அத்யாயம் -21

திருக்குறள்

அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
நீஎமக்கு ஆகா தது.

காமத்துப்பால் அதிகாரம் நெஞ்சொடுபுலத்தல் குறள் எண்-1291

 

அத்யாயம் -21

 

 

திருக்குறள்

அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
நீஎமக்கு ஆகா தது.

காமத்துப்பால் அதிகாரம்  நெஞ்சொடுபுலத்தல் குறள் எண் -1291

 

 

அந்த விடுமுறைக்கு அப்புறம் அடுத்த ஆண்டில் அவர்கள் இருவரும் பார்த்துக் கொண்டதோடு சரி. பிறகு அவளின் குடும்ப சூழ்நிலை வேற்று மாதிரி போவிட இவனும் தன்னுடைய வாழ்வைப் பார்த்துக் கொண்டான்.  அதை பற்றி பிறகு பார்க்கலாம்.

சித்தி சித்தப்பா வாழ்க்கை அத்தனை எதார்த்தமானது அல்ல. அவர்கள் இருவரும் சேர்ந்து செய்த அக்கிரமங்கள் ஏராளம். கொலை, கொள்ளை, பண வெறியைத் தாண்டிய ஜாதி வெறி என்று அவர்கள் தீய சக்திகளின் இருப்பிடமாகத் தான் இருந்தார்கள்.

யாரிடமும்  சூர்யாவை நெருங்க விட்டதில்லை. ஆனால் அவனை உயிருடன் எதுக்கு விட்டு வைத்திருக்கிறார்கள்?

“ராஜா ஒரு தென்னை தோப்பு விலைக்கு வந்திருக்கு. அம்பது ஏக்கர். விலை தான் கொஞ்சம் அதிகம். நம்ம ஆதுவுக்கு வாங்கலான்னு நினச்சா கட்டுப்படி ஆகலை. ” மெதுவாக பேச்சை ஆரம்பித்தார் சித்தப்பா.

“அதுக்கு என்ன சித்தப்பா. நம்ம வீட்டு பையனுக்கு வாங்கப் போறோம். அதுக்கு கணக்கு  பாக்க வேணாம்.”

” என்னங்க அதுக்கு இப்ப ஆதுவுக்கு ? அவன் படிச்சுட்டு தானே இருக்கான். சூர்யா பேருல வாங்குங்க ” சித்தியின் அதிகாரத்தில் கணவனும் சரி என்று விட்டார்.

“சித்தி என்ன இது? என் ஆதுவுக்கு வாங்கினா என்ன?”

“இல்ல ராஜா! அது சரியா இருக்காது. உங்க பேருலையே முடிச்சிடலாம் “

“சித்தப்பா! எனக்கு நீங்க ரெண்டு பேரும் தான் பெரிய சொத்து. அம்மா அப்பா இல்லாத எனக்கு அவங்களை விட இவ்ளோ அன்பு கொடுக்கறீங்க. உங்களை விடவா எனக்கு இந்த விஷயமெல்லாம் பெரிசு? நான் முடிச்சுது தரேன். “

சொன்னவன் அம்பதுக்கு பதில் நூறு வாங்கினான் .

“என்ன ராஜா இது? “

” இருக்கட்டும் சித்தப்பா என்னோட தம்பிக்கு இது பிறந்த நாள்  பரிசா இருக்கட்டும். ”                                                                     

இப்படித்தான் ஆதவனுக்கு பல சொத்துக்கள் சேர்ந்தது. வாங்குவது மட்டும் இல்லை ஆட்கள் வைத்து அதை எல்லாம் சரியாகப் பார்த்துக் கொள்வதும் சூர்யாவின் வேலை தான். சித்தப்பா செய்வார் தான் இருப்பினும் இவனின் திறமை தனி தானே. இந்த தங்க முட்டையிடும் கோழியை அவர்கள் அழிக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. இருந்த போதும், அவனுக்கு என்று ஒரு குடும்பம் இவர்கள் அமைத்துக் கொடுத்தாலும் அவனுக்கு குடும்பம் இருக்கக் கூடாது. தெளிவாக இருந்தார்கள். இவன் பட்டப் படிப்பை முடித்ததும் சித்தி ஆரம்பித்தார்.

“ராஜா! சீக்கிரம்  கல்யாணம் செய்துக்கப்பா . உனக்கும் நிறைய கடமைகள் இருக்கு “

“இப்ப வேணாம் சித்தி இப்ப தான் படித்து முடிச்சுருக்கேன். எனக்கு இன்னும் மேல  நிறைய சாதிக்கணும். சொந்த தொழில் செய்யணும். “

“அதுக்கு என்னப்பா. ஏற்கனவே நாம பார்த்த பொண்ணு உனக்கு தொழிலில் உதவியா இருப்பா ” சித்தி சொன்னார் .

அவனுக்கு எப்போதுமே வீட்டுப் பெரியவர்களிடம் மறுத்துப் பேசும் பழக்கம் இருந்தது இல்லையே. சரி என்று விட்டான் .

 முதலில் ஒரு பெண் நிச்சயம் செய்தார்கள். இவனுக்கு கன்னத்தில் ஏற்பட்டிருந்த தழும்பு, அதனால் பிடிக்கவில்லை என்று திருமணத்தை நிறுத்தி விட்டாள் .

அது சரி . தழும்பு எப்படி வந்தது?  இவன் எம் பீ ஏ முடிச்சு விட்டு வீட்டுக்கு வரும் வழியில் ஒரு பள்ளி வாகனம் ஒன்று ஏரியில் கவிழ்ந்து விட்டது. ஏரி என்றாலும் சற்று ஆழம் தான். ஏதோ என் சீ சீ கேம்புக்கு சென்றவர்கள் போல. இவனும் அருகில் நீச்சல் தெரிந்தவர்கள் சிலரும் உடனே குதித்துக்  குழந்தைகளை காப்பாற்றி விட்டார்கள். குழந்தைகள் என்றால் அதில்  சில பெரிய பிள்ளைகள் கூட இருந்தார்கள். பதினொன்றாம்   வகுப்பு படிப்பவர்களாக இருக்கலாம் . அதில் ஒரு பெண் அங்கே இருந்த அங்கே இருந்த செடிகளில் சிக்கிக் கொள்ளவும் அவளை இவன் தான் தூக்கிக் கொண்டு வந்தான் . அது வேறு யாரோ இல்லை. நம் இதயத் தாமரை தான். இவன் அவள் முகம் பார்க்கவில்லை. அரைகுறை மயக்கத்தில் இருந்தவள் இவனைஉணர்ந்துக் கொண்டாள் .

இவன் அவளைத் தூக்கும் போது அருகில் இருந்த கல்லில் குத்தி அடிபட்டு இரத்தம் கொட்டியது. அப்போது பெரியதாக எதுவும் தெரியவில்லை என்றாலும் பிறகு நல்ல வலி. அதுவே தழும்பாகவும் மாறி விட்டது.

சித்தியின் தூரத்து சொந்தம் என்று ஒரு பெண்ணை பார்த்தார்கள். வேண்டும் என்று பார்க்காத போதும் ஒரு நிகழ்ச்சியில் பார்த்தது . இவனுக்கும் பிடித்தது. இவர்கள் அளவுக்கு வசதி இல்லை. இருப்பினும் ஓரளவு படித்திருந்தாள் . பார்க்கவும் நன்றாக இருந்தாள். ஒரே ஜாதியை சேர்ந்தவர்கள். இவர்கள் வீட்டில் சரி என்று சொல்லி விட்டார்கள். இவன் படிப்பு முடிவதற்கு முன்பே பேசிய இடம் தான். இருப்பினும் படிப்பு முடிந்தப் பிறகு மீண்டும் இந்த பேச்சு தொடங்கவும் இப்போது அந்த பெண் இவனை வேண்டாம் என்று விட்டாள். முகத்தில் இருந்த தழும்பு தான் காரணம்.

பெண் கிடைக்கவில்லையே பிளாஸ்டிக் சர்ஜரி செய்துக் கொள்ளலாம் என்றால்  வீட்டுப் பெரியவர்கள் சொன்னது வேறு.

“ராஜா ஏற்கனவே நம்ம கிட்ட ஏகப்பட்ட பணம் இருக்கு. வர்ற பெண்ணு உங்களுக்காக வருவாளா இல்ல பணத்துக்காக வராளான்னு தெரியாது. இந்த தழும்போடையே சரி சொல்லி வர்ற பொண்ணு நிச்சயம் பணத்துக்காக இல்லாம குணத்துக்காக தான் வருவா. “
இப்போதும் சரி என்று விட்டான். அடடா எவ்ளோ நல்ல பிள்ளை ! பெரியவர்கள் வேறு பெண் பார்க்க இவன் தொழிலைப் பார்த்துக் கொண்டான் . ஆனல் பெண் தான் கிடைக்கவில்லை .

“சித்தி ப்ளீஸ் கொஞ்ச நாளைக்கு இந்த பேச்சு வேணாம். நான் முதலில் என்னோட

தொழிலில் கவனம் செலுத்த வேண்டும் ” சித்தியும் சரி என்று சொல்லி விட்டார்.

அடுத்த நான்கு வருடங்கள் இப்படியே கழியவும் மீண்டும் திருமணப் பேச்சு வந்தது.

“நம்ம ஆதுவுக்கும் பாக்கணும் சூர்யா. உனக்குன்னு ஒரு குடும்பம் வேணாமா ? நீயும் எத்தனை நாளைக்குத்தான் இப்படி தொழில் தொழில்னு சுத்திகிட்டு இருக்கப் போற. இல்ல உனக்கு மன்சுல ஏதாவது எண்ணம் இருந்தா சொல்லு. எந்த ஊர் மகாராணியா இருந்தாலும் நம்ம சித்தப்பா பேசுவாரு “

“அந்த மாதிரி எந்த எண்ணமும் இல்லை சித்தி. நீங்களே பாருங்க.”

இரண்டாவது வேறு ஒருப் பெண் . அனிதா. இவள் பக்கத்துக்கு ஊரில் இருந்தப் பெண்ணை பார்த்தார்கள். இவனின் கன்னத்து தழும்பு பிரச்சனை இல்லை என்றார்கள். சி ஏ படித்திருந்தாள் . அவள் இவன் புகைப் படம் பார்க்க இவனோ யாருக்கோ திருமணம் என்பது போல எந்த ஆசையும் இல்லாமல் இருந்தான். எதுக்கு ஆசை வச்சுக்கிட்டு அப்புறம் வேண்டான்னு சொன்னா சங்கடம் . இந்த எண்ணத்தில் இருந்தவன் பெண்ணிடம் பேசக் கூட இல்லை. அவள் முயற்சி செய்தாள் . இருப்பினும் சித்தி நாசுக்காக அதை தவிர்த்து விட்டார்.

“எதுக்கும்மா இப்ப அதெல்லாம். அவனுக்கு இது எல்லாம் புடிக்காது. கல்யாணத்துக்கு அப்புறம் முழுக்க அவன் கூடவே தானே இருக்கப் போற?`”

நிச்சயதார்த்தம் கூட செய்யவில்லை. கல்யாணத்துக்கு முன்னாடி நாள் செய்தா போதும். அது தான் எங்களுக்கு வழக்கம். அவசரமாக ஒரு முகூர்த்த நாளை குறித்து அவசர கதியில் எல்லாம் நடந்தது.

அனிதா வெட்ஸ் சூர்யா!

திருமணப் பலகை அனைவரையும் வரவேற்க வந்தவர்களை வரவேற்க அழகான பெண்கள் நின்று கொண்டிருந்தார்கள் அவன் வீட்டு அரண்மையில்.

எல்லாமே நன்றாகத் தான் இருந்தது. நிச்சய விழாவில் கூட அவள் அத்தனை சந்தோஷமாக இருந்தாள் . அதைப் பார்த்த சூர்யாவுக்கு கூட மனதில் ஏதோ ஒரு இனம் புரியாத ஆசையும் உணர்வும் வந்தது.

பிறகு ஏன் திருமணம் நின்றது ?

 அவள் வேறு ஒருவனை விரும்புவதால் இவன் வேண்டாமாம். அதை ஏன் முன்பே சொல்லவில்லை.

இவனின் தோற்றம் பார்த்து பிடித்திருக்கிறது என்று சொல்லித்தானே திருமணம் வரை சென்றார்கள். பெண் அழைப்பு, மாப்பிளை அழைப்பு எத்தனை எத்தனை கோலாகலம். சங்கீத் அது இது என்று அனைத்து விழாக்களிலும் சிரித்துக் கொண்டு நடனம் ஆடிக் கொண்டு அத்தனை அழகாக இருந்த பெண் திருமணம் அன்று முகூர்த்த புடவை மாற்ற சென்றவளைக் காணவில்லை. அத்தனை பேர் இருந்தும் எதுவுமே செய்ய முடியவில்லை. ஒரு வேளை அந்தத் திருமணம் நடந்திருந்தால் மட்டும் என்னவாகி இருக்கும்?அப்போதும் இப்படித் தான் தனிமையில் இருந்திருப்பான். விவாகரத்து வாங்கிக் கொண்டு. எப்படியும் தன்னுடைய வாழ்வில் எந்த பெண்ணுக்கும் இனி இடம் இல்லை என்று அவன் முடிவெடுத்த நேரத்தில் தான் அவள் வந்து நின்றாள்.

“உங்களை நான் கல்யாணம் செய்துக்கறேன். “

அத்தனை பேர் மத்தியில் தெளிவாகச் சொன்னாள் . கம்பீரமாக ஒலித்த அவள் குரல் அவனுக்கு மட்டுமே கேட்டது. நான் எத்தனை பெரிய ஆள். எனக்கா இந்த நிலைமை.! எத்தனை பேருக்கு நான் வாழ்க்கை கொடுத்திருப்பேன். இந்த நிலையில் எனக்கு வாழ்க்கை கொடுக்க ஒருத்தி வந்து நிற்கிறாள். அவனுக்கே தன்னை நினைத்து அசிங்கமாக இருந்தது.

“உங்களுக்கு என்னை தெரியும். எனக்கு உங்களைத் தெரியும். உங்களுக்கு சரினா ஓகே சொல்லுங்க.”

 

 இவன் சித்தி சித்தப்பா விழித்துக் கொண்டு நிற்க இவனுக்கு என்ன பதில் சொல்வது என்று தடுமாறியவன் அடுத்த சில நிமிடத்தில் சரி என்றான் பெருமூச்சுடன்.

சுடிதாரில் நின்றவளுக்கு அவசரமாக நூல் கூரைப் புடவை கொடுக்கப் பட்டது. கையில் காதில் என்று அவளின் தோழிகள் அவசரமாக நகைகளைப் போட, கீர்த்தி தான் மல்லிகையை எடுத்து அவளின் கூந்தலில் சுற்றி விட்டாள் . கார்த்தியும் விழி விரித்து பார்த்திருக்க தேவதையாக அவள் வந்து சேர ஐந்து நிமிடங்கள் போதுமானதாக இருந்தது. தோழிகளுக்குத் தான் புல் கிரெடிட் .

அம்மா அப்பா இல்லாத காரணத்தால் கார்த்தியின் பெற்றோர் தான் தாரை வார்த்துக் கொடுத்தார்கள்.

நிற்க வேண்டிய திருமணம் வெகு சிறப்பாக நடந்தது .

அவன் இவள் கழுத்தில் மாங்கல்யம் கட்டும்போதும் இவள் தலை குனியவில்லை. விழி விரித்துப் பார்த்தாள் .

“சரி இனிமே உனக்குதாண்டி அதுக்கு இப்படி பப்ளிக்கா சைட் அடிக்காத”மாலை சரி செய்வது போல தோழி சொன்னது அவன் காதிலும் விழுந்தது.

 

துடிக்கும் இதயம் …..

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page