episode 8

 

 

இரண்டு நாட்களாக விடாமல் 

பெய்துக்கொண்டிருந்த மழை ரிஷியின் ஆவேசத்தை ஒத்துக் காணப்பட்டது.  தேனுவுடன் அவன் வீட்டிர்க்குள்ளே நுழைந்த தருணம் ஆரம்பித்த இயற்க்கை பேரிடர் தனது ஆவேசத்தை சிறிதும் குறைத்துக்கொள்ளும் உத்தேசத்தில் இல்லை  ரிஷியும் தனது ஆழ்மன உளை ச்சளிலிருந்து வெளியே வருவதாகவும் இல்லை.  

 

 

     “உன்னோட நேம்?  ம்ஹூம் ..முன்னா ஏதோ சொன்னான்.நல்ல தமிழ் பெயராச்சே!” தன் முன்னுச்சியை கோதியவாறே பேசிய ரிஷியின் சிற்பத்தை ஒத்த உருவத்தில் ஒருகணம் தேனுவின் இதயம் நின்று பின்பு மெதுவாய் தாளம் தப்பி துடிக்க ஆரம்பித்தது. ‘தான் செய்ய வந்ததென்ன? செய்து கொண்டிருப்பதென்ன…’ என்று தன்னுள் வெட்கியவாறே ரிஷியின் கேள்விகளுக்கு விடை அளிக்கலானாள்.

“என்னோட பெயர் தேனுகா”

“ஓஹோ!  இந்த தொழிலுக்கு வந்து எத்தனை வருஷங்களாச்சு ? “

அவனது கேள்வியில் அதிகப்படியான ஏளனம் அதை சிறு வியப்புடனே கவனித்தவளாக “இரண்டரை வருஷங்கள்”என  பதிலுரைத்தாள் தேனு.

 

“எதுக்கு இந்த தொழிலுக்கு வந்த? கைச்செலவுக்கு பணம் பத்தலை அதனாலத்தானே? வேளைக்கு ஒரு அலங்காரம். ஆசைய தீத்துக்க ****…ஆக உங்களுக்கெல்லாம் எல்லா விதங்கள்ளையும் சுகம் கொடுக்கும் எந்திரங்களாடி ஆண் பிள்ளைகள்?”

அவனது கேள்வியில் சிறிது திடுக்கிட்டாள் தேனு.  ஏதோ ஒன்று நிச்சயம் சரி இல்லை என்பது அவளுக்கு மெல்ல உறைக்கலாயிற்று .

“இல்ல சர்.எதிர்பாராத விதமா இங்க வந்திட்டேன்” என்று குரலில் பணிவுடன் பதிலுரைத்தாள் ..

 

“உன்ன பாக்க அப்படி தெரியலயே?” ரிஷியின் கண்கள் தேனுவின் சிவப்பேறிய மெகந்தி டிசைனில்.அந்த சிவந்த நிறம் ரிஷியின் கண்களிலும் ..

பார்க்கும்பொழுது,தன்னையும் அறியாமல் இரண்டடி பின் சென்றாள் தேனு.  அவளது அடி வயிறு வரை பயமெனும் குளிர் பரவிற்று.  அவன் குடித்திருக்கிறானா? என்ற ஐயமும் இல்லை.  பல மணி நேரங்களாக இருவரும் ஒன்றாகத்தான் இருக்கிறார்கள் ..

 

 

“சரி… சரி ..போயி குளிச்சிட்டு வா…இந்த கன்றாவி எல்லாம் எனக்கு பிடிக்காது” என அவளது உதட்டுச் சாயத்தை சுட்டிக்காட்டினான் .

ஏதோ ஒரு நிலையில் அவனுக்கு பெண்களைக் கண்டால் வெறுப்பு என்பதுவரை தேனு புரிந்து கொண்டாள். அந்தரங்கங்களை பகிர்ந்து கொண்டாலே பிறருக்குப் புரிவது கடினம்.இங்கு என்னை அழைத்து வந்திருக்கும் மனிதனைக் கண்டால் மோசமானவனாக தெரியவில்லை..ஆனால், அவனைக் காணும்பொழுது வேட்டையாட காத்திருக்கும் விலங்கினை ஞாபகம் வருதே’என தன்னுள் சிந்தனைகளில் மூழ்கியவள் தண்ணீரில் நனைந்தாள். 

அறையில் ரிஷி  பால் தம்ளருடன் இவளை வரவேற்றான். “இல்ல சர் எனக்கு வேணாம்…” அவள் குரல் வெளியே வரவில்லை..அம்மாவின் வளையல் அணிந்த கைகளில் இருந்த பால் தம்ளர் நினைவடுக்குகளில்..தேனு இந்த நினைவுகளில் இருந்து வெளியேற இயலாமல் பால் குடிப்பதையே நிறுத்தி இருந்தாள்..  ரிஷி அவளை விடுவதாய் இல்லை..உன்னை இங்க கூட்டிக்கிட்டு வந்திருக்கர்து “தி க்ரேட் ரிஷி..என்கிட்ட எதிர்த்து பேசாம இருந்தால் உனக்கு நல்லது.” பாலை வைத்துவிட்டு பால்கனிக்கு சென்றுவிட்டான் .மழையுடன் சேர்ந்த காற்று அவள் உடலை ஊடுருவி தேகம் முழுதும் பரவ பால் தம்ளரிடம் அவள் கைகள் செல்வதை ஒரு முறுவலுடன் கண்டான். சரியான சூடு.. தொண்டைக்கு நல்லா இருக்கு..கொஞ்சம் டேஸ்ட் வேற மாதிரி இருக்கு என அவள் மனதில் நினைத்தது முகத்தில் தெரிய, ”ஆமா, கொஞ்சமா பிராந்தி கலந்தேன்” என்றான் நம்புவதா வேண்டாமா எனும் குழப்ப ரேகைகள் மீண்டும் அவள் முகத்தில்.

 

“சரி, நீ என்னோட ரூம்ல  இரு.  வரேன்..என்றுவிட்டு குளியறைக்குள் புகுந்தான் ரிஷி.சொன்னபடியே பத்தாவது நிமிடம்,அவன் தனது படுக்கையறையில்..

தேனுவுடன் சாதாரணமாக ஆரம்பித்த முன்  விளையாட்டை அவன் சிறிது சிறிதாக கூட்டினான்.அவன் நினைவுகள் முழுதும் நிலாவுடனான திருமணத்தில் ஆரம்பித்து முன்னேறிக் கொண்டிருக்க அவன் உடல் மொழி நிலாவை தாக்கத் தொடங்கியது..

ஆம், அவனைப் பொறுத்தவரை  நிலாவின் மற்றுமொரு பதிவு அருகில் தன்னுடன் இழையும் பெண்..தேனுவின் ஒத்துழைப்பு அவனிடம்    முரட்டுத் தனதையும் கோபாவேசத்தையும் தூண்டும் தூண்டுகோல் என்பதை பேதை அறிந்திருக்கவில்லை.

 

முத்தத்தில் ஆரம்பித்த யுத்தம்  கடிக்கும் நிலைக்கு சென்றது. அவனது வலிய கரங்கள் தேனுவின் முடியின் ஆழத்தை இழுத்துப்பிடிக்க இதழில் ஆரம்பித்த  பற்களின் தண்டனை அவளது பற்றுதலான சதையமைப்பைக்கொண்ட கன்னங்கள் கழுத்து திறண்ட ******** என ஒருஒரு பகுதிக்குமாய் கீழிறங்கி தண்டனைகளை வாரி வழங்கிக் கொண்டிருந்தது…

 

வலி தாங்காமல் தேனு கதற  ரிஷியின் மனமோ, நிலா கதறுவதாய் பாவித்து  கொடூரத்துடன்  தண்டனைகளை அதிகமாக கொடுக்க  சந்தோஷமாய் ஆணை இட்டது.. எதையும் உணரும் நிலையில் அவனில்லை..அந்தரங்க பகுதிகள் அனைத்துமே கொடூர விலங்கினங்கள் மொத்தமாய் மாமிசத்தை கையாளும் முறையில் கையாளப்பட்டிருந்தது.  உடலின் மென்பகுதிகள் ரத்தம் சிந்த ஆரம்பித்தன.  நா வரள,இன்றுடன் தன் உயிர் பறவை பறந்துவிடும் என்று மனதினில் சந்தோஷப்பட்டாள் தேனு.

ஏறக்குறைய ஒண்ணரை நாட்களின் முடிவில் சோர்ந்து கட்டிலின் கண்மூடினான் ரிஷி…மொத்தமாய் அவளை சேதப்படுத்தியும் கூடலை அவன் ஆழ்மனம் விரும்பவில்லை. நிலாவுடன் கட்டில் இன்பம் சாத்தியமில்லை என அவன் மனம் அவனை அடக்கி வைத்திருந்தது. கிழிந்த மென் காகிதமாய்..ரத்த வெள்ளத்தில்கட்டிலின் மறுபுறம் தேனு..அவளுக்கு நினைவு தப்பிவிட்டிருந்தது. தன் நிலையை உணரும் நிலையில் இருவரும் இல்லை. தனது நிலையில் நிலாவை பழிவாங்கிவிட்டதாக ரிஷியின் மனம் நம்பியது..ஏற்கனவே அவன் தண்டனை கொடுத்திருந்த பெண்களைவிட இம்முறை தேனு நூறு மடங்கு அதிகமாய் அனுபவித்து விட்டாள் . வெளியில் மழை சிறிது குறைந்திருந்தது. இன்னும் இருவருக்கும் மயக்கம் தெளியவில்லை.

           அவனுக்கோ பழிவாங்கிவிட்டதாக மயக்கம். தேனுவுக்கோ   அவன் குதறிப்போட்டதில் உண்டான மயக்கம் .

 

 

அடுத்தநாள் மதியம் எழுந்த ரிஷிக்கு ஒன்றும் தெளிவாக ஞாபகம் இல்லை..ஆனால், பக்கத்தில் ரத்த தோய்ந்த படுக்கையில் தானும் அதையே உடலெங்கும் பூசி மங்கி இருக்கும் அந்த பெண். அவனுக்கு ஒவ்வொன்றாய் நினைவில் வரத்தொடங்க..அவளுக்கு மூச்சு வருகிறதா என கைவைத்து பார்த்தான். அவள் முகத்தை பார்க்கையில் குற்ற உணர்ச்சி தாக்க, நீரை எடுத்து முகத்தில் தெளித்து அவள் வாயிலும் புகட்ட சிறு முனகளுடன் கண்களைத் திறந்தாள் அவள்…இப்பொழுதும் நிலாவிர்க்கு பதில் யார் இந்த பெண் இதற்கு முன் கண்டதில்லையே! என்ற குழப்பம் ரிஷிக்கு மாறவில்லை. ‘தான் இன்னுமும் உயிரோடு இருக்கிறோம்’ என தேனுவால் உணரவும் இயலவில்லை.

 

‘தான் யார், எங்கிருக்கிறோம்’ என்பதை மறந்து மயக்க நிலையில் இருந்த தேனுவின் நினைவுகள் முழுவதுமாய் அவளது குடும்ப நபர்கள் ஆக்ரமித்திருக்க அவர்களுடனான நாட்களை கொண்டு உளறத்தொடங்க அவளது தேகம் உடற்சூடு தாளாமல் தூக்கிப் போட ஆரம்பித்தது.”இதைவிட ஒரு மோசமான கற்பழிப்பு சம்பவம் அரங்கேறியிருக்காது என மறுகியவனாய்  தான் எப்படி பெண்களிடம் இப்படி நடந்துக்கொள்ள முற்பட்டோம்? என் அம்மா எனக்கு இதை நிச்சயம் கற்றுக்கொடுக்கவில்லை.நிலாவின் தாக்கம் என்னுள்ளே இவ்வளவா”” என மயங்கியவனாய்..தேனுவிர்க்கு எவ்வாறு முதலுதவி செய்வது?  அவளோ  முழு மயக்கத்திலும் ஜுரத்திலுமாய்.வெளியே செல்ல இந்த மழை அனுமதிக்காது..என்ன செய்வேன்?”என தவித்தவாறே ஷங்கரை அழைத்து நடந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் கூற அதிர்ந்தவனாக இது அந்தப் பெண்ணை காப்பாற்றும் நேரம்.. தாமதிக்கலாகாது  புரிந்தவனாக ஷங்கர் தன் பணியை தொடங்கினான்.

 

 

       

 

 

“சரிடா..நீ ஜூம்ல வா.. அந்த பொண்ணை நா பாக்கணும்” ..என்று ஜூம் வந்த ஷங்கருக்கு அதிர்ச்சியில் ஒன்றும் புரியவில்லை. ரத்தத்தில் தொய்ந்திருந்த ஆடைகள் அவள் நிலையை தெளிவாகக் காட்ட ஜுரம் 103 டிகிரி காட்டுகிறது” என்றான் ரிஷி…  

 

“மயக்கம்  ஜுரத்தினாலயா..இல்ல..உன்னோட திருவிளையாடலான்னு புரியல…ஆனா, இப்போ ஜுரத்துக்கு *** இந்த மருந்த குடு…ஈரத்துணி வச்சு ஒத்தடம் குடு..என்று அவளது உடற்க் காயங்களுக்கும் மருந்திட கூறியவன்  ஒருமணி நேரம் கழிச்சு கால் பண்ணுறேன்.. என்றுவிட்டு வைத்தான்.ஷங்கருக்கு நன்றாய் புரிந்தது இனியும் ரிஷியின் நிலையை தாமதிக்க முடியாது..மேலும்,அந்தப் பெண்ணுக்கு ஒன்றும் ஆகக்கூடாது என கடவுளை வேண்ட ஆரம்பித்தான்.

 

“என்னங்க,உங்க ஃப்ரெண்ட் ரிஷிய புனே போற ஹைவேல பாத்தேங்க. முன்பக்கம் ஒரு பொண்ணு மிரண்டு உக்கார்ந்திருந்தா.இவர் கார் ஒட்டின வேகத்துல அவ முகம் வெளிறி இருந்தது..நிச்சயம் நிலாவா இருக்க முடியாது” என்று தான் கண்டவற்றை விஜயிடம் தொலைபேசியில் விவரித்துக்கொண்டு இருந்தாள் சாரதா 

வேறு ஒரு கேஸ் விஷயம்மாய் அந்தப் பகுதியில் சாரதா சுற்றிக்கொண்டிருக்க அப்பொழுது கண்டவை இவை .

“சரியா கவனிக்க முடியல..நீங்க அவர்கிட்ட பேசுங்க”என்றுவிட்டு தொலைபேசி அழைப்பை துண்டித்தவளுக்குள்ளும் ரிஷி பற்றிய எண்ணங்கள் கூடாரமிட்டு அமர்ந்தது…

 

மழைகுறையும் நேரம் தேனு கண்விழித்தாள்.அப்பாவியான அவள் முகம் வெளிறி மோசமாய் காணப்பட்டது..முகம் வீங்கி உதடுகள் சிறிது கிழிந்துள்ளதோ என ஐயம் கொள்ளுமாறு இருந்தது. ரிஷியின் பற்கள் பதிந்த இடங்கள் செம்மை பூசி…அவளால் எழக்கூட முடியாமல்..முகம் கண்ணீரை தத்தெடுத்தது. அவளையே பார்த்துக் கொண்டிருந்த ரிஷியின் முகத்தில் என்னவென்று அறுதியிட முடியா உணர்வுகள் ஜாலம் காட்ட,”என்னாலதான் உனக்கு இந்த நிலைமை. நானே உனக்கு தேவையானதை செய்யறதுதான் நியாயம்” என்றவாறே ..அவளை தூக்கி கழிவறையில் விட்டான் .தன்னுணர்வு பெற்றவளாக  தன்னை விடுவித்துக் கொள்ள முயல கால்கள் நிற்கவும் பலமின்றி தள்ளாடின..தன்மீதே வெறுப்புற்றவனாக அவளை பலவந்தமாக கழிவறையில் பிடித்தபடி நின்றான். அவன் முகத்தில் சிறிதும் அருவருப்பின் சாயல் இல்லை.

இவன் எப்படிப்பட்டவன் என குழம்பினாள் தேனு.  அவனுடன் தனித்திருக்க பயந்தவளானாள் பாவை.  அவள் முகத்தின் நுண் உணர்வுகளையும் புரிந்தவனாக,  “அம் எக்ஸ்ட்ரீம்லி ஸாரி….நா இத பண்ணியிருக்கேன்னு இன்னும் என்னால நம்ப இயலல.யார்மெலயோ இருக்கும் கோவம் வெறுப்பு..அதை சுயநினைவு இல்லாம உன்மேல திணிச்சு உன்னை இப்படி ஆக்கிவிட்டிருக்கேன்”என்றுவிட்டு மௌனமானான்..

அடுத்த இரண்டு நாட்களில் மழை குறைய தேனுவின் ஜுரமும் கட்டுக்குள் வந்தாலும் அவளது உடற்காயங்கள் இன்னும் முழூதாக சரியாகவில்லை .இந்நிலையில் அவளது மாதாந்திர மூன்று நாட்களும் சேர உடல் உபாதை கூடியது..ரிஷிக்கு அவள் படும் அவஸ்த்தைகள் கூர் வேளாய் நெஞ்சில் இறங்கியது. குனிந்து உள்ளாடை மாற்றும் நிலையில் கூட அவள் உடல்நிலை இல்லை என்பதே உண்மை.  வயிற்றுவலி, பிரட்டல், தலைசுற்றல் என பல வகையிலும் அவள் உடல் அவளைப்படுத்தியது.  காயங்கள் எரிய உணவு உட்கொள்ள வாயை திறக்கவும் முடியவில்லை.

 

அந்தப் பெண் படும் அவஸ்த்தைகள் தான் அம்மா தனக்கு சொன்ன பாடங்களை ஞாபகப் படுத்தியது.  குற்ற உணர்வையும் தாண்டி பழைய ரிஷிவெளி வரலானான்.   அவளுக்குத் தேவைப்படும் அனைத்தையும் சிறு முகச் சுளிப்பும் இன்றி அவன் செய்த பாங்கு அவனது முன்னர் தன்னிடம் நடந்துகொண்ட விதத்திர்க்கு நேரெதிர் என்பது தேனுவுக்குள் குழப்பத்தை அதிகரித்தது. தான் அப்பா செய்ய யோசிக்கும் பலவற்றை இந்த ஆண்மகன் எவ்வாறு சகிக்கிறான் என்பதே அவளுக்கு ஆச்சர்யம்! ஆனாலும், நுண் விஷயங்களை அவன் செய்த பொழுது தேனு கூச்சத்தில் உடல் நடுங்க இப்பொழுது ஆச்சர்யபடுவது ரிஷியின் முறையானது.அவள் தடுக்க முனையும் பொழுது அதிகமாக கோவம் கொண்டவன்,”உன்னோட உடம்புல நா பார்க்காத ஏதாவது இன்னமும் இருக்கா என்ன? பேசாம அமைதியா இரு”என்றான் சுருக்கென்று. தேனுவால் மேற்கொண்டு பேச முடியாமல் அமைதியானாள்.. 

அவள் அன்று ஜுரவேகத்தில் உளறியவை அவன் காதுகளில் ஒலிக்க திகைப்படைந்தான் அவன்.  இந்த பெண்ணிர்க்கு மருத்துவ உதவி அவசியம் என எண்ணியவனாக அவளையும் அழைத்துக் கொண்டு மும்பை பிரயாணத்திர்க்கு ஆயத்தமானான்.  போகும் பொழுது பறந்த அவனது மகிழுந்து இப்பொழுது அவளால் சிறு குலுங்களையும் தாங்கமுடியாது என உணர்ந்ததாய் ஊர்ந்தது. 

திரும்பி வரும்பொழுதும் அவனை காண நேர்ந்த சாரதா தனது பொறுப்புக்களை உடன் பணிபுரிவோரிடம் கொடுத்துவிட்டு அவனது வாகனத்தை பின்தொடர மருத்துவமனையை நெருங்கும் ஸமயம் சாரதாவிர்க்கு அழைப்பு. சாரதாவிர்க்கு அமைச்சரை உடனடியாக சந்திக்குமாறு அவளது வாகனம் யு டர்ன் எடுத்து செல்வதை கண்ணாடி வழியே கண்ட ரிஷியின் முகத்தில் சிரிப்பு… விஜயனின் மனைவி தன்னை கண்காணிப்பதை ரிஷி கொஞ்சமும் விரும்பவில்லை என்பதே உண்மை..

இந்த முறை தப்பித்துவிட்டான்.  ஆனால், அவன் மீது நான் மதிப்பு வைத்துள்ள சாரதாவால் அவனை சிறிதும் தவறாக எண்ணமுடியவில்லையே!

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!