காதல்-17

காதல்-17 
 

பழைய நினைவோடு வீட்டிற்குள் நுழைந்த இன்பராஜாவிடம்,

“ராஜா நில்லுப்பா”  என்று  தந்தையின் குரல் கேட்டு நின்றவன், எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்.

“உன் கிட்ட கொஞ்சம் தனியா பேசனும் ராஜா. என் ரூமுக்கு வா.” என்று சுந்தரம் அழைக்க.

” ஏங்க  அவனை ரூமுக்கு வர சொல்றீங்க. எதுவா இருந்தாலும் இங்கயோ நின்னு பேசுங்கா. “என்று வசந்தா கத்தியதை பார்த்த இன்பராஜாவுக்கு எல்லாம் புரிந்தது.

மாலை அட் சூட்டீங் முடித்து விட்டு இந்துவை அழைத்து வந்து வீட்டுல் இறக்கி விட்டு, வீட்டுக்குள் கூட வராமல் அப்படியோ சென்றவன். எங்க போவது என்று தெரியாமல் காரிலே சுற்றி திரிந்தான். 

அவனின் கோபம் சற்று தனியவும், வீட்டுக்கு வந்தவனை தான் இப்படி கோபமாக பேசிக்கொண்டு இருந்தார் வசந்தா.

‘இந்து இந்நேரம் அனைத்தையும் சொல்லி இருப்பாள்’ என்று யூகித்து இருந்தான் ராஜா.

அவனோ தந்தையை நேராக பார்த்து ” இங்க பாருங்கப்பா, நீங்க என் கிட்ட என்ன கேட்க போறீங்கன்னு எனக்கு தெரியும். கீதாவை எதுக்கு வேலைக்கு சேர்த்து இருக்கனு கேட்க போறீங்க. நான் அன்னிக்கு சொன்னது தான். இது என் கம்பெனி. சோ இதுல நீங்க யாரும் தலையிட முடியாது. ” என்றான் வெட்டு ஒன்று துண்டு இரண்டாக.

அதை கேட்ட வசந்தாவோ சினத்தோடு “ஏன்டா தலையிட கூடாது. உன்னை வேண்ணாம் சொல்லி தூக்கிப்போட்டு பேனாவள். அவளால எந்த அளவுக்கு நீ கஷ்டம் வேதனைப்பட்டு இருக்க. எங்க எல்லாருக்கிட்டையும் சரியா பேசாமல் ஒழுங்க சாப்பிடாமல் தூக்கம் இல்லாமல் அவளை நினைச்சி நினைச்சி எப்படியொல்லாம் தவிச்சி இருக்க. ஒரு பைத்தியக்காரன் மாதிரி திரிஞ்சிக்கிட்டு  இருந்தியேடா. மறந்துட்டியா? எங்க கண்ணு முன்னாடி நீ கஷ்டப்படுறத பார்க்க முடியாமல் நாங்க தவிச்சது எங்களுக்கு தான்டா தெரியும். எல்லாம் அவளால, இப்ப மறுபடியும் அவ வந்துட்டானு அவ பின்னாடியே போறியா? உனக்கு வெட்கமா இல்லை”. என்று ஆத்திரத்துடன் வசந்தா தன் மகனிடம் கேட்டுக்கொண்டு இருந்தவள், சற்று தன்மையாக

” ராஜா இன்னும் இரண்டு நாளுல உனக்கும் இந்துவுகும் எங்கேஜ்மென்ட். நீ இதுக்கு சம்மதம் சொல்லி தான் ஆகனும். இல்லையினா நான் என்ன பண்ணுவேன் எனக்கே தெரியாது சொல்லிட்டேன்.” என்று எங்கேயோ வெறித்து பார்த்துக் கொண்டு இருந்த ராஜாவை சலிப்புடன் உலுக்கி “உன் கிட்ட தான்பா பேசிக்கிட்டு இருக்கேன். பதில் சொல்லுடா ஏன்டா அமைதியா இருக்க “என்றார் வசந்தா.

சுந்தரமும் ” ராஜா அம்மா உன் கிட்ட தான் கேக்குறாங்க.”  என்று சொல்ல.

இப்போது மௌனத்தை கலைத்தான் “இங்க பாருங்கமா உங்களையும் தான் அப்பா. எனக்கு கீதா தான் முக்கியம் உங்க எல்லாருக்குமே ஏற்கனவே தெரியும். நான் என் கீதாவை வேண்ணாம் சொல்லால! என்னிக்காவது ஒரு நாள் அவள் என்னை தேடி வருவா. அப்போ என் பொண்டாட்டியா கீதாவை ஏற்றுக்கொள்ளுங்க. அது வரைக்கும் என் விசியத்தில் யாரும் தலையிட வேண்டாம். நான் சொல்றது புரிஞ்சி இருக்கும் நினைக்குறேன். ” என்று தீர்க்கமாக பேசியவன் அங்கே நடப்பதை பார்த்துக் கொண்டு இருந்த இந்துவிடம் அனல் பார்வையோடு திரும்பி,

” ஏய் இந்து இது உனக்கும் சேர்த்து தான் சொல்றேன்.” என்று முடிவோடு சொல்லிவிட்டு வேகமாக தன் அறைக்கு சென்றான் இன்பராஜா.

மகன் போவதை பார்த்த வசந்தா “என்னங்க நம்ம மட்டும் பேசிட்டு இருக்கோம். அவன் ஏதோ உளறிட்டு போறான். ” என்று கேட்டார் ஆற்றாமையில்.

” அவன் உளறல வசந்தா. அவனுடைய மனசுல இருக்குறத தெளிவா சொல்லிட்டு போறான். இதுக்கு மேலா நம்ம அவனை கட்டாயம் பண்ண கூடாது. ” என்றார்.

அதை கேட்ட இந்து திடுக்கிட்டு போனாள். ” அப்ப மாமா என் நிலைமை? அத்தான் தான் உலகம் நினைச்சி வாழ்ந்துட்டு இருக்கேன். ஆனா நீங்க அத்தான் இஷ்டத்துக்கே விட சொல்றீங்க. ” என்றாள்.

” இவளுக்கு என்ன பதில் சொல்ல போறீங்க? நீங்க சொல்றது எல்லாம் என்னால ஏற்றுக்க முடியாதுங்க.”  என வசந்தா கூற.

“இங்க பாரு வசந்தா இந்ந சின்ன பொண்ணு மனசுல ஆசையை வளர்த்தது நீயும் உன் அண்ணா கணேஷும் தான். இத நீங்க தான் சரி பண்ணனும். இந்து உனக்கு நான் சொல்லி புரிய வைக்கனும் இல்ல அவங்க காதலிச்சது உனக்கு நல்லவே தெரியும். அவங்க கூடவே இருந்து பார்த்து இருக்க. அந்த கீதா பொண்ணு தான் என் மகனுடைய உலகமே, இது கூட உனக்கு நல்லவே தெரியும். திரும்பவும் அந்த பொண்ணு வந்ததிலிருந்து தான் என் பையன் முகத்தில் கொஞ்சமாவது சந்தோஷத்தை பார்க்குறேன். அத நீங்க எல்லாரும் சேர்ந்து கெடுத்துடாதீங்க. ஏற்கனவே உங்க பேச்சலாம் கேட்டு தான். அவன் சந்தோஷத்தையே அழிச்சிட்டேன். திரும்பவும் அந்த தப்ப ஒரு காலமும் செய்ய மாட்டோன். ” என்று மகனுக்காக முதல் முறையாக யோசித்து பேசினார் சுந்தரம்.

“இப்ப என்ன சொல்ல வறீங்க மாமா. என் வாழ்க்கை என் சந்தோஷம் இத பத்தி உங்களுக்கு கவலை இல்லையா?” இந்து அழுதுக்கொண்டு கேட்க.

” ஏதோ உங்க அப்பாவும் உன் அத்தையும் சொல்றாங்கனு, நீ இங்க வந்து உட்கார்ந்துட்டு உன் வாழ்க்கையும் சந்தோஷத்தையும் நீயே அழிச்சிக்குற.  இந்து முதல நீயா முடிவு செய்ய முயற்சி பண்ணும்மா. அப்ப தான் எது உண்மை தெரியும். அப்புறம் ஒரு முக்கியமான விசியம் நான் என் மகன் எடுக்குற முடிவுக்கு தான் முழு ஒத்துழைப்பு தருவேன்.” என சொல்லி விட்டு,

‘ இந்து தனியாக யோசித்து முடிவு செய்யட்டும். ‘ என நினைத்தவர் தன் மனைவியை அழைத்துக் கொண்டு அறைக்கு சென்றார்.

சுந்தரம் பேசிய கடைசி இரு வாக்கியம் மட்டும். தண்ணீர் எடுக்க வந்தவனின் காதில் விழ நிம்மதி அடைந்தான் இன்பராஜா.

அவர்கள் அனைவரும் அறைக்கு சென்று தூங்கிக்கொண்டு இருக்க இந்து மட்டும்.. தூங்கமால் ஆத்திரத்துடன் கீதாவை பழி வாங்க யோசனை செய்து அதை செயல்படுத்தவும் தொடங்கினாள். 
 

வழக்கம் போல் காலை பொழுது தொடங்க அவர் அவர்கள் தங்கள் வேலைகளை செய்ய தொடங்கினார்கள்.

ஒரு ஆட்டோவை பிடித்து அலுவலகம் சென்று தன் ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டு திரும்ப, அங்கே அருணும் அவன் ராஜினாமா கடிதத்தை கொடுத்ததை பார்த்தாள் கீதா.

பிரியாவுக்கு ஒன்றும் விலங்காமல் அவர்களிடம் கேட்டாள்.

” நீ ஏன் அருண் வேலையை ரிசைன் பண்ற? “என கீதாவும் பிரியாவும் ஓரே போல் கேட்க.

“எனக்கு பிடிக்கல கீதா. மரியாதை இல்லாத இடத்தில் நான் வேலை செய்ய விரும்பல. அதுவும் உன்னை கை நீட்டி அடிச்ச பிறகும் என்னால இங்க ஒர்க் பண்ண முடியாது. பிரியா உங்க பாஸ் வந்தா, இந்த ரீசன் சொல்லுங்க நாங்க கிளம்புறேன். வா கீதா போலாம். ” என்று அவளை அழைத்துக் கொண்டு போனான்.

வெளியே வந்தவள் அருணை பார்த்து ” இப்ப நீ எதுக்கு அவசரப்பட்டு இந்த முடிவை எடுத்த. நம்ம இரண்டு பேருல ஒருத்தவங்க இல்லனா அவரால எப்படி மேனோஜ் பண்ண முடியும்? அருண் நீ இங்க அவருக்கு துணையா இருக்கேன் தான், நான் இந்த முடிவை எடுத்தேன். இப்ப நீயும் இல்லனா பாவம் பாஸ் ரொம்ப கஷ்டப்படுவாரு.” என கீதா கூற இந்த நிலையிலும் தன்னவனை பற்றி கவலைப்படும் மனதை நினைத்து வருந்தினாள்.

“இங்க பாரு கீதா, உனக்கு ஒரு கஷ்டமுன்னு வந்தா என்னால அதை தாங்க முடியாது. எனக்கு உன்னை பத்தின கவலை போதும். மத்தவங்கள பத்தி எனக்கு கவலை இல்லை.” என சொல்லிவிட்டு அவள் கூற வருவதை கூட காதில் வாங்காமல் பைக்கில் சென்று விட்டான். கீதாவும் வேறு வழி இன்றி வீட்டுக்கு சென்றாள்.

” என்னாமா அதுக்குள்ள வந்துட்ட உடம்பு எதாவது சரி இல்லையா?. என்று ஆட்டோவில் இருந்து இறங்கி வந்த கீதாவிடம் அக்கறையுடன் விசாரித்தார் ரவி.

“அதெல்லாம் ஒன்னும் இல்லை மாமா. அத்தையும் அத்தானும்  எங்க மாமா கொஞ்சம் கூப்பிடுங்க மாமா பேசனும்” என்றாள்.

எப்போதும் இவள் இப்படி அவர்களை அழைக்கிறாள் என்றாள், ஏதாவது முக்கியமான விசியம் இருக்கும். என தெரிந்து இருவரையும் அழைத்தார் ரவி.

டி.வி.யில்.. பாட்டுக் கேட்டுக் கொண்டு இருந்த விஜயம் டிவியை அனைத்து விட்டு வர. வேலைக்கு கிளம்பிக் கொண்டு இருந்த தினேசும் ஹாலுக்கு வந்தான்.

கீதா இந்நேரத்தில் வீட்டில் வந்து இருபத்தை பார்த்து என்னாச்சு என்று விசாரித்தனர்.  அவளோ தட்டுதடுமாறி வேலையை ராஜினாமா செய்ததை சொன்னாள்.

விஜயம் அவளை முறைத்து விட்டு ” இப்ப எதுக்குடீ வேலையை விட்ட? அதுவும் எங்கக்கிட்ட ஒரு வார்த்தை கூட கேக்காமல். இப்படி வேலையை விட்டுட்டு வந்து இருக்க. இவ்வளவு சம்பளத்துல எவன்டி உனக்கு வேலையை தருவான்?. ” என்று மேலும் அவளை திட்டி தீர்த்துவிட்டாள் விஜயம்.

” ஏய் விஜயா அமைதியா இருக்கியா?. பாவம் கீதாவுக்கு அங்க என்ன பிரச்சனையோ அதை பத்தி விசாரிக்காம நீ பாட்டுக்கு திட்டிக்கிட்டு இருக்க. கீதா எந்த முடிவு எடுத்தாலும் அது சரியாக தான் இருக்கும்.” என ரவி சொல்ல.

தன் தாயை முறைத்துவிட்டு ” “உனக்கு வேலை மேல ஏதாவது பிரச்சனையா கீதா. எதுவா இருந்தாலும் சொல்லு. அத்தான் நான் இருக்கேன். எதுவாக இருந்தாலும் நான் பார்த்துக்குறேன். “என்று ஆதரவாக பேசிய தினேஷை மூவரும் புதுசாக பார்த்தனர்.

” அதெல்லாம் ஒன்னும் இல்ல அத்தான் வேலை கொஞ்சம் கஷ்டமா இருக்கு அதான் விட்டுடேன். நீங்க கவலைப்படாதீங்க நான் சீக்கிரமா ஒரு வேலையை தேடிக்கிறேன். “

“வேணாம் கீதா நான் தான் இப்ப வேலைக்கு போறேன்ல. அப்புறம் நீ எதுக்கு வேலைக்கு போயிட்டு? வீட்டு இருந்து ரெஸ்ட் எடு. நீ வாங்குற அளவுக்கு எனக்கு சம்பளம் இல்லை தான், இருந்தாலும் நம்ம குடும்பத்தை பார்த்துக்குற அளவுக்கு சம்பளம் கிடைக்குது அதுவே போதும்மா.” என்று கீதாவின் தலையை வருடி கொடுத்து ” நீ எதுக்கும் கவலைப்படாத இனிமேல் நான் பாத்துக்குறோன். இப்ப வேலைக்கு டைம் ஆச்சி நான் கிளம்புறேன்.” என சொல்லிவிட்டு  வேலைக்கு கிளம்பி சென்றவனை ஒன்றும் புரியாமல் அவன் போகும் திசையை பார்த்து நின்றாள் கீதா.

தன் மகன் பொறுப்புடன் பேசியதை நினைத்து புரித்துக் கொண்டு இருந்தார் ரவி.

ஆனால் விஜயம் மட்டும் தன் மகனும் அவள் பக்கம் சென்றுவிட்டான். என்று மனதில் கீதாவை கருகிக்கொண்டு இருந்தாள்.

‘ ஏற்கனவே வீட்டு வேலையை எல்லாத்தையும் என்னையே பார்த்துக்க சொன்னான். ஏன் கேட்டதுக்கு ‘ அவள் வேலைக்கு போறவ. இனிமேல் நீ, தான் வீட்டு வேலையெல்லாம் செய்யனும். கீதாவை தொந்தரவு செய்த. நீ அவள கஷ்டப்படுத்துறேன்னு என் காதுக்கு வந்துச்சினா. உன் மகனுடைய இன்னொரு முகத்தை நீ பார்க்க வேண்டியது இருக்கும்.” சொன்னவன் இன்னிக்கு இப்படி பேசிட்டு போறனே. எப்படி மயக்கி வச்சி இருக்கா. நீ உருப்புடவே மாட்டடி.’ என மனதுக்குள் புலம்பி தள்ளினாள்.

அங்கே ராஜாவின் அலுவலகத்தில் ” குட்மார்னீங் சார்”  என்று கையில் பைலோடு நின்றுக்கொண்டு இருந்தாள் பிரியா.

” குட்மார்னீங் பிரியா. கீதாவையும் அருணையும் என் கேபினுக்கு வர சொல்லுங்க. ” என்று அவன் சொல்லியும் பிரியா அந்த இடத்தை விட்டு நகராமல் இருக்க. பிரியாவின் கையில் பையில் இருப்பதை பார்த்து “என்ன நீங்க பையில் எடுத்துட்டு வந்து இருக்கீங்க? அருண் கீதா எங்கே? என கேட்டான்.

ஆனால் அவளோ அமைதியாக நின்றிருந்தாள்.

ராஜாவோ புருவங்கள் சுருக்கிக் கொண்டு ” சொல்லுங்க உங்க கிட்ட தான் கேட்டுட்டு இருக்கேன்.” என்றான்.

” சார் அவங்க இரண்டு பேரும் வேலையை ரீசைன் பண்ணிட்டாங்க சார். ” என பிரியா சொல்லி முடிக்க.

” வாட் ” என கோபத்துடன் இன்பராஜா கத்தினான்.

பிரியாவோ ” நேத்து இந்து மேடம் அவங்க கிட்ட கொஞ்சம் ரூடா நடந்துட்டாங்க சார். அதான் மரியாதை இல்லாத இடத்தில் நான் வேலை செய்ய மாட்டேன், கீதா மேடம் சொல்ல, அருண் சாரும் நானும் அதையே சொன்னாரு சார்.”

அதை கேட்ட இன்பராஜா கோபத்தை அடக்கிக் கொண்டு ” அவங்க இன்னும் அரைமணி நேரத்துல என் முன்னாடி இருக்கனும்.”  என்று சொல்லிவிட்டு இன்பராஜா ஆபிஸைவிட்டு வெளியேறினான்.

தன் வீட்டுக்கு சென்று இந்துவின் கையை பிடித்து ஆபிஸ்க்கு அழைத்து சென்றான். அவன் அம்மா “எங்கடா கூட்டிட்டு போற” என்க. பதில் கூறமால்  இந்துவை இழுத்துக் கொண்டு சென்றான்.

“அத்தான் கையை விடுங்க. கை ரொம்ப வலிக்குது. ப்ளீஸ் விடுங்க ” என்று அவள் எவ்வளவு கெஞ்சியும் அவன் காதில் வாங்காமல் கேபினுக்குள் சென்றான்.

அங்கு அருண் மட்டும் இருப்பதை பார்த்து பிரியாவை கேள்விக் குறியாய் நோக்கினான்.

பிரியாவோ ” நான் எவ்வளவோ போன் பண்ணி சொல்லிட்டேன் சார். பட் அவங்க வரவே முடியாது சொல்லிட்டு அவங்க மொபைல் ஆப் பண்ணிட்டாங்க சார்.” என அவள் சொல்ல, ஏற்கனவே கோபத்தில் இருந்தவன் இன்னும் கோபம் தலைக்கேறியது.

” சார் இப்ப எதுக்கு எங்களை வர சொன்னீங்க. அதான் உங்க வேலை வேண்டாம். ரீசைன் பண்ணிட்டேம்ல சார். இப்ப எதுக்கு வர சொல்லி இருக்கீங்க “என்று  அருண் கேட்டான்.

கோபத்தில் இருந்தவன் அருண் தன்னை கேள்விக் கேட்பதை பொருத்துக்கொள்ள முடியாமல்.    “நீங்க எந்த காரணத்துக்காக வேலையை ராஜினாம செய்திங்கனு தெரிஞ்சிக்கலமா? என்று ராஜா அழுத்தமாக கேட்க.

அருணோ கொஞ்சமும் அசராமல்  “மரியாதை இல்லாத இடத்துல நாங்க வேலை செய்ய மாட்டோம் சார். ” என்றான்.

ராஜாவோ அவனை உற்றுநோக்கி ” உங்க மரியாதைக்கு எந்த பிரச்சனையும் வந்த மாதிரி எனக்கு தெரியாலையே! கீதாவை தான் இவங்க அடிச்சி இருக்காங்க. சோ அவங்க இந்த வார்த்தையை சொன்ன பரவாயில்லை. நீங்க எப்படி சொல்லலாம். அதுவும் இல்லாமல் வேலையை விட வேண்டும் என்றால், மூன்று மாதத்துக்கு முன்னாடியே லட்டர் கொடுத்து இருக்கனும். அப்படி கொடுக்கமால் வேலையை விட்டால் நீங்க கம்பெனிக்கு ஐந்து லட்சம் அபதாராம் கட்டனும் இது உங்க  அகிரீமெண்ட் பேப்பர் இருக்குமே நீங்க படிக்கவில்லையா? நான் இதை வைத்து உங்க மேல் கேஸ் போட முடியும். ” என்று நிதானமாக கூறியவனை அதிர்ச்சியுடன் பார்த்தான் அருண்.

அதிர்ச்சியில் இருந்து மீளதாவன் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிக்கொண்டு இருந்தான். அன்னிக்கு அகிரீமெண்ட்ல எதுவும் படிக்காமல் சைன் போட்டு விட்டதை நினைவுக்கு வந்தது. பாவம் இவனால் என்ன செய்ய முடியும். ஐந்துலட்சம் என்பது இவனுக்கு மிக பெரிய தொகை அல்லவா கடன் வாங்கி கொடுத்து விட்டால் பிறகு அந்த கடனை எப்படி அடைப்பான் தந்தையிடம் கூறினால் அவரால் தாங்கிக் கொள்ள முடியுமா? நம்மளால எதுவும் செய்ய முடியாதா நிலைமையில் இருக்கும் போது கீதாவால் என்ன செய்ய முடியும். என்று பல்வேறு யோசனைக்கு பிறகு மறுபடியும் வேலைக்கு சேர்வது என்று ஒப்புக்கொண்டு கையொப்பம் போட்டான் அருண்.

அருண் நல்ல திறமைசாலி ஒரு வேலையை கொடுத்தால் சிறு தவறுகூட இல்லாமல் நேர்த்தியாக செய்துவிடுபவன் அப்ப அப்ப லூசு மாதிரி பேசினாலும் வேலையின்னு வந்துட்டா வெள்ளைகாரன் மாதிரி செய்து முடிப்பான். அதற்காகவே அவனை வேலையிலிருந்து இழக்க மனம் இல்லாமல் இவ்வாறு நடந்துக்கொண்டான் இன்பராஜா.

பிரியாவிடம் திரும்பி கீதாவுக்கு திரும்பவும் போன் முயற்சி செய்யுமாறு கட்டளைவிடுத்தான்.

இந்துக்கோ தன்னை எதற்கு அத்தான் இங்கே அழைத்து வந்தார் என்று புரியாமல் யோசனை செய்துக்கொண்டு இருந்தாள்.

அந்த பக்கம் கீதா போனை எடுக்க பிரியா ஹாலே சொல்ல போக. அவள் கையில் இருந்த போனை வாங்கி இவன் பேசிய. அடுத்த அரைமணி நேரத்தில் இன்பராஜாவின் கண்முன்னே நின்றுக்கொண்டு இருந்தாள் கீதா……

இனி அடுத்த அத்தியாயத்தில் காணலாம்.

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page