காதல்- 18

காதல்-18 
 

 

மறுநாள் கடுப்புடன் வேலைக்கு கிளம்பிக் கொண்டு இருந்த கீதாவை புரியாமல் பார்த்து

” என்னமா வேலைக்கு கிளம்பிட்ட? நேத்து தானே சொன்ன இனிமேல் வேலைக்கு போக மாட்டேனு. சொன்ன அடுத்த நாளே வந்து கிளம்பி நிக்குறா?. என்ன ஆச்சி கீதா, நேத்து பாஸ் வர சொன்னத போன. அங்கே என்ன நடந்தது ” என்று தன் பணிக்கு கிளம்பிக் கொண்டே கீதாவிடம் கேள்விகளை அடுக்கினான் தினேஷ்.

அவளோ சற்று தடுமாறி ” அது அத்தான்” என போச வந்தவள், 

‘ இவருக்கிட்ட என்ன சொல்வது எப்படி சொல்வது’ என தெரியாமல் கைககளை பிசைந்துக் கொண்டு நின்று இருந்தாள்.

‘ அங்கே நடந்தத்தை அத்தானிடம் சொல்லலாமா? சொன்னா புரிந்துக்கொள்வாரா?அத்தான் தான் நம்ம கிட்ட முன்னாடி மாதிரி கோபப்படுறது இல்லையே தைரியாம சொல்லலாமா? இல்லை வேண்டாமா?”  என்று பலத்த யோசனையில் இருந்தவளிடம். கீதாவின் முன் சொடுக்கு போட்டு சுயநினைவிற்கு கொண்டு வந்தான்.

” எனக்கு வேலைக்கு டைம் ஆகுதுடா. நேத்து என்ன நடந்துச்சி சொல்லுமா. நீ ஏன் மறுபடியும் வேலைக்கு போற? உன்னை தான் நான் வேலைக்கு போக வேண்டாம் சொல்லிட்டேனே” . என்க.

அவளோ பெரூமூச்சு ஒன்றை விட்டு” அத்தான் வேலையை விடுறத இருந்தால். மூன்று மாசத்துக்கு முன்னாலே ஆபிஸில் தகவல் அறிவித்தல் கொடுத்து இருக்கனுமா அத்தான். அப்படி கொடுக்காமல் வேலையை விட்டால். ” என சொன்னவள் மீதியை சொல்ல சற்று தயங்கினாள்.

தினேஷோ “வேலையை விட்டால் என்ன பண்ணுவாங்க? நம்ம தலையை சீவிடுவாங்களா.? என்று ஆவேசமாக கேட்டு ” சொல்லு கீதா” என கத்தினான்.

” ஐந்துலட்சம்  அபதாரம் செலுத்த வேண்டியது இருக்கும் அத்தான். ” என்று கீதா சொல்ல அதிர்ச்சியுடன்,

” என்ன”  என்று திரும்பவும் கேட்டான் தினேஷ்.

அவனால் அதை நம்ப முடியவில்லை. ” எந்த அலுவலகத்திலாவது இவ்வளவு பெரிய தொகையை அபதாரமா கேட்பாங்களா கீதா?. என்னாலா நம்ப முடியல” என்றான் அதிர்ச்சியுடன்.

” விடுங்க அத்தான் நம்மளால இப்போதைக்கு இவ்வுளவு பெரிய தொகையை கட்ட முடியாது. அதுவும் இல்லாமல் நம்ம கிட்ட அவ்வளவு பணம் இல்லை அத்தான். அத நான் மறுபடியும் வேலைக்கு சேர்ந்துட்டேன். இன்னிக்கு போய் என் ராஜினாமா லட்டரை கொடுத்துட்டு மூன்று மாதத்தில வேலையை விட்டுறேன் அத்தான். அத்தைக்கிட்டையும் மாமாகிட்டையும் நைட்டே இதை பத்தி சொல்லிட்டேன்.

“அவங்க எதுவும் சொல்லலையா? கீதா. அம்மா தாம்தூம் கத்தி இருப்பாங்களே.?

” முதல ஷாக் ஆகினாங்க. அப்புறம் நான் பேசி சமாதானம் பண்ணி ஒத்துக்கவெச்சிட்டேன் அத்தான்.”

“சாரிடா இந்த அத்தானால, உன் கஷ்டத்துக்கு உதவி பண்ண முடியால மன்னிச்சிடுமா. “என்று உண்மையான வருத்தத்துடன் கூறிக்கொண்டு, ‘இதற்கு மேல் நம்மால் இங்கு நிற்க முடியாது’ என எண்ணி கீதாவிடம் பதில் எதுவும் கூறாமல் வெளியே சென்று விட்டான்.

அவன் சென்றவுடன் ” நீங்க பழைய மாதிரி இல்ல அத்தான். எங்கே வேலையை செய்யுறீங்க கூட இதுவரைக்கும் நீங்க வீட்டுல சொல்லால. கொஞ்சம், கொஞ்சமா உங்களை நீங்களே மாத்திக்கிட்டு இருக்கீங்க. இதற்கு எல்லாம் யாரு காரணம் எப்படி நீங்க இந்த அளவுக்கு மாறி இருக்கிங்கனு, நான் கூடிய சீக்கிரம் கண்டுப்பிடிக்கிறேன் அத்தான்.”  என வாய்விட்டுக் கூறி வேலைக்கு கிளம்பியவளை ஜன்னல் ஓரம் நின்று இவ்வளவு நேரம் அங்கு நடந்தத்தை கேட்டுக் கொண்டு இருந்தாள் விஜயம்.

” எல்லாம் உன்னால தான்டி. என் பையன் இப்படி மாறிட்டான். நான் தான் உலகம் இருந்தவன், என் பையன். அவனையும் இப்படி மாத்திட்டியேடி எதுக்காகவும் என்னை கை நீட்டி அடிக்காத என் வீட்டுக்காரையும் நேத்து என்னை அடிக்க வச்சிட்டல. இதுக்கு எல்லாம் சேர்த்து உனக்கு இருக்குடீ. ” என மேலும் மேலும் வன்மத்தை நெஞ்சில் சேர்த்துக்கொண்டே இருந்தாள் விஜயம்.

ஆபிசுக்கு வந்துவிட்டாளே தவிர வேலையை எதுவும் செய்ய பிடிக்காமல் கண்களை முடி. நேற்று நடந்தத்தை யோசனை செய்துக்கொண்டு இருந்தாள் கீதா.

பிரியாவிடம் இருந்து போனை வாங்கி பேசியவன் “கீதா இன்னும் அரைமணி நேரத்தில் நீ, ஆபிசுக்கு வர. அப்படி இல்ல அடுத்த நொடி நான் உன் வீட்டுல இருப்பேன்.” என்று கீதா பதிலுக்கு கூட காத்திருக்காமல் போனை கட் செய்து அருணிடம்  “இனி இது மாதிரி முட்டாள்தனம் செய்யதே புரியுதா போய் உன் வேலை பாரு இன்னிக்கு எல்லாம் மீட்டீங்கும் கேன்ஸல் செஞ்சிடு அப்புறம் ஒரு நிமிடம்” என்று  ஏதே ஒன்றை யோசித்தவன். “ஒன்றும் இல்லை நீ போய் வேலையை பாரு” என்று அனுப்பிவிட்டான்.

“இந்து நீ வைட்டிங் ஹாலில் உட்காரு. ” என்று கடுமையுடன் பேச.

“அத்தான்”  என்று பேச வந்தவளை எதுவும் பேசாமல் போய் உட்காரு என்று உத்தரவு செய்து தன் வேலையை கவனிக்க தொடங்கினான்.

வேரு வழி இன்றி இந்து வைட்டீங் ஹாலில் அமார்ந்து அத்தான் எதற்கு தன்னை இங்கு அழைத்து வந்துள்ளார் என்று யோசிக்க தொடங்கினாள்.

அருண் கடும் கோபத்துடன் ” இதுக்கு எல்லாம் சேர்த்து ஒரு நாள் உன்னை கவனித்துக் கொள்க்கிறேன் மிஸ்டர் ராஜா. உங்க மேல ரொம்ப மதிப்பு,மரியாதை வச்சி இருந்தேன். ஆன அதை நீங்களே கெடுத்துக்கிட்டிங்க. என் ஏஞ்சலோடவா, அந்த இந்து பெரிய அழகி? என் ஏஞ்சலோட. கால் தூசுக்கு ஈடு ஆகுவாலா அவ?. அட்லிஸ் ஒரு சாரியாவது இந்துவா கேக்க சொல்லி இருக்காலம். இது எதுவுமே பண்ணாம என்னை கண்டுச்சி அனுப்புறீங்க ச்சே. ” என்று அலுத்துக்கொண்டு அருண் கேபினுங்கு சென்றான்.

அருண் வெளியே சென்ற அடுத்த அரைமணி நேரத்தில் இன்பராஜாவின் கண் முன் வந்து நின்றாள் கீதா.

“உங்க மனசுல என்ன நினைச்சிட்டு இருக்கீங்க. உங்க இஷ்டப்படி ஆடுறதுக்கு நான் என்ன உங்க வீட்டு வேலைக்காரியா?” என்று ஆவேசமாக கத்தினள் கீதா. 

கீதாவை பார்த்தவுடன் சந்தோஷமாக தன்னவளின் அருகில் சென்று கீதாவின் ஒரு கரத்தை எடுத்து தன் நெஞ்சோடு வைத்து “என் மனசுல உன்னை தான்டி நினைச்சிட்டு இருக்கேன். என் செல்லம். அப்புறம் நீ என் வீட்டு வேலைக்காரி இல்லை. என் வீட்டு எஜமானிடி என் தங்கக் குட்டி. ” என்று அவளின் கோபத்தை எகத்துகும் எகற வைத்தான் ராஜா.

அவளோ எரிச்சலுடன் ” என் கையை விடுங்க.” என எடுக்க போனவளை இழுத்து அவனது நெஞ்சில் சாய்த்து கட்டிக்கொண்டு ” இனிமேல் உன் கையை நான் விடுறாத இல்லை கீதா. இதே மாதிரி ஒரு தடவை நீ சொன்னதை கேட்டு உன் கையை விட்டு இந்த ஆறு வருஷமா நீ இல்லாமல் நான் பட்ட கஷ்டம் உனக்கு சொன்னாலும் புரியாதுடி. சூரியாவும் பரத்தும் கூட என்னை விட்டு போய்ட்டாங்கடி. ஒரு கட்டத்தில் நீங்க இல்லாமல் பைத்தியக்காரன் மாதிரி திரிஞ்சிக்கிட்டு இருந்தேன். உன்னை மறக்கவும் முடியாமல் உன்னை வெறுக்கவும் முடியாமல். நான் தவிச்ச தவிப்பு எனக்கு மட்டும் தான் தெரியும். ப்ளீஸ் இனிமேலும் என்னை விட்டு போகாதே கீத்துமா..ஐ லவ் யூ செல்லம். ” என்று அவன் உணர்ச்சிகள் ததும்ப பேச.

அவன் நண்பர்களை பற்றி பேசியதும் கீதாவுக்கு குற்றவுணர் ஏற்பட்டு மறைந்தது.  ‘ தன்னால் தான் அவர்களும் இன்பாவை விட்டு பிரிந்தார்கள்.’ என்று நினைவு தோன்ற அதை வெளிகாட்டிக் கொள்ளாமல் தன்னவனை பார்த்து,

” இப்போ எதுக்கு இந்த டயலாக் எல்லாம் பேசிட்டு இருக்கீங்க. நான் தான் நீங்களும் வேண்டாம். உங்க ஆபிசுலா வேலையும் வேண்டாம் முடிவு எடுத்து  ராஜினாமா பண்ணிட்டு போய்ட்டோன். அப்புறம் எதுக்கு என்ன தொந்தரவு பண்றீங்க. அப்படி உங்களுக்கு என்ன தான் வேணும்.”  என்று இன்பராஜாவை தன்னிடம் இருந்து தள்ளிவிட்டு கோபமாக கேட்டாள்.

இன்பராஜாவோ ”  எனக்கு நீ தான்டி செல்லம் வேணும்”  என்று சொல்லி முடிக்கும் போதே, சரியாக அருண் கதவை தட்டிக் கொண்டு உள்ளே நுழைந்தான்.

அருண் வருகையை எதிர் பார்க்காதவன்  என்ன செய்வது என்று புரியாமல் தவித்தான்.

கீதா அந்நிலையிலும் தன்னவனின் தவிப்பை ரசித்து மனதுக்குள் சிரித்துக்கொண்டாள். இப்போது தன்னவனை நான் தான் காப்பற்ற வேண்டும் என எண்ணி,

” இப்ப என்ன தான் சார் செய்ய சொல்றீங்க. என்னல உங்க ஆபிசில் வேலை செய்ய முடியாது. நீங்க என்ன வேணாலும் பண்ணிக்கோங்க” என்று ஏதே இன்பராஜா காப்பற்றவதை நினைத்து. இவளே அதில் சிக்கிக்கொண்டாள்.

தவளை தன் வாயால் கெடும் அதே மாதிரி தான் நம் நாயகியும் செய்தாள்.

தன்னவள் எடுத்துக்கொடுத்த பாய்ன்டை பிடித்துக்கொண்டு இவன் தொடர்ந்தான்.

” இங்க பாருங்க கீத்து” என அவன் சொன்னதும் இருவரும் இன்பராஜாவை அதிர்ச்சியுடன் பார்க்க, அவனும் நிலைமையை உணர்ந்து “ம்க்கூம் “என்று தொண்டையை சரி செய்து,

“ஐ மின் கீதா, நீங்க வேலைக்கு சேரும் போது அக்ரீமெண்ட் படிச்சிங்கலா?”. என்று அருணிடம் கூறியதை அப்படியே கீதாவிடம் ஒப்பிவித்தான்.

அதைக்கேட்ட கீதாவுக்கு தலை சுற்றாத குறை தான். ‘  இவ்வளவு நேரம் என் கிட்ட அன்பா பேசுற மாதிரி நடிச்சிட்டு. இப்ப அவன் புத்தியை காட்டுறானே இவனுக்கு போய் பாவம் பார்த்ததோமே ச்சோ. இப்ப என்ன செய்யுறது,

அவள் அத்தைக்கு தெரிஞ்சா என்ன செய்வாங்க இன்று அவளுக்கு தெரியாத என்ன? வேறு வழி இல்லாமல் தன் குடும்பத்தை நினைத்து வேலைக்கு வருவதாக ஒப்புக்கொண்டாள்

கீதா ஒப்புக்கொண்ட அடுத்த நிமிடம் இந்துவை அழைத்து மன்னிப்புக் கேட்குமாறு கட்டளைவிட்டான்.

ஆனால் இந்துவோ தன்னால் மன்னிப்பு கேட்க முடியாது. என சொல்ல இந்துவின் கன்னத்தில் ஒங்கி ஒரு அறைவிட்டான்.

இதைப்பார்த்த அருணும் கீதாவும் ஸ்தம்பித்து போனார்கள்.

கீதாவுக்கோ ஒரு படி மேலே என்றோ சொல்லலாம். ” இன்பவா இது பெண்களை எந்த சூழ்நிலையிலும் எதற்காகவும் கை நீட்டி அடிக்க கூடாது சொன்னாவனா! இப்போது இப்படி செய்கிறான்.

அருணுக்கோ மகிழ்ச்சியாக இருந்தது. அது அப்பட்டாமாக அவனது முகத்தில் தெரியவும் செய்தது.

திரும்பவும் அடிக்க கை ஒங்கும் போது. இன்பராஜாவின் கையை பிடித்து “நீங்களாம் ஒரு ஆண்மகன் தானா? ஒரு பொண்ணா கை நீட்டி அடிக்கிறீங்க. அறிவியில்லை உங்களுக்கு. நீ தானே சொல்லி இருக்க. பெண்களை கை நீட்டி அடிக்கிறவன் ஆம்பளையே இல்லையின்னு. இப்ப நீயே இப்படி பண்ண மத்தவங்களும் இதையே தானே செய்வாங்க.”  என்று இன்பராஜாவின் ஒரு கையை அவளது ஒரு கையால் பிடித்துக்கொண்டு மற்றொரு கையை தன்னவனின் காலரை பிடித்து கேட்டவளை இன்பா ரசித்தாலும் அவள் கேட்ட கேள்வியில் வருந்தவே செய்தான். 
 

அருணும் திகைத்து போனான் ” ஏஞ்சல் பாஸ்யே இவ்வளவு தைரியமா கேள்விக் கேட்குறா.? என்ன தைரியம் இதுலா வா போ மரியாதை கூட கொடுக்கமல் பேசுறலே “என அருண் நினைக்க.

இந்துவோ ‘ அத்தான் எல்லாரும் முன்னாடி தன்னை அடித்த அவமானத்தை விட கீதா தனக்காக பாவம் பார்த்து அத்தானிடம் தனக்கு பரிந்துரை செய்வதை தான் அவளால் பொருத்துக் கொள்ள முடியாமல் ‘ கீதாவிடம் திரும்பி,

” நீயெல்லாம் எனக்கு சப்போர்ட் பண்ண வேண்டாம். என்னை அடிக்கிற உரிமையும், அணைக்கிற உரிமையும். என்ன கட்டிக்க போற, என் அத்தானுக்கு தான் இருக்கு. உன் வேலையை பார்த்துக்கிட்டு போடி”  என இந்து ஆத்திரமாக கத்த.

இப்போது கீதாவுக்கே கோபம் வந்து விட்டது. இன்பராஜாவை ஒரு அனல்பார்வை பார்த்து விட்டு ” நாளையிலிருந்து ஆபிசுக்கு வருகிறேன் ” என்று புயல் வேகத்தில் வீட்டுக்கு சென்று ரவியிடம் ஆபிஸில் நடட்ததை சுருக்கமாக சொல்லி முடித்தாள்.

கீதா சொல்வதை கேட்டு சமையல் அறையில் இருந்து வெளியே வந்த விஜயம் மயக்க போடத நிலைமை தான்.

” என்ன ஐந்து லட்சமா? யாருடி கட்டுவா உங்க அப்பன்னா கட்டுவான்? அது சரி உன் அப்பானையும் உன் அம்மாவையும் தான் உன் வாய்க்குள்ள போட்டுக்கிட்டியே. அப்புறம் என்ன இன்னும் உன் கொலைவெறி அடங்களையா?. இப்ப யாரா காவு கொடுத்து இந்த ஐந்து லட்சம் கட்ட போற. எங்க கிட்ட இருந்து ஒரு ரூபாய் கூட எதிர்பார்க்கத புரியுதா.” என்று ஆவேசமாக பேசியவளை. ஓங்கி அறைந்தார் ரவி.

” என்ன பேசிட்டு இருக்க விஜயா? அவ வீட்டுல இருந்துட்டு அவளுடைய சம்பளத்தில் மாசம், மாசம் நல்ல வக்கனையா வாங்கி வித விதமா நகை நட்டுனு வாங்கி வச்சி இருக்கியே அத பத்தி தெரிந்தும் தெரியாத மாதிரி அமைதிய இருக்கறவ,  இந்த வீட்டு மகாராணிடீ. ” என திரும்பவும் கை ஓங்கியவரை தடுத்தாள் கீதா.

” மாமா ப்ளீஸ் விடுங்க. என்ன பண்றீங்க. அத்தை சரியா தானே சொல்றாங்க. நான் பண்ண வேலையால் தானே என் அப்பாவும் என் அம்மாவும் என்னை விட்டு போய்ட்டாங்க. ” என்று மனதில் உள்ள வேதனை வார்த்தையை வர,

“ப்ளீஸ் மாமா இனி இதை பத்தி எதுவும் பேச வேண்டாம்.” என்று கூறிவிட்டு அறைக்குள் சென்று கதவினை அடைத்துக் கொண்டு அப்படியே முகம் புதைத்து அழுதவளை  யாரோ தட்டி எழுப்புவது போல் உணர்ந்தாள் கீதா.

இனி அடுத்த அத்தியாயத்தில் காணலாம்.
 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page