காதல் 17

தன்னவளைத் தன்னோடு சேர்த்து அணைத்தவாறே தன் விரலை அவளது கழுத்தில் விளையாட விட, கூச்சத்தில் லேசாக அவனைத் தள்ளிவிட்டவள் அங்கிருந்து செல்ல போக, ஜியாவின் கரம் பற்றி இழுத்தவன் அவளைத் தன் பக்கம் இழுத்து தன் மார்போடு சேர்த்து அணைத்துக்கொள்ள, அவளும் விருப்பமாய் அவன் மீது சாய்ந்து கொண்டாள். 

தன் கழுத்தின் வளைவில் தன் முகத்தைப் புதைத்தவனின் மூச்சு காற்று வெப்பத்தைச் சேர்க்க, இதற்கு மேல் முடியாதவளாய் தன்னவனது முதுகை இறுக்கப் பற்றிக்கொண்டாள். 

அவள் இறுக்கி அணைத்ததில் அவனது காயத்தில் இருந்து ரத்தம் கசிந்து அவளது விரல்களில் பட,

அதைக் கண்டவள் பதற்றமாய், “ஆஷிக்!” என்றழைக்க, 

காதலில் மிதந்து கொண்டிருந்தவன் “ம்…” என்று மட்டும் கூற, ரத்த கசிவு அதிகமானதால் அவனைத் தன்னிடம் இருந்து விலக்க,

“என்னாச்சு?”

“ஆஷிக், பிளட் உன்னோட முதுகு…”

“என்னோட…” என்றவாறு தன் முதுகைத் தொட்டு பார்த்த பிறகே அவனுக்கு எல்லாம் நினைவில் வர, 

“அது ஒன்னுமில்லை, சின்ன ஆக்சிடென்ட், ஒன்னுமில்லைமா…” என்று அவன் கூறியதில் புரிந்துகொண்டவள், கவலையுற்று தன் கண்கள் ஈரமாக,

“என்னால தானே ஆஷிக்?”

“அப்படிலாம் ஒன்னும் இல்லை…”

“அப்படித்தான்.”

“ஜியா!”

“ப்ளீஸ், ஃபர்ஸ்ட் எயிட் பாக்ஸ் எங்க இருக்கு?” என்று கேட்டவாறே தன் கண்களைத் துடைத்தவள், அவனை உட்கார வைத்து அவனது காயத்திற்கு மருந்து இட்டவாறு,

“ஆஷிக் இப்படியே விட்டா இன்ஃபெக்சன் ஆகிரும், ஸோ ஒரு ஊசி மட்டும் போட்ரு.”

“என்ன இன்ஜெக்சனா? நோ வே…”

“நீ இன்னும் சின்னக் குழந்தையா?”

“ஆமா”

“ஆஷிக் இன்பெக்சன் ஆகிரும்.”

“ம்ம்… அதான் நீ இருக்கல, இன்பெக்சன் ஆகாம பார்த்துக்கோ.”

“எப்படி?”

“இப்படி.” என்று பின்புறமாகத் தன்னோடு அணைத்துக்கொண்டவன்,

“அதான் பெரிய டாக்டர் அம்மா நீங்க இருக்கீங்களே? அதுவும் அறுவை சிகிச்சை எக்ஸ்பெர்ட்…” என்று கூறிய மறுநொடி, ஜியாவின் விழிகள் ரெண்டும் நீரில் மிதந்தது. 

மேலும் தன் அணைப்பை இறுக்கியவாறே ஆஷிக், “ஆமா ஜியா, நான் உன்கிட்ட ஒன்னு கேட்கணும்னு நினைச்சேன், லண்டன்ல MS முடிச்சதுக்கு அப்புறம், நீ எங்க வொர்க் பண்ணின? இந்தியா வந்துட்டியா, இல்லை அங்கையே கண்டினியு பண்ணுனியா? லண்டன்ல இருந்து இந்தியா ஏன் வந்த? அதுவும் ஏர்போர்ட்ல சாதாரண டூட்டி டாக்டரா ஏன் வொர்க் பண்ற? உன்னை மாதிரியான நல்ல டாக்டர்ஸ் இந்தக் காலத்துல பார்க்கிறதே கஷ்டமா இருக்கு, அதான் கேட்குறேன்.” என்று கேள்விகளை அடுக்கியவன், இப்பொழுது அவளது பதிலுக்காகக் காத்திருக்க, 

அவனது ஒவ்வொரு கேள்விகளும் உரையில் இருந்து வெளிவந்த கடி நுனைப் பகழி போல அவளது நெஞ்சைத் துளைக்க, பதில் கூறயிலாது தடுமாறினாள். 

“உன்கிட்டதான் கேட்குறேன்.” என்று தன் கன்னத்தை அவளது வதனத்தோடு உரசியவாறே அவன் கேட்க, 

“அது வந்து… ஆஷிக்…” என்ற ஒருவித தடுமாற்றத்தோடு அவனிடம் இருந்து விலக எத்தனித்தவளை, நன்கு பிடித்துக் கொண்டவன், தன் நாடியை அவளது தோளில் ஊன்றி கன்னமும் கன்னமும் உரசியவாறே, 

“ம்ம்… இப்படியே எங்கேயும் போகாம என்ன சொல்லணுமோ சொல்லு.” என்று தாபமாய் புன்னகைத்தான். 

கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தவள், “அது ஆஷிக்…” என்று தொண்டை விம்ம அழைக்க, அப்பொழுது ஆஷிக்கின் பேண்டின் பாக்கெட்டில் இருந்த அலைபேசி தன் இருப்பிடத்தைக் காட்ட, ரிங்டோனின் சத்தத்தால் ஜியா, ஆஷிக்கிடம் இருந்து விடுபட, அந்த நேரம் ஆஷிக், “இது என்ன புது ரிங்டோன்?” என்று கேள்வியாய் கேட்க, அப்பொழுதான் ஜியாவிற்கு அந்த ரிங்டோன் வந்தது தன்னுடைய அலைபேசியில் இருந்து என்பது புரிய, ஒருவேளை அழைப்பு ஜீவாவிடம் இருந்து வந்திருக்குமோ என்று பயத்தில் தன் கைகளைப் பிசைந்து கொண்டிருந்தாள்.

ஆஷிக் ஜியாவிடம், “ஒரு நிமிஷம்!” என்று தன் கைகளைக் காட்டிவிட்டு, தன் பேண்டின் பாக்கெட்டில் இருந்து அலைபேசியை எடுத்து, “இந்தப் ஃபோன் என்னுடையது இல்லையே, யாரது ஜீவா?” என்று கேட்ட மறுநொடி, ஜியாவிற்குத் தூக்கிவாரிப்போட்டது. பதற்றமுற்றவள் அவனது கையில் இருந்து அலைபேசியைச் சட்டென்று வாங்கிக் அழைப்பை சைலென்டில் போட்டுவிட்டு,

தன் கைப்பையில் இருந்த ஆஷிக்கின் அலைபேசியை எடுத்து அவனிடம் கொடுத்து, “ரெண்டு பேரோட ஃபோனும் மாறிடுச்சு.” என்று கூறிவிட்டு அங்கிருந்து செல்ல போனவளைத் தடுத்தவன், 

“எங்க போற?”

“வீட்டுக்கு போகணும், மொபைலை வாங்குறதுக்காகத்தான் நான் வந்தேன்.”

“இந்தப் ஃபோன்காக ராத்திரில என் வீட்டுக்கு வந்தியா?”

“ஆமா” என்று பட்டும் படமால் ஜியா கூற,

“நாளைக்குக் கூட வாங்கிருக்கலாமே?”

“எனக்கு வேணும்.” என்று தன் முகத்தைக் கூடப் பார்க்காமல் ஜியா கூற கடுப்பான ஆஷிக் தனக்குள், 

“ம்ம்… என்னைப் பார்க்கணும்னு ஆசை, ஃபோனை ஒரு சாக்கா சொல்ற. உன்னை என்னை பண்றேன்னு பாரு?” என்று கங்கணம் கட்டிக்கொண்டு,

“ராத்திரில ஃபோனை வாங்குறதுக்காக என் வீடு வரை வந்திருக்கனா கண்டிப்பா இதுல எதோ இருக்கு, அப்படி என்ன இதுல இருக்கு? ஜீவா யாரு? உன் ஃப்ரெண்டா?” என்று வேண்டுமெனக் கேட்பதை போலக் கேட்க பயமுற்ற ஜியா, ஆஷிக்கிடம் இருந்து தப்பிப்பதற்காக,

“யாரா இருந்தா உனக்கென்ன? நீ கேட்டா நான் பதில் சொல்லணுமா என்ன?”

“ஏன் கோபப்படுற? நான் சும்மா கேஷுவலா தானே கேட்டேன்.”

“எப்படிக் கேட்டாலும் நான் சொல்ல மாட்டேன், எங்க இருந்த, ஏன் இந்தியா வந்த, ஜீவா யாரு எவ்வளவு கேள்வி கேட்குற?”

“அதுல என்ன இருக்கு? நான் கேட்க கூடாதா?” என்று உரிமையாக ஆஷிக் கேட்க,

“கேட்க கூடாது, அது எனக்குப் புடிக்காது. என்னோட பெர்சனல யார்கிட்டயும் சொல்றது எனக்குப் பிடிக்காது. ஸோ என்னை விட்டு தள்ளியே இரு.” என்று தேளாய் கொட்ட, விஷமாய் அவள் கொட்டிய வார்த்தைகள் அவனது உள்ளத்தில் நஞ்சாய் கலந்தோட நெருப்பில் பட்ட புழுவாய் துடித்தான். தன் கண்கள் கலங்க அவளை நேருக்கு நேராகப் பார்த்த ஆஷிக்,

“வாட்! நான் உன்னை விட்டு தள்ளி இருக்கணுமா? ரியலி நான் யாரோவா உனக்கு? அப்போ இப்போ நமக்குள்ள நடந்துச்சே, அதை என்ன சொல்ல போற?” என்று அவன் கேட்க, சற்று நேரம் அமைதியாக இருந்தவள், 

தன் மௌனம் கலைந்து அவன் முகத்தைக் கூடப் பார்க்காது, “கெட்ட கனவா…” என்று அவள் முடிப்பதற்குள்,

“நினைச்சு மறந்திறணும் சரியா? பழகிடுச்சு… நீ குடுத்த முத்தத்துடைய ஈரம் கூட இன்னும் காயல, ஆனா அதுக்குள்ள உன் மனசுல உள்ளம் ஈரம் காஞ்சிருச்சா என்ன? உனக்கென்ன கல் மனசா? அது ஏன் என்னை மட்டும் ஒவ்வொரு தடவையும் சுக்கு நூறா உடைக்குது?” என்று கலங்கிய ஆஷிக்கை நேருக்கு நேராகக் கூடப் பார்க்க திராணியற்றவளாய் தலை குனிந்தே நிற்க,

கோபமுற்றவன், “உன்கிட்டதான் கேட்குறேன்…” என்று தன் கையில் இருந்த தனது ஃபோனை தூக்கி போட்டு உடைக்க,

“ஆஷிக் ப்ளீஸ்…”

“ப்ளீஸ்… ஃபார் வாட்? என் மனசு உடைஞ்சி போற சத்தம் உனக்குக் கேட்கலையா? என் வலியை உன்னால் பார்க்க முடியலையா? உன்கிட்ட காதலை மட்டும் தானே எதிர்பார்க்கிறேன், ஏன் என் மனசை ரணமாக்குற?”

“ஆஷிக்…”

“ஜியா, எனக்கு உன்னை நல்லாவே தெரியும், நீ ரொம்பவே மாறிட்ட. நீ என்கிட்ட நடத்துக்கிற விதம் ஒரு மாதிரியா இருக்கு, பேசுற வார்த்தை வேற மாதிரி இருக்கு. உன் பார்வை வேற எதையோ சொல்லுது. எதையோ நீ மறைக்கிற, உன்கிட்ட பதற்றமும் உன் கண்ல பயமும் அதிகமா தெரியுது. எதோ ஒன்னு உன் மனசை கஷ்டப்படுத்திட்டு இருக்கு. 

இங்க பாரு ஜியா, பயத்துல இருந்து தப்பிக்க ரெண்டு வழி இருக்கு. ஒன்னு பயத்தைப் பார்த்து பயந்து ஓடுறது, ரெண்டாவது பயத்தை எதிர்த்துப் போராடுறது. இதுல நீ என்னவா இருக்கப் போற? வாழ்க்கை முழுக்க ஓடிட்டே இருக்கப் போறியா, இல்லை அதை எதிர்த்து போராட போறியா?”

“நீ சொல்ற மாதிரி எதுவும் இல்லை, யாரையும் பார்த்து பயப்படணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை சரியா?”

“நீ பேசுன இந்த ரெண்டு வரியில கூட உன் கண்ல உண்மை இல்லையே ஜியா. நான் உன்னை ஃபோர்ஸ் பண்ணமாட்டேன், ஆனா ஒன்னு மட்டும் சொல்றேன், எப்போ உனக்கா என்கிட்ட மனசை விட்டு பேசணும்னு தோனுதோ, எப்போ என்கிட்ட பேசுனா உன் மனசுல உள்ள பாரம் குறையும்னு உனக்கு நம்பிக்கை வருதோ அப்போ சொல்லு, அந்த நாளுக்காக நான் காத்துக்கிட்டு இருப்பேன்.”

“என் மனசுல எதுவும் இல்லை, உன்னை மாதிரி ஒரு துரோகியோட சப்போர்ட் எனக்கு என்னைக்கும் தேவைப்படாது.”

“நான் துரோகியா? அது இப்போ என்னைக் கட்டி பிடிச்சியே அப்போ தோனலை?”

“தகுதி இல்லாதவங்க மேல அன்பு வைக்கிறது கூட ஒருவித முட்டாள் தனம்தான், என்கின்ற விஷயத்தை உன்னால எனக்கு ஞாபகபடுத்தாம இருக்க முடியாதுல?”

“எனக்குத் தகுதி இல்லையா? ஆமா, ஏன் சொல்லமாட்ட? இன்னும் சொல்லுவ, இதுக்கு மேலயும் சொல்லுவ… தகுதி உள்ளவங்க மேலயே உன் அன்பை காட்டு. என் மனசுல இருந்து நான் அவ்வளவு பேசுனேன், ஆனா உன் மனசு எதை எடுத்துக்குது? நீ என்னைப் புரிஞ்சிக்கவே மாட்டல்ல?” என்றவனின் வார்த்தைகள் அவளை எதோ செய்ய,

தான் ஏதும் தவறு செய்கிறோமோ என்று ஒருவித தயக்கத்துடன், “ஆஷிக்!” என்று அவள் அழைத்ததில்,

கோபம் தலைகேறியவன், “ஷட் அப் அண்ட் கெட் லாஸ்ட்!” என்று கர்ஜித்ததில் நடுநடுங்கியவள், 

தனக்குள், ‘உன் மேல எனக்குக் கோபம் இருக்கு ஆஷிக், ஆனாலும் இன்னைக்கு என்னோட வார்த்தை உன்னைக் காயப்படுத்திட்டு என்கிறது எனக்குப் புரியாம இல்லை. உன் கண்ல உள்ள வலி எனக்குத் தெரியுது. ஆனா நானும் சந்தோஷமா இல்லை ஆஷிக். உன்னை உடைக்கிறதுக்கு முன்னாடியே நான் உடைஞ்சு போயிடுறேன். உன்கிட்ட மனசு விட்டு பேசணும் போல இருக்கு. ஆனா உன்னை என்னால மறுபடியும் நம்ப முடியும்னு எனக்குத் தோனலை.’ என்று தனக்குள் வருந்தியவள், கண்கள் ஈராமாக அங்கிருந்து சென்றாள்.

கோபத்தில் தன் அறையில் உள்ள அனைத்தையும் கீழே தட்டிவிட்டு, தன் கண் எதிரே இருந்த கத்தியை எடுத்தவன் தன் மார்பில் குத்த போக, அதன் மேல் அவள் அள்ளி தந்த முத்தத்தின் முத்திரை, அவளது இதழின் வடிவாய் இருக்கத் தன் பிடியைத் தளர்த்தியவன், 

“ஏன் ஜியா, நான் நெருங்கி வந்தா விலகி போற? நான் விலகி போனா என்னை இன்னும் உன் பக்கம் நெருக்கமாக்குற? அப்புறம், என்னை அதே தனிமையில தள்ளிவிட்டுட்டு போயிடுற ஏன்? முடியலைடி…” என்றவன், நெருப்பென அவன் மொழிந்த வார்த்தைகளில் வெந்துருகி கொண்டிருந்தான். 

பல ரிங்கிற்கு பிறகு அட்டென்ட் செய்த ஜியா, அவனிடம் இருந்து எந்தப் பதிலும் வரும் முன்பே, “சாரி ஜீவா, பக்கத்துல ஒருத்தங்க இருந்தாங்க அதான் ஃபோன் எடுக்க முடியலை.” என்று கண்ணீர் தளும்பக் கூற, 

“அப்போ நான் சொல்றதெல்லாம் உனக்கு முக்கியம் இல்லை, யாரும் உன் பக்கத்துல இருந்தா என் கால அட்டென்ட் பண்ண மாட்ட?”

“இல்லை ஜீவா…”

“உனக்குப் பனிஷ்மென்ட் பத்தாது, வேற எதாவது பெருசா தரணும்.”

“ஜீவா ப்ளீஸ்…”

“எங்க இருக்க?”

“நான் மெயின் பசார்ல ஆட்டோக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.”

“சூப்பர், பத்து நிமிஷத்துல அங்க வந்துருவேன் நீ அங்கேயே இரு.” என்றவன், ஜியாவிடம் இருந்து எந்தப் பதிலும் வருவதற்குள், தன் அழைப்பைத் துண்டித்தான். 

அவன் கூறியது போலவே அடுத்தப் பத்தாவது நிமிடத்தில் தன் ஆடி காரில் விருட்டென்று அவள் முன்பு வந்தவன் புன்னகை தளும்ப, “ஹாய் டார்லிங்!” என்று கண்ணடிக்க, “டார்லிங் உனக்கு மேனர்ஸே தெரியலை, உன் பழைய ஃப்ரண்ட் ஆசையா ஹாய் சொல்றேன், பதிலுக்கு ஒரு ஹலோ கூடச் சொல்ல மாட்டிக்கிற? போடா, நீ என்னை ரொம்பக் கஷ்டப்படுத்துற? 

சரி அதை விடு, எனக்கு உன்கூட ரொம்ப நேரம் டைம் ஸ்பென்ட் பண்ண முடியாது. நீ என்ன பண்ற, ஓடி போய் அதோ தெரியுதா? ரொம்பக் கூட்டமா இருக்கே, அந்த ஒயின் ஷாப்தான் அங்க போய் சில்லுன்னு ஒரு பியர் வாங்கிட்டு… ஏய் ஏன் அப்படிப் பார்க்கிற? இன்னும் அப்படியே கொஞ்சம் தள்ளி போனா ஒரு மெடிக்கல் ஷாப் இருக்கும். அங்க போய் ***” என்று வன்மமாய் புன்னகைத்தவன், “இந்த நேரத்துல உன் நண்பனுக்கு என்ன தேவைனு உனக்கே தெரியும், சீக்கிரமா வாங்கிட்டு வந்திரு. நான் இங்கேயே வெயிட் பண்றேன்.” என்றான். 

“ப்ளீஸ் ஜீவா, அதெல்லாம் எப்படி ஜீவா நான்… ப்ளீஸ் என்னை விட்ரு.” என்று கெஞ்சியவளைப் பார்த்து முறைத்தவன், 

“என் கன்னத்துல பளார்னு ஒன்னு கொடுத்தியே, அப்போ யோசிச்சுருக்கணும். போ, அவ்வளவு சீக்கிரம் உன்னை நிம்மதியா வாழ விட்றமாட்டேன், சீக்கிரமா போயிட்டு வா.” என்றான் உறுதியாக. 

டாஸ்மாக் கடையில் அனைத்து ஆண்களுக்கு மத்தியில் ஒரு பெண்ணாய் ஜியா அங்கு வர, அத்தனை ஆண்களும் தகாத பார்வையோடு பார்க்க, ஒவ்வொருவரின் கொடூர பார்வையாலும் புழுவாய் துடித்தாள். 

கவுண்டரில் குடிபானத்தை விநியோகம் செய்து கொண்டிருந்தவன், ஜியாவை வக்கிரமமாய் பார்க்க, ஆஷிக் தன்னிடம், ‘பயத்தைப் பார்த்து ஓடாம எதிர்த்து நில்லு.’ என்று கூறிய வார்த்தைகள் அவளது செவிகளில் ரீங்காரமிட ஒரு நொடி சிந்தித்தவள், இழந்த தன் தன்னம்பிக்கையை மீட்டெடுத்தவளாய், முகத்தில் தைரியமும் கண்களில் கோப வெறியோடு தீ பிழம்பெனத் தன் பார்வையாலே எரிப்பது போலப் பார்க்க, அதுவரை அவளை வக்கிரத்தோடு பார்த்தவன் ஒருவித அச்சத்தோடு பார்க்க, அவனையும் சேர்த்து மற்றவர்களையும் பார்த்து முறைத்துவிட்டு. அதே தைரியத்தோடு ஜீவாவின் முன் வந்து நின்றவள், மதுபானத்தை அவனிடம் கொடுத்துவிட்டு விழிகளில் தீப்பொறி தெறிக்க,

“அவ்வளவு தானா? அவ்வளவு தான் உன்னால முடியமா? அத்தனை பேரும் என்னைத் தரக்குறைவா பார்க்கணும், அதுக்குத் தானே? பழிவாங்கி முடிச்சுட்டியா? இதுக்கு மேல பண்றதுக்கு என்ன இருக்கு? அதான் என்னை என்னவெல்லாம் பண்ணணுமோ அது எல்லாத்தையும் பண்ணிடீங்களே? மிச்சம் ஏதாவது இருந்தால் தானே? இனிமே ஏதும் பண்ணணும்னா புதுசா யோசிக்கணும்ல? யோசி, நான் வெயிட் பண்றேன். 

இதெல்லாம் பத்தாது, இன்னும் நல்லா அப்படியே நான் நொறுங்கிப்போகணும் அந்த அளவுக்குப் பெருசா ஏதாவது பண்ணு. தனியா பண்றதுக்குக் கஷ்டமா இருந்தா உன்னோட கூட்டாளிகளையும் சேர்த்துக்கோ.” என்று அவனைத் தன் பார்வையாலும் வார்த்தையாலும் சுட்டெரித்தவள், அங்கிருந்து கிளம்பப்போனவள் பின்பு எதையோ யோசித்தவளாய் தன் கையில் இருந்த பாக்கெட்டை எடுத்து அவன் பக்கம் திரும்பி, அருவறுப்போடு அவனைப் பார்த்து, “சீ…” என்றவாறு தன் கையில் இருந்த பாக்கெட்டை, அவன் முகத்தில் வீசிவிட்டு அங்கிருந்து ஒரு புயலை போல அவனைக் கடந்து சென்றாள். 

நடையில் ஒரு மிடுக்கு, பார்வையில் ஒரு திமிர், தன் எதிரில் இருந்த அந்த மிருகத்தைப் பகைத்துக்கொண்டால் தனக்கு என்ன நடக்கும் என்பதை அவள் அறியாமல் இல்லை. தான் இப்பொழுது அவனிடம் நடந்து கொண்டதுக்காகத் தான் எதிர்கொள்ளப் போகும் விளைவுகள் இன்னும் பயங்கரமாக இருக்கும் என்பதைக் குறித்த அச்சம், அவளது குருதியோடு கலந்து நாடி நரம்பு வரை சென்று அவளை நடுங்கவைக்காமல் இல்லை. இருந்தும் அந்த நொடி எதையும் பொருட்படுத்தாமல் தன் பார்வையாலே அவனைப் பளார் என்று அறைந்தாள்.

அந்த நேரம் அந்த இடத்தில வேறு எந்த ஆண்மகன் இருந்தாலும் தன்னிலையை எண்ணி வெட்கியே மாண்டிருப்பான். ஆனால் அங்கு இருந்தது ஆண் இல்லை, அவன் ஒரு மனித பிறவி கூட இல்லையே? ஏன், அவனை மிருகம் என்றாலும் அது மிகைதான். அவன் வெறும் ரத்தமும் சதையும் கொண்ட உணர்ச்சியற்ற ஓர் ஊன் வெறியன் என்பதை ஜியா தன் நினைவில் வைத்திருந்தால்! இனி நிகழ இருப்பதைத் தடுத்திருக்கலாமோ?

***

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!