காதல் -20
10,9,8, 7, 6, 5, 4, 3, 2,ஆண்ட்..1……..
“மெனி மோர் ஹேப்பி ரிட்டன்ஸ் ஆப் த டே. கீத்தும்மா ” என்று நெகிழ்ச்சியாக கூறினான் ராஜா.
அவளோ புன்னகையோடு “தங்க்யூ சார். அய்யோ சாரி சாரி இன்பா. ” என்றவள் அவனுக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள் கூறினாள்.
அவனும் நன்றியை கூறிவிட்டு “அண்ட் காதலர்தின வாழ்த்துக்கள் ஐ லவ் யூடீ..” என்றான்.
ஆம் கீதா பிறந்த தினமும் அவளின் மனம்கவர்ந்தவனின் பிறந்த நாளும் காதலர்கள் தினத்தன்று தான்.
கீதாவோ வெறும் ” ம்ம்ம் “என்று மட்டுமே கூற.
அவனோ தோய்ந்த குரலோடு
” என்னடி வெறும் ம்ம்ம் மட்டும். தானா? திரும்பவும் சொல்ல மாட்டியா?. அப்போ நீ.. ஆபிஸ்ல என் கிட்ட சொன்னது எல்லாம் பொய்யா? என்னை சமாதானம் பண்ண தான் இனிமேல் உன்னை விட்டு போக மாட்டேன்டா. நான் உனக்கு மட்டும் தான் சொந்தம் சொன்னது எல்லாம் பொய்யா கீதா? ஆறுவருஷம் கழித்து நீ என் கிட்ட ஐ லவ் யூடா என்ற வார்த்தையை சொல்லுவ அத நான் கேட்க போறேனு சந்தோஷமா இருந்தேன்டி. ஆனா நீ..நீ…” என வருத்ததோடு பேசியதை கேட்டவள்,
” ஐ லவ் யூ. இன்பா “என சொல்லிய அடுத்த கணம் கைபேசி என்றும் பாரமல் முத்த மழை பொய்தான் இன்பா.
பின் கீதாவோ ” எனக்கு தூக்கம் வருது நம்ம காலையில் மீட் பண்ணலாம் இன்பா ” என்று பட்டும்படாமல் பேசியவளை கவனிக்க தவறி தான் போனான் இன்பா.
அவள் மூளையோ அன்று அலுவலகத்தில் நடந்தத்தை பற்றியே சிந்தித்துக் கொண்டு இருந்தது.
அவள் மடியில் முகம் புதைத்து எனக்கு அந்த பொம்மை வேண்டும் என்று அடம்பிடிக்கும் குழந்தையப் போல். ‘எனக்கு நீ வேண்டும். உன்னை யாருக்கும் விட்டுதர மாட்டேன் ‘ என்று அழுதவனை. என்ன சொல்லி சமாதானம் செய்வது என்று தெரியாமல். தன்னவன் படும் வேதனையை பார்க்க முடியாமல். அந்த வார்த்தையை கூறிவிட்டாள் பேதையவள்.
“நான் உனக்கு மட்டும் தான் இன்பா. நான் உனக்கு சொந்தமானவள் என்று ஏற்கனவே முடிவு ஆகிடிச்சி. அதுக்கு அப்புறமும் என்ன பயம் உனக்கு.” என கீதா சொன்னாவுடன் அவள் முகத்தை பார்த்து,
” நீ உண்மையா தான் சொல்றீயா.?” என அவன் கண்கள் ஆவலுடன் கேட்க.
கீதா மொத்தமாகவோ தன்னிலையை மறந்து போனாள்.
தன்னவனின் நெஞ்சில் சாய்ந்து, ” நான் உண்மையை தான் சொல்றேன்டா. நான் உன்னை விட்டு இனிமேலும் பிரிஞ்சி போக மாட்டேன்டா. “என்று உணர்ச்சி பொங்க சொன்னவளை இன்னும் கட்டிக்கொண்டு அவள் நெற்றியில் இதழ் பதித்தான் ராஜா.
அவள் மெல்ல விலகி போக, ஆனால் அவனோ அவளை இறுக்கிபிடித்து அவனது அணைப்பிலே வைத்தான்.
அவளின் மூளையில் திடீரென்று ஏதோ ஞாபகம் வர. அவனை தள்ளி நிறுத்திவிட்டு “ஆமா இன்பா என்னை யாருக்கும் விட்டு தர மாட்டேன் சொன்னியே. எதுக்கு அப்படி பேசுன.” என்று கீதாவின் திடீர் கேள்வியில் சற்று தடுமாறினான்.
‘ நான் நடந்ததை சொன்னா உன்னால தாங்க முடியாதுடி. நீ அருணை ஒரு நல்ல நண்பன தான் பார்க்குற. ஆனா அவன் ச்சே இதை எப்படி சொல்லுவேன் அப்புறம் நானே உன்னை சந்தேகப்படுற மாதிரி இல்லையா?’ என்று பலத்த சிந்தனையில் இருந்தவனை நறுக்கென்று கில்லினாள்..
தான் கொடுத்த வாக்குறுதியையும் தான் இருக்கும் இந்த நிலைமையையும் மறந்து இன்பாவின் பழைய கீதாவாகவே மாறிப்போனாள். இந்த சில மணி நேரத்தில்.
” ஸ்ஸ்.. ஆஆ வலிக்குதுடி. “என்று கரத்தை தேய்த்துப்படி.
” பின்ன என்னடா நான் உன் கிட்ட பேசிக்கிட்டு இருக்கேன். நீ என்னடானா. வேற எதையோ பற்றி யோசனை செய்துக்கிட்டு இருக்க?”.
“அது ஒன்னும் இல்லைடி. பல வருஷம் கழிச்சி நீ எனக்கு கிடைச்சி இருக்கல. அதான் சந்தோஷமா அடுத்தது என்ன பண்ணலாம் நினைச்சிட்டு இருந்தேன்.” என்று கீதாவின் அருகில் ஒரு அடி எடுத்து வைக்க அவளோ…
அவனின் பார்வையின் தெரிந்த மோக நிலையை புரிந்துக் கொண்டவள் ” டேய் கிட்ட வராத” என்று பின்னால் ஒரு அடி வைக்க போனவளை, அவள் அசந்த நேரத்தில் தன்னவளை அவன் கைகளுக்குள் அடக்கினான் ராஜா.
இன்பாவின் இந்த திடீர் அணைப்பை எதிர்பார்க்கதவள் “என்னை விடுடா” என்று அவன் நெஞ்சில் அடித்து அவன் நெஞ்சுக்குள் தஞ்சம் புகுந்தாள் விலக மனமின்றி.
அவளை அணைத்து இருந்தவனின் கரங்கள் பெண்ணவளின் மேனியில் கோலமிட்டு வெட்கத்தில் செவந்த இருந்தவளின் கன்னத்தில் இதழ் பதித்தான்.
அவளிடம் இருந்து எந்த எதிர்ப்பும் இல்லாமல் போக அடுத்த கட்டமாக தன்னவளின் இதழ்களை சிறைப்பிடிக்க எண்ணிய போது, அவன் கைபேசி சினங்கியது.
அதில் தன்னிலையை உணர்ந்தவள் சட்டென்று விலகினாள்.
அவளின் முகம் முழுவதும் வெட்கட்தோடு, மனம் முழுக்க மகிழ்ச்சியோடு தலை குனிந்து நின்றவளை ஆசையாக பார்த்துக்கொண்டே போனில் யார் என்றும் பார்க்காமல் அழைப்பை ஏற்று “ஹலோ “என்றவன் எதிர்முனையில் கேட்ட குரலை வைத்து,
“ம்ம்ம் சொல்லுங்க அப்பா. “என்று ராஜாவின் வார்த்தையை கேட்ட அடுத்த நொடி மின்னல் தாக்கியது போல் உணர்ந்தாள் கீதா.
பெண்ணவளின் மனமோ பல போராட்டங்களுக்குள் நடுவில் திடீரென சிக்கிக் கொண்டு தவிப்பது போல் உணர்ந்தாள்.
‘ நான் என்ன பண்ணிட்டு இருக்கேன்?. எப்படி நம்ம கட்டுப்பாட்டை இழந்தோம்.? இன்பாவுக்கு ஆறுதல் சொல்ல நினைத்து அதில் நானே விழுந்துவிட்டேனே! இதற்கு மேல் இங்கு இருந்தால் நிலைமை மோசமாகிவிடும்” என்று பயந்து ராஜாவிடம் ஒரு வார்த்தை கூட கூறாமல் வீட்டுக்கு ஓடினாள்.
அவன் எவ்வளவு கூப்பிட்டும் திரும்பி கூட பாராமல் சென்றாள். வீட்டுக்கு வந்தவள் தன் உணர்வுகளையும் தன் நினைவுகளையும் அடக்க பெரும்பாடுப்பட்டாள்.
போனில் எதிர்முனையிலோ ” ஓய் என்ன கீத்து பதிலே இல்லை. நான் இன்னும் லைன்ல தான் இருக்கேன். என்ன ஆபிஸில் நடந்ததை நினைத்து வெட்கமா? கூப்பிட கூப்பிட நீ பாட்டுக்கு போயிட்ட. “என்று அவளின் மனநிலை தெரியாமல் பேசினான் ராஜா.
” அதெல்லாம் ஒன்னும் இல்லை இன்பா நான் போன் வைக்கட்டுமா?”.
அவனோ சிறிது குழப்பத்துடன் ” என்னடி டைம் 12:15 ஆக போகுது. உங்க அப்பா அம்மா உனக்கு கேக் எடுத்துக்கிட்டு வாழ்த்து சொல்ல வரவில்லையா?. “என்று கேட்டவனுக்கு மௌனத்தையே பதிலாக கொடுத்தாள்.
…….
” என்னடி பதிலே இல்ல,
லைன்ல இருக்கியா? இல்லையா?” என்று அவன் கூக்குரல் கொடுத்ததை கூட காதில் வாங்கிக் கொள்ளாம்மல் அழைப்பை துண்டிட்டாள். ‘ நான் பேசிட்டு இருக்கேன். இவ போனை கட் பண்ணிட்டா. ஒரு வேளை உண்மையாவே. டயார்ட இருக்குமோ. சரி காலையில பேசிக்காலம்.’ என நினைத்து ஆறு வருடம் கழித்து நிம்மதியாக உறங்கினான் இன்பராஜா.
அவளின் தந்தையையும் தாயையும் பற்றி பேசிய அடுத்த கணமே போனை கட் பண்ணிவிட்டு தேம்பி..தேம்பி அழுதுக்கொண்டு இருந்தாள் பெண்ணவள்.
‘இதே நாள் ஆறு வருடத்துக்கு முன் எப்படி எப்படியெல்லாம் சந்தோஷமா இருந்தேன். என்னை விட இந்த உலகத்தில் வேற யாரும் பாக்கியசாலி இல்லையினு நினைச்சேன். ஆனா எல்லாம் பறிபோகிடிச்சி அதுவும் என்னல பாவி பாவி நான்.. ” என்று தன்னை தானே வதைத்துக் கொண்டு இருந்தவளின் நினைவோ கடந்த காலத்திற்கு சென்றது.
————————————————————
” நாளைக்கு என்ன நாள் நிஜமா உனக்கு ஞாபகம் இல்லையாடா ராஜா… “என்று கல்லூரியில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்த சூரியா கேட்க.
மற்றவர்களும் புரியாமல் பார்த்தனர்.
“டேய் சூரியா பரத் வெறுப்பு ஏத்தாமல் ஒழுங்க விசியத்தை சொல்லுங்க டா. “என ராஜா சற்று எரிச்சலோடு கேட்டான்.
“மச்சி நாளைக்கு.” என ஆரம்பிக்க.
ராஜாவோ “சூரியா நாளைக்கு என்ன நாளு உனக்கு தெரியாதா, மட்டும் கேட்ட அப்புறம் இந்த டிபன் பாக்ஸ்ல அடிப்பேன்.. ” என்றான் டிபன் பாக்ஸை கரங்கலில் ஏந்தியபடி.
” இன்பா இது என் டிபன் பாக்ஸ் அநில அடிச்சா” என கீதா சொல்ல வர.
அதற்குள் சூரியா இடையில் புகுந்து ” சொல்லுமா, நல்லா சொல்லு. இந்த டிபன் பாக்ஸை பாரு எந்த அளவுக்கு வைட்டா இருக்கு. இதுல அடிச்சா இந்த அண்ணாவுக்கு வலிக்கும். அடிபட்டுவிடும் சொல்லுமா இந்த மரமண்டைக்கு “என்று டிபன் பாக்ஸையும் கீதாவையும் மாறி மாறி பார்த்துக் கொண்டே கூறினான்.
கீதாவோ ” டேய் பக்கி” என சூரியாவை அழைக்க..
அதிர்ந்த விழியோடு ” டாவா பக்கியா??. இத்தனை நாள் ராஜாவா தான் மரியாதை இல்லாமல் வாடா போடா சொன்னா. இப்ப என்னையுமா? டேய் மச்சி பரத் அப்புறம் உனக்கும் இதே கதி தான்.” என்று சூரியா பாவமாக கூறினான்.
சூரியாவை மேலிருந்து கீழ்வரை பார்த்த கீதா “பச் ஆமாடா நான் சொல்ல வருவதை முதல காது கொடுத்து கேளு. ” என்று கீதா சொல்லா சூரியாவும் கேட்பது போல் பாவனை செய்தான்..
” இது என் டிபன் பாக்ஸ். இதில அடிச்சா பாவம் இதுக்கு வலிக்கும். அப்புறம் சொட்டை விழுந்துடும். அப்புறம் நீயா புது டிபன் பாக்ஸ் வாங்கி தருவ” என்று டிபன் பாக்ஸை தடவிக்கொண்டு பாவமாக முகத்தை வைத்துக் கொண்டாள் சொன்னாள்.
இதை கேட்ட அனைவரும் சிரிக்க சூரியா மட்டும் ரஜினிகாந்த் சார் நடிச்ச படிக்காதவன். படத்தில வர பாட்டைப்பாடி சீன் போட்டான்.
“சிந்தினேன் ரத்தம் சிந்தினேன் அது எல்லாம் வீண் தானோ.
வேப்பிலை கருவேப்பிலை அது யாரோ நான் தானோ.
என் வீட்டுக் கன்னுக்குட்டி என்னோட மல்லுக் கட்டி
என் மார்பில் முட்டுதடி கண்மணி என் கண்மணி
தீப்பட்டக் காயத்துல தேள்வந்து கொட்டுதடி கண்மணி என் கண்மணி (ஊரைத்)
“என்று அதே போல் ரம்யாவின் தோள் மீது வேண்டும் என்றே கையைப் போட்டு பாடிக்காட்ட.
அடக்க முடியாமல் வயித்தை புடித்துக் கொண்டு சிரித்தாள் ரம்யா. அவளின் சிரிப்பில் மெய் மறந்து போனான் சூரியா.
‘யாரோ தன்னை வைத்தக் கண் வாங்காமல் பார்ப்பதை உணர்ந்த ரம்யா எதிரே இருந்த சூரியாவை நோக்கினாள்.
இருவரின் பார்வையும் அவர்களின் ஆழ் மனதை தொடும் அளவுக்கு உணர்ந்தனர்.
பரத்தின் குரலில் களைந்தவர்கள் தன் நிலையை கட்டுபடுத்த சிறிது அவகாசம் தேவைப்பட்டது இருவருக்கும்.
அதற்குள் பரத்…” நாளை காதலர்தினம் மட்டும் இல்லாமல் உன் பிறந்த நாளும் கீதாவின் பிறந்த நாளும் மூன்றுமே ஓரே சமயத்தில் வருது அதை தான் அந்த பக் இவ்வளவு நேரமா சீன் போட்டு சொல்ல வந்தது” என்று கூறி முடித்தான்.
” அட ஆமாலா நான் மறந்தே போய்ட்டேன்” என்றான் ராஜா.
இதை கேட்ட கீதாவிற்கு எல்லையில்லா சாந்தோஷம். பின் கீதா “சாரிடா’.என்று கேட்டாள்.
” ஏய்..லூசு பரவாயில்லை விடு. நாளைக்கு நமக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப முக்கியமான நாள்டா என்று கைகளைவிரித்து சுற்றி ஐ..லவ்..யூ..டா….” என கத்தினாள்..
கீதா வாய்விட்டு சொல்லிவிட்டாள். ஆனால் ரம்யா மனதுக்குள் சொல்லிக்கொண்டாள்.
‘ஐ..லவ்..யூ..சூ…ரி..யா. ‘ என்று.
இனி அடுத்த அத்தியாயத்தில் காணலாம்.
