பலமணிநேர ட்ரீட்மெண்ட்டிற்குப் பிறகு மயக்கத்தில் இருந்து ஆஷிக் கண்விழிக்க, அவன் அருகில் வந்த ஆதர்ஷ், என்னடா ரோமியோ, ஒரு செகண்ட்ல என் கண்ணையே வேர்க்க வச்சுட்டியே?” என்று விளையாட்டாக அவனது தோளில் தட்ட,
“ஆ…” என்று புன்னகைத்தவாறே ஆஷிக் எழும்பி உட்கார,
“என்னடா வலிக்குதா?”
“லைட்டா…” என்றவன் அமைதியாய் இருக்க,
“என்ன எதுவும் பேசமாட்டிக்கிற?”
“என்ன பேச சொல்ற? இது ஏதோ ஸ்வாமிஜியோட ஆஷ்ரமத்துக்கு வந்த மாதிரி ரொம்ப அமைதியா இருக்கு, ஒரு நர்ஸ் கூட இல்லை கடுப்பா இருக்குடா. கண்முழிச்சு பார்த்தா ஒரு ஹாட் நர்ஸ் என் முன்னாடி இருப்பாங்கனு நினைச்சா பாகுபலி, ராணா மாதிரி நீ என்னையே விறைச்சு பாத்துட்டு இருக்க.” என்று கூற,
“அடப்பாவி! நீ திருந்தவே மாட்டியாடா? உன்னை எல்லாம்…” என்று ஆதர்ஷ் அடிக்க வர ஆஷிக், “விளையாட்டுக்குடா…” என்று சிரிக்க,
தன்னைக் காப்பாற்ற போய்தான் தன் ஆஷிக்கிற்கு இந்த நிலைமை என்று எண்ணியே, அவன் எப்பொழுது கண்விழிப்பான் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஜியாவிற்கு அப்பொழுதுதான் உயிரே வந்தது. சில நொடிகள் கழித்து உள்ளே வந்த நர்ஸ், “சத்தம் போடாதீங்க, பேஷண்ட் டிஸ்டர்ப் ஆவாங்க, டாக்டர் வர்ற டைம்.” என்று கூற,
ஆதர்ஷைப் பார்த்துக் கண் சிமிட்டிய ஆஷிக், “உங்கள மாதிரி ஒரு அழகான பொண்ணு என் பக்கத்துல இருந்தா, காலத்துக்கும் பேஷண்டா இருக்கலாம். அட சிரிக்கிறீங்களா என்ன? செமையா இருக்கீங்க.” என்று கூற,
அந்த நர்ஸ், “நல்லாதான் பேசுறீங்க…” என்று அவள் அடுத்த வார்த்தை பேசுவதற்குள் ஜியா உள்ளே வர அந்தப் பெண், “குட் ஈவினிங் மேடம்.”
“குட் ஈவினிங்” என்று பதிலளித்துவிட்டு ஆஷிக்கைப் பார்க்க, ஆஷிக்கோ ஜியாவைப் பார்த்து முறைத்தவண்ணம் இருந்தான்.
“ஹாய் ஜியா!”
“ஹாய் ஆதர்ஷ்!” என்று ஆதர்ஷும் ஜியாவும் சின்னதாகப் புன்னகைத்தனர்.
ஜியா நர்ஸிடம், “பேஷண்ட் ஹெல்த் எப்படி இருக்கு?” என்று கேட்க,
ஆஷிக் சத்தமாக ஜியாவிற்குக் கேட்கும்படி ஆதர்ஷிடம், “இவ்ளோ நேரம் நல்லாதான் இருந்துச்சு, அதான் மேடம் வந்துட்டாங்கல்ல இனிமே…” என்று ஓரக்கண்ணால் ஜியாவைப் பார்க்க
அவள் தன்னைப் பார்த்து முறைப்பதை அறிந்து, “அட இனிமே எல்லாம் சரியாகிரும்னு சொன்னேன்டா ஆதர்ஷ்.” என்று கூற, அவனைப் பார்த்து முறைத்த ஜியா, ரிபோர்ட்ஸை பார்த்த வண்ணம் நர்ஸிடம், “டெம்ப்ரேச்சர் எப்படி இருக்கு?”
“லாஸ்ட் டைம் பண்ணும் போது நார்மலாதான் இருந்துச்சு.”
“சரி இப்போ செக் பண்ணுங்க.”
“ஓகே மேடம்” என்றவள் ஆஷிக்கிற்கு டெம்ப்ரேச்சர் பார்த்துவிட்டு, “மேடம் 102 இருக்கு.”
“வாட்! பட் அவ்ளோ டெம்ப்ரேச்சர் இருக்கக் கூடாது.” என்றவள் மேலும் தொடர்வதற்குள் குறுக்கிட்ட ஆஷிக் அந்த நர்ஸை பார்த்து,
“நான் என்ன பண்ணுவேன், என்னோட இந்த நிலைமைக்கு நீங்கதான் காரணம். இவ்ளோ ஹாட்டான ஒரு பொண்ணு அதுவும் இவ்ளோ பக்கத்துல வந்து நின்னா என் டெம்ப்ரேச்சர் ஆட்டோமெட்டிக்கா ஹாட் ஆகுது. ஐ மீன் ரைஸ் ஆகுது.” என்று கூறி கண்சிமிட்டியவன் ஜியாவைப் பார்க்க, கோபத்தில் அவள் பல்லைக்கடித்துக் கொண்டிருந்தாள். அந்த நர்ஸ் அவன் கூறியதிற்கு வெட்கப்பட, அதைக் கண்ட ஜியா மேலும் எரிச்சல் அடைந்தவளாய்,
“அச்சச்சோ சாரி ஆஷிக், எங்களோட ஸ்டாப் பண்ணின தப்புக்கு நான் மன்னிப்புக் கேட்டுக்கிறேன். மன்னிப்பு கேட்டா போதுமா என்ன? ப்ராய்சித்தமும் பண்ணணும்ல?”
“ம்ம் அதெல்லாம் ஒன்னும் வேணாம், சீக்கிரமா இங்க இருந்து விடுதலை பண்ணினா அதுவே போதும்.” என்று முணுமுணுத்தவனைப் பார்த்து லேசாகச் சிரித்தவள்,
“அது எப்படி சார் அப்படியே விட முடியும்? ட்ரீட்மெண்ட் பண்ணிதான் ஆகணும்.” என்றவள்,
நர்ஸிடம், “பேஷண்டுக்கு இந்த இன்ஜெக்ஸன் போட்ருங்க.”
“எஸ் மேடம்” என்று அவள் முடிப்பதற்குள் வெகுண்டெழுந்த ஆஷிக்,
“என்ன இன்ஜெக்ஸனா? ஏன், எதுக்கு? யாருக்கு? எனக்கு வேண்டாம். காய்ச்சல் எல்லாம் அப்படியே சரியா போயிரும்.” என்று மூச்சு விடாமல் கேள்வியும் கேட்டு பதிலும் கூறி முடிக்க, தன் சிரிப்பை அடக்கிக்கொண்ட ஜியா,
“இல்லை இல்லை, கண்டிப்பா போட்டுதான் ஆகணும்.”
“டேய் ஆதர்ஷ் இங்க என்ன டுவெண்ட்டி டுவெண்ட்டி மேட்சா நடக்குது? ரசிச்சுட்டு இருக்க வேண்டாம்னு சொல்லுடா.”
“ஜியா, ஆஷிக் என்னோட உயிரு… என்ன வேணும்னாலும் பண்ணுங்க, ஆனா வலிக்காம பண்ணுங்க. அவன் அழுறத என்னால தாங்கிக்க முடியாது. நான் வெளியில போயிட்டு வரேன். வரேன்டா…” என்றவன், ஜியாவைப் பார்த்து சிரித்தவாறு அங்கிருந்து கிளம்ப,
“டேய் துரோகி நில்லுடா.” என்று ஆஷிக், ஆதர்ஷை திட்ட,
“என்ன பார்த்துட்டு இருக்கீங்க? இன்ஜெக்ஸன் போடுங்க.” என்று ஜியா கூறியதும் நர்ஸ், “எஸ் மேடம்” என்றவாறு தன் கையில் இன்ஜெக்ஸனை ஏந்தி அவனது அருகில் வர, நர்ஸின் கையில் உள்ள ஊசி அவனது கண்ணுக்கு போர் வாள் போலத் தெரிய, பெட்டில் இருந்து எழும்பியவன், “ஜஸ்ட் கெட் அவுட்! ஜியா ப்ளீஸ், ஆஸ்க் ஹெர் டு கெட் அவுட்.” என்று கூற,
ஜியா, “நீங்க போங்க, நான் பார்த்துக்கிறேன்.” என்று நர்ஸை வெளியே போகச் சொல்ல, ஜியாவின் அருகில் வந்த ஆஷிக்,
“தாங்க் காட்! நல்ல வேளை போய்ட்டா.” என்று தன்னை ஆசுவாசப்படுத்த,
“ஒழுங்கா வாய மூடிட்டு உக்காரு, இன்ஜெக்ஸன் போடலைனா பீவர் ஜாஸ்தியா ஆகிரும் சரியா?”
“ஜியா ப்ளீஸ், உனக்குத்தான் தெரியுமே எனக்கு ஊசினா பயம்னு. ப்ளீஸ் இதெல்லாம் வேண்டாம்.”
“வேண்டாம்னா காய்ச்சல் சரியாக வேண்டாமா?”
“ஆகணும், ஆனா ஊசி வேண்டாம்.”
“அப்போ என்ன பண்ண? நான் வேணும்னா உன்னைக் கட்டி பிடிச்சுக்கவா?” என்று எதேர்ச்சையாக கேட்டவள் பிறகு தான் கேட்ட கேள்வியின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டு செய்வதறியாது திகைக்க, அவள் கேட்ட மறுநொடி,
“ஆமா என்னை அப்படியே கட்டி பிடிச்சுக்கோ, என் காய்ச்சல் எல்லாம் பறந்து போகும்.” என்று புன்னகைத்தவாறு அவளது கையைப் பிடிக்க, இருவரும் பழைய நினைவுக்குள் தங்களைப் புகுத்திக் கொண்டனர்.
***
அது பசுமையான காலம் அவர்கள் இருவரும் காதலில் மூழ்கியிருந்த நேரம்,
அன்றொருநாள் ஆஷிக், ஜியாவின் மடியில் படுத்துக்கொள்ள, ஜியா அவனது தலையைக் கோதிவிட்டவாறு, “ஆஷிக் உடம்பெல்லாம் கொதிக்குது, என்னாச்சு? இப்போதான் பார்க்குறேன்.”
“ஆமா ஜியா பீவர், நேத்து மலையில மேட்ச் விளையாடுனேன்ல அதான்மா.”
“அப்போ ஏன் என்னைப் பார்க்க வந்த? வீட்ல ரெஸ்ட் எடுக்கலாம்ல?”
“நீயும் நானும் மீட் பண்றதே அவ்ளோ கஷ்டமா இருக்கு, அதான்டா.”
“ஹாஸ்பிடல் போனியா?”
“என் செல்லமே… போனேன், மருந்து தந்திருக்காரு.”
“எப்போ போன?”
“காலையில.”
“அப்போ காய்ச்சல் குறைஞ்சிருக்கணுமே, ஊசி போட்டியா, இல்லையா?”
“இந்த உலகத்துலயே ஆஷிக் பயப்படுற ஒரே விஷயம் இந்த ஊசிதான், உனக்குத்தான் தெரியுமே?”
“நீ என்ன குழந்தையா?”
“ஆமா…” என்றவன் நிமிந்து அவளது முகத்தைப் பார்க்க,
“எல்லாம் விளையாட்டுதான்… ஊசி போட்ருந்தா இப்போ பீவர் போயிருக்கும்ல?” என்று அவள் கூற எழுந்து நின்றவன்,
“அட என்ன நீ? இதை விடமாட்டியா? உன்னைப் பார்க்க ஆசையா வந்தா… ஜியா விடுமா, பீவர்தான சரியாகிரும்.”
“மருந்து சாப்பிடாம எப்படிச் சரியாகும்?”
“ஆகும், மருந்து வேண்டாம்.”
“என்ன வேண்டாம், காய்ச்சல் சரியாக வேண்டாமா?”
“ஆகணும், ஆனா ஊசி வேண்டாம்.”
“அப்போ என்ன பண்ண? நான் வேணும்னா உன்னை கட்டி பிடிச்சுக்கவா?”
“அட நல்லா ஐடியாவா இருக்கே?” என்று அவளது அருகில் வந்து அவளை அணைத்துக் கொண்டவனை விலக்க முயன்றவள்,
“ஆஷிக் விடு.”
“இங்க பாரு, நீ மட்டும் என்னை இப்படியே கட்டி பிடிச்சுக்கிட்டே இருந்த, காய்ச்சல் எல்லாம் படிபடியா குறைஞ்சிரும்.”
“அப்படியா? அப்போ காய்ச்சல் ஒரேடியா குறைய என்கிட்ட நல்லதா ஒரு மருந்து இருக்கு.”
“அது என்னது?”
“ஆனா அதுவேணாம்.”
“ஏன்?”
“அது வேணும்னா நீ ஒன்னு பண்ணணும்.”
“என்னது?”
“நீ பண்ணமாட்ட.”
“ஏய் என்னனு சொல்லு, கண்மூடி திறக்குறதுக்குள்ள பண்ணி காட்றேன்.”
“ம்ம்…” என்றவள் மெல்ல அவனது காதுக்குள், “ஹண்ட்ரட் கிஸ்ஸஸ்…”
“வாட்! தென் ஐயம் ரெடி!”
“ம்ம் அதுக்கு முன்னாடி நீ ஊசி போட்டுக்கணும்.”
“என்ன?”
“நான்தான் சொன்னேன்ல, உன்னால முடியாதுனு… யோசிச்சுக்கோ, நாளைக்கு ட்ரெயினிங் போயிருவ ஹண்ட்ரட் டேஸ் கழிச்சுதான் மீட் பண்ணுவோம். அதுவரை என்னோட ஞாபகர்த்தமா குடுக்கலாம்னு நினைச்சேன். சரி வேண்டாம், இப்போ என் கூட ஹாஸ்பிடல் வந்து ஊசி போட்டா நான் சொன்னது கிடைக்கும் இல்லனா, பாய்.”
“ஏய் போகாத ப்ளீஸ்…”
“என்ன?”
“ஃபைன்! நான் ஊசி போட்டுகிறேன், பட் நீ என்னை ஏமாத்த கூடாது.”
“ஓகே” என்றவர்கள், ட்ரீட்மெண்ட் முடிந்து ஹாஸ்பிடலில் இருந்து வெளியே வரும் பொழுது ஆஷிக், “ச்ச… நல்லா வலிக்கிற மாதிரி குத்திட்டான் அந்த டாக்டர்.”
“ஆஷிக் உன்னோட ஒரே சிரிப்புதான்.”
“அதெல்லாம் இருக்கட்டும், ம்ம்… சீக்கரம் ஸ்டார்ட் பண்ணு, டைம் இல்லை.”
“ஓகே” என்றவள் அவனைக் கண் மூட சொல்லிவிட்டு, அவனது பைக்கின் சாவியையும் எடுத்துவிட்டு மெல்ல அருகில் இருந்த ஆட்டோவில் ஏறி, “ஆஷிக் பாய்!” என்று கூற அவள் தன்னை ஏமாற்றியதை அறிந்து,
ஆட்டோவை ஃபாலோ செய்ய பைக்கை பார்க்க, அப்பொழுதுதான் சாவியை அவள் எடுத்ததைப் பார்த்தவன்,
“இது சரியில்லை ஜியா.”
“எனக்கும் தெரியும் ஆஷிக், டேக் இட்.” என்றவள் சாவியைத் தூக்கி போட்டவாறு, “டேக் கேர், பாய்!” என்று அவனுக்குப் போக்கு காட்டிவிட்டு சென்றாள்.
***
இருவரது புன்னகையில் அவர்களது அமைதி கலைய ஆஷிக், ஜியாவைப் பார்த்து, “ஸோ…”
“ஸோ…”
“ஆர் யு ரெடி?” என்றவன் அவளது அருகில் வர,
“ஆஷிக்!”
“வாட்?” என்றவன் அவளை இன்னும் நெருங்கி சுவற்றோடு சாய்த்து, தன் இருக்கரங்களுக்குள் கைது செய்ய,
“ஆஷிக்!”
“ஆர் யு ரெடி?”
“இங்கேயா?”
“ஆமா.”
“பட் யாராவது பார்த்தா?”
“பார்த்தா என்ன?” என்று அவளது கன்னத்தோடு மெல்ல உரசியவன் அவளது காதில், “ஸ்டார்ட் வீ டோன்’ட் ஹாவ் மச் டைம்.” என்று கூற திகைத்து போய் நின்றவளைப் பார்த்து ரசித்தவன், “ப்ளீஸ்பா, நான் உன்னை இன்ஜெக்ஸன்தான போட சொன்னேன்.” என்று விஷமமாய் சிரிக்க, நிம்மதி பெருமூச்சு விட்டவள் அவனைப் பார்க்க ஆஷிக் விஷமத்தோடு,
“ஏய், நீ என்ன நினைச்ச?”
“அதெல்லாம் ஒன்னும் இல்லை.”
“யு… சீரியஸ்லி நீ அதை நினைச்சியா? யு நாட்டி! இஃப் யு ரியலி டெஸ்ப்பரேட் அபௌட் ஹண்ட்ரட் கிஸ்ஸஸ் தென் ஐ டோன்’ட் ஹாவ் எனி ப்ராப்ளம்.” என்றவன் அவளை நெருங்கியவாறு புன்னகைக்க,
“ஆஷிக் ப்ளீஸ்…”
“ஓகே”
“யு ஆர் கிரேசி!”
“ஆமா”
“சரி டைம் ஆகிடுச்சு, ஊசி போட்டுக்கோ.”
“ஏய் என்ன பண்ற?”
“இப்போதான நீ சொன்ன?”
“அது உன்னை நக்கல் பண்ண சொன்னேன், ஊசிலாம் வேண்டாம். முதல்ல அதைத் தள்ளி வை, ரொம்ப ஷார்ப்பா இருக்கு.”
“ஆஷிக் ப்ளீஸ்…”
“ஜியா ப்ளீஸ் நோ வே…”
“ஆஷிக் லுக் அட் மீ.”
“என்ன?”
“அன்னைக்குத் தரேன்னு சொன்னதை இப்போ நான் தந்தா வேண்டாம்னு சொல்லுவியா?” என்று கூறியதில் உருகி போனவன் அவளையேப் பார்க்க, அவன் அசந்த நேரம் அவனது கையில் மெதுவாக ஊசி போட்டவள், “ம்ம் முடிஞ்சிருச்சு.”
“எங்க நீ சொன்னது?”
“ம்ம் கனவுல…” என்று அங்கிருந்து அவள் செல்ல போக,
“மறுபடியும் நீ என்னை ஏமாத்திட்ட?”
“இல்லை, நீங்க ஏமாந்துட்டீங்க.”
“எஸ் பழகிடுச்சு.” என்ற அவனது கூற்றில் சிறு காயம் தெரிய, அதற்குப் பதிலளிக்க மறுத்தவள்,
“ஆஷிக், பட் என்னால நம்பவே முடியலை. நீ இன்னும் ஊசினா பயப்படுறதை. சத்தியமா சொல்றேன், என்னால சிரிப்பை அடக்கவே முடியல.” என்று சிரித்தவளைப் பார்த்து புன்னகைத்தவன்,
“ஜியா நாம மறுபடியும் சந்திச்சதுக்கு அப்புறம் நீ இன்னைக்குத்தான் சிரிச்சுருக்க, அழகா இருக்க.”
“ம்ம்…” என்றவள் மீண்டும், “நீ இன்னும் மாறாம இருக்கிறது ஆச்சரியமா இருக்கு, குழந்தை மாதிரி ஊசிக்கு பயப்படுற.” என்றவள் மீண்டும் சிரிக்க,
“மே பீ நீ சிரிக்கணும்ங்கிறதுக்காக கூட நான் இன்னும் மாறாம இருக்கலாம்.” என்று அவன் கூறியதில் உள்ள ஆழத்தை உணர்ந்தவள்,
“ஆஷிக் ஐ ரியலி…” என்று தன் மனதில் உள்ளதை கூற வாய் எடுத்தவள் ஆதர்ஷின் வருகையால் மௌனமானாள்.
“என்ன ஜியா, வேலை எல்லாம் முடிஞ்சிருச்சா?”
“ம்ம் ஆமா.”
“உன்னைப் படுத்தி எடுத்திருப்பானே?”
“இல்லை, சரி பார்த்துக்கோ வரேன்.” என்று அங்கிருந்து சென்றவள்,
கண்ணாடி வழியாக ஆஷிக், ஆதர்ஷுடன் சிரித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து, ‘ஆஷிக் ஐ ரியலி மிஸ்ட் யு!’ என்று தன் மனதிற்குள் கூறினாள் தன் கண்கள் ஈரமாக.
***
