காதல் -19
தன்னை யாரோ தட்டி அழைப்பது உணர்ந்தவள் மெல்ல கண்களை திறந்தாள்.
அங்கே அருண் ” கண்ணை மூடிக்கிட்டே கனவா காண்றியா ஏஞ்சல்?. அப்படி என்ன கனவுமா.? நான் கூப்பிடுறது கூட கேட்கம, கனவுலகத்துல இருக்க.” என்று கேட்டான்.
அவளோ “அப்படியொல்லம் எதுவும் இல்லை அருண். கொஞ்சம்
தலைவலி அதான். அப்படியே கொஞ்ச நேரம் கண்ண மூடி தூங்கிட்டு இருந்தேன்..” என்றாள் சாதாரணமாக.
அதை கேட்டவன் ” என்னது?தூங்கிட்டு இருந்தியா??? அப்ப கனவு இல்லையா? நான் கூட என்னோவோ நினைச்சிட்டேன்.” என்று பாவமாக கூறினான்.
” ம் ஆமா, நீ என்ன நினைச்ச?” அருண்.
“ஒன்னும் இல்லை. ஏஞ்சல் வா கிளம்பலாம் டைம் ஆச்சி. “என்றிட.
அவளோ குழம்பத்துடன் ” எங்க கிளம்பனும்? எதுக்கு டைம் ஆச்சி? அருண்.
“அடிபாவி டைம் என்ன தெரியுமா? வீட்டுக்கு போக வேண்டாமா?. என்று அவன் கேட்க. அவளோ அதிர்ந்து,
“என்னது வீட்டுக்கா? நான் இன்னும் என் வேலையை முடிக்கவே இல்லை அருண்” என்று எழுந்தவள்.
அப்போது தான் தன் சோபாவில் தூங்கிக்கொண்டு இ்ருந்து இருக்கிறோம் என உணர்ந்தாள்.
‘காலையில் நான் என் டேபிள் தானே இருந்து, நேத்து நடந்ததை யோசனை செய்துக் கொண்டு இருந்தோன். அப்படியே தூங்கிட்டேனோ அப்ப நம்மளை யாரு சோபாவில் தூக்கிவந்து போட்டது ‘ என யோசனை செய்தவளை மீண்டும் உணர்வுக்கு கொண்டு வந்தான் அருண்.
” என்னமா மறுபடியும் கனவா? யாருடா நம்மளை சோபாவில் போட்டது யோசிக்கிறீயா? இந்த அளவுக்கு எல்லாம் உன்கிட்ட இல்லதா மூளையை போட்டு யோசிக்க வேண்டாம். நானே சொல்றேன். காலையில நீ வந்ததிலிருந்து, நான் உன்னை கவனிச்சிட்டு தான் இருங்கேன். நீ எதையோ யோசனை செய்துக்கிட்டே அப்படியே தூங்கிட்ட. தூங்கி, தூங்கி விழுந்துட்டு இருந்தியா.பாவம் சின்ன பொண்ணு நல்ல அசந்து தூங்குறா. அவ தூக்கத்தை ஏன் கெடுக்க வேண்டும் நினைச்சி, ஒரு நல்ல நோக்கத்தோடு உன்னை தூக்கி சோபாவில் போட்டேன். அப்புறம் உன் வேலையையும் நானே செஞ்சிட்டேன். ” என நடந்ததை பாதி மறைத்து பாதி மட்டும் சொன்னான். மீதியை சொன்னால் எங்கே தன்னை தப்பாக நினைத்துக் கொள்வாளோ என்று எண்ணி மறைத்தான்.
நேற்று நடந்ததை பற்றி யோசித்துக் கொண்டே இரவு முழுவதும் தூங்காமல் இருந்ததால் அப்படியே உறங்கிவிட்டாள். கீதாவிடம் ஏதோ பையில் வாங்க எதேச்சையாக திரும்ப அவள் தூங்கிக் கொண்டு இருந்தவள் கீழே விழப்போக ஓரே எட்டில் பிடித்து தன் இரு கரங்களிலும் அவளை அடக்கிக் கொண்டு பூப்போல் அவளை தூக்கி சோபாவில் கிடத்தி அவள் முகத்தில் விழந்த கூந்தலை அவளின் காதோரம் நகர்த்திவிட்டு,
கீதா தூங்கும் அழகை ரசித்து, முதல் முதலாக கீதாவின் நெற்றில் தன் இதழ் பதித்தான் அருண்.
” நீ எவ்வளவு அழகுடி. உன்னை மாதிரி ஒரு அழகியை நான் பார்த்தது கூட இல்ல. ரொம்ப நல்ல மனசு ஏஞ்சல் உனக்கு. மத்தவங்க தனக்கு கேடுதால் பண்ணாலும், நீ அவங்களுக்கு நல்லது தான் செய்யுற. நான் உன்னை எந்த அளவுக்கு லவ் பண்றேன் தெரியுமா?. நீ மட்டும் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்ட. என் உள்ளங்கையில் உன்னை வச்சி தாங்கு, தாங்குனு தாங்குவேன் ஏஞ்சல். ஆனா என் காதலை சொன்னா! நீ ஏத்துப்பியா? இல்லையா? என்ற பயம் தான்டி. இனிமேலும் என்னால வைஃட் பண்ண முடியாது ஏஞ்சல். இன்னும் இரண்டு நாளில் காதலர்கள்தினம் வருது அப்போ உன் கிட்ட என் காதலை சொல்ல போறேன் கீதா. ஐ லவ் யூ ஏஞ்சல் ‘ என அவன் மனதில் நினைக்க.
அருணை தட்டி ” இப்போ நீ தான் அருண் கனவுல இருக்க. அதுவும் கண்ணை திறந்துக்கிட்டே. “என்று சொல்லி சிரித்தாள் கீதா.
அவனோ அசடுவழிந்து ” ஈஈஈஈஈஈ” என இளித்துக்கொண்டு இருந்த நேரம், இன்பராஜாவிடம் இருந்து அவன் அறைக்கு வர சொல்லி அழைப்பு வந்தது.
‘ இந்த பாஸ்க்கு கொஞ்ச நேரம் நம்ம சந்தோஷமா இருந்தா பிடிக்கதே.’ என்று புலம்பிக் கொண்டு இன்பராஜாவின் அறைக்கு சென்றான்.
” அருண் நாளை மறுநாள் ஒரு ரெஸ்டாரன்ட் புக் பண்ணுங்க. அப்புறம் எல்லாம் டேபிளும் புக் பண்ணிடுங்க. அண்ட் கீதா நம்ம ஆபிஸில் இருக்குற, எல்லா ஸ்டாப்பையும் அருண் புக் பண்ற ரெஸ்டாரன்ட்டுக்கு இன்வைட் பண்ணிடுங்க. ” என்று கடகடவென பேசிக் கொண்டிருந்த ராஜாவைப் பார்த்து,
“அன்னிக்கு ஏதாவது மீட்டிங் இருக்கா சார்.” என்று கேட்டான் அருண்.
“ம் இவருக்கு பிறந்தநாள் அருண்” என கீதா ராஜாவைப் பார்த்து கொண்டு சொல்ல.
ராஜாவோ நிமிர்ந்து அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு “ம்ம் ஆமா” அருண் என்றான்.
இன்பாவை பார்த்துக்கொண்டு இருந்தவள் தான் என்ன சொன்னோம் என்று கூட தெரியாமல் நின்றவளை. நிஜத்துக்கு கொண்டு வந்தான் அருண்.
“போலாம் கீதா ” என சொல்ல.
“இல்ல அருண் நீங்க போங்க. நான் இவங்களை வீட்டுல விட்டுறேன். கொஞ்சம் வொர்க் இருக்கு. ” என்று சொல்லி அருணை அனுப்பிவிட்டு தன்னவளிடம் திரும்பினான் இன்பா.
அதைக் கேட்டு அவரும் சரி என்று கூறி விட்டு வெளியேறியவன் மனதிலோ,
“எதுக்காக சார் ஏஞ்சலை ஆபிஸில்
வொர்க் இருக்கு பொய் சொல்லி இருக்க சொன்னாரு. அவள் வேலையும் சேர்த்து தான் நான் முடிச்சிட்டேனே? அப்புறம் எதுக்கு வைட் பண்ண வச்சி இருக்காரு. ஏஞ்சலுக்கு எப்படி பாஸ் பிறந்தநாளுன்னு தெரியும்.” என்று சந்தேகித்த அருண் மனசாட்சி,
“அட முட்டாள் அவ பாஸ் பி.ஏ. டா இது கூட தெரியாமல் எப்படி இருக்கும்” என ஒரு மனது சொன்னாலும். இன்னொரு மனது “நானும் அவருக்கு பி.ஏ. தானே?எனக்கு எப்படி தெரியாமல் போச்சி ஒரு வேளை பாஸ் கீதாவை லவ் ஏதாவது ச்சீசீ..ச்சீசீ என்ன என் மனசு இப்படி எல்லாம் நினைக்குது” என்று பல யோசனையில் வீட்டுக்கும் வந்து சேர்ந்தவன் ராஜா சொன்னா வேலையை போன் மூலமாக செய்ய அரம்பித்தான்.
அங்கே ” இப்ப எதுக்கு என்னை வைட் பண்ண வச்சிட்டு நீங்க வேலையை பார்த்துட்டு இருக்கீங்க. என்ன தான் நினைச்சிட்டு இருக்கீங்க உங்க மனசுல. நான் சீக்கிரமா வீட்டுக்கு போக வேண்டாமா? இல்ல அன்னிக்கு நடந்த மாதிரி ஏதாவது நடக்க வேண்டுமா? அதுக்கு தான் ஆசை படுறீங்களா” என்று பொரிந்து தள்ளினாள் கீதா.
“அமைதியா இரு கீதா நான் செம்ம கோவத்தில் இருக்கேன். அப்புறம் என்னையும் மீறி எதாவது செஞ்சிட போறேன். ” என்ற தன் கோபத்தை இழுத்துப் பிடித்துக் கொண்டு கூறினான்.
அவளோ அவன் கூறியதை அலட்சியமாக எடுத்துக் கொண்டு” ஆமா இவரு பெரிய சண்டிவீரர். அப்படியே கோபம் பொத்துட்டு வந்துடும். இப்ப எதுக்கு இந்த பொய்? எதுக்கு என்னை இருக்க சொல்றீங்க.? “என்றாள்.
முகத்தை தன்னவளிடம் காட்டாமல் மடிகணினியில் பார்வையை பதித்து இருந்தான். அவன் மட்டும் கீதாவை ஒரு பார்வை பார்த்து இருந்தால் அவளுக்கும் புரிந்து இருக்கும் அல்லவா உண்மையாவே தன்னவன் கோபமாக இருக்கிறான் என்று. அதற்கு காரணமும் தான் என்றும் புரிந்து இருக்கும் அல்லவா.
காலையிலிருந்து வேலை விசியமா வெளியே சுத்திவிட்டு ஆபிசுக்கு வந்தவன். கீதா வீட்டுக்கு செல்வதுக்கு முன்னால் அவளை ஒரு தடவை பார்க்கும் ஆவலில் மடிக்கணினியை எடுத்து பார்க்க, அங்கே தூங்கிக் கொண்டு இருந்த கீதாவை எழுப்பி அருணும் அவளும் சிரித்துக்கொண்டு இருந்ததை பார்த்து,
” இவள் என்ன இந்த டைம்ல தூங்குறா” என்று எண்ணம் தோன்ற “காலையிலிருந்து என்ன பண்ணிட்டு இருந்தா” என காலையில் நடந்ததை பார்த்தான்.
சிசிடிவி பார்த்தவன் கண்கள் அக்னி ஜ்வாலை போல மின்னியது.
அருண் செய்த செயலை தன் மடிக்கணினி மூலமாக அனைத்தையும் பார்த்தவனுக்கு கோபம் வர தானே செய்யும். தனக்கு சொந்தமானவளை இன்னொருவன் உரிமை கொண்டாட நினைத்தால் இவனால் எப்படி பொருத்துக்கொள்ள முடியும்.
அந்த கோபத்தை மொத்தமும் தன் கைகளில் காட்டி இருந்தான் இன்பா. அவன் கைககளில் ரத்தம் வழிவதை கூட பொருட்படுத்தமால் அருண் கீதாவுக்கு கொடுத்த முத்தமே அவன் கண்முன் வந்து வந்து போனது.
இதை எதையும் கவனிக்காமல் அவள் பேசிக்கொண்டே போக ஒரு கட்டத்தில் கோபம் தலைக்கு ஏற தன்னவளின் அருகில் வந்து அவளது தோள்களை அழுத்தி பிடித்து,
” இப்ப உனக்கு என்னடி இவ்வளவு அவசரம். ஏன் அருண் கூட தான் போகனுமா. என் கூட வரமாட்டியா?” என்று மேலும் அவளின் தோள்களை இறுக்கினான்.
வலி தாங்க முடியாமல் அவன் கையை தள்ளி விடும் போது தான் கவனித்தால் இன்பாவின் கைகளிலும் தலையிலும் ரத்தம் வழிந்துக்கொண்டு இருபத்தை.
அதை பார்த்தவுடன் பதறிப்போய் “என்னாச்சு இன்பா? ஏன் கையெல்லாம் இரத்தமா இருக்கு. ஏதாவது அடிப்பட்டுடிச்சா? இதை ஏன் என் கிட்ட முன்னாடியே சொல்லலால. அய்யோ எப்படி இரத்தம் வருது பாருடா. ஏன்டா இப்படி பண்ற ” என்று துடிதுடித்தவளின் கண்களில் வந்த கண்ணீரை துடைத்து தன் துப்பட்டாவின் ஒரு முனையை கிழித்து இன்பாவின் கையில் கட்டிவிட்டு அவனை சோபாவில் அமர்த்தி பஸ்டேய்ட்கிட் எடுக்க அவனது மேசையை திறக்கும் போது தான் கவனித்தாள்.
கண்ணாடி கிளாஸ் சுக்கு நூறாக கிடைப்பதைப் பார்த்தவுடன் புரிந்தது அவன் நிஜமாகவே கோபமாக இருந்து இருக்கிறான். அதை யாரிடாம் காட்டுவது என்று தெரியாமல் தன்னை தானே வருத்திக்கொண்டு இருக்கிறான்.
கிளாஸ் நெறுக்கியா வேகத்தில் தலையையும் பதம் பார்த்து இருக்கும் என்று யோசித்துக் கொண்டே தன்னவனின் காயங்களுக்கு மருந்து போட்டுவிட்டு ஆஸ்பத்திரிக்கு அழைத்தாள்.
ஆனால் அவள் எவ்வளவு கஷ்டப்பட்டும் கண்ணீரை அடக்கினாலும் அது அடங்கமால் அவள் கண்ணிகள் வழிந்துக் கொண்டே இருந்தது. அவ்விழிநீர் அவன் காயங்களில் பட்டு மருந்தகாவே மாறியது.
அவனோ ” நான் வரவில்லை உனக்கு நேரம் ஆச்சி சொன்னல நீ கிளம்பு. உன் பொய்யான கரிசனாம் எனக்கு தேவையில்லை”. என்று அவள் முகத்தை கூட பாராமல் வேறு திசையை பார்த்து கோபமாக கூறினான்.
‘ தன் கையில் இரத்தம் வருவதை பார்த்து பதறியவளை அவனும் கவனிக்க தான் செய்தான். தனக்காக வருந்துபவளையும் அவள் கண்களில் வழியும் கண்ணீரையும் பார்த்தால், தானும் உடைந்துவிடுவோமோ என்று பயந்து அவளை பார்க்காமல் திரும்பிக்கொண்டான்.
இவன் இப்படி செய்தால் கீதா விட்டுவிடுவளா என்ன! தன்னவனின் அருகில் அமர்ந்து இன்பாவின் முகத்தை தன் பக்கமாக திருப்பி தன்னவனின் கண்களை பார்த்து ” எனக்காக வர மாட்டியாடா.” என்று கீதா கேட்ட அடுத்த நொடி தன்னவளை அணைத்துக் கொண்டான்.
கீதாவும் அவன் அணைப்பதற்கு தடை விதிக்காமல் அவளும் தன்னவனை அணைத்துக் கொண்டாள்.
“இப்ப எதுக்கு இன்பா உனக்கு நீயே தண்டனை கொடுக்கிற. யாரு மேல உனக்கு கோபம் சொல்லுடா. நீ கோபமா இருந்தா மட்டும் தான் உன்னை நீயே காயப்படுத்திப்ப. எனக்கு இது கூடவா தெரியாது. சொல்லு என்னாச்சி இன்பா?” என அன்பாக கேட்டாள்.
அவனுக்கோ பல வருடம் கழித்து தன்னவளின் அன்பான பேச்சை கேட்டு அவள் மடியில் தலை வைத்துப்படுத்துக் கொண்டு,
“ப்ளீஸ் கீத்துமா இனிமேல் என்னை விட்டு போகாதே. இனியும் நீ இல்லாமல் என்னால் வாழ முடியாதுடி. உன்னை யாருக்காகவும் விட்டு தரமாட்டேன் ” என்று அவள் மடியில் தலையை புதைத்து அழும் இன்பாவை பார்த்த கீதா உடைந்தேவிட்டாள்.
பல வருடம் கழித்து அழுபவனை அதுவும் இந்த தடவையும் தனக்காக அழுபவனை பார்க்க முடியாமல் என்ன கூறுவது என்று தெரியாமல் தவிதவித்துப் போனாள்.
அவள் எப்படி கூறுவாள் தன்னவனுக்காக தான் தன்னவனையோ பிரிந்து சென்றாள் என்று. அவளால் கூற முடியுமா? கூறினாள் தான்…இவன் புரிந்து கொள்வானா?!!!!!!!…….
இனி அடுத்த அத்தியாயத்தில் காணலாம்.
