கோபத்தின் உச்சியில் இருந்த ஜீவாவை, ‘உன்னால இதைத் தவிர வேற என்ன பண்ண முடியும்’ என்று ஜியா கூறிய வார்த்தைகள், ஊசி போலத் துளைக்க க்ரோதத்தில் தன்னால் முடிந்த வரை காரின் ஹாரனை வேகமாக அழுத்தியவன், தன் அருகில் இருந்த மதுபானத்தை வெளியில் தூக்கி எறிய, காரின் பாதித் திறந்திருந்த கண்ணாடியில் பட்டு, எறிந்த பாட்டிலின் கண்ணாடி துண்டுகள் அவனது தோளையும் இமையையும் பதம் பார்க்க அது, ‘எரிகின்ற தீயில் எண்ணையை ஊற்றுவதுபோல’ அவனது க்ரோதத்தை இன்னும் தூண்டிவிட்டது.
ஜீவாவின் கண்களில் தன்னை அவமதித்த ஜியாவை பழி வாங்கவேண்டும் என்கிற வெறி அப்பட்டமாக வெளிப்பட்டதற்கு, சிவந்த அவனது கண்களை விடப் பெரிய சாட்சி எதுவும் இல்லை.
அவனது கோபத்தைச் சிறிது நேரத்திற்குக் கலைக்கும் விதமாய் அவனது அலைபேசி தொடர்ந்து சிணுங்கிக்கொண்டே இருக்க, சில நொடிகளுக்குப் பிறகு தன் அலைபேசியைக் கையில் ஏந்தியவனின் கண்களில் Sk காலிங் என்ற பெயர் புலப்பட்டது.
அவ்வளவு நேரம் கோபமாய் இருந்தவனின் விழிகளில் ஒருவித பதற்றம் வந்து தொற்றிக்கொள்ள மெய் விதிர்த்தான் ஜீவா.
அலைபேசியை அட்டென்ட் செய்யாமல் விட்டவன், “இந்த நேரத்துல கால் பண்றான், ஜியா பத்தி கேட்குறதுக்காகத்தான் ஃபோன் பண்ணிருப்பானோ? இப்போ நடந்தது மட்டும் தெரிஞ்சா, ஒரு பொண்ணைக் கூட ஹாண்டில் பண்ண முடியாதானு கத்துவானே?”
என்றவனின் முகத்தில் கோபம், பயம் என இரண்டும் ஆட்கொள்ள, அவனிடம் என்ன பேசவேண்டும் என்று ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தான் ஜீவா.
***
நியூயார்க் நகரமே பனியின் துளியில் மூழ்கிருக்க, ஒருவன் மட்டும் அந்தக் குளிரிலும் பல ஐஸ் கட்டிகளுக்குள்ளே ஸ்விமிங் ஃபூலில் தன் மூச்சை அடக்கிக்கொண்டு கிடக்க, விடாமல் ஒலித்த அலைபேசியில் நீந்தி கொண்டு வெளியே வந்தவன், தன் தலையைத் துவட்டியவாறே க்ளாசில் மதுபானத்தை ஊற்றி, அதைக் கொஞ்சம் கொஞ்சமாய் பருகிவிட்டு அலைபேசியை அட்டென்ட் செய்து,
“ஐ வில் பீ இன் தர்ட்டி மினிட்ஸ்.” என்றவன், மீதமுள்ள மதுபானத்தை ஒரே தடவையில் தன் வாயில் சரித்துவிட்டு, தன் அறைக்குச் சென்று தன்னைக் கருப்பு நிற கோர்ட் சூட்டிற்குள் புகுத்திக்கொண்டு, தன் கை கடிகாரத்தைப் பார்த்தவாறு ரெஸ்டாரண்டிற்குள் நுழைந்தான்.
அங்கே கார்னரில் இருந்த டேபிளில் ஒரு இருபத்தி ஐந்து வயது மதிக்கத்தக்க ஒரு பெண் தன் கைகளைப் பிசைந்தபடி, அமர்ந்திருப்பதைப் பார்த்தவனின் இதழில் புன்னகை தானாக வந்து ஒட்டிக்கொள்ள, தன் கோர்ட்டின் பொத்தானை அவிழ்த்துவிட்டு,
“ஹாய் பேபி!” என்று அழைத்தவாறு அவளது கன்னத்தில் இதழ் பதித்து அவளது எதிரே வந்து அமர்ந்தான்.
அவன் வந்ததும் அந்தப் பெண் அவனது கையைப் பற்றிக்கொண்டு, “ஏன் இவ்வளவு நேரம்?” என்று பதற்றத்துடன் கூற,
அவனோ கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல், “சொன்னேன்ல தர்ட்டி மினிட்ஸ்ல வரேன்னு… ஸோ அயம் நாட் லேட், யு கேம் இயர்லியர்.” என்று தன் தோள்களைக் குலுக்கியவாறே கூறி, தன் அலைபேசியில் கேண்டி க்ரஷ் விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்க,
அவளோ தன் முகத்தில் பயம் தொனிக்க, “ஓகே, ஐ ஹாவ் சம்திங் இம்பார்ட்டண்ட் டு ஸே.” கூற,
அவனோ, “தென் ஸே, ஐ டோன்’ட் ஹாவ் மச் டைம்.” என்று கேமில் மூழ்கியவாறே தொடர, அவளோ பதற்றம் மாறாமல், “ஐ ஹாவ் மிஸ்ட் மை பீரியர்ட்ஸ். ஐயம் ப்ரெக்னன்ட்…” என்று கண்கள் கலங்க கூற, அவள் கூறிய மறுநொடி அவனது போனில் லெவல் கம்ப்ளீடட் என்று குறுஞ்செய்தி வர, “ஏய் ஐ காட் இட்!” என்று கத்தியவன் நிமிர்ந்து அவளை நோக்கி,
“கங்கிராட்ஸ் சந்தியா! சந்தோஷமான விஷயத்தை ஏன் சோகமா சொல்ற?”
“ஆர் யு சீரியஸ் அபௌட் இட்?”
“எஸ் பேபி!” என்று அவன் கூறியதும், முகத்தில் இருந்த பதற்றம் மறைந்து அந்தப் பெண் நிம்மதி பெருமூச்சு விட்டு,
“நீ என்ன சொல்லுவியோனு நான் பயந்துட்டேன், உங்க வீட்ல நம்ம கல்யாணத்தை ஏத்துக்குவாங்கல்ல?”
“வாட்! கல்யாணமா? உன் கூடவா? குட் ஜோக்!”
“நோ ஐயம் சீரியஸ்.”
“சந்தியா, குழந்தை மாதிரி பிஹேவ் பண்ணாத.”
“நான் உன் குழந்தைக்கு அம்மா ஆக போறேன், நீ இப்படிப் பேசுற?”
“அதான் கங்ராட்ஸ் சொன்னேனே?”
“ரெஸ்பான்சிபிலிட்டி…”
“அது உன்னுடையது.”
“நீ இல்லாம நான் மட்டும் தனியா ப்ரெக்னன்ட் ஆனேனா என்ன?” என்றவளின் பேச்சில் கோபம் தெரிய அவனோ எந்தவித சலனமும் இன்றி,
“இல்லைதான்… ஆனா நான் ப்ரெக்னன்ட் ஆகலையே? குழந்தை யார் வயித்துல இருக்கு? உன் வயித்துல இருக்கு, அப்போ யாரு ரெஸ்பான்சிபிலிட்டி எடுக்கணும்? நீ எடுக்கணும்.”
“இப்போ முடிவா என்ன சொல்ல போற?”
“டேக் ரெஸ்ட், உடம்பப் பார்த்துக்கோ, வேலைக்குச் சாப்பிடு, அப்புறம் இந்த மாதிரி ஸ்ட்ரெஸ் எடுத்துக்காத. ஓகே, ஐயம் டன் பாய்!” என்று அவன் தன் இருக்கையில் இருந்து எழும்பும் நேரம் அவனது கரம் பிடித்துத் தடுத்தவள்,
“எல்லாம் பண்ணிட்டு இப்போ நழுவ பார்க்கிறியா?”
“உனக்கு இவ்வளவு ப்ராப்ளமா இருந்தா, நீ சரியான ப்ரீகாஷன்ஸ் எடுத்திருக்கணும்.”
“நான் எடுக்கணுமா, ஏன் நீ எடுக்கக் கூடாதா?” என்று கண்கள் கலங்கிய நிலையில் அவள் கேட்க,
“நான் ஏன் எடுக்கணும்? நானா ப்ரெக்னன்ட் ஆனேன்?” என்று ஏளனமாய் சிரிக்க,
“அப்போ என்கூடப் பழகுனது?”
“அதுவா… லெட் மீ எக்ஸ்ப்ளெயின் இட்… கடைக்குப் போறோம், மார்க்கெட்ல புதுசா ஒரு ஒயின் வந்திருக்கு டேஸ்ட் பண்ணி பாருங்க, ரொம்ப நல்லா இருக்கும்னு கடைக்காரன் சொல்றான். சரினு டேஸ்ட் பண்றோம், சொன்ன மாதிரியே நல்லா இருக்கு. மறுபடியும் வாங்கிக் குடிக்கிறோம். அப்புறம் இது பழசாகும் வேற புது ப்ராண்ட் வரும், அது நல்லா இருக்கும்.
மறுபடியும் வாங்கிக் குடிச்சோம் என்கிறதுக்காகப் பழசையே வாழ்க்கை முழுக்கக் குடுச்சுட்டு இருக்க முடியுமா என்ன? அதே மாதிரிதான் உன் சர்வீஸ் எனக்குப் புடிச்சுருந்தது, அதனால உன்கூடக் கொஞ்சம் அதிகமா டைம் ஸ்பென்ட் பண்ணினேன். புடிச்சுருந்தது என்கிறதுக்காக வாழ்க்கை முழுவதும் உன்னை என் கூடவே வச்சுக்க முடியுமா என்ன?
கொஞ்சம் மெச்சூர்டா திங்க் பண்ணு, நீ ஒன்னும் பதினாறு வயசு பொண்ணு இல்லை. நானும் உன் ஃபர்ஸ்ட் லவ் இல்லை. இப்படி டிராமா பண்றதுக்கு…”
“ஸ்மார்ட்டா பேசுறியா? ஆனா உனக்கு என்னை கல்யாணம் பண்ணிக்கிறத தவிர வேற வழியேயில்லை. நீ என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டுதான் ஆகணும், இல்லனா நான் கோர்ட்டுக்கு போவேன். எந்த கோர்ட்டும் DNA டெஸ்ட் பண்ண வேண்டாம்னு சொல்ல மாட்டாங்க.” என்றவளின் பேச்சில் தைரியம் வெளிப்பட,
வாடிய முகத்துடன், “கல்யாணமா? நாம பொறுமையா பேசலாம்.” என்றவன் நொடி பொழுதில் ஏளன சிரிப்புடன், “நீ யார்கிட்ட பேசிட்டு இருக்குற என்கிறதை மறந்துட்டனு நினைக்கிறேன். மேல் இடத்துல பேசுறது, ஐ விட்னஸ ரெடி பண்றதெல்லாம் எனக்கு அவ்வளவு பெரிய கஷ்டமான வேலை இல்லைனு நினைக்கிறேன். ஆனா நான் உன்னை ரொம்பவே பாராட்டுறேன் கோர்ட், DNA டெஸ்ட் நீ என்னைப் பயங்கரமா இம்ப்ரெஸ் பண்ணிட்ட ஐ மீன் இட்… நீ இவ்வளவு யோசிக்கும் பொழுது நானும் யோசிக்கணும்ல? என்ன பண்ணலாம்? ஹான்!
நீ முதல்ல பொண்ணே இல்லையாமே? அப்படியா?”
“வாட் நான்சென்ஸ்?”
“நோ ஐயம் இன் சென்ஸ், பேசிட்டு இருக்கேன்ல, ப்ளீஸ் குறுக்கப் பேசாத.”
“நீ இப்படிச் சொன்னா எல்லாரும் நம்பிருவாங்களா என்ன?”
“கண்டிப்பா நம்புவாங்க, நம்பணும்! உன் வயித்துல வளர்ற குழந்தையைச் செகண்ட்ஸ்ல உன் கண்ணு முன்னாடியே க்ளோஸ் பண்ணிருவேன். உன்னை ஒரு பொண்ணே இல்லைனு சொல்லுவேன். ஒரு பெண்ணுக்குரிய எந்த அடையாளமும் உன்கிட்ட இல்லைனு மெடிக்கல் ஆதாரத்தோடு பப்ளிக்கா சொல்லுவேன்.
அப்புறம் இந்த DNA டெஸ்ட்டுக்கெல்லாம் எந்தப் பயனும் இல்லை. நீ ஒரு பொண்ணே இல்லாதப்போ உன்னோட வயித்துல என் குழந்தை எப்படினு கோர்ட்ல எல்லார் முன்னாடியும் கேட்பேன். அப்புறம் இந்த உலகம் உன்னை ஒரு…” என்று முடிப்பதற்குள் அவள்,
“நோ! அப்படிப் பண்ணணும்னு கனவுலையும் நினைக்காத.” என்று கதற,
“நான் அப்படித்தான் பண்ணுவேன், என்னை யார் தடுப்பாங்க? இப்படிப் பண்ணுறதுனால எனக்கு எந்த இழப்பும் இல்லை, ஆனா உனக்கு… எல்லா இழப்பும் உனக்குத்தான். என்கிட்ட மோதுறதை விட்டுட்டு வாழ்றதுக்கான வழிய பாரு இல்லனா…” என்றவன் நெருங்கி அவளது அருகில் வந்து, வன்மையோடு அவளது அதரத்தில் தன் ஆண் ஆதிக்கத்தைச் செலுத்தி அவளது காதோரத்தில் உரசியவாறு,
“என்னால என்ன முடியும்னு சொன்ன எனக்கு, செய்ய ரொம்ப நேரம் ஆகாது.” என்றவனின் கண்களிலும் உதட்டிலும் வக்கிரம் தலைவிரித்தாட அவள் கண்கள் கலங்க,
“உன்னை மாதிரி ஒரு சதை வெறி பிடிச்சவனை நான் பார்த்ததே இல்லை, பொறுக்கி ராஸ்கல்!” என்றவள் தன் கண்களைத் துடைத்துக்கொண்டு அங்கிருந்து செல்ல,
“எஸ் ஐயம்!” என்று வன்மமாய் சிரித்தான்.
பிறகு ரெஸ்டாரண்டில் இருந்து கிளம்பியவன் கான்ஃப்ரன்ஸ் ஹால் என்று பெயரிடப்பட்ட அறைக்குள் நுழையும் நேரம், அவனது அலைபேசி சிணுங்க அட்டென்ட் செய்தவன்,
“என்ன பிசியா?” என்று கேட்கும் தோரணையிலே ஒருவித ஆளுமை தெரிய, எதிர்முனையில் இருந்து எந்தப் பதிலும் வருவதற்குள் மேலும் தொடர்ந்து, “என் ஃபோனை கூட அட்டென்ட் பண்ணல?” என்று கூற, எதிர்முனையில் உள்ள நபர் பதுங்கும் குரலில்
“அது ஹாஸ்பிடல்…” என்று ஆரம்பிக்கவும்,
“கால் பண்ணிருந்தேன், நீ லீவ்னு சொன்னாங்க.” என்று எந்தவித சஞ்சலமும் இன்றி பதில் வர, எதிர்முனையில் உள்ள நபர் பதில் கூற முடியாமல் அமைதி காக்க,
அவன் அதே தோரணையில், “என்ன ஜீவா, என்ன பதில் சொல்லனு யோசிக்கிறியா?” என்று கேட்கவும்,
ஜீவா பதறிக்கொண்டு, “இல்லை, நான் ஏன் யோசிக்கணும்? ஹாஸ்பிடல் போகலை, கொஞ்சம் உடம்பு சரியில்ல. அதான் நல்லா தூங்கிட்டேன். இப்போதான் ஃபோன் பார்த்தேன்னு சொல்ல வந்தேன்.” என்றதும்,
“வீடியோ கால்ல வா.” என்று அதிகார தோரணையில் கட்டளையிட்டவன், ஜீவாவிடம் இருந்து பதில் வருவதற்குள் அழைப்பைத் துண்டித்தான்.
அவன் கட் செய்த மறுநொடி ஜீவாவின் அலைபேசியில் sk வீடியோ காலிங் என்று அழைப்பு வர தாமதிக்காமல் அட்டென்ட் செய்த ஜீவா, அவனைப் பேசவிட்டால் தானே ஆபத்து, நாமே முந்திக்கொள்வோம் என்று எண்ணி இயல்பாகப் பேசுவது போல, தன் உரையாடலைத் தொடங்கினான்,
“என்னடா நியூயார்க் எப்படி இருக்கு?” என்று கேட்க,
எதிர்முனையில் உள்ளவனோ முகத்தில் சிறிதும் சலனம் இன்றி, “சொல்லவே இல்லை, எப்போ உன் பெட்ரூமை நடுரோட்டுக்கு ஷிப்ட் பண்ணின?” என்று கேட்க,
அதன் பின்பே தான் ரோட்டில் நின்றுகொண்டு பேசுகிறோம் என்பது ஜீவாவின் மூளைக்கு புரிய அவனுக்கு தூக்கிவாரிப்போட்டது. தான் வசமாக மாட்டிக்கொண்டதை உணர்ந்தவன் கைகள் படபடக்க நிற்க,
எதிர்முனையில் இருந்தவனோ ஜீவாவின் பதற்றத்தைக் கண்டு தன் உதட்டில் புன்னகை தளும்ப, “செக் மேட்!” என்று கூறி, மேலும் தொடர்ந்து,
“நான் இல்லாதப்போ என்னலாமோ நடந்திருக்கு போல?” என்று விஷமமாய் கேட்க,
ஜீவாவோ அசடு வழிய, “வருண் சொல்லிட்டானா? உன்கிட்ட இப்போதைக்கு சொல்லி உன்னை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம். நானே சமாளிச்சுக்கிறேன்னு சொல்லிருந்தேன், அவன் ஏன் சொன்னான் அவனை…”
“என்ன? நீ சமாளிக்கப் போறியா? குட் ஜோக்! அப்புறம் ஜீவா வருண் என்கிட்ட சொல்லல, ஃபோன்ல குடிச்சுட்டு உளறினான். யார்கிட்ட என்ன சொல்லணும்னு தெரியாதா உனக்கு? அவன் வேற யார்கிட்டயும் உளறிட்டா என்ன பண்றது? ஆமா ஜீவா, எனக்குத் தெரியாம நீ எதுவும் கேம் ஆடுறியா?” என்று அவன் கேட்கவும், பதறிய ஜீவா, “என்ன பேசுற? நான் உன் ஃப்ரண்ட்டா. நான் போய் அப்படியெல்லாம் பண்ணுவேனா?”
“பண்ணுவேனா இல்லை, பண்ண கூடாது. மீறி பண்ணினா என்னால என்ன பண்ண முடியும்னு நான் சொல்லி உனக்குத் தெரியணும்னு அவசியம் இல்லை.” என்று அழுத்தமாய் அவன் கூறியதின் அர்த்தத்தை, ஜீவா உணர்ந்ததிற்கு அவனது மௌனமே சாட்சியாகும்.
மேலும் தன் கேள்வி கணையைத் தொடுத்தவன், “கன்னத்துல என்ன ரத்தம் வருது?” என்று கேட்க,
“அதுவந்து…” என்று ஜீவா தடுமாறவும், “பொய் சொல்ல போறியா?” என்றவன், ‘வேஸ்டு ஜீவா, நீ சொல்றதுக்கு முன்னாடியே நான் கண்டுபிடிச்சுட்டேன்.’ என்பது போலப் புருவம் உயர்த்திப் பார்க்க,
“நான் ஏன் பொய் சொல்லணும்? அது…” என்று அவன் கூறுவதற்குள்,
“ஜியாவை பார்த்தியா?” என்று மேலும் கணையை ஜீவா மீது தொடுக்க, இதற்குள் மேல பொய் சொல்லி பயன் இல்லை என்பதை உணர்ந்த ஜீவா, வேறு வழியின்றி இன்று நடந்த அனைத்தையும் கூறி முடிக்கவும், வாய்விட்டு சிரித்தவன் சில நொடிகள் கழித்து அரக்க பார்வையோடு,
“நீ முட்டாளா இல்லை முட்டாள் மாதிரி நடிக்கிறியா ஜீவா? ஒன்னு தப்ப தப்பில்லாம பண்ணணும், இல்லைனா தப்ப யாருக்கும் தெரியாமலாவது பண்ணணும். ஆனா அதெல்லாம் பண்றதுக்கு மூளைனு ஒன்னு வேணும். அது உனக்குத்தான் கிடையாதே? அப்புறம் ஏன் அவளைச் சீண்டுறேன், பயமுறுத்துறேன்னு காமெடி பண்ணிட்டு இருக்க? ஏற்கனவே உன் முட்டாள்தனத்துக்கு அவகிட்ட கன்னம் பழுக்க ஒன்னு வாங்கினியே, புத்தி வரல. ஏற்கனவே நீங்க யாரும் சரியா பண்ணாதனாலதான்…
நான் இவ்வளவு ரிஸ்க் எடுத்துட்டு இருக்கேன். மறுபடியும் ஏதாவது பண்ணின, முதல்ல உன்னைக் காலி பண்ணிருவேன். ஃப்ரண்ட்னு எல்லாம் பார்க்க மாட்டேன். இந்த கேமை ஸ்டார்ட் பண்ணினது நான், முடிக்கிறதும் நானாதான் இருப்பேன். அதை விட்டுட்டு நீ இடையில புகுந்து கத்திய என் பக்கம் திருப்பணும்னு நினைச்ச, நீ நினைச்சு முடிக்கும் பொழுது கத்தி உன் கழுத்துல இறங்கியிருக்கும்.” என்று அவன் கர்ஜிக்கவும் பதறிய ஜீவா,
“அவ நார்மல் ஆன மாதிரி தெரிஞ்சா, அதான்…”
“நார்மல் ஆனா ஆகிட்டு போறா, நம்ம லைன்ல வராத வரைக்கும் ஏன் அவளைத் தூண்டி விடுற? அவ என்ன சாதாரணமான பொண்ணுனு நினைச்சியா? ஜியாடா! இதே அவ இடத்துல வேற எந்தப் பொண்ணு இருந்திருந்தாலும், நமக்கு இவ்வளவு ரிஸ்க் இருந்திருக்காது. அது ஜியாவா இருக்கிறனாலதான் நமக்கு இவ்வளவு பிரச்சனை. நீ அவளைப் பயமுறுத்துறேன்னு ஏதாவது தூண்டிவிட்டு ஒரு கட்டத்துல என்னடா வாழ்க்கைனு அவ துணிஞ்சிட்டா, அவளை விடப் பெரிய பிரச்சனை நமக்கு வேற எதுவும் இருக்காது. நான் சொல்ற வரைக்கும் அவளை விட்டு தள்ளியே இரு புரியுதா?” என்றவனிடம்,
“புரியுதுடா, இனிமே நானா எதுவும் பண்ண மாட்டேன்.” என்ற ஜீவா, அவனைத் திசை திருப்புவதற்காக கான்ஃப்ரன்ஸ் எல்லாம் எப்படிப் போகுது?” என்று கேட்க ஜீவாவை ஒரு பார்வை பார்த்தவன்,
“போகுது” என்று ஒரே வார்த்தையில் பதிலைக் கூற,
சில நொடிகள் அமைதியாய் எதையோ உற்று கவனித்த ஜீவா கேள்வியாய், “டேய் பக்கத்துல யாரு இருக்காங்க? அந்த வாய்ஸ்…” என்றதும் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் அவன்,
“ம்ம் அவன்தான்…” என்று பதிலளிக்க,
“இங்க இருக்கானா?” என்று தொடர்ந்த ஜீவாவிடம்,
“அவனும் வந்திருக்கான்.”
“பார்த்து கிட்டத்தட்ட ஒரு வருஷம் இருக்காது, எப்படி இருக்கான்?” என்ற ஜீவாவிற்கு,
கோபம் தளும்ப, “இன்னும் அப்படியேதான் இருக்கான், என்னைக் கொலைகாரனை பார்க்கிற மாதிரி பார்க்கிறான். எனக்கு அவ்வளவு கோபம் வந்தது. ஆனாலும் வந்த இடத்துல எதுவும் பண்ண வேண்டாமேனு பொறுமையா இருக்கேன்.” என்றதும் ஜீவா தன் நண்பனின் கோபத்தைத் தனிப்பதற்காக,
“விடுடா, அவன் எல்லாம் ஒரு ஆளு? நாலு தட்டு தட்டுனா கால்ல விழுந்திருவான் நீ டென்ஷன் ஆகாத. ஆமா கல்யாண டிஸ்கஷன் எல்லாம் எப்படிப் போகுது?”
“நான் இங்க இருக்கேன், போனாதான் தெரியும். அவனுக்கும் நெக்ஸ்ட் மன்த் என்கேஜ்மெண்ட்னு கேள்வி பட்டேன்.”
“உன்கிட்டயே திமிர காட்டுறானா? அவனை எதாவது பண்ணணும்டா.” என்று கோபமாய் பொங்கிய ஜீவாவிடம், தன் முகத்தில் எந்த ஒரு உணர்ச்சியையும் காட்டாமல் மிகவும் இயல்பாக,
“என்ன பண்ணுவ?” என்று முகம் கோணாமல் கேட்க,
அதற்கு ஜீவா, “என்னடா இப்படிக் கேக்குற?”
“இது என் கேள்விக்குப் பதில் இல்லையே? சும்மா வாயில பந்தா காட்டதான் உனக்குத் தெரியும். என்கிட்ட இருந்து தப்பிக்கணும், அதுக்காக சம்பந்தம் இல்லாம ஏதேதோ பேசிட்டு இருக்க.” என்றவன் ஜீவா பதில் பேசுவதற்குள்,
“கான்ஃப்ரன்ஸ் ஸ்டார்ட் ஆகப் போகுது பாய்.” என்று கூறி தன் அலைபேசியை அவன் துண்டித்த பிறகே நிம்மதி அடைந்தான் ஜீவா.
ஒரு புயல் வந்து ஓய்ந்தது போல உணர்ந்த ஜீவா நீண்ட பெருமூச்சு விட்டவாறு,
“அது எப்படிடா நீ சும்மா இருனா நான் இருக்கணுமா என்ன? சும்மா இருந்தா எப்போ நான் என் பழியைத் தீர்த்துக்கிறது? என்னால என்ன முடியுமா? ஜியா என்ன முடியும்னு நான் காட்டுறேன்டி.” என்று கூறும் பொழுது அவனது குரலிலும் கண்களிலும் அதே அரக்கத்தனம் மீண்டும் வந்து ஒட்டிக்கொண்டது.
***
