காதல்- 29

காதல் -29 
 

 

கிட்டதட்ட ஒரு மாதம் கடந்து இருந்தது. ரம்யா இவ்வுலகில் இல்லையென்றாலும் அவளை பற்றி நினைக்காத நாள் இல்லை அவர்கள்.

கீதாவோ அவளால் தான் ரம்யா இறந்து விட்டதாக நினைத்து நினைத்து தன்னை தானே வருத்திக்கொள்ள ஆரம்பித்தாள்.

கல்லூரிக்கு போகாமல் இன்பராஜாவிடமும் பேசாமல் தன் பெற்றோரிடமும் முகம் கொடுத்து பழகாமல் தன் அறைக்குள்ளே அடைந்து கிடந்தவளை எப்படி என்ன சொல்லி தேற்றுவது என்று புரியாமல் குழம்பி போனார்கள்
அன்பரசனும் பார்வதியும்.

சிறு வயதிலிருந்து இணைப்பிரியா தோழிகள் ஆயிற்றே அவர்கள் நட்புக்குள் வேற எவரையும் நுழைய அனுமதிக்காமல் இருவர் மட்டுமே உலகம் என்றும், அவர்கள் கல்யாணம் பண்ணினாலும் ஒரே வீட்டில் இருக்கும் சகோதர்களை தான் கல்யாணம் செய்ய வேண்டும் என்றும் சந்தோஷமாக வலம் வந்தவர்களின் வாழ்க்கையில் காதல் என்னும் பெயரில் இருவர் நுழைந்து அவர்களின் நட்பை மட்டும் இல்லாமல் இருவரில் ஒருவர் உயிரை அல்லவா எடுத்து விட்டது.

இன்பாவிற்க்கும் அதே நிலைமை தான். ராஜா அண்ணா அண்ணா.. என்று மனதில் எந்த கள்ளம் கபடம் இல்லாமல் சுற்றி வந்தவள் இப்போது அவள் இந்த உலகில் இல்லை என்றால், அவனாலும் தாங்கிக் முடியாமல் தவித்தான். ஆனால் எதார்த்தத்தை புரிந்துக்கொண்டு அதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வர ஆரம்பித்து இருந்தான்.

ரம்யாவின் இறுதி சடங்குகள் முடித்துவிட்டு பல நாட்களாக தன் நண்பனை காண செல்லும் போது எல்லாம் சூர்யா அவனை பார்க்க பிடிக்காமல் வாசலிலேயே நிற்க வைத்து அனுப்புமாறு தன் தாயிடம் சண்டை போடாத குறையாய் இன்பாவை தவிர்த்தான்..

சூர்யாவிற்க்கோ எங்கே இன்பாவை பார்த்தால் கீதாவையும் பார்க்க நேரும் என்றும், அவளை பார்த்தால் அவனால்  கோபத்தை கட்டுபடுத்த முடியாது என்றும் அவனை பார்க்கவே கூடாது என்று முடிவுக்கு வந்தாலும், ரம்யாவின் நினைவு அவனை வாட்டி எடுத்தது.

அவளிடம் பழகியது கொஞ்ச நாள் என்றாலும் அவளை தன் உயிராய் தானே நினைத்தான். அவள் இல்லாத இவ்வுலகில் அவனால் மட்டும் எப்படி வாழ முடியும் என்ற நினைப்பே சூர்யாவை தற்கொலை செய்து கொள்ளும் தவறான முடிவை எடுக்க வைத்தது.

ராஜா ஒரு முடிவோடு கீதாவின் வீட்டிற்கு சென்றான். “இன்னிக்கு எப்படியாவது கீத்துவ வெளியே அழைச்சிட்டு போய், அவளை பழைய மாதிரி மாத்தணும்” என்ற நினைப்போடு சென்றவனை அன்பரசன் மட்டுமே வரவேற்றார்.

பார்வதி அவனிடம் முகம் கொடுத்துக் கூட பேசவில்லை. இன்பா அப்போது இருந்த சூழ்நிலையில் இதை கவனிக்க தவறினான்.

“வாப்பா எப்படி இருக்க? நல்லா இருக்கியா? என இன்பாவிடம் பேசிக்கொண்டே, பார்வதியிடம் காபி போட்டு எடுத்துட்டு வர சொல்லிவிட்டு இன்பாவை பார்த்தார்.

அவன் கண்களோ மாடியில் இருக்கும் கீதாவின் அறையை நோட்டம் விட்டது. அதை கவனித்த அன்பரசன் இன்பாவை கீதாவை பார்த்துவிட்டு வருமாறு அனுப்பி வைத்தார்.

அவருக்கு தெரியாதா தன் மகள் மேல் உயிரையே வைத்து இருக்கும் இன்பாவை பற்றி. ரம்யாவின் இறப்பு சடங்கில் ஒரு அண்ணனாக முன் நின்று அனைத்து காரியத்தையும் செய்து தினமும் கீதாவை பார்த்து ஆறுதல் சொல்லி ஒரு வேலை சாப்பாட்டையாவது அவளை கட்டயாப்படுத்தி உண்ண வைத்துவிட்டு இருப்பவன்.

அவன் நண்பன் என்ன தான் ராஜாவை உதாசினம் பண்ணினாலும் அதை எதையும் மனதில் வைத்து கொள்ளாமல் தன் நண்பனின் நிலைமையை உணர்ந்து தினமும் தேடி செல்பவனை அவரும் கவனித்துக் கொண்டு தான் இருந்தார்.

அன்பரசனின் மனதில் எந்த உயரத்தில் இன்பா இருக்கிறானோ அதை விட பலமடங்கு பார்வதியின் மனதில் தாழ்ந்த இடத்தில் இருந்தான். இதை இன்பா உணராமல் இருந்தாலும் அன்பரசனும் கீதாவும் நன்கு உணர்ந்து இருந்தார்கள். அதனாலயே கீதா தன் தாயிடம் சரியாக பேசுவதையே நிறுத்தி இருந்தாள்.

கட்டிலில் சுருங்கி போய் படுத்து இருக்கும் கீதாவை பார்க்க அவன் மனம் வேதனையை கொடுத்தது. அவள் அருகில் சென்று பக்கத்தில் அமர்ந்து தலையை வருடி,

“கீத்துமா.. எழுந்துடு உன் இன்பா வந்து இருக்கேன்டா. கண்ணை முழுச்சி பாருமா” என்று மெதுவாக  குரல் கேட்டதும் இன்பராஜாவின் மடியில் படுத்து அழ ஆரம்பித்தாள்.

இது தினமும் நடப்பதால் அவள் அழுது முடிக்கும் வரை அவள் தலையை மெதுவாக வருடிக் கொடுத்துக் கொண்டு இருப்பது இன்பாவின் வழக்கம்.

“என்னால தான் ரம்யா இறந்துட்டா இன்பா. நான் அன்னிக்கு கோபப்பட்டு அவ கிட்ட பேசி இருந்து இருக்க கூடாதுடா. பாவம் அன்னிக்கு அவளே பயந்து போய் என்ன செய்றதுனு தெரியாம  என்னை தேடி வந்தவளை திட்டி அனுப்பிட்டேன்டா. அப்போ மட்டும் நான் திட்டாமல் அவளுக்கு ஆறுதல் சொல்லி இருந்தா இந்நேரம் அவ உயிரோட இருந்து இருப்பால?. எல்லாம் நான் பண்ண தப்பு தான்” என்று சிறிது நேரம் அழுதவளை கட்டாயப்படுத்தி  அன்பரசனிடம் அனுமதி வாங்கிக் கொண்டு வெளியே அழைத்து வந்தான்.

கடல் அலைகளை வெறித்து பார்த்துக்கொண்டு இருந்த கீதாவை தன் தோளோடு அணைத்துக் கொண்டு, 

“நடந்ததை இனி யாராலையும் மாத்த முடியாது கீத்து. ரம்யா இழப்பு நம்ம எல்லாருக்கும் மிக பெரிய வலி தான். அந்த வலிய இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் நீ அனுபவிக்க போற. அதுல இருந்து வெளியே வந்து கொஞ்சம் நம்ம வாழ்க்கையையும் பாரு, உன்னை நினைச்சு உன் அப்பா அம்மா ரொம்ப கஷ்டப்படுறாங்க. என்னாலயும் உன்னை இப்படி பார்க்க முடியலடா கொஞ்சம் எதார்த்தத்துக்கு வா. உன் படிப்பு வீணா போயிட்டு இருக்கு, இனிமேல் நடக்க வேண்டியதை பார்ப்போம். நான் சொல்றது புரியுதா? என தன்னவளிடம் பேசி அவளை பழைய நினைவில் இருந்து வெளியே அழைத்து வர முயற்சி செய்துக்கொண்டு இருந்த சமயம்,

சூர்யாவின் தாய் வள்ளி கைப்பேசியில் அழைத்து அவசரமாக மருத்துவமனை பெயர் ஒன்றை கூறி வர சொல்லி வைத்தார்.

வள்ளியின் அழுகுரல் இன்பாவை பயம் கொள்ள செய்தது. ரம்யாவின் மேல் உயிரையே வைத்து இருக்கும் சூர்யா, எந்த முடிவு வேணாலும் எடுத்து இருக்க வாய்ப்பு இருக்கும். என்ற எண்ணமே அவனை பத்து நிமிடத்தில் மருத்துவமனை வளாகத்தில் கொண்டு வந்து நிறுத்தியது.

இன்பா காரை நிறுத்தினதுக்கு பிறகு தான் கீதாவுக்கு உயிரே வந்தது என்றே சொல்லலாம் அந்த அளவிற்கு வேகத்துடன் காரை ஓட்டி வந்தான் ராஜா.

மருத்துவமனையினுல் நுழைந்த ராஜா  “இங்க சந்திரசூர்யானு ஒரு பேஷன்ட் அட்மிட் பண்ணி இருக்காங்க. அவரு எந்த வார்ட்  சிஸ்டர்” என்று கேட்டான் பதற்றமாக.

“ஓ அந்த சூசைட் கேஸா, ஐ.சி.யு ல இருக்காங்க. நேரா போய் ரைட் சைட் திரும்புங்க சார்” என்று நர்ஸ்

கூறிய அடுத்த கணம் அவன் கால்கள் நடக்க செயலின்றி நின்றவனை பதற்றத்துடன் இழுத்துக்கொண்டு போனாள் கீதா.

ஐ சி யுவின் வெளியே சூர்யாவின் அன்னை அழுது கொண்டு இருப்பதை பார்த்த  இன்பாவும் கீதாவும் வள்ளியின் அருகில் சென்று “அம்மா” என்று அழைக்க, இன்பாவை பார்த்ததும் அவனின் தோளில் சாய்ந்து கதறி அழுதார்.

“வந்துட்டியாபா ஏன்பா இந்த பையன் இப்படி ஒரு முடிவுக்கு வந்துட்டான். ஒரு பொண்ணுக்காக அவன் உயிரையே கொடுக்க துணிந்து கை நரம்ப கட் பண்ணிக்கிட்டான். டாக்டர் வேற என்ன என்னவோ சொல்றாங்க, எனக்கு எதுவும் புரியவில்லை ராஜா” என்று வள்ளி அழுதுக்கொண்டே கூறவும், டாக்டர் வெளியே வரவும் சரியாக இருந்தது.

இன்பா எதுவும் வாய் திறக்காமல் அதிர்ச்சியில் இருக்க கீதா தான் என்ன நடந்தது என்ன ஆச்சு என்று விசாரித்தாள்.

“சந்திரசூர்யா கை நரம்பை கட் பண்ணி இருக்காரு. எப்போ கட் பண்ணாருனு தெரியல. ஆனா ஹாஸ்பிடலுக்கு கொண்டு வரும் போதே, கான்ஸியஸ் இல்ல.  மிஸ்டர்.சூர்யா உடம்புல இருந்து பாதி பிளேட் வேஸ்ட் ஆகிடுச்சு. அதாவது வெளியேறிடுச்சு. சோ சூர்யாவுக்கு இரத்தம் ஏத்தணும். அவருடைய பிளேட் குரூப் AB-  சீக்கிரம் பிளேட்க்கு அரேன்ஜ் பண்ணுங்க. எங்க கிட்ட ஸ்டாக் இல்ல” என்று டாக்டர் கூறினார்.

அதுவரை அமைதியாக இருந்த இன்பா “எனக்கும் அதே குரூப் தான் டாக்டர். நான் இரத்தம் கொடுக்கிறேன்” என்று சொல்லி டாக்டர் கூட சென்றான்.

அடுத்த அரைமணி நேரத்தில் அனைத்தும் நடந்து முடிந்தது. 
இரத்தம் கொடுத்து வெளியே வந்த இன்பாவுக்கு ரெடியாக வைத்து இருந்த ஜூஸை குடிக்க கொடுத்து தன்னவனை சமாதானம் செய்ய தொடங்கினாள் கீதா.

கீதாவை ஆச்சரியமாக பார்த்தான் இன்பா. ஒரு மணி நேரத்துக்கு முன்னால் தன் தோழியை நினைத்து அழுதவளுக்கு ஆறுதல் கூறிக்கொண்டு இருந்ததவனுக்கு இப்போது அவள் ஆறுதல் சொல்லி கொண்டு இருப்பதை வைத்த கண் வாங்காமல் பார்த்தவனை கவனித்த கீதா,

அவன் அருகில் குனிந்து “எனக்கு ஒரு சந்தேகம்” என்றாள்.

‘இவளுக்கு இந்த டைம்ல அப்படி என்ன சந்தேகம்’ என்ற யோசனையில் என்னவென்று கேட்க,

ராஜாவின் காதில் மெதுவாக சூர்யாவோட முழு பெயர் சந்திரசூர்யாவா” என்று வெகுளி தனமாக கேட்டவளை பார்த்து சிறு புன்னகை வீசி ஆம் என்று தலை அசைத்தான்.

சூர்யா கண்முழித்து விட்டான் என்று நர்ஸ் சொல்லி விட்டு சென்றதும் சூர்யாவை காண  மூவரும் உள்ளே செல்ல,

அவனோ கண்களை மூடிக்கொண்டு அமைதியாக படுத்து இருந்தான்.

கோபத்துடன் அவன் அருகில் சென்று சூர்யாவின் கண்ணத்தில் அறைந்தான் ராஜா. “என்னடா நினைச்சுட்டு இருக்கு உன் மனசுல? செத்து போனவளுக்காக உன் அம்மாவை பத்தி, எங்கள பத்திலாம் யோசிக்காம சாக போயிட்ட. உனக்கு ஏதாவது ஒன்னுனா அம்மாவால தாங்க முடியுமா. ஏற்கனவே அவங்க உன் அப்பாவ பறி கொடுத்துட்டு நிக்கிறாங்க. இப்ப நீயும் இல்லைனா அவங்க என்ன பண்ணுவாங்க யோசிச்சியாடா” என்று இன்பா ஆவேசமாக பேசினான்.

ஆனால் சூரியாவோ ஒரே வரியில் அவனது மனதை சுக்கு நூறாக உடைத்தான் இருந்தான்.

“அம்மா அந்த கொலைகாரியை இங்க இருந்து போக சொல்லுங்க” என்று அவன் சொல்ல, அதை கேட்ட இன்பராஜாவிற்க்கு கோபம் தலைக்கேறியது.

“சூர்யா வார்த்தையை பார்த்து பேசு. யாரை பார்த்துடா கொலைகாரினு சொல்ற? என்று சற்று குரலை உயர்த்தி ராஜா கேட்ட. சூர்யாவோ அமைதியாகவே இருந்தான் அடுத்த வார்த்தை எதுவும் பேசாமல்.

அவனின் அமைதியை பார்த்த ராஜா பொறுமையை இழந்து “எப்போ நீ என் கீதாவை கொலைகாரினு சொன்னியோ! அப்பவே உனக்கும் எனக்கும் இருந்த உறவு முடிஞ்சது. இனி இந்த ஜென்மத்துல என் முகத்துல முழிக்காத மிஸ்டர். சந்திரசூர்யா” என்று அங்கே சூரியா கூறிய வாத்தையை கேட்டு சிலையாக நின்று இருந்த கீதாவின் கையை பிடித்துக்கொண்டு வெளியேறினான் இன்பராஜா.

வள்ளி எவ்வளவோ சமாதானம் செய்தும் நிற்காமல் சென்ற திசையை பார்த்த சூரியா ‘ஒரு பொண்ணுக்காக நம்ம நட்பையே உடைச்சிட்டு போறியேடா’ என்று கண்ணில் நீர் வழிய  தன் மனதுக்குள் உடைந்து போனான்.

‘மனசெல்லாம் உன்னிடம் கொடுத்தேன் வலிக்குது தோழா..
பழசெல்லாம் நினைவுக்கு வருதே நேரில் வாடா……..’ என்ற பாடல் வரி ஒலித்தது அவன் செவிகளில்.

காரில் ஏறிய கீதா பல நேர யோசனைக்கு பிறகு ராஜாவிடம் “நாளைக்கு நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமா? என்று கேட்டு இன்பராஜாவை அதிரவைத்தாள்.

தன் கோபத்தை அடக்க முடியாமல் வண்டி ஓட்டியவன் கீதாவை கவனிக்க தவறினான்.

‘சூர்யா சொன்னதில் என்ன தப்பு இருக்கு. நான் தான் ரம்யாவை கொலை பண்ணினேன். அப்போ நான் கொலைகாரி தானே? என்னால யாருக்கும் நிம்மதி இல்லை. என்னால ஏற்கனவே ஒரு உயிர் போயிடுச்சு இன்னொரு உயிரும் போக இருந்தது. இனி யாரு உயிரும் என்னால போக கூடாது. அப்ப நான் இல்லனா?கொஞ்ச நாள் கஷ்டப்படுவாங்க அவ்வுளவு தான் அப்புறம் என்னை மறந்துடுவாங்க’ என்று முட்டாள் தனமாக பல சிந்தனையில் ஆழ்ந்தாள் கீதா.

கீதாவின் வீட்டுக்கு முன் காரை நிறுத்திவிட்டு கீதாவின் கை பற்றி நினைவுக்கு கொண்டு வந்தவன்,

“என்னடா ஹாஸ்பிடல்ல நடந்ததே நினைச்சுட்டு இருக்கியா. அவன் கோபத்துல பேசிட்டான். நீ எதுவும் மனசுல போட்டு குழப்பிக்காத சரியா, வீட்டுக்கு போ டைம் ஆகுது பாரு” என்று அவளை தோளோடு அணைத்து விடுவித்தான்.

அவன் நெஞ்சோடு சாய்ந்து கண்ணீர் சிந்தினாள் கீதா. ‘இன்பா உன்னை எப்படிடா நான் மறந்தேன்? நான் இல்லனா நீ…நீ…நீயும்..நான் எடுத்த முடிவை தான் எடுத்து இருப்ப.. ச்சீ என்ன ஒரு முட்டாள் தனம் பண்ண நினைத்தேன்? எந்த உயிரும் போக கூடாதுனு நினைச்சு தான் என் உயிரை விட்டுடலாம்னு நினைச்சேன். ஆனா என் உயிரே இன்பா தான். நான் இல்லனா என் இன்பாவும் இருக்க மாட்டான். இனி எந்த தப்பான முடிவையும் எடுக்க கூடாது. என் இன்பாவுக்காக நான் வாழ வேண்டும். எனக்காக இன்பா எவ்வளவோ செஞ்சு இருக்கான். அவனுக்காக அவன் கேட்டதை நான் செய்யணும் அதுவும் இல்லாமல் இப்போ கொஞ்ச நாளா என் வீட்டுல நடக்குறது எதுவும் சரியில்லை. கண்டிப்பா அம்மா எங்க கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டாங்க. அப்பாவும் முன்ன மாதிரி இல்லை, அம்மா சொல்றது தான் அவருக்கு இப்போ எல்லாம் வேதவாக்கு. சோ நான் தான் ஏதாவது ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும்” என்று யோசனை செய்தாள்.

பாவம் அவள் எடுத்த முடிவு நல்ல முடிவு இல்லை தன் வாழ்நாளிலே திரும்பவும் கிடைக்காத பொக்கிஷத்தை எல்லாம் இழக்க போகின்றோம் என்று அறியாமல் முடிவு செய்தாள் பேதையவள்.

கீதாவோ, “நாளைக்கு நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமா” என்றுக் கேட்டு இன்பாவை அதிரவைத்தாள்.

“ஏய் என்னடி சொல்ற? இப்போ எதுக்கு இந்த முடிவு? ஓ.. ஒரு மாசத்துக்கு முன்னால் நான் கேட்டதால் இப்ப இந்த முடிவுக்கு வந்து இருக்கியா?. நான் அப்போ இருந்த குழப்புத்துல சொன்னேன்டி, அதுக்கு அப்புறம் பொறுமையா யோசித்து பார்த்தேன். நான் உன் கிட்ட சொன்னது தப்புனு உணர்ந்துட்டேன். நீ என்னடனா அதை இத்தனை நாளா மனசுக்குள்ள வச்சு யோசனை பண்ணி இருக்க, போ மனச போட்டு குழப்பிக்காம சாப்பிட்டு தூங்கு” என்று அவள் தலையை மெல்ல வருடிக் கொடுத்தான்.

“இல்லடா நான் தெளிவான முடிவு தான் எடுத்து இருக்கேன். நான் எடுத்த முடிவுல இருந்து பின் வாங்க மாட்டேன்” என்று விடாபிடியாக கீதா இருக்க,

“இங்க பாருமா, இப்ப எதுக்கு கல்யாணம்? முதல நீ படிச்சு முடி. அப்புறம் நானே என் பேரண்ட்ஸ கூட்டிட்டு வந்து உன் வீட்டுல பொண்ணு கேட்கிறேன் சரியாடா. அதுவும் இல்லாமல் நீ இப்படி பட்ட முடிவு எடுத்து இருக்கனு மாமாக்கு தெரிஞ்சா பாவம் அவரு மனசு கஷ்டப்படும்டா. சொன்னா புரிஞ்சிக்கோ” என்று இன்பா அவளை சமாதானம் செய்தான்.

‘நீ என் அப்பாவ பத்தி இந்த அளவுக்கு கவலைப்படுற, ஆனா அவரு’ என்று மனதில் நினைத்தவள் ராஜாவிடம் திரும்பி,

“இங்க பாருடா நாளைக்கு நான் பத்து மணிக்கு ரெடியாகி உங்க வீட்டு பக்கத்துல இருக்குற ரிஜிஸ்டர் ஆபிஸ்ல வெயிட் பண்ணுவேன். சரியா பத்து பத்துக்கு எல்லாம்  நீ வரல அப்புறம், ரம்யா எடுத்த முடிவை தான் நானும் எடுப்பேன்” என்று சொல்லிவிட்டு அவன் பதிலுக்கு கூட காத்திருக்காமல் வேகமாக சென்றுவிட்டாள் கீதா.

அவள் சென்ற பின்னும் வெகுநேரம் அங்கயே இருந்தவன் மெதுவாக தன் காரை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.

கீதா கூறிய கடைசி வார்த்தை மட்டும் காதில் விழுந்து கொண்டே இருந்தது அவனுக்கு.

வேறு எதை பற்றியும் யோசிக்காமல் ரிஜிஸ்டர் ஆபிஸில் இருக்கும் தன் நண்பணுக்கு போன் செய்து அடுத்த ஒரு மணி நேரத்தில் கல்யாணம் நடக்க எற்பாடு செய்தான்.

அதை அறிந்த பரத்துக்கும் அதிர்ச்சி. ராமுக்கும் அதிர்ச்சி. ஆனால் ராம் அதில் இருந்து வெளியே வந்து காலையில் நடக்க வேண்டிய ஏற்பாடுகளை செய்ய தயார் ஆனான். ஆனால் பரத்தால் அது முடியவில்லை.

சூர்யாவிற்கும் விசயம் தெரிய தன்னால் வர முடியாது என்று சொல்லிவிட்டான். பரத் மூலமாக இந்துக்கு செய்தி போக அவள் வீடே இரண்டாக ஆகியது.

அவள் தந்தை கணேஷ் தான் சமாதானம் செய்து எப்படியாவது ரிஜிஸ்டரை தடுத்து நிறுத்தி விடுவேன் என்று வாக்கு கொடுத்து அதற்கு தேவையான வேலையில் ஈடுபட்டார்.

அவர்.. அவர்.. வேலையை அவர்.. அவர்கள்.. செய்ய, கதிரவனும் வழக்கம் போல் தன் பணியை தொடர்ந்தார்.

இன்று வழக்கத்திற்க்கு மாறாக கதிரவன் சீக்கிரம் உதிக்க, அதே போல் கீதாவும் வழக்கத்திற்க்கு மாறாக புது புடவை நகைகள் என்று அலங்காரத்துடன் கிளம்பினாள்.

“ஏய் நில்லுடி, இப்படி அலங்காரம் பண்ணிகிட்டு எங்க கிளம்பிட்ட” என பார்வதி கேட்டாள்.

கல்யாணத்திற்க்கு போவதாய் சொல்லிவிட்டு தன் தந்தை நடைபயிற்சி முடித்து வருவதுக்குள் கிளம்பிவிட வேண்டும் என்று எண்ணி தன் அன்னையிடமிருந்து மறு கேள்வி வருவதற்குள் அங்கே இருந்து சென்று விட்டாள் கீதா.

“என்ன இந்த பொண்ணு, இவ நடவடிக்கை எல்லாம் பார்த்தா ஏதோ தப்பு நடக்கற மாதிரி தெரியுதே” என்று புலம்பிக் கொண்டு வீட்டின் வேலையில் முழ்கினாள் பார்வதி.

‘பத்து மணிக்கு தான ரிஜிஸ்டர் ஆபிசுக்கு போக வேண்டும்’ என்று எண்ணி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் முடித்துவிட்டு வெளியே வர  9;45 மணி ஆனது.

சரியாக பத்து மணிக்கெல்லாம் ரிஜிஸ்டர் அலுவலகத்திற்கு நுழைந்தவளுக்கு முன்பே இன்பராஜா அங்கு வந்து இருந்தான்.

கீதாவை திருமண கோலத்தில் பார்த்ததும் மெய் மறந்து நின்றான் அவன்.

ராஜாவின் கண்கள் அவளை விட்டு அகலவேயில்லை.

அதே நிலையில் தான் கீதாவும் இருந்தாள். கல்யாணக் கோலத்தில் ராஜாவை பார்த்து வெட்கப்பட்டு தலையை கீழே குனிந்தவளின் அழகில் மொத்தமாக கரைந்தான் இன்பராஜா.

பரத் வேலை இருப்பதாக கூறிவிட்டு நேரிடையாக அவர்கள் முன் போகாமல் ஒளிந்து கொண்டு அங்கு நடப்பதை கவனித்துக் கொண்டு இருந்தான். 
.

ராம் தான் இன்பாவிற்கு சாட்சி கையெழுத்து போட இரண்டு பேரும், கீதாவிற்கு இரண்டு பேரும் அழைத்து வந்து இருந்தான்.

இவர்களின் பெயர் கூப்பிட்டதும்  இன்பராஜாவின் கரத்தை நடுக்கத்துடன் பற்றிக்கொண்டாள் கீதா.

அவள் நடுக்கத்தை உணர்ந்தவன் மென்மையாக அவளௌ கையை பிடித்தான்.

என்ன தான் அப்பா அம்மாவிற்க்கு தெரியாமல் கல்யாணம் செய்ய ஒப்புக்கொண்டாலும் இது அவர்களுக்கு செய்யும் துரோகம் தானே என்று ஆழ்மனதை உறுத்திக்கொண்டே இருந்தது கீதாவிற்க்கு.

ரிஜிஸ்டர் முன்னால் நின்று இருவரும் கையொழுத்து போட்டு, கீதாவின் கழுத்தில் மாலை போட, அதே போல் இன்பராஜாவின் கழுத்தில் அவளும் மாலையை போட,  கீதாவின் விரல் பிடித்து அழகான மோதிரம் ஒன்றை அணிவித்தான் இன்பா.

அதே போல் அவளும் இன்பாவின் விரலில் அழகான மோதிரம் அணிவித்தாள். இவர்கள் இன்று முதல் கணவன் மனைவி என்று ரிஜிஸ்டர் சொல்ல வெட்கத்துடனும் பயத்துடனும் இன்பராஜாவின் நெஞ்சில் சாய்ந்தாள் கீதா.

‘பூ வைத்தாய் பூ வைத்தாய் 
நீ பூவைக்கோர் பூ வைத்தாய் 
மணப்பூ வைத்துப் பூ வைத்த 
பூவைக்குள் தீ வைத்தாய் ஓ.. ஓ..” என்ற பாடல் கேட்டது அங்கே இருந்த அனைவருக்கும்.

இனி அடுத்த அத்தியாயத்தில் காணலாம்.
 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page