காதல் 14

தன் மேல் விழுந்தவளைக் கண்டவனின் கண்களில் வஞ்சக புன்னகை குடிகொண்டது. சில நொடிகளுக்குப் பிறகு ஆபரேஷன் அறையில் இருந்து வெளியே வந்தவன், 

வெளியே காத்துக்கொண்டிருந்த அந்தப் பெண்ணின் உறவுக்காரரிடம், ஆண் குழந்தை பிறந்திருப்பதாகவும் தாயும் சேயும் நலமாக இருக்கிறார்கள், மயக்கம் தெளிந்ததும் பார்க்கலாம் என்று கூறிவிட்டு, வேகமாகத் தன் நடையைச் செலுத்தியவனின் கால்கள் சென்றது டாக்டர் ஜீவா MBBS MS என்ற பெயர் பலகை இருக்கும் அறைக்குள். 

அறைக்குள் அவன் நுழைந்த கம்பீரமே இது அவனுக்கான அறை என்பதைத் தெரிவித்தது. 

உள்ளே சென்றவன் மயக்க நிலையில் இருந்த ஜியாவையே கண் இமைக்காமல் பார்த்துவிட்டு, மெலிதாய் புன்னகைத்து தன் மொபைலில் அவளது புகைப்படத்தை எடுத்தவன், வாட்சப் மூலமாய் யாருக்கோ அன்னுப்ப, அவன் அனுப்பிய சில நொடியில் அந்த நபரிடம் இருந்து அழைப்பு வர, அழைப்பைக் கண்டு சிரித்தவன் கடைசி ரிங்கில் அட்டென்ட் செய்து, 

“நான் சொன்ன போது நம்பலை, இப்போ பயந்து போய் கால் பண்ற?”

“ஆமாடா, இங்க என்ன பண்ணிட்டு இருக்கா?”

“நான்தான் சொன்னனே…”

“அவ பழைய மாதிரி நார்மல் ஆகிட்டாளா என்ன? மறுபடியும் சர்ஜரி பண்ண ஆரம்பிச்சுட்டாளா?”

“நார்மல் எல்லாம் ஆகல, என்னைப் பார்த்ததும் அப்படியே மயங்கி விழுந்திட்டா.”

“இருக்கட்டும், ஆனாலும் சர்ஜரி பண்ண ரெடியா இருந்தனால தானே இவ்வளவும் நடந்திருக்கு. அவ பழைய ஃபார்ம்க்கு வந்துட்டா அவ்வளவுதான்.”

“வரமாட்டா, அவளுக்கு நம்ம மேல பயம் இருக்கிறவரைக்கும் அவ நாம சொல்றபடியெல்லாம் கேட்குற ஒரு பொம்மை. அந்தப் பயத்தை நாம அப்போ அப்போ காட்டணும், இவ்வளவு நாள் அதைப் பண்ணாம போனதுதான் தப்பு.”

“எனக்கு என்னமோ பண்ணுது…”

“டேய் அவளோட ட்ரம்ப் கார்ட் நம்மகிட்ட இருக்கிற வரைக்கும் நோ டென்ஷன், நீ ஊருக்கு வா அப்புறம் பேசிக்கலாம்.”

“ஓகே ஜீவா, அவளை விட்றாத. முடிஞ்சா அவ கதையை க்ளோஸ் பண்ணிரு.”

“அப்புறம் மேல சொல்லுடா, என்னைப் போலீஸ் புடிச்சுட்டு போகட்டும், நான் கம்பி எண்ணறது இப்படி எல்லாத்தையும் சொல்லு. ஒழுங்கா ஒரு தப்பை தடயம் இல்லாம செய்ய வழியில்லை, இதுல நீயெல்லாம் ஐடியானு எதையும் தராத புரியுதா? அவளைக் கொலை பண்ணணும்னா அன்னைக்கே பண்ணிருக்கலாமே? ஏன் இவ்வளவு நாள் வெயிட் பண்ணணும்? ஏற்கனவே ஒரு விஷயத்தைப் பண்ணி கஷ்டப்பட்டதெல்லாம் போதும். அப்புறம் இவளையும் கொலை பண்ணி ஒருவேளை மாட்டிக்கிட்டா அவ்வளவுதான், மறுபேச்சே கிடையாது நம்மளை நாமளே குத்திட்டுச் சாகுறதுதான் ஒரே வழி.

நாம சாகாட்டாலும் சாவு நம்மளை தேடி வரும், என்ன எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கா, ஏற்கனவே இந்த ஐடியாவை குடுத்துட்டு சாவோட விளிம்பு வர நீ போய்ட்டு வந்தது உனக்கு மறந்துட்டுனு நினைக்கிறேன், நியாபகப்படுத்தணுமா என்ன?”

“சாரிடா”

“அவளுக்கு நாம தள்ளி இருந்தே டார்ச்சர் குடுக்கணும், மெண்டல் டார்ச்சர் குடுக்கணும். சாகவும் முடியாம வாழவும் முடியாம அவ தவிக்கணும்.”

“சரியா சொன்ன.”

“ம்ம் சரி, எதோ ஃபோன் அடிக்குது அவளோட ஹாண்ட் பேக்ல இருந்து சத்தம் கேட்குது. நான் அப்புறம் பேசுறேன்.” என்று அழைப்பைத் துண்டித்தான். 

ஜியாவின் கைப்பையில் இருந்து சிணுங்கி கொண்டிருந்த அலைபேசியை எடுத்தவன் ஸ்க்ரீனில், ஹோம் காலிங் என்று வருவதைப் பார்த்து கட் செய்து, ஜியாவின் மொபைல் ஸ்க்ரீனில் அவளுடைய புகைப்படத்தைப் பார்த்தவன், சில நொடிகள் யோசித்துவிட்டு, அவளது அருகில் தன் முகத்தைக் கொண்டு வந்து, அவளது மொபைலில் தன்னையும் அவளையும் சேர்த்து செல்ஃபி எடுத்துக்கொண்டு இந்தப் புகைப்படத்தை ஸ்க்ரீன் சேவராய் செட் செய்து, அவளது மொபைல் நம்பரையும் நோட் செய்தவன், 

“பெர்ஃபெக்ட், யுவர் டைம் ஸ்டார்ட்ஸ் நவ்! எத்தனை நாள் எங்க தூக்கத்தைக் கெடுத்த? இப்போ நான் குடுக்கப் போற டார்ச்சர்ல நீ தூங்கவே கூடாது.” என்று கூறும் பொழுதே, அவனது பேச்சில் ஒருவித அரக்கத்தனம் தலை தூக்கியது. 

அங்கிருந்து செல்ல போனவன் தன் உதட்டில் தளும்பிய புன்னகையோடு அவள் பக்கம் திரும்பி, தன் கண்களால் அவளை விழுங்குவது போலப் பார்த்து, 

“மதுவையும் மாதுவையும் நாமதான் தேடி போகக் கூடாது, அதுவா வந்தா…” என்று சிரித்தவனின் சிரிப்பில், அவனது வக்கிரபுத்தி தெளிவாகத் தெரிந்தது. 

அதே வெறியோடு அவளது இதழ் நோக்கி குனிவதற்குள் ஜியாவின் கண்கள் அசைய, அவள் மயக்கத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாய் தெளிவு கொள்வதை உணர்ந்தவன், 

உன்னைப் பிறகு பார்த்துக்கொள்கிறேன் என்பது போலப் பார்த்து, தன் கண்களாலே அவளை வேட்டையாடிவிட்டு தன் அறையை விட்டுக் கிளம்பினான். 

சில மணி நேரத்துளிகளுக்குப் பிறகு கண் முழித்தவள், தன் நெஞ்சைப் பிடித்தவாறே எழுந்து அமர, அவளுக்கு ஆப்ரேஷன் அறையில் நடந்தது தன் பழைய கசப்பான நிகழ்வுகள் என்று அனைத்தும் நினைவிற்கு வர, சுற்றும் முற்றும் பார்த்தவள், தப்பித்தால் போதும் என்று அங்கிருந்து ஓடினாள். இதை அனைத்தையும் தூரமாகக் கவனித்துக் கொண்டிருந்த ஜீவா அதே சிரிப்புடன், “தப்பிச்சுட்டோம்னு ஓடுறியா, ஓடு ஆனா நீ எங்க ஓடுனாலும் என்கிட்டதான் வந்தாகணும்.” என்றான் அழுத்தமாக. 

ரோட்டில் எந்த ஆட்டோவும் நிற்காமல் போகப் பின்னால் திரும்பி தன்னை யாரும் துரத்துகிறார்களா என்று பார்த்தவாறே பதற்றத்துடன் ஜியா சென்றாள். 

அப்பொழுது ஜியாவின் செல்ஃபோன் தன் இருப்பிடத்தைக் காட்ட, பெயர் இல்லாத நம்பர் வரவும் அட்டென்ட் செய்யாமல் விட்டுவிட, 

மேலும் அவளது அலைபேசி சிணுங்க, இந்தமுறை வாட்சப்பில் குறுஞ்செய்தி வர, கைகள் நடுநடுங்க தட்டிப் பார்த்தவளின் கண்களில் முதலில் பட்டது, “அவ்வளவு சீக்கிரமா நீ தப்ப முடியாது.” என்ற செய்தி அதைத் தொடர்ந்து மாண்டு போன ஒரு சிசுவின் புகைப்படம் இருக்க, முகமெல்லாம் வியர்த்துக்கொட்ட, கைகள் வெடவெடக்க நின்றவளை மேலும் அச்சுறுத்தும் வண்ணமாய் வந்த வீடியோ மொத்தமாக ஜியாவைப் புரட்டிப் போட்டது. 

மீண்டும் அலைபேசி சிணுங்க முன்பு வந்த அதே பெயர் தெரியாத நபரிடம் இருந்து அழைப்பு வர, ஒருமுறை அட்டென்ட் செய்யாததுக்குக் கிடைத்த தண்டனை அவளை உயிரோடும் புதைக்க, இந்தமுறை முதல் ரிங்கிலே அவசர அவசரமாய் அட்டென்ட் செய்தவள்,

எதிர்முனையில் பயங்கரச் சிரிப்புச் சத்தத்தைத் தொடர்ந்து, “ஐ லைக் இட்! என்ன என்னோட கிஃப்ட்டை பார்த்துட்டியா? எப்படி இருந்தது என் கிஃப்ட்? உனக்குப் பிடிச்சுருந்துச்சா? இன்னைக்கு இந்தச் சர்ப்ரைஸ் போதும்னு நினைக்கிறேன். 

இன்னொரு விஷயம் இனிமே நான் ஃபோன் பண்ணினா இக்னோர் பண்ணாத, எனக்கு அது சுத்தமா புடிக்காது. கிஃப்ட் இன்னும் கொடூரமா இருக்கும், அப்புறம் என் மேல வருத்தப்படக்கூடாது சரியா? 

ஜியா டார்லிங் சர்ஜரி பண்ணணும்னு இனிமே ஆசைப்படுவ?” என்று அவன் கேட்டதற்கு ஜியா எந்தப் பதிலும் கூறாமல் இருக்க கோபமுற்றவன், 

“உன்கிட்டதான் கேட்குறேன், ஆன்ஸர் மீ.” என்று கர்ஜிக்க நடுங்கியவள், “இல்லை… இனிமே மாட்டேன் ஜீவா.” என்று கண்ணீர் பொங்க அவள் கூறினாள்,

அவன், “ஏன் செல்லம் அழுற? நான் கேட்டவுடனே பதில் சொல்லிருக்கலாம்ல… நான் கத்திருக்க மாட்டேன்ல? ஓகே பாய் டியர்.” என்று அவன் அலைபேசியைத் துண்டிக்க, ஜியா முற்றிலுமாய் உடைந்து போனதுக்கு அவளது வதனமே சாட்சியாகும். 

தன் கண்களில் நீர் வழிய எதோ பித்துப் பிடித்தவள் போல ரோட்டில் தன்னை மறந்து நெஞ்சம் படப்படக்க லாரி, பஸ்கள், கார், பைக் என்று பலவிதமான வாகனங்களுக்கு நடுவே உணர்ச்சியற்றவளைப் போல ஜியா நடந்து சென்று கொண்டிருந்தாள். 

தியா முன் சீட்டிலும் ஆதர்ஷ் பின்னாலும் ஆஷிக் காரை ஒட்டிக்கொண்டிருக்க அப்பொழுது தியா, “நேற்று ராத்திரி நீ அவ வீட்ல என்ன பண்ணிட்டு இருந்த?” என்று ஆஷிக்கிடம் கேட்க,

“அதான் சொல்றேன்ல, அவதான் கொஞ்சம் ப்ராப்ளம் வானு என்னைக் கூப்பிட்டா, நானும் இரக்கப்பட்டு போனேன். கடைசில பிளேட்டை மாத்திட்டா, நான் என்ன பண்றது? உனக்கே தெரியும்ல, யாரும் உதவினு கேட்டா என்னால ஹெல்ப் பண்ணாம இருக்க முடியாதுனு. உனக்கு சந்தேகமா இருக்குனா ஆதர்ஷ்கிட்ட வேணும்னா கேளு. என்னடா ஆதர்ஷ்?” என்றவாறு கண்ணாடி வழியாக ஆதர்ஷைப் பார்த்து கண்ணடிக்க, 

“டேய் முன்னாடி பாரு.” என்று ஆதர்ஷ் கத்தியதில், முன்னே பார்த்தவன் தன் முன்னால் ஜியா வந்து கொண்டிருப்பதைப் பார்த்து சட்டென்று தன் ஸ்டீயரிங்கை திருப்ப, அது ஒரு போஸ்ட்டில் மோதி நின்றது. 

அந்த சடன் பிரேக்கால் தியாவிற்கு மட்டும் சிறிது காயம் ஏற்பட, இந்த நிகழ்வால் மொத்த ட்ராபிக்கும் ஸ்தம்பித்து நிற்க, தன் சீட் பெல்ட்டை கழற்றிய ஆஷிக் கோபமாகத் தன் காரை விட்டு கீழே இறங்கி, தன்னை மறந்து நடந்து சென்று கொண்டிருந்த ஜியாவை அழைக்க, ஜியாவோ எதைப் பற்றியும் யோசிக்காமல் எதிரே வந்த லாரியை கூடப் பார்க்காமல் பித்துப் பிடித்தவள் போல நடந்து செல்ல, 

அதைக் கண்டு பதறிய ஆஷிக், ஓடிச்சென்று அவளைத் தன் பக்கம் இழுக்க, அவன் இழுத்த வேகத்தில் தன் மீது விழுந்த ஜியாவை ஏந்தியவாறே, அவனும் சாலையோரமாக விழுந்தான். 

ஆதர்ஷ், தியா அங்கே வர ஆதர்ஷ், ஆஷிக்கிடம், “ஆஷிக் எப்படிடா இருக்க?” என்று பதற்றமாய் கேட்க,

“ம்ம்…”

“பாரு ஆஷிக், எனக்கு எப்படி அடிபட்டிருக்கு?” என்று தியா தன் சிறு காயத்தைப் பெரிதாக்க, அதைக் கண்டுக்காத ஆஷிக், ஜியாவைப் பார்த்து, 

“என்ன திருதிருனு பார்த்துட்டு இருக்க? அறிவு இருக்கா? இதென்ன உன் அப்பன் போட்ட ரோடா, உன் பாட்டுக்கு போற? ஜஸ்ட் மிஸ்… இல்லனா அடி பட்டு செத்து போயிருப்ப. பைத்தியமா நீ? பேசிட்டு இருக்கேன், பதில் சொல்லாமா அப்படியே நிக்கிற?” என்றவன், அவளது தோளைப் பிடித்து உலுக்க, அதில் தன் நிலையை அடைந்தவள் அவனைப் பார்த்து,

அவனது சட்டையைப் பற்றியவாறு, “ஆஷிக்… ஆஷிக்… எனக்குப் பயமா இருக்கு. அங்க அங்க…” என்றவள் கண்ணீர் மல்க, “எப்பவும் என் கூடவே இருப்பேன்னு சொன்னியேடா, ஏன் எனக்கு இப்படியொரு துரோகத்த பண்ணின? நீ என்னை விட்டுப் போனதாலதான் எனக்கு இப்படி ஒரு நிலைமை. நீ மட்டும் போகாம இருந்திருந்தா எனக்கு இப்படி எல்லாம் நடந்திருக்குமா? எனக்குப் பயமா இருக்கு, என்னை விட்டு போகாத ஆஷிக்…” என்றவள் பதற்றமுற்று மயக்கமாகி அவனது மார்பில் சாய்ந்தாள். 

ஜியாவின் நிலையைக் கண்டு பதற்றமுற்றவன் அவளைத் தன் கரத்தில் ஏந்தி, “ஆதர்ஷ் பல்ஸ் ரேட் ரொம்ப லோவா இருக்கு, ஹாஸ்பிடல் போகணும்.” என்று கூறிய மறுநொடி ஆதர்ஷ் ஹாஸ்பிடல் நோக்கி வண்டியை செலுத்த ஆஷிக், ஜியாவின் தலையைத் தன் மடியில் ஏந்தியவாறு தன் கண்கள் கலங்க,

ஜியாவின் இரு கரங்களையும் தேய்த்து விட்டவாறே மிகவும் பதற்றத்துடன், “ஜியா, ஜஸ்ட் ப்ளீஸ் ஓபன் யுவர் ஐஸ், உனக்கு எதுவும் ஆக விடமாட்டேன்.” கூற, அவனது குரலில் எங்கே ஜியாவிற்கு எதுவும் ஆகி விடுமோ என்ற பயம் தெரிந்தது.

***

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!