ஒளி 5

 

இரண்டு நாட்கள் ஓவியன் மருத்துவமனையில் இருந்தான். நித்திலாவும், கண்ணனும் அவனோடு இருந்து கவனித்துக் கொண்டனர்.

ஓவியன் இந்த இரண்டு நாட்களும் கண்ணனிடம் ஏதும் பேசவில்லை. கண்ணன் பல விதத்தில் பேச முயற்சி செய்தும் அவன் ஏதும் பேசவில்லை. நித்திலாவிடம் மட்டுமே அவன் பேசினான்.

“ஓவியா சாரிடா ஏன் டா என்கிட்ட பேச மாட்டேங்குற?‌ என்கிட்ட பேசுடா” என்றவன் கெஞ்ச ஆரம்பித்தான்.

ஓவியனோ கண்ணன் பேசுவதை கண்டு கொள்ளவில்லை.

அவன் முறைத்துக் கொண்டு எழுந்து நடக்க முயற்சி செய்தான். அதைப் பார்த்தவன் பதறி போய் அவன் அருகில் வர அவசரமாக நகர்ந்தவன் அங்கிருந்த சுவற்றில் மோதினான்.

“ஓவியன்”

“வேணாம். எனக்கு யாரும் தேவையில்லை. யாரும் என்கிட்ட பரிதாபம் காட்டத் தேவையில்லை. என்னை நான் பார்த்துப்பேன்” என்று தடுமாற்றத்துடன் கூறியவன் அவனது உதவியை ஏற்காது ரெஸ்ட் ரூம் சென்று வந்தான்.

கண்ணனை அந்த செயல் மிகவும் காயப்படுத்தியது. தான் சொன்னதுக்கு இது வேண்டும் என்று அவன் தன்னைத் தானே திட்டிக் கொண்டான்.

கண்ணன் டிஸ்சார்ஜ் பற்றி மருத்துவரிடம் பேச போன‌ போது நித்திலா அங்கு வந்தாள்.

“இப்போ வலி பரவாயில்லையா ஓவியன்?” என்று கேட்டாள்.

“பரவாயில்ல மேம். ஐ வில் மேனேஜ்” என்று புன்னகையுடன் கூறினான்.

“இன்னைக்கு டிஸ்சார்ஜ்னு சொல்லி இருக்காங்க இல்ல.உங்க வீட்ல யாரு இருக்கா? உங்கள நான் எப்படி தனியா விடுறது?” என்று சிந்தனையுடன் நித்திலா கேட்டாள்.

“நான் பார்த்துப்பேன் மேம். இத்தனை நாள் எனக்கு யாரு இருந்தா? மகேந்திரன் வருவான். நான் மெசேஜ் பண்ணிப்பேன் மேம்” என்று சொல்ல அப்போதும் அவள் மனம் சிந்தனையில் ஆழ்ந்தது.

“நீங்க உங்களுக்கு உடம்பு சரியாக வரையும் எங்க வீட்ல வந்து இருக்கீங்களா?” என்றவள் கேட்க ஓவியன் திடுக்கிட்டு போய் பார்த்தான்.

“மேம் என்ன சொல்றீங்க?” என்று அதிர்ச்சியான குரலில் கேட்டான்.

“அவ உண்மைய தான்டா சொன்னா. ஏன் அவ சொன்னதுல என்ன தப்பு இருக்குது?” என்று கண்ணன் கேட்டுக் கொண்டே உள்ளே வந்தான்.

அவனைப் பார்த்து முறைத்தவன் “இல்ல மேம். உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம்? இத்தனை நாளா உடம்பு சரியில்லாதப்போ யாராவது வந்து என்னை கவனிச்சுக்கிட்டாங்களா என்ன? இதெல்லாம் எனக்கு பழக்கம் தான் மேம்” என்றவன் குரலில் வலியுடன் கூறினான்.

அவனுடைய அந்த வார்த்தை இருவரையும் ஏதோ செய்தது.

“ஓவியன் உங்களுக்கு யாரும் இல்லனு என்னைக்குமே நினைக்காதீங்க. நான் உங்க கூட எப்பவுமே இருப்பேன்” என்று நித்திலா அவன் கையை அழுத்தி ஆறுதலாக சொல்ல ஓவியன் சமைந்து போய் அவளையே பார்த்திருந்தான்.

“ஓவியன் என்ன ஒன்னும் பேச மாட்டேங்கிறீங்க?” என்று அவனை உலுக்கினாள் நித்திலா.

“நத்திங் மேம். தேங்க்ஸ் மேம்” என்றவன் சொல்ல இப்போது நித்திலா அவனை முறைத்தாள்.

“மேம்” என்றவன் அவளை தயக்கமாய் நோக்கினான்.

“கண்ணனை மரியாதையா தான் பேசிட்டு இருக்கீங்களா நீங்க?” என்றவள் செல்லமாய் கோபம் காட்டினாள்.

ஒரு பெருமூச்சுடன் கண்ணனை பார்த்தவன் “இனி நான் மரியாதையா பேச பழகிப்பேன் மேம்” என்று விரக்தியான குரலில் கூறினான்.

“என்னடா பண்ணி வெச்ச? அவரு வாய்ஸே சரியில்ல” என்று நித்திலா குரலை உயர்த்தினாள். தனக்காக தனது அண்ணனிடம் சண்டை போடும் அவளை ஓவியன் வியப்பாக பார்த்தான்.

“அது… வந்து… நித்திலா…” என்று ஆரம்பித்தவன் தட்டு தடுமாறி சொல்லி முடிக்க அவன் முடிக்கும் முன்னே கண்ணனை ஓங்கி அறைந்திருந்தாள்.

“என்னடா நெனச்சிட்டு இருக்குற நீ? அவர் உனக்கு எத்தனை வருஷ ஃப்ரெண்டு? நீயே அவரை இப்படி பேசினா அவர் என்ன பண்ணுவாரு?” என்று கோபமாய் கேட்டாள்.

ஏற்கனவே அவள் அடித்ததிலேயே திணறிப் போய் இருந்தவன் அடுத்து அவள் கேட்ட கேள்வியில் என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாக நின்றான்.

“இல்லடா… அப்பா மேல கை வச்சுட்டான்ங்கற பதட்டத்துல…” என்றவன் தயக்கமாய் ஆரம்பிக்க “டேய் ஏதும் பேசிடாத எரும. அப்படின்னா அப்பாவும் அன்னைக்கு இந்த மாதிரி தான் ஏதோ பேசிருக்காரு. அப்படித்தானே?” என்று கேட்டவளை ஓவியன் மெச்சுதலாக பார்த்தான்.

கண்ணன் என்ன சொல்வது என்று புரியாமல் அமைதியாக இருந்தான்.

“சொல்லுடா எரும மாடு. வாயில கொழுக்கட்டையா வெச்சிருக்கிற?” என்றவள் கோபமாய் கத்த அவளின் அந்த கோபம் கூட ஓவியம் மனதை யாரோ மயிலிறகால் வருடியது போல இருந்தது.

“ஆமாடா. அப்பா இது மாதிரி தான் ஏதோ ஃபேமிலி வச்சு பேசி இருக்காரு. ஒரு கட்டத்துல அவன் கோபத்தை கண்ட்ரோல் பண்ண முடியாம தான் அவர் சட்டைய பிடிச்சிருக்கான்” என்ற விளக்கம் கொடுத்தான்.

“ஓவியன் நிஜமாவா?” என்று நித்திலா அதிர்ச்சியாக கேட்டாள்.

“இது எனக்கு புதுசா மேடம்? ரெண்டு மூணு வருஷமா இப்படித்தானே பேசிட்டு இருக்காரு. என்ன எவ்வளவோ தான் காதுல வாங்கிக்காம போனாலும் இப்பல்லாம் வலிக்காத மாதிரி கூட நடிக்க முடியல மேம்” என்று அவன் கலங்கிய குரலில் சொன்னான்.

“வாட்? என்னடா பேசுற நீ?” என்று கண்ணன் அதிர்ச்சியில் உறைந்து நின்றான்.

“ஓவியன்” என்றவளுக்கு மேலே பேச வார்த்தைகள் வரவில்லை. ‘தனது அப்பாவா?’ என்று அவள் நினைத்ததில் அவளது மனம் அங்கேயே நின்றது.

ஏற்கனவே தற்போது நடந்ததே அவளால் ஜீரணிக்க  முடியவில்லை. ஆனால் இவன் ரெண்டு மூணு வருஷமாவே இப்படி பேசறாருன்னு சொல்றானே என்று தனக்குள் அமிழ்ந்தாள்.

“டேய்… மச்சான்.. சாரிடா… என்னை மன்னிச்சிடுடா… ப்ளீஸ்டா…” என்று அவனை கட்டிப்பிடித்து மன்னிப்பு கேட்டவன் “ஏன்டா இவ்ளோ நாளா சொல்லல என்கிட்ட?” என்று கண்ணன் கோபமாய் கேட்க ஓவியன் விரக்தியாய் சிரித்தான்.

“சொன்னதுக்கு தான் நீ சூப்பரா ரியாக்ட் பண்ணியே” என்று கண்ணுக்கு எட்டாத முறுவலுடன் கூறியவன் “தேங்க் காட். இப்போ நீ எப்படினு அவரு எனக்கு காமிச்சுட்டாருடா” என்று வறண்ட குரலில் கூறினான்.

“டேய்” என்று கண்ணன் கலங்கிய குரலில் கூப்பிட்டான்.

“இனி என் லைஃப்ல ஃபிரண்ட்ஸ்னு யாரும் கிடையாது. நீ எவ்ளோ பெரிய லெசன் எனக்கு கத்து கொடுத்திருக்க. தேங்க்ஸ் மிஸ்டர். கண்ணன்” என்று முழுவதுமாக ஓவியன் அவனை எட்ட நிறுத்தினான்.

அந்த குரலில் கண்ணன் மிகவும் கலங்கி போனான்.

“மச்சான்… நான்‌ பண்ணது தப்பு தான்டா. ஆனா‌ அப்பா…‌ ப்ளீஸ்டா… இனி உன்னை யாரும் எதுவும் பேசாம நான் பார்த்துக்கிறேன்டா. என்னை ஒதுக்கிடாதடா” என்று‌ கெஞ்சல் குரலில் கூறினான்.

“ஹேய்… நீ ஏன் கண்ணன்‌ எமோஷனல் ஆகற? நமக்குள்ள அப்படி‌‌ ஒண்ணும் ஃபிரண்ட்ஷிப் இல்ல தானே? உன்கிட்ட கோபப்பட எனக்கென்னடா ரைட்ஸ் இருக்கு” என்று ஓவியன் வெற்று குரலில் பேசினான்.

“ஸ்டாப் இட். ரெண்டு பேரும் நிறுத்தறீங்களா?” என்று நித்திலா கத்தினாள்.

“ஓவியன் அவன் தான் அவ்ளோ சொல்றான் தானே? ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்கறீங்க?”

“எனக்குனு யாரும் ஃபிரண்ட்ஸ் இதுவரையும் இருந்ததில்ல மேம்.ஒரு ஹாய், பையோட அவ்ளோ தான். இத்தனை நாள்ல இவன் தான் எனக்கு ஃபிரண்டா இருந்தான் மேம். அதான் அவன் சொன்ன வார்த்தைய என்னால தாங்கிக்க முடியல” என்று தழுதழுப்பான குரலில் கூறினான்.

“ஓவியன் இனி இந்த தப்பு நடக்காதுடா. ப்ளீஸ்டா… அப்பா இவ்ளோ நாளா… கடவுளே” என்று மறுகியவன்

“என்னை நம்புடா ஓவியா” என்று கெஞ்சினான்.

“ஹேய்… போதும் நிறுத்துங்கடா ரெண்டு பேரும். கண்ணா இனி ஓவியன் உன் பொறுப்பு. அதே போல ஓவியன் நாங்க இருக்கோம். இனி எதுக்கும் ஃபீல் பண்ண கூடாது” என்றவள் அதட்ட சரி என்று தலையாட்டினான்.

கண்ணன் சந்தோஷமாக அவனை வந்து கட்டிக் கொள்ள “டேய் பக்கி ஸ்கூல் பிள்ளைகளே பரவாயில்ல போலடா” என்றவள் தலையில் அடித்துக் கொண்டாள்.

கண்ணன் ஈஈ என இளித்து வைத்தான்.

“கண்ணா எப்போ டிஸ்சார்ஜ்? டாக்டர் என்ன சொன்னாங்க?” என்று விசாரித்தாள்.

“ப்ரொசீஜர் முடிஞ்சா கிளம்ப வேண்டியது தான்” என்றவன் “ஓவியா எங்க வீட்டுக்கு வாடா. அங்க தனியா என்ன பண்ணுவ?” என கேட்க ஓவியனின் முகம் இறுகியது.

“ரிலாக்ஸ் ஓவியன். உங்க வீட்லயே இருங்க. கண்ணன் அங்க வந்து தங்கிக்கட்டும்” என்று சொல்ல ஓவியன் ஏதும் பேசாமல் அமைதியாக இருந்தான்.

ஒரு வழியாக அனைத்து ஃபார்மாலிட்டிஸும் முடிந்து அவர்கள் மருத்துவமனையை விட்டு வெளியேறினர். அவன் டிஸ்சார்ஜ் ஆகும் போது தாத்தாவும் கூட வந்தார்.

நித்திலா வீட்டுக்கு வந்து தேவையான உதவிகளை செய்தவள் தாத்தாவுடன் தன் வீட்டுக்கு கிளம்பினாள். அதோடு இரவுக்கு தேவையான உணவையும் சமைத்து வைத்தாள்.

அவர்கள் இருவரும் சென்றதும் ஓவியன் தனது போனை நோண்ட முயற்சி செய்தான். ஆனால் கை வலிக்கவே அவனால் அது கூட செய்ய முடியவில்லை.

அவனது முகம் வலியை காட்ட “ஓவியன் ஏன்டா கை வலிக்குதா? என்னடா வேணும். சொல்லுடா” என்று கேட்க அப்போதும் அவன் அமைதியாய் இருந்தான்.

“ஓவியன்” என்றவன் திரும்ப திரும்ப கூப்பிட்டும் அவன் பதில் சொல்லவில்லை.

“டேய் ஏன்டா பேச மாட்டேங்கற?”

“என் மேல‌ யாரும் அக்கறை காட்ட வேண்டாம். இப்போ மகேந்திரன் வருவான். நீங்க கிளம்புங்க” என்று இறுகிய குரலில் கூறினான்.

“டேய்”

“வேண்டாம். எனக்கு யாரும் வேண்டாம்” என்றவன் அமைதியாக கண்களை மூடி அமர்ந்துக் கொண்டான்.

கண்ணன் என்ன செய்வதென்று புரியாமல் பார்த்திருக்க அப்போது அங்கே மகேந்திரன் வந்தான்.

“என்னடா நீ இங்க என்ன பண்ற?”

“அண்ணா தான் வர சொன்னாங்க” என்றான்.

“சரிடா. நான் கிளம்பறேன். எனக்கு அப்பப்போ கால் பண்ணு” என்றவன் அங்கிருந்து வெளியேறினான்.

ஓவியன் அடுத்த நாள் எழ முயற்சி செய்த போது எழ முடியவில்லை. கை, கால் ஏற்கனவே வலியாய் இருக்க உடம்பு அவ்வளவு வலித்தது.

தட்டு தடுமாறி எழுந்தவன் நடக்க முயற்சிக்க பேலன்ஸ் இல்லாமல் தடுமாறி விழ போக அவனை கண்ணன் வந்து தாங்கி பிடித்தான்.

மகேந்திரன் இரவு வந்தவன் அவனை கவனித்தபடி தான் இருந்தான். ஆனாலும் அவனது அப்பாவிற்கு நெஞ்சு வலி என்று தகவல் வர ஓவியனே அவனை கிளம்ப சொல்லி விட்டான்.

தான் யார் துணையும் இல்லாமல் இருப்பது அவனுக்கு கஷ்டமாக இருந்தாலும் கண்ணன், தர்மராஜின் பேச்சுகளை ஞாபகம் வைத்தவன் அதனை தூசு போல கடந்துச் சென்றான்.

யாராவது ஆண் நர்ஸ்க்கு சொல்லலாமா என்று‌ யோசித்துக் கொண்டிருந்த வேளையில் கண்ணன் வந்தான். அவனை பார்த்ததும் அவன் கண்களில் ரௌத்திரம் பொங்கியது.

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page