ஒளி 17

 

“ஓவியன்” என்றதும் சீதாவை திரும்பி பார்த்தவன் அங்கே அவரை எதிர்பாராமல் திகைத்து நின்றான். அடுத்து அவர் என்ன சொல்வாரோ என்று அவனது முகம் பயத்தை காட்டியது. 

“ம்மா… நீ எதுக்குமா இங்க வந்த?” என்று‌ நித்திலா கோபப்பட்டாள். 

“நான் தான் வர சொன்னேன் குட்டிமா. அவங்க காலையில இருந்தே வரேன்னு சொன்னாங்க. அவனுக்கு அடிப்பட்டதை கேட்டதுக்கு அப்பறம் என்னால அவங்கள அவாய்ட் பண்ண முடில” என்று சொன்னான்.  

“அண்ணா… இந்த அம்மா பேசின வரையும் போதும். அதுக்கு இவரு சித்ரவதை அனுபவிக்கற வரையும் போதும். நான் இவரை நினைச்சு ஒவ்வொரு நொடியும் பயந்துட்டு இருக்கேன். ஆனா நம்ம அம்மாவும் அப்பாவும் நம்மள பத்தி கொஞ்சம் கூட யோசிக்கலண்ணா. அவங்களுக்கு நம்மள பத்தின கவலை இல்லை. அவங்களுக்கு அவங்க கௌரவம் தான் முக்கியம். தயவுசெய்து அவங்கள கிளம்ப  சொல்லுண்ணா” என்று இறுகிய குரலில் சொன்னாள். 

“நித்திமா சொன்னா கேளுடா” 

“அம்மா போதும்மா. உங்களால அவரு காயப்பட்டவரையும் போதும். அவரை நான் எப்படி வெளியே கொண்டு வரதுன்னு ஒவ்வொரு நிமிஷமும் தவிச்சிட்டு இருக்கேன். எங்களுக்கு நீங்க யாரும் வேணாம். கிளம்புங்க” என்று ஆத்திரத்தோடு கத்தினாள். 

“நித்திலா”  

“நீங்க பேச வேணாம். உங்களுக்கு நாங்க வெளிய போகணும் தானே. நாங்க கிளம்பறோம்” என்றவள் சீதாவை கூட்டிக்கொண்டு வெளியேறப் பார்த்தாள். 

“குட்டிம்மா ஓவியன்கிட்ட அம்மா பேசணும்னு சொல்லி சொன்னாங்கடா” 

“வேண்டாம். யாரும் பேச வேண்டாம். இந்த மனுசன் யாரு கிட்டயும், எதுவும் சொல்லாம இருந்து எதுவும் ஆகிடுமோனு கூட பயமா இருக்கு. எனக்கு சொந்தம்னு யாரும் வேணாம். கொஞ்சமாவது நிம்மதியா இருந்தா அதுவே போதும்” என்று கதறியழ ஆரம்பித்தாள். 

அவள் அழுவதைப் பார்த்ததும் பதறிப்போனவன் அவளது கையை இறுகப் பற்றினான். அவளது குடும்ப உறுப்பினர்கள் முன் அவனால் ஒன்றும் செய்ய இயலாத நிலையை அறவே வெறுத்தான். 

“நித்திலா… ப்ளீஸ்… எனக்கு சொல்லக்கூடாதுன்னு ஒன்னும் இல்ல. எனக்கு அந்த ஆளோட அடையாளத்தை யூஸ் பண்ண பிடிக்கல. அதனால்தான் நான் சொல்லல” என்றவன் கண்களை மூடி தன்னை அமைதிப்படுத்திக் கொண்டு சொல்ல ஆரம்பித்தான்.  

“வேண்டாம் ஓவியன். நீங்க அவ்ளோ கஷ்டப்பட்டு சொல்ல வேண்டாம். உங்கள வருத்தப்படுத்தற எதுவும் எனக்கும் தேவையில்ல” என்றவளை இன்னும் பிடித்தது. 

ஏற்கனவே அவள் அம்மாவிடம் சண்டை போட்டதில் அவளின் மனநிலையை புரிந்துக் கொண்டவன் இனிமேலும் அவளை கஷ்டப்படுத்த வேண்டாமென உண்மையை சொல்ல ஆரம்பிக்க அப்போது அவள் அவனை தடுத்தாள். 

“ஓவியன் நித்திலா வாழ போற வீடு நல்லவங்களான்னு செக் பண்ண மாட்டோமா? அவளோட மாமியார் நாத்தனார் எப்படி? என் பொண்ணு அந்த வீட்ல சந்தோசமா வாழ்வாளா அப்படின்னு எதிர்பார்க்க மாட்டேனா? அதை மனசில வைச்சி தான்பா உன் கிட்ட சொன்னேன்” என்று விளக்கம் கொடுத்தார். 

“நீங்க சொன்னது கரெக்ட் தான் ஆன்ட்டி. நான் உங்கள ஒன்னும் நினைக்கல. நீங்க தேவையில்லாம உங்கள கஷ்டப்படுத்திக்காதீங்க” 

“நீங்க நினைக்கிற மாதிரி இல்ல ஆன்ட்டி. உங்க பொண்ண நான் ரொம்ப நல்லா பார்த்துப்பேன்” என்றவனுக்கு அதற்கு மேல் என்ன பேசுவது என்று தெரியவில்லை. 

அவனது அருகில் வந்தவர் “நீயும் எனக்கு கண்ணா மாதிரி தான். நீ எப்ப வேணாலும் நம்ம வீட்டுக்கு வரலாம்” என்றவர் சொல்ல அவன் சரி என்பது போல் தலையாட்டினான். 

அதில் இருந்து அவனது வீட்டுக்கு அவ்வப்போது அவர் ஆரம்பித்தார். ஏறக்குறைய வாரத்தின் பாதி நாள் அவரது கையில் தான் இவருக்கு சாப்பாடு என்றானது. 

இப்போது தர்மராஜ் கூட அவனை காயப்படுத்தாமல் இருக்க இத்தனை வருடம் பட்ட அடி அவனை நெருங்க விடவில்லை. 

ஏறக்குறைய ஒரு வருடம் இதே நிலைமையில் சென்றது. 

நித்திலாவின்‌ நிச்சயத்திற்கே அவ்வளவு அவசரப்பட்டவர் இப்போது அவளது கல்யாணத்தை பற்றி கூட பேசாதது ஆச்சரியமாக இருந்தது. 

ஒரு‌ நாள் சீதா ஓவியனின்‌ வீட்டில் இருந்த போது வயதான பெண்மணி ஒருவர் வேகமாக வந்தார். அவரைப் பார்த்து சீதாவுக்கு தனது தோழியை போல தோன்றியது.  

“நீங்க… நீங்க… மீனாட்சி தானே?” என்று கேட்டார்.  

“ஆமா. நீங்க?” 

“நான் சீதா. என்னை தெரியலையா மீனா?” 

“ஹேய் சீதா… நல்லாருக்கியா?” என்றவர் “நீ எங்க இங்க?” என்று விசாரித்தார். 

“இந்த பையனும் என் மகன்‌ மாதிரி தான்” என்று சொல்லவும் மீனாவுக்கு வீட்டில் நடந்த பிரச்சனை ஞாபகம் வந்தது.  

“ஏன்டா என்னை அந்த ஆள் டார்ச்சர் பண்ணிட்டு இருக்கான். நீ இங்க லவ் பண்ணிட்டு இருக்கியா?” என்று ஆத்திரமாக கேட்டார்‌. 

“ம்மா…” 

“அந்தாளோட பையனுக்கு தான் ஏற்கனவே  நிச்சயதார்த்தம் ஆகியிருக்காமே. அப்புறம் ஏன் டா அங்க போய் பிரச்சனை பண்ற? நீங்க என் கல்யாணத்துக்கு வந்து பேசுங்கனு கெஞ்சினியாமே. அவன்‌ உன்னை நாய அடிச்சு விரட்டின மாதிரி விரட்டி விட்டேனு எவ்வளவு திமிரா பேசுறான்? அந்த குடும்பமே நம்மள பார்த்து சிரிப்பா சிரிக்குது. இவ்ளோ நாள் நல்லா தானே டா இருந்த? இப்போ எங்க போச்சு உன் புத்தி?” 

“ம்மா… அது.. கொஞ்ச நாள் முன்னாடி நடந்தது. அதை ஏன்மா இப்போ பேசறீங்க?” 

“என்னைய கேட்டா? நீ என்ன பண்ணி வச்சியோ தெரியாது. அந்தாள் கொஞ்ச நாள் அமைதியா தான் இருந்தான். ஆனா‌ நேத்து கால் பண்ணி அப்படி திட்டறாங்க புருசனும், பொண்டாட்டியும்” என்றவர்  

“அவன் பொண்டாட்டின்னு ஒருத்தி இருந்தவ தான் தப்பு தப்பா சொல்லிக் கொடுத்து அந்த ஆள கெடுத்து வச்சிருக்கானு தெரியும்ல. உனக்கு லவ் கேட்குதாடா? லவ் வந்தா வீட்ல கூட சொல்ல மாட்டியா? நேரா அந்த ஆள்கிட்ட‌ தான் போவியா? அவ்வளவு பெரிய‌ மனுசனாயிட்டியா‌‌ நீ?” என்று ஆக்ரோஷமாக கத்தினார். 

“ம்மா… அப்படி இல்லமா… சில சூழ்நிலைகள்… அதான்… தாத்தாகிட்ட சொல்லி உங்ககிட்ட சொல்லலாம்னு நினைச்சேன். நீங்க என்கிட்ட பேச மாட்டீங்கனு தான்” 

“ஆமாடா. அந்தாள லவ் பண்ணதுக்கு தான் உன்னை கொடுத்துட்டு போயிருக்கானே… எங்க காதலுக்கு அடையாளமா தான் உனக்கு ஓவியன்னு பேர் வெச்சோம். ஆனா நீ என்னை பிடிச்ச சனியனா இருக்கியே? அந்தாள் மாதிரியே இருக்கற. அவனை மாதிரியே பண்ற. எப்படிடா உன் கூட நான் பேச முடியும்? அந்தாளை மேரேஜ் பண்ணி எல்லாத்தையும் நான் இழந்தது தான் மிச்சம்” 

“ம்மா… அதை பத்தி எனக்கு தெரியல. பட் இப்போ எந்த பேச்சு வார்த்தையும் அவங்க கிட்ட வெச்சிக்கிட்டதில்ல. என்னை மன்னிச்சடுங்க” என்று பொறுமையாக எடுத்து கூறினான். 

அப்போதும் மீனாட்சி வார்த்தைக்கு வார்த்தை நெருப்பு துண்டங்களை அவன் மேல் வீச ஓவியன் அனைத்தையும் தாங்கிக் கொண்டு பேசிக் கொண்டிருந்தான். 

மீனாட்சியின் பேச்சு அனைவரையும்  அதிர்ச்சிக்குள்ளாகியது.  

ஒரு அம்மா தன் மகனிடம் இவ்வாறு பேசுவார் என்று நித்திலா கற்பனையில் கூட நினைக்கவில்லை. 

பொறுத்து பொறுத்து பார்த்த சீதா மீனாட்சியை திசை திருப்பி விட்டார். அவரால் ஓவியனின் முக வாடலை பொறுக்க முடியவில்லை. 

“மீனா எங்க வீட்டுக்கு வா.‌ உன்னை கூட்டிட்டு போறேன்” 

“இல்ல சீதா. நான் எங்க வீட்டுக்கு போகணும்” 

“நீ வா. ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்க. கொஞ்ச நேரம் என் கூட டைம் ஸ்பென்ட் பண்ணிட்டு போ மீனா” என்றவர் அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்றார். 

அவர்கள் சென்றவுடன் ஓவியன் தளர்ந்து போய் அமர்ந்து விட்டான். அவனுக்கு என்ன பேசுவதென்று தெரியவில்லை. 

“அது… அம்மா… நா…ன்… போய்…கேட்டேன்…” என்றவனுக்கு வார்த்தை திணறியது. 

“டேய் விடுடா.உன்னை கஷ்டப்படுத்திக்காத” என்று கண்ணன் ஆறுதலாக அணைத்தான். 

“ஓவியன் நீங்க வாங்க. வெளிய‌ போலாம்” என்று‌ அவனை தனது காரில் கூட்டிக் கொண்டு நித்திலா சென்றாள். 

அவன் எங்கோ வெறித்து பார்த்துக் கொண்டு வந்தான். 

‘ஏன் என் லைஃப் இவ்ளோ சிக்கலா இருக்கு? நானும் எல்லாரும் மாதிரி நல்ல லைஃப் வாழ தானே ஆசைப்பட்டேன். என் வாழ்க்கைல நிம்மதியே கிடையாதா?’ என்று அவன் மனதில் சிந்தனைகள் ஓடிக் கொண்டிருந்தது. 

நித்திலா கூப்பிட்டு கூப்பிட்டு பார்த்தவள் அவன் கைகளின் மேல் இவள் கைகளை வைத்தாள். அந்த ஸ்பரிசத்தில் அவன் அவளை திரும்பி பார்த்தான். நித்திலா அவனை‌ பார்த்து புருவம் உயர்த்தினாள். 

“நித்திலா நீ என் மேல கோபமா‌ இருக்கியா?” 

“நான் எதுக்கு உங்க மேல கோவப்படணும்?” 

“நான் யாருன்னு உனக்கு தெரியாது. என் ஃபேமிலி பேக்ரவுண்ட் தெரியாது. உன்கிட்ட நிறைய விஷயங்கள் நான் மறைச்சிட்டு இருக்கேன். இப்போ வரையும் எனக்கு எதுவும் சொல்ல முடியலடா” என்று கலங்கிய குரலில் கூறினான். 

“நீங்க சில விஷயங்கள் என்கிட்ட மறைக்கிறது கோபம் தான். ஆனா என் பயமே நீங்க அதை தனியா உங்க மைன்ட்ல போட்டு ஸ்ட்ரெஸ் பண்ணிக்க கூடாதுன்னு தான்” 

“நீ எப்பவுமே என் கூட இருப்பியா நிலா?” 

“ஏன் ஓவியன் இப்படி குழப்பிக்கிறீங்க?” 

“இல்ல நிலா. நீ அந்த வானத்து நிலா மாதிரி. சில சமயம் ரொம்ப பக்கத்தில் இருக்கிற. ஆனா நெருங்கி வந்தா தூரமா விலகி போயிடுற” என்றவன் அவள் தோளில் சாய்ந்துக் கொண்டான். 

“நான் எப்பவுமே உங்களோடவே இருப்பேன். உங்களுக்குள்ள இருப்பேன் ஓவியன். ஓகேவா?” என்றவள் கோயிலின் அருகில் நிறுத்தினாள். 

கோயிலின் உள்ளே நுழைந்ததும் அவன் மனது‌ அமைதி அடைந்தது. கோயிலின் உள்ளே உள்ள அம்மனின் அருள் முகத்தை பார்த்ததும் அவன்‌ மனம் சிறிது அமைதி அடைந்தது. 

சாமி கும்பிட்டதும் திருநீறை அவனது நெற்றியில் இட்டவள் அவனது கை பிடித்தபடி கோவிலை சுற்றி வலம்‌ வந்தாள். ஓவியன் அவளுடன்‌ இருக்கும் ஒவ்வொரு நொடியும் ஆழ்ந்து அனுபவித்தான். 

அந்த நொடியில் அவனுக்கு இருந்த அனைத்து பிரச்சனைகளும் மறந்து போனது. நித்திலா மட்டுமே அவன் கண்களுக்கு தெரிந்தாள். 

அவளை தனது தோளில் சாய்த்தபடி கனவுலகில் மிதப்பது போல் காரை ஓட்டிக் கொண்டிருந்தான். இருவரின் மனதும் இதமாக இருந்தது. இருவரும் மற்றவரது அருகாமையை ஆழ்ந்து அனுபவித்தார்கள். 

தன்னை மறந்து காரை ஓட்டிக் கொண்டிருந்தவனுக்கு உள்ளுணர்வு உந்த சுற்றுப்புறத்தை கவனித்தான். ஏதோ சரியில்லை என்று தோன்றிக் கொண்டிருந்தது. 

தான் தனியாக இருந்தாலும் பரவாயில்லை. இப்போது கூட நித்திலாவும் இருப்பதை நினைத்து அவன் உடல் நடுங்கியது. தன்னால் அவளுக்கு ஏதும் ஆபத்து வந்து விடுமோ என்று மனம் பதறியது. 

அதை அவளுக்கு காட்டாமல் மறைத்தவன் சுற்றுப்புறத்தை கூர்மையாக கவனிக்க துவங்கினான். 

அப்போது அவனுக்கு போன் வந்தது.  

‘இவன் எதுக்கு எனக்கு கூப்பிடறான்?’ 

“ஹலோ” 

“உனக்கும், என் ஃபேமிலிக்கும் அப்படி என்ன பகை? உன்னை எதுக்கு போடணும்னு எங்க வீட்ல பேசிக்கறாங்க?” என்றவன் கேட்க இவன் கைகளில் கார் தடுமாறியது. 

“ஓவியன் என்னாச்சு?” என்று பதறியபடி நித்திலா கேட்க “நந்திங்” என்றவன் காரை வேகமாக ஓட்டினான். 

அப்போது எதிர்திசையில் லாரி ஒன்று வேகமாய் வர நொடியும் தாமதியாமல் அவளை கதவை திறந்து வெளியே தள்ளியவன் காரை வேகமாக ஓட்டினான். 

அவள் கண் முன்னாலே ஓவியனின் கார் விபத்து நடக்க “ஓவியன்” என்று கதறியபடியே மயங்கி சரிந்தாள். 

 

 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!