ரிஷி
ரிஷி
ஊரில் உன்னை என்ன பெயரிட்டு அழைத்தாலும்,
என்னில் நீ பாதியானாய்,என் பத்தினியே!
பாயும் புலியான எந்தன் பாரத்தை நீ தாங்காயோ?
கானல் நீராய் போன எந்தன் காதலை
அள்ளிப் பருகும் விரல்கள் உந்தனதோ …
களவாடப்பட்டதாய் நினைத்திருந்த என்
கற்பை ,ஆண் எனும் கர்வம் விட்டு ,
பெண்ணே சமர்பிக்கிறேன்…உன் காலடியில் !
தேனு
மன்னவனே, என் மனதை மறைத்தேன்,
காமனவன் கணைகள் கொண்டே!
மங்கையெனும் உணர்வை பெற்றேன்…
மயக்கும் உன் புன்னகை கொண்டே!
மறத்துப்போனதாய் நினைத்திருந்த உணர்வையும்,
மரித்துப்போனதாய் நினைத்திருந்த இதயத்தையும்,
உயிர்த்தெழ செய்துவிட்டாய்..
பெண் எந்தன் மென்மை உணர மாறனவன் மலர்கணைகள் போதும் , பூவாய் அலர்ந்திருக்கும் இதயத்தின் கூர் கணைகள் வேண்டாம்.!!
கதையின் நாயகி : தேனு
நாயகன் :ரிஷி வேதநாயகம் .
இந்தக் கதை எனது ஆத்மார்த்தமான கதைகளில் ஒன்று. இதை எழுதி முடிக்கும் முன்பு மனதில் பதிந்து இருந்த பத்திரிக்கை செய்திகள், சுற்றுப்புறத்தில் நடந்த பல விஷயங்கள் ,விரும்பத்தகாத சம்பவங்கள் என்று ஒருவித கலவையாக இருந்த அழுத்தங்கள் குறைந்ததை உணர்ந்தேன். இன்றும் பெண்கள் போதைப் பொருளாக சித்தரிக்கப் படுவதை கண்கூடாக பார்க்கிறோம். ஆடை விஷயத்தில் திருமதி.பர்வீன் சுல்தானா அவர்கள் சொன்ன விஷயங்கள் தாம் எமது கருத்தும் . இப்டோதும் திரைப்படங்களில் பெண்களை எப்படி சித்தரிப்பு செய்கிறார்கள் என்பது வேதனை மிகுந்த ஒன்றுதான். நம் உடலை பிறர் பார்த்து மகிழ நாம் ஒன்றும் காட்சிப் பொருள் இல்லை என்பதை ஒரு பெண்ணாக இங்கே பதிவு செய்கிறேன். நிமிர்ந்த நன்னடையும்,நேர்கொண்ட பார்வையும், எதற்கும் அஞ்சாமையும் பெண்களின் சொத்து. இந்தக் கதை எதை பற்றியது என்றெல்லாம் ஊகிக்க கஷ்டம் வேண்டாம். இன்று நம் சமூகத்தில் புரையோடி போயிருக்கும் பல விஷயங்களை ஒன்று சேர்த்து ஒரு கதையாக எழுத விருப்பம் கொண்டு எழுதப் பட்டது. நம் கதையின் ஹீரோ ,ஆன்டி ஹீரோ ஆனது எப்படி என்று கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
பெண்கள் எப்போதும் பாதுகாப்புடனும், உரிமையுடனும் இருக்க வேண்டும். அதற்கு இந்தக் கதை ஏதாவது ஒரு விதத்தில் படிப்பவர்களுக்கு எச்சரிக்கை கொடுக்குமானால் மகிழ்வேன். கதையை படித்து நிச்சயம் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள். புரிந்து கொள்ளும் தன்மைக்காக 18+ கொடுக்கிறேன். முடிந்த வரை வார்த்தைகளில் கூட கண்ணியம் குறையாமல் எழுதி இருக்கிறேன். படித்துவிட்டு சொல்லுங்கள்.
இது சமூகம்,பெண்கள் பாதுகாப்பு, போதைமருந்து ஒழிப்பு, இந்த மூன்றையும் அடிப்படையாக கொண்டது.
இப்படிக்கு
சுகீ.
