அத்தியாயம் 26

  கௌரி, சனி, ஞாயிறு வந்ததும் வர்ஷினி, வீட்டிலேயே இருக்கிறாளே வெளியே அழைத்து கொண்டு போகலாம் என்று  அவளிடம் சொல்ல அவளும் மகிழ்ந்து வெளியே வர ஒப்புக்கொண்டாள். அன்று காலையிலேயே சீக்கிரமாக எழுந்து டிபன், மதியம் சாப்பாடு என்று அனைத்தையும் செய்து ஒரு பெரிய பையில் தண்ணீர் பாட்டிலோடு எடுத்துக்கொண்டு தயாராகி நின்றாள். கௌரி அவளிடம் எதுக்கு உடம்பை வருத்தி இதையெல்லாம் செய்து கொண்டு வற, போற இடத்தில் நிறைய நல்ல உணவகங்கள் இருக்கு . அங்கேயே சாப்பிடலாமே என்றதும் வர்ஷினி எப்படியோ நாம திரும்பி வர இரவு ஆயிடும். மூன்று வேளையும் வெளியே சாப்பிட்டா  உடம்பு கெட்டுவிடும்.  அதனாலே இரவு மட்டும் வெளியே சாப்பிடலாம் என்று கூறிக்கொண்டே  உணவு பையை  எடுத்துக் கொண்டு நடக்க கௌரி அவளிடம் இருந்து பையை வாங்கி கொண்டு முன்னால் நடந்தான். இருவரும் காரில்  நியூயார்க்கில் உள்ள சென்ட்ரல் பார்க்குக்கு சென்றார்கள். வெளியே குளிர் கடுமையாக இருக்க , தலையில் குல்லா, கைகளில் கையுறை ,இரண்டு மூன்று குளிர் ஆடைகள் என்று அணிந்திருந்தாலும்  முதல் முறையாக இத்தகைய குளிரில் வருவதால் வர்ஷினிக்கு உடம்பெல்லாம் கிடு கிடுவென ஆடியது. அன்று  பனியில் விளையாடியபோது தெரியாத குளிர் இன்று தெரிந்தது. கௌரியை விட்டு அவள் இம்மியளவு கூட  நகரவில்லை. அவனை ஒட்டிக் கொண்டே நடந்தாள். அங்கு இருக்கும் bethesda terrace சுற்றி வந்தார்கள். அங்கு இருக்கும் நீர்வீழ்ச்சிகளும், சுற்றி ஏரிகளும், அதில் உள்ள வித்யாசமான பறைவைகள் , ஆமைகள், வகைவகையான மீன்கள் என அனைத்துமே வர்ஷினியை ரொம்பவுமே கவர்ந்தன. அதனிடம் ஆசையாக விளையாடினாள். அங்கு இருக்கும் அதற்கென்று உள்ள உணவுகளை வாங்கி அந்த ஏரியில் போட அந்த நீர்நிலையில் உள்ள உயிரினங்கள்  சாப்பிடுவதை பார்த்து தனது அலைபேசியில் புகைப்படம் எடுத்துக்கொண்டாள். அங்கு இருக்கும் புராதன கட்டடங்களின் வளைவுகள், அது கட்டி இருக்கும் நேர்த்தி பார்க்க பார்க்க  வியப்பாய் இருந்தது. இருவரும் ஒன்றாக சேர்ந்து அங்கு நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்

 

பிறகு, அங்கு உள்ள ஏரியில் படகு சவாரி செய்தார்கள். ஏரியை சுற்றியுள்ள ஒரு சில மரங்களில் இலைகள்  இருந்தன.  சில மரங்கள் வெண்பனியை மலராக கொண்டு இருப்பது போல் காட்சி அளித்தது. வர்ஷினிக்கு இது புது வித அனுபவமாக இருந்தது. படகு சவாரி முடிந்தது  இருவரும் சோர்வாக இருக்க வீட்டில் இருந்து எடுத்து வந்த உணவை அந்த பூங்காவில் வைத்து உண்டார்கள். கௌரி பசியின் காரணமாக வேகமாக உண்டு முடித்தான். ஆனால் வர்ஷிணியால் உண்ண முடியவில்லை. அவளுக்கு இந்த கடுமையான குளிர் பழகவில்லை  என்பதால் கையுறையை கழற்றியதும் கைகள் எல்லாம் நடுங்கியது. சாப்பாடு எடுத்து சாப்பிட கூட முடியவில்லை. கைகளெல்லாம் குளிரில் வலித்தது அவளுக்கு. அதை கவனித்த கௌரி சாப்பாடை அவளிடம் இருந்து  வாங்கி  தானே ஊட்டிவிட்டான். வேணாம் கௌரி இது பொது இடம் யாராவது பார்த்தா என்ன நினனைப்பாங்க என்று அவள் மறுக்க மறுக்க, என் பொன்டாட்டிக்கு நான் ஊற்றேன், யார் என்ன சொல்ல போற, இங்கே அதெல்லாம் ஒன்னும் கண்டுக்கமாட்டாங்க. அப்படி பார்த்தாலும் ஒன்னும் தப்பில்ல என்று சொல்லி  அவனே உணவு முழுவழுதும் அவளுக்கு ஊட்டி விட்டு வாயை துடைத்து கையையும் கழுவி துடைத்து விட்டான். வர்ஷினிக்கு அவனை பார்க்க பார்க்க காதல் பொங்கியது. இந்த ஊருக்கு வந்த நாளில் இருந்து  எவ்வளவோ அக்கறையா என்னை பாத்துகிறான், இவனை போய் வேண்டாம்னு சொல்லி அந்த நரகத்தில் மாட்டிக் கொண்டு என்று அவள் நினைக்க  நினைக்க கண்ணீர் பெருகியது. பிறகு இருவரும் உண்ட பின் அங்கிருக்கும் மிருகக்காட்சி சாலைக்கு  சென்று வித விதமான விலங்குகள், கலர் கலரான பறவைகள், ஊர்வனங்கள்  என்று அனைத்தையும் பார்த்து ரசித்தார்கள். எல்லாம் பார்த்துவிட்டு திரும்பும் போது மணி ஐந்தை தொட்டிருந்தது. வர்ஷினி இன்றைக்கு இது போதும் வீட்டுக்கு செல்லலாம் என்று சொல்ல இருவரும் வீட்டிற்கு வரும் வழியில் போக்குவரத்து சிஃனலில்  அன்று போல் ஒரு மனிதன் என்னால் வேலை செய்ய முடியாத நிலையில்  இருக்கிறேன் எனக்கு உங்களால் இயன்ற உதவி செய்யுங்கள் என்று ஆங்கிலத்தில் எழுதிய பதாகையை கையில் தாங்கியிருக்க, உடனே வர்ஷினி தான் எடுத்து கொண்டு வந்த ஒரு சாப்பாடு பொட்டலத்தை எடுத்து கொண்டு அவருக்கு கொடுக்க  கார் கதவை திறந்து கொண்டு வெளியில் ஓடிட, அவள் போவதை சற்றும் எதிர்பார்க்காத கௌரி அவள் கையில் இருக்கும் உணவு பொட்டலத்தை பார்த்து திடுக்கிட்டு  வர்ஷினி நில்லு, அதை அவர்களிடம் கொடுக்காதே என்று அவள் பின்னாடியே கத்திக் கொண்டு ஓடினான். வர்ஷினி அதை அந்த மனிதரிடம் கொடுக்கும் முன்பே தடுத்து  அவரிடம் அதற்கு பதிலாக தன்னிடம் இருந்த பணத்தை கொடுத்து விட்டு கையோடு  வர்ஷினியையும் வேகமாக அழைத்துக்கொண்டு சிக்னல் விழுவதற்கு முன்பே காருக்குள் வந்தான்.

 

ஏன் சங்கர்? என்னை அவருக்கு சாப்பாடு குடுக்காம அழைத்து கொண்டு வர, பாவம் அந்த மனுஷன் இந்த குளிரில் ஏதாவது உதவி செய்யுங்கனு நிக்கறப்போ நம்ம கிட்ட இருக்கிற உணவை கொடுத்தா என்ன தப்பு?என்று கேட்க, கௌரி முதலில் அவளை அமரவைத்து, கார் பெல்ட் போட்டுக்கோ என்று சொல்லி காரை கிளப்பிய பின் பேச தொடங்கினான். நாம நம்ம உணவுகளில் காரமா, மசாலா எல்லாம் சேர்த்து சாப்பிட்டு பழகிட்டோம். அது நமக்கு ஒத்துக்கவும் செய்றதால ஒன்னும் பிரச்சனை இல்லை. ஆனா இங்க இருக்கிறவங்க அப்படி இல்லை, அவங்க காரம் அதிகம்  உள்ள உணவுகளை சாப்பிட மாட்டாங்க. இப்ப நீ குடுக்கிற இந்த சாப்பாட்டினாலே அவருக்கு ஏதாவது உடம்பு சரியில்லாம போச்சுன்னா என்று முடிக்கும் முன்பே உடனே வர்ஷினி இவரும் என் மேல கேஸ் போடுவாரு, அப்படித்தானே, இவரு பணத்துக்கு  வழி இல்லாம தானே இப்படி பலகையை புடிச்சிண்டு இந்த குளிரிலும் நிக்கறாரு அப்படி எப்படிடா இவரு என் மேல கேஸ் போடமுடியும்? என்று கோபமாக கேட்க, கௌரி பொறுமையாக நான் தான் முன்னாடியே உங்கிட்ட சொன்னேனே, இங்கு எல்லோரும் சுதந்திரமா வாழறவங்க, சுதந்திரமா செயல்படறவங்க. இங்கு ஒரு சாதாரண மனிதன் கூட ஜனாதிபதி மேலே கேஸ் போடலாம், இனிமே என்னை கேக்காம எதுவும் செய்யாதே என்று அவன் சாதாரணமாகத்தான் கூறினான், ஆனால் வர்ஷினிக்கு அதுவே கோபம் வந்துவிட்டது. சற்று நேரத்திற்கு முன் அவன் பால் காதலில் உருகியவள், இப்போது  நான் எது செய்தாலும் என் மீது  குறை கண்டுபிடிச்சிட்டே இருக்கான் இந்த கருவாயன் என்று மனதிற்குள் அவனை திட்டி தீர்த்தாள்.  கௌரிக்கும் அவளுடைய மனநிலை புறியத்தான் செய்தது ஆனாலும் அவன் இங்கிருக்கும் நடைமுறை சிக்கலை தான் அவளுக்கு புரிய வைக்க  முயன்றான்.   

 

அந்த அந்த ஊருக்கு ஏற்ப நாம் வாழ்ந்தால் தான் நம்மால் அமைதியாகவும், நிம்மதியாகவும் வாழ முடியும் என்பதை புரிந்து கொண்ட கௌரி தன் மனைவியும் அவ்வாறே பின்பற்றவேண்டும் என்று நினைப்பது தவறு ஒன்றும் இல்லையே. 

 

வீட்டுக்கு வந்ததும் வர்ஷினி முகத்தை தூக்கி கொண்டு இருக்க கௌரி அவள் அருகில் வந்து இங்கே பாரு,வர்ஷினி உன்னை காயப்படுத்த வேண்டும், உன்னை குறை சொல்ல வேண்டும் என்பது என் நோக்கம் இல்லை . அந்த அந்த இடத்திற்கு ஏற்ப நாம் வாழ கற்றுக்கொள்ள வேண்டும். இங்கே இருக்கிற நடைமுறைகள் உனக்கு தெரியாதனாலதான்,  நான் உனக்கு சொல்லி கொடுத்தேன் என்று அவன் சொல்லியும் அவள் அவனை முறைத்து கொண்டு நிற்க, அவன் அவள் அருகில் வந்து என் குட்டி குஷ்பூவுக்கு இன்னும் என் மேல 

கோபம் போகலையா என்று அவள் கன்னத்தை மெதுவாக கிள்ள, என்னது குட்டி குஷ்பூவா! என அவள் விழி விரித்து அவனை பார்க்க, ஆமா  நீ எப்போதும் என் செல்ல குட்டி குஷ்பூ தான் என்று சொல்லி அவளை முதல் முறையாக இறுக அனைத்து கொண்டான். அவளும் ஒன்றும் சொல்லாமல் அவனிடத்தில் ஒன்றி கொண்டாள். 

 

 

ஒரு மாதம்  ஓடிவிட்டது. கௌரிக்கு வேலை சரியாக இருந்தது. விடுமுறை நாட்களை தவிர வர்ஷினிடம் பேச கூட அவனுக்கு நேரம் இல்லாத வகையில்  அவன் வேளையிலே மூழ்கி போனான்.  அன்று காலையில் வர்ஷினியை அழைத்து அவளிடத்தில் ஒரு படிவத்தை நீட்ட , அவள் என்னது இது என்று புரியாமல் அவனை பார்த்து வைத்தாள். கௌரி, வர்ஷினி நான் வேலைக்கு போன பிறகு உனக்கு ரொம்ப போர் அடிக்குதுனு எனக்கு தெரியும். உனக்கு தையல் கலை தெரியும்னு எனக்கு தெரியும் அதனாலே தான் இங்க இருக்கிற ஆடை வடிவமைப்பாளர் படிப்புக்கு உனக்கு அட்மிஷன் வாங்கி இருக்கிறேன். இதிலே ஒரு கையெழுத்து போட்டு கொடு என்று கூறியதும் வர்ஷினிக்கு ஒரே சந்தோஷம். ரொம்ப தேங்க்ஸ் கருவாயா என்று சொல்ல, இந்த முறை முறைப்பு அவனுடையதாகி இருந்தது. வர்ஷினி நீ என்ன குட்டி குஷ்பூ என்று சொல்லறப்போ நான் என்ன கோவிச்சுக்கவா செய்தேன் என்று அவனிடம் வாதாட, அதுவும் இதுவும் ஒன்னாடி என்று கௌரி அவளை அனைத்துக் கொண்டு கேட்க, ஆமா நான் எப்படி உனக்கு குஷ்பூவோ அதே மாதிரி நீ எனக்கு கருமையான வாய் உடைய என் செல்ல கண்ணன் என கூற, ஏற்கனவே அவளிடம் மயங்கி இருக்கும் அவன் இதை கேட்டு அவளிடம்  விழுந்தே விட்டான்.   

 

ஒரு வாரம் கழித்து வர்ஷினி ஆர்வத்துடனும் , சிறிது பயத்துடனும் அந்த கல்லூரிக்கு சென்றாள். அந்த கல்லூரி பார்க்கவே மிக அழகாக இருந்தது  ப்ரபாண்டமான  சிவப்பு நிற கட்டிடங்கள், விசத்தலமான அறைகள்,காம்பௌண்ட் சுற்றி வித விதமான மலர்கள், நடுவில் அழகிய வடிவமான நீரூற்று என்று அழகாக இருந்தது. அங்குள்ள அனைவரும் மிகவும் நல்லவிதமாகவே பழகினர். அவளுக்கு அங்கே நிறைய  நண்பர்களும் கிடைத்தார்கள்.  முதலில் அவர்கள் பேசும் ஸ்லாங் புரியவில்லை என்றாலும் போக போக கூர்மையாக கவனித்து புரிந்து கொண்டாள். அவர்களை போலவே அதே முறையில் ஆங்கிலத்தில் பேசவும் பழகிக் கொண்டாள். முதல் சில நாட்கள் கௌரியே அவளை காரில் விட்டுவிட்டு பின் அழைத்து கொண்டு வந்தான். அது அவனுக்கு சற்று சிரமமாக இருந்ததனால் வர்ஷினி தானே கார் ஓட்ட பயிற்சி எடுத்துக் கொண்டு முதலில் சிறு சிறு இடங்களுக்கு சென்று ஓட்டி பழகியதும் பின் நெடுஞ்சாலையிலும் ஓட்டினாள். கௌரி அவளுக்கென்று தனியாக கார் ஒன்றையும் வாங்கி கொடுத்தான். அதனால் தானே காரை ஓடிக்கொண்டு கல்லூரிக்கு சென்று வரலானாள். இப்போதெல்லாம் வர்ஷினி மிக சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும்,தன்னம்பிக்கை யாகவும் காணப்பட்டாள். அவளுக்கு விரைவாகவே வகுப்புகள் முடிந்துவிடும், அதனால் வீட்டில் உள்ள வேலைகளையும் குறைவின்றி அவளால் செய்ய முடிந்தது. இருவரும் தங்கள் வாழ்க்கையை வாழவும் தொடங்கிவிட்டனர். கௌரி அவளுக்கு மிகவும் உதவியாகவே இருந்தான். அவள் படிப்புக்கு தேவையானவற்றை  அவனே பார்த்து பார்த்து வாங்கி கொடுத்தான். கௌரி வேலையை விட்டு வரும் போது இருவரும் ஒன்றாக சேர்ந்து இரவு உணவு உண்ணுவது, தாங்கள் சென்ற இடத்தில் நடந்த நிகழ்வுகளை ஒருவருக்கொருவர் பகிர்வது என  இப்போது இருவருக்குள்ளும் உள்ள நெருக்கம் அதிகமாகியது. 

 

நாட்கள் இருவருக்கும் பேச்சும், சிரிப்பும், கிண்டலுமாய் அழகாகவே நகர்ந்தது. அன்று காலையில் கௌரியின் அலைபேசி ஒலித்தது. கவிதா தான் பேசினாள். கௌரி, மதுவுக்கு விக்னேஷுக்கும் ஆண் குழந்தை பிறந்திருக்குடா. நீ எப்ப இந்தியாவுக்கு வருவே? குழந்தை அப்படியே விக்னேஷ் மாறியே இருக்குடா, என்று கூறிட, கௌரிக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. வர்ஷினியை அழைத்து வஷ்ஷு நான் சித்தப்பா ஆயிட்டேன் என்று கூறி மகிழ்ந்து போனான். விக்னேஷை அழைத்து வாழ்த்து கூற அவனும் நீ எப்படா இந்தியா வருவே? என கேட்டதும், அவனுக்கும் உடனடியாக இந்தியா போகவேண்டும் என்ற ஆசைதான், ஆனால் வேலை பளு அதிகமா இருக்க, அண்ணா என்னோட இந்த ப்ராஜெக்ட் ரொம்ப பிஸியாய் போய்ட்டிருக்கு. ஆறு மாசத்திலே முடிந்துடும். அப்புறம் கண்டிப்பா இந்தியா வருவேன் என்று உரைத்ததும், ஆறு மாசமா? எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வந்து உன் பிள்ளையை பார்க்கணும் என்று கூறி அலைபேசியை வைத்துவிட்டான். குழந்தைக்கு பேர் வைக்கும் நாளில்  கௌரியும் வர்ஷினியும் அலைபேசி மூலம் விழாவை கண்டு ரசித்தனர். விக்னேஷ், மதுமதியின் பெயரை சேர்த்து மாதேஷ் என்று குழந்தைக்கு பெயர் சூட்டினர். காணொளி மூலமே கௌரியும் வர்ஷினியும் குழந்தையை பார்த்து ரசித்தனர். வர்ஷினிக்கு அந்த குழந்தையின் ரோசாப்பூ போன்ற நிறமும், குட்டி குட்டி கால், கைகள், கருவண்டு போன்ற கண்கள் என காண காண அவளுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. தனக்கும் இப்படி ஒரு குழந்தை பிறக்காதா என்ற ஏக்கம் வந்து அவள் மனதை கனக்கவே செய்தது.  

  

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page