இதயம் 30.2

‘அடிப்பாவி. உங்கம்மா இருக்கறப்ப இப்படி பர்ஃபார்ம் பண்றியேடி’ எனப் புலம்பியவன் எதையும் காட்டி கொள்ளாமல் வண்டியை ஓட்டியவன் வீட்டை அடைந்ததும் கமலி கொடுத்த உணவை உண்டனர்.

நேத்ரா சாப்பிட்ட பின்பும் ஏதோ யோசனையில் இருக்க அவளைக் கவனித்தவன் அவள் அருகில் வந்து அவளை அணைக்க அவளோ திமிறினாள்.

“விடுடா. என்ன பண்ற?”

“ஏன்டி நான் செவனேன்னு வண்டி ஓட்டிட்டு வந்தா மேடம் பாட்டு கேட்டுட்டு ரொமான்ஸ் மூடுல வந்து கட்டி பிடிக்காத குறையா வர்ற. கொஞ்சமாவது கார்ல அத்தை இருக்காங்கன்னு வேணாம்”

“போடா. என் புருஷன நான் என்ன வேணா பண்ணுவேன்” என முறுக்கி கொள்ள

“இதை பார்டா” என அவளை நெருங்க

“டேய் அங்கேயே நில்லு. ஃபர்ஸ்ட் நான் கேட்கறதுக்குப் பதில் சொல்லு”

“நீ ரொம்ப அநியாயம் பண்றடி”

“ஆமா. இன்னைக்கு நீ எங்கிட்ட எஸ்கேப் ஆக முடியாது” என்றவள்

“நீ யாரு? எப்படி உனக்கு ரிஜிஸ்டர் ஆபிஸ்ல அவ்ளோ மரியாத குடுத்தாங்க? சித்தப்பா அப்படி எல்லாம் பயப்படற ஆள் இல்லயே. அவர எப்படி கன்ட்ரோல் பண்ணே? நிலம் வாங்க விடாம மிரட்டினியே? ஏன்?” என அவள் கேள்விகள் அருவியாய் கொட்ட

“பேபி கொஞ்சம் மூச்சு விடு. நான் ஒவ்வொரு கேள்விக்கா தான் பதில் சொல்ல முடியும்”

“சொல்லுடா” என அவள் கோபமாகச் சொல்ல

“ப்பா… செம கோபம் போலயே” எனச் சத்தமாகச் சலித்தவன்

“ஓகே. உனக்கு விஜே இண்டஸ்ட்ரீஸ் தெரியுமா?”

“தெரியுமே. பேப்பர்ல பார்த்திருக்கேனே. அந்த விஜயேந்திரன் கூடப் பெரிய இண்டஸ்ட்ரீஸ்லிஸ்ட். ஃபேமஸான கம்பெனியாச்சே. அதுக்கென்ன இப்போ?” என அவள் அசால்ட்டாகக் கேட்க

‘என்ன இவ எல்லாம் தெரிஞ்சும் இப்படி கேட்கறா?’ என யோசித்தவன்

“அந்த விஜயேந்திரன் என் அப்பா தான். ஏன் அவர உனக்குத் தெரியலையா? அப்புறம் எப்படி இவ்ளோ கரெக்ட்டா சொல்ற?” என அவன் கேட்க அவள் அதிர்ச்சியில் நிலைகுலைந்து போய் அமர்ந்திருந்தாள்.

அதைப் பார்த்தவன் “பேபி” என்று உலுக்கச் சுயநிலையை அடைந்தவள் அவனை விட்டு விலக அவனோ நேத்ராவை தன்னுடன் இறுக்கி கொண்டான்.

“ஏன் பேபி என்னை விட்டு போற?” எனக் கேட்க

“நீ… ச்சே நீங்க ஏன் என்னை லவ் பண்ணீங்க? உங்க பக்கத்துல நிக்கக் கூட எனக்குத் தகுதியில்லையே” என அவள் நெஞ்சை பிளக்கும் வலியுடன் சொல்ல அவனோ பதறி போய் அவளை இன்னும் இறுக்கி கொண்டவன்

“பேபி இதுல தகுதி எங்கிருந்து வந்தது? அன்பிருந்தா போதும்டா” எனக் கதிர் சமாதானப்படுத்த அவளோ விரக்தியாகச் சிரித்தாள்.

“அன்பா? ஒரு காலத்தில இந்த அன்புங்கற வேர்டே எனக்கு அலர்ஜியா இருந்தது”

“அந்தச் சந்திரன் வீட்ல எங்க மாமா அவகிட்ட அன்ப காட்டுங்கன்னு சொன்னதுக்கு எப்படியெல்லாம் டார்ச்சர் பண்ணாங்க தெரியுமா?” என்றவள் அழ அவள் முதுகை வருடி ஆறுதல் படுத்தியவன்

“பேபி தேவை இல்லாதத யோசிக்காத” என்று கனிவாகக் கூறியவன் அவளைத் தனது மடியில் அமர வைத்துக் கொண்டு தனது செல்போனை எடுத்து காட்ட அவளோ அதிர்ச்சியில் உறைந்து போய் இருந்தாள்.

ஏனெனில் அங்கே அவள் ப்ளூ கலர் பட்டுத் தாவணியில் யாரையோ பார்த்தபடி அழகாகப் புன்னகைக்க அவளோடு சேர்ந்து அவள் கண்களும் சிரித்தது.

“இ… இது” என அவள் வார்த்தை வராமல் திணற

“நீ தான் பேபி. ஆனைமலை மாசாணியம்மன் கோயில்ல எடுத்தேன்” எனக் கேட்க அவள் எப்படி என்பது போல அவனைப் பார்த்தாள்.

“அங்க பண்டிகை ரொம்ப விஷேசமா இருக்கும்ங்கறதால எப்பவும் அங்க போவேன் பேபி. அந்த டைம் ஃபிரண்ட்ஸோட போனதால காமிராவும் எடுத்துட்டு போனேன். அப்போ நான் ஒவ்வொரு போட்டோவா எடுத்துட்டு வந்தப்ப ஏதேச்சையா உன்னை போட்டோ எடுத்தேன்”

“இந்தப் போட்டோல நீ அவ்வளவு சந்தோஷமா சிரிச்சிட்டு இருந்த. உன்னோட க்யூட் லுக்லயும், சிரிப்பிலையும் நான் அங்கேயே என் மனச தொலைச்சிட்டேன் பேபி” என்று கண்களில் மின்னலுடன் சொன்னவனை விழி விரிய பார்த்தாள்.

“என்ன பேபி அப்படி பார்க்கற? உன்னை பார்த்தப்பவே பிளாட். அப்புறம் நான் என்னையறியாமையே உன்னை ஃபாலோ பண்ணேன்”

“ஐயோ?” என்றவள் அதிர்ச்சி அடைய

“ஏன் பேபி ஷாக் ஆகற?”

“தாத்தா கண்ல பட்டிருந்தா என்னை டின்னு கட்டிருப்பாங்க”

“அதான் நீ எஸ்கேப் ஆயிட்டியே. அப்புறம் ஏன் ஃபீல் பண்ற?”

“என்ன?”

“ஆமா. என் ஃபிரண்ட் கூப்பிட்டானு பேசினேன். அப்பறம் பார்த்தா எஸ்கேப் ஆகிட்ட”

“ஓ…” என்றவள் யோசித்துக் கொண்டிருக்க

“ஆமா பேபி. பட் என்ன தான் உன்னை ஃபாலோ பண்ணாலும் அப்போ அது கிரஷ்ஷோனு கூட டவுட் வந்தது. உன்னை மறக்கலாம்னு கூட முயற்சி பண்ணேன். ஆனா என்னால மறக்க முடியல. நீ அப்போ சின்னப் பொண்ணு வேற”

“திரும்ப உன்னை தேடணும்னு தோன்றப்ப கடவுளா பார்த்து டெல்லில உன்னை கை காமிச்சான்” எனச் சொல்ல அவள் விழுக்கென நிமிர்ந்தாள்.

“என்னடா அப்படி பார்க்கற? நீ என்கிட்ட தான ஹெல்ப் கேட்ட? மறந்துட்டியா?” என்று கேட்க அவள் தலை குனிந்தபடி அமர்ந்திருந்தாள்.

அவளுக்குத் தான் மறந்து விட்டோம் என்று சொல்ல சங்கடமாக இருக்க…

“இதிலென்னடா இருக்கு? நீ என்கிட்ட பேசி இருந்தா ஞாபகம் இருக்கும்” என்று தேற்றியவன்

“உன்னை அங்க திடீர்னு பார்த்தப்ப ஃபர்ஸ்ட் எனக்கு ஒண்ணும் புரியல”. கை கிட்ட சொர்க்கம் வந்த மாதிரி அவ்ளோ சந்தோஷமா இருந்தது”

“நீ ஏற்கனவே பயந்திருந்ததுல உன்னை அங்க இருந்து வெளிய அனுப்பணும்னு தான் முதல்ல தோணிச்சு. அதான் அந்த வழியா போன்னு உனக்குச் சொன்னேன்” என்றவன்

“அப்புறம் எவ்ளோ சந்தோஷமா தீக்ஷித் கிட்ட போய் விசாரிச்சேன் தெரியுமா? பட் அவன் உனக்கு மேரேஜ் ஃபிக்ஸ் ஆகிருக்குன்னு சொன்னப்போ ரொம்ப உடைஞ்சிட்டேன்” என்று கலங்கிய குரலில் சொல்ல நேத்ரா அவனை இறுக அணைத்து கொண்டாள்.

“ஆனா நீ அப்போ என்னை தேடினது நான் பாத்தேன். எனக்கு உன் முன்னாடி வர தைரியம் இல்லாம போச்சு” எனச் சொல்ல அவள் திகைத்து போய் அமர்ந்திருந்தாள்.

“டெல்லில இருந்து வந்த கொஞ்ச நாள் எனக்குப் பித்துப் பிடிச்ச மாதிரி தான் இருந்தது. என்னால உனக்கு மேரேஜ்னு ஏத்துக்கவே முடியல. அஜீ தான் என்ன கவனிச்சுக் கொஞ்சம் கொஞ்சமா மாத்தினான்” என்று பெருமூச்சுடன் சொல்ல நேத்ராவோ கண்களில் கண்ணீர் வழிய அவனை அணைத்தாள்.

“என்னால உனக்கு என்னைக்குமே கஷ்டம் தான” என்றவள் அழ

“ஹேய் பேபி கூல்டா. நடந்ததுக்கு நீயோ நானோ என்ன பண்ண முடியும்?” என அவளைத் தேற்றியவன் அவளது நெற்றியில் முத்தமிட்டு அவளைத் தன்னோடு இறுக அணைத்து அந்த நிமிடத்தை அனுபவித்தான்.

“அப்போ தான் நம்ம மூன்லைட் சாப்ட்வேர்ஸ் ஆரம்பிச்சு கொஞ்ச நாள் ஆச்சு. உன் நினைவுகள்ல இருந்து வெளிய வர போராடி வெறியா வொர்க் பண்ணி கம்பெனி முன்னாடி வந்திடுச்சு. ஆனாலும் சந்தோஷமோ, துக்கமோ எப்பவும் உன் முகம் தான் ஞாபகம் வரும்” என்றவன் புன் சிரிப்புடன் சொல்ல நேத்ரா அவனது கன்னத்தில் முத்தமிட்டாள்.

“அப்பயும் ஒரு சில டைம்ல உன் ஞாபகம் ரொம்ப வரும். அப்போல்லாம் உன் போட்டோவ பார்த்து பேசிக்குவேன்” என்று ஏக்கமாகச் சொல்ல அவள் என்ன சொல்வது என்றறியாமல் திணறினாள்.

“இப்படி இருக்கறப்ப தான் நம்ம கம்பெனிக்கு நீ அனுப்பின ரெஸ்யூம் வந்தது. உன் டீடைல்ஸ் பார்த்துட்டு எனக்குத் தலை கால் புரியல. உன்னை இன்டர்வியூக்கு வர வெச்சதே நான் தான்”

“மேகி அவ ஃபிரண்டுனு சொல்லி இருந்தா. ஆனா அது நீன்னு நினைக்கல பேபி” என்றவன்

“நீ சென்னை வந்திட்டன்னு கேள்விப்பட்டவுடனே எனக்கு உன்னை பார்க்க ஏகப்பட்ட க்யூரியாஸிட்டி. அதான் அம்மாவ சாக்கா வெச்சு சாமியாரா வந்தேன்” என்றவன் சிரிக்க அவள் வாயை பிளந்து கேட்டுக் கொண்டிருந்தாள்.

“ஆமா பேபி. உன்னை பார்க்கணும்னு தான் வந்தேன். ஆனா மேடம் செம கடுப்புல இருந்தீங்க” என்று புன்னகையுடன் சொல்ல

“அது அப்படி இல்ல. சின்ன வயசுல இருந்தே அப்பானால சாமி மேல பக்தியே கிடையாது. அப்புறம் ஜென்ட்ஸ்னா நம்ப முடியாததால கோபமா பேசிட்டேன்” எனச் சொல்ல ஏதோ யோசித்தவள்

“ஆமா. நீங்க எப்படி என்னை இன்டர்வியூக்கு வர வைக்க முடியும்?” என அதி முக்கியமான கேள்வி கேட்க

“ஏன்னா மூன்லைட் சாஃப்ட்வேர்ஸ் என்னோட கம்பெனி தான். நான் தான் சிஇஓ” எனச் சொல்ல நேத்ரா உச்ச பட்ச அதிர்ச்சியில் எழுந்து நின்றாள்.

ஏனெனில் மூன்லைட் சாப்ட்வேர் பல கிளைகளைக் கொண்டது. வெளிநாடுகளில் அவனது கம்பெனி குறிப்பிட்டு சொல்லும்படி பெயர் பெற்றிருந்தது.

“ஏ…ஏன் எ…எங்கிட்ட வெறும் டிஎல்னு மட்டும் சொன்னீங்க?” என்றவள் திக்கி திணறி கேட்க

“நேத்ரா ஃபர்ஸ்ட் எப்போவும் போலப் பேசு. நானும் அப்போ இருந்து பாக்குறேன். நீங்க, வாங்க, போங்கன்னு யாரையோ கூப்பிடற மாதிரி இருக்கு” என்று அதுதான் முக்கியம் போல அவன் சொல்ல அவளோ கதிரின் சட்டையை இறுக பற்றி அவனை உலுக்கினாள்.

“ஏன்டா இப்படி பண்ண? ஏன்?” என்றவள் ஆவேசமாகக் கேட்க

“ஏன்னா லவ்” என்று அவன் சாதாரணமாகச் சொல்ல அவள் பேச்சற்று போய் நின்றாள்.

“நான் பத்து வருஷமா உன்னை லவ் பண்றேன் பேபி. கிட்டத்தட்ட இரண்டு முறையும் என் கண்ணுல பட்டு நீ காணாம போயிட்ட. அதுக்குனே உன்னை அப்படியே விட்டுடுவேனா?”

“எ… என்ன ப… பத்து வ… வருஷமா?” என்றவள் அதிர்ச்சியில் அவனது சட்டையை இறுக பற்ற

“நான் அந்த அளவுக்குத் தகுதியானாவளா? ஏன் இவ்ளோ அன்ப பொழியற? எ… எனக்குப் பயமா இருக்கு” என்றவள் சொல்ல

“கூல்டா. ஆனா அவ்ளோ அன்பு காமிச்சும் நீ என்னை அனாதையா விட்டுட்டுப் போகத் தானே டிரை பண்ண?” என்றவன் நடுங்கிய குரலில் சொல்ல அவள் அவனை இறுக்கமாக அணைக்க அப்போதும் அவன் உடல் நடுங்கி கொண்டிருந்தது.

“அதுவும் ஹாஸ்பிடல்ல நீ எப்படி அப்படி பண்ணலாம்? அதனால தான் நான் உனக்குச் சொல்லாம நம்ம மேரேஜ் நடத்தினதே” என அவன் இன்னும் இறுக்கமாய்ச் சொல்ல அவனது காயத்தைத் தாங்க முடியாமல் தனது இதழால் அவனது இதழை மூட மூச்சுக் காற்றுக்குத் திணறுபவன் ஆக்ஸிஜன் கிடைத்தது போல் உணர்ந்தான்.

எப்பொழுது அந்தச் செயல் அவனதாக மாறியதோ எங்கோ கேட்ட ஹார்ன் சத்தத்தில் சட்டென்று நேத்ரா விலக

“ஹேய்… எங்கடி போற? மேடம் இப்போ தான் ஃபுல் பார்ம்க்கு வந்திருக்கீங்க” என்றவளை வார

“போடா” என்று அவனது தோளிலியே சாய்ந்தவள் திடீரென்று அவனையே பார்த்தாள்.

அவளைக் கவனித்தவன் “பேபி என்ன நீ பாட்டுக்குச் சைட் அடிக்கற?”

“நீ பத்து வருஷமா லவ் பண்ற அளவுக்கு எனக்குத் தகுதி இருக்கா கதிர்? நீ எங்க? நான் எங்க? எவ்ளோ பெரிய ஆள் நீ. எனக்காக எவ்ளோ சாதாரணமா இருந்திருக்கே. அதுவும் நான் உனக்கு எப்போவுமே மரியாதையே கொடுத்ததில்ல”

“ஒவ்வொரு விஷயத்தையும் நீ எவ்ளோ பார்த்து பார்த்து செஞ்ச. நீ என்னைக்கும் என்கூடவே இருப்பியா கதிர்” என நேத்ரா அழுது கொண்டே கேட்க

“பைத்தியம்” என்றவன் திட்ட நேத்ரா அதிர்ந்து போய் அவனைப் பார்த்தாள்.

“லூசு மாதிரி உளறாம இருக்க மாட்டியாடி. உன்னை பாதில விட்டுட்டு போகவா மேரேஜ் பண்ணேன். நீ என்கூட இருக்கற ஒவ்வொரு நிமிஷமும் எனக்குப் பொக்கிஷம்டி” என்றவன் அவளைப் பார்க்க அவளது அதிர்ந்த முகத்தைப் பார்த்தவன் அவளை இழுத்தணைத்து கொண்டவன் அவள் தலைமுடியை ஆறுதலாக வருடி விட்டான்.

“பேபி எதுவும் யோசிச்சுக் குழப்பிக்கக் கூடாது. ஓகேவா?” என்று கனிவாகக் கூறியவன் அவளது நெற்றியில் முத்தமிட அவள் சரி என்று தலையாட்டினாள்.

ஏதோ யோசித்தாள் “ஏன் டிஎல்னு பொய் சொன்ன? அதை ஃபர்ஸ்ட் சொல்லு”

“நான் பத்து வருஷமா உனக்காக வெயிட் பண்ணிட்டிருக்கேன் பேபி. நீ பக்கத்துல இருந்தும் நான் எப்படி உன் கூட இல்லாம இருப்பேன்”

“ஆனா டிஎல்லா நடிச்சேன். நீயும் அதை நம்பிட்ட” என்றவன் சிரிக்க…

“ஃபிராடு” என அவனை அடித்தவள் திரும்பவும் யோசனையாய் அவனைப் பார்த்தாள்.

“என்னடா?”

“நான் உன் லவ் பண்றேனு சொல்லவே இல்லையே. எப்படி கண்டுபிடிச்ச?”

“உன் வாய் தான் லவ் பண்ணலன்னு சொல்லுச்சு. ஆனா உன் கண்ணு காட்டி குடுத்துட்டே இருந்தது. நீ என்ன ஒவ்வொரு டைம் தேடினப்பவும்” எனச் சொல்ல அவள் பிரமிப்பாய் அவனைப் பார்த்தாள்.

“ஆமாடா. நீ என்ன தான் டிஸ்டன்ஸ் காட்டிக்கிட்டாலும் ரொம்பப் பயந்தப்ப என்ன தான் தேடின. நான் அதுல இருந்து உன்னை வெளிய கொண்டு வரணும்னு தான் உனக்குக் கன்டிஷன் போட்டேன். என் கூட வரணும்னு”

“அன்னைக்கு அஜூ வீட்டுக்கு போய்ட்டு வந்தப்ப எவ்ளோ டிஸ்டர்ப்டா இருந்த? ஆனா என் மடில வந்து படுத்தவுடனே தூங்கிட்ட. அன்னைக்குத் தான் என் பேபி எனக்கு ஃபர்ஸ்ட் கிஸ் கொடுத்தாளே” என அவன் சந்தோஷ சிரிப்புடன் சொல்ல அவளோ அழகாய் வெட்கப்பட்டாள்.

“அ… அது என்னனு தெரியல. தோணுச்சுக் கொடுத்துட்டேன்” என அவள் திக்கி திணறி சொல்ல

“நான் அப்பவே உன் மனசுக்குள்ள வந்துட்டேன் பேபி. அதுக்கப்புறம் தான் நீ என்கிட்ட ரொம்பக் குளோஸ் ஆன” என்றவன் ஏதோ யோசித்து

“எதுக்கு நீ சூசைட் பண்ண போன? உன் முகமே சரியில்லன்னு ஃபாலோ பண்ணிட்டு வந்தா இப்படி தான் பண்ணுவியா?” என்றவன் பல்லை கடித்தபடி கேட்க

“அதுக்கு நீ பொண்ணா பொறந்தா தான் தெரியும். போடா” என்றவள் சொல்ல அவளை முறைத்தவன்

“எல்லாம் நேரம்டி. அன்னைக்கு நான் பட்ட பாடு எனக்குத் தான தெரியும்” என அவன் நடுங்கிய குரலில் கூற அவனை இறுக அணைத்தவள்

“சாரிடா” என்றவள் சொல்ல

“போடி” என அவன் முறுக்கி கொண்டான்.

“ஆனா… ஊனா சாகப் போறது? உனக்காகவே ஒருத்தன் இவ்ளோ நாளா தவமிருக்கேனே… அதெல்லாம் யோசிக்க மாட்டியா? செட் ஆகல. வந்திட்ட. ஓகே. அதுக்காகச் சூசைட் பண்ண போவியா?” என இத்தனை நாட்கள் தனது மனத்திலிருந்த ஆதங்கத்தையெல்லாம் கொட்டினான்.

“கதிர் ப்ளீஸ் கதிர். நான் அப்போ ரொம்ப வெக்ஸ் ஆகி இருந்தேன். அதான் அப்படி பண்ணிட்டேன். ப்ளீஸ்டா” என்றவள் கெஞ்ச

“இனிமே நெகட்டிவா யோசிக்கிற, பண்றன்னு தெரிஞ்சது நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது” என அப்போதும் அவன் மிரட்ட

“நீ தான் இருக்க இல்லடா. அதனால இனி நான் எந்த நெகட்டிவும் யோசிக்க மாட்டேன்” என்றவள் சொல்ல அந்தப் பதிலில் கதிர் கொஞ்சம் அமைதியானான்.

“உண்மையிலேயே நீ சூசைட் டிரை பண்ணத பார்த்து நான் பயந்து போய் ஆன்ட்டி கிட்ட என்ன பத்தின டீடெய்ல்ஸ் எல்லாம் சொல்லி கன்வின்ஸ் பண்ணதுக்கப்புறம் தான் ஒத்துகிட்டாங்க. ஆனா அவங்கள ஒத்து வைக்கறதுக்குள்ள எனக்கு உயிரே போயிடுச்சு” என்றவன் சொன்னதும் அவள் கடுப்பானாள்.

“இந்த அம்மா என்கிட்ட ஒரு வார்த்த கூடச் சொல்லல”

“நான் தான் பேபி சொல்ல வேண்டாம்னு சொன்னேன். நீயா புரிஞ்சிக்கணும்னு. ஆனா நீ புரிஞ்சாலும் புரியாத மாதிரி இருந்த”

“இல்லயே”

“நம்ம கோர்ட்டுக்கு போனப்ப நடந்தது ஞாபகம் இருக்கா? நான் தான் உன்னோட ஹஸ்பெண்டுனு சந்திரன் பேமிலி கிட்ட சொன்ன தானே. அதை நீ உணர்ந்து தான் சொன்ன. ஆனா வழக்கம் போல எதையாவது போட்டு குழப்பிட்டுகிட்டு அப்போவே பிரண்டுனு சொன்ன. உன்னை நினைச்சா சம்டைம்ஸ் என்ன சொல்றதுனு தெரியல” என்றவன்

“நான் உன்கிட்ட ஹாஸ்பிடல்ல லவ், மேரேஜ் பத்தி கேட்டேன்ல. அப்போ நீ மேரேஜ் பத்தி பெருசா அலட்டிக்கலன்னாலும் லவ்ன உடனே உன்னையறியாமலே என்னை பார்த்த. அதைச் சம்மதமா எடுத்துட்டு தான் நான் மேரேஜ் வேலையே ஆரம்பிச்சேன்”

“நான் நினைச்சா அடுத்த நாளே மேரேஜ்க்கு அரேன்ஜ் பண்ணிருக்க முடியும். ஆனா உனக்கு என்னை உணர்த்த தான் ஒரு வாரமா உன் முன்னாடி வரல” என்று சொல்ல

‘எப்படி இவன் ஒவ்வொன்னும் மனசுக்குள்ள பூந்து பார்த்த மாதிரி சொல்றான்’ என ஆச்சரியமாகப் பார்க்க

“அன்னைக்கு நீ ஹாஸ்பிடல்ல இருந்தப்போவே சந்திரன் ஃபேமிலிய அரெஸ்ட் பண்ணியாச்சு” என்றவள் சொல்ல விழி விரித்தாள்.

“ஆமா. ஆனா அன்னைக்கு அவன் உன்னை மிரட்டினது தெரியாது. நீ அதை நினைச்சி தான் பயப்படறேனு புரியல”” எனச் சொல்ல

“அவன் உன்னை நான் மேரேஜ் பண்ணா, உன்னை கொன்னுடுவேனு சொன்னான். ஆனா நான் உன்னை தான் மேரேஜ் பண்ணிப்பேனு சொன்னேன். அதான் அன்னைக்குக் கொலை பண்ற அளவுக்குப் போனான். அப்போ தான் நீங்க வந்தீங்க” என அன்றைய நினைவில் அவள் நடுக்கத்துடன் சொல்ல கதிர் அவளை இறுக அணைத்தான்.

“பேபி அவன் அப்படியா மிரட்டினான்?” எனக் கதிர் அதிர்ச்சியோடு கேட்க

“ஆமா. ஹாஸ்பிடல்ல கண் முழிச்சப்ப நீ அழுத மாதிரி இருந்தது. என்ன லவ் பண்ணினதுக்காக நீ உன் உயிர விடணுமானு யோசிச்சிட்டு நீ இல்லாத வாழ்க்கை எனக்கு வேணாம்னு தான் நான் சூசைட் பண்ண டிரை பண்ணேன்” என்றவள் அழ கதிர் நேத்ராவை இறுக அணைத்தவன் அப்படியே சில நொடிகள் நின்றான்.

“பேபி எனக்காக நீ உயிர விடற அளவுக்குப் போவியா?” என்றவன் கண்களில் கரகரவென்று கண்ணீர் வழிந்தது.

இதனைச் சிறிதும் எதிர்பார்க்காத நேத்ரா அதிர்ந்து போனாள்.

“பேபி” என்றவள் அணைக்க அவனோ அவளது மடியை தேட தனது மடியில் படுக்க வைத்தவள் அவனை ஆறுதலாக வருடி கொடுத்தாள்.

“பேபி என்னாச்சு?” என்றவள் பதறி போய்க் கேட்க

“ஒண்ணும் இல்லடா. இத்தன நாள்ல உனக்காக நான் எவ்ளோ ஏங்கிருக்கேன் தெரியுமா? ஆனா நீ என்மேல வச்ச காதலுக்காக உயிர விடற அளவுக்குப் போவியா பேபி? அவ்ளோ லவ்வாடா என்மேல?” என்றவன் கரகரப்பான குரலில் கேட்க அவனை ஆறுதலாக அணைத்தாள்.

“நீ லவ் பண்றத விடக் கம்மி தான் கதிர்”

“மக்கு. லவ்ல என்ன அதிகம், கம்மினு” என்று கடிந்தவன்,

“ஆனா உன் லவ் விட என்னுது கம்மி தான் பேபி. நான் கூட இப்படி பண்ணுவேனானு தெரியல” என அவனும் அதையே சொல்ல

“ரொம்ப ஃபீல் பண்ணாத கதிர். என்னை பொறுத்த வரையும் நான் உன்கிட்ட என்னை எப்போவோ கொடுத்துட்டேன். இனி நீ தான் எனக்கு எல்லாமே. அதனால உங்க ஒய்ஃப்ப கவனிங்க சார்” என்றவள் சொல்ல அவளது வார்த்தைகளில் நெகிழ்ந்தவன் தன்னை மறந்து அவளை முத்தமிட்டான்.

பின் அவனது தலைமுடியை கலைத்து விட்டபடியே விளையாடியவள்,

“நான் உன்கிட்ட இன்னொன்னு சொல்லணும்”

“சில டைம் உன்னை எங்கேயோ பார்த்த மாதிரி ஃபீல் ஆகும். ஆனா யோசிச்சா ஞாபகம் வராது” என்றவள்

“ஆனா கல்யாணத்துக்கப்புறம் கூட ஒரு சில டைம் உன்னை பத்தி யோசிச்சிருக்கேன். யார், என்னன்னு தெரியாம கூட உதவி பண்ணீங்க. ஆனா அங்க யாரு ஹெல்ப் இல்லாம அனாதையா நின்ன சமயங்கள்ல உங்க ஞாபகம் வரும். அதுலருந்து வலுக்கட்டாயமாக வெளில வருவேன்” என்றவள் சொல்ல ஆச்சரியமாய் அவளைப் பார்த்தவன் அவள் முகமெங்கும் சந்தோஷமாக முத்தமிட்டான்.

“வாவ்… அப்போ பேபிக்கு என் ஞாபகம் வந்திருக்கு” என்றவன் சந்தோஷ கூச்சலிட

“ஆனா உன்னை பார்த்தப்ப தெரியலையே” என்று அவள் குற்ற உணர்ச்சியில் உள்ளே போன குரலில் சொல்ல

“பேபி உனக்கு அந்த டென்ஷன்ல, பதட்டத்துல என்ன பத்தி ஞாபகம் வந்ததே எனக்குச் சந்தோஷம் தான்” என்றவன் அவளை இறுக அணைத்துக் கொண்டான்.

இருவரும் தன்னை மறந்து இருந்தவர்கள் கதிரின் செல் சத்தத்தில் பிரிந்தனர்.

பேசியவன் முகம் இறுக்கமாக மாற “ஓகே. இனி நான் ஃபாலோ பண்ணிக்கறேன்” என்றவன் சொல்ல நேத்ரா கேள்வியாய் அவனைப் பார்த்தாள்.

“பூபாலனை விபசாரக் கேஸ்ல அரெஸ்ட் பண்ணியாச்சு. இன்னும் என்னென்ன கேஸ் போட முடியுமோ அத்தனை கேசையும் போட சொல்லியாச்சு” எனச் சொல்ல நேத்ரா புரியாமல் அவனைப் பார்த்தாள்.

“பேபி இன்னைக்கு ரிஜிஸ்டர் ஆபிஸ்ல இருந்து வந்ததுக்கப்புறம் அம்மா எனக்குப் போன் பண்ணாங்க. ஆனா எந்த ரீஸனும் சொல்லாம உடனே கிளம்பி வாங்கனுட்டாங்க”

“எனக்கு ஃபர்ஸ்ட் ஒன்னும் புரியல”. முகிலுக்குப் போன் பண்ணா அவன் பூபாலன் வந்து உன் ஃபர்ஸ்ட் மேரேஜ் பத்தி சொல்லி பிரச்சனை பண்ணான்னு சொன்னான்”

“அப்பவே அவனை தூக்கணும்னு முடிவு பண்ணிட்டேன். ஆனா அர்ஜீன் மூலமா எங்கிருக்கானு நாங்க நேத்தே டிரேஸ் பண்ணிட்டோம்” என்றவனைக் கேள்வியாய் பார்த்தாள்.

“ஆமாடா. நேத்தே நீ யாரோ ஃபாலோ பண்ற மாதிரி இருக்குனு சொல்லல. அப்போ நான் கண்டுக்கலேனாலும் உறுத்தலாவே இருக்க அஜீ மூலமா சொல்லி கண்டுபிடிச்சிட்டேன். அதனால நேத்தே அவனுக்குப் பிளான் பண்ணியாச்சு. ஆள் சிக்கியது தான் லேட்” என்றவன் சொல்ல நேத்ரா அவன் முகமெங்கும் முத்தமிட அவனோ அவளை மென்மையாக அணைத்தான்.

“ஆனா நீ இன்னிக்கு அவனை அறைஞ்ச பாரு. அதான் ஹைலைட்டே” என்றவன் சொல்ல

“ஆமா. நீ இருக்கைல. நான் ஏன் பயப்படணும்?” என அவள் கெத்தாகக் கேட்க அவனோ அவள் நெற்றியில் முத்தமிட்டான்.

ஆனால் நன்றாகப் பேசியவள் முகம் வாட

“ஏன்டா? என்னாச்சு?” என்றவன் பதறி போய்க் கேட்க

“அத்தையும், மாமாவும் என் மேல கோபமா இருப்பாங்களா?”

“அட லூசு. அவனை பத்தி டவுட் வந்ததினால தான் ஹவுஸ் அரெஸ்ட் மாதிரி பண்ணி வெச்சாங்க. நான் சொன்னதுக்கப்புறம் புரிஞ்சிக்கிட்டாங்க. அதனால இப்போ போய்ட்டு நாளைக்கு வாங்கனு சொன்னாங்க”

“ஒண்ணும் கவலைப்படாத” எனச் சொல்ல

“நீ இருக்கல்ல பேபி. அப்புறம் என்ன?” என்றவள் அவன் தலைமுடியை கலைத்து விட

“பார்றா” என்றவன் அவளைக் கவனித்து

“திருப்பி என்ன யோசிக்கறடா?”

“இன்னைக்கு ரிஜிஸ்டர் ஆஃபிஸ்ல என்ன பண்ண? என் அண்ணாவ உனக்கெப்படி தெரியும்?” எனப் புருவம் சுருக்கி யோசிக்க

“மக்கு டெல்லில உன் அண்ணா நிச்சயத்துக்குத் தானே வந்தேன். ஆனா எனக்கு ஃபர்ஸ்ட் ஸ்ருதிய தான் தெரியும்” என்றவன்

“பேபி நீ ஏற்கனவே டிவோர்ஸ் பேப்பர் வந்தப்ப உன் சித்தப்பாவ பத்தி சொன்னே தானே. நான் அப்போ இருந்தே அவங்கள நோட் பண்ணிட்டு தான் இருந்தேன். அவங்க எந்த இடம் வாங்கினாலும் அவங்களுக்குப் பொலிட்டிக்கல் சைட் சொல்லி பிரஸர் கொடுத்துட்டே வந்தேன். என்ன இத்தன நாளா யார்னு தெரியாம இருந்தது. ஆனா இன்னைக்குத் தெரிஞ்சுகிட்டாங்க. அவ்ளோ தான்” என்றவன்

“பேபி நம்ம நெக்ஸ்ட் டூ டேய்ஸ்ல ஹனிமூன் போறோம். ஹனிமூன் முடிச்சிட்டு வந்து ரிசப்ஷன் கிராண்டா வெச்சுக்கலாம். ஓகேவா?” எனக் கேட்க அவளோ அவனைக் காதலுடன் பார்த்தாள்.

“எனக்கு இந்தப் பார்வை எல்லாம் வேணாம். உனக்கு விளக்கம் சொல்லியே நான் டயர்ட் ஆகிட்டேன். ஐஸ்கிரீம் கொடு” எனக் கேட்க

“ஐஸ்கிரீமா? நான் இந்நேரத்துக்கு எங்க போறது?”

“உன் லிப்ஸ் தான்” என்றவன் சொல்ல அவள் ஓட ஆரம்பித்தாள்.

“அல்ரெடி உன் கையில தான் நான் இருந்தேன். வேணும்னா வந்து என்ன பிடி” என்றவள் ஓட

“பேபி நில்லு” என்றவன் பிடிக்க வர

“நோ”

“பேபி கரெக்டா வந்திடு. இல்லேன்னா பனிஷ்மென்ட்னு எக்ஸ்ட்ரா வசூல் பண்ணிடுவேன்” என்றவன் மிரட்ட அதில் ஜெர்க் ஆகி நேத்ரா நிற்க அந்த இடைவெளியை பயன்படுத்தி அவள் இடையைப் பற்றித் தூக்க… கதிரின் செயலில் வெட்கப்பட்டவள் அவனது மார்பிலேயே முகத்தைப் புதைக்கக் கதிர் எல்லை இல்லா காதலுடன் அவளை ஆட்கொண்டான்.

 

 

 

 

முற்றும்

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page