அத்தியாயம் 3
இதுவரை நான்கு ஐந்து பேர் மட்டுமே வீடியோ எடுக்க இப்போது இவனை பார்த்த அனைவரும் தங்கள் போனில் போட்டோ,வீடியோ எடுக்க ஆரம்பித்தனர்.
அதற்குள் நியூஸ் சேனல் வரை இந்த நியூஸ் போக அங்க வந்த ஒரு சில நியூஸ் சேனல்காரர்கள் அவனை பார்த்ததும் தங்கள் கேமராவை ஆன் செய்து அவனை சூட் செய்துக் கொண்டு
“மிக பெரிய பிரபலமான நடிகரின் கார் இரு பெண்களின் மீது விபத்து ஏற்படுத்தி இருக்கு. அதற்கு அந்த நடிகர் என்ன கூறுவார்?” என ஒரு நியூஸ் சேனல் அவனிடம் கேள்விக் கேட்க
இன்னொரு சேனலோ, “இது வேண்டும் என்றே திட்டம் போட்டு செய்த சதியா? உண்மையில் விபத்தா?” என இவனுக்கு எதிரியாக இருக்கும் சேனல் வதந்தியை கிளப்ப…
அவனுக்கோ கடுங்கோபம் வந்தது. இங்கே என்ன நடந்தது என்று எதுவும் தெரியாமல் இவர்கள் பாட்டுக்கு வதந்திகளை பேசிக் கொண்டு போக… இதற்கு எல்லாம் காரணமானவளை கொலைவெறியுடன் பார்த்து அவளிடம் நெருங்க ட்ரைவரோ ஓடி வந்து.…
“முதலாளி நீங்க ஏன் காரை விட்டு இறங்குனீங்க? போங்க சாமி கார்ல போய் உட்காருங்க. இல்லைனா இவனுங்க இஷ்டத்திற்கு எழுத ஆரம்பிச்சிடுவாங்க” என சொல்லி சமாதானம் செய்ய
அதற்குள் இன்னொரு நியூஸ் சேனல், “அடிப்பட்ட இந்த இரண்டு பெண்களுக்கும் இந்த நடிகர் என்ன உதவி செய்ய போகிறார்?” என்று கேமராவை பார்த்து பேசிக் கொண்டு நிற்க இதை காதில் வாங்கியவன் தான் இருக்கும் இடத்தை உணர்ந்து தன்னை கட்டுபடுத்திக் கொண்டான்.
ஒரு சில நிமிடக் கோபத்தினால் தான் இத்தனை வருடம் சேர்த்து வைத்த பெயரையும் மதிப்பையும் கெடுத்துக்க விரும்பாதவன் ட்ராபிக் போலீஸை அழைத்தான்.
இதுவரை அங்கே நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டும் அப்பெண்ணை எழுந்து போக சொல்லியும் கெஞ்சிக் கொண்டு இருந்தவர் அந்த நடிகர் அழைத்ததும் அவரிடம் சென்று அப்பெண்ணின் நிலைமையை கூற…
அவனோ, “நீங்கள் முதலில் இங்கே இருக்கும் கிரவுட் கிளியர் பண்ணுங்க. நான் அந்த பொண்ணுங்கள ஹாஸ்பிட்டலுக்கு அழைச்சிட்டு போறேன்.” என சொன்னவனை ட்ரைவர் விசித்திரமாக பார்த்தார்.
“முருகன் அந்த அடிப்பட்ட பொண்ணை காரில் ஏற்றுங்கள்” என யாழினியை காட்டி கூறிவிட்டு,
ஸ்கூட்டியோடு தன் உடலை ஒட்டிக் கொண்டு அமர்ந்து இருந்தவளின் அருகில் சென்று தன் கரம் நீட்டி அவளை அழைக்க வர்ணிகாவோ அவன் முகம் பார்த்து, “யார் நீங்கள்?” என கேட்டாள்.
அக்கேள்வி அவனுக்கு விசித்திரமாக இருந்தது. தன்னை சுற்றி இருக்கும் கூட்டத்தை பார்த்தவனுக்கு இவள் விழிகளில் தெரிந்த அச்சம். தன்னை யார் என்று கேட்டு தன் மீது நம்பிக்கை வர வைக்க அவள் தவிக்கும் தவிப்பை பார்த்தவனின் விழிகள் தன்னிச்சையாக தன் சூட்டை கழட்டி அவளுக்கு போர்த்தி விட்டு அவள் தோள்களை பிடித்து எழுப்பி அணைத்தவாறு நடந்துச் சென்று தன் காரில் ஏறினான்.
இதை அனைத்தும் ஒன்று விடாமல் அவர் அவர்கள் கேமராவில் படமும் வீடியோவும் எடுத்துக் கொண்டே இருந்தனர்.
பின் அவன் முன்னால் ஏற போக. அவளோ அவனை அழைத்து, “என் ஸ்கூட்டி” என்று சொல்லி பரிதாபமாக தன் ஆசை ஆசையாக வாங்கிய வண்டியை பார்த்தவள்,
“இது நான் ரொம்ப கஷ்டப்பட்டு உழைத்து வாங்கின ஸ்கூட்டி பாவம் அனாதையா நிக்குது” என கூறியவளின் விழிகளில் இரண்டு சொட்டு கண்ணீர் வர அவனோ காரில் முன் பக்கம் ஏறி படார் என்று டோரை சாத்தினான்.
அவனின் கோபம் அறிந்த ட்ரைவரோ அப்பெண்ணை பார்த்து, “அம்மாடி நீங்க உங்க வீட்டு அட்ரஸ் சொல்லுங்க. நானே சாயங்காலம் ரெடி பண்ணி எடுத்துட்டு வந்து தரேன்” என்று கூறினார்.
வர்ணிகாவோ, ‘எங்களுக்கு வீடு எல்லாம் கிடையாது’ என சொல்ல நினைத்தவள் ஏனோ அதை சொல்லாமல் தன் ஆசிரமத்தின் விசிட்டிங் கார்டு நீட்டினாள்.
அதை வாங்கிக் கொண்டவர் படித்து பார்க்காமல் தன் முன்னால் வைத்து விட்டு வண்டியை ஓட்டினார். இவளோ தன் ஆடைகளை சுற்றிக் கொண்டே வர. அவன் விழிகளோ முன் பக்கம் இருக்கும் கண்ணாடி வழியாக அவளை கவனித்துக் கொண்டு வந்தது.
இதுவரை தன்னை மட்டுமே கவனித்துக் கொண்டு வந்தவள் தன் பக்கத்தில் அமர்ந்து வந்தவளை இப்போது தான் பார்க்க.
யாழினியோ தன் முன் இருப்பவனையே வாயை பிளந்துக் கொண்டு பார்த்துக் கொண்டு இருந்தாள்.
அவன் காரில் இருந்து இறங்கியதில் இருந்து தன் கண்ணையே தன்னால் நம்ப முடியாமல் வாயை பிளந்துக் கொண்டு பார்த்தாள் தனக்கு ஏற்பட்ட காயத்தின் வலியை கூட மறந்து இருந்தாள்.
யாழினியை பார்த்தவள், “அடியே உன்னை தான் டி. என்னடி ஆச்சு பேய் பிடிச்சவள் போல் இருக்க. தலையில் எதாவது அடிப்பட்டுடுச்சா?” என கேட்டு அவள் தலையை தொட்டு பார்த்தாள் இரத்தம் எதாவது வருகிறதா என்று.
“இல்லையே இரத்தம் வரல. அப்புறம் எதுக்கு இப்படி பித்து பிடிச்சவள் போல் அமர்ந்து இருக்க? என்னவோ காணாததை கண்ட மாதிரி” என சொல்லிக் கொண்டே அவள் அடிப்பட்ட காலில் தட்ட.
அப்போது தான் தன் உணர்வுக்கு வந்தவள், வலி தாங்க முடியாமல் “அம்மா…” என கத்தினாள்.
“ஏன்டி அடிச்ச? வலிக்குது தெரியுமா?” என கேட்க
அவளோ, “பின்ன என்னடி எவ்வளவு நேரமா உன்னை கூப்பிட்டுட்டு இருக்கேன்? நீ என்னவோ அதிசயத்தை பார்த்த மாதிரி அந்த ஆளையே பார்த்துட்டு இருக்க. அதான் அடிச்சேன்” என சொல்ல.
யாழினியோ, “என்னது அந்த ஆளா அடியே கிறுக்கி அவர் யார் தெரியுமா?” என யாழினி சொல்ல வாய் திறக்க.
வர்ணிகாவோ அதற்கு முன் வாய் திறந்து அவளை திட்ட ஆரம்பித்தாள்.
“எல்லாம் உன்னால தான் டி உன்னால தான் வண்டியை நிறுத்தினேன். இப்போ எல்லாம் வீணாப் போச்சு, ஒன்றரை மாசமா நான் கஷ்டப்பட்டு ரெடி பண்ண ப்ராஜெக்ட் அந்த டீன் சிடு மூஞ்சி கிட்ட கொடுக்க முடியாம போச்சு” என திட்டியவள் மேலும் அவள் காலில் தட்ட.
யாழினியோ “அடியே கிறுக்கி வீணா என் மேல பழி போடாத. எல்லாத்துக்கும் காரணம் நீ தான். கிளம்பும் போதே சொன்னேன், இந்த டிரெஸ் மாத்திட்டு சுடி போட்டு வா சொன்னேன். நீ கேட்டியா? இல்லையே! நான் சொல்ல சொல்ல கேட்காம அடம்பிடிச்சி இதையே போட்டு வந்த சரி ஒழுங்கா வண்டியை ஓட்டாம பாஸ்ட்டா போனது உன் தப்பு. அது மட்டும் இல்லாமல் பின்னாடி எதாவது வண்டி வருதானு பார்க்காம சடன் ப்ரேக் போட்டது உன் தப்பு” என்று யாழினி கூற.
வர்ணிகாவோ, “உன்னால தான் டி ப்ரேக் போட்டேன்” என இருவரும் மாறி மாறி சண்டை போட்டுக் கொண்டு வர அவனுக்கோ கோபம் தலைக்கேறியது.
இதை தன் கோபத்தை அடக்கி வைத்துக் கொண்டு அவர்கள் வாயால் கொடுத்த வாக்கு மூலத்தை தன் போனில் வீடியோ ரெக்கார்ட் செய்ததை இருவரும் அறிய தவறினர்.
“முருகா ஸ்டாப் த கார்” என கோபத்துடன் கத்தியவன் அவர்களை திரும்பி பார்க்காமலே, “கெட் டவுன் ப்ரம் த கார் ரைட் நவ் ! ஐ ஆம் ஆல்ரெடி பை மினிட்ஸ் லேட் … டூ யு நோ ஹவ் மச் லாஸ் பிக்காஸ் ஆஃப் யூ… ப்ரெயின்லெஸ் இடியட்ஸ்” என திட்டிக்கொண்டே போக வர்ணிகாவோ…
“இதோடா வெள்ளைகார துரை பெரிய இங்கிலிஷ் பரம்பரைல இருந்து வந்தவரோ. ஏன் துரைக்கு தமிழ் தெரியாதா? அப்படியே இங்கிலிஷ் தான் பேசுவீங்களோ? இங்க பாருங்க நாங்க உங்க காருல ஏறல? நீங்களாவே வந்து தான் உங்க காருல ஏத்துனீங்க. ஒழுங்கா இவளை ஹாஸ்ப்பிட்டல்ல இறக்கி விட்டு என்னை ஒரு நல்ல துணிக்கடைக்கு கூட்டிட்டு போய் நல்ல டிரெஸ் ஒன்னு வாங்கி தரீங்க. ஏன்னா இன்னிக்கு உங்களால தான் என் துணி கிழிஞ்சிது” என கூறியவள் அவன் அமர்ந்து இருந்த முன் பக்கம் சீட்டின் அருகில் சென்று
“என்ன சொன்ன… பைவ் மினிட் லேட் எங்களால நஷ்டமா..? உண்மைய சொல்லணும்னா உன்னால தான் இத்தனை நாள் நான் பார்த்து பார்த்து ரெடி பண்ண ப்ராஜெக்ட் வீணா போச்சு. அந்த டீன் கிட்ட நான் இப்போ என்ன பதில் சொல்லுவேன்? நீயா வந்து சொல்ல போற? என்னால தான் இவங்க ப்ராஜெக்ட் வீணாகிடுச்சினு. அது கூட விடு. நான் குருவி சேர்க்கிற மாதிரி கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து வைச்சு ஆசையா வாங்குன என் ஸ்கூட்டிய நாசம் பண்ணிட்டியே. அப்போ யாருக்கு லாஸ் உனக்கா? எனக்கா? நியாயமா நான் போலீஸுக்கு போக வேண்டியது. போனா போகட்டும்னு சும்மா இருந்தா டஸ்க்கு புஸ்க்குனு இங்கிலிஷ்ல கத்திக்கிட்டு இருக்க. உனக்கு மட்டும் தான் கத்த தெரியுமா? நான் கத்தவா சொல்லு? நான் கத்தவா?” என அவள் மூச்சி விடாமல் பேசி முடிக்க.
அவனோ திரும்பி ஒரே பார்வை பார்க்க அவளோ கப்சிப் என்று ஒரு அடி தள்ளி அமர்ந்து, “என்னையா அப்படி பார்த்த என்ன நாங்க பயந்துடுவோமா?” என்று அந்த நிலைமையிலும் தான் பயந்ததை வெளிகாட்டிக் கொள்ளாமல் இருந்தவளை பார்த்தவனுக்கு ஒரு பக்கம் சிரிப்பு வர மறு பக்கம் எரிச்சல் வந்தது.
இவள் பேசிக் கொண்டு இருந்த இடையில் யாழினி அவளை சுரண்டிக் கொண்டே இருக்க அவன் மேல் இருந்த கோபத்தை தன் தோழியின் மேல் காட்டினாள்.
“இப்போ எதுக்குடி சுரண்டிக்கிட்டே இருக்க விஷம் விஷம் விஷம் எல்லாம் உன்னால தான்… இப்போ பாரு தாகம் எடுக்க வசனம் பேசி இருக்கேன். ஒரு சொட்டு தண்ணீர் கொடுக்குறாங்களா?” என்று தனக்கு தண்ணீர் தாகம் எடுப்பதை மறைமுகமாக கூறியதை உணர்ந்தவன் அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து தண்ணீரை திமிராக காரில் இருந்து கீழே கொட்டினான்.
தனக்கு தான் தண்ணீர் கொடுக்க போகிறான் என்று எண்ணியவள் ஏமாந்து போக,
யாழினியோ “அடியே கொஞ்சம் நேரம் அமைதியா இரு. இவரு யாரு தெரியலையா?” என கேட்டாள்.
வர்ணிகாவோ, “இல்லை” என்று சொல்ல.
யாழினியோ, “இவரு தான் டி வருண் வித்யூத்” என சொல்ல
அவளோ சிறிது நேரம் யோசித்துவிட்டு “இந்த பெயர்ல நமக்கு யாருமே தெரியாதே?” என்று கூறிவிட்டு
தன் தோழியிடம், “ஆமா யாரு டி இந்த வருண் வித்யூத்?” என்று இவள் கேட்க அவனை தவிர மற்ற இருவரும் அவளை பார்த்தனர்.
முருகனோ, “இந்த பொண்ணு லூசா? இல்லை லூசு மாதிரி நடிக்குதா? சாரை போய் தெரியலனு சொல்லுது” என யாழினியிடம் கேட்க.
யாழினியோ, “சந்தேகம் எல்லாம் வேண்டாம் அண்ணா இவள் ஒரு பைத்தியம் தான்” என்று சொன்னாள்.
இதுவரை தன் பொறுமையை கட்டுப்படுத்தி இருந்தவன் காரில் இருந்து இறங்கி இருவரையும் இழுத்து வெளியே தள்ளி தன் செக் புக் எடுத்து கையொப்பம் போட்டு அவள் முகத்தில் வீசினான்.
“இந்தா பொறுக்கிக்கோ பிளாங்க் செக் உனக்கு எவ்வளவு வேணுமோ ஃபில் பண்ணிக்கோ” என கூறியவன் அங்கே இருந்து சென்றான்.
அவன் சென்றதையே கடுங்கோபத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தவர்கள் சாலையில் யாராவது வருகிறார்களா? என்று பார்க்க
அது ஒரு சிறிய சாலையாகவும் அங்கே அவர்களுக்கு எதிரே ஒரு சின்ன பொட்டீக் துணிக்கடையும் அதன் பக்கத்தில் சிறு க்ளினிக் இருப்பதை பார்த்தவளுக்கு அவன் மேல் இருந்த கோபம் கொஞ்சம் கரைந்தது.
‘எங்களுக்கு தேவையான இடத்தில் தான் இறக்கி விட்டு இருக்கிறானோ? இல்லை அவனுக்கே தெரியாமல் விட்டானோ?’ என யோசித்துக் கொண்டு இருக்கையிலே பொட்டீக்கில் இருந்து ஒரு பெண் வெளியே வந்து,
“மேம் நீங்க உள்ள வந்தா உங்களுக்கான டிரெஸ் ரெடியா இருக்கு கொடுத்து விடுவேன்” என்று அந்த பெண் சொல்ல இவளோ திரு திருவென முழிக்க.
அப்பெண்ணோ, “வருண் சார் உங்களுக்கு நல்ல காஸ்டியூம் கொடுக்க சொல்லி மெஸேஜ் பண்ணாரு” என்று சொன்னதும் அவளுக்கு புரிந்தது இவன் வேண்டும் என்றே தான் தங்களை இங்கே விட்டுச் சென்று உள்ளான்.
ஆனால் வர்ணிகா போக மறுக்க யாழினியோ, “இப்போ இருக்கும் உன் நிலைமைக்கு பிடிவாதம் பிடிப்பது நல்லது இல்லை” என அவளுக்கு புத்தி சொல்ல.
அவளும் வேறு வழியின்றி உள்ளே போனாள்.
யாழினியை அருகில் இருந்த க்ளினிக்கில் இருந்து ஸ்டாப் ஒருத்தர் அழைத்துக்கொண்டு போய் சிகிச்சை அளித்தார்.
வர்ணிகாவின் மனதிலோ அவன் ஒரு கேள்விக்குறியாக மாறினான்.
‘என்ன மனிதன் இவன்? கோபத்தை காட்டுகிறான். அதே சமயம் பண்பையும் காட்டுகிறான். புரிந்துக் கொள்ள முடியாத புதிராக உள்ளான்’ என்று மனதிற்குள் அவளுக்கே தெரியாமல் அவனை பற்றி புரிந்துக் கொள்ள ஆரம்பித்தாள்.
