episode 5

ஒரு பெண்ணைக் கடத்துவது ..இவ்வளவு எளிதாகிப்போனத1. மாலை ஏழுமணிக்கு மேல் ஆனதால். யாரும் அதிகம் கண்டுகொள்ளவில்லை. பெட்டியில் அமர்ந்திருந்த ரயில்வே போலீசின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு  வயதுப்  பெண்ணை கடத்துவதென்றால்..அவர்களது திறமையை என்னவென்று  புகழ்வது?  அருவருப்பை என்னுள்ளே ஏற்படுத்துகிறது.

நாளை ரிஷி சென்னை வருகிறான்..அவன் மனம் முழுதும் நிலா.எங்கே தவறு …?

ஆடை.,அணிகலன்கள்,நிறம்.,உணவுவகை அனைத்துமே வெகுப்பொருத்தம்தான்.மறுப்பதர்க்கில்லை.அத்தைமகள்-மாமன் மகன் எனும்பொழுது விருப்பங்கள் ஒன்றாய் இருப்பதில் அதிசயம் ஒன்றுமில்லை.ஆனால், இங்கு அடிப்படை கொள்கைகளே வேறுபட்டிருக்கிறது.  நீ பெரிய தவறு  செய்துவிட்டாய் என நிலாவை குற்றம் சாடுகிறது ரிஷியின் மனம்.நான் செய்தது தவறே இல்லை..வயிருக்கு உணவு என்பது போல் உடலுக்கான தேவை..இதில் தவறென்ன என்றது நிலாவின் மனம்.அத்துடன் அவளுக்கு கருப்பு-வெள்ளை நிறம்..  இன்னும் எத்துணையோ ..காரணங்கள் சப்பைக்கட்டு கட்டினாலும், திருமண பந்தத்தில் அவளுக்கு உடன்பாடு இல்லை என்பது நிதர்சனம்.

வெளிநாட்டில் இருக்கும் அனைத்து சிறுவயதினரும் இவளைப்போல் சிந்திப்பது இல்லை..ஏன் நாம் இந்தியாவிலும் இப்பொழுது நிலாவைபோல் யோசிக்கும் இளைய சமுதாயம் பெருகிவருகிறது .கட்டுப்பாடுகள் பிடிக்காத மனோ நிலை காரணமாக இருக்கலாம்.இல்லை..பொறுப்புகள் சுமக்க  பயமாய் இருக்கலாம் .தனிமை,பகிர்ந்து கொள்ள வீட்டில் பெரியவர்கள் இல்லாத நிலை எது வேண்டுமானாலும் இளம் வயதினர் பாதை மாற  காரணமாக இருக்கலாம்! எதுவாயினும்..கலாசாரம் என்பதும்  நல்லொழுக்கம் என்பதும் வேறல்ல என்பதை நிச்சயம் புரிந்து கொள்ள வேண்டும்.நல்லொழுக்கம் மட்டுமே மனிதனை விலங்கிலிருந்து வேறுபடுத்திக்காட்டுகிறது.

திருமண பந்தம் இளமைக்கால உணர்வு வடிகால் மட்டுமல்ல..முதிய வயதின் ஊன்றுகோல்,என நிலா போன்ற கொள்கை(பிடிப்பு )உள்ளவர்களுக்கு புரிவதில்லை.நம்மால் புரிய வைக்கவும் இயலாது.  ரிஷி போன்ற உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மனிதனுக்கு நிலாவின் போக்கு நிச்சயம் தவறானதே. மனைவியைத்தவிர வேறொரு மங்கையை காணாத அவனுக்கு இவ்வுலகம் சாமியார் என பட்டப் பெயர் வைக்கப்போவது உறுதி.

சென்னையில் அவன் பெற்றோருக்கு எவ்வாறு சொல்லி..எப்படி புரிய வைப்பது? இதுபோன்ற சூழ்நிலைகளை தவிர்க்கவே ராஜேஸ்வரி மற்றும் அவரது கணவர் நிலாவிர்க்கு அவசரமாக இந்தியாவில் திருமணம் செய்து வைத்தனர்.ஆனால்,வேதநாயகம் குடும்பத்தினருக்கு இதுவரை நிலாவின் போக்கு தெரியாது..திருமணம் பல மெய்கள்- சிலசிறுபொய்கள் சேர்ந்ததுதானே? புதியதாய் வந்திருக்கும் பூகம்பத்தை ரிஷி ஜீரணம் செய்ய இயலாமல் தவிக்கிறான்..என்னவானாலும்..திருமண பந்தத்தை உடைக்க இரு பக்க பெற்றோரும் உடன்பட போவதில்லை..அப்படியானால்..இவ்வளவுக்குப் பிறகும் நிலாவோடுதான் ரிஷி வாழ வேண்டுமா? 

“கற்பு என்பதை பொதுவில் வைக்கவேணும்” என்பதுதானே தர்மம்? அவனதுநல்லசெயல்காளாலும் காதலினாலும்..ஏன்…கூடலினாலும்கூட .சரி செய்ய இயலாத இந்த சீரழிவை பொறுத்துக்கொள்ள   வேண்டுமா?  இங்கே அவனது ஆண்மை,கம்பீரம் அடிவாங்கியுள்ளது.வீட்டில் உள்ள பெரியவர்கள் .யாருக்காவது புரியுமா.?பலவாறு தன்னிலை மறந்து யோசித்துக்கொண்டிருந்தான் ரிஷி..பொழுது விடிந்தால் சென்னை கிளம்பவேண்டும்..ஆனால்.,அவன் வாழ்வில் இனி பொழுது புலருமா…?

 

விதியை வெல்ல எவராலும் இயலாது.. தான் பெற்றோர் சொல்லப்போகும் பதில் தெரிந்திருந்தும் அவர்களிடம் நடந்தவைகளை கூற ரிஷி விழைந்தான்.அவனுக்கு இந்த விஷயத்தை அணுகும் வழி தெரியவில்லை. மேற்கொண்டு ஏதேனும் விபரீதம் நடக்கும்முன்னர் தடுக்க வேண்டும் என்பது மட்டும் தெளிவாய் புரிந்திருந்தது.வீட்டின் பெரியவர்களுடன் பெண்ணை பெற்றவர்களும் இருந்தனர் தன் மகள் வாழ்வைப்பற்றி யோசித்த செல்வம் தம்பதியினர் மருமகனை நினைக்கவில்லை.. ரிஷியும் அவர்களை உறவு சொல்லி அழைப்பதை கவனமாகவே தவிர்த்தான்…  ரிஷி சொன்னவைகளை வேதநாயகம் தம்பதியினரால் நிச்சயம் ஜீரணம் செய்ய இயலவில்லை.நிலா குடிப்பதுடன் அந்நிய ஆண்களின் பழக்கம் கொண்டிருக்கிறாள் என்பது பெரியவர்கள் நால்வருக்குமே அதிர்ச்சியாய் இருந்தது.

வேத நாயகம்தான் முதலில் வெளிவந்தார்.”பாரு ரிஷி..நீ சொல்றதை நம்பவே முடியல.ஆனா கல்யாண பந்தத்தை அவ்வளவு சீக்கிரம் முறிக்க முடியாது. உன் மனைவியா இல்ல…உன்னோட அத்தப்போண்ணா நிலாவ நினைச்சு வாழப்பாரு.  முடிஞ்ச வரைக்கும் கல்யாணத்தை தக்கவக்குறது எல்லாருக்கும் நல்லது. கல்யாணம் பொம்மை விளையாட்டில்லை. தப்பு செஞ்சிருந்தாலும்,திருத்திக்க ஒரு வாய்ப்பு கொடுப்போம். நாங்க பத்து நாள் அங்க வந்து இருக்கோம். பார்ப்போம்” என தீர்வு சொன்னார்…பெரியவர் வேதநாயகம்.எத்துணை சொன்னாலும் ரிஷியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. இவ்வளவு ஒழுக்கமா இருக்குற எனக்கு எதுக்கு எவ்வளவு பெரிய தண்டனை…காலத்திர்க்கு ஏற்றவாறு வாழாமல் தவறுகளில் இருந்து ஒதுங்கியது தவறா என அவன் மனம் அழுதது..

ரிஷியால் நிலாவை மன்னிக்க முடியவில்லை.”உடம்பால் பலாத்காரம் செய்யப்பட்டு இருந்தால் அவளுக்கு மனதின் மருந்தாய் இருந்திருப்பேன்.ஆனால் மனதால் தூய்மையை விடுத்தவளை எவ்வாறு மன்னிப்பேன்.அப்பா..அம்மா…எல்லோருமே மூன்றாம் நபராய் சொல்கிறார்கள்…என்னுடைய மனம்.!”

ஆறுதல் தேறுதலுக்கு இனி,இங்கு வழி கிடையாது என்பதுவும் தெளிவாகவே புரிந்தவனாக அடுத்தநாளே மும்பை கிளம்பிவிட்டான்…தேவைக்குமேல் பெற்றோரிடம் வரமாட்டேன்…என மனதினுள் முடிவெடுத்தான்.

விடை காண முடியா பல கேள்விகளுக்கு விடை தேடி ரிஷி..தேனு…  புலரும் சூரியன்..சூழ்ந்திருக்கும் கவலை மேகங்கள். 

மது போன்ற விஷயங்களை முயற்சி செய்து தோற்றான். அவன் வளர்ப்புமுறை அவனை தவறு செய்ய அனுமதி அளிக்கவில்லை.மனதில் வலி ஏற ஏற மீள முடியாமல்…உயர் மன அழுத்ததிர்க்கு ஆளானான் ரிஷி.  இவ்வளவு நடந்தும் அவன் கட்டிய மனையாளுக்கு ஒன்றும் தெரியாது.  அவள் தான் சந்தோஷத்திர்க்கு எந்தத் தடையும் இல்லாமல் சுற்றினாள்..மருத்துவரின் அறிவுரைகள் அவள் மீண்டும் கருத்தரிக்காமல் நடக்க வைத்தது…வேறொரு மாற்றமும் இல்லை.ரிஷி பெற்றோர் வரும் சமயம் அவள் தான் உண்மை முகத்தை மறைக்க விரும்பவில்லை..விளைவு  மன உளைச்சலுடன் அவர்கள் சென்னை வந்து சேர்ந்தனர்.   அவர்களுக்கும் என்ன செய்வது என புரியவில்லை. ராஜேஷ்வரியோ தன் மகளை வாழச்செய்யுமாறு அண்ணனிடம் அழுதார்…காலம் இன்னும் கனிய வேண்டும். 

ரிஷியை மருத்துவரிடம் அழைத்து சென்றாகவேண்டும்..ஆனால் கர்ஜிக்கும் அந்த சிங்கம் இப்படியொரு பிரச்சனையில் இருப்பது யாருக்குமே தெரியாதே!  தொழிலில் வழக்கம்போல் அவன் இருக்கும் இடம் உச்சியே!

ஆனால்..அவன் தனக்கு வடிகாலாக செய்துக்கொண்டிருக்கும் ஒரு விஷயம்…அவன் வாழ்க்கையில் மாபெரும் திருப்பத்தை கொடுக்கப்போவதை அவன் நிச்சயம் அறிந்திருக்கவில்லை.  

தேனு கடத்தப்பட்டிருக்கிறாள்.  மயக்க மருந்தின் வீரியம் குறையா நிலையில் தனக்கு நடப்பது என்னவென்றே தெரியா நிலையில் அவளை கிரகணம் சூழ்ந்துள்ளது..  மூளை மசமசப்புக்கிடையில் ஏதேதோ நினைவலைகள்..கனவா-நனவா ஒன்றும் புரியவில்லை.

தேனு கடற்கரை சாலையில் தனது வகுப்பு முடிந்து பேருந்தில் செல்கிறாள்.  கூட்ட நெரிசலில்சிக்கிக் கொண்டே பயணம் தொடர்கிறது.  அடுத்த நிறுத்ததில் ஒரு பெண் தேனுவின் வயது இருக்கும்.அழுது கொண்டே இறங்குகிறாள்.அவளுடன் ஒரு சில பெண்களும் இறங்குகிறார்கள்…அந்த பெண்ணின் சுரிதார் பின்புறம் முழுதும் வெள்ளை வெள்ளையாய்… பிசுபிசுப்பாய்..ஏதோ?தேனுவிர்க்கு ஒன்றும் புரியவில்லை..ஆனாலும், அவள் மனமும் உடலும் பதறுகிறது..அரை மயக்க நிலையில் அவளது கண்களில் இருந்து கண்ணீர் வழிகிறது…  ஒன்று…இரண்டு…மூன்று..எத்தனை முறை… எத்தனை பேர்…அவளது உடலிலிருந்தும் வெளியே  அதே பிசுபிசுப்பு…உடலினுள்ளும்,சொல்ல முடியா வேதனை,வலி!   

தனக்கு நடப்பதை அவளால் அறிந்துக்கொள்ள முடியவில்லை…பெண்ணுடல் கிடைத்த வெறியிலும் அந்த மிருகங்கள் அவளை காயம் ஏற்பட கையாளவில்லை… ஆனால் .இல(வசமாக)கிடைத்த சொர்கத்தை எத்துணை முறை அனுபவித்தாலும் அவர்களது வெறி அடங்குவதாய் இல்லை.  கூட்டத்தலைவன் பிரபாகரனுக்கோ, கேட்கவே வேண்டாம்..அவளை சுய நினைவுடன்..கதற வைக்க அவன் ஆழ்மனம் விரும்பியது…  டேய்..இருக்குற சக்திய எல்லாம் முடிச்சிராதீங்கடா …அவ முழிக்கட்டும்..அப்போ…மஜாவே தனிதான் என்றவனது கண்கள் கற்பனையில் மயங்கியது.மயக்கம் தெளிய மயக்கத்துடன் கயவர்கள்.

 

 

 

இரண்டு நாட்களுக்குப் பிறகும் மகளிடமிருந்து தகவல்கள் இல்லை…தேனு குடும்பம் பதறியது…காவல் துறையை அணுகவும் பயம்.வயதுப்பெண்ணாயிற்றே! மேலும் ஒருநாள் பொறுத்து தங்களால் முடிந்தவற்றை முயற்சித்துவிட்டு…வேறு வழி இல்லாமல் காவல் துறையை அணுகினார்கள் தேனுவின் வீட்டினர் …விசாரணையில் பிரபாகரனின் திட்டம் கண்டுபிடிக்கப்பட்டாலும்..பல பெரிய தலைகளின் பிள்ளைகள் இதில் சம்மந்தப்பட்டிருப்பதாக தெரியவர..காவல் துறையினர் மறைமுகமாக விஷயத்தை சொல்லிவிட்டார்கள்.  

மகளது நினைவில் ஒரு மலையாள மாந்த்ரீகரை அழைத்துவர வெற்றிலையில் மை போட்டு பார்த்தவரது உடலே நடுங்கியது…  

யாரும் சிக்கக்கூடாத விஷயத்தில உங்க மக சிக்கி இருக்கா..உயிருக்கு பயமில்லை…அவ திரும்ப ஏறக்குறைய மூணு வருஷங்கள் பிடிக்கும்…ஆனா,அவ உங்க மகளா திரும்ப வாய்ப்பில்ல..அவ மேல தப்பில்லை…இந்த கண்டத்துல தப்பிச்சா….அவ வாழ்க்கை நிலையே மாறிடும்…உங்க பொண்ணுக்காக தினமும் பகவதிக்கு விளக்குப்போடுங்க..என்றுவிட்டு, தக்ஷிணை வாங்காமல் மறுத்து  சென்ற அவரைப்பார்த்து குடும்பமே ஸ்தம்பித்தது. இதற்கு மேலும் அவலங்கள் தொடர்ந்தால் அந்த சிறுபெண் எப்படி தாங்குவாள்?

மயக்கம் தெளிந்த பின்னர், அவள் நினைவுடன் நடந்தவை அவள் உயிரை உரசியது…தெய்வமே..!  எனக்கு இவ்வளவு நடக்கும்பொழுது என்னோட உயிர் ஏன் போகலை என கதறினாள்…  தன்னைக்காத்துக்கொள்ள போராடினாள்..  ஏய்!  சும்மா இருடி…. பல முறை முடிஞ்சது..உன்னை நினைவோட அனுபவிக்க காத்திருக்கோம்…உங்க வீடு ஆம்பளைங்கள வச்சு அடிச்சீல்ல ..அதான்…என்னோட ஆம்பளத்தனதோட இன்னும் சிலபேரயும்   கூட்டிவந்திருக்கேன் ..

பல மணி நேர மயக்கம்…அவர்கள் ஆண்டதால் வந்த சோர்வு..அதிர்ச்சி..என பல தாக்குதல்களால் போராட முடியாமல்…கதறும் அந்த சிறு மானைக் கண்டு அதிகமாய் வெறி பிடித்து குதறின..வேட்டையாடும் மிருகங்கள்!   என்னைபொறுத்தவரை கற்பழிப்பை ரசித்து  செய்பவர்கள்  மன நோயாளிகள்…இல்லாவிடில் கதறுவதைக்கண்டு எவ்வாறு ரசித்து முன்னேற இயலும்?

இன்னும் உனக்காக நிறைய  காத்திருக்கிறது என்று சிரித்தது அவளது விதி.

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!