ஒளி 20

 

“ஓவியன் பி கூல். என்ன பண்றீங்க? கை வலிக்குது” என்று கத்தினாள்‌.

“சாரி சாரி நிலா” என்றவன் அவளது கையை வருடி விட்டான்.

 அப்போதும் அவள் வலியில் முனக மருந்தை எடுத்து தடவினான்.

“சாரிடா. ஏதோ ஞாபகத்துல உன் கைய‌ பிடிச்சிட்டேன்” என்று வருத்தமான குரலில் சொன்னான்.

“விடுங்க ஓவியன். சரியாயிடுச்சு” என்றவள் அவன் கைகளில் இருந்து உருவிக் கொண்டாள்.

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது தர்மராஜ் ஓவியனை பார்க்க வந்தார்.

வந்தவரை வரவேற்றவன் “சொல்லுங்க சார்” என்றான்.

“நீங்க எதுக்கு இப்ப வந்து இருக்கீங்க?” என்று நித்திலா கோபமாக கேட்டாள்.

“அமைதியா இரு நிலா” என்றவன் அவரைப் பார்த்து “நீங்க வொர்ரி பண்ணிக்காதீங்க சார். நீங்க நினைச்ச மாதிரி நான் இங்க இருந்து கிளம்பி விடுவேன்” என்று கூறினான்.

“நான் அப்படி ஏதும் நினைக்கல ஓவியன்”

“ஓ… அப்படியா ரொம்ப சந்தோஷம்” என்றவன் “நிலா காபி எடுத்துட்டு வா” என்று அவளை விரட்டியவன் “சொல்லுங்க சார்” என்றான்.

“ஓவியன் நான் கேட்பார் பேச்சை கேட்டு தப்பா நடந்துக்கிட்டேன். என்னை மன்னிச்சிடு” என்றார்.

“முழுசா உயிரை எடுத்து உருவி கொடுத்துட்டு இப்ப மன்னிச்சிடுனு சொல்றீங்க?” என்று கேட்டான்.

அவன் கேட்டதற்கு எதுவும் பதில் சொல்ல முடியாமல் திணறினார்.

“சரி. சொல்லுங்க”

“நீ என் பொண்ண கல்யாணம் பண்ணிக்கோ”

“என்னை மாதிரி ஒரு அநாதைக்கு நீங்க ஏன் உங்க பொண்ண கொடுக்கறீங்க?”

 

“ஓவியன்”

“இப்பவும் நான் அதே ஓவியன் தான்” என்றவன் 

“நான் உங்ககிட்ட இருந்து இதை எதிர்பார்க்கல” என்றவன் “அந்தாளு இடத்துல தான் நான் உங்கள வெச்சிருந்தேன். ஆனா இப்போ எனக்கு வாழ்க்கைல அப்பான்னு ஒரு கேரக்டர் தேவையில்லைனு நல்லா புரிய வைச்சிட்டீங்க. ரொம்ப நன்றி சார்”

“ஓவியன்”

“போதும் சார். உங்க மேல நான் வச்ச பாசமும் போதும். அதுக்கு நான் அவமானப்பட்டதும் போதும்” என்று கசப்புடன் புன்னகைத்தான்.

“இப்ப ஏன்‌ என்கிட்ட வந்து பேசிட்டிருக்கீங்க? தேவையில்லாம பேச மாட்டீங்களே?” என்றான்.

“நான் இவ்ளோ நாளா பண்ணது தப்புதான். அதுக்காக இப்படி எல்லாம் பேசாத ஓவியன்”

“ஓ… நீங்க சொல்றதை பார்த்தா நீங்க கொலை பண்ண வந்தாலுமே நான் அமைதியா இருக்கணும்னு தான் சொல்றீங்களா?”

“இல்ல ஓவியன்”

“ஆனாலும் பாருங்க. அன்ஃபார்சுனேட்லி நான் அமைதியா தான் இருக்கிறேன். பட் இனிமேலும் அமைதியா இருப்பேன்னு நினைச்சுக்காதீங்க சார்… ப்ளீஸ்” என்றவன் பேச பிடிக்காமல் கண்ணை மூடிக்கொள்ள அவர் அங்கிருந்து அமைதியாக கிளம்பினார்.

என்ன தான் அவர் தனது நடவடிக்கையில் உணர்த்திய இருந்தாலும் ஏனோ அவனால் இன்று வரையும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

கண்ணை மூடியவனுக்குள் ஏதேதோ ஞாபகம். இந்த மனிதர் தன்னிடம் எப்படி பழகினார் என்று.

ஏறக்குறைய அவன் கல்லூரியில் சேர்ந்த வருடம். அங்கு தான் அவனுக்கு கண்ணன் பழக்கம் ஆனான். யாரோடும் அவ்வளவாக ஒட்டாதவன் கண்ணனின் இயல்பான செய்கையில் அவனிடம் நண்பன் ஆனான்.

ஆனாலும் கூட அவனிடம் அளவாகத் தான் பேச்சுவார்த்தை வைத்துக் கொண்டான். ஒரு முறை அவனுடன் கடைக்குச் சென்ற போது டைல்ஸ் வந்ததை தொழிலாளர்கள் எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களுடன் சேர்ந்து ஓவியனும் வேலை செய்தான்.

அப்போது அங்கு வந்த தர்மராஜ் அவன் வேலைக்கு வந்ததாக நினைத்து பணம் கொடுத்தார். 

“அப்பா என்ன பண்றீங்க?”

“இந்த பையனும் ஒர்க் பண்ணான்டா. அதான் பணம் கொடுக்கிறேன்” என்று சொன்னார். 

“ப்பா… அவன் என் பிரண்டு ஓவியன். என் கூட சும்மா கடைக்கு வந்தான் பா” என்று சொன்னான்.

“ஓ… சாரிப்பா. எனக்கு தெரியல”

“பரவாயில்ல சார்” என்றவன் அவரிடம் கடையை பற்றி ஆர்வமாக விசாரிக்க ஆரம்பித்தான். அவனது கேள்விகள் அவருக்கு ஆச்சரியமாக இருந்தது.

அவன் வயதில் உள்ள பையன்கள் பார்க்,பீச்,சினிமா என்று சுற்றிக் கொண்டிருக்க இவன் தொழிலை ஆர்வமாக தெரிந்துக் கொள்ள நினைப்பதை வியப்பாக பார்த்தார்.

அவனைப் பற்றி கண்ணனிடம் விசாரித்தவருக்கு அவனுடைய குடும்ப பின்னணியை அறிந்துக் கொள்ள முடியவில்லை.

பொதுவாக தாத்தா பாட்டியின் மற்றும் அம்மாவின் பெயரை மட்டும் சொல்லியவன் வேறெதையும் சொல்லவில்லை. தர்மராஜும் அதற்கு மேல் அதனை கண்டு கொள்ளவில்லை.

கல்லூரியில் படித்துக் கொண்டு அவரிடம் பகுதி நேரமாக வேலையும் கற்றுக்கொள்ள ஆரம்பித்தான் ஓவியன். 

முதலில் விற்பனை பிரிவில் ஆரம்பித்தவன் போக போக அலுவலக வேலையிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான்.

“ஓவியன் இன்னைக்கு கொடவுன்ல எல்லாம் அடுக்கணும். எல்லாம் போய் செக் பண்ணு” என்று அவரே இவனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றார்.

போகப்போக இருவருக்குள்ளும் அவர்களே அறியாமல் ஒரு உறவு உருவாகியது.

ஓவியன் அவரிடம் அனைத்தையும் பகிர்ந்துக் கொண்டான். தொழில் சம்பந்தமாக இருவரும் வெளியே சென்றார்கள். அவர் இவனை கவனித்தது போல அவனும் அவர் மேல் மிகுந்த பாசம் கொண்டிருந்தான். கண்ணுக்கு தெரியாத ஒரு பிணைப்பு இருவருக்குள்ளும் உருவாகியிருந்தது.

அப்படி சென்றுக் கொண்டிருந்த போது திடீரென்று ஒரு நாள் தர்மராஜ் வாயை விட்டார்.

தொழிலாளர் சம்பந்தமான‌ ஏதோ ஒரு விவாதத்தில் அவர் “உனக்கு குடும்பம்னு இருந்தா தானே இதெல்லாம் தெரியும்?” என்று பேசி விட அப்போது அவனுக்கு ஒரு மாதிரியாகி போனது. 

இருந்தாலும் அவன் தன்னை சுதாரித்துக் கொண்டான். ஆனால் போகப் போக இப்படியே அவர் பேச ஆரம்பித்தார். அவனையும் மட்டம் தட்ட ஆரம்பித்தார். 

ஓரளவு நல்ல உறவு முறையில் இருந்தவர்கள் அவரின் சிறுமைத்தனமான பேச்சில் அவர்களுக்கு இடையில் மெல்ல மெல்ல விரிசல் வந்தது. அது இப்போது அவனை கொலை செய்ய தூண்டும் வரைக்கும் வந்து விட்டது.

நித்திலா அவன் அருகில் வர அமைதியாக ஓவியன் அவள் மடியில் படுத்துக் கொண்டான்.

அவளது மடி அவனுக்கு ஆழ்ந்த அமைதி கொடுக்க அப்படியே உறங்கி போனான்.

ஓவியனின் தாத்தா ஜெகநாதன் அவனது தொழிலை பார்வையிட்டார். 

மகேந்திரன் அவரிடம் அனைத்தையும் காட்டினான். அதே போல தொழிலில் ஏற்பட்ட நிகழ்வுகளையும் சொல்ல அவர் அதிர்ந்து போனார். 

“உன்கிட்ட நான் எதுன்னாலும் சொல்லுன்னு சொல்லி இருக்கேன்ல. நீ ஏன் சொல்லாம இருந்த?”

“இல்லைங்க சார். அவரு சரியா வராததால எல்லா பொறுப்பும் நான் பார்த்துக்கிட்டேன். அவரும் எல்லாம் செக் பண்ணிட்டு இருந்தாரு. அதனால் உங்களுக்கு போன் பண்ண முடியல சார்” என்று கூறினான். 

“இங்க பாரு இனிமேல் என்ன நடந்தாலும் நீ இன்ஃபார்ம் பண்ணியாகணும்” என்று அவர் கண்டிப்புடன் கூற சரி என்று தலையாட்டினான்.

அவன் தொழிலில் ஏற்பட்ட அனைத்து நிகழ்வுகளையும் அவர் நொடியில் சரி செய்து இருந்தார். 

ஜெகநாதன் வசந்தா ரத்னத்தின் அம்மா அப்பா. ஜெகநாதன் ஜெகே இண்டஸ்ட்ரீஸ் என்ற சாம்ராஜ்யத்தின் மன்னன். 

அவர் கட்டிட தொழில் சம்பந்தமான அனைத்து தொழில்களையும் செய்தார். அதனால்தான் ஓவியனுக்கு கூட டைல்ஸ் தொழிலின் மீது ஆசை வந்தது.

ஆரம்பத்தில் ரத்னம் அனைத்து தொழில்களையும் பார்த்தாலும் அவருடைய நடத்தையால் அவரைப் பெற்றவர்களுக்கு அனைத்தும் வெறுத்து போனது. 

அதனால் ஒரு குறிப்பிட்ட பகுதியை அவருக்கு எழுதிக் கொடுத்து தனியாக பிரித்து அனுப்பி விட்டார். அப்போதும் ரத்னம் சொத்தை பிரிக்க சொல்லி பிரச்சனை செய்தார். 

ஆனால் நான் சம்பாதித்த சொத்து. அது என் இஷ்டம் என்றவர் அவரை தள்ளி வைத்து விட்டார். இது ரத்னத்திற்கு பெரும் கோவத்தை உண்டாக்கியது. ஆனாலும் சொத்தை எப்படி வாங்க வேண்டும் என திட்டம் போட்டுக் கொண்டிருந்தார். ஓவியன் விலகி நின்றது அவருக்கு வசதியாகி போனது.

ஆனால் இப்போது…

ஜெகநாதன் முடிவு செய்துவிட்டார். ஓவியனை தன்னுடைய சாம்ராஜ்யத்தின் இளவரசன் ஆக்க வேண்டும் என. 

மனதில் முடிவெடுத்துக் கொண்டவர் பேரனை பார்க்க வீட்டிற்கு கிளம்பி விட்டார். 

அவர் வீட்டுக்குப் போகையில் ஓவியன் தனது போனை பார்த்துக் கொண்டிருந்தான்.

“ஓவியா”

“சொல்லுங்க தாத்தா”

“இப்போ கை வலி பரவாயில்லையா?”

“நாட் பேட் தாத்தா”

“ஓகே. எதை பத்தியும் கவலைப்படாத. தாத்தா எல்லாத்தையும் சரி பண்ணிட்டேன்”

“தாத்தா நான் உங்கள என் பிஸினஸ்ல தலையிட வேணாம்னு சொல்லிருக்கேன்ல”

“நானும் உன் பிசினஸ்ல ஏதாவது பிரச்சனை வந்தா சொல்லுன்னு சொல்லி இருக்கேன்ல” என்று கண்டிப்புடன் கேட்டார்.

“தாத்தா” என்று அவன் குரல் இறங்கியது. 

வாஞ்சையாக அவன் தலையைக் கோதியவர் “நீ இங்க கஷ்டப்பட்ட வரையும் போதும் ஓவியா. நீ அங்க வா. வந்து என்னோட தொழிலை பார்த்துக்கோ”

“அப்போ என் பிஸினஸ் யார் பார்ப்பா?” என்று கடுப்புடன் கேட்டான். 

“நம்ம அதுக்கு ஆள போட்டுக்கலாம். நீ அங்க வா. இதுக்கு மேலயும் நான் என் பையனை சும்மா விட போறதில்ல. அவனை என் பையன்னு சொல்லிக்கவே கேவலமா இருக்குது” என்று கோபத்துடன் கூறியவர் 

“நீ அங்க வா ஓவியன். அவனை இனி சும்மா விடக்கூடாது. எவ்வளவு தைரியம் இருந்தா என் பேரன் மேலேயே கை வைப்பான்” என்று கூறிக் கொண்டு வந்தவருக்கு குரல் கமறியது.

அவரைப் பார்த்து “தாத்தா” என்று அதிர்ந்தான்.

“வந்துரு ஓவியன். நடக்கறது எல்லாம் பார்க்க பார்க்க தாத்தாக்கு தெம்பில்லடா. நான் என் பேரனோட நிம்மதியா என் கடைசி காலத்துல சந்தோசமா இருக்க ஆசைப்படுறேன்” என்று கண் கலங்க கூறினார்.

அவர் பேசுவதை கேட்க அவனுக்கு தேற்றக் கூட வாய் வராமல் போனது.

“ஆமா ஓவியன். வந்துரு ஓவியன். எங்களுக்கு இப்பவும் இந்த தனிமையா? எங்களுக்கு இந்த தண்டனை போதும்பா” என்று வசந்தாவும் அழ ‘கடவுளே… தனக்கிருந்த வேதனையில் இவர்களை எவ்வளவு துடிக்க வைத்து விட்டோம்’ என்று அப்போதுதான் ஓவியனுக்கு புரிந்தது.

அவர்களைத் தேற்றியவன் “கவலைப்படாதீங்க தாத்தா. நான் அங்க வரேன். உங்கள கஷ்டப்பட வைச்சதுக்கு என்னை மன்னிச்சிடுங்க” என்று கண்கலங்கி கூறினான்.

“நீ வரேன்னு சொன்னதே எங்களுக்கு போதும்பா” என்றவர் அப்போதே 10 வயது குறைவது போல சந்தோசமாக கூச்சலிட்டார். 

வசந்தாவும் சந்தோஷத்தை கொண்டாட இனிப்பு செய்ய சென்றார்.

 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!