காதல்- 21

காதல் -21 
 

 

அந்த கும்மிறட்டில், நேரம் பனிரென்டை நெருங்கும் வேளையில் கீதாவின் அறைக்குள் யாருக்கும் தெரியாமல் நுழைந்து இருந்தான் இன்பராஜா.

‘ எவ்வளவு கஷ்டப்பட்டு நம்ம கரண்ட் கம்பத்தை பிடிச்சி மேலே ஏறி வந்து, இவளுக்காக இந்த ஊஞ்சலை இங்க சத்தமே போடாமல் மாட்டிவிட்டு, இவளை பார்த்து முதல் வாழ்த்து நம்ம தான் சொல்லனும் ஆசையா வந்தா! இவ என்னடானா தூங்கிட்டு இருக்கா? அட்லீஸ்ட் எனக்கு விஷ் பண்றதுக்குவாது தூங்காமல் இருந்து இருக்கலாம்.”என்று சற்று ஏமாற்றாம் அடைந்தவன் கைக்கடிகாரத்தை பார்த்தான்.

” 12 மணி ஆக இன்னும் சில நிமிடம் தான் இருக்கு. ரூம் வேற கொஞ்சம் இருட்டா இருக்கு. எந்த பொருள் எங்க இருக்குது கூட தெரியல, ஆனா இவ முகம் மட்டும் எப்படி இந்த அளவுக்கு பிரகாசமா இருக்கு” என தனக்கு தானே புலம்பிக்கொண்டு தன்னவளின் அருகில் ஒரு அடி எடுத்து வைக்க, யாரோ கதவை திறக்கும் சத்தம் கேட்டு பால்கனியில் ஒளிந்துக்கொண்டான் இன்பா.

‘ இருட்டில் நிழலாக இரு உருவம் வருதே? கையில வேற எதையோ கொண்டு வருது, ஒரு வேளை பேயா இருக்குமோ?
இவ வேற நல்ல தூக்கத்துல இருக்காளே, எப்படி இவள எழுப்புறது.’ என்று இருளில் தெரிந்த நிழலை பார்த்து சற்று பயந்தவன்,

” உஸ்…உஸ்…” என்று உறங்கிக் கொண்டு இருந்தவளை எழுப்ப சைகை செத்தான்,

அதற்குள் அந்த இரு உருவமும் கீதாவின் அருகில் வர இவனுக்கு உடல் மொத்தமும் வேர்த்துக் கொட்டி வெடவெளத்து போனது.

கைகளால் முகத்தை மூடி மூடி திறந்து பார்த்து என்ன செய்வது என்றே தெரியாமல் தன்னவளை காப்பாற்றுவதாக எண்ணி மெதுவாக அவன் மறைந்து இருந்த இடத்திலிருந்து எழுந்திருக்க, அப்போது பார்த்து ஒரு கரப்பான்பூச்சி ஒன்று இன்பாவின் அருகில் வர, அவ்வளவு தான் அவனிடமிருந்த இருந்த கொஞ்சம் நஞ்சம் தைரியமும் காற்றில் பறந்த கதையாய் ஆனது….

அங்கே இருட்டில் வந்தது வேற யாரும் இல்லை, நம்ம கீதாவின் பெற்றோர்கள் தான். தன் மகளுக்கு வழக்கம் போல் பிறந்த நாள் வாழ்த்து சொல்லி, கேக் கட் செய்ய தான் சத்தம் எழுப்பாமல் மெல்ல வந்தார்கள். அப்படி வந்த இவர்களை பார்த்து தான் நம்ம ஹீரோ சார் இப்படி நடுங்கிக்கொண்டு இருக்கிறான்.

ஆக்சுவலா நம்ம நாயகனுக்கு சின்ன வயசுல இருந்து பேய், கரப்பான்பூச்சி இந்த இரண்டுக்கும் மட்டும் பயப்புடற சுபாவம் இருக்கு. அதான் இப்படி பயப்புடுறான். அதனால நம்ம இன்பா தைரியசாலி இல்லையின்னு நினைச்சிடாதீங்க…இவனை மாதிரி ஒரு தைரியசாலிய பார்க்க முடியாது. பட் பேய், கரப்பான்பூச்சினா மட்டும்..நான் சொல்ல வேண்டியது இல்லை உங்களுக்கே தெரியும்.😉

கரப்பான்பூச்சியை பார்த்த அடுத்த நொடி கீதாவின் தந்தை அன்பரசன் பின்னால் சென்று அவரின் சர்ட்டை பிடித்துக் கொண்டு கண்களை மூடி

“என்னை எப்படியாவது காப்பாத்துங்க. பிளீஸ் அந்த கரப்பான்பூச்சிக்கிட்ட இருந்தும்,அந்த இரண்டு கொடூரமான பேய்க்கிட்ட இருந்தும் என்னை காப்பாத்துங்க.” என்று சத்தம் போட்டு கத்தியதில் திடுக்கிட்டு கண்விழித்து தன்னவனின் குரலை கேட்டு “என்னாச்சி இன்பா” என்று கேட்டாள் கீதா.

கீதாவின் குரலை கேட்டவன் “அப்ப நம்ம இவ்வளவு நேரம் யாரு பின்னாடி ஒளிஞ்சிட்டு இருக்கோம்” என எட்டி முன் பக்கம் பார்க்க, திரும்பவும் சத்தம் போட்டுக் கொண்டே கீதாவின் முதுகு பின்னால் ஒளிந்து கொண்டான்.

அதுவரை அமைதியாக இருந்த அன்பரசன் இன்பா தன்னை விட்டதும் மின்விளக்கை ஒளிர செய்தார். பெற்றோர் இருவரும் இன்பாவை கோபமாக பார்த்தனர்.

அவனோ அப்போது தான் நிம்மதி அடைந்து ” இவங்களா? அப்போ பேய் இல்லையா?, நம்ம தான் தப்பா நினைச்சிட்டனா” என்று மைண்ட் வாயிஸ்னு என்று நினைத்து சத்தமாக முணுமுணுத்தான்.

மூவரும் ஒன்றாக அவனை பார்த்து முறைக்க. ‘ இவங்க எதுக்கு இப்ப நம்மளை இந்த அளவுக்கு முறைச்சி பார்க்குறாங்க ‘ என்று கீதாவை பார்த்தான்.

அப்பொழுது தான், தான் எங்க இருக்கிறோம்! என்ன செய்தோம் என்று தோன்ற, ” ஈஈ” என்று இளித்துக்கொண்டு அவர்களின் காலில் பட்டென்று விழுந்து விட்டான்.

” என்னை மன்னிச்சிடுங்க மாமா, நான் தான் கீதாவுக்கு 1St விஷ் பண்ணனும் வந்தேன்” என்று ஆரம்பித்து நடந்ததை சொல்ல.

அப்போதும் மூவரின் ரியாக்சனும் மாறமல் இருக்க அதை பார்த்தவன்,

” அத்தை நீங்களாவது சொல்லுங்க பிளீஸ். நான் உங்க வீட்டுக்கு வர போற மருமகன் தானா?” என்று அவன் அவர்களை சமாதானம் செய்கிறேன் என்ற பெயரில் ஏதேதோ உளற, அதற்கு மேல் தாக்கு பிடிக்க முடியாமல் மூவரும் சிரித்து விட்டனர்.

‘ அப்பாடா ஒரு வழியா சிரிச்சிட்டிங்க’ என்று பெருமூச்சு விட்டப்படி எழுந்து மணியை பார்க்க அது 12:35 என காட்டியது.

” ஆமா எங்களை பார்த்தா, என்னை கொடூரமான பேய் மாதிரியா இருக்கு?” என அன்பரசன் கேட்டார்.

இன்பாவோ “அது….வ…ந்…து நான்..உங்களை…நீங்க…” என்று வாய்க்குள் இருந்து வார்த்தை வெளியேறாமல் சிக்கிக் கொண்டது அவனுக்கு.

” என்னப்பா உளற, சரி விடு, விடு கரப்பான்பூச்சிக்கே பயப்புற. நீ பேயிக்கு பயப்புட மாட்டியா?” என அவனை கிண்டல் செய்ய,

கீதாவோ “என்னது கரப்பான்பூச்சிக்கு எல்லாம் பயப்புடுவியா” என்று தன்னவனை பார்த்தாள்.

அவனோ தலையை சொரிந்துக் கொண்டு ” அது இல்ல கீத்து. அதை பார்த்தவே பயம் வந்துடுது. அதான்” என்று மழுப்பினான்.

அவளோ தலையில் அடித்துக்கொண்டு ” சரியாப் போச்சிடா” என்றாள்.

பார்வதியோ ” ஆமா நீ..” என ஆரம்பித்தவர் ” சாரி நீங்க எப்படி வீட்டுக்குள்ள அதுவும் என் பொண்ணு ரூமுக்குள்ள வந்திங்க?” என்று பார்வதி கேட்க, அன்பரசனும் அதையே கேட்டார்.

‘ இப்பொழுது என்ன சொல்வது’ என்று திருதிருவென முழித்தவன் “
நீங்க என்னை வா போ என்றே சொல்லாம் அத்தை.” என்றான்.

அதை பார்த்த கீதாவோ ‘ இதுக்கு மேல் விட்டா, சொதப்பிடுவான் ‘ என்று ராஜாவுக்காக சாப்போர்ட் செய்ய வந்தாள்.

“அப்பா, பிளீஸ் விடுங்க அவன் ஏதோ தெரியாமல் மறுபடியும் என்னை பார்க்க ஆவலுடன், பால்கனி வழியா வந்து இருக்கான். இதுல வேற உங்களை பார்த்து பேயினு நினைச்சி” என இன்பவை பார்த்து வாயைப் பொற்றிக்கொண்டு சிரித்தாள்.

கீதாவின் பெற்றோரும் சிரிக்க பாவம் ராஜாவிற்கு தான் வெட்கம் வந்து ஒட்டிக் கொண்டு அசடு வழிந்து கொண்டு நின்றான்.

” இது முதல் தடவை என்றால் தெரியாமல் பண்ணி இருக்காரு சொல்லாம். ஆனால்…”என்று அன்பரசன் இன்பாவை கிண்டல் செய்தார்.

ராஜாவோ இவர்களின் கேலியில் இருந்து தப்பிக்க ” மாமா டைம் இப்பவே 12.35 உங்க கையில கேக் தானே இருக்கு வாங்க வெட்டிடலாம். ” என்று பேச்சை மாற்றினான்.

அவருக்கும் தன் மகளின் பிறந்த நாள் ஞாபகம் வர மற்ற விஷயத்தை பிறகுப் பார்த்துக் கொள்ளலாம் என்று கீதாவின் பிறந்த நாள் கேக்கை வெட்டிக் கொண்டாடினர்.

இவர்களின் மகிழ்ச்சியான இந்த தருணத்தை தன் மொபைல் போனில் படம் பிடித்துக்கொண்டு இருந்தான் இன்பா.

பிறகு தன் தந்தை கொடுத்த கிப்ட்டை வாங்கிக் கொண்டு மகிழ்ச்சியோடு “அப்பா செம்மயா இருக்கு. வாவ் நியூ மொபைல் தாங்க்யூபா” என்று அவரை கட்டிக்கொண்டு முத்தம் கொடுத்தாள்.

பின் தன் தாய் கொடுத்த தங்க செயின் கிப்ட்டையும் பார்த்து பரவசமாக அவரையும் கட்டிக்கொண்டு முத்தம் தர,

இப்போது இன்பா ஒரு பார்சலை தன்னவளிடம் நீட்டி, “பிறந்த நாள் வாழ்த்துகள் கீத்துமா” என்றான்.

புன்னகையோடு “தாங்க்யூ இன்பா” என்று சொல்லி அதை பிரித்து பார்க்க. அதில் அழகான வேலைபாடுகளுடன் செய்த ஊதா கலரில் ஒரு புடவை இருந்தது.

அதை பார்த்தவுடன் மிகவும் சந்தோஷமாக அவன் அருகில் சென்று தன்னவனின் கையை மட்டும் பிடித்துக்கொண்டு “தாங்க்யூ இன்பா, தாங்க்யூ சோ மச். எனக்கு பிடிச்ச கலர் ஸாரி அதுவும் இவ்வளவு வேலைப்பாடுடன் நிறைந்த ஸாரி செம்ம” என்று தன் தாயிடமும் தன் தந்தையிடம் கண்பிக்க இன்பாவுக்கோ ஏமாற்றமாக போனது.

தனக்கும் முத்தம் கொடுப்பாள் என்று எதிர் பார்த்தான். அவனின் மனசாட்சியோ ‘ அட லூசு பயலே அவ அப்பா அம்மா முன்னாடி எப்படி டா.” என்று ஒரு குரல் மனதினுள் கேட்டாது அவனுக்கு.

அப்பொழுது தான் ஞாபகம் வந்தவனாய் கீதாவின் அருகில் சென்று கண்களை முடி ரோஜா செடி நடுவில் அவன் கட்டிய ஊஞ்சலில் அமர வைத்து ” ஹேப்பி வேலன்டைன்ஸ் டே கீத்து” என்றான்.

விழிகள் விரித்து அதை பார்த்தவள் ஆச்சிரியத்துடன்  இன்னும் மகிழ்ச்சி பொங்க அவன் அருகில் செல்ல நினைக்கும் போது தான். தன் பெற்றோர்கள் ஞாபகம் வர அமைதியாக நின்று விட்டாள்.

பிறகு தான் கிளம்புவதாக கூறிவிட்டு வந்த வழியே போக இன்பாவை தடுத்து வாசல் வழியாக போக சொல்லி அவனை வழி அனுப்பிவிட்டு வருமாறு கூறிவிட்டு பெற்றவர்கள் சென்று விட்டனர்.

வாசல் வரை வந்து அவளிடம் கிளம்புவதாக சொல்ல அவளோ அவனின் கரங்களை கெட்டியாக பிடித்துக்கொண்டு தன்னவனின் நெஞ்சில் சாய்ந்தாள்.

இன்பாவும் இந்த ஒரு அணைப்பிற்காக தானே காத்துக்கொண்டு இருந்தான்.

அவளை தன் நெஞ்சோடு அணைத்து நெற்றியில் முத்தம் பதித்து “உங்க அப்பா அம்மா ரொம்ப நல்லவங்களா இருக்காங்கடி. உன்னையும் சரி என்னையும், சரி ஒரு துளி கூட சந்தேகமான பார்வை பார்க்கவே இல்லை. அதை நினைச்சா எனக்கு உன்னை பார்க்கும் போது பொறாமையா இருக்கு. எனக்கு இப்படி ஒரு  பேரன்ட்ஸ் கிடைக்கலையோ என்று.  ” என சொன்னவனின் குரலில் அப்படி ஒரு வலி.

கீதாவோ ” இவங்களுக்கு நான் பொண்ணா, பிறக்க ரொம்ப கொடுத்து வச்சி இருக்கனும் இன்பா. இவங்கள மாதிரி இந்த உலகத்தில் வேற யாராலையும் வாழ்ந்திட முடியாதுடா”  என்றாள் உணர்ச்சிகள் பொங்க பெருமையாக.

பின் ” ஓகேடா இன்பா கிளம்பு டைம் ஆகுது பாரு ” என அவனிடம் இருந்து விலகி நிற்க.

” ஏன்டி இது உனக்கு அநியாயமா இல்லையா. இன்னிக்கு எனக்கும் தான் பிறந்த நாள். ஒரு விஷ் பண்ணியா. ஏன் உங்க அப்பா அம்மா கூட சொல்லலடி. அவ்வளவு ஏன் காதலர்தினவாழ்த்துக் கூட சொல்லல நீ “என்று ராஜா சொன்னவுடன் தான் அவளுக்கு ஞாபகமே வந்தது இன்று அவளின் மனம்கவர்ந்தவனின் பிறந்த நாளும் என்று.

மிகவும் சங்கடமாக உணர்ந்தவள் கவலையுடன் ” அய்யோ சாரிடா.. சாரிடா.. ப்ளீஸ். நான் ஏதோ ஒரு நினைப்புல மறந்துட்டேன்டா, இன்னிக்கு என் அப்பா அம்மா கூட உன்னையும் சேர்ந்து பார்த்ததுல எல்லாமே மறந்துடுச்சிடா. ஒரு நிமிஷம் இரு” என்று தன் அறைக்கு ஓடியவள் கையில் ஒரு பார்சலுடன் வந்து தன்னவனிடம் கொடுத்து ” பிறந்த நாள் வாழ்த்துகள்”  என சொல்லியவள்,

“இதை நீ வீட்டுக்கு போனதும் பிரிச்சி பாரு” என்று சொல்லிவிட்டு ” ஹாப்பி வேலண்டைன்ஸ்டே இன்பா” என்று அவனின் நெற்றியில் இதழ் பதித்து அனுப்பி வைத்து விட்டு தன் பெற்றோரிடம் வந்து இன்பாவுக்கும் இன்று தான் பிறந்த நாள் தான் அதை மறந்ததையும் சொல்லி வருத்தப்பட்டாள் கீதா.

வெகு நேரம் கழித்து  வீட்டுக்குள் நுழைந்த ராஜாவை வழி மறித்து “எங்கேடா போய்ட்டு வர” என்று கோபமாக சுந்தர் சத்தம் போட.

“என்னங்க விடுங்க. இன்னிக்கு அவன் பிறந்தநாள் அதுவுமா திட்டாதீங்க.” என்று கணவரை சமாதானம் பண்ணிணார் வசந்தா.

“நீ செய்யுறது எதுவும் சரி இல்லடா பார்த்து நடந்துக்கோ.” என சொல்லிவிட்டு சென்றவரை பின் தொடர்ந்து சென்றாள் வசந்தா..

“ஆமா புள்ளை பிறந்த நாளுக்கு ஒரு வாழ்த்துக்கூட சொல்லல இவரு பேச வந்துட்டாரு.” என்று முணுமுணுத்துக் கொண்டே 
அவனது அறைக்கு வந்தவன்…கீதா கொடுத்த பார்சலை பிரித்து பார்த்தவன் இதழ் ஓரம் சிறு புன்னகை வந்தது ஒட்டிக் கொண்டது. .

அதிகாலை ஐந்து மணிக்கு எல்லாம் எழுந்து குளித்து முடித்து இன்பா கொடுத்த புடவை கட்டிக்கொண்டு, தன் தாய் கொடுத்த நகையை அணிந்துக்கொண்டு படியில் இறங்கி வந்த  மகளை பார்த்த பெற்றோர் உள்ளம் மகிழ்ந்து போனது.

பிறகு, கோவிலுக்கு சென்றவர் வீட்டிற்கு வர காலை எட்டு மணியானது.

“இன்னிக்கு தரிசனம் ரொம்ப நல்லா இருந்ததுலங்க”என்று பார்வதி கூறியதை கேட்ட அன்பரசன்,

“ம் சரி சரி போய் சமையல் வேலையை கவனி. பிள்ளைங்களாம் வந்துடப் போறாங்க” என மனைவியை அனுப்பி வைத்த நேரம் ரம்யா வந்து சேர்ந்தாள்.

புன்னகையோடு “பிறந்தநாள் வாழ்த்துகள்டி கீதா” என்று ஒரு கிப்ட்டை கொடுத்து தோழியின் கண்ணத்தில் முத்தம் ஒன்றை வைத்தாள் ரம்யா..

அவள் கொடுத்த கிப்ட்டை பார்த்து “ஏன்டி இப்போ எதுக்கு இவ்வளவு செலவு. நீ வந்தா போதாத?”
என முறைப்புடன் கீதா கேட்க.

ரம்யாவோ “கொலுசு பிடிக்கலையா.” என்று முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு கேட்டாள்.

“ஏய் அதெல்லாம் இல்லைடி. ரொம்ப பிடிச்சி இருக்கு. ஆனா ஏன் இவ்வளவு செலவு ” என்று இழுத்த தோழியை முறைத்து பார்த்தாள் ரம்யா.

ரம்யாவின் முறைப்பை பபார்த்தவள் சமாளிக்கும் பொருட்டு “இப்ப என்ன, இத நான் போட்டுக்கனும். அவ்வளவு தானே?” என்று தன் காலில் கொலுசை அணிவித்து காட்டினாள்.

அன்பரசனும் மெல்லிய புன்னகையோடு “என்னமா ரம்யா இவ்வளவு காலையிலே வந்துட்ட.” என்று கேட்டார்.

“என்னபா உங்களுக்கு தெரியாதா? நான் எப்போவும் கீதா பிறந்த நாள் அன்னிக்கு அவ கூட தானே இருப்பேன்.”

“அது தெரியும்மா, ஆனா எப்போவும் பத்து மணிக்கு மேலே தானே வருவ? இன்னிக்கு என்ன எட்டுக்கு மணிண்கெல்லாம் வந்துட்ட” என்றார்.

கீதா, “அப்பா நான் தான் அவளை வீட்டை டெக்ரேஷன் பண்ண வர சொன்னேன்.” என்று கூறிவிட்டு வேலைகளை ஆரம்பித்தனர். 

வீடு முழுக்க பலூனால் டெக்ரேஷன் செய்து சிறு சிறு அலங்காரம் பண்ணி முடித்தனர். சமையல் வேலையையும் செய்து முடித்து பார்வதி வர மதியம்  ஆனாது.

“அப்பா நீங்களும் எங்களுக்கு ஹெல்ப் செய்யலனா! கண்டிப்பா நாங்க இரண்டு பேரும் இவ்வளவு சீக்கிரம் எல்லாம் ரெடி பண்ணி இருக்க முடியாது” என கீதா மகிழ்ச்சியோடு சொன்னாள்.

அன்பரசனோ “நான் என்னமா செஞ்சிட்டேன்? கடைக்கு போய் கேக் வாங்கிட்டு 
அப்புறம் கொஞ்சம் உங்க கூட சேர்ந்து வேலையை பார்த்தேன். இதெல்லாம் என் பொண்ணு சந்தோஷத்துக்காக அப்புறம் என் வருங்கால மருமகனுக்காகவும்” என சொல்லி முடிக்க இன்பராஜா தன் நண்பர்களுடன் அங்கு வந்து சேரவும் சரியாக இருந்தது.

அன்பரசன் சொன்னதைக் கேட்ட சந்தோஷத்தில் அவரை கட்டிக் கொண்டு “எங்க வீட்ல அவ்வளவு பணம் வசதி இருக்கு மாமா. ஆனா பாசம் மட்டும் இல்லை. ஆனால் இங்க முழுக்க முழுக்க பாசம் மட்டும் தான் நிறைந்து இருக்கு.” என்று நெகிழ்ந்து அவன் கூறிய வர்த்தையில் மனம் உருகி போனார்கள் அனைவரும்.

ரம்யாவை பார்த்துக் கொண்டு இருந்த சூரியா கீதாவிடம் திரும்பி வாழ்த்து சொல்லியவன், ஆச்சரியத்துடன் “அட என்னமா நீங்க இரண்டு பேரும் ஒரே ஊதா கலர் ட்ரெஸ். செம்ம போங்க.” என்று மகிழ்ந்தான்

“இது பிறந்த நாள் கிப்ட்டா இன்பா தான் கொடுத்தான் அண்ணா.” என்று  கீதா சொல்ல.

“இது கீத்து எனக்கு பிறந்த நாள் கிப்ட்டா கொடுத்தது.” என இன்பா சொல்ல பரத்தை தவிர அனைவரும் வாயை பிளந்தனர்.

“எப்படிடா ஒரே கலர்ல எடுத்தீங்க.  இராண்டு பேரும் சேர்ந்து போய் எடுத்தீங்களா.?” என்று சந்தேகத்துடன் கேட்டான் சூரியா.

“ஏன்டா, சூர்யா யாராவது கிப்ட் வாங்க, கிப்ட்டு கொடுக்குறவங்களை வாங்க கூப்பிட்டு போவாங்களா? அப்புறம் அந்த கிப்ட்டுக்கு என்ன அர்த்தம் இருக்கு. எங்க இரண்டு பேருக்கும் ஒரே கலர் பிடிக்கும்டா. அது மட்டுமா எங்க மனசும் ஒரே மாதிரி தான் யோசிக்கவும் செய்யும்டா “என்று ராஜா கீதாவை பார்த்து கொண்டே சூரியாவிடம் பேசினான்.

பிறகு இன்பாவிடம் மன்னிப்பு கேட்டனர் அன்பரசனும் பார்வதியும். “மன்னிச்சிடுப்பா நேத்து கீதா சொல்லி உனக்கும் பிறந்த நாள் தெரியும்.”

அவனோ பதறியபடி “அய்யோ மாமா என்ன இது! என் கிட்ட எல்லாம் மன்னிப்பு கேட்டுக்கிட்டு விடுங்க.” என்று கீதாவை முறைத்தான்.

அதன் பின் இன்பராஜாவும் கீதாவும் ஒன்றாக சேர்ந்து கேக்கை கட் செய்து அனைவருக்கும் ஊட்டி விட்டனர்.

அவர்கள் எடுத்து வந்த கிப்ட்டை கொடுத்துவிட்டு, அதன் பின் உணவை சாப்பிட்டு முடிக்க பெரியவர்கள் இருவரும் சிறிது நேரம் ஓய்வு எடுக்க போனார்கள்.

இவர்கள் ஐவரும் கீதாவின் அறைக்கு சென்று காலட்டா செய்து மகிழ்வுடன் இருந்தனர்.

ரம்யாவும் சூரியாவும் ஒருவரை ஒருவர் பார்வையால் அடிக்கடி பார்த்துக்கொண்டு காதலை பரிமாற கீதாவும் இன்பாவும் ஊஞ்சலில் அமர்ந்து தங்கள் காதலை தெரிவித்து மகிழ்ச்சியாக பேசிக்க்கொண்டு இருந்தனர்.

இவர்களை இப்படி ஒன்றாக பார்க்க பிடிக்காமல் அவர்களிடம் கூறிவிட்டு கிளம்பினான் பரத்.

பரத் போனதும் “சாரி கீத்து” என்றான் ராஜா.

குழப்பத்துடன் “எதுக்குடா”

“இல்ல பரத்தை பற்றி உன்னிடம் முன்பே சொல்லனும் நினைச்சேன். அவனுக்கு யாரும் இல்லையினு. ஆனா அன்னிக்கு பரத்தே சொல்ல வேண்டியதா ஆகிடிச்சி” என்று சங்கடத்துடன் அவன் கூற.

“ச்சா ச்சா அதுக்கு எதுக்குடா சாரி கேட்டுக்கிட்டு. அன்னிக்கு என் மேல தான் தப்பு. நான் தான் எதுவும் தெரியாமல் பேசிட்டேன். ” என்று வருத்ததுடன் கூறியவள்,

“உங்க மூன்னு பேரோட பிரண்ட்ஷிப்பும், எப்போவும் இதே மாதிரி இருக்கனும். அதுல வேற யாராலையும் பிரச்சனை வந்திட கூடாது.” என்று தன்னவனின் தோளில் சாய்ந்து கூறினாள் கீதா.

அன்றைய பொழுது மிகவும் சந்தோஷமாக சென்றது அவர்கள் அனைவருக்குமே.

ஆனால் தன்னால் தான் இவர்களின் மூன்று பேர் நட்பும் சுக்கு நூறாக உடைய போவதை அப்போது அறிந்து இருக்கவில்லை கீதா. 
 

இனி அடுத்த அத்தியாயத்தில் காணலாம். 
 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page