ஜோஸ்வினி சிலையாக அமர்ந்திருப்பதை பார்த்த அபிஷேக் திகைத்து போய் அவளை கூப்பிட்டான்.
“என்னாச்சுங்க ஜோ?” என்று அவளை கேட்டான்.
“நீ போன வை. நான் வரேன்” என்று அபிஷேக்கை முறைத்தபடி போனை அணைத்தாள்.
“ஏன் ஜோ டென்ஷனா இருக்கீங்க?”
“நீ ஷியாமா அடிச்சியா?”
“ஜோ… ஜோ” என்று அவன் வார்த்தைகள் வராமல் தடுமாறினான்.
“சொல்லுடா”
“ஆமா ஜோ. அடிச்சேன்”
“எதுக்கு அடிச்ச?”
“அ… அது” என்றவன் எப்படி அவன் செய்ததை பற்றி சொல்வது என தயங்கினான். அவனது தயக்கத்தை அவள் தப்பாக புரிந்து கொண்டாள்.
“சோ நீ என்ன லவ் பண்ற?” என்று சொன்னவளை சமைந்து போய் பார்த்தான்.
“என்ன அப்படியே ஃப்ரீஸ் ஆகி நிக்கற?”
“ஜோ… நான் சொல்றத கேளுங்களேன்”
“ஷட் அப் அபிஷேக். அவன் எனக்காக வெயிட் பண்ண கூடாது. நான் அவள லவ் பண்றேன். இதுக்கு மேல அவன் என்ன லவ் பண்ண அவன கொல பண்ணிடுவேனு சொல்லிருக்க?”
“ஜோ”
“நீ இவ்ளோ கேவலமானவனா இருப்பேனு நினைக்கலடா. ச்சே… உன்ன நான் எங்க வெச்சிருந்தேன்”
“ஜோ… ஜஸ்ட் ஸ்டாப் இட். நான் என்ன சொல்றேனு கேளுங்க”
“என்னடா சொல்ல போற? என் கூட இவ்ளோ நாள் பழகிருக்கியே? நான் என்னைக்காவது உன்கிட்ட லவ் பண்ற மாதிரி நடந்திருக்கேனாடா? ஹவ் டேர் யூ?”
“எவ்ளோ தைரியம் இருந்தா அவன அடிச்சு போட்டு என்கிட்ட நல்லவன் மாதிரி டிராமா போட்ருப்ப?”
“வாட்? டிராமாவா? எனக்கு அதுக்கு எந்த அவசியமும் இல்ல”
“பின்ன ஏன் அவன அடிச்ச?”
“அது உனக்கு தேவையில்லாதது ஜோ”
“எனக்கு தெரிஞ்சாகணும்”
“கண்டிப்பா தெரியணுமா?” என ஒரு மாதிரி குரலில் கேட்டான்.
“ஆமா”
“அவன் என்ன நினச்சு சொன்னானு தெரில. பட்…” என்று நிறுத்தியவன்
அவள் அருகில் மூச்சுக்காற்று படும் அளவுக்கு நெருங்கி வந்தவன் கண்களில் காதல் பொங்க கூறினான்.
“ஐ ஆம் இன் லவ் வித் யூ. கிட்டத்தட்ட நீ இல்லாம வாழ முடியாதுங்கற ஸ்டேஜ்ல இருக்கேன். யா… ஐ லவ் மை செர்ரி” என்றவனை மொழி புரியாதவள் போல பார்த்தாள்.
“ஆனா அதுக்காக அவன அடிக்கற அளவுக்கு நான் கேவலமானவன் இல்ல” என்றவன் சொன்னதும் திடுமென அவனை ஓங்கி அறைந்திருந்தாள்.
“இப்ப சொல்றேன் கேட்டுக்கோ… இனி என் முகத்துல எந்த ஜென்மத்துலயும் முழிக்காத. இனி நீ யாரோ… நான் யாரோ… அபிஷேக்னு ஒரு பர்சன் என் லைஃப்லயே இல்ல” என்றவள் விறுவிறுவென நடந்தாள்.
அவள் சொன்னதில் அவனுக்கு சுறுசுறுவென்று கோபம் ஏறியது.
அவளை சொடக்கிட்டு அழைத்தவன் அவள் அருகில் வந்து
“நான் சொல்றதையும் கேட்டுக்கோ. உன்ன தவிர வேற யாரும் என் ஒய்ஃப்பா வர முடியாது. காட் இட்?” என்றவன் சொன்னதும் விதிர்வித்து போய் அவனை பார்த்தாள்.
“இப்போ நீ போகலாம்” என்றவன் இறுகி போய் அவன் அறையில் அமர்ந்தான்.
ஜோஸ்வினி அபிஷேக்கின் இந்த அவதாரத்தில் சிலையாய் நின்றாள். பின் ஒரு சில நிமிடங்களில் தன்னை சமன் செய்து கொண்டவள் அவன் சொன்னதை ஜீரணிக்க முடியாமல் அங்கிருந்து வெளியேறினாள்.
********
அங்கிருந்து தனது ஸ்கூட்டியில் ஷியாமை பார்க்க மருத்துவமனைக்கு சென்றாள்.
ஜோஸ்வினி ஷியாம் பேரை சொல்லி ரிஷப்சனில் விசாரித்து விட்டு அவனது அறை நோக்கி சென்றாள்.
அவள் உள்ளே நுழையும் போது உடம்பு முழுக்க கட்டுடன் படுத்திருந்தான். அவனது அம்மா அவனிடம் பேசி கொண்டிருந்தார்.
இவளை பார்த்ததும் வா என்று கூட சொல்லாமல் வெளியேறினார். அதை கவனித்தவளின் மனம் துணுக்குற்றது. இருந்தும் அதனை வெளிப்படுத்தாமல் அவனது அருகில் சென்றாள்.
“ஷியாம் என்னடா இவ்ளோ பேண்டேஜ்? நிறைய அடியாடா?” என்று கண்ணீர் மல்க விசாரித்தாள்.
“ஆமா ஜோ. நீ ஒண்ணும் ஃபீல் பண்ணாத. இப்போ பரவால்ல” என்று நல்லவன் போல சொன்னான்.
“அபியாடா இப்டி அடிச்சான்? என்னால இன்னும் கூட நம்ப முடில”
“அவன் தான். இனிமேல் இப்டி பண்ணுவியானு. ஒவ்வொரு அடியும் இடி மாதிரி இருந்தது ஜோ” என்று சொல்லி கொண்டே வந்தவன் ஏதோ தோன்ற சட்டென்று அமைதியானான்.
“சாரிடா. நான் இப்படி அடிச்சிருப்பானு நினக்கல. மாட்டை அடிக்கற மாதிரி அடிச்சிருக்கான்”
“அவன் என்ன மட்டும் அடிக்கல ஜோ. ருத்ரனையும் அடிச்சான்”
“ருத்ரனா? அவன் என்ன பண்ணான்?”
“அவன் என் ஃபிரண்டுனு அவனையும் அடிச்சான் ஜோ”
“வாட்? இவன் எப்போருந்து இப்டி காட்டுமிராண்டியானான்?”
“அவனுக்கு எவ்ளோ கொலவெறி தெரியுமா?” என்றவன் ஓரக் கண்ணால் அவளை பார்த்தபடி கேட்டான்.
“நீ அவன்கிட்ட ஏதாவது கேட்டியா?”
“கேட்டியாவா? அவன நல்லா பிடிச்சு திட்டிட்டு வந்தேன். இனி எனக்கும் அவனுக்கும் எந்த ஃபிரண்ட்ஷிப்பும் இல்லனு சொல்லிட்டு வந்துட்டேன்” என்றதும் உள்ளுக்குள் சந்தோஷப்பட்டவன் வெளியே பதறியவன் போல கேட்டான்.
“ஐய்யய்யோ… ஏன் ஜோ கோபப்பட்டே? அவன் வேற ஏதாவது கோபத்துல பண்ணிடப் போறான்”
“அவன் எது பண்ணாலும் அவன நான் பாத்துக்கறேன். யூ டோன்ட் வொர்ரி. பட் அவன் சொன்னத தான் ஜீரணிக்க முடில”
“என்ன சொன்னான் ஜோ?”
“அவன் என்ன லவ் பண்றானாம். நான் தான் அவனோட ஒய்ஃப்பாம். என்கிட்டயே சவால் விடறான்” என்று சொல்லியவளை அதிர்ச்சியில் உறைந்து போய் பார்த்தான்.
“என்ன ஜோ சொல்ற?”
“ஆமா. அவன்கிட்ட ஆதுவோட பிரண்டுனு பழகினேன். ஆனா அவன் இவ்ளோ அட்வான்ட்டேஜ் எடுத்துப்பானு நினக்கல”
“விடு ஜோ. அவன் ஃபாரின் வேற. அப்டி தான் இருப்பான்”
“அதுக்காக அவன் எப்டி வேணும்னாலும் பண்ணலாமா? என்னால இன்னும் கூட இவன் இப்படியானு நம்ப முடில”
“லீவ் இட் ஜோ. நான் அவன பண்ற டார்ச்சர்ல அவன் இங்கிருந்து ஓடிடணும்” என்றதும் திடுக்கிட்டு போய் அவனை பார்த்தாள்.
“என்ன?”
“இல்ல ஜோ. நம்ம பண்ற லவ்வ பாத்துட்டு அவன் பிரான்ஸ்க்கே போயிடணும்னு சொன்னேன்” என்று சமாளித்தான்.
“ஓ…” என்றவள்
“ருத்ரா எப்படி இருக்கான்?” என்று விசாரித்தாள்.
“பரவால்ல”
“அவன் எங்க இருக்கான்? நான் அவனையும் பாத்திட்டு போறேன். என்னால உங்களுக்கு இப்டி ஆனதுல எனக்கு தான் கில்ட்டியா இருக்கு” என்று உள்ளே போன குரலில் சொன்னாள்.
“ஜோ… டோன்ட் ஃபீல். இதெல்லாம் ஒரு காயமா? உனக்காக நான் எவ்ளோ காயத்தையும் தாங்குவேன்” என்றவன் சொல்ல அவன் முகத்தை பார்க்க முடியாமல் ஜோஸ்வினி தலை குனிந்தாள்.
“அவனும் இதே ஹாஸ்பிட்டல்ல தான் இருக்கான்”
“ஓகே. நான் அவனையும் பாத்துட்டு போறேன். திருப்பி நாளைக்கு உன்ன பாக்க வர்றேன்” என்றவள் சொன்னாள்.
அதை கேட்டவன் “ரொம்ப தேங்க்ஸ் ஜோ” என்று அவள் கைகளை பற்றி கண்ணீர் விட்டான். அவனது கண்ணீரை எதிர்பாராதவள் ஆறுதலாக அவனை வருடி கொடுத்தாள்.
பின் ருத்ரனையும் பார்த்து விட்டு சென்றவள் ஏதோ யோசனையில் ஆழ்ந்தாள். அவளுக்கு ஏதோ ஒன்று உறுத்தலாக தோன்றியது. ஆனால் என்ன என்று அதை உணர்ந்து கொள்ளும் மன நிலையில் அவள் இல்லை. ஒரு பக்கம் அபிஷேக்கும், ஒரு பக்கம் ஷியாமும் அவள் மனதை ஆக்ரமித்திருந்தனர். இருவரின் செய்கையில் அவள் மனம் குழப்பமுற்றது. அதனால் அவள் சரியான வழியில் யோசிக்க தவறினாள்.
******
ஜோஸ்வினி சென்றவுடன் அபிஷேக் இறுகி போய் அமர்ந்திருந்தான். அவனுக்கு ஜோஸ்வினி தன்னை நம்பாதது அவ்வளவு கோபமாக இருந்தது.
‘இவ்வளவு நாளா என் கூட பழகி நீ என்ன புரிஞ்சிகிட்டது அவ்ளோ தானா?’
‘ஷியாம ஏன் அடிச்சேனு உன்னால திங்க் பண்ண கூட முடியலயா ஜோ?’
‘உனக்கு புரிய வைக்க நான் எந்த எக்ஸ்ட்ரீமுக்கும் போக தயங்க மாட்டேன் செர்ரி’ என்று தனக்குள் ஏதேதோ வெகு நேரம் யோசனையில் அமிழ்ந்தவன் ஆதவன் வரும் வரை தனது சிந்தனையில் இருந்து வெளிவரவில்லை.
அபிஷேக்கை பார்க்க வந்த ஆதவன் அவன் இறுகி போய் அமர்ந்திருப்பதை பார்த்து திகைத்தான்.
“அபி என்னடா ஆச்சு?” என்றவனை முறைத்தான்.
“என்னடா கோபம் என் மேல?. ஏன்டா இப்டி பாக்கற?”
“நீ ஜோஸ்வினிகிட்ட என்ன சொன்ன?”
“ஏன்டா? பேரண்ட்ஸ் ஞாபகத்துல டிஸ்டர்ப்டா இருக்கேனு சொன்னேன்”
“ஓகே. இன்னைக்கு ஜோஸ்வினி வந்தாங்க”
“வந்தாளா?”
“ஆமா. அவங்க வந்தப்ப ஷியாம் கால் பண்ணான்” என்றவன் நடந்ததை கூறினான்.
“என்னடா சொல்ற? நீ சொன்னது நிஜம் தானா?”
“ஏன் ஆது என் மேல கோபமா?”
“நிஜமா எனக்கு இப்போ தான்டா சந்தோஷமா இருக்கு. ஆனா அவ எப்போ புரிஞ்சிப்பாளோ? பாக்கலாம்”
“பட் ஆது இந்த ஷியாம் இன்னும் ஏதாவது ப்ராப்ளம் பண்ண கூட சான்ஸ் இருக்குனு என் இன்டியூஷன் சொல்லுது”
“ஏன்டா இப்டி யோசிக்கற?”
“இதுவரையும் நடந்ததெல்லாம் பாத்தா எனக்கு அப்டி தான் தோணுது”
“விடுடா. பாத்துக்கலாம். ஜோ எங்க வந்தானு சொன்னே? காணோம்”
“அவங்க ஷியாம பாக்க போயிருக்காங்க” என்றவன் சிறிது யோசித்து
“ஷியாம ஜோஸ்வினி போய் பாக்காம இருந்தா பரவால்ல. பட்…” என்றவன் ஒரு பெருமூச்சை விட்டவன்
“இனி ஜோஸ்வினிய நீ ஃபாலோ பண்ணு. ஏதாவது ப்ராப்ளம்னா ஐ வில் தேர்”
“ஏன்டா அவள போக வேண்டாம்னு சொல்றேன்”
“என்னடா பேசற? உனக்கு ஜோஸ்வினிய பத்தி தெரியாதா? அவங்க ஒண்ணு பண்ண வேணாம்னா தான் பண்ணுவாங்க. அதனால அவங்க போக்கிலேயே விடு” என்றவன் சொல்ல ஆதவன் யோசனையுடனே தலலயாட்டினான்.
******
ஏறக்குறைய இரண்டு மாதங்கள் இதே ரீதியில் சென்றது. அதற்கு பிறகு அபிஷேக்கை ஜோஸ்வினி சந்திக்கவில்லை. அபிஷேக்கும் ஜோஸ்வினியிடம் பேச முயற்சி செய்யவில்லை. அவ்வப்போது ஆதவனிடம் மட்டும் அவளை பற்றி விசாரித்து தெரிந்து கொண்டான்.
இந்த இரண்டு மாதங்களில் ஜோஸ்வினி தனது படிப்பை முடித்தாள். ப்ரெஞ்சு கிளாஸ் மட்டும் போய் கொண்டே ப்ரான்சில் உயர்கல்வி படிப்பை தொடருவதற்கான முயற்சியில் இறங்கினாள். அபிஷேக் அவளது செயல்பாடுகளை ஒதுங்கி நின்று கவனித்தான். எதிலும் தலையிடவில்லை.
இப்படி இருவரும் அவரவர் வேலையை பார்த்து கொண்டு அமைதியாய் இருக்கையில் ஒரு நாள் ஏதேச்சையாக ஜோஸ்வினியை மாலில் சந்தித்தான்.
எதிரெதிரே பார்த்ததும் அவளிடம் பேசாமல் அவனால் இருக்க முடியவில்லை. அதனால் அவனே பேசினான்.
“ஹாய் ஜோஸ்வினி ஹவ் ஆர் யூ?”
“நான் எப்டி இருக்கேனு தெரிஞ்சு என்ன பண்ண போற? அதான் என் நிம்மதியையே அழிச்சிட்டியே”
“ஜோ?”
“உன்ன எவ்ளோ நம்புனேன்? ஆனா… ச்சே…”
“ஜோஸ்வினி”
“டோன்ட் டாக் அபி. உன்னால நான் பட்ட வரையும் போதும்” என்றவளின் குரல் அவனை ஏதோ செய்தது.
“ஜோ இஃப் யூ டோன்ட் மைன்ட், நம்ம அந்த காஃபி ஷாப்ல பேசலாமா?” என்று கனிவாக கேட்டான்.
“நான் உன்கிட்ட பேச விரும்பல” என்றவளை அலட்சியமாக பார்த்தவன்
“எனக்கும் உங்கிட்ட பேசணும்னு அவசியமில்ல. ஏதோ பழகின பொண்ணாச்சேனு பேசலாம்னு நினைச்சேன். ஓகே… பாய்” என்றவன் அவளை கடந்து செல்ல அவனது செய்கையில் திகைத்து போய் அவனை பார்த்தாள்.
“அபிஷேக் நில்லு”
“வாட்?”
“காஃபி ஷாப் போலாம்னு நீ பாட்டுக்கு போற?” என்றவளை தனக்குள் சிரித்து கொண்டவன் அவளை நோக்கி வந்தான்.
ஜோஸ்வினிக்கு என்ன தான் ஷியாமிடம் பழகினாலும் அவளுக்குள் ஏதோ ஒன்று குறைவது போலிருந்தது. அது என்னவென்று அவளுக்கு புரியவில்லை.
திடீரென்று அபிஷேக்கை பார்த்ததும் அவளுக்கு சந்தோஷம் தோன்றினாலும் அவனிடம் இருந்த கோபம் அவளை சரியாக பேச விடாமல் தடுத்தது.
ஆனால் அபிஷேக் அவளை அலட்சியப்படுத்தி விட்டு செல்வான் என அவள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அவன் தன்னை விட்டு சென்றதும் அவள் மனம் ஒரு நிமிடம் வெறுமை அடைந்தது போல தோன்றியது. அதனால் சிறிதும் யோசிக்காமல் அவனை கூப்பிட்டாள்.
“வாங்க ஜோ” என்றவன் அருகில் இருந்த காஃபி ஷாப்பிற்கு அவளை கூட்டி சென்றான்.
“என்ன சாப்டறீங்க?” என்று விசாரித்தவன் இருவருக்கும் வேண்டியதை ஆர்டர் செய்தான்.
“சொல்லுங்க ஜோ. ஸ்டடிஸ்லா முடிஞ்சிடுச்சா?”
“முடிஞ்சிடுச்சு”
“ஃபைன் ஜோ. நெக்ஸ்ட் என்ன ஐடியால இருக்கீங்க?” என்றவன் ஒன்றும் தெரியாதது போல விசாரிக்க அவனை முறைத்தாள்.
“கூல் ஜோ. ஷியாம் எப்படி இருக்கிறான்?” என்று விசாரித்தான்.
“அது உனக்கு தேவையில்லாத விஷயம்” என்றவளை கூர்மையாக பார்த்தான்.
“ஓ… ஐ சீ” என்றவன்
“ஜோஸ்வினினா அவங்களுக்கு யார் யார் இம்பார்ட்டன்ட்டோ அவங்க எல்லாம் எனக்கும் இம்பார்ட்டன்ட் தான். இஸ் தட் குட் ஆர் பேட்”
“நீ என்னோட எந்த விஷயத்திலயும் தலையிட வேணாம்”
“அன்னைக்கு சொன்னது உனக்கு ஞாபகம் இருக்கும்னு நினக்கறேன். நீ என்னோட ஒய்ஃப். உன்னோட எல்லாமுமே என்னோடது தான்” என்று சொல்லியபடி அவன் கண்ணடிக்க அவனை அதிர்ந்து போய் பார்த்தாள்.
“ஷிட்… ஐ டோன்ட் லைக் திஸ் டாபிக். நான் கிளம்பறேன்” என்றவள் எழுந்தாள்.
“சிட் ஜோ” என்றவன் சொல்லும் போது அவனுக்கு கால் வந்தது.
போனை எடுத்தவன் யோசனையுடன் அவளை பார்த்தான்.
“வெயிட் பண்ணு. ஐ கம்”
“இல்ல. நான் போகணும்”
“ஐ சே சிட்” என அவன் குரலை உயர்த்தாமல் மிரட்ட அதில் பயந்து போய் அமர்ந்தாள்.
ஃபோனில் பேசிக் கொண்டிருந்தவன் அவள் இருப்பதையே மறந்து அங்கிருந்து வெகு வேகமாக கிளம்பினான்.
அவன் வருவான் என சிறிது நேரம் காத்திருந்தவள் பின் அவன் எங்கே இருக்கிறான் என்று வெளியே தேடினாள். ஆனால் அவன் அங்கே இருந்ததற்கான அறிகுறியே இல்லை.
அவனை கண்டபடி திட்டிய படியே அங்கிருந்து கிளம்பினாள்.
*******
அடுத்த நாள் காலை ஜோஸ்வினியின் வீட்டிற்கு ஆதவனும், அபிஷேக்கும் வந்தனர். அவர்கள் வந்த போது ஜோஸ்வினி வீட்டில் இல்லை. அது அவர்களுக்கு இன்னும் வசதியாக போனது.
இருவரையும் வரவேற்றவர்கள் என்னவென்று விசாரிக்க அவர்கள் இருவரும் சொல்லிய விஷயத்தில் ஜோஸ்வினியின் பெற்றோர் உச்சகட்ட அதிர்ச்சியில் இருந்தனர்.
“என்ன தம்பி சொல்றீங்க? அப்போ என் மக வாழ்க்கை அவ்ளோ தானா?” என்றவர் தரையில் சரிந்தார்.
“ஆன்ட்டி ஒண்ணும் டென்ஷன் ஆக வேணாம். ஃபர்ஸ்ட் ரிலாக்ஸா இருங்க” என்ற அபிஷேக் அவருக்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தான்.
ரங்கராஜனோ விஷயத்தை கேள்விப்பட்டதில் சிலை போல நிற்க அதில் பயந்து ஆதவன் “சித்தப்பா” என உலுக்கினான்.
அதில் அவனை பார்த்தவர் கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது.
“சித்தப்பா ஒண்ணும் இல்ல. நாங்க பாத்துக்கறோம்”
“நீங்க மட்டும் என்ன பாத்துப்பீங்க? ஜோஸ்வினிக்கு தெரிஞ்சா என்னாகிறது? என் மக லைஃபே ஸ்பாயில் ஆயிடுச்சே”
“அவ லைஃப் ஸ்பாயில் ஆகாது. அவளுக்கு நம்ம அபிஷேக் இருக்கான்” என்று சொன்னதும் இருவரும் அதற்கு என்ன சொல்வதென தடுமாறினார்.
“ஏன் இப்படி பாக்குறீங்க? நான் ஜோஸ்வினிய நல்லா பாத்துப்பேன். அவள நான் விரும்பறேன் அங்கிள். இதெல்லாம் ஒரு இஷ்யூவே இல்ல. என் செர்ரிய என்கிட்டயே குடுத்துடுங்களேன். ப்ளீஸ்” என்று கலங்கிய குரலில் கேட்டான்.
திடீரென்று இவன் இப்படி கேட்டதும் அவர்கள் இருவரும் தடுமாறினர்.
“ஜோஸ்வினிக்கு பிடிக்குமானு தெரிலயே” என்று இருவரும் தயங்கினர்.
“அத பத்தி நீங்க கவலைப்படாதீங்க. அவங்கள சம்மதிக்க வைக்க வேண்டியது என் பொறுப்பு” என்றதும் இருவரும் அமைதியடைந்தனர்.
*****
அன்று மாலை ஜோஸ்வினி வீட்டுக்கு வந்ததும் அவளிடம் விஷயத்தை சொன்னதும் தேஜஸ்வினி சந்தோஷத்தில் துள்ளிக் குத்தினாள்.
“வாவ்… அபிஷேக்கா? சூப்பர்”
“என்னது? அபிஷேக்கா? மாமான்னு மரியாதையா சொல்லு” என்று காயத்ரி அதட்ட ஜோஸ்வினியோ வானுக்கும் பூமிக்கும் குதித்தாள்.
“யார கேட்டு நீங்க ஃபிக்ஸ் பண்ணீங்க?”
“யார கேக்கணும்?”
“ம்மா… எனக்கு அவன கொஞ்சம் கூட பிடிக்கல”
“உனக்கு எது நல்லதுன்னு எனக்கு தெரியும். எப்பயும் அபி அபினு பேசுவ. இப்போ என்ன வந்தது?”
“ம்மா… அது அப்போ… இப்போ சிட்சுவேஷனே வேற”
“நீ என்ன சொன்னாலும் இந்த கல்யாணம் நடக்கும்” என்றவரை முறைத்தவள் ரங்கராஜனிடம் சென்றாள்.
“ப்பா… எனக்கு இந்த மேரேஜ் வேணாம்பா”
“ஏம்மா?” என்று அவர் அவளது தலையை கோதியபடியே கேட்டார்.
“நான் மேல படிக்கணும்பா”
“மேலே படிம்மா. மேரேஜ் பண்ணிட்டு படி”
“ப்பா…”
“நாங்க உன் நல்லதுக்கு தான் சொல்வோம் ஜோஸ்வினி. எங்கள நம்பற தானே?” என்றதும் அவளையறியாமல் தலையாட்டினாள்.
அதற்கு பின்பே தான் செய்ததை உணர்ந்தவள் அங்கிருக்க பிடிக்காமல் தனது அறைக்குள் சென்றாள்.
வெகு நேரம் யோசித்தவள் வேறு வழியின்றி அபிஷேக்கிற்கு அழைத்தாள்.
“ஹலோ”
“ஹூ ஈஸ் திஸ்?” என்று கம்பீரமான குரலில் கேட்க ஜோஸ்வினி கடுப்பானாள்.
“டேய் உனக்கு யார்னு தெரியாது?” என்று ஆரம்பித்ததும் அவன் வசீகரமாக சிரித்தான்.
“இது தான் ஜோ நீ. அத விட்டுட்டு யார்ட்டயோ பேசற மாதிரி பேசற? ஃபோன் எடுத்தா நீ எப்படி பேசுவேனு எனக்கு தெரியாதா?”
“ச்சே… உனக்கு தெரியாத்தனமா போன் பண்ணிட்டேன்”
“இனி இப்படி அடிக்கடி பண்ணுவீங்க” என்று சிரித்தவன்
“சொல்லுங்க ஜோ. இப்போ எதுக்கு பண்ணீனிங்க?”
“நான் உன்கிட்ட பேசணும்”
“நான் கொஞ்சம் பிஸியாச்சே” என்று சிறிது யோசித்தவன்
“நாளைக்கு மீட் பண்ணலாமா?”
“ஹே… இடியட் ஐ வான்ட் டூ டாக் ரைட் நவ்” என்று சொன்னதும் சிறிது யோசித்தவன்
“ஓகே. ஈவ்னிங் ரெஸ்ட்டாரண்ட்டுக்கு வாங்க ஜோ” என்றவன் போனை கட் செய்ய அவளோ அவனிடம் என்ன பேசுவது என்று சிந்திக்க ஆரம்பித்தாள்.
******
அன்று மாலை ஜோஸ்வினி அவனை சந்திக்க ரெஸ்ட்டாரண்ட் சென்றாள். அவனோ அவளை கண்டு கொள்ளாது தனது வேலையை தொடர்ந்தான்.
பொறுத்து பொறுத்து பார்த்தவள் ஒரு கட்டத்தில் கத்த ஆரம்பித்தாள்.
“ஹலோ நான் பாக்க வந்திருக்கேனு ஓவர் சீன் போடறியா?”
“வெயிட் பண்ண வேண்டிய விஷயத்துக்கு வெயிட் பண்ணி தான் ஆகணும்” என்று இறுகிய குரலில் கூறியவனை யோசனையுடன் பார்த்தாள்.
பின்னரும் ஒரு அரை மணி நேரம் காத்திருக்க வைத்தவன் அதற்கு பின்பே அவளிடம் பேசினான்.
“சொல்லுங்க ஜோ”
“எனக்கு இந்த மேரேஜ்ல இஷ்டம் இல்ல”
“சோ…” என்று ஒற்றை புருவம் உயர்த்தி கேட்டான்.
“மேரேஜ் கேன்சல் பண்ணு”
“நீ ஷியாம என்கிட்ட இருந்து பிரிக்கலாம்னு நினக்கற. பட் அது கனவுலயும் நடக்காது”
“வாட்… கனவா பேபி?” என்று விழுந்து விழுந்து சிரித்தவன்
“எது நடக்க போகுதோ அத பத்தி மட்டும் தான் இந்த அபிஷேக் யோசிப்பான். சோ… யூ ஷூட் ஃபார்காட் ஷியாம்” என்றபடி அவள் அருகில் நெருங்கி வந்தான்.
அவள் திடுக்கிட்டு எழுந்து நின்றாள். அவளது கண்களையே பார்த்தவன்
“ஜெ டெம் மொன்னமோர்(I Love you my love)” என்று காதருகில் கிசுகிசுவென சொல்லியபடி அவளது கன்னத்தில் முத்தமிட்டான்.
திடீரென்று அவன் முத்தமிடுவான் என்பதை எதிர்பாராதவளின் நெஞ்சம் படபடவென்று அடித்து கொண்டது. அவளுக்கு உள்ளுக்குள் ஏதோ செய்ய அந்த உணர்வை புரிந்து கொள்ள முடியாமல் திணறினாள்.
அவள் விழிப்பதை பார்த்தவன் அவள் கன்னத்தை தட்டினான்.
“என்ன சொன்னேனு புரியலையா? இதையே யோசிச்சிட்டு தூங்கு பேபி. அப்றம் உனக்கு ஷியாம் ஞாபகம் வராது. தென்… பிரெஞ்ச் கிஸ் தான் நினைச்சேன். ஆனா பேபி நீ பயந்திட்டினா என்ன பண்றது? ஆஃப்டர் மேரேஜ் உனக்கு எல்லாத்த பத்தியும் சொல்றேன்” என்றவன் கண்ணடித்தான்.
ஜோஸ்வினியோ அவன் முத்தம் கொடுத்தும் தான் ஏன் தடுக்காமல் இருந்தோம் என்ற அதிர்ச்சியில் எதுவோ துரத்துவது போல வெகு வேகமாக அங்கிருந்து வெளியேறினாள்.
