அத்தியாயம்-27

இல்லற வாழ்க்கையை வாழ ஆரம்பிக்க இருவரும் புதுமண தம்பதிகள் போல் காதல் பொழுதுகளை கூடலுடன் கழித்துக் கொண்டிருந்தனர் .  அதன் விளைவாக இரண்டு மாதம் கழித்து கருவுற்று இருந்தால் அபி. 

அதைக் கேட்ட மாமியாருக்கும் அவ்வளவு சந்தோஷம். உடனே செக்கப் அழைத்துக் கொண்டு சென்றவன் மனைவியின் கர்ப்பம் உறுதியானதில் சந்தோஷம் கொண்டவன் அவளை நன்றாக பார்த்துக் கொண்டான்.

இப்படியே நாட்கள் செல்ல இப்பொழுது எல்லாம் காலையில் சீக்கிரம் அலுவலகத்திற்கு சென்றவன் இரவு 11 மணி தாண்டி தான் வருவான்.  இவளுக்கோ கர்ப்பகால உபாதைகள் ஆரம்பித்து இருந்ததால் மிகவும் சோர்ந்து காணப்பட்டால். 

இவன் வரும் பொழுது அவள் தூங்கி விட,  சில நேரம் தனது உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் அவள் அருகில் நெருங்குபவனை தூக்கத்தில் உடம்பில் ஏற்படும் மாற்றத்தை கொண்டு கண்டு கொண்டவள்,  “அஞ்சு மாசம் முடியாமல்  எதுவும் வேண்டாம் என்று டாக்டர் சொல்லி இருக்காங்கல்ல ப்ளீஸ்ங்க மறந்துட்டீங்களா?”  என்பாள்.

ஆரம்பத்தில் அதை  ஏற்றுக்கொண்டு “சரி மா சாரி!  என்னால உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியல!”  என்றவன் அவள் தொடர்கதை இதுவே ஆனதால் அவளை திட்ட ஆரம்பித்தான். 

“நீ மட்டும் உன்னுடைய உடம்ப நல்லா பாத்துக்கலனா எதுக்காக இந்த பிரச்சனை வரப்போகுது !” என்று அவன் வார்த்தைகள் நாளுக்கு நாள் அதிகமாக விழ,  பெண் அவள் கர்ப்பத்தால் ஏற்படும் ஹார்மோனல்  மாற்றத்தில் அவளும் சில நேரம் கத்தி விடுவாள். அதில் ஒரு நாள் அவளை கோபம் கொண்டு அடித்து விட்டான்..

அதில் அபி வலி தாங்காமல் கீழே விழுந்து வயிறு நன்றாக கட்டிலின் முனையில் இடித்துக் கொள்ள அடி வயிற்றில் ஆழமான ஒரு வலியை உணர்ந்தவள் கால் வழியாக ரத்தம் வருவதை உணர்ந்து அப்படியே மயக்கம் அடைய , சந்துரு விபரீதத்தை உணர்ந்து புடவையை தாண்டி வழிந்த ரத்தத்தை கண்டு தலையில் அடித்துக் கொண்டவன் தான் செய்த தவறை  உணர்ந்தவன் அவளை மருத்துவமனைக்கு சேர்த்து பெண்ணவளை சிகிச்சை மேற்கொள்ள கரு கலைந்ததாக சொன்ன மருத்துவர் “கர்ப்பப்பை வீக்கா இருக்கு . கர்ப்பப்பை பலம் அடைந்த பின்பு  தான் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும் !” என்றார்.

அதைக் கேட்ட சந்துரு துடித்து போனவன் மனைவியிடம் ஆயிரம் மன்னிப்பு கேட்டான். அவளது மாமியாரோ மகன் தவறு செய்திருக்க மாட்டான் இவள் தான் ஏதாவது செய்திருப்பாள் என்று அதன் பிறகு வார்த்தையால் அவளை சித்திரவதை செய்ய ஆரம்பித்தார். சந்துருவே தன் மேல் தான் தவறு இருக்கிறது என்று உரைத்தாலும் அவர் நம்புவதாக இல்லை.

சந்துரு  ஒரு கட்டத்திற்கு மேல் தனது அம்மாவின் பேச்சை கண்டுகொள்ளாமல் தனது மனைவியை நன்றாக பார்த்துக் கொண்டவன் மிகவும் சந்தோஷமாக இருந்தான். அபியின் குடும்பத்தினருக்கு குழந்தை அபாட்டான விஷயம் தெரியாது அவ்வப்பொழுது போனில் பேசிக் கொள்வர் . ஏனென்றால் இவள் திருமணமாகி வந்து இருக்கும் இடம் கோயம்புத்தூர் அவர்கள் இருப்பதோ சென்னை..

அடுத்து ஒரு வருடம் நொடியில் ஓடியது. வீட்டில் இருந்தால் மாமியாரின் வசை பேச்சில் துவண்டு விடுவாள் என்று உணர்ந்த அபியும் சந்துருவிடம் வேலைக்கு போவதாக சொல்லி   ஒரு வருடமாக வேலைக்கு சென்று கொண்டு இருந்தாள்.

தற்பொழுது மாமியார் வெளிப்படையாகவே அவளை திட்ட ஆரம்பிக்க,  வெளியில் வேலை வீட்டு வேலை மற்றும் இரவில் கணவனுக்கு கூடலில் திளைப்பது என்று இருந்தவள் மனதில் அவருடைய திட்டுகள் மனக்கவலையை கொடுத்தது. அவர்களுக்கு குழந்தை இல்லாததை  தற்பொழுது வெளியிடங்களிலும் இவனை கேள்வி கேட்க சந்துருவுக்கும் சற்று எரிச்சல் வர ஆரம்பித்தது. அவனும் அவளிடம் கோபத்தை காட்டிக் கொண்டு இருந்தான். அவள் ஒரு நாள் அவனிடம் மனம் விட்டு பேசிய உடன் தவறை உணர்ந்து அவளிடம் மன்னிப்பு கேட்டு நன்றாக பார்த்துக் கொண்டான்.

அதனால் மீண்டும் இவர்கள் வாழ்க்கை சந்தோசமாக ஊடலுடன் கூடலும் சென்று கொண்டிருக்க,   மருத்துவமனைக்கு செக்கப் சென்று பார்த்தவர்கள் அவள் “கர்ப்பப்பை நன்றாக தேறிவிட்டது எப்பொழுது வேண்டுமானாலும் குழந்தை தரிக்கலாம் கவலைப்படாதீர்கள்!”   என்று சொல்லியும் மனைவி கர்ப்பபடையாமல் இருப்பதை அவன் கண்டு கொள்ளாமல் இருந்தாலும் தனது அம்மாவின் பேச்சில் அவனுக்கே அந்த எண்ணம் மனதில் தோன்ற அவப்பொழுது அபியிடம் கோபத்தை காண்பிக்க ஆரம்பித்தான்.

அவன் வேலை பார்க்கும் பணியிடத்தில் மோனா என்ற பெண்ணுடன் இவனுக்கு பழக்கம் ஏற்பட ஆரம்பித்தது.  ஆரம்பத்தில் நட்பாக பழகியவர்கள் இவனுடைய நிலைமையை முழுவதும் தெரிந்து கொண்டவள்,  அவனிடம் நெருக்கத்தை காட்ட ஆரம்பிக்க அவனுக்கும் தற்பொழுது எல்லாம் அபியின் மேல் ஈர்ப்பு குறைந்து விட்டதால்,  இவளுடைய அங்க வனப்புகள் அவனை போதை கொள்ள செய்ய நட்பான பேச்சுகள் காதலாக (காமமாக) மாறி அதில் காமம் தான் அதிகமாக இருக்க அவளுடன் தாராளமாக உடலுறவு வைத்துக் கொள்ள ஆரம்பித்தான். 

கிட்டத்தட்ட இப்பொழுது அவள் கரணை பிரிந்து நான்கு வருடங்கள் ஆகி இருக்க, அவ்வப்பொழுது அவன் நினைவு வந்தாலும் அதை ஒதுக்கி விடுவாள்.  ஏனென்றால் தன்னை இவ்வளவு நாள் நன்றாக பார்த்துக் கொள்ளும் கணவனுக்கு அது துரோகம் என நினைத்தவள் குழந்தை வராதா என்று ஏங்கித் தவிக்க , 

அன்று அலுவலகத்தில் வேலை செய்யும் பொழுது மயக்கம் அடைந்து விழுந்து விட, மருத்துவமனையில் சேர்த்து பார்த்ததில் அவள் கர்ப்பம் அடைந்ததை டாக்டர் உறுதிப்படுத்த சந்தோஷமாக வீட்டிற்கு வந்து அதை கணவனிடம் சொன்னால் .

அவன் முகத்திலோ அவள் எதிர்பார்த்த அளவு சந்தோஷம் இல்லை என்றாலும் மனைவியை கட்டிப்பிடித்தவன் “ரொம்ப சந்தோஷம் ! அபி” என்று மட்டும் சொல்லிவிட்டு வேலைகளை பார்த்துக் கொண்டிருக்க, “என்னப்பா எவ்வளவு சந்தோஷமான விஷயம் சொல்லி இருக்கேன்? இவ்வளவுதான் ரியாக்ஷனா?”  என்றால்.

“அதுக்கு என்னம்மா பண்ண முடியும் அதைக்கூட என்னால கொண்டாட முடியாத அளவுக்கு வேலை ஜாஸ்தியா இருக்கு! மத்தபடி எனக்கு ரொம்ப சந்தோஷம் கண்டிப்பா இந்த ஒர்க் பிரஷர் எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம் உன்கிட்ட நான் மனசு விட்டு எவ்வளவு சந்தோஷமா இருக்கேன்னு கண்டிப்பா சொல்லுவேன்”  என்று லேப்டாப்பை பார்த்துக் கொண்டே சொல்ல , அவளும் கணவனை நம்பியவள் மாமியாரிடமும் தனது பிறந்த வீட்டிடமும் சொல்லி சந்தோஷம் கொண்டால். அடுத்து இரண்டு நாள் கழித்து அபியின் பெற்றோர் இவளை  பார்க்க வந்திருந்தனர். 

அப்பொழுது பவித்ரா  வராமல் இருக்க தனது அக்காவை பற்றி கேட்டால் அபி. அவர்களோ அவளுக்கு வேலை பலு அதிகமாக இருக்கிறது வேறு இடத்திற்கு சென்று இருக்கிறாள் என்று ஏதோ ஒரு காரணத்தை சொல்லி அபியை சமாளித்தனர்.

 ஏனென்றால் அவளுக்கு திருமணம் முடிந்த அவள் தனது கணவன் வீட்டில் இருக்கிறாள்.அபிக்கு  சொல்லாமல் அக்கா திருமணம் செய்து கொண்டதை தற்பொழுது சொன்னால் அபி வருத்தப்படுவாள் என்று அவர்களும் சொல்லவில்லை. ஏனென்றால் அவர்களுக்கே அவளுக்கு திருமணம் நடந்தது மகள் சொல்லி தான் தெரிந்தது. அப்படி இருக்க  பாவம் அவர்களும் தான் என்ன செய்வார்கள்..

அபி கர்ப்பமாக இருக்கிறாள் என்று தெரிந்ததிலிருந்து மாமியார் வாய் குறைந்துவிட்டாலும் அவளை வேலை வாங்குவது மட்டும் நிறுத்தவில்லை. ஆனால் அதையும் சற்று குறைத்துக் கொண்டார் மகனின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு.

அன்று காலை சந்துரு வேகமாக அலுவலகத்திற்கு கிளம்பிக் கொண்டிருக்க, குடித்த காபி முழுவதையும் கழிவறையில் வாந்தி எடுத்துவிட்டு வெளியே டயர்டாக வந்த அபி, “என்னங்க, எனக்கு கொஞ்சம் டிரஸ் எல்லாம் எடுக்கணும். நார்மல் டிரஸ் எதுவும் இப்ப பத்த மாட்டேங்குது, கஷ்டமா இருக்கு. கொஞ்சம் கடைக்கு கூட்டிட்டு போறீங்களா? நேத்தே சொல்லி இருந்தேனே,” என்றாள்.

அவனோ எரிச்சலை மறைத்துக் கொண்டு, “சொன்னமா. ஆனா இன்னைக்கு ஒரு முக்கியமான வேலை மீட்டிங்  வேற இருக்கு. அதுக்காக தான் வேகமாக கிளம்பிட்டு இருக்கேன். சாரி, உனக்கு வேணும்னா அம்மாவ கூட்டிட்டு போ,” என்றவன், அவள் பதிலையும் எதிர்பாராமல் அறையிலிருந்து வெளியேறிவிட்டான்.

முன்பெல்லாம் பாசமாக இருந்தவன் தற்போது விலகுவதை நினைத்து கவலை கொண்டவள், “சரி, வேலைனால தான் இப்படி இருக்காரு,” என்று மனதை தேற்றிக்கொண்டாள். 

சிறிது நேரம் அமர்ந்து விட்டு, குளித்து தயாராகி ஹாலுக்கு வந்தவள், அங்கே டிவி பார்த்துக் கொண்டிருந்த தாட்சாயணி அருகில் வந்து நின்று, “அத்தை, கொஞ்சம் டிரஸ் எடுக்கணும். வரிங்களா? என்கூட கடைக்கு போயிட்டு வரலாம். அவர்கிட்ட கேட்டேன், உங்களை கூட்டிட்டு போக சொன்னார் அத்தை,” என்றாள் தயக்கத்துடன்.

“இல்லம்மா, அடிக்கிற வெயில்ல என்னால எல்லாம் போக முடியாது. நீ வேணும்னா உன்னோட பிரெண்ட்ஸ் யாராவது கூட்டிட்டு போயிட்டு வா,” என்றவர், 

“என் புள்ள காச கரைக்குறதுக்குனே வந்து இருக்கா கல்யாணம் பண்ணிக்கிட்டு,” என்று முணுமுணுத்தார்.

அதை கேட்டவள் அறைக்கு சென்று ஹேண்ட்பேக் எடுத்துக்கொண்டு வந்து, அத்தையின் முன்பு நின்று, “உங்க புள்ள காசை நான் ஒன்னும் செலவு பண்ணல. நான் சம்பாதித்த காசை தான் எடுத்துட்டு போய் இப்ப எனக்கு தேவையான உடைகள் வாங்க போறேன். அதுவும் எனக்கு பத்தாததினால் தான் . நீங்க அத பத்தி எல்லாம் கவலைப்படாதீங்க,” என்று நறுக்குத் துண்டாக பேசிவிட்டு வெளியேறிவிட்டாள்.

செல்லும் அவளை கோபமாக பார்த்தவர், “எல்லாம் என் பையன் கொடுக்கிற இடம் வரட்டும், அவனை வச்சுக்கறேன்,” என்று முணுமுணுத்து மீண்டும் டிவியை பார்க்க ஆரம்பித்தார். 

இவளோ கேப் புக் செய்து மாலுக்கு வந்திருந்தாள். இதற்கென்று பிரத்தியேகமாக இருக்கும் ஒரு பிராண்ட் கடைக்கு அங்கே வந்திருந்தவள், சாப்பிடாமல் வந்திருக்க அதை கூட கண்டு கொள்ளாமல் தனது மருமகளை அனுப்பி வைத்திருந்தார் அந்த புண்ணியவதி.

அவளுக்கோ ஏற்கனவே காலை குடித்த காபியும் வெளியே வந்திருக்க, தற்போது சாப்பிடவில்லை என்றால் மயங்கி விழுவது உறுதி. அந்த நிலையில் கடைக்கு செல்லாமல் நேராக ஃபுட் கோர்ட் சென்று காலை உணவை ஆர்டர் செய்து வாங்கி சாப்பிட்டு முடித்தாள்.

பிறகு ஒரு மாதுளை பழச்சாறு  ஆர்டர் செய்து, அதை கையில் வாங்கிக் கொள்வதற்காக காத்துக் கொண்டிருக்க, அப்பொழுது ஒரு பெண் இவளை இடிப்பது போல் வந்து நின்று, “ஹலோ, ரெண்டு ஆப்பிள் ஜூஸ்,” என்று கார்டை நீட்டினாள்.

இவளோ, “ஏங்க, கொஞ்சம் பார்த்து வரலாமே ? இப்படித்தான் மேல இடிக்கிற மாதிரி வருவீங்களா? மேடம், பிரக்னண்டா வேற இருக்கேன். கொஞ்சம் பார்த்து நடந்து வாங்க,” என்றாள் தன்மையாக.

அந்தப் மாடர்ன் மங்கை  வந்த வேகத்தில் இவள் சுதாரித்து நிற்காமல் இருந்தால் கீழே விழுந்து, வயிற்றில் இருந்த குழந்தைக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும் என்பதால் தான் இவ்வாறு பேசினாள்.

அதற்கு அந்த பெண், அவளை மேலிருந்து கீழ்வரை அலட்சியமாக பார்த்து, “உங்கள மாதிரி ஆட்கள் எல்லாம் எதுக்கு வெளியே வந்து அடுத்தவங்களுக்கு டிஸ்டர்ப் பண்ணிட்டு இருக்கீங்க? மூடிட்டு வீட்டிலேயே உட்கார வேண்டியதுதானே?” என்று அசிங்கமாக பேசினாள்.

“எவ்வளவு நேரம் ஜூஸ் போடுவீங்க? சீக்கிரம் போட்டு குடுங்க,” என்று கத்தி, ஜூஸ் வாங்கிக்கொண்டு செல்லும் முன் அபியை ஏளனமாக பார்த்துவிட்டு சென்றாள்.

அவள் எவ்வாறு முகத்தில் அடித்தது போல் பேசியதில் அதிர்ந்த அபி அவள் செல்வதை பார்த்துக் கொண்டிருந்தவள் ‘என்ன இந்த பொண்ணு இப்படி பேசிட்டு போறா கொஞ்சம் கூட மேனர்ஸ் கிடையாது!’  என்று நினைத்துக் கொண்டே திரும்பினாள்.

இதை பார்த்த கடைக்காரர், “ஏம்மா, உனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே? நல்லா தானே இருக்க?” என்றார். அவளும் “ஆமாம்,” என்று தலை ஆட்டினாள்.

“இந்த மா ஜூஸ் எடுத்துக்கோ. அந்தப் பொண்ணு பேசுனதெல்லாம் மனசுல வச்சுக்காத. பணத்திமிர்ல பேசிட்டு போகுது. அடிக்கடி இப்படித்தான் வந்துட்டு போவாங்க. நீ மனசு தைரியப்படுத்திட்டு போமா,” என்று அனுப்பி வைத்தார்.

அவளும் அந்த ஜூசை குடித்துக் கொண்டே மெதுவாக நடந்தவள், குறிப்பிட்ட மெட்டர்னிட்டி உடைகள் விற்கும் கடைக்குள் சென்று தனக்கு தேவையானவற்றை வாங்கிக் கொண்டு வெளியே வந்தாள்.

இன்னும் சில கடைகள் அங்கே இருக்க, அனைத்தையும் பார்த்துக் கொண்டே நடந்து வந்தவள், டாக்ஸி புக் செய்துவிட்டு அதற்காக காத்துக் கொண்டிருந்தாள்.

அப்பொழுது யாரோ சிரிக்கும் சத்தம் கேட்டு, குரல் வந்த திசை திரும்பினாள். அங்கே கண்ட காட்சியில் அவள் அப்படியே அதிர்ச்சியில், கையில் இருந்த பைகளை கீழே விட்டாள்.

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page