Rolex 38

38

இருள் சூழ்ந்த அந்த அறையில், ஜன்னல் வழியாக ஊடுருவிய நிலவின் மெல்லிய வெளிச்சம், ரோலக்ஸின் முகத்தில் விழுந்து கொண்டிருந்தது. அந்த அறையின் அமைதி, ஏதோ ஒரு பெரும் புயலுக்கு முந்தைய அமைதியைப் போல இருந்தது. ரோலக்ஸ் தனது கட்டிலின் ஓரத்தில் அமர்ந்திருந்தான். அவனது விரல்களுக்கு இடையே அந்தச் சிறிய Micro-transmitter உருண்டு கொண்டிருந்தது.

அதன் உலோகத் தகடு, அவனது கைரேகைகளுக்கு நடுவே குளிராகப் பதிந்தது. சில மணி நேரங்களுக்கு முன்பு துறைமுகத்தில் நடந்த காட்சிகள் அவன் கண் முன்னே நிழலாடின. அலெக்ஸ், அந்தப் பரிதாபத்திற்குரிய ஊமை, தன் கண்கள் வழியாக ஏதோ ஒரு கதறலை வெளிப்படுத்தினான். அவன் கொடுத்த அந்தச் சிறிய கருவி, இப்போது ரோலக்ஸின் கைகளில் ஒரு பெரும் சுமையாக இருந்தது.

அலெக்ஸ் அதைத் தன் கையில் திணித்த அடுத்த நொடியே, அங்கு பாபி வந்துவிட்டான். பாபியின் நயவஞ்சகமான சிரிப்பும், ரோலக்ஸைப் பார்த்து அவன் சொன்ன வார்த்தைகளும் இன்னும் கண்களில் ஒளித்துக்கொண்டே இருந்தது. அலெக்ஸைக் காப்பாற்றத் துடித்த ரோலக்ஸ், வேறு வழியின்றி அவனைக் கடுமையாகத் தாக்குவது போல ஒரு நடிப்பை அரங்கேற்ற வேண்டியிருந்தது. பாபியின் சந்தேகமான பார்வையில் இருந்து அலெக்ஸைக் காப்பாற்ற அவனுக்கு வேறு வழி தெரியவில்லை.

“இவனை இப்போவே கொன்றுவிடாதே ரோலக்ஸ்… இவனை வைத்து இன்னும் பல கோடிகளைச் சம்பாதிக்கலாம்!” என்று பாபி கர்ஜித்தபோது, ரோலக்ஸின் இதயம் துடித்தது. ஆனால், அவன் முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டிக்கொள்ளவில்லை. ரோலக்ஸை கையேடு பாபி அழைத்துச் செல்லப்படும்போது அலெக்ஸ் திரும்பிப் பார்த்த அந்தப் பார்வை, அதில் மரண பயம் இருக்கவில்லை, மாறாக தன் தந்தைக்கு, இந்த உண்மையைச் சொல்ல வேண்டும் என்ற தீவிரமான வேண்டுகோள் இருந்தது. அந்த ஒரு நொடி, ரோலக்ஸின் மனதில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.

ரோலக்ஸ் தனது சிந்தனையில் மூழ்கியிருந்தபோது, கதவு திறக்கும் மெல்லிய ஓசை கேட்டது. மயூரா உள்ளே நுழைந்தாள். அவள் கையில் இரவு உணவிற்கான தட்டு இருந்தது. அந்த அறையின் வெளிச்சம் அவளது முகத்தில் பட்டு, அவளை ஒரு தேவதையைப் போலக் காட்டியது. ரோலக்ஸின் அருகே வந்தவள், அவன் எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருப்பதை அவளது கூர்மையான கண்கள் கவனித்தன.

அவள் தட்டை அருகில் இருந்த மேஜையில் வைத்தாள். ரோலக்ஸின் முகம் கீழே குனிந்திருந்தது. அவளது மென்மையான விரல்கள், ரோலக்ஸின் தாடையை ஆதரவுடன் பிடித்து நிமிர்த்தின. அவளது கண்களில் தெரிந்த அக்கறை, ரோலக்ஸின் மன பாரத்தை ஒரு நிமிடம் குறைத்தது.

“ஏன் இவ்வளவு குழப்பம் ரோலக்ஸ்? என்ன ஆச்சு?” என்று அவளது கண்கள் கேட்டன.

ரோலக்ஸ் அவளை ஏறிட்டான். அவளது வசீகரிக்கும் பார்வை, அவன் மனதில் இருந்த பாரத்தை இறக்கி வைக்கத் தூண்டியது. அந்தத் தருணத்தில், அவன் உதடுகளில் ஒரு மெல்லிய புன்னகை அரும்பியது. தன் காதலன் புன்னகைப்பதைக் கண்ட மாயூரா, தானும் ஒரு கள்ளமில்லாச் சிரிப்பை வெளிப்படுத்தினாள். அவளது சிரிப்பு அந்த இருண்ட அறையில் ஒரு மெல்லிய வெளிச்சத்தைப் பாய்ச்சியது.

அவள் அவன் அருகில் அமர்ந்து, ஒரு சப்பாத்தியைத் துண்டாகக் கிழித்து, பன்னீர் கிரேவியில் தொட்டு அவன் வாய்க்கு அருகில் கொண்டு சென்றாள். அவன் தயக்கமின்றி அதை ஏற்றுக்கொண்டான்.

“இன்னைக்கு என்ன ஆச்சு rolex? மதியத்துல இருந்தே ஏதோ ஒரு சிந்தனையிலேயே இருக்க. ஏதாவது பிரச்சனையா? என்கிட்ட சொல்லலாம்ல?” என்று மயூரா மென்மையாகக் கேட்டாள்.

அவளைப் பார்த்த ரோலக்ஸ், இந்தத் தட்டில் இருக்கும் உணவை விட, அவள் தரும் அன்பில் அவன் உயிர் வாழ்ந்து கொண்டிருந்தான். தன் ரகசியங்களை அவளிடம் பகிர்ந்துகொள்வதைத் தவிர, அவனுக்கு வேறு வழியில்லை. மயூரா ஒரு நல்ல துணையாக மட்டுமல்ல, அவன் போராட்டங்களின் ஒரு அங்கமாகவும் இருந்தாள்.

ரோலக்ஸ் அமைதியாகத் தனது உள்ளங்கையில் மறைத்து வைத்திருந்த அந்த மைக்ரோ டிரான்ஸ்மிட்டரை வெளியே எடுத்தவன், அவளது மடியில் அதை வைத்தான்.

அதை வியப்புடன் எடுத்து பார்த்த மயூரா, “இது என்ன? ஏன் இதை இவ்வளவு பத்திரமா வெச்சிருக்க?” என்று அவளது கண்கள் கேள்வி எழுப்பின.

ரோலக்ஸ், அன்று காலை துறைமுகத்தில் நடந்த அத்தனையையும் விவரிக்கத் தொடங்கினான். தான் ஏன் அலெக்ஸை அடிக்க நேர்ந்தது, பாபியின் கொடுங்கோன்மை, அந்த ஊமை இளைஞன் அலெக்ஸ் படும் பாடு, அவனது தந்தையைத் தொடர்பு கொள்ள வேண்டிய அவசியம் என ஒவ்வொன்றையும் மயூராவிடம் விளக்கினான்.

மயூரா அதைக் கேட்டுக் கொண்டிருக்கும்போது அவளது முகம் மாறிக்கொண்டே இருந்தது. அதிர்ச்சியும், ரோலக்ஸின் மீதுள்ள மரியாதையும் அவள் கண்களில் கலந்திருந்தன.

“அப்படியானால், இந்தச் சிறிய கருவி இவ்வளவு பெரிய விஷயத்தைச் செய்யுமா?” என்று அவள் மௌனமாகச் சைகையில் கேட்டாள்.

“ஆமாம் மயூரா. இது வெறும் கருவி கிடையாது. இது அந்த ஊமை இளைஞனின் கடைசி நம்பிக்கை. அவன் தந்தை யார், அவன் எதற்காகப் போராடுகிறான் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் அந்தத் தகவலை அவனது தந்தை வரை கொண்டு சேர்ப்பது, இப்போ என் கடமை. என் கைகள் மூலம் ஒரு பெரும் விதியை மாற்றி எழுதப் போகிறேன்,” என்றான் ரோலக்ஸ் உறுதியான சைகையில்.

அவனது கையைப் பிடித்துக்கொண்டாள்,மயூரா. அந்தப் பிடியில் ஒரு உறுதி இருந்தது. “கவலைப்படாதே ரோலக்ஸ். நீ எதைச் செய்தாலும், அது நல்லதற்காகவே இருக்கும் என்று எனக்குத் தெரியும். நாம் இருவரும் சேர்ந்து இந்த ஊமை இளைஞனின் உதவி செய்ய முயற்சிப்போம்,” என்று அவளது கண்கள் சொன்னது.

மயூரா சிந்தனையில் ஆழ்ந்தாள். “ரோலக்ஸ், பாபி இவ்வளவு எளிதில் இதை விட்டுவிட மாட்டான். நீ அலெக்ஸை அடித்த அந்த நாடகம், அவனுக்குச் சந்தேகம் வராமல் இருக்க வேண்டுமே. ஒருவேளை அவன் உன்னை கண்காணிக்க ஆள் வைத்திருந்தால்?”

ரோலக்ஸ் சப்பாத்தியை மென்றபடி யோசித்தான். “அவன் கண்காணிக்கத்தான் செய்வான் மயூரா. ஆனால் பாபிக்குத் தெரிந்ததெல்லாம் வன்முறை மட்டும்தான். அவனுக்குத் தந்திரம் தெரியாது. அவன் இந்த டிரான்ஸ்மிட்டரைப் பற்றி கனவிலும் நினைத்திருக்க மாட்டான். ஆனா இதைப் பயன்படுத்த எனக்குப் பாதுகாப்பு தேவை.”

மயூரா, ரோலக்ஸின் கண்களில் தெரிந்த அந்தத் தவிப்பைத் துல்லியமாகப் புரிந்துகொண்டாள். அவள் மீண்டும் அந்த டிரான்ஸ்மிட்டரை அவன் கைகளிலிருந்து மென்மையாக வாங்கினாள். அதன் நுணுக்கமான வடிவமைப்பைத் தன் கூர்மையான கண்களால் ஆராய்ந்தாள். அதன் மேற்பரப்பில் இருந்த சிறிய பட்டன்களை அவள் விரல்கள் தடவின.

“ரோலக்ஸ், இது சாதாரணக் கருவி இல்லை,” என்று அவள் மெல்லிய குரலில் சொன்னாள்.

ரோலக்ஸ் அவளை ஆச்சரியத்துடன் பார்த்தான். அவனுக்குத் தெரிந்ததெல்லாம் இது ஏதோ ஒரு தகவல் அனுப்பும் கருவி என்பது மட்டுமே. மயூரா தனது மொபைலை எடுத்து, அந்தத் தயாரிப்பின் மாடல் எண்ணைத் தேடினாள். சில நொடிகள் தீவிரமாக இணையத்தில் தேடியவள், அவளது கண்கள் மின்னத் தொடங்கின.

“இதோ பார் ரோலக்ஸ்! இது ஒரு ‘மைக்ரோ ரேடியோ சிக்னலிங் டிவைஸ்’. இது பழைய காலத்து தந்தி முறையைப் போல, Morse code சிக்னல்களை அனுப்பும் திறன் கொண்டது. அலெக்ஸ் ஊமையா இருக்கிறதால, ஆபத்து நேரத்தில் தன் தந்தைக்குத் எதாவது தகவல் சொல்ல இதுதான் சிறந்த வழி என்று அவன் நினைத்திருக்கிறான். குறிப்பிட்ட பட்டன்களை ஒரு வரிசையில் அழுத்தினால், அது ஒரு ரேடியோ சிக்னலாக மாறி, தூரத்தில் இருக்கும் ரிசீவருக்குப் போய் சேரும்,” என்று மயூரா விளக்கினாள்.

ரோலக்ஸ் ஆச்சரியத்தில் உறைந்தான். “மோஸ் கோடா? அது எப்படி வேலை செய்யும்?” என செய்கையிலே கேட்டான் 

மயூரா சிரித்துக்கொண்டே சொன்னாள், “ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு குறிப்பிட்ட Dot, Dash சிக்னல் இருக்கும். அந்த முறையைச் சரியா பயன்படுத்தினா, அவன் தந்தை எங்கிருந்தாலும், அது ஒரு மெல்லிய சிக்னலாக அவர் கருவியில் ஒலிக்கும். அலெக்ஸ் கப்பலில் இருந்தபோது இதைப் பயன்படுத்தியிருக்கிறான், அங்கே ரேடியோ சிக்னல் தாராளமா கிடைக்கும். இப்போது இது நம்மகிட்ட இருக்கு. நாம் சரியான சிக்னலை அனுப்பிவிட்டா, அடுத்த சில நாட்களில் அவன் தந்தை அலெக்ஸ் இருக்கும் இடத்தைத் தேடி வந்துவிடுவார்.” என்றாள் 

ரோலக்ஸின் கண்கள் விரிந்தன. “அப்படியானா, அவனது தந்தை இதை எப்படிப் புரிந்துகொள்வார்?”

“அவருக்கு கண்டிப்பா இந்த மோஸ் கோட் தெரிந்திருக்க வேண்டும். அலெக்ஸ் இதை உன் கையில் கொடுத்துவிட்டுச் சென்றதிலிருந்தே, அவனுக்குத் தெரியும், தன்னால் அவரிடம் பேச முடியாது, ஆனால் இந்தச் சிக்னல் வழியாக ஒரு தந்தையின் உள்ளுணர்வு மகனைக் கண்டுபிடித்துவிடும் என்று. இவன் கப்பலில் இருக்கும்போது அவனிடம் ரேடியோ கவசங்கள் இருந்திருக்கும். இப்போதோ இது வெறும் கருவி. இதை இயக்குவது எப்படி என்று மட்டும் நமக்குத் தெரிந்தால் போதும்!” என்றாள் 

ரோலக்ஸ் அந்த டிரான்ஸ்மிட்டரை எடுத்துப் பார்த்தான். “ஆனால் மயூரா, நமக்கு இந்த மோஸ் கோட் தெரியாதே! என்ன செய்வது?” என கேள்வி எழுப்பினான்.

உடனே யோசித்த மயூரா . “பயப்படாத ரோலக்ஸ் , இதற்கு ஒரு வழி இருக்கு, பைரவன் அண்ணா, இந்த ஊரில் எதையும் தெரிந்து வைத்திருப்பார். அவருக்குத் தெரிந்த யாராவது பழைய தந்தி அலுவலகத்தில் பணிபுரிந்தவர்கள் இருக்கிறார்களா என்று பார்ப்போம்.” என்றவள் உடனே தனது மொபைலை எடுத்து பைரவனை அழைத்தாள்.

இரவு நேரம் என்பதால் சில முறை ரிங் சென்ற பிறகு பைரவன் அழைப்பை ஏற்றான். “என்ன மயூரா? இந்த நேரத்துல கூப்பிட்டு இருக்க?”

மயூரா நடந்த விஷயங்களைச் சுருக்கமாகச் சொன்னாள். ஒரு தந்தி தொடர்பான மர்மக் கருவி, ஊமை அலெக்ஸ், அவனது தந்தை என அனைத்தையும் விளக்கினாள்.

சற்று நேரம் அமைதியாக இருந்த பைரவன், “மயூரா, எனக்கு ஒரு பழைய போஸ்ட்மேன் தாத்தா தெரியும். அவர் இந்த போர்ட் பகுதியில் முப்பது வருஷமா தந்தி, கடிதங்களை விநியோகம் செய்தவர் தான். இப்போது அவர் ரிட்டயர்ட் ஆகிட்டார். அவர் வீடும் எனக்குத் தெரியும். , அவரிடம் கேட்டால் நிச்சயம் தீர்வு கிடைக்கும்.” என்றான் 

உற்சாகத்துடன் ரோலக்ஸ் பக்கம் திரும்பிய மயூரா , பைரவன் சொன்னதைச் சைகையிலேயே ரோலக்ஸ் புரியவைக்க, அவன் கண்கள் வெற்றியில் திளைத்தன.

ரோலக்ஸ் உணவைத் தட்டில் வைத்துவிட்டு அவசரமாக எழுந்தான். மயூரா அவன் பதட்டத்தைப் பார்த்தாள். ரோலக்ஸின் முகம் இப்போது ஒரு அவசர நிலைக்கு மாறியிருந்தது. மயூரா அவனுக்குத் தேவையான பைக் சாவியை எடுத்துக் கொடுத்தாள்.

“ரோலக்ஸ், பார்த்து பெருமையை போ .. யாருக்கும் சந்தேகம் வராதபடி இருக்கட்டும்,” என்று மயூரா எச்சரித்தாள்.

ரோலக்ஸ் தன் கைகளை உயர்த்தி நிச்சயம் என்று சைகை செய்தான். அவன் அறைக்கு வெளியே வேகவேகமாகச் சென்று தன் பைக்கை எடுக்க ஓடினான். மயூரா அவனை ஜன்னல் வழியாகப் பார்த்தாள். ரோலக்ஸின் ஒவ்வொரு அசைவிலும் அந்த ஊமை இளைஞனுக்கான நீதி தென்பட்டது.

வேட்டை தொடரும் ..⚓

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!