இதே நேரத்தில் தங்களது வீட்டிலிருந்து அனைத்து உறவினர்களும் கிளம்பிச் சென்ற அடுத்த நிமிடத்தில் தங்களது மகளின் அறைக்குள் நுழைந்து,
“என்னப் பண்ணி வச்சிருக்கிற?”எனறக் கேள்வியை எழுப்பி இருந்தார்கள் காளிமுத்து மற்றும் வள்ளி.
அதில் தனது முகத்தைக் குழப்பமாக வைத்துக் கொண்டு,
“நான் என்னப் பண்ணேன்ப்பா? ம்மா?”என அவர்களிடம் வெள்ளந்தியாக வினவினாள் தங்கப்புஷ்பம்.
அதில் அவளின் மீது இன்னும் கோபம் அதிகரித்து விடவும்,
அவளைக் கடுமையாக முறைத்த அவளது பெற்றோரோ,
“அந்த வீரபத்திரன் எப்படி சரியாக இன்னைக்கு உனக்குப் பரிசம் போட்ற நேரத்தில் வந்து உன்னைப் பொண்ணுக் கேட்டான்? அவனை நீ தான் வரச் சொன்னியா?”என்றவர்களின் வார்த்தைகளைக் கேட்டுத் துடித்துப் போய் விட்டாள் தங்கப்புஷ்பம்.
“அப்பா, அம்மா! நீங்க என்னப் பேசுறீய – ன்னுப் புரிஞ்சுத் தான் கேட்கிறீயளா?”என வேதனை மிகுந்த குரலில் கேட்க,
அதற்கு,”நல்லா புரிஞ்சதால் தான் உங்கிட்ட இதைக் கேட்கிறோம்! நீ தானே அந்தப் பையனை நம்ம வீட்டுக்கு இன்னைக்கு வரச் சொல்லி இருந்த?”என்று அவளிடம் அதட்டிக் கேட்டிருந்தார் வள்ளி.
“இப்படியெல்லாம் செஞ்சி எங்களைச் சபையில் எல்லார் முன்னாடியும் தலைக் குனிய வச்சிட்டியே!”என்றவரைக் கண்ணீர் மல்கப் பார்த்து,
“நான் அவரை ஒன்னு, இரண்டுத் தடவைப் பார்த்து இருக்கேன் தான்! ஆனால் அவர்கிட்ட ரொம்ப எல்லாம் பேசினது இல்லை! சண்டைத் தான் போட்டு இருக்கேன்ப்பா! ம்மா! நான் சொல்வதை தயவு செஞ்சி நம்புங்க! நீங்களே என்னை நம்பலைன்னா நான் வேற யார் கிட்டே இதைப் பத்திச் சொல்ல முடியும்?”என்றாள் ஆதங்கத்துடன்.
“நீ சொல்வதை எல்லாம் நாங்க நம்புவோம்ன்னு நீ நினைக்கிறியா? எங்களைச் சபையில் வச்சி மூக்கறுத்துட்டு இப்போ நீலிக் கண்ணீர் வடிச்சிட்டு இருக்கியா?”என்று மகளைக் கொன்று விடுவதைப் போன்றப் பார்வையுடன் நோக்கினார் காளிமுத்து.
அதில் தனது உடல் முழுவதும் நெருப்பில் எரிவதைப் போல் உணர்ந்து கொண்டு,
“நீங்க என்னைப் பத்திப் புரிஞ்சிக்கிட்டது இவ்வளவு தானாப்பா?”எனத் தொண்டைக் கமறக் கேட்டிருந்தாள் தங்கப்புஷ்பம்.
“நாங்க உன்னை இவ்வளவு வருஷமாகத் தப்பாகப் புரிஞ்சிக்கிட்டு இருக்கோம்ன்னு இப்போ தான் எங்களுக்குப் புரிஞ்சது! அந்தளவுக்கு நீ எங்களை அவமானப்படுத்தி இருக்கிற!”எனக் கூறி அவளைக் குற்றம் சாட்டினார் வள்ளி.
“ஐயோ! நான் சொல்வதை நீங்க ரெண்டுப் பேரும் நம்பவே மாட்டீயளா? உங்கச் சொந்தப் பொண்ணையே இந்த மாதிரி எல்லாம் கேள்விக் கேட்டு வருத்தப்பட வைக்கிறது உங்களுக்கே அநியாயமாகத் தெரியலையா? நான் எந்தத் தப்பும் பண்ணலை! யாரையும் வீட்டுக்கு வந்து என்னைப் பொண்ணுக் கேளுன்னுச் சொல்லவே இல்லை!”என்று அவர்களிடம் சொல்லிச், சொல்லி மாய்ந்து போய் விட்டவளுக்கோ,
தன்னை நிரூபிக்க எந்த வழியும் புலப்படாததால் மௌனக் கண்ணீர் வடிக்க,
அவளுக்குத் தன்னிலை விளக்கம் அளிக்கக் கூட அவகாசம் கொடுக்கவில்லை அவளது பெற்றோர் இருவரும்.
அதற்குப் பதிலாக,”நீ அவனை நம்ம வீட்டுக்கு வரச் சொல்லலைன்னா ஏன் ராஜனைக் கட்டிக்க மாட்டேங்குற? அதுக்குப் பதில் சொல்லு”என்று மகளிடம் வினவினார் காளிமுத்து.
“அதுக்கும், இதுக்கும் என்னப்பா சம்பந்தம் இருக்கு? எனக்கு மாமாவைக் கட்டிக்கப் பிடிக்கலை! அவ்வளவு தான்! அதுக்காக நான் அந்த வீரபத்திரனைக் காதலிக்கிறேன்னு அர்த்தமா? நான் தான் சொல்றேனே! அவருக்கும், எனக்கும் பெருசாக எந்தப் பேச்சு வார்த்தையும் நடந்தது இல்லை! அப்படி இருக்கும் போது அவரை நான் இங்கே வரச் சொல்றதுக்கு என்ன அவசியம் இருக்கப் போவுது?”என்று தன்னுடைய பெற்றோரிடம் மன்றாடிப் பார்த்து விட்டாள் தங்கப்புஷ்பம்.
ஆனால்,”அது தான் அவனுக்கும், உனக்கும் இடையில் எதுவுமே இல்லைல? அப்போ நீ ராஜனைக் கல்யாணம் செஞ்சிக்கச் சம்மதம் சொல்லித் தான் ஆகனும்!”என்று அவளுக்குக் கட்டளையிட்டார்கள்.
அதைக் கேட்டதுமே,”சரி! நான் மாமாவைக் கட்டிக்கச் சம்மதிக்கிறேன்! இனிமேல் இப்படி என்னைப் பத்திப் பேசுறதையோ, கேள்விக் கேட்கிறதையோ வச்சுக்காதீங்க! நான் கல்யாணம் முடிச்சுப் போற வரைக்கும் எங்கிட்ட எதுவும் பேசாதீங்க!”என அவர்கள் இருவரிடமும் கைகூப்பி வேண்டிக் கேட்டுக் கொள்ளவும்,
அவள் பேசியக் கடைசி வார்த்தைகள் யாவற்றையும் கண்டுக் கொள்ளாமல் அவள் இந்தத் திருமணத்திற்குச் சம்மதம் அளித்ததை மட்டுமே காதில் வாங்கிக் கொண்டு,
“ம்ஹ்ம்! நீ இப்போ தான் உருப்படியான முடிவை எடுத்திருக்கிற! இனிமேல் இந்தக் கல்யாணத்தைப் பத்தி மட்டும் யோசி! இதுக்கு முன்னாடி நடந்த மத்ததை எல்லாம் மறந்துடு! கல்யாணத்துக்கு அப்பறமாக உம்புகுந்த வீட்டில் எப்படியெல்லாம் நீக்குப், போக்காக நடந்துக்கனும்னு நான் சொல்லித் தர்றேன். அதைக் கத்துக்கிறதில் உன்னோட கவனத்தைச் சொல்லு!”என அவளுக்கு அறிவுரை வழங்கினார் வள்ளி.
தன்னுடைய பெற்றோர் இருவரும் தன் மேல் சிறிதளவு கூட நம்பிக்கை வைத்திருக்கவில்லை என்பதைப் புரிந்து கொண்டு இதற்கு மேல் இவர்களிடம் பேசுவதும், தனக்காக வாதிடுவதும் அவசியம் அற்றது என்பதையும் உணர்ந்து கொண்டு ராஜனுடன் தனக்கு நடக்கப் போகும் திருமணத்திற்காக மனதைக் கல்லாக்கிக் கொண்டுத் தயாராகத் தொடங்கி விட்டிருந்தாள் தங்கப்புஷ்பம்.
ஆனால் அவளை மறக்க முடியாமல் மிகவும் தனக்குள் இறுகிப் போய் விட்டு,
அதற்குப் பிறகான நாட்களில் அவளுக்கு, அவளது அத்தை மகன் ராஜனுடன் நிச்சயத்தார்த்தம் நடந்து விட்டதையும், அவளுக்கு வெகு விரைவிலேயே திருமணம் நடக்கப் போவதையும் அறிந்து கொண்டு இனிமேல் அவளது கண் முன்னால் செல்லக் கூடாது என்ற நிதர்சனத்தையும் அறிந்து கொண்டுத் தனது காதலை மனதிற்குள்ளேயே கொன்றுப் புதைத்து விட்டு நடைப்பிணமாக வாழ ஆரம்பித்து விடப் பழகிக் கொண்டான் வீரபத்திரன்.
ஆனாலும் தங்கப்புஷ்பத்தின் நினைவுகளால் மிகவும் அவனது மனம் அலைக்கழிக்கப்பட்டதையும் அவனால் மறுக்க இயலவில்லை!
தன்னுடைய மறுப்பை, மனதைப் புரிந்து கொள்ளாத பெற்றோரிடம் இருப்பதை விட ராஜனைத் திருமணம் செய்து கொண்டு அதற்குப் பிறகு அவனை எப்படியாவது மாற்றி விடலாம் என்று சிறு நம்பிக்கையுடன் அவனைக் கணவனாக ஏற்றுக் கொண்டு அவனுடைய வீட்டில் தனது வலது காலை வைத்து நுழைந்தாள் தங்கப்புஷ்பம்.
அன்றைய முதலிரவு நேரத்தில் அவளுக்கு நரகத்தைக் காட்டி விட்டிருந்தான் ராஜன்!
அதுவும்,”எங்கே எங்கிட்ட இப்போ உன்னோட வாயைத் திறந்து வம்புப் பேசுப் பார்ப்போம்! அப்பறம் என்னை மரியாதை இல்லாமல் ஏக வசனத்தில், திமிராகப் பேசுவியே? அந்த மாதிரி இப்போ பேசுடி பார்க்கலாம்!”என்றவனோ,
தன் கண்களில் அவளின் மீதான வன்மத்தை நிறைத்துக் கொண்டு அவளது உடலை மறைத்திருந்த வஸ்திரங்களை எல்லாம் களைந்து விட்டு அவளை நிர்வாணமாக ஆக்கினான்.
அதில் தனது உடல் கூசி விடவே அவனைத் தன்னிடமிருந்து பிடித்துத் தள்ளி விட முயன்றாள் தங்கப்புஷ்பம்.
அதேபோல் தன்னுடலை மறைத்துக் கொள்ள வேண்டிப் போர்வையைக் கையில் எடுத்துக் கொண்டவளிடம் இருந்து அது வேகமாகப் பறிக்கப்பட்டு விட்டிருந்தது ராஜனால்!
“என்னடி போர்வையை எடுத்துப் போர்த்திக்கிட்டு உன்னை மறைச்சுக்கப் பார்க்கிறியா? நான் அதைச் செய்ய விட்ருவேனா என்ன? இனிமேல் தெனைக்கும் ராத்திரி நீ இப்படித் தான் என் முன்னாடி இருக்கனும்”என்றத் தனது கணவன் என்று சொல்லப்பட்ட ராட்சசனை விழிகளில் மிரட்சியுடன் பார்த்தாள் தங்கப்புஷ்பம்.
ஆனால் அவளது தயக்கம், விலகல், அருவருப்பு என்ற எந்த உணர்வுகளையும் புரிந்து கொள்ளாமல் அவளை மிருகத்தனமாக ஆட்கொண்டு விட்டு விலகிப் படுத்தான்.
அவன் தன்னை ஆட்கொண்டு விட்டதற்குப் பின்னர் சில நிமிடங்கள் கழித்து தான் தன்னுடைய உணர்விற்குத் திரும்பி இருந்தாள்.
இனிமேல் அவளுடைய உலகமே தலைகீழாகச் சுழலப் போகிறது என்பதை உணர்ந்தவளின் கண்கள் இரண்டும் கண்ணீரைச் சொரிந்தது எனலாம்!
அது இன்றளவும் நின்றபாடில்லை!
அவளது கணவன் அவளுக்கு இரவில் அளிக்கும் உடல் வேதனைகளுடன் சேர்த்துப் பகலிலும் அவளை ஒரு இடத்தில் ஆற, அமர உட்கார விடாமல் வீட்டில் இருக்கும் அனைத்து வேலைகளையும் வேண்டுமென்றே அவளை மட்டுமே பார்க்குமாறு செய்து விட்டிருந்தார் அவளது மாமியார் சற்குணம்.
அதை தட்டிக் கேட்காமல் அவருடன் சேர்ந்து தங்களது மருமகளுக்குத் தன்னால் முடிந்த அளவிற்குத் தானும் பணிகளைக் கொடுக்கலானார் வளையாபதி.
முதலில் மிரண்டுப் போய், தனது விழிகள் தெறித்து விழுக அவற்றையெல்லாம் எதிர்கொள்ளத் திணறிப் போனவளை எப்பொழுதும் போலவே மகளைக் காண வரும் போதெல்லாம் பொறுமையாக இருந்து அனைத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பலவகைப் புத்திமதிகளை வாரி வழங்கி விட்டுச் செல்வார்கள் அவளது பெற்றோரான காளிமுத்து மற்றும் வள்ளி.
அதில் தன்னுடைய தைரியம், தன்னம்பிக்கை அனைத்தும் சுக்குநூறாக உடைந்து விட்டதைப் புரிந்து கொண்டுத் தன்னைக் கல்லாக்கிக் கொண்டுத் தன் திருமண வாழ்க்கையைச் சகித்துக் கொண்டு வாழத் தொடங்கி விட்டாள் தங்கப்புஷ்பம்.
இப்பொழுது வரைக்கும் அப்படித் தான் சகிப்புத்தன்மையுடன் ராஜனுடனும், தன் புகுந்த வீட்டு ஆட்களுடனும் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.
ஆனால் தனது கணவன் அவ்வப்போது அந்த வீரபத்திரனின் பெயரைச் சொல்லித் தன்னைக் குத்திக் காட்டும் போதெல்லாம் அவன் கொடுக்கும் உடல் வலியை விட மனவலி இன்னும் அதிகமாகி விடுவதை உணர்ந்து,
அந்தச் சமயங்களில் எல்லாம் அந்த வீரபத்திரன் தன்னைப் பெண் கேட்டு வந்த நாளில் தன் மனம் அலைபாய்வதை அவளால் தடுக்க முடியவில்லை என்று கூறலாம்!
அதே நேரத்தில் அவனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பதும் தங்கப்புஷ்பத்திற்கு நன்றாகவே தெரியும்!
அவன் இந்த ஊருக்கு வந்துள்ளான் என்பதைக் கணவனின் மூலமாக கேட்டறிந்து கொண்டவளுக்கோ அவனைப் பார்த்து நியாயம் கேட்க வேண்டும் என்று மனம் துடித்தது!
ஆம்!
தன்னுடைய இந்த அநாதரவான, அடிமை நிலைக்கு அவனும் ஒரு காரணம் தானே? என்றக் கோணத்தில் அவள் வீரபத்திரனின் மீது கடுங்கோபத்தில் உழன்று கொண்டிருந்தாள் தங்கப்புஷ்பம்.
அதனாலேயே அவன் இந்த ஊரை விட்டுச் செல்வதற்கு முன்பாக அவனை ஒரு முறையாவது பார்க்கத் தனக்குச் சந்தர்ப்பம் ஏதாவது வாய்க்குமா? எனக் காத்திருக்கிறாள்.
அவள் எதிர்பார்த்தபடியே அந்தச் சந்தர்ப்பம் விரைவாகவே அவளுக்குக் கிடைக்கப் போவது மட்டுமின்றி அதனால் அவளது தற்போதைய நிலையும், தலையெழுத்தும் மாறப் போகிறதையும் அவள் அறிந்திருக்கவில்லை எனலாம்!
அதுவும் அந்தச் சந்திப்புத் தனது கணவனின் மூலமாகவே ஏற்படப் போகிறது என்பது அவளுக்குத் தெரிய வரும் போது தங்கப்புஷ்பத்தின் எதிர்வினை என்னவாக இருக்கும்?
வீரபத்திரனிடம் அவள் கேட்கத் துடிக்கும் கேள்விகளை எல்லாம் அவளால் தயக்கமின்றித், தடுமாற்றம் இன்றிக் கேட்க முடியுமா என்ன?
- தொடரும்
