காதல் 34

அவனது பிடியில் இருந்து தன் கரத்தை விடுவித்துக்கொள்ள, “உனக்காக யாரு விஷம் சாப்பிட்டா?” என்ற ஜியாவின் வார்த்தைகள் ஆஷிக்கை மிகவும் பாதித்தது. பதில் கூற முடியாது சிலையென்று நின்றவன், தன்னை மீறி வந்த சீற்றத்தை அடக்க இயலாது கோபமாக இருக்க, அவனது தோள் மீது கை வைத்த ஆதர்ஷ், தன் கண்களால் ஆஷிக்கை பொறுமையை இருக்கச் சொல்ல, பொங்கி வந்த சீற்றத்தை தனக்குள்ளே அடக்கிக்கொண்டு தன்னை ஆசுவாசப்படுத்தி,

“ஓகே ஜியா கோபப்படாத, நீ இன்னும் பழைய கோபத்துலையே இருக்க அப்படித் தானே? எனக்குச் சத்தியமா இப்போ வரை நீ அந்த விஷயத்துக்காகதான் என் மேல இவ்வளவு கோபமா இருக்கனு என்னாலை நம்பவே முடியலை. சரி எல்லாம் போகட்டும், பழசை பற்றிப் பேச வேண்டாம். எல்லாத்தையும் மறந்துட்டு புதுசா ஆரம்பிக்கலாம். தப்பெல்லாம் என்னோடதுதான், உன் மனசை காயப்படுத்திருந்தா என்னை மன்னிச்சுரு, ஐயம் ரியலி சாரி.” என்று கூற ஜியா ஆஷிக்கிடம்,

“என்ன சாரியா? சாரி சொன்னா எல்லாம் சரியாகிருமா? சொல்லுடா… சாரி சொன்னா எல்லாம் சரியாகிருமா? உன்னை மன்னிக்கிற மாதிரியான துரோகத்தையாடா எனக்கு நீ பண்ணிருக்க? உன்னை நம்புனனே…?” என்று கண்ணீர் மல்க ஜியா அழ, ஆஷிக்கோ ஒன்றும் விளங்காமல் அமைதியாய் நின்றான். தன் கண்களைத் துடைத்துக்கொண்ட ஜியா, 

“நான் ஒன்னே ஒன்னு கேட்குறேன், அதுக்கு மட்டும் எனக்குப் பதில் சொல்லு. நீ பண்ணின அதே தப்பை நான் பண்ணிருந்தா என்னை நீ மன்னிப்பியா?”

“ஜியா நீ எந்தத் தப்ப சொல்றனு எனக்குச் சத்தியமா தெரியலை.”

“தெரியலை? ஆஷிக் நடிப்பெல்லாம் போதும், உன் நடிப்பை நான் இன்னும் நம்புவேன்னு நீ எப்படி நம்புற? உன்னை பார்க்கவே புடிக்கலை, துரோகி!” என்றவள் அங்கிருந்து செல்ல அவளைத் தடுத்தவன்,

“துரோகி! துரோகி! துரோகி! செத்துப் போயிறலாம் போல இருக்கு. அப்படி என்ன துரோகம்தான் பண்ணினேன்னு சொல்லிட்டு போ.” என்று கோபமாய் கூறியவனுக்கு எந்த ஒரு அலட்டலும் இல்லாமல் ஜியா, 

“முடியாது!” என்று மெதுவாகவும் அழுத்தமாகவும் பதில் கூறினாள்.

கோபத்தில் ஜியாவைப் பிடித்துச் சுவற்றோடு சாய்த்து அவளது இரு கரங்களையும் பற்றிகொண்டவன் அவளிடம், 

“என்ன நடந்தாலும் சரி, சொன்னாதான் நீ இங்க இருந்து போக முடியும்.” என்றவன் சில நொடிகள் அமைதிக்கு பின்பு மேலும் தொடர்ந்து, “ஏன்டி என்னை கொல்ற? உன்னை நினைச்சு தினம் தினம் தவிக்கிறேனே, அது உனக்குப் புரியலையா?” என்று கோபமும் வலியும் தன் கண்களில் மின்ன கூறினான். 

சுற்றும் முற்றும் உள்ள அனைவரும் அவர்களையேப் பார்ப்பதை உணர்ந்த ஜியா, ஆஷிக்கின் பிடியில் இருந்து தன்னை விலக்க முயற்சித்தவாறே, 

“ஆஷிக் எல்லாரும் பார்க்கிறாங்க, என்னை நீ இப்போ விடப் போறியா, இல்லையா?”

“பார்க்கட்டும், ஐ டோன்’ட் கேர். எனக்குப் பதில் வேணும், கஷ்டமா இருக்குடி.”

“இதெல்லாம் தியாக்கூடத் தப்பான உறவு வைக்கிறதுக்கு முன்னாடி நீ யோசிச்சுருக்கணும்.” என்ற மறுநொடி, “ஜியா!” என்று ஆஷிக் கர்ஜிக்க அவனைத் தள்ளியவள், 

“கத்துனா அவளுக்கும் உனக்கும் தப்பான தொடர்பு இல்லனு ஆகிறாது. நீ எவ்வளவு முறைச்சாலும் சரி, எவ்வளவு கத்துனாலும் உனக்குத் தியாக்கும் தொடர்ப்பு இருந்தது இருந்ததுதான்.” என்று அழுத்தமாய் கூறினால்.

கோபம் தாங்காமல் ஆஷிக், ஜியா மீது தன் கைகளை ஓங்க, அவளோ சிறு அசைவும் இல்லாமல் அவனையே வெறித்துப் பார்த்து கொண்டிருந்தாள். 

அடிக்க வந்த அவனது கையின் வேகம், அவளது முகத்தைக் கண்டதும் குறைய, ஓங்கிய கரத்தை தளர்த்தியவன் தன் ஆள்காட்டி விரலை அவள் முன் காட்டி,

“பிரச்சனை எனக்கும் உனக்கும். தேவையில்லாம என் ஃப்ரண்ட பத்தி பேசாத.” என்று மிரட்டும் தோரணையில் கூற, 

“ஃப்ரண்ட்? ஓ… உங்க ஊர்ல இதுக்குப் பேர்தான் நட்பா? நம்புனேன்டா… எப்படிடா எனக்குத் துரோகம் பண்ண உனக்கு மனசு வந்துச்சு?” என்று கண்களில் கண்ணீர் மல்க கூறியவளிடம்,

“உனக்கெல்லாம் நட்ப பத்தி என்னடி தெரியும்? முன்ன பின்ன உனக்கு ஃப்ரண்ட்ஸ்னு யாரும் இருந்தால் தானே?”

“ஆமா தியா, அப்புறம் உன்னை மாதிரி ஆளுங்க தங்களோட தப்பான உறவை, என்னை மாதிரி முட்டாளுங்ககிட்ட இருந்து மறைக்கிறது யூஸ் பண்ற வார்த்தைதான் நட்புனு எனக்கு முன்னாடி வேணும்னா தெரியாம இருந்திருக்கலாம். ஆனா இப்போ தெளிவாவே தெரியுது.”

“ஜியா எனக்குக் கோபமா வருது, தயவு செஞ்சி எதுவும் பேசாத.” என்று ஆஷிக் கோபத்தை உள்ளடக்கியவாறு அழுத்தமாய் கூற, அவனுக்குப் பதில் பேச வந்த ஜியாவைத் தடுத்த ஆதர்ஷ், ஆஷிக்கை அமைதி படுத்திவிட்டு, “ஜியா பிரச்சனை வேற மாதிரி போகுது, அதைப் பேசி தீர்க்கிறதுதான் சரி.”

“அதுல எனக்கு விருப்பம் இல்லை ஆதர்ஷ்.” என்று எரிச்சலோடு கூற,

“ஜியா இதுல நீயும் ஆஷிக்கும் மட்டும் சம்பந்த பட்ருந்தீங்கனா நான் தலையிட மாட்டேன். ஆனா நீ தியாவையும் ஆஷிக்கையும் பற்றிச் சொல்ற, ஸோ பேசிதான் ஆகணும்.”

“அந்த அசிங்கத்தை மறுபடியும் வேற பேசணுமா? என்ன வேணுமோ, அதை ஆஷிக்கோட ஆசை காதலி தியாகிட்டையே கேட்டு தெரிஞ்சிக்கோங்க. ஏன் ஆஷிக், அவ உன்கிட்ட எதுவும் சொல்லலையா? ம்ம்… சொல்ல டைம் இருந்திருக்காது. சார்தான் வேற வேலையில பிசியா இருந்தீங்களே? ஆனா தியாக்கு நான் நன்றி சொல்லணும், அன்னைக்குத் தியா மட்டும் என்கிட்ட உண்மையைச் சொல்லாம இருந்திருந்தாள்னா, என் நிலமையைக் கொஞ்சம் யோசிச்சு பாரு. உன்னை இப்போ வரை நம்பி ஏமாந்துட்டு இருந்திருப்பேன். தப்பெல்லாம் நீ பண்ணிட்டு, ஏதோ ஒரு லெட்டரை என்கிட்ட காட்டி நான் எழுதினேன்னு சொல்ற? 

உன் அப்பா ரெண்டாவது கல்யாணம் பண்ணினது, ஆயிஷா உன்னோட ஸ்டெப் சிஸ்டர், இப்படி எல்லாமே உன்னை லவ் பண்றதுக்கு முன்னாடியே எனக்குத் தெரியும். இதெல்லாத்தையும் காரணம் காட்டி உன்னை விட்டு போற ஆள் நான் இல்லை. 

எவ்வளவு பெரிய டிராமா? உன் தப்ப மறைக்க எப்படி எல்லாம் யோசிச்சு என் மேல பழியைப் போட்ருக்க? என்ன தியாவும் நீயும் சேர்ந்து போட்ட ப்ளனா இது?” என்று ஜியா கூற ஆதர்ஷ்க்கு குழப்பம் இன்னும் அதிகமானது. 

வெகுண்டெழுந்த ஆஷிக் தனல் தெறிக்கும் விழிகளோடு ஜியாவை வெறித்துப் பார்த்தவாறு, 

“ஷட் அப்! ஒருவார்த்தை இனிமே பேசுன, என்னை நீ வேற மாதிரி பார்ப்ப.” என்று மிகக் கடினமாகக் கோபம் தெறிக்கப் பற்களைக் கடித்தவாறு கூற, பதிலுக்கு ஜியா திமிற இருவரையும் சமாதானம் செய்த ஆதர்ஷ், 

“சண்டை போடுறதுனால எந்தப் பயனும் இல்லை. தியாவ வச்சு பேசி இதை இன்னைக்குத் தெளிவுபடுத்திறதுதான் என்னைக்கும் நல்லது.” என்ற ஆதர்ஷிடம் ஆஷிக்,

“டேய் இவதான் ஏதோ உளர்றான்னா, நீயும் அவ சொல்றதுக்கு எல்லாம் தலையாட்டிகிட்டு இருக்க? இவளோட சந்தேகப் புத்திக்காக நாம நம்ம தியாவ சந்தேகப்படணுமா என்ன? சின்ன வயசுல இருந்து நமக்கு அவளைத் தெரியும்டா. ஜியா சொல்றத கேட்டா அவளால சத்தியமா தாங்கிக்கவே முடியாது.” என்று தன் தோழிக்காகப் பரிந்து பேச,

“ஆஷிக் பிரச்சனைனு வந்ததுக்கு அப்புறம் பேசி தீர்க்கிறதுதான் சரி. அவளுக்குப் ஃபோன் பண்ணி உடனே என் வீட்டுக்கு வர சொல்லு.”

“ஆதர்ஷ்…” என்று ஆஷிக் தயங்க,

“சொன்னதைச் செய்.” என்று கட்டளையிட்டான். 

இதை அனைத்தையும் கவனித்த ஜியாவின் சித்தி, ஜியாவிடம் என்ன பேச என்று விளங்காமல் அவளையே பார்க்க அவள் அவரிடம், 

“பழைய விட்டுப் போன கணக்கெல்லாம் தீர்க்க வேண்டியிருக்கு சித்தி, முடிச்சுட்டு வீட்டுக்கு வந்திடுறேன். நீங்க சரண்யா கூடப் பத்திரமா வீட்டுக்கு போங்க.” என்று கூற,

அவர் அவளிடம், “கொஞ்சம் பொறுமையா இருமா, எனக்கென்னவோ இப்போ கூட ஆஷிக் மேல தப்பு இருக்கிற மாதிரி தெரியலை.” என்று தன் மனதில் உள்ளதைக் கூற, அவளது அமைதியே ஜியா சமாதானம் ஆகவில்லை என்பதை உணர்ந்தவர், தன் மகளை அழைத்துக்கொண்டு அங்கிருந்து சென்றார். 

சில மணிநேர பயணத்திற்குப் பிறகு ஜியா, ஆஷிக், ஆதர்ஷ் மூவரும் ஆதர்ஷின் இல்லத்திற்கு வர, 

அவர்கள் வந்த சில மணிநேரத்தில், “ஆஷிக், ஆதர்ஷ் எங்கடா இருக்கீங்க?” என்று அழைத்துக் கொண்டே உள்ளே வந்த தியா, ஆஷிக்கை பார்த்து, “என்னடா வர சொல்லிருக்கீங்க, ஏதும் பார்ட்டியா?” என்று எப்பொழுதும் போல அவனது தோளில் தன் கையைப் போட்டவாறு கேட்க,

“வாங்க தியா, உங்களுக்காக உங்க ஃப்ரண்ட். ஆஷிக்…” என்று அழுத்திய ஜியா, ஆஷிக்கைப் பார்த்தவாறே, “ரொம்ப நேரமா காத்துகிட்டு இருக்காரு.” என்று கூற, 

அங்கே ஜியாவை அவர்களுடன் கண்டவுடன் தியாவின் முகம் நெருப்பில் பட்ட சருகாய் மாறியது. வந்த கோபத்தை அடக்கிக் கொண்டவள் தனக்குள், 

‘என்ன ஆனாலும் இவ ஆஷிக்கை விடமாட்டா போலையே?’ என்று கடிந்து கொண்டவள் பிறகு, 

தன் முகத்தை இயல்பு நிலைக்கு மாற்றிக் கொண்டு, “ஜியா எப்படி இருக்கு, உன் ஹெல்த்?” என்று கேட்க,

கோபமுற்ற ஜியா, “போதும்! இன்னும் எவ்வளவுதான் ரெண்டு பேரும் நடிப்பீங்க? உனக்கும் ஆஷிக்குக்கும் உள்ள ரிலேஷன்ஷிப் பத்தி நீயா சொல்றியா, நானா சொல்லட்டா?” என்று அதட்டலோடு கேட்க, 

“என்ன பேசுற? என்ன ரிலேஷன்ஷிப்? ஆஷிக் ஜியாக்கு என்னாச்சு?” என்று தியா ஒன்றும் அறியாதது போல ஜியாவின் கேளிவிக்குப் பதிலாய் கேள்வியையேக் கேட்டாள்.

“நடிக்காத தியா, நவம்பர் முப்பது, 2012. ஆஷிக்கோட பிறந்தநாள் பார்ட்டி இப்போ கூட உனக்கு எதுவும் ஞாபகம் வரலையா? அன்னைக்கு நைட் உனக்கு ஆஷிக்குக்கும் எதுவும் நடக்கலை?”

“அன்னைக்கு நைட் எங்களுக்குள்ள என்ன நடந்தது? ஆஷிக், ஜியாக்கு என்ன ஆச்சு? நமக்கு என்ன நடந்தது? ஏதாவது சண்டை போட்டுக்கிட்டோமா?” என்று வெகுளி வேடம் தரிக்க,

“நடிக்காத தியா, அடுத்தநாள் காலையில நான் வந்த அப்போ நீ எதுவும் என்கிட்ட சொல்லல?”

“நான் என்ன சொன்னேன்? ஆமா நீ அன்னைக்கு வந்தியா? எப்போ வந்த? நாங்க எல்லாரும் போனதுக்கு அப்புறம் வந்தியோ?” என்று அப்பாவியாகக் கேட்க,

“ஆஷிக் இவதான் எல்லாம் சொன்னா, இப்போ எதுவுமே தெரியாத மாதிரி நடிக்கிறா.”

“போதும், அவ நடிக்கலை. நீதான் நடிச்சுட்டு இருக்க.” என்று ஆஷிக் க்ரோதம் ததும்பக் கூற மிரட்சியுடன் அவனை நோக்கினாள். 

மேலும் தொடர்ந்தவன், “நீ சொல்ற நவம்பர் முப்பது 2012, நைட் நான் என் வீட்லையே இல்லை. ஆதர்ஷ் கூட அவனோட வீட்ல இருந்தேன்.” என்றவன் கண்களில் அனல் தெறிக்கக் கூர்மையாக அவளைப் பார்க்க,

அவன் கூறியதைக் கேட்ட ஜியாவுக்குத் தலையே சுற்றியது. அவளது வாயில் இருந்து எந்த வார்த்தையும் வரவில்லை, கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் கணக்கில்லாமல் வழிந்தது. ஆஷிக் கூறியதையும் தியா கூறியதையும் ஒப்பிட்டு பார்த்தவளுக்கு, தியாவின் சூழ்ச்சியில் தான் ஏமாந்தது தெளிவாகப் புரிந்தது. 

அவளது மனம் மெல்ல அந்தக் கசப்பான நினைவுக்குள் அவளைக் கொண்டு சென்றது. 

***

ஆஷிக், ஜியா இருவரது காதலும் ஐந்து வருடத்தை மிகவும் சுகமாய் கடந்திருந்த நேரம் அது. ஆஷிக் தன் ஏரோநாட்டிகல் படிப்பை முடித்து பைலட் ட்ரையினிங்கில் சேர்ந்திருக்க, ஜியா தன் மருத்துவப்படிப்பை முடித்துவிட்டு லண்டனில் மேல் படிப்பு படிப்பதற்காகத் தன்னைத் தயார் செய்து கொண்டிருந்தாள். ஆஷிக்கின் பிறந்த நாளான நவம்பர் முப்பது 2012 அன்று ஜியாவுக்கு எண்ட்ரன்ஸ் எக்ஸாம் இருக்க, அவளால் ஆஷிக்கின் இல்லத்தில் நடந்த அவனது பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொள்ள முடியவில்லை. எனவே எக்ஸாம் முடிந்த அன்று இரவே கிளம்பியவள், அடுத்தநாள் காலையில் மும்பை வந்தடைய, வந்த அடுத்த நிமிடம் ஆஷிக்கை காண அவனது இல்லத்திற்கு மிகவும் ஆசையோடு சென்றாள். 

***

 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!