அத்தியாயம் 33

ஆகாஷ் மாதிரி இருக்குது. இப்போ பைக்ல போனது ஆகாஷ் மாதிரியே தெரியுதே என்று தனக்குள்ளேயே நூறு முறை சொல்லி கொண்டே பால்கனியில் இருந்து கீழ் இறங்கி ஓடி வந்தாள் நம் கார்த்திகா. 

 

அவள் வீட்டின் வெளிபுற வாயிலுக்கு வருவதற்கு முன் பைக் அங்கிருந்து பறந்து சென்று விட, ஆகாஷ் தான என்று மறுபடி தன் மனதிற்குள் கேட்டாள். 

அவர் எப்படி இங்க வருவாரு. அவர் ஆகாஷா இருக்காது. வேற யாரோவா தான் இருக்கும். நான் அவரையே நினைச்சிட்டு இருக்குறதால தான் அவர் மாதிரியே தெரியுது எங்க பார்த்தாலும் என்று புலம்பி விட்டு வீட்டிற்குள் சென்று விட்டாள் கார்த்திகா. 

***

நீங்க பண்றது ரொம்ப தப்பு அஸ்வந்த் என்று முதன் முதலாக தன் கணவரின் நாமத்தை சொல்லி உச்சரிக்கிறாள் பாவை. 

அஸ்வந்த் அவளின் அருகில் வந்தான். 

அபிராமி ஒரு அடி பின் சென்றாள். 

மீண்டும் அவளை உரசி நெருங்கி நின்றான். அபிராமி அவனின் அருகாமையில் சுவற்றோடு ஒட்டி நின்று கொண்டாள். 

 

அவளின் சிவப்பு ஏறிய கண்களை பார்த்தவன் சிரித்தான். என்ன அபி கோபப்பட்டா உன் கண் ரெண்டும் சிவக்குது? ஆனால், கோபப்பட்டாலும் ரொம்ப அழகா தான் டி இருக்குற என்றவன் மெதுவாக அவளின் இடையை இறுக்கி பிடித்தான். 

 

அவனின் நெருக்கம் இவளுக்கு மூச்சு முட்டியது. மெதுவாக அவளின் கழுத்தில் இதழ் பதித்தான். அபிராமி தினம் தினம் அஸ்வந்த்தின் முத்தத்தில் திகைத்து தான் போகிறாள் பாவம். 

ஏங்க இப்படி திடிர்னு மாறிட்டிங்க?  என்று கூச்சத்தோடு கேட்டாள் பாவை. 

என் பேரை சொல்லி தான கூப்பிட்ட இப்போ என்ன? ஏங்கனு சொல்லுற? என்று கேட்டான் அஸ்வந்த். 

அவனின் நெருக்கமும் அவனின் கிசு கிசுப்பான குரலும் அபிராமியின் விழிகளில் இருந்த சிவப்பை குறைத்தது. 

ஏங்க எனக்கு உங்க பிளான் சுத்தமா பிடிக்கல. அதுவும் அகிலா வேற,  ஆள் சரி இல்லை என்றாள் அபிராமி. 

 

அவளுக்கு கார்த்திக்கை பிடிச்சிருக்கு. அவளுக்கே தெரியாமல் அவனை விரும்பிட்டு இருக்குறாள் என்ற அஸ்வந்த்தின் வார்த்தையில் விழிகளை உருட்டினாள் அபிராமி. 

 

எனக்கு ஏற்கனவே தெரியும் அபி. உன் தங்கச்சி,  அவன் பார்க்காத நேரம் அவனை ரசித்து பார்க்கிறாள். அவன் பக்கத்துல வந்து பேசுனா அவளுக்கு ரொம்ப புடிக்கும். ஆனால், அவன் முன்னாடி கோபப்படுற மாதிரியும், பிடிக்காத மாதிரியும் நடந்துக்குறா என்றான் அஸ்வந்த். 

உங்களுக்கு எப்படி தெரியும்?  என்று கேட்டாள் அபிராமி. 

என்னோட ஆபீஸ்ல அகிலாவும் கார்த்திக்கும் எப்போ வேலைக்கு சேர்ந்தாங்களோ அப்பவே இருந்து எனக்கு அவங்க ரெண்டு பேரையும் தெரியும்.  ஒரு நாள் கார்த்திக் வரலன்னு வை அவ்ளோ தான் அகிலா துடிச்சி போயிருவாள் என்று கூறினான் அஸ்வந்த். 

 

அவளுக்கு அவனை புடிக்காதுங்க. இப்போ கூட நான் கேட்டேன். அதுக்கு இல்லைனு தான் சொன்னாள் என்றாள் அபிராமி. 

 

புடிக்கலைனா ஏன் அவன் தங்கச்சி வாழ்க்கையை சரி பண்ண இவள் துடிக்கிறாள்?  என்ற அஸ்வந்த் அவன் ரொம்ப நல்ல பையன் அபி என்று கார்த்திக்கிற்கு செர்டிபிகேட் வேறு வழங்க, அபிராமி புருவம் உயர்தினாள். 

 

நல்ல பையன் தான் பொம்பள புள்ளையை கை நீட்டி அடிப்பானா?  என்று கேட்டாள் அபிராமி. 

எனக்கு எல்லா விஷயமும் ஏற்கனவே தெரியும் அபி. அகிலா எல்லா விஷயமும் என்கிட்டே சொல்லிட்டாள்.ஆனால், அவள் விரும்புறத மட்டும் என்கிட்டே மறச்சிட்டாள். அவளுக்கே அது சரியா தெரியல என்றவன் லேசான முறுவலோடு, அப்பாக்கு அடுத்து நீங்க தான் மாமான்னு என்னைய சொல்லுவாள் என்றான். அதை சொல்லும் பொழுதே எதோ ஒரு உணர்வு அவனை மெய் சிலிர்க்க வைத்தது. 

சரி அபி, நான் அவங்க ரெண்டு பேரும் ஆபிஸ் போறதுக்குள்ள நான் போகணும் என்று அவன் திரும்ப, அவனை பிடித்து இழுத்தாள் கோதை. 

பெண்ணவளின் மென்மையான பிடியில் அவளின் மேல் மறுபடி மோதி நின்றான் அஸ்வந்த். 

நான் கேட்டதுக்கு பதில் சொல்லாமல் போறிங்களே? என்று கேட்டாள். 

பதில் சொல்லிட்டேனே என்ற அஸ்வந்த் யோசித்தான். இன்னும் எந்த கேள்விக்கு பதில் சொல்லவில்லை என்று புருவம் சுருக்கினான். 

திடிர்னு மாறிட்டிங்களே அதை தான் கேட்டேன். பதில் சொல்லலயே நீங்க என்றவள் அவனின் கன்னத்தில் தன் மாதுளை இதழ்களை பதித்தாள். 

நீங்க கொடுத்த முத்தத்தை உங்களுக்கு திருப்பி கொடுத்துட்டேன் என்றாள் அபிராமி. 

ஆனால், நான் கொடுத்த இடம் வேற என்றவன் அவளின் செவ்விதழ்களில் பட்டும் படாமலும் முத்தம் வைத்து பிரிந்தான். 

நமக்கு சுஜித் போதும் தான் அபி. ஆனால், உனக்கு எந்த ஒரு விஷயத்திலும் நான் குறை வைக்க மாட்டேன். உன்னைய ஏன் கண்ணுக்குள்ள வச்சி பார்த்துப்பேன் என்றான். 

அவனின் காதல் வசனத்தில் சொக்கி தான் போனாள் அபிராமி. 

 

அவனின் நெஞ்சில் சாய்ந்து கொண்டு, அப்போ சுகன்யா அக்காவை மறந்துட்டிங்களா?  என்று கேட்டாள். 

ம்ஹும்.. சுகன்யாவை எப்பவும் என்னால மறக்க முடியாது. அதுக்காக” எனக்காக, என்னோட சந்தோசத்துக்காக, என்னைய நம்பி வந்த உன்னைய என்னால விடவும் முடியாது “என்றான். 

அபிராமி லேசாக குழம்பி போய் தலையை சொரிந்து கொண்டாள். 

சரி அபி, நான் ஆபிஸ் கிளம்புறேன் என்றான். 

****

அலுவலகத்தின் முன் டூ வீலரை நிறுத்தினான் ஆகாஷ். 

அகிலா துள்ளி குதித்து இறங்கினாள். கம் ஆன் ப்ரோ என்று அவளின் கைகளை நீட்டினாள். 

ஆகாஷ் அவளின் கை விரல்களோடு தன் கை விரல்களை கோர்த்தான். 

இருவரும் ஒன்றாக அடி எடுத்து உள்ளே சென்றனர். 

அகிலாவின் வருகைக்காக வாயிலையே பார்த்து கொண்டிருந்த கார்த்திக், ஆகாஷ் அகிலா இருவரையும் ஒன்றாக பார்த்ததில் திகைத்து எழுந்தான். 

அதுவும் அவளின் கையை பிடித்திருந்த ஆகாஷ்ஷை பார்த்ததும் கார்த்திக்கின் விழிகளில் நெருப்பு பொறி கக்கியது. 

கார்த்திகா பிடித்த கரங்களை அகிலா பிடித்திருப்பது ஆகாஷ்ஷிற்கு சங்கடமாக இருந்தது. இருவரின் மனதிலும் எந்த ஒரு தவறான எண்ணமும் இல்லை. ஆனால், அவனுக்கு அது மிகுந்த மன வலியை கொடுத்தது. 

அகிலா என்று அடிக் குரலில் சத்தமாக கத்தினான் கார்த்திக். அலுவலகம் முழுதும் இப்பொழுது அவர்களை தான் பார்த்தது. 

அகிலா அவனின் இந்த கொடூர அழைப்பில் லேசாக உடல் நடுங்கி விட்டாள். ஆகாஷின் கரத்தில் இருந்து தன் கைகளை பிரிக்க முயன்றாள். 

 

ஆனால், இப்பொழுது நம் ஆகாஷின் முகம் அதை விட பயங்கரமாக மாறியது. அதை விட பெரிய கொடுமை நம் ஆகாஷ் அகிலாவின் கரங்களை இறுக்கி பிடித்தான். 

ப்ரோ என்ன பண்றிங்க? என் கையை விடுங்க என்று காற்றோடு கிசு கிசுத்த அகிலா இரண்டு சிங்கங்களிடம் சிக்கிய மான் குட்டி போல் தவித்தாள். 

கார்த்திக் வேகமாக அவர்களின் அருகில் வந்து, அகிலாவை ஆகாஷ்ஷிடம் இருந்து பிரித்து இழுத்து அவளை தூர தள்ளி நிறுத்தினான். 

அவனின் தள்ளலில், அகிலா நிலை தடுமாறி நின்றாள். 

“உன்னை சும்மா விடக் கூடாது டா பொறுக்கி ” என்ற கார்த்திக் பாய்ந்து போய் ஆகாஷின் முகத்தில் குத்து விட, ஆகாஷ் அவனின் கைகளை பிடித்து முறுக்கி அவனின் குத்தில் இருந்து தப்பி விட்டான். 

 

தன்னை கை ஓங்கியவனை இப்படியே விட்டு விடுவதா என்று நினைத்து கார்த்திக்கின் முகத்தில் ஆகாஷ் ஓங்கி ஒரு குத்து விட்டான். கார்த்திக்கின் மூக்கு உடைந்து ரத்தம் வழிந்தது. 

 

அகிலாவின் விழிகளில் இருந்து குபு குபுவென்று நீர் கொட்டியது. ஓடி சென்று கார்த்திக்கை பிடித்தாள். 

என்ன பண்ணிட்டீங்க ஆகாஷ்?  என்ற அகிலா கார்த்திக்கிற்காக முதல் முறை கண்ணீர் சிந்த, ஆகாஷ் அவளை பிடித்து தன் பக்கம் இழுத்து கொண்டான். 

கார்த்திக்கிற்கு பெருத்த அவமானமாக இருந்தது. 

ஹேய்… ஷீ இஸ் மைன் என்ற ஆகாஷ் விரல் நீட்டி எச்சரித்தான். 

இது இவர்களின் பிளான் தான். ஆனால், ஆகாஷ் கார்த்திக்கை அடித்தது அகிலாவிற்கு உயிரே போனது போல் இருந்தது. 

இந்த அடிதடியை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆகாஷ்ஸும் அவனை அடிக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. அதற்கான சந்தர்ப்பத்தை கார்த்திக் தான் உருவாக்கி விட்டான். 

கார்த்திக் என்ற அகிலா லேசான விம்மலோடு அவன் பெயரை உச்சரிக்க, ஆகாஷ் அவளை முறைத்து பார்த்தான். 

அகிலா தலை குனிந்து கொண்டு அவளின் இடத்தில் சென்று அமர்ந்து விட்டாள். தன்னுடைய கைபேசியை எடுத்து அஸ்வந்த்திற்கு அழைத்து, ” மாமா, ஆகாஷ் கார்த்திக்கை அடிச்சிட்டாரு என்று சிறு பிள்ளை போல் புகார் வாசித்தாள் “. 

ஆகாஷ் கார்த்திக்கை முறைத்து பார்த்து விட்டு, தன் நண்பன் அஸ்வந்த்தின் கேபினுக்கு சென்றான். 

அஸ்வந்த்தின் இடத்திற்கு சென்ற ஆகாஷ்ஷை அலுவலக ஊழியர்களும் புரியாமல் தான் பார்த்தனர். 

***

அடி தடி சண்டை எல்லாம் சுமூகமாக முடிந்ததும் தான் நம் அஸ்வந்த் அலுவலகம் வந்தான். 

அஸ்வந்த்தை பார்த்ததும் அகிலா அழுது கொண்டே அவனிடம் சென்று, மாமா இந்த பிளான் இனிமேல் வேணாம். ஆகாஷ் ப்ரோ கார்த்திக்கை அடிச்சிட்டாரு என்று சிணுங்கியவளை தோளோடு அணைத்து கொண்டான் அஸ்வந்த். 

 

நான் பார்த்துக்குறேன் அகிலா. இதுக்காக பிளான் சேஞ் பண்ண முடியாது. நீ போ என்று அவளை அனுப்பி வைத்தான் அஸ்வந்த். 

தன்னையே உறுத்து விழிக்கும் அலுவலக ஊழியர்களை பார்த்த அஸ்வந்த், அவர்களை பார்த்து ” ஹை கைஸ் ” என்றான். 

அந்த நேரம் ஆகாஷ், அஸ்வந்த்தின் கேபினில் இருந்து வெளியே வந்தான். 

ஹி இஸ் மை ப்ரென்ட் ஆகாஷ் ஃப்ரம் மும்பை என்று தன் நண்பனை அவர்களுக்கு அறிமுகப்படுத்தினான். 

அது மட்டும் இல்லை என்னோட மனைவியோட தங்கச்சி அகிலாவை கல்யாணம் பண்ணிக்க போற மாப்பிள்ளையும் இவர் தான் என்றும் கூறினான். 

கார்த்திக் அதிர்ந்து பார்த்தான் இருவரையும். தன் தங்கையின் வாழ்க்கையை சீரழித்த இவனோடு அகிலாவிற்கு திருமணமா? அனைத்து விஷயமும் தெரிந்தும் அகிலா இவனை திருமணம் செய்து கொள்ள போகிறாளா என்று தனக்குள் புலம்பிய கார்த்திக், கண்களில் வெறியோடு அலுவலகத்தை விட்டு வெளியே சென்று விட்டான். 

அவனை பார்த்த அஸ்வந்த், அவனிடம் எதுவும் கேட்கவில்லை. 

****

மாமா, ப்ரோ பண்ணது ரொம்ப தப்பு என்று அவனின் கேபினில் நின்று குறை கூறினாள் அகிலா. 

இப்போ என்ன பண்ணனும் சொல்லுற என்று திமிராக கேட்டான் ஆகாஷ்.

நான் இந்த பிளான்ல இருந்து விலகிக்கிறேன் என்றாள் அகிலா. 

சரி தாராளமா விலகிக்கங்க. ஆனால், நான் தினமும் அவனை பார்க்கும் போதெல்லாம் அடிப்பேன் என்றான் ஆகாஷ் கண்களில் வெறியோடு. 

அடுத்த பதிவில் காண்போம். 

 

 

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page