடகம் ஓர் வழி மட்டுமே என்பதை அவரால் உணர முடியவில்லை.இதைத் தவிரவும் பல வக்கிர வழிகள் உண்டு என்பதை உணர விடாமல் விதி அவர் கண்ணை மறைத்தது தேனுவின் பொல்லாத நேரமே…இரண்டு பெண்குழந்தைகளின் பொறுப்பான அப்பாவால் பெண்களுக்கான வக்கிரங்களை யோசிக்க முடியவில்லை.அவரது நல்ல மனது பெண்களை காப்பது பற்றி மட்டுமே அறிந்து வைத்திருந்தே அன்றி வேறு விதமாய் அல்ல. வாழ்க்கை எப்படி நகர்வதாயினும் தேனு இப்படிபட்ட தகப்பனுக்கு மகளாய் பிறந்தது அவளது அதிர்ஷ்ட்டமே. நான் சொல்ல வருவது மேற்கொண்டு வளரும் அவள் வாழ்க்கை விசித்திரங்கள் உங்களுக்கு நிச்சயம் புரிய வைக்கும்.
வெறி கொண்டவனாக நேரத்திர்க்காய் காத்திருந்தது விஷநாகம்..இல்லை இல்லை… குள்ள நரி..எப்படி குறிப்பிடுவதேன்றே புரியவில்லை..
தன் கல்லூரி தேர்வுகளில் அதிக கவனம் செலுத்திய தேனு பிரபாகரனை மறந்தே போனாள். அவனும் இவளை தொல்லைகள் புரியாமல் ஒதுங்கியே இவளை கண்காணிக்கலானான்..
தேர்வுகளை முடித்துவிட்டு தன் பெற்றோரிடம் வருவதாகச் சொல்லிவிட்டு பிரயாண ஏற்பாடுகளை கவனிக்கலானாள் தேனு.
“ரிஷி கல்யாணம் முடிஞ்சு நிறைய வருஷங்கள் தாண்டுதே..குழந்தை பத்தி எதுவும் யோசிக்கலையா?” வீடு வந்த மகனிடம் விசாரித்துக்கொண்டிருந்தனர் வேதநாயகம் தம்பதியினர். தங்களுக்கே வெகுவருடங்கள் கழித்து புத்திர பாக்கியம் கிடைத்ததால் வந்த யோசனை.திருமணம் ஆகிவிட்ட மகனிடம் இது பற்றி கேட்க தயக்கம்.மும்பை சென்ற மருமகள் இன்றுவரை வந்து காணாதது என்ற பலதர விஷயங்களூக்கு உட்பட்டத்தாய் இருந்த அவர்களது கேள்வி அவனையும் ஈட்டியாய் தாக்கியது..
கடந்த முறை கூடலின் இனிமையில் குழந்தை பெற ஒப்புக்கொண்ட நிலா மும்பை திரும்பிய பின்னர் இவனிடம் பேசுவதை முற்றிலும் தவிர்த்திருந்தாள். அவளது உடற்தேவை முடிந்தவுடன் .மீண்டும் ரிஷி மீதான அலட்சியம்..ஒருவேளை மீண்டும் பசித்தால் இவனிடம் வருவாளோ?தெரியவில்லை. அதற்கு நாம் ரிஷி எவ்வளவு காலங்கள் தவம் இருக்கவேண்டுமோ?
மீண்டும் மீண்டும் அவளிடம் பேசுவதற்குகூட முயற்சிகள் தோற்றுக்கொண்டிருக்க..திரும்ப தன் வேலைகளில் துன்பதிர்க்கு மருந்து தேட ஆரம்பித்தான் ரிஷி.இதை என்னவென்று இரு தரப்பு பெற்றோரிடமும் கூற இயலும்? திரும்ப சென்னை வர அவன் மனைவி இசையவில்லை..தன்னிடம் எதுவும் குறை உள்ளதா என மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்துக்கொள்ள மனதில் முடிவெடுத்தவனாக “பாக்கலாம் அம்மா…நா இதை அவசரமா கையாள இயலாது.எனக்கு வேலையும் அதிகம்.அடிக்கடி வெளிநாடு பிரயாணம் வருது.கொஞ்சநாள் இதுலேந்து ரிலாக்ஸ் பண்ணிக்கிட்டா மத்தத்தப்பத்தி யோசிக்க முடியும்..”என்று ஒர்விதமாக தன்மீதும் பழியேற்றான் ரிஷி…
இவனது மென்மையான நடவெடிக்கைகளுக்கு இவன் மனைவி நிச்சயம் தகுதி படைத்தவளல்ல… ஆனாலும் இவனை புரிந்து கொள்வாளா?
எந்த ஆணும் செய்ய எளிதில் முன்வாராத ஒரு விடயம்..தனக்கு குழந்தை பெற்றுக்கொள்ள தகுதி உள்ளதா என்று பரிசோதனை செய்துக்கொள்வது ..பெண்கள் மீதே குற்ற பத்திரிக்கை வாசித்தல் வெகு காலமாய் ஊறிவிட்ட ஒன்று.
ஏனோ ,அதிக காலம் அவனது பெற்றோர் குழந்தை இன்றி தவித்ததாலோ அவனுக்குள் இது போன்ற கருத்து உதயமாகி இருக்கலாம். மும்பையின் பிரபல மருத்துவ மனையின் வளாகத்தில் தன்னை மருத்துவர் அழைப்பதற்க்காக காத்திருந்தான் ரிஷி. சில மருத்துவ பரிசோதனைகளுக்கு எழுதிக்கொடுத்த ஆண் மருத்துவருக்கே இவன் மீது மதிப்பு உயர்ந்தது. பரிசோதனைகளுக்கான முடிவுகளை கண்ட மருத்துவரோ, “உங்களுக்கு உடம்புல எந்த வகையிலும் பிரச்சனை இல்ல..
ஒருவேளை நீங்க அளவுக்கதிகமா மன அழுத்ததுல இருக்கலாம். அதோட உங்க மனைவியயும் பரிசோதனை பண்ணாத்தான் அடுத்து என்னன்னு சொல்ல முடியும் “என்று முடித்துக்கொண்டார்.
உண்மைதானே..இருபாலரும் செய்துக்கொள்ள வேண்டிய பரிசோதனைகளை இவன் மட்டும் செய்துகொண்டு என்ன பயன்..பலமுறைகள் கருக்கலைப்பு ஆன இவன் மனைவியிடமும் உடலளவில் எதும் பிரச்சனை இது வரை இருப்பதாகத் தெரியவில்லை!
மனம் இவனிடம் ஒன்றாத நிலா இவனுடன் பரிசோதனைகளுக்கு வர சம்மதம் சொல்லுவது நடக்காத நிலையில் வீண் விவாதங்களில் நேர வீண் ஆவதை ரிஷி விரும்பவில்லை.. ஆனாலும்,.எத்துணை நாள் தன் நடவெடிக்கைகளை அவள் மறைக்க இயலும்?
விதி தன் அடுத்த கட்டத்திற்க்கு இவர்களை தள்ளியது. அதிக கருக்கலைப்பு அதுவும் மிகக்குறுகிய காலத்தில் நிகழ்ந்தமையால் நிலாவின் உதிரப்போக்கு அளவுக்கதிகமாக மாறியது. இல்லை மாதவிடாய் வாராமல் படுத்தியது. வழக்கம்போல் தனியாகவே மருத்துவரை அணுகிய நிலாவிடம் இம்முறை மிகக்கண்டிப்பாக கணவரை அழைத்து வருமாறு பணித்தார் மருத்துவர்.. வேறு மருத்துவரை அணுக முடியாத நிலையில் ரிஷியை அணுகினாள் நிலா.மாசடைந்தநிலா.எப்பொழுதும் மனைவியை மரியாதையாகவும் காதலுடனும் கையாளும் ரிஷி அவளது நீண்ட தவறுகளை மன்னிப்பானா? அதிருக்கட்டும்…தான் செய்தவை தவறுகள் என நிலா புரிந்து கொண்டு ஒப்புக்கொள்வாளா? எனக்கு என்னவோ மிகவும் சந்தேகமாகவே இருக்கிறது..மனைவியிடம் காதல் கொண்ட கண்ணாளன் அவன்..அவனது மனப்போக்கை நிச்சயம் என்னால் கணிக்கவே இயலவில்லை!!
தேனுவிர்க்கு காத்திருப்பது நிச்சயம் அபாயம்தான்..மறுப்பதர்க்கில்லை.. காலத்தின் கைதிகளாய்..தேனு சென்னையில்….ரிஷி வேதநாயகம் மும்பையில்…
படிக்கும் உங்களைவிட எழுதிக்கொண்டிருக்கும் எனக்கு மிகவும் பதற்றமாக உள்ளது.
