அத்தியாயம்-26

சென்னை பன்னாட்டு விமான நிலையம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்க கைகளில் லக்கேஜ்  உடன் நின்று கொண்டிருந்தவன் போர்டிங் பாஸ்சில் நியூயார்க் என்று அவன் டெஸ்டினேஷனை பார்த்துக் கொண்டே நின்று இருந்தவனை நண்பர்கள் மூவரும் கவலையுடன் பார்த்துக் கொண்டிருக்க பெருமூச்சு விட்டு நிமிர்ந்தவன் “நான் போயிட்டு வரேன் எல்லாரும் பத்திரமா இருங்க!”  என்றான் கரண். 

அவன் முகத்தில் எந்தவித உணர்வையும் படிக்க முடியாமல் தோற்று போன நண்பர்கள்  “கவலைப்படாதடா அபி சீக்கிரம் உன்னை புரிஞ்சுப்பா நீ படிச்சு முடிச்சுட்டு வந்துரு எல்லாம் சரியா போயிடும்!”  என்றான் தேவன். 

“எத பத்தியும் நான் இப்ப நினைக்க போறது கிடையாது நான் எதுக்கு போறேன் அதை மட்டும் தான் பண்ண போறேன்!” என்றவன் அவனுடைய பிளைட் அறிவிப்பு வர “சரி நீங்க எல்லாம் நல்லா இருங்க அப்பப்போ காண்டாக்ட் பண்ணுங்க பேசலாம்!”  என்றவன் உணர்விழந்து  வெறுமையை  மட்டும் மொழியாக கொண்டவன் அவ்விடம் விட்டு சென்றுவிட இத்தனை வருடமாக அருகே இருந்த நண்பன் பிரிவினை தேவி கண்களில் கண்ணீர் வழிய தேவன் மட்டும் ஸ்ரீ நந்தன் இருவரும் மனதில் ஆயிரம் வலிகள் இருந்தாலும் அவர்களும்  அவன் செல்வதை பொறுமையாக பார்த்துக் கொண்டிருந்தனர். தேவி தேவன் தோல் சாய்ந்து கொள்ள தனது உடன்பிறப்பை தேற்றியவன் அவன் தலை மறைந்த உடன் மூவரும் கிளம்பினார். 

போர்டிங் பாஸ் செக் செய்து விமானத்தில் ஏறி அமர்ந்தவன் மனதில் ஆயிரம் வார்த்தைகள் ஆயிரம் வலிகள் பலவித உணர்வுகள் மனதிற்குள் இருந்தாலும் மௌனம் வெறுமை இரண்டையும் மொழியாக கொண்டிருந்தவன் முகத்தை வைத்து எதுவும் கண்டு கொள்ள முடியவில்லை. 

சிறிது நேரத்தில் அந்த விமானம் ஆனது பறக்க தொடங்க தன்னுடைய உயிரானவள் கொன்று  குவித்த காதல்  உணர்வுகளை மனதில் ஓரத்தில் அப்படியே ஒதுக்கி வைத்து விட்டு புதிய வாழ்க்கையை நோக்கி தன்  பயணத்தை ஆரம்பித்தான் கரண். 

தனது வீட்டில் பால்கனியில் நின்று வானத்தில் போகும் விமானத்தை பார்த்துக் கொண்டிருந்த அபி மனதிற்குள் அத்தனை துயரம் இருந்தாலும் கண்களில் கண்ணீருடன் அதையே பார்த்துக் கொண்டிருந்தாள். 

சற்று நேரத்திற்கு முன்பு தான் தேவி அபிக்கு அழைத்து பயங்கரமாக திட்டியவள் அபி என்ன பேச வருகிறாள் என்பதை கூட கண்டு கொள்ளாமல் காலை கட் செய்துவிட தன்னவன் வெளிநாடு சென்று விட்டான் என்ற செய்தி கேட்டு அவளுக்கு மனது இன்னும் வேதனை கொண்டது..

இரண்டு வருடங்கள் கழித்து…

காலை வேலை அந்த கல்யாண  மண்டபம் பரபரப்பாக இருக்க “முகூர்த்தத்துக்கு நாழி ஆரது பொண்ண அழச்சிண்டு வாங்கோ!”  என்று ஐயரின் குரலில் மணமகள் அறை  கதவு திறக்க அழகு பதுமையாக பிங்க் நிற பட்டு  புடவையில் பெண் தோழிகள் புடை சூழ நடந்து வந்த அபி முகத்தில் கல்யாண பெண்ணுக்கு உரிய நாணமோ எதிர்கால கனவுகளோ எதுவும் இல்லாமல் சோகம் சோகம் என்பதை மட்டும் தாங்கிக் கொண்டு நடந்து வந்தவள் எந்த உணர்வையும் கிரகித்துக் கொள்ள முடியாமல் பொம்மையைப் போல் சென்று  மணமகன் அருகில் அமர்ந்தால். 

அவனோ  அபியை அடைய போகும்  சந்தோஷத்தில் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன்,  “இந்த டிரஸ்ல நீ அழகா இருக்க!”  என்று காதல் வசனங்கள் பேசினாலும் அனைத்துக்கும் அவளிடம் இருந்து மௌனம் மட்டுமே மொழியாக வர,  அதுவோ அவனுக்கு எரிச்சலை கொடுத்தாலும் இடம் கருதி அமைதி காத்தவன்,  ஐயர் சொல்லும் மந்திரங்களை சொல்லிக் கொண்டிருக்க,  சற்று நேரத்தில் மாங்கல்யம் அவனது கைக்கு இடம் மாற அபியின் கழுத்தில் தாலி கட்டி தன்னுடைய மனைவி ஆக்கிக் கொண்டான் சந்துரு. 

 கல்யாண சடங்குகள் முடிந்தவுடன் மாப்பிள்ளை பெண் இருவரையும் சந்துரு வீட்டிற்கு அழைத்து சென்றனர் . 

அந்த நேரத்தில் அவன் குடும்பத்தை பற்றியும் அபிக்கும் இவனுக்கும் எப்படி திருமணமானது என்பதை பற்றியும் பார்த்துவிடலாம்..

அபி கரண் சென்ற பிறகு முழுவதும் அமைதியின் சிகரமாக மாறிவிட்டால்

பெண்ணவள்.

அதனால்  முன்பு போல் அந்த வீட்டில் கலகலப்பு இல்லாமல் இருந்தது .ஒரு நாள் அவள் தாய் தந்தை இருவரும் அவளிடம் பேசியதற்கு பின்பு தான் தனக்காக இல்லை என்றாலும் மற்றவர்களுக்காக பொய்யாக சந்தோஷமாக இருப்பது போல் நடிக்க ஆரம்பித்தால்.

 அதை உணர்ந்து கொண்ட பவித்ராவிடம் கட்டிக் கொண்டு நன்கு அழுது மனதில் இருந்த பாரத்தை இறக்கி வைத்தவள்,  தன்னவன் மேல் கொண்ட காதலை மட்டும் மறக்காமல் அதை ஒரு ஓரமாக வைத்து விட்டு அன்றாட வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு இருந்தாள்.

 அப்படி இருக்கையில் தான் மூன்றாம் வருடம் படித்துக் கொண்டிருக்கும் பொழுது , அவர்கள் குடும்பமாக ஒரு திருமணத்திற்கு சென்று இருக்க அங்கே கதிர்வேலின்  தூரத்து சொந்தம் தான் இந்த சந்துரு. அவன் குடும்பத்துடன் திருமணத்திற்கு வந்திருக்க அபியை பார்த்தவன் இவளின் அழகில் மயங்கிய  அவளை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டு அப்பொழுதே தனது அம்மாவிடம் கூற அந்த திருமணத்தில் அவள் மிகவும் அமைதியாக பெண்ணாக இருந்ததால் அவளின் உண்மையான குணம் அதுதான் என்று நினைத்து அவர்களும் அப்பொழுது  கதிர்வேலிடம் அவனின் அம்மா தாட்சாயணி தனது மகன் அபியின் மேல் கொண்டுள்ள  விருப்பத்தைக் கூற , அவர்களுக்கும் மகள் என்னதான்  தற்பொழுது சந்தோஷமாக இருந்தாலும் மனதிற்குள் காதலின் வலி இருப்பது தெரியும்.

 அவள் இவர்கள் பார்க்காத நேரம் சில பொழுது அழுததையும் கண்டு கொண்டவர்கள் அவள் பழைய காதலை மறந்து நிதர்சனத்தை ஏற்றுக் கொண்டு வாழ்வில் அடுத்த அடுத்த பகுதிகளை முன்னேற வேண்டும் என்று நினைத்தவர்கள் சந்த்ருவின் அம்மாவிடம் நம்பர் வாங்கிக் கொண்டு இல்லத்திற்கு சென்று முடிவு சொல்வதாக சொல்லிவிட்டு திருமணம் முடித்துவிட்டு தனது பெண்களையும் அடைத்துக் கொண்டு கதிர்வேல் இல்லத்திற்கு வந்தனர். 

 மறுநாள் காலையில் யோசனையில் அமர்ந்திருந்தவர் மகளிடம் சொல்ல முனைவதும் பின்பு சொல்லத் தயங்குவதையும்  கவனித்த அபி  தனது தந்தை அருகில் வந்து அமர்ந்தாள்.

“என்னப்பா ஆச்சு ஆபிஸ் கிளம்பாம ஏதோ டென்ஷனா இருக்கீங்க?”  என்ற அவள் பைகளை வைத்துவிட்டு தனது தந்தையின் கைகளைப் பிடித்துக் கொள்ள , 

“இல்லம்மா உன்கிட்ட ஒரு விஷயம் கேக்கணும் ஆனா உன் மனசு கஷ்டமும் படக்கூடாது அதை யோசிச்சிட்டு இருக்கேன்!”  என்றார்.

 அதைக் கேட்டவுடன் புன்னகைத்தவள்  “சொல்லுங்கப்பா என்ன விஷயம் ?” என்றவுடன்,  தாட்சாயணி சொன்னதை கூறியவர்,

” அதுதான் உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாமான்னு பார்க்கிறேன். ஆனா உனக்கு பிடிச்சா மட்டும் தான் அதுக்கு முன்னாடி அவங்கள பத்தி நல்ல விசாரிக்கணும் விசாரிச்சதுக்கு அப்புறம் தான் முடிவெடுக்கணும். இருந்தாலும் உன்கிட்ட கேட்டு வைக்கலாம் தான்!…”  என்றவுடன்,

” என்னப்பா இப்படி சொல்றீங்க அக்கா இருக்கிறப்போ எனக்கு எப்படிப்பா?”  என்றவுடன், 

 அங்கே வந்த பவித்ரா ‘அபி அடி வாங்குவ தேவையில்லாமல் என்னை கோர்த்து விடாதே நான் உனக்கும் கல்யாணம் வேணாம்னு தான் சொல்லிட்டு இருக்கேன் இந்த அப்பாதான் கேட்க மாட்டேங்கிறாரு!”  என்றவுடன்,

 அங்கே வந்த கௌரி “நீ சும்மா இரு உங்க ரெண்டு பேர் ஜாதகமும்  சின்ன வயசுலயே பார்த்துப்போ  அபிக்கு தான் முதல்ல கல்யாணம் பண்ணனும்னு சொன்னாங்க. ஆனா நாங்க அப்போ அதை நம்பல. இப்போ எல்லாம் பார்த்தா உங்களுக்கு அமையறதும்  அப்படிதான் அமையுது. பவித்ரா நீயும் உனக்கு கல்யாணம் வேண்டாம் இப்போ வந்த வரன் என்னவோ நம்ம அபிக்கு தான். அதனால எனக்கு என்னமோ நம்ம பொண்ணு மனசு ஒரு மாற்றம் தேவை என்றால் கண்டிப்பாக அவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்! எனக்கு தோணுது” என்றார் கௌரி உறுதியாக. 

அபி “அம்மா படிச்சு முடிச்ச உடனே மா ப்ளீஸ்!” என்றாள்.

” உனக்கு இன்னும் ஒரு செமஸ்டர் தானே இருக்கு உடனே கல்யாணம் பண்ணனும்னு சொல்லல!  ஒரு நிச்சயம் மட்டும் பண்ணிடுவோம். அதுக்கப்புறம் உன்னுடைய செமஸ்டர் எக்ஸாம் முடிஞ்சதுக்கு அப்புறம் நீ கல்யாணம் பண்ணிக்கலாம்” என்றவுடன்,

” நான் வேலைக்கு எல்லாம் போகணும்னு நினைச்சேன்மா!  என்றால் வருத்தத்துடன்.

” சரி டி கல்யாணம் பேசுறப்பவே நம்ம எல்லாத்தையும் பேசிடலாம். நீ உன் புகுந்த வீட்டுக்கு போய் வேலைக்கு போ. இப்ப அதனால என்ன பிரச்சனை!”  என்றவர்,

” போதும் அபி இதுக்கு மேல வேற ஏதாவது காரணம் சொல்லிக்கிட்டே இருக்காத. நீ இந்த ரெண்டு வருஷமும் ஜடம் மாதிரி  சுத்திட்டு இருக்கறது எங்க எல்லாருக்குமே தெரியும்! அதுவும் எங்களுக்காக தான் சிரிக்கிற இல்லன்னா நீ சிரிக்கவே மாட்ட சரிதானே?”  என்றவுடன் தாயை அதிர்ச்சியாக பார்த்தாள். 

 அவளது அதிர்ச்சியை கண்டு விரக்தி புன்னகை சிந்தியவர் “எனக்கு தெரியாதா அந்த பையன் போனதிலிருந்து நீ எங்களுக்காக மட்டும் தான் சிரிச்சிட்டு இருக்க மனசார ஒரு நாளும் நீ சிரிச்சதில்ல அதுல இருந்து உன்னைய உனக்கு வெளியில் வருவது கஷ்டமா இருக்கும்னு எங்களுக்கும் புரியுது. ஆனா வாழ்க்கை இது மட்டுமே கிடையாது. கடந்து போய் தான் ஆகணும். இப்ப உனக்கு கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கும். பின்னாடி எல்லாமே சரியா போயிடும். எங்க ரெண்டு பேருக்கும் நிம்மதிய கொடுக்கணும்னு நினைச்சேன்னா இந்த கல்யாணத்தை ஏத்துக்கோ!”  என்று கூறியவர்,  தனது கணவரை பார்த்து “உங்களுக்கு ஆபீசுக்கு நேரமாவது வந்து சாப்பிட்டு கிளம்புங்க அபி  யோசிக்கட்டும்!”  என்றவுடன் ,

அவரும் மகளின் தலையை வருடியவர் “உனக்கு இந்த மாப்பிள்ளை புடிச்சா மட்டும் தான் கல்யாணம் நடக்கும். அதுல அப்பா உறுதியாக இருக்கேன்!”  என்று சொன்னவர்  “கவலைப்படாமல் காலேஜுக்கு கிளம்பு!”  என்று விட்டு அவரும் சாப்பிட சென்றார். அதன் பிறகு அவள் படிப்பு முடிந்தவுடன் தனது தாய் தந்தைக்காக இவளும் திருமணம் செய்து கொண்டாள். விருப்பமில்லாமல் அவள் செய்து கொள்ளும் இந்த கல்யாணத்தை தோழிகள் இருவரும் எவ்வளவோ தடுத்து பார்க்க முயல தனக்காக இல்லை என்றாலும் அவர்களுக்காக கண்டிப்பாக செய்ய வேண்டும் இது என் மேல் சத்தியம் என்று அவர்களையும் அடக்கி வைத்து விட்டாள் அபி. 

தற்பொழுது திருமணம் முடிந்து சந்துரு  வீட்டில் அனைத்து சடங்குகளையும் முடித்த பிறகு, தாய்-தந்தை, அக்காவை பிரிய மனம் வராமல் கண்ணீர் விட்டாள் அவள்.

 அப்போது சந்துரு, “இனிமேல் அவ என் பொறுப்பு . நீங்க கவலைப்படாம போயிட்டு வாங்க!” என்றவன் அவியின் புறம் திரும்பி, “முதலில் என்னை கணவனாக இல்லாமல், நண்பன் என்று நினைச்சுக்கோ. நீ சந்தோஷமா இந்த வீட்ல இருப்ப” என்று சொல்லி அவளுக்கு ஆறுதல் அளித்தான் .

 அவளும் கண்ணீரை துடைத்து குடும்பத்தாரை சிரித்தபடி அனுப்பினாள்.ஆரம்பத்தில் இருவரும் நண்பர்களாகவே இருந்தனர். ஆறு மாதங்கள் கழித்து, குழந்தை பற்றிய விஷயத்தில் மாமியார் குத்தலாக பேசத் தொடங்கினாள். சந்துரு அவ்வப்போது மனைவிக்கு ஆதரவாக பேசியதால் அவன் முன்பு அமைதி காத்தவர்,  அவன் இல்லாத நேரத்தில் அவள் அதை தனியாக சமாளிக்க வேண்டியிருந்தது.

இதனால், ” சந்துரு எனக்காக இவ்வளவு செய்திருக்கான்… இப்போ நான் அவன் உணர்ச்சிகளையும் புரிந்து கொள்ள வேண்டும்” என்று முடிவு செய்து, அவனுடன் முழுமையான தம்பதிய வாழ்க்கையை தொடங்கினாள்.

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page