அத்தியாயம் 9

 

அபிஷேக் கூறியதை கேட்டு ஜோஸ்வினி மலைத்து போய் அவனை பார்த்தாள்.

“நீ… நீ என்ன சொல்ற?”

“ஷ்யாம் சொன்னத உண்மையாக்கினா என்னங்க ஜோ?” என்று அபி கேட்க ஜோஸ்வினி ஆத்திரத்தில் அவன் சட்டையை பிடித்தாள்.

“யூ… ராஸ்கல்… என்ன பேசறடா?. என் கேரக்டர ஸ்பாயில் பண்ண டிரை பண்றியா நீ?”

அவளது ஆத்திரத்தில் அபி ஒரு நிமிடம் வார்த்தை வராமல் திகைத்தவன் பின் அவளை கண்களில் வலியுடன் நோக்கினான்.

“என்ன பேசறீங்க ஜோஸ்வினி?. நான் உங்கள அப்படி யாராவது நினைக்க விடுவேனா?”

“பின்ன நீ இப்படி பேசினா எப்படி நினப்பேன்?. எதுனா ரியாக்ட் பண்ணா உன் மூஞ்சி வேற சின்னதா போய்டுது. உன்கிட்ட கோபப்பட கூட முடில. ச்சே” என்றபடி தரையை அவள் காலால் உதைக்க அவளது செய்கையில் அவனுக்கு சிரிப்பு வந்தது.

அதை கட்டுப்படுத்தியவன்

“ஜோ ஒண்ணு புரிஞ்சுக்கோங்க. நான்‌ உங்களுக்கு கெடுதலா ஒண்ணும் பண்ண மாட்டேன். ஜஸ்ட் இது ஆக்டிங் தான்”

“எனக்கு இது சரியா வருமானு டவுட்டா இருக்கு அபி”

“அதெல்லாம் சரியா வரும்ங்க ஜோ. நம்ம அவன் முன்னாடி க்ளோஸா இருக்கற மாதிரி ஆக்ட் பண்ணா அவனுக்கு உங்கள மிஸ் பண்ற ஃபீல் வரும்ல” என்றவன்

‘ஆக மொத்தம் உங்கள மொத்தமா மிஸ் பண்ணிடுவேனோ செர்ரி?’ என்று மனதுக்குள் மருகினான்.

அவன் தனது கண்களை மூடி எதையோ ஜீரணிக்க முயல்வது போல் இருந்த தோற்றம் அவளை ஏதோ செய்ய

“அபி என்னாச்சுடா?” என பதறி போய் கேட்டாள்.

“நத்திங்டா” என்றவன் ஏதோ யோசித்து

“உங்க கேரக்டர் ஸ்பாயில் பண்ணுவேனு உங்களுக்கு தோணுதா ஜோ?. அந்த அளவுக்கு கூடவா என் மேல உங்களுக்கு நம்பிக்கை இல்ல?”

“ஆனா இதுல உங்களுக்கு எப்படி பிரச்னை வரும்?” என்றவன் திருப்பி கேட்டான்.

“இன்னைக்கு தான் அவன் கூட சண்ட போட்டேன். திருப்பி நாளைக்கு உன் கூடவே இருந்தா அவனுக்கு கோபம் வருதா?”

“ஜோ… நீங்க சொல்றத பாத்தா அவன தவிர யாருகிட்டயும் பேச கூடாதுனா… அது உங்களுக்கு செட் ஆகாதே?” என்று யோசித்தவன்

“அப்படினா ஜோ நீங்க அமைதியா இருந்துடுவீங்களா?”

“அபி ப்ளீஸ்… ஸ்டாப் திஸ் நான்சென்ஸ்” என்று ஜோஸ்வினி உச்சபட்ச மன உளைச்சலில் கத்தினாள்.

ஜோஸ்வினியால் அவன் சொல்வதை வார்த்தையாக கூட ஏற்று கொள்ள முடியவில்லை. அதனால் அவள் தன்னை மீறி கத்தினாள்.

அதை சிறிதும் எதிர்பார்க்காதவன் அவளை இறுக அணைத்தான்.

“ஜோஸ்வினி ப்ளீஸ் பீ கூல்” என்றவன் அவள் தலையை வருட அதில் அவள் சிறிது அமைதியானாள்.

அவளையறியாமலேயே அவனது இறுக்கமான அணைப்பில் கதகதப்பாக உணர்ந்தவளுக்கு மனதிலுள்ள பயம் மறைந்து பாதுகாப்பு தோன்றியது. அந்த பாதுகாப்பு கொடுத்த அணைப்பில் அவனை பார்க்க அபியோ கண்களில் காதல் பொங்க அவளை பார்த்து கொண்டிருந்தான். ஆனால் ஜோஸ்வினி அவளுக்கு இருந்த மன உளைச்சலில் அதை  உணரும் நிலையில் அவள் இல்லை.

அவளது கைப்பிடித்து அமர வைத்தவன்

“ஜோ… நம்ம அவன் முன்னாடி பழகினா அவனுக்கு ஜெலஸ் வரும். தென் அவன் எங்கிட்ட சண்ட போடுவான். அப்புறம் நீங்க சேந்துடுவீங்க. ரொம்ப சிம்பிள் ஜோ”

“எனக்கு அவன் மேல நம்பிக்கையே இல்ல. துருவ் சொன்னத அவன் ஈசியா நம்பிட்டு உடனே பிரேக் அப்னு சொல்றான்” என்றவளுக்கு மனது ஆறவேயில்லை.

“உங்க அருமைய புரிய வெச்சுடலாம்ங்க ஜோஸ்வினி. டோன்ட் வொர்ரி” என்று அபிஷேக் ஆறுதலாக கூற ஜோஸ்வினி யோசனையில் ஆழ்ந்தாள்.

“ஜோ நாளைக்கு உங்கள காலேஜ்ல டிராப் பண்றேன்” என்றதும் அவள் விலுக்கென அவனை பார்த்தாள்.

“என்ன பாக்குறீங்க ஜோ?. நீங்க என் கூட இருந்தா தான் அவன் உங்கள பத்தி யோசிப்பான்” என்றவன் சொல்ல ஏனோ அவளுக்கு கண்ணீர் வழிந்தது.

“ஏன் அபிஷேக் நான் கெட்ட பொண்ணாடா? நான் எல்லாத்துக்கிட்டயும் பேசறது தப்பா?”

“என்ன போய் யார்ட்டயும் பேசாதேனு சொன்னா எப்படிடா?” என்றவள் உடைந்த குரலில் அழ ஆரம்பித்தாள்.

அவளது கேள்வியில் அதிர்ச்சியில் உறைந்து நின்றவன் அவள் அழ ஆரம்பித்ததும் அவளை எதிலிருந்தோ காப்பவன் போல இறுகி அணைத்தான்.

“ஒண்ணும் இல்லடா. அழக்கூடாது. என் ஜோ எப்பவும் சிரிச்சிட்டே இருக்கணும். நீ ஒண்ணும் கவலைப்படாத. ஷியாம் உன்ன புரிஞ்சிப்பான்” என அபிஷேக் தேற்றினான்.

ஆனால் அவன் சொன்ன வார்த்தையை ஜோ கவனிக்க கூடிய நிலையில் இல்லை.

அபிஷேக் அவளை தேற்றுவதில் குறியாய் இருந்ததில் தான் என்ன சொன்னோம் என்பதையே யோசிக்க மறந்தான்.

ஜோஸ்வினி அவன் ஆறுதல் அளித்ததில் கொஞ்சம் கொஞ்சமாக அமைதியாக அவளை விட மனமில்லாமல் விடுவித்தான்.

“ஜோ நான் ஆதுக்கு போன் பண்றேன். அவன உங்கள டிராப் பண்ண சொல்றேன்”

“ஏன் நீ டிராப் பண்ணா என்ன?”

“இப்போ நைட் ஆகிடுச்சு. உங்க பேரண்ட்ஸ் என்னோட வந்தா உங்கள தப்பா நினப்பாங்க. சோ நீங்க அவன் கூட போங்க” என்றவனை அவள் விசித்திரமாக பார்த்தாள்.

“அப்போ மார்னிங் மட்டும் எதும் நினக்க மாட்டாங்களா?”

“அது அப்படி இல்லங்க ஜோ. எனக்கு நீங்க என்னைக்கும் முக்கியம். அதான்” என்றவன் ஆதவனுக்கு போன் செய்தான்.

அபிஷேக் போன் செய்த சிறிது நேரத்தில் ஆதவன் வந்தான்.

“மச்சி என்னடா அர்ஜென்ட்டா கூப்ட்ட?” என்று கேட்டுக் கொண்டு வந்தவன் அங்கே ஜோஸ்வினியை பார்த்ததும் திகைத்தான்.

“ஜோ நீ இங்க எங்க?” என்றவன்

“ஏன் டல்லா இருக்க?” என அவளை ஆராய ஆரம்பித்தான்.

ஜோஸ்வினி ஏதோ சொல்ல வர அவளை அபிஷேக் பார்வையால் தடுத்தவன்

“ஆது என்கிட்ட கேட்டுட்டு அவங்க கிட்ட என்ன பேசிட்டிருக்க?”

“என்ன சொல்லிட்டேனு நீ இப்படி கோபப்படறடா?”

“பின்ன அவங்கள பாத்தவுடனே நீ என்ன மறந்திட்டில்ல?” என்றவன்

“அவங்க இந்த சைட் ஷாப்பிங் வந்தாங்க. அவங்கள பாத்ததால இங்க கூட்டிட்டு வந்தேன்”

“அதெல்லாம் ஓகே. ஆனா ஜோ ஏன் இப்படி இருக்கா?” என்று அபியை கேட்டவன்

“என்னடா ஒடம்பு சரியில்லயா?” என ஜோவிடம் கனிவாக கேட்க அவள் ஏதும் பேச முடியாமல் ஆம் என்று தலையாட்டினாள்.

“ஒடம்பு சரியில்லங்கறத இவ்வளோ அசால்ட்டா சொல்ற. ஏன்டா போன் பண்ணியே… உருப்படியா ஒண்ணும் சொல்ல மாட்டியா?” என்று அபியை கடிந்தான்.

“ரிலாக்ஸ் ஆது. அபி எனக்கு டேப்லட் குடுத்தான். இப்போ ஓகே. நான் தான் அவன்ட்ட சொல்ல வேண்டாம்னு சொன்னேன்” என்றவள் பேச ஆதவனோ மாறி மாறி இருவரையும் பார்த்தான்.

“ஏன் இரண்டு பேரும் என்ன பேச விடாம பேசிட்டிருக்கீங்க?. ஏதாவது மறைக்கறீங்களா?” என்று கேட்க இருவரும் இல்லையென்று தலையாட்டினார்கள்.

அவர்கள் இருவரையும் பார்த்த அபிஷேக்

“ஓகே. நீங்க கிளம்புங்க. நான் பின்னாடி வரேன்” என்று சொல்ல ஆதவன் கோபமாக அவனை பார்த்தான்.

“ஏன் எங்க கூட வந்தா ஆகாதா? எல்லாம் ஒரே ப்ளேஸ் தானே போறோம்”

“டேய் நான் அப்பறம் வரேன்டா”

“ஜோ என்ன நம்ம இத்தன டைம் சொல்றோம்? இவன் என்னவோ ரொம்ப பிகு பண்றான்”

“அதில்லங்க ஜோ” என்று ஜோஸ்வினியிடம் ஆரம்பித்தவன் பின் ஆதவனை பார்த்து

“இங்க ரெஸ்ட்டாரன்ட் கார் இருக்குடா. நான் அதுல வரேன்” என்றவன் என்ன நினைத்தானோ

“நான் இனி ரெஸ்ட்டாரன்ட்லயே ஸ்டே பண்ணிக்கிறேன்டா” என்று அபி சொல்ல இருவரும் அதிர்ந்து போய் அவனை நோக்கினார்கள்.

“ஏய்… என்ன ஆச்சு?” என இருவரும் பதறி போய் கேட்க அபிஷேக் அவர்களை சமாதானப்படுத்தினான்.

“இல்லடா. இதுக்கு மேல உங்க ஃபேமிலிய டிஸ்டர்ப் பண்ண விரும்பல” என்று அபிஷேக் சொல்ல ஜோஸ்வினி அவனை கேள்வியாய் பார்த்தாள்.

“ஏன்டா நீ இருக்கிறது டிஸ்டர்ப்னு நாங்க சொன்னோமா? ஏன்டா இப்படி பேசுற?”

“அதில்ல ஆது. இனி செய்ய போற வேலைகளுக்கு நான் இங்கேயே ஸ்டே பண்றது பெட்டர்னு தோணுது. இங்க இருக்கற ரூமே எனக்கு போதும்டா” என ஜோஸ்வினியை பார்த்தபடி சொல்ல ஜோஸ்வினி அவனை அதிர்ச்சியாய் பார்த்தாள்.

‘நான் பாத்துக்கிறேன்’ என்றவளை பார்வையால் சமாதானப்படுத்தியவன்

“நீ ஜோஸ்வினிய கூட்டிட்டு போ. நான் இங்க வொர்க் முடிஞ்சு வரேன்” என்றவன் அவர்களை அனுப்பி விட்டு தலையை பிடித்தபடி அமர்ந்து விட்டான்.

அவன் ஒன்று யோசிக்கையில் விதி வேறு விதமாக நடக்க தான் செய்ய போவது சரியா என்று அவன் மனம் யோசனையில் ஆழ்ந்தது.

அதுவும் ஜோஸ்வினி அழுததை அவனால் கண் கொண்டு பார்க்க முடியவில்லை.

பட்டாம்பூச்சி போல சுற்றி திரிபவள் இன்று எதையோ பறி கொடுத்தது போல் அமர்ந்திருந்தது அவனது நெஞ்சில் ஆழமாய் பதிந்தது.

அதனால் எப்படியும் அவளை அதில் இருந்து மீட்டெடுக்க எண்ணியவன் அதற்காக எதையும் செய்ய துணிந்தான்.

இனி வரும் நாட்களில் அவளோடு இருக்கும் போது தான் ஆதவன் வீட்டில் இருந்தால் மேற்கொண்டு பிரச்சனை வருமோ என்று பயந்தவன் அதனாலேயே அவனது வீட்டில் இனி தங்குவதில்லை என்று சொன்னான்.

அடுத்து தான் செய்ய போவதை எண்ணி சிந்தனையில் ஆழ்ந்தவன் வெகு நேரம் கழித்து புறப்பட்டான்.

                         *****

ஜோஸ்வினியை அழைத்துச் சென்ற ஆதவன் அவளை பற்றிய யோசனையில் ஆழ்ந்தான்.

எப்போதும் ஜோஸ்வினி இவ்வளவு அமைதியாக வர மாட்டாள்.

இப்போது அவள் கண் மூடி அமர்ந்திருந்த தோற்றம் அவனை ஏதோ செய்தது.

“ஜோ என்னாச்சுடா? நம்ம ஹாஸ்பிடல் போயிட்டு போகலாமா?” என அவன் கனிவுடன் கேட்க அவளுக்கு அழுகை வரும் போலிருந்தது.

“இல்ல ஆது. ஆம் ஓகே. நம்ம வீட்டுக்கே போலாம்” என்று நைந்த குரலில் கூற அந்த குரலில் அதிர்ச்சியாகி காரை நிறுத்திய ஆதவன் 

“எதுனாலும் எங்கிட்ட சொல்லுடா. நான் எப்பவும் உன் கூட இருப்பேன்” என ஆறுதலாக சொல்ல அந்த சொற்களில் ஜோஸ்வினிக்கு தன்னை மீறி கண்ணீர் வந்தது.

அதை அவனிடமிருந்து மறைத்தவள் வெளியே வேடிக்கை பார்ப்பவள் போல அமைதியாக வந்தாள்.

அவளை கவனித்த ஆதவன் 

“ஜோ… என்னடா?” என்று வினவ அவளிடமிருந்து பதில் இல்லை.

அவள் வீடு வரும் வரை கார் அமைதியாகவே சென்றது.

அவள் காரில் இருந்து இறங்கும் போது அவளை கனிவுடன் பார்த்தவன்

“ஜோ எத நினச்சும் ஃபீல் பண்ணாத. நான் பாத்துக்கிறேன். ஓகே?” என்று சொல்ல அவள் சரி என்று தலையாட்டினாள்.

ஜோஸ்வினி வீட்டிற்கு வந்ததும் தலைவலி என்று சொல்லி சென்றவள் அப்படியே போய் படுத்துக் கொண்டாள்.

ஷியாமிடம் இருந்து அவள் இப்படி ஒரு செய்கையை எதிர்பார்க்கவில்லை.

என்ன தான் விவேக் வந்தாலும் அவனிடமும் அதை பற்றி காட்டி கொள்ள தோன்றவில்லை.

அதனால் புரோஜெக்ட் சென்டர் செல்வதாய் அவனிடம் சொல்லியவள் தனிமை தேடி அருகில் உள்ள பூங்காவிற்கு சென்று  தன்னை மறந்த யோசனையில் ஆழ்ந்தாள்.

ஒரு கட்டத்தில் நேரம் ஆனது உணர்ந்தாலும் கூட அவளுக்கு இருந்த மன உளைச்சலில் ஏதும் யோசிக்க தோன்றவில்லை.

இதில் அபிஷேக்கை அவள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

ஷியாம் இவ்வாறு எல்லாம் யோசிப்பானா என்பதே அதிர்ச்சியாக இருக்க அதை தாண்டி அபிஷேக் சொன்னது அவளுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.

வீட்டில் வந்து படுத்தவளுக்கோ ஏதேதோ யோசனையில் தூக்கம் தூரப் போனது.

                      *****

அடுத்த நாள் ஏதும் பேசாமல் அமைதியாக கிளம்பியவளை வீடே அதிசயமாக பார்க்க அதை அவள் கண்டு கொள்ளும் மன நிலையில் இல்லை.

அவள் கிளம்பி பஸ் நிறுத்தத்திற்கு வந்த மறு நிமிடம் அவளை உரசிக் கொண்டு கார் நின்றது.

அபிஷேக் காரின் கதவை திறந்து விட அதில் ஏறி அமர்ந்தாள்.

அவளை பார்த்தவன் புன்னகைக்க அவளோ சிரிக்க முயன்றாள்.

“நேத்து அவ்ளோ தூரம் சொல்லியும் ஏன் நீங்க இப்படி டல்லா இருக்கீங்க?”

“அதில்ல அபி. திடீர்னு அவன் ஷேட் மாறினது ஏத்துக்க முடில”

“ஜோ… இங்க எல்லாமே மாறிட்டு தான் இருப்பாங்க. நம்ம தான் அத டாக்கில் பண்ண பழகிக்கணும்”

“ஃபர்ஸ்ட் நீங்க உங்க முகத்துல ஸ்மைல் கொண்டு வாங்க. உன்னால யாரும் இங்க ஃபீல் பண்ணலேனு. அதே அவங்களுக்கு பெரிய அடியா இருக்கும்” என்று அபிஷேக் சொல்ல அவள் ‘ஈஈ’ என இளித்தாள்.

“இதுக்கு நீங்க சிரிக்காமலயே இருக்கலாம் ஜோ. ஓகே. மார்னிங் ஆன்ட்டி என்ன பண்ணாங்க?”

“யாருக்கு தெரியும்?”

“என்ன ஜோ இப்படி பேசறீங்க?”

“நான் சாப்பிடல”

“இப்போ என்ன ஆச்சுன்னு இப்டி இருக்கீங்க? ஷியாம் மட்டும் லைஃப் இல்ல. ஓகே. இன்னும் நீங்க ஏகப்பட்ட பிராப்ளம் ஃபேஸ் பண்ண வேண்டியிருக்கு. இப்படி இருந்தா எப்படி?” என்றவன் கேட்க அவள் அவனை பார்த்து புன்னகைத்தாள்.

“உங்களோட?” என்றவன்

“ஹோட்டல்ல சாப்பிட்டுட்டு போகலாம்” என்று சொன்னான்.

“இட்ஸ் ஆல்ரெடி லேட் அபி. நான் பிரேக்ல சாப்பிட்டுக்கறேன்” என்றவள் சொல்ல அவளை முறைத்தபடியே காரின் வேகத்தை அதிகப்படுத்தினான்.

அபியின் செய்கையை பார்த்தவளுக்கு மனது லேசாக ஆனது.

அதனால் ஓரக் கண்ணால் அவனை கவனித்தபடி வந்தாள்.

“ஜோ… எதுனாலும் ஸ்ட்ரைட்டா பாருங்க. நமக்கு இந்த சைட் பார்வை சரி வராது”

“அடேய் பக்கி… ஒருத்தி அமைதியா இருக்க விட மாட்டிங்களாடா? ஆமா. இவரு பெரிய உலக அழகன்?”

“சோ வாட் ஜோ? எனக்கென்ன? என் அழகான இரண்டு கண்கள், சிரிக்கறப்ப என் உதட்டோடு சேர்ந்து சிரிக்கும் கண்கள், கடல் அலை போல அலை அலையா என் முடி. நான் எவ்ளோ ஹேன்ட்சம்மா இருக்கேன்?” என்று சொல்ல ஜோஸ்வினிக்கு அவனை பார்க்க பார்க்க உள்ளுக்குள் தடுமாறியது.

அதை சமாளித்தவள் சுற்றும் முற்றும் பார்ப்பது போல பாவனையில் ஆழ்ந்தாள்.

“ஜோ… என்ன தேடறீங்க?”

“இல்ல. இப்படி நீ மார்க்கெட் பண்றீயே. யாரையாவது சுயம்வரம்க்கு கூப்ட்ருக்கியானு தேடறேன்”

“நீங்க இருக்கறப்ப வேற யாராவது அதுக்கு வந்துடுவாங்களா?” என்றதில் அபியின் குரல் மாறியிருக்க அவள் வாயடைத்து போய் அவனை பார்த்தாள்.

அதில் சுதாரித்தவன்

“நீங்க இருந்தா எல்லாம் பயந்துடுவாங்க ஜோ. அத தான் சொன்னேன்” என்ற அவன் விளக்கத்தில் அவனை முறைத்தாள்.

‘டேய் அபி… இப்டியா சொதப்புவ?’ என்று கடிந்தவன்

“நம்புங்க ஜோ. அத தான் சொன்னேன்” என்ற அவனின் பாவமான குரலில் அவள் தன்னை மறந்து புன்னகைத்தாள்.

“இது கரெக்ட். அத விட்டுட்டு ஏதோ மங்கி மாதிரி மூஞ்ச வெச்சிட்டு பாக்க சகிக்கல” என்று அவளை வம்பிழுக்க 

“டேய்” என்றவனை அடிக்க ஆரம்பிக்க அதை கவனித்தவன் காரை நிறுத்தி புன்னகையுடன் வாங்கி கொண்டான்.

அவன் ஏதோ ஒரு இடத்தில் காரை நிறுத்தியிருப்பான் என்று அபியை அடிக்க அபியோ காலேஜ் கேம்பஸின் உள்ளே நிறுத்தி இருந்தான்.

இந்த காட்சி அந்த வழியாக வந்த ஷியாமின் கண்களில் பட அவனோ அதை பார்த்து சிலையாய் நின்றான்.

 

 

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page