இதயம் 29

கதிர் அசால்ட்டாக தனது வீட்டில் யாருக்கும் அவளது முதல் திருமணத்தைப் பற்றித் தெரியாது எனச் சொல்ல நேத்ரா நடுக்கத்துடன் உறைந்து போய் அவனைப் பார்த்தாள்.

ஏதோ யோசனையில் சொல்லி கொண்டிருந்தவனோ அவளைப் பார்த்துப் பதறினான்.

“ஹேய்… பேபி ஏன்டா இவ்ளோ டென்ஷன்?”

“என்ன சொல்ற கதிர்? நாங்க ஏமாத்தி மேரேஜ் பண்ணோம்னு நினைக்க மாட்டாங்க”

“இதுக்கும், அதுக்கும் என்ன சம்பந்தம்? இது நம்மோட பர்ஸனல். முகில்க்கு கூடச் சொல்லி இருக்க மாட்டேன். அஜூ வீட்ல இருந்து வரப்ப பார்த்துட்டான். அதான் சொல்ல வேண்டியதாகிடுச்சு” என விளக்கம் கொடுக்க அவளுக்குத் தான் தலை சுற்றும் போலிருந்தது.

நின்று கொண்டிருந்தவள் சட்டென்று உட்கார…

“பேபி என்ன ஆச்சு?” என்று கேட்டபடி அவளைத் தனது தோளில் சாய்த்துக் கொள்ள

“நீ சொன்ன விஷயத்த கேட்டு நிஜமாலுமே தலை சுத்திடுச்சு” என்றவள் பலகீனமான குரலில் சொல்ல அவன் திகைத்தான்.

“ஏன்டா இவ்ளோ டென்ஷன் ஆகற? நான் பார்த்துக்கிறேன்டா”

“நீ பார்த்துப்பே தான். ஆனா உங்கம்மா எங்கள தப்பா நினைப்பாங்களேடா?”

“பேபிமா தேவையில்லாம குழப்பிக்காத. அதப் பத்தி தெரிஞ்சா தானே அவங்க கேப்பாங்க. நம்ம அதப்பத்தி பேச போறதில்ல. அப்படியே ஏதாவதுனா நான் கரெக்ட் பண்ணிடுவேன்டா. யூ டோன்ட் வொர்ரி” எனச் சொன்னவன் மூடியிருந்த அவள் கண்களில் முத்தமிட அவளோ அவனை இறுக அணைத்துக் கொள்ள அவள் உதடுகளின் துடிப்போ அவனை வா வா என்று கெஞ்சியது.

கதிர் நேத்ராவை நெருங்க அவள் சடாரென்று கண் விழிக்க நேத்ரா கதிரின் பார்வையில் கட்டுண்டவள் அவனையே பார்த்தபடி இருக்க அவனோ அவளது நெற்றி, கன்னம் என வரிசையாக முத்தமிட்டு வந்தவனை அவளது உதடுகளின் அழைப்பில் தனது ஒட்டு மொத்த காதலையும் திரட்டி அவளுக்கு உயிரூட்ட அவளோ அவனது அன்பினில் உலகை மறந்து நின்றாள்.

அவனது உயிரூட்டலில் அவள் துவள அவளைத் தாங்கி பிடித்தவன் மேலும் முன்னேற துவங்கினான்.

நேத்ரா தன்னை மறந்த எதிர்பார்ப்பில் இருக்க அவளது கழுத்தை வாசம் பிடித்தவன் என்ன நினைத்தானோ அவளை எடுத்து தனது நெஞ்சில் போட்டபடி தட்டி கொடுக்க எப்போதும் போல இப்போதும் தனது மன நிலையைச் சரியாகக் கணித்தவன் மீது பூரிப்படைந்தவள் காதல் பொங்க அவனை இறுக அணைத்துக் கொண்டு வெகு நாட்களுக்குப் பிறகு நிம்மதியாக உறங்கினாள்.

கதிர் அவளையே பார்த்து கொண்டிருந்தவன் எப்போது உறங்கினானோ… கதவு தட்டும் சத்தம் கேட்டுக் கண் விழித்தவன் நேத்ராவை அவன் கைகளில் பார்த்ததும் சந்தோஷத்தில் முகம் மலர அவளது நெற்றியில் முத்தமிட்டான்.

அவளோ தூக்க கலக்கத்தில் “ம்மா உன் கைய கொடு” எனத் தனது கையை அவனுடைய கைகளுக்குள் புதைத்துக் கொள்ள அவனுக்குச் சிரிப்பு தான் வந்தது.

‘அடிப்பாவி. பேபி பேபின்னு கூப்பிட்டு பேபி மாதிரியே பண்றியேடி’ என்று நினைத்தவன்

“பேபி எந்திரிடா. கதவு தட்றாங்க” என அவன் எழுப்ப விழித்தவளுக்கோ ஒன்றும் புரியவில்லை.

அவளது பக்கத்தில் கதிர் படுத்திருப்பதைப் பார்த்து திகைத்தவள் அதிர்ச்சியுடன் எழ

“கண்ணம்மா என்னாச்சுடா?” எனக் கேட்க அவளுக்குத் தனது திடீர் கல்யாணம் ஞாபகம் வந்தது.

“சா… சாரி கதிர். நான் எங்க வீட்டு ஞாபகத்துல இருந்துட்டேன்” என அவள் தயக்கத்துடன் மன்னிப்பு கேட்க

“மேடம் நீங்க சாரி எல்லாம் அப்பறம் கேளுங்க. ஃபர்ஸ்ட் போய்க் கதவத் திறங்க” என்று சொல்ல அவளோ

“அய்யய்யோ…” எனப் பதறி போய்த் திறக்க போக அவனோ சிரித்தபடியே தூங்க ஆரம்பிக்க

“பக்கி ஃபர்ஸ்ட் கூப்டறது சொல்லாம என்னடா பண்ணிட்டிருக்க?” என்று திட்டியபடியே கதவை திறந்தவள் கமலி இருப்பதைப் பார்த்ததும் திகைத்து விழித்தாள்.

“காபி போட்டுட்டேன். வாம்மா” எனச் சொல்ல தலையாட்டியபடி உள்ளே சென்றவள் வெளியே திரும்பி பார்த்து விட்டு கதிரை வந்து அடிக்க ஆரம்பித்தாள்.

“ஏய் எரும கதவு தட்றங்கானு சொல்லாம நீ காலையிலேயே வம்பிழுக்கறியா?”

“ஏன்டி கண்ணாலம் பண்ணிட்டு ரொமான்ஸ் பண்ணுவாங்கனு பார்த்தா இவ காலங்காத்தாலேயே அடிக்கறாளே. கதிர் இனி நீ அவ்ளோ தான்டா” எனச் சத்தமாகப் புலம்ப அவளோ அவசரமாக அவன் வாயை மூட அவனோ அவள் கையை இழுக்க நேத்ரா அவன் மீதே விழுந்தாள்.

“கதிர் என்ன பண்ற?”

“இரு பேபி. இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சுப் போகலாம்” எனச் சீண்ட

“டேய் விளையாடாத. ஆன்ட்டி என்ன நினைப்பாங்க?”

“நான் நல்ல ரொமான்ஸ் பண்றேனு நினைப்பாங்க” என்ற பதிலில் அவள் வாயடைத்து போய் நிற்க கதிர் அவளது கன்னத்தில் முத்தம் வைக்க

“டேய் என்னடா எச்சில் பண்ற? போடா. நான் வரதுக்குள்ள நீ ரெடியாகல?” என்று கதிரை மிரட்ட

“ஏன்டி புருஷன் முத்தம் கொடுத்தா அனுபவிக்கணும். ஆராயக் கூடாது” எனச் சொல்ல

“அப்படியா” என்றவள் அவன் கன்னத்தைக் கடிக்க

“டேய் என்ன பண்ற நீ?” என அவன் திகைக்க அந்த இடைவெளியில் அவனிடமிருந்து தப்பித்தவள் கொஞ்ச தூரம் சென்று பழிப்பு காட்ட கதிரும் சிரித்தபடி குளியல் அறைக்குள் நுழைந்தான்.

தனக்குள் சிரித்தபடியே வெளியே வந்த நேத்ராவை பார்த்து பூரித்த அமுதாவை…

“ம்மா காபி குடிச்சிட்டியா?” எனக் கேட்க

“குடிச்சிட்டேன் நேத்ரா”

“சரிம்மா. நான் அவனுக்கும் சேர்த்து காஃபி எடுத்துட்டு போறேன். வெயிட் பண்ணிட்டு இருப்பான்” என்றவள் தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு அவனுக்குக் காஃபி எடுத்துக் கொண்டு அவர்களது அறைக்குள் நுழைந்தவள் அவனுக்குக் காஃபி கொடுக்க இருவரும் காஃபியை குடித்து முடித்தவுடன் நேத்ரா யோசனையில் இருந்தாள்.

“என்ன பேபி யோசிக்கற?”

“என் ட்ரெஸ்ஸ்…” என அவள் தயங்கியபடியே சொல்ல

“ஏன்டா எங்கிட்டே பேச இவ்ளோ தயங்கற?” என வருத்தத்துடன் கேட்க

“அ… அது… நீ திட்டுவியோனு பயமா இருக்கு. ஆன்ட்டி என்ன அடிப்பாங்களா?” என அவள் பதட்டத்துடன் கேட்க

“பேபி…” என அவளை இறுக அணைத்தவன் “ஏன்டா இப்படி யோசிக்கிற? நான் உன்னை திட்டுவேனா? இல்ல அம்மா தான் அடிப்பாங்களா?”

“என்ன இத்தனை நாள்ல இவ்ளோ தான் புரிஞ்சுக்கிட்டியா?” என ஆதங்கத்துடன் கேட்க

“என்னன்னு தெரியல நிலன். நீ சொன்னதுல இருந்து மனசு பதட்டமாவே இருக்கு” எனச் சொல்ல அவள் நெற்றியில் முத்தமிட்டவன் அவளை இறுக அணைத்துக் கொள்ள அவளும் அவனோடு ஒன்றினாள்.

“பேபி என்னை பத்தி மட்டும் யோசி. போதும்” என்றவன் “இங்க வா” என்று அவளை அழைத்துச் சென்றவன்

“இதெல்லாம் உனக்குத் தான் பேபி” என்றவன் காட்ட அதிர்ந்து போய் நின்றாள்.

“இவ்வளவு அன்ப காட்டாத கதிர். எனக்குப் பயமா இருக்கு. சின்ன வயசில இருந்தே எனக்குப் பிடிச்சவங்கனா என் கூட இருக்க மாட்டாங்க” எனப் பயந்த குரலில் சொல்ல அவளை ஒரு நிமிடம் பார்த்தவன் அவளது இதழ்களைச் சுவைக்க அதில் தன்னை மறந்து நின்றவளிடம்,

“பேபி”

“ம்ம்”

“இனி ஏதாவது பேசினா இந்த மாதிரி டிரீட்மெண்ட் தான்” எனக் கண்ணடிக்க அவளோ அவனை விழி விரிய பார்த்தாள்.

“என்னடி பார்க்கற? இனி யாரும் இல்லன்னு சொல்லுவ?”

“தேவையில்லாம ஏதாவது உளறுவ?” என மிரட்ட அவளோ அவசரமாக இல்லை என்று தலையாட்ட தனக்குள் புன்னகைத்தபடியே அவளைப் பார்த்தான்.

“இந்த வொயிட் கலர் சுடி போடு பேபி. தேவதை மாதிரி இருப்ப” என எடுத்துக் கொடுக்க அதை வாங்கியவள் அவன் கன்னத்தில் முத்தம் கொடுத்து விட்டு ஓட அவன் புன்னகையுடன் அடுத்த வேலையைப் பார்த்தான்.

இருவரும் தயாராகிக் கீழே வர இருவரையும் வரவேற்ற கமலி சாப்பிட சொல்லி சொல்ல ஒரு வித பயத்துடனே நேத்ரா இருக்க அவளைக் கவனித்த கதிர்…

“ம்மா சட்னில உப்பு அதிகமா இருக்காம். உன் மருமக சொல்றா” எனச் சொல்ல நேத்ரா அழுது விடுபவள் போல அவனைப் பார்த்தாள்.

உடனே கமலி அதை எடுத்து சுவைக்க அது சரியாக இருக்க

“டேய் வாலு. உன் குறும்பெல்லாம் உன் பொண்டாட்டியோட வெச்சுக்கோ. அங்க பாரு அவ எப்படி பயந்து போய் இருக்கா?” எனச் சொல்ல அவளைப் பார்த்தவன் கண்ணடித்து விட்டு,

“அச்சச்சோ… ஏன்டா பேபி? நான் சும்மா ப்ளே பண்ணேன்டா” எனச் சமாதானப்படுத்தியவன் பட்டென்று முத்தம் வைக்க அவளோ திருதிருவென விழித்தாள்.

அங்கு வந்த முகிலோ, “டேய் அண்ணா காலைலயே ரொமான்ஸா? என்ஜாய்” என்றவன் நேத்ராவை பார்த்து…

“அண்ணி அவன் அப்படி தான். நீங்க பயப்படாதீங்க” என அவன் சமாதானப்படுத்தினான்.

இவர்கள் கிளம்பும் போது அமுதாவும் புறப்பட அவளைக் கதிர் தானே அவளது வீட்டில் விட்டு விடுவதாகச் சொல்ல அவர்கள் மூவரும் புறப்பட்டார்கள்.

நேத்ராவோ பின்னால் அமர அமுதாவோ அவளைத் திட்டினாள்.

“நேத்ரா இங்க எங்க வர? போய் மாப்பிள்ளை பக்கத்துல உட்காரு” எனத் திட்ட

“ம்மா அதெல்லாம் அவனுக்குத் தெரியும். நீ அமைதியா வா” எனச் சொல்ல சிறிது நேரம் பார்த்த அமுதா அட்வைஸ் செய்ய ஆரம்பிக்க அவளோ அமுதாவை எப்படிப் பிரிவது என்ற சோகத்தில் இருந்தாள்.

சிறிது நேரம் அமைதியாக இருந்தவள் “ம்மா நானே உன்னை எப்படி பிரியறதுன்னு இருக்கேன். அட்வைஸ்னு பேசி கடுப்படுக்காதம்மா” எனக் கத்த அமுதா அமைதியானாள்.

அமுதாவை திட்டிய நேத்ராவுக்கோ அழுகை வர அதை அடக்கியபடி அமைதியாய் வேடிக்கை பார்த்தபடி வந்தாள்.

சிறிது நேரத்தில் கார் ஒரு இடத்தில் நிற்க அமுதா அங்கே இறங்கி கொண்டாள்.

“ம்மா…” என்று நேத்ரா அழுகுரலில் கூப்பிட

“பேபி நாம ஈவ்னிங் வரலாம்டா” என்று நேத்ராவிடம் சொன்னவன் “போய்ட்டு வரோம் ஆன்ட்டி” என அமுதாவிடமும் சொன்னான்.

நேத்ரா கார் கிளம்பிய பின்னும் அமுதாவையே பார்த்திருக்க அவளை “பேபி” என்று மென்மையாகக் கூப்பிட்டவன் அவளைத் தனது தோளில் சாய்த்துக் கொண்டான்.

நேத்ரா அவன் தோள்களில் சாய்ந்தவள் அழ ஆரம்பிக்கக் காரை நிறுத்தியவன் அவளை இறுக அணைத்துக் கொண்டான்.

“பேபி என்னடா சின்னக் குழந்தையாட்டம் அழற?” என்றவன் தேற்ற

“அம்மா” என்றவள் அழ

“அப்படினா எங்கூட இருக்கறது உனக்குப் பிடிக்கலையா நேத்ரா?” என்று இறுகிய குரலில் கேட்க நேத்ரா திகைத்தாள்.

“ஏன் இப்படி கேட்கற நிலன்?”

“அப்புறம் ஏன் பேபி அழற? உனக்குப் பிடிக்காதது நான் எதுவும் செஞ்சிருக்கேனா? இல்ல தானே?” என்றவன் மென்மையாகக் கேட்க நேத்ரா இல்லை என்று தலையாட்ட அதில் அவள் தலையில் முட்டியவன்,

“அப்போ மேடம் தேவையில்லாம யோசிக்காம சிரிச்சிட்டே வாங்க” என்று சொல்லி அவள் கண்களில் முத்தம் வைத்தவன் அவள் இதழ்களைப் பார்க்க அதில் வெட்கப்பட்டவள்…

“ஃபிராடு. வண்டிய பார்த்து ஓட்டுடா” என்று செல்லமாகக் கடிந்தவள் அவன் கன்னத்தில் முத்தமிட்டு அவன் தலையைச் செல்லமாகக் கலைத்து விட்டு,

“என் நிலன் பேபி கூட இருக்கறது எனக்குப் பிடிக்காதா? என்னடா பேசற?” என அவள் செல்லமாய்க் கடிய

“என்னது? பேபியா?” எனக் கதிர் ஆச்சரியமாய்ப் பார்க்க…

“ஆமாடா. நான் உனக்குப் பேபினா நீயும் எனக்குப் பேபி தான்” என்றவள் அவன் தோளில் வாகாகச் சாய்ந்து கொண்டாள்.

சிறிது நேரத்தில் கார் ஒரு கோயிலின் அருகில் நின்றது.

“வா பேபி” என்றவன் கதவை திறந்து விடச் சந்தோஷமாக அவனுடன் சென்றாள்.

இருவரும் மனமார சாமி கும்பிட்டவர்கள் கோயிலின் வெளியே வந்த போது நேத்ராவுக்கு ஏதோ உறுத்த திரும்பி பார்த்தாள்.

“என்னாச்சுடா? ஏன் திரும்பி பார்க்கற?”

“யாரோ நம்மளயே பார்க்கற மாதிரி இருக்குடா” எனப் பயந்த குரலில் சொல்ல கதிரின் கண்களில் யாரும் படவில்லை.

“யாரும் இல்லடா. நீ வீணா எதுவும் யோசிக்காத” என அவளைத் தேற்றியவன் காருக்கு அழைத்துச் சென்றவன் ஏதோ தோன்ற “பேபி ஒரு நிமிஷம் வெயிட் பண்ணு. வந்தறேன்” என்றவன் போன் பேசிவிட்டு வந்து காரை எடுத்தான்.

பின் இருவரும் அங்கிருந்து சினிமாவுக்குச் சென்றனர்.

தியேட்டரில் அவளைக் கலாட்டா செய்து சிரிக்க வைத்தவன் அதன் பின்னர் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு அப்படியே பீச்சுக்கும் சென்றனர்.

அங்கே சிறிது நேரம் பொழுதை கழித்தவர்கள் அங்கிருந்து வீட்டுக்கு கிளம்பினர்.

கார் நின்றவுடன் அவர்கள் இறங்க நேத்ராவுக்குத் திரும்பவும் அமுதா நியாபகம் வந்தது.

ஏதோ யோசனையில் இருந்தவள் கதிர் ஒரு வீட்டின் முன் சென்று கதவை தட்டுவதை யோசிக்கவில்லை.

அமுதா அந்த வீட்டின் கதவை திறக்க நேத்ரா அதிர்ந்து போய் நின்றாள்.

“ம்மா நீ எப்படி மா இங்க?” எனக் கேட்க

“ஃபர்ஸ்ட் உள்ள வாடி. வாங்க தம்பி” எனக் கூப்பிட

“ஆன்ட்டி நீங்க கதிர்னே கூப்பிடுங்க. நீங்க தம்பி, மாப்பிள்ளன்னா யாரையோ கூப்பிடற மாதிரி இருக்கு” எனச் சொல்ல அமுதா சரி என்று புன்னகைத்தாள்.

உள்ளே வந்த நேத்ராவுக்குத் தான் ஒன்றும் புரியவில்லை. ஏனெனில் அந்த ஃபிளாட்டில் ஏற்கனவே கதிர் இருந்தான்.

இப்போது எப்படி அமுதா அங்கே வந்தாள் என்று யோசித்துக் கொண்டிருந்தாள். ஆனால் அது கதிர் வீடு போலவும் இல்லை.

“ம்மா நீ இங்க என்ன பண்ற?”

“பேபி அத்தை இங்கேயே வந்துட்டாங்க” என்க அவள் அதிர்ச்சியாய் அமுதாவை பார்த்தாள்.

“ம்மா…” என நேத்ரா அதிர்ச்சியாய் அமுதாவை பார்க்க

“ஆமா. கதிர் நமக்கு இந்த வீடு வாங்கிக் கொடுத்திருக்காங்க” எனச் சொல்ல…

“என்னம்மா சொல்ற?” என அவள் அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றாள்.

ஏனெனில் அந்த வீடு கோடிகளில் மதிப்பு பெறும்.

நாளுக்கு நாள் கதிரின் விஸ்வரூபம் அவளுக்குப் பயத்தைக் கொடுத்தது.

“க… கதிர் அம்மா என்ன சொல்றாங்க?” எனத் திக்கி திணறி கேட்க அவளைக் கவனித்தவன்

“அத்தை நைட் எதுவும் செய்ய வேண்டாம். ஆர்டர் பண்ணிக்கலாம்” என்று அமுதாவிடம் சொல்லி விட்டு

“வா பேபி. நம்ம வீட்டுக்குப் போலாம். அத்தை போய்ட்டு வரோம்” என்ற கதிர் நேத்ராவை அவனது வீட்டுக்கு கூட்டி சென்றான்.

அந்த வீடு ஏற்கனவே கதிர் நேத்ராவை கூட்டி வந்தது. அமுதாவின் வீட்டில் இருந்து இரண்டு வீடு தள்ளி இருந்தது.

நேத்ராவை கூட்டி வந்த கதிர் உள்ளே சென்று உடை மாற்றி வர அப்போதும் அவள் சோபாவில் யோசனையிலேயே இருந்தாள்.

திரும்பக் கதிர் வந்த போதும் அங்கேயே உட்கார்ந்திருந்த நேத்ராவை பார்த்தவன், “பேபி என்னடா இங்கயே உட்கார்ந்திட்டிருக்க?” எனக் கேட்க

“கதிர் நீங்க யாரு? எனக்குப் பயமா இருக்கு” என்று இன்னும் வேறெதோ சொல்ல வர அப்போது அவளுடைய போன் அடித்தது.

அவளோ போனை கூட எடுக்காமல் அவனையே பார்த்தபடி இருந்தாள்.

போன் விடாமல் அடிக்க “பேபி போன் அடிக்குது. யாருனு பாரு”

“அது அடிச்சிட்டு போட்டும். நீங்க பதில் சொல்லுங்க கதிர்” எனத் திரும்பப் பேச ஆரம்பிக்கப் போன் அடித்துக் கொண்டே இருக்க

“நீ என்னனு கேளுடா. அர்ஜென்டா இருக்கப் போகுது” எனச் செல்லை எடுத்துக் கொடுக்கப் பேசியவளோ அதிர்ச்சியில் உடல் இறுகி நின்றாள்.

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page