ஒளி 16.1

 

 

அடுத்த நாள் காலையில் தூக்க மாத்திரையின் விளைவால் வெகு நேரம் கழித்து ஓவியன் கண் விழித்தான். 

“என்னடா முடிச்சிட்டு இருக்க? எழுந்திரிச்சு வாடா” என்று கண்ணன் அதட்ட எழுந்தவன் போய் தன் வேலையை முடித்துக் கொண்டு வந்தான். 

 

ஓவியன் வெளியே வந்த போது நித்திலாவின் மொத்த குடும்பமும் இருக்க அவனுக்கு அதிர்ச்சியில் பேச வார்த்தை வரவில்லை. 

 

அவன் வெளியே வந்ததும் நித்திலா அவனுக்கு துடைக்க துண்டை நீட்டினாள்‌. 

 

“நி… நித்திலா” என்றவனுக்கு வார்த்தை வராமல் தடுமாறியது. 

 

“என்ன யோசன ஓவியன்? ஏன் இவ்ளோ ஷாக் ஆகறீங்க?” என்று அதட்டியவள் அவனை உட்கார சொன்னாள். 

 

அவளின் சொல்லுக்கு கட்டுப்பட்டவன் அங்கு இருந்த அனைவரையும் பார்த்து  பொதுவாக “வாங்க” என வரவேற்றான். 

 

அதற்கு மேல் அவனுக்கு என்ன பேசுவது என்று புரியவில்லை. 

 

அவன் அமைதியாக சோபாவின் ஒரு மூலையில் போய் உட்கார்ந்தான். 

 

சீதா சமையலறையில் இருந்து வந்தவர் “காபி குடிங்க தம்பி” என்று அவனிடம் நீட்ட தீச்சுட்டாற் போல அதிர்ந்து நின்றான். 

 

அவனுக்கு அவரைப் பார்த்ததும் நேற்றைய நினைவுகள் வலம் வர ஆரம்பிக்க அதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறினான். 

 

பதட்டத்தில் அவன் முகம் எங்கும் வியர்த்து வடிய கண்கள் சொருகும் நிலைக்குச் சென்றவனை கண்ணன் வேகமாக வந்து தாங்கி பிடித்தான். 

 

அவனை ஆசுவாசப்படுத்தி அங்கேயே சிறிது நேரம் படுக்க வைத்தார்கள். எல்லோரும் அவனது நிலையை பார்த்து அதிர்ச்சி ஆனார்கள். 

 

‘எவ்வளவு திடமாக இருந்தவன் ஒரே நாளில் இப்படி உருக்குலைந்து விட்டானே’ என்று‌ எண்ணிய நித்திலா கண்ணீர் விட்டு கதறி அழுதாள். 

 

சீதாவை பார்த்ததும் தடுமாறி மயங்கியவனை பார்த்தவருக்கு கண்களில் அருவியாய் கண்ணீர் கொட்டியது. 

 

“மாமா என்னாச்சு ஓவியனுக்கு? ஏன் என்னை பார்த்தவுடனே மயங்கி விழுந்தான்?” என்று கேட்டார். 

 

“என்னை கேட்டா எனக்கென்ன தெரியும்? அவன் எழுந்திரிப்பான். நீயே கேட்டுக்கோ” என்றவர் வாஞ்சையுடன் அவனை வருடி கொடுக்க “தாத்தா” என்றவன் மயக்கத்தில் முணுமுணுத்தான். 

 

மயக்கத்தில் கூட தன்னை உணரும் அவனை நினைத்து கண் கலங்கியது அவருக்கு. 

 

அவனது நெற்றியில் முத்தமிட்டவர் “நான் இனி எல்லாம் கவனிச்சுக்கறேன் பேராண்டி” என அவனது நெற்றியில் முத்தமிட்டார். 

 

நேற்று ஓவியனை தூங்க வைத்த பிறகு தனது தாத்தாவிற்கு கண்ணன் போன் செய்தான். நடந்த அனைத்தையும் அவன் சொல்ல சொல்ல அவருக்கு பதறியது. 

 

இன்னும் இந்த வயதில் அவன் எவ்வளவு தான் அனுபவிப்பான் என? 

 

நடந்த உண்மையை அனைவருக்கும் சொல்லியவர் கையோடு அவர்களை கூட்டிக் கொண்டு வந்து விட்டார். 

 

இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா என்று அவர்கள் அதிர்ச்சியின் உச்சத்திற்குச் சென்றனர். 

 

இங்கு நடந்தது எதுவும் தர்மராஜிற்கு தெரியாது. அவர் செய்த செயல்களில் அவர் மீது மிகுந்த கோபமாய் இருந்தவர்கள் அவரிடம் பேசுவதில்லை. 

 

சிறிது நேரம் கழித்து கண் விழித்த ஓவியன் அப்போதும் அமைதியாகவே இருந்தான். அடுத்து யாரிடமும் உரிமையாக பேசி அவன் தன்னை காயப்படுத்திக் கொள்ள தயாரில்லை. அவனது உடலிலும், மனதிலும் அதற்கான தெம்பில்லை. தன்னை மிகவும் பலவீனமாக உணர்ந்தான். 

 

நித்திலாவின் குடும்பத்தில் ஒருவருடனும் பேசுவதற்கு அவன் முயற்சிக்கவில்லை. யாரும் ஏதேனும் தன்னை காயப்படுத்தி விடுவார்களோ என்ற பயமே அவனை அமைதியாய் இருக்க வைத்தது. 

 

நினைவு தெரிந்த நாளில் இருந்து குடும்பமாய் பழகியதே அவன் நித்திலாவின் குடும்பத்தில் தான். இவ்வளவு பேரோடு வாழ்நாளில் அவன் இருந்தது இல்லை. அப்படிப்பட்ட அன்பையும் அவன்‌ அனுபவித்ததும் இல்லை. 

 

அவர்களின் மீதுள்ள அதிகப்படியான அன்பில் தான்‌ நேற்று‌ உரிமையாய் கேட்டதை அவன் இப்போது உணர்ந்தான். 

 

உண்மையில் அவனுக்கு நித்திலாவின் வீட்டிற்குள் போகும் எண்ணம் இல்லை. நித்திலாவுடன் இருக்கும் நேரத்தை நீட்டிக்க அவனுக்கு ஆசை இருந்தது. அந்த ஆசை கொடுத்த உந்துதலில் அவன் நித்திலாவின்‌ வீட்டிற்கு அவர்களோடு‌ சென்றான். 

 

அவர்கள் தன்‌ மீது வைத்த அன்பில், தன்னை கொண்டாடியதில் அவன்‌ தன்னை மறந்து நித்திலாவை கேட்டு விட்டான். 

 

அவனுக்கு சீதாவை பார்க்கும் போதெல்லாம் அவரது அன்பில் அன்னையை உணர்வான். அவரோடு பேசுவது எப்போதும் அவனது மனதிற்கு இதமாக இருக்கும்.  

 

அந்த ஆழ்ந்து அனுபவித்த அன்பில் தான் அதிகப்படியான உரிமையை எடுத்தது புரிந்தது. 

 

உடனே அவரை தேடிச் சென்றவன் “சாரி ஆன்ட்டி. நான் நேத்து உங்க கிட்ட கேட்டது தப்பு தான். நான் உங்க ஃபேமிலி கூட பழகின அளவுக்கு யார்கிட்டேயும் உரிமை எடுத்து பழகினதில்ல. நேத்து நடந்தது நானே எதிர்பார்க்கல. உங்கள பார்த்தவுடனே உங்களோட அன்புல உங்க எல்லாரோடையும் இருக்கணும்னு அதிகப்படியான பேராசையில கேட்டுட்டேன். என்னை மன்னிச்சிடுங்க ஆன்ட்டி” என்று கையெடுத்து கும்பிட்டான். 

 

“ஐயோ… ஏம்பா இப்படியெல்லாம் பேசற?”‌‌ என்று பதறினார். 

 

“நேத்து நீங்க கேட்டது கரெக்ட் தான் ஆன்ட்டி. என்னை மாதிரி‌ அப்பா பேர் தெரியாத தேர்ட்‌ ரேட்க்கு யார் பொண்ணு கொடுப்பாங்க. நீங்க உங்க பொண்ணுக்கு…” என்றவனுக்கு அதற்கு மேல் பேச வார்த்தைகள் வரவில்லை. 

 

தான் சொல்ல வந்ததை சொல்ல முடியாமல் அமைதியாய்‌ நின்றான். உள்ளுக்குள் அவன் மனம் பந்தயக் குதிரையாய் ஓடிக் கொண்டிருந்தது. 

 

அவன் சீதாவிடம் பேசும் போது அனைவரும் அங்கிருந்தார்கள். அனைவரின் முகத்தையும் பார்க்காமல் தவிர்த்தவன் “எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்க” என்று சொல்லிவிட்டு நகர‌ முயன்ற போது தாத்தா அவனை கூப்பிட்டார்.  

 

“ஓவியா… இங்க வா” 

 

“தாத்தா” என்றவன் தயங்கி நின்றான்.  

 

“வாடா” என்றவர் அவனை தனது மடியில் சாய்த்துக் கொண்டார்.  

 

“என்னனாலும் தாத்தாகிட்ட சொல்லணும்னு சொல்லியிருக்கேன்ல” என்று கேட்டார். 

 

அவன் ஆமாம் என்று தலையாட்டினான். 

 

“அப்புறம் ஏன் தாத்தாகிட்ட சொல்லாம‌‌ மறைக்கற?” என்றவர் கேட்க அவனுக்கு கண்கள் கலங்கும் போல் இருந்தது. 

 

“அது… எனக்கு அவங்கள‌ பத்தி சொல்ல பிடிக்கல தாத்தா. எனக்கு அவங்க‌ அடையாளமே வேணாம்னு நினைச்சேன்” 

 

“ஏம்ப்பா” என்று அவர் கேட்க அவனுக்கு நேற்றைய நினைவில் முகம்‌ கசங்கியது. 

 

அதை கவனித்தவர் அதனை தனது துண்டால் துடைத்து விட்டார். 

 

அவரது செயலில் அவனுக்கு தான்‌ துடைக்க துடைக்க கண்ணீர் பெருகியது. 

 

“ஓவியன்” என்றவர்‌ அவனை அதட்ட‌ அதற்கு பின்னே அவனுக்கு சுற்றுப்புறம் ஞாபகம் வந்தது. 

 

“சாரி தாத்தா” என்றவன் ஒரு முறை‌ கண்களை அழுந்த துடைத்தான். அவன் அடுத்து கண்‌ திறந்த போது அவனுடைய கண்களில் உணர்ச்சிகள் இல்லை. 

 

சில நொடிகளில் தன்னை மீட்டுக் கொண்டவன் “தாத்தா இங்க திங்க்ஸ் எல்லாம் இருக்கா? நான் ஏதாவது‌ திங்க்ஸ் கடைக்கு போய்‌ வாங்கிட்டு வரட்டுமா?” என்ற‌ அவனுடைய‌ கம்பீரமான குரலில் அசந்து நின்றார் என்றாலும் அவன் இப்படியே தனக்குள் போட்டு எவ்வளவு புதைத்து வைத்துள்ளான் என்று கவலையும்‌ உண்டானது. 

 

அவர்களுக்கு தேவையானவற்றை கவனித்தாலும் அவன் தேவையை மீறி‌ ஒரு வார்த்தை பேசவில்லை. 

 

அன்று முழுவதும் அவனுடன் இருந்தவர்கள் இரவில் கண்ணனை பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு கிளம்பினர். 

 

அடுத்த நாள் கண்ணன் காலையில் அங்கிருந்து அலுவலகம் கிளம்பினான். ஓவியனை கூப்பிட அவன் வெளியே வரவில்லை என்று சொல்லி விட்டான். 

 

அவன் சிறிது நேரம் முடங்கியிருந்தாலும்  அவனது வேலை அவனை வீட்டில் முடங்கி இருக்க விடவில்லை. வரிசையாக வந்த அலைப்பேசி அழைப்புகளால் அவன் தனது அலுவலகத்திற்கு கிளம்பி விட்டான். 

அன்று ஒரு லாரியில் டைல்ஸ் வருவதாக அவனுக்கு தகவல் வந்தது. ஏற்றும் இடத்திற்கே அவன் பார்க்க சென்றான். 

ஏறக்குறைய அந்த டேல்ஸை அவன் இம்போர்ட் செய்திருந்தான்.‌  

அதனை போய் பார்த்தவன் அனைத்தையும் செக் செய்து விட்டு வந்தவன் அந்த வண்டி பின்னோடே அவனும் வந்தான். 

முன்னால் சென்று கொண்டிருந்த வண்டி திடீரென காணாமல் போக அவன் கண்டுபிடிக்க முடியாமல் திணறினான். 

டிரைவருக்கு போன் செய்தாலும் அவரும் எடுக்காமல் இருக்க சுற்றி சுற்றி வந்தவன் ஒரு குடோன் கண்ணில் பட்டதில் அந்த பக்கம் செல்லலாம் என போக அங்கே டைல்ஸை மாற்றி‌ அடுக்கி கொண்டிருந்தார்கள். 

“டேய் என்னடா பண்றீங்க?” என்று அதிர்ந்தபடி உள்ளே வந்தவன் அவர்களை செய்வதை பார்த்து ஒரு நிமிடம் சிலையாய் நின்று விட்டான். 

அவனது புது டைல்ஸ் அனைத்தையும் வண்டியில் இருந்து எடுத்தவர்கள் டேமேஜான டைல்ஸை வைத்தனர். 

அதை கண்டவன் ஆக்ரோஷமாக கத்தினான். 

“டிரைவர் யார கேட்டு இந்த வேல பண்ற? என்ன நினைச்சிட்டு இருக்க நீ?” என்று அவனிடம் சத்தம் போட்டான். 

அவனை பார்த்தவர்கள் ஓவியனை அடிக்க ஆரம்பித்தார்கள். 

முதலில் திணறியவன் அனைவரையும் அடிக்க ஆரம்பித்தான். 

இவனது அடி தாங்காமல் ஒருவன் மட்டும் மயங்கி இருந்தான். 

கடைசியில் ஒருவனை அவன் பிடித்து வைக்க முயற்சிக்க இன்னொருவன் அவனை கத்தியால் கையை கீறி விட்டு சென்றான். 

அவன் கை வலியையும் பொறுத்து கொண்டு “யார்டா உங்கள அனுப்பிவிட்டா?” என கேட்க அப்போது அவனுக்கு போன் வந்தது. 

“என்னடா முடிச்சீட்டீங்களா?” என்று ஒரு குரல் கேட்க “அப்பா” என தன்னை மீறி முணுமுணுத்தவன் அப்படியே மயங்கி சரிந்தான். 

***** 

எப்போதும் பேசுவது போல ஓவியனுக்கு கண்ணன் கூப்பிட அவன் ரிங் போயும் எடுக்கவில்லை என்றதும் பயம் கொண்டான். 

‘என்னாச்சு இவனுக்கு. எடுக்காம இருக்க மாட்டானே’ என்று பதைபதைத்தவன் அவன் 10 முறை கூப்பிட்டும் போனை எடுக்கவில்லை என்றதும் பயந்தவன் மகேந்திரனை பிடித்து விசாரித்தான். 

“அண்ணா அவரு ஹார்பர்ல இன்னைக்கு சரக்கு வந்ததுனு போய் இருக்காருணா” என்றான். 

“எப்போ போனான்டா?” என்று கேட்டான். 

“அது 12 மணிக்கு பக்கமா இருக்குமா?” என்று கேட்டான். 

“இப்போ நாலு ஆகுதே‌. சரி நான் அவன தேடறேன். நீயும் அவனுக்கு போன் பண்ணு” என்றவன் அந்த வழித்தடத்தில் அவனை தேடி கொண்டு கிளம்பினான். 

அவன் அந்த வழி நெடுக ஒவ்வொன்றாய் பார்த்து கொண்டு வர எங்கோ ஒரு மூலையில் ஓவியனது காரை போல ஒரு கார் இருக்க அதனை தேடி கொண்டு வந்தான். 

அங்கே ஓவியனின் காரை போல இருக்க அவன் உள்ளே சென்று பார்த்த போது அங்கே யாரும் இல்லை. 

“ஓவியா… ஓவியா…” என்று தேடி கொண்டு உள்ளே வந்தவன் அங்கே அவன் மயங்கி இருப்பதை பார்த்து அங்கு ஓடினான். 

“டேய் ஓவியா… இங்க பாரு… என்னாச்சுடா உனக்கு?” என்று அவன் மயங்கியதை பார்த்து கலங்கியவன் அவனை மருத்துவமனைக்கு தூக்கி சென்றான். 

ஓவியனை பார்க்க பார்க்க அவனது கண்களில் நிற்காமல் கண்ணீர் வந்தது‌. ஆனால் தான் இப்போது உடைந்தால் அவனை மருத்துவமனையில் சேர்க்க முடியாது என உணர்ந்தவன் தனது துக்கத்தை அடக்கி கொண்டு மருத்துவமனையில் சேர்த்தான். 

அவனை சேர்த்ததும் தான் தனது உடலை கவனித்தான். அவனது உடல் முழுவதும் ரத்தம் இருக்க அதை பார்த்தவனின் உடல் நடுங்கியது. 

இனிமேல் இதனை சமாளிக்க முடியாது என்று நினைத்தவன் நித்திலாவுக்கு கால் செய்தான். 

“நித்திலா” 

“சொல்லுண்ணா…” 

“குட்டிமா ஹாஸ்பிடல் வர முடியுமா? அப்படியே அண்ணாக்கு ஒரு செட் டிரெஸ் எடுத்துட்டு வாடா குட்டிமா” என்று சொல்ல “அண்ணா என்ன பேசற நீ? யாருக்கு என்னாச்சு?” என்றவள் பதறினாள். 

“நீ வாடா. வர்றப்ப தாத்தாவோட வா. நான் அவருக்கு கூப்பிடுறேன். எதயும் யோசிக்காம வா” என்று ஆறுதல் படுத்தியவன் தாத்தாவுக்கு கால் செய்தான். 

“தாத்தா” என்றவனின் குரலில் கலங்கியது‌. 

“கண்ணா ஏன்டா வாய்ஸ் எப்படியோ இருக்கு?” என்று கேட்டார். 

“தாத்தா ஓவியன யாரோ கத்தியால குத்திட்டாங்க” என்று அழுது கொண்டே கூறினான். 

“கண்ணா என்னடா சொல்ற?”  

“ஆமா தாத்தா‌‌. கைல வெட்டுப்பட்டு அவன் உயிர் போற நிலைமைல இருக்கற மாதிரி இருக்கான் தாத்தா” என்றவனுக்கு அழுகையில் உடல் நடுங்கியது. 

“கண்ணா நாங்க வரோம். நீ ஒண்ணும் பயப்படாத” என்று சொன்னவர் நித்திலாவையும் கூட்டி கொண்டு வந்தார். 

“கண்ணா யாருக்கு என்ன ஆச்சு? என்னடா உன் சட்ட ஃபுல்லா இவ்ளோ ரத்தம்?” என்று நடுங்கியபடி கேட்டாள். 

“அது ஓவியனுக்கு சின்ன ஆக்ஸிடென்ட்” என்று கூறினான். 

“டேய் அவரு நல்லா தானே இருந்தாரு.‌ எப்படி ஆச்சு?” என்று அழுது கொண்டே கேட்டாள். 

“யாரோ அவனோட கைல வெட்டிட்டாங்கடா. ப்ளட் அதிகமாக போயிடுச்சு” என்றவள் சொல்ல “கண்ணா‌ என்ன‌ சொல்ற?” என்றவள் தடுமாறி சரிய போனாள். 

“குட்டிமா” என்று பதறியபடி அவளை தாங்கி பிடித்தவன் தனது தோள்களில் தாங்கி கொண்டான். 

தாத்தா தன்னிடம் இருந்த தண்ணீரை அவள் முகத்தில் தெளிக்க மயக்கம் தெளிந்து எழுந்து உட்கார்ந்தாள். 

“கண்ணா அவரு எப்டி இருக்காருடா?” என்று அழுதபடி கேட்டாள். 

 

“அவனுக்கு ட்ரீட்மெண்ட் போய்ட்டு இருக்குடா. சரி ஆகிடுவான்” என்றவளை தேற்ற அவளது அழுகையை கண்ணனால் காண முடியவில்லை. 

“குட்டிமா… ப்ளீஸ்டா… அழாத. அவன் சரி ஆகி வரப்ப நமக்கு பாத்துக்கறதுக்கு ஸ்ட்ரென்ந்த் வேணும் இல்ல” என்று அவளை சமாதானம் செய்தான். 

“அவனுக்கு என் ஞாபகம் வராம போயிருமாண்ணா. இப்படி போய் படுத்து இருக்கானே?” என்று அழுது கொண்டே கோபப்பட்டாள். 

“டேய் ஒண்ணும் இல்லடா” என்றவளை சமாதானப்படுத்தியவன் “வா பஸ்ட் ஏதாவது வந்து ஜூஸ் குடி வா” என்றவன் அவள் வர முடியாது என்று சொன்ன போதும் பிடிவாதமாக இழுத்துச் சென்றான்.  

அங்கே அவளைப் போராடி ஜூஸ் குடிக்க வைத்தவன் அண்ணாமலைக்கும் ஜுஸை வாங்கிக் கொண்டு வந்தான். 

“தாத்தா இது குடிங்க” என்று கொடுத்தவன் மருத்துவரிடம் விசாரிக்க சென்றான். 

“டாக்டர் அவனுக்கு எப்படி இருக்கு?” என்று விசாரித்தான். 

“கைல ஆழமா வெட்டிருக்காங்க. நாங்க ட்ரீட்மெண்ட் பண்ணிருக்கோம்‌. பட் கொஞ்சம் ரெஸ்ட் கொடுக்கணும். ஏற்கனவே அடிபட்ட கை வேற. ஜாக்கிரதையா ஹேண்டில் பண்ணனும்‌‌. இப்போ ரூமூக்கு ஷிப்ட் பண்ணியிருப்பாங்க. பாத்துக்கோங்க”  என்றவர் சொல்ல “சரி சார்” என்றவன் தன்னுடைய சந்தேகங்களை கேட்டு கொண்டான். 

வெளியே வந்த கண்ணன் ஓவியனை பற்றி விசாரிக்க “கண்ணா அவர ரூம்க்கு ஷிப்ட் பண்ணிட்டாங்கடா” என்று சொல்ல மூவரும் அவனை பார்க்க சென்றார்கள். 

நித்திலா ஓவியனை பார்த்ததும் அழுது தீர்த்து விட்டாள். 

“குட்டிமா… போதும் அழுதது‌‌. இனி அவன நாம பாத்துக்கறதுல தான் இருக்கு” என்று தேற்றியவன் அவனீ முடிப்பதற்காக காத்திருந்தான். 

தாத்தா அவன் கண் விழிக்கும் வரை காத்திருந்தார். 

இரண்டு மணி நேரம் கழித்து அவன் கண் விழிக்க அவனது பார்வையில் நித்திலா தென்பட்டாள். 

அவளை பார்த்ததும் நடந்தது அனைத்தும் ஞாபகம் வர அவனது கண்களில் கண்ணீர்‌ வழிந்தது. 

“ஓவியன் ஏன்பா அழறீங்க? ரொம்ப வலிக்குதா?” என்று பதட்டத்துடன் கேட்க அவளை கட்டி பிடித்து கதறி அழுதான். 

அவனுக்கு தாத்தாவோ, கண்ணனோ கண்ணில் படவில்லை‌. அவன் அழுவதை பார்த்ததும் நித்திலாவிடம் கண்ணை காட்டியவன் தாத்தாவுடன் வெளியேறினான். 

ஓவியன் அழுததை பார்த்த நித்திலா துடிதுடித்து விட்டாள். ஒரு கட்டத்தில் தன்னை சுதாரித்தவன் “சாரிங்க நித்திலா” என்று வேற்றாள் போல பேச அவள் திகைத்து நின்றாள். 

“இனிமேல் நமக்கு இடையில எதுமே வேணாம்” என்று சொல்ல “என்னாச்சு ஓவியன்? ஏன்‌ இப்படி எல்லாம் பேசறீங்க?” எனன்ஈ என்று கேட்டாள். 

“என்ன‌ மாதிரி ஒரு பிறவி உனக்கு வேண்டாம் நித்திலா. அதுவும் உயிர் குடுத்த அப்பாவே கொல்ல டிரை பண்றது எங்க குடும்பத்தில தான் நடக்கும்” என்றவன் அவள் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியில் தான் என்ன சொன்னோம் என யோசித்தான். 

“ரொம்ப யோசிக்காதீங்க ஓவியன். உங்கப்பாவே உங்கள கொல்ல பாத்திருக்காரு” என அவள் உணர்ச்சி இன்றி சொல்ல அவன் கண்களை மூடி கொண்டான். 

“உன்னோட அப்பா மேல அவ்ளோ கோபம் வரும். ஆனா‌ இப்போ உன்னோட அப்பாவ பாக்க ஆசையா இருக்கு. ஏதோ ஒரு விதத்தில உனக்காக அவரு போராடுறாரு தானே” என்று கேட்டான். 

“உங்களுக்கு அடி பட்டதுல மூள குழம்பிடுச்சு ஓவியன். அவரு நம்மல பிரிக்க எவ்ளோ கீழ்த்தரமா இறங்கினாருனு மறந்துட்டீங்களா?” என்று கேட்டாள். 

“மறக்கல. அவரு உன் மேல வச்சு அன்பையும் மறக்கல. என் மேல வச்ச பாசத்தையும் மறக்கல. நான் இன்னைக்கு அவர ரொம்ப மிஸ் பண்றேன்” என்றவன் சொல்ல அங்கே வந்த தர்மராஜ் இவனின் கூற்றில் சமைந்து நின்றார்.  

“அங்கிள் இப்போ தான் உங்கள பத்தி பேசிட்டு இருந்தேன்‌‌. நீங்க வந்திட்டீங்க. என்‌ அப்பா‌ யாரு, என்ன‌ ஃபேமிலினு கேப்பீங்க தானே. நானும் அப்போ ஏதேதோ சமாளிக்க முடியாம சப்பை கட்டு கட்டுவேன் உங்ககிட்ட. பட் இப்போ தான் என்‌ அப்பன பத்தி தெரிஞ்சது. அவன் பெத்த பிள்ளையவே கொல பண்ண நினக்கற கேவலமான‌ பிறவி” என்று சொன்னவன் “அங்கிள் என்ன‌ ஏத்துக்க மாட்டீங்களா? இன்னும் என் மேல உங்க கோபம் போகலயா?” என்று கண்ணீர் குரலில் கேட்டான். 

“நான் என்ன தப்பு பண்ணினேனே தெரியல. எங்க போனாலும் நான் தனியா நின்னறேன். எல்லாரும் என்ன ஒதுக்கி வெச்சிடறாங்க. ப்ளீஸ் அங்கிள் என் நிலாவை ஆவது என்கிட்ட குடுத்துடுங்களேன் ப்ளீஸ்” என்று தன்னை மறந்து கதறியவனின் கண்களில் அப்போது அங்கு வந்த ரத்னம் தென்பட்டார். 

“டேய் உன்ன யாருடா உள்ள விட்டது. போடா இங்கிருந்து” என்று கையில் கிடைத்ததை எறிய ஆரம்பித்தான். 

“ஓவியா… என்ன‌ பண்றடா? அமைதியா இரு” என்று கண்ணன் அவனை வந்து தடுக்க அப்போதும் அவன்‌ அடிக்க ரத்னம் அங்கிருந்து கிளம்பி விட்டார். 

அவனை சமாளிக்க முடியாமல் நர்ஸை கூப்பிட அவர்‌ அவனுக்கு ஊசி போட்ட பின் அவன் மீதே மயங்கினான். 

அவனின் உளறலில் கண்ணன் அதிர்ச்சியில் உறைந்து நின்றான். 

நித்திலா அவன் படும் பாட்டை பார்க்க முடியாமல் கண்ணீர் வடித்தாள். 

“கண்ணா அவன படுக்க வை” என்றவர் அதிசயத்தக்க விதமாக ஓவியனின் அருகில் இருந்தார். 

ஓவியனின் அருகில் அமர்ந்தவர் அவனது தலையை தடவி கொடுக்க அனைவரும் அதிசயத்தை பார்ப்பது போல பார்த்தனர். 

“ஒண்ணும் இல்லடா ஓவியா. அங்கிள் நான் எப்பயும் உன் கூட சப்போர்டிவா, ஃபிரண்ட்லியா நீ விருப்பப்படற மாதிரி நான் இருப்பேன்டா” என்று அவனின் மனதில் பதியும்படி கூறியவர் அவனது நெற்றியில் முத்தமிட்டார். 

  

பின்னர் கண்ணனிடம் வந்தவர் “அவன பாத்துக்கோ‌. இனி அவன எங்கயும் தனியா விடாத. எப்பயும் அவன் கூட இரு” என்று நிதானமான குரலில் கூறி சென்றார். 

“டேய் கண்ணா என்ன ஆச்சு உன் அப்பனுக்கு?” என்று‌ கேட்டார். 

“விடுங்க தாத்தா. ஏதாவது நல்லது நடந்தா சரி தான்” என்றவன் தாத்தாவிடம் காலையில் தான் போன இடத்தை பற்றி விசாரித்தான். 

தாத்தாவுக்கு ஒரு சில சந்தேகங்கள் இருக்க தனது நண்பர்களை தொடர்பு கொண்டவன் அந்த இடத்தை பற்றி விசாரிக்க அந்த இடம் ஓவியனுக்கு சொந்தமானது என்றதில் இவர்கள் இன்னும் குழம்பினர். 

பின்னர் தாத்தா மூலம் அந்த இடத்தை பற்றிய தகவல்களை திரட்ட ஆட்களை தேடினான். 

இவர்கள் இருவரும் பேசி கொண்டிருக்க நித்திலா அவனை ஒட்டியே அமர்ந்து இருந்தாள். 

இன்றைய அவனுடைய கதறல் அவளை பயம் கொள்ள வைத்தது. இவனை இனி எப்போதும் தனியே விட கூடாது என யோசித்தவள் அவனது கையை கெட்டியாக பிடித்து கொண்டாள். 

எவ்வளவு அழுத்தம் இருந்திருந்தால் தன்னை மறந்து தர்மராஜை பற்றி ஏங்கி அழுதிருப்பான். கடவுளே என் அப்பாவுக்கு நல்ல புத்திய குடு” என்று வேண்டி கொண்டாள். 

***** 

கண்ணன் வெளியே அமர்ந்திருந்த போது ஒரு பெண் அங்கே உட்கார்ந்திருந்தாள். 

யாராவது வருகிறார்களா என்று கவனித்தவள் அவ்வப்போது போனை நோண்டி கொண்டிருந்தாள். 

அவளது கண்கள் பலவர்ண ஜாலத்தை காட்டியது. அந்த கண்களில் அவன் மயங்கி நின்றான். 

பின்னர் சிறிது நேரத்தில் அந்த அறையை தாண்டி செல்ல அந்த அறையை உற்று நோக்கியவள் உள்ளே நுழைந்தாள். 

“அண்ணா” என்று அழைத்தவள் அவனை உலுக்க அவனோ மயக்கத்தில் இருந்தான். 

“அண்ணாவா?” என்னது என்று திகைத்தவன் “யார்‌ நீங்க?” என்னடீ என்று கேட்டான். 

“நான் அவரோட ரிலேஸன். ஓவியன் அண்ணாக்கு என்னாச்சு?” என்று பதட்டத்துடன் கேட்டாள். 

அவனுக்கு கைல காயம்மா. அதான் ட்ரீட்மெண்ட்டுக்கு வந்தோம்” என்று கூறினான். 

“உங்க பேர் என்ன?” 

“என் பேர் ஸ்வஸ்திகா. டாக்டர் என்ன சொன்னாங்க?” என்று கேட்டாள். 

“டாக்டர் கொஞ்ச நாளைக்கு ரெஸ்ட் எடுக்க சொல்லியிருக்காங்க மா”  

“நீங்க சொந்தம்னா எப்படி? எந்த ஊரு?” என்று கேட்க அனைத்தையும் கூறினாள். 

அவனை பற்றி தனக்கு தெரிந்ததை சொன்னவள் அவனுடைய குடும்பத்தை பற்றி ஒன்றும் சொல்லவில்லை. 

“ஏங்க நான் விசாரிக்கறதே அவனோட ஃபேமிலியவே சொல்லாம இருக்கீங்க” என்று கேட்டான். 

“இல்ல. அண்ணாவ பத்தி யார்கிட்டேயும் சொல்ல கூடாதுனு அவரோட அப்பா ப்ராமிஸ் எங்ககிட்ட வாங்கியிருக்காரு” என்று கூறினாள். 

“இதென்ன குடும்பம்? ஏன் மறைக்கணும்?” என்று கேட்டான். 

“அது அவரு இன்னொரு மேரேஜ் பண்ணிட்டு போய் அத நாங்க எதிர்த்து கேட்டு பெரிய சண்ட‌ வந்துடுச்சு. அதனால நான் அண்ணன எங்கயாவது பாத்தா கூட பேசாம வந்துடுவேன். ஆனா இன்னைக்கு என்னால முடியல” என்றவளுக்கு கண்கள் கலங்கியது. 

அவர்கள் பேசி கொண்டிருக்கும்போது ஓவியனிடம் லேசாக அசைவு தெரிய அவன் கண் விழித்தான். 

கண்‌ விழித்தவன் ஸ்வஸ்திகாவை பார்த்து இனிமையாக அதிர்ந்தான். 

“ஏய்… ஸ்வஸ்தி குட்டி. எப்படி இருக்க?” என்று புன்னகையுடன் கேட்டான். 

“நல்லா இருக்கேண்ணா. உங்களுக்கு எப்டி இப்படி ஆச்சு?” என்று கேட்டாள். 

“சொந்த பந்தம் இருந்தாலே வெட்டு குத்து சகஜம்டா. இவங்க நெருங்கின சொந்தம் வேற. அதான் பரிசும் அதிகம்” என்று கூறினான். 

“அண்ணா என்ன பேசறீங்க?” என்று கேட்டான். 

“ஆமாடா. உங்க சித்தப்பா குடுத்த கிஃப்ட்” என கூற அவள் அதிர்ச்சியில் உறைந்து நின்றாள். 

“அண்ணா என்ன சொல்றீங்க? அவரா…‌உங்கப்பாவா? என்ன அண்ணா?” என்றவளுக்கு கண்களில் இருந்து தாரை தாரையாய் கண்ணீர் வந்தது. 

“நீ அழாதடா. இத்தன நாளா அவரு இத மட்டும் தான் பண்ணாம இருந்தாரு. இப்போ இதையும் பண்ணிட்டாரு” என சிரித்து கொண்டு கூறினான். 

“அண்ணா நான் போய் தாத்தா, ஆன்டிட்ட சொல்றேன்” என்று பதட்டமாய் கூறினாள். 

“வேண்டாம்டா. அவங்ககிட்ட ஏதும் சொல்லிடாத. அவங்களே வேணாம்னு தான் நான் வந்திருக்கேன். நான் எப்படியோ‌ மேனேஜ் பண்ணிப்பேன். என் ஃபிரண்ட் ஃபேமிலி இருக்கு” என்றவன் அப்போது தான் ஞாபகம் வந்தவனாய் கண்ணனை நோக்கினான். 

“ஏன்டா ஒரு வழியா எங்க ஞாபகம் வந்திடுச்சா?” என்று கேட்டான். 

“இது கண்ணா. என் பெஸ்ட் பிரண்ட்” என்றவன் “இது நித்திலா. உன்னோட அண்ணி” என்று கூறினான். 

“வாவ்… அண்ணா..‌. செம… சூப்பர்…” என்றவள் நித்திலாவை கட்டி கொண்டாள். 

“தேங்க்ஸ் அண்ணி. நீங்க இல்லேனா அண்ணா தனியா தான் இருக்கணும். அண்ணி நீங்க அவர நல்லா பாத்துக்கோங்க” என்று சந்தோஷமான குரலில் கூறினாள். 

“அண்ணா நான் என் ஃபிரண்டுக்கு ஒடம்பு சரியில்லனு வந்தேன். நாளைக்கு வர்றேன் அண்ணா” என்று கூறினாள். 

“ஸ்வஸ்தி… இத பத்தி நம்ம ஃபேமிலில யாருக்கும் தெரிய வேண்டாம். தெரிஞ்சா எனக்கு தான் அசிங்கம். சோ நீ யார்கிட்டேயும் சொல்லாத” என்றவன் “பாத்து போ” என அனுப்பி வைத்தான். 

“சரிண்ணா. ரெஸ்ட் எடுங்க” என்றவள் செல்ல அவள் பின்னோடே இவனும் சென்றான். 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!