காதல்-34
கொடைக்கானல் வளைவுகளை கடந்தக் கொண்டு இருந்த சமயம்
“டேய் மச்சி, தலையெல்லாம் சுத்துத்துடா. வாந்தி வேற வருதுடா. இந்த மலையை எப்போடா ஏறி முடிப்போம்” ராம் கேட்க, அவனை முறைத்து விட்டு மெதுவாக வண்டியை மலை பகுதி சுற்றி வளைத்து வளைத்து ஏறினான்.
சூரியாவோ பீதி அடைந்து இருந்த ராமை பார்த்து அடக்கப்பட்ட சிரிப்புடன் “ஏன்டா, சும்மா பின்னாடி உட்கார்ந்து வர உனக்கே இப்படி இருந்தா, முன்னாடி அதுவும் வண்டியை ஓட்டிட்டு வர எனக்கு எப்படி இருக்கும். அதுவுமில்லாமல் மச்சி பர்ஸ்ட் டைம்டா, மலையை சுத்தி சுத்தி ஓட்டுறேது. எப்போ முடியுமோ தெரியல ராம்.” என்று நடுங்குவது போல் பாவனை செய்தான்.
அதை கேட்ட ராமோ பயந்தே விட்டான். “என்னது பர்ஸ்ட் டைமா?” என்று ராம் ஒரு புறம் கேட்கும் அதே நேரம் அருணும் கேட்க, இருவரின் குரலும் கோரஸாக ஒலித்தது.
சூர்யாவோ வெகு சாதாரணமாக “ஏன்டா இந்த ஷாக்” என்று கேட்டான்.
ராம் “என்னடா விளையாடுறிய? பர்ஸ்ட் டைம் மலையில் ஓட்டுறனு சொல்ற. அப்ப எனக்கு பயமா இருக்காதாடா?. எனக்கு இப்பவே வயித்த கலக்குதுடா. எமதர்மன் என் கண் முன்னாடி நிக்கிற மாதிரி இருக்குடா. பேசாமல் நம்ம காரை இங்க எங்கயாவது ஓரமா பார்க் பண்ணிட்டு நடந்து போலாமா?” என்ற ராமை பார்த்த அருண் பார்த்து சிரித்தான்.
அருண் சிரிப்பதை பார்த்த ராம் அருணை முறைத்துக் கொண்டே, “டேய் சூர்யா இப்ப எதுக்கு இந்த பொடிப்பையன் என்னை பார்த்து சிரிக்கிறானு கேளுடா?” என்று சொன்னான்.
ராம் கூறியதை கேட்ட அருணோ ‘என்னது பொடிப்பையன? இருடா இரு எனக்கு ஒரு டைம் வராமலா போக போது” என்று மனதில் நினைத்துக் கொண்டு ராமை பார்த்து மீண்டும் சிரித்தான்.
சூரியா வேடுமென்றே “யாரை மச்சி சொல்ற. நீ சொல்ற மாதிரி பொடிப்பையன எல்லாம் நம்ம கூட கூட்டிட்டு வரலடா.” என சூர்யா ராமை கிண்டல் செய்ய, இப்பொழுது சூர்யாவை முறைத்தான் ராம்.
“சரி சரி முறைக்காதடா, நீ யாரை சொல்றனு தெரியுது. அவன் உன் பக்கத்தில் தானே இருக்கான் அப்படியே கேளு. இல்லனா நீ சொன்னது அவன் காதில் விழுந்து இருக்கும்.” என்று கூரியவன் “டேய் அருண் எதுக்குடா அவனை பார்த்து சிரிச்ச?” என்று புன்னகையை மறைத்துக் கொண்டு கேட்டான் சூரியா.
அருணோ “பின்ன சிரிக்காமல் என்ன பண்ண சொல்றிங்க சூர்யா. இவரு இந்த மலையை ஏறிடுவாரா. நல்லா ஜோக் பண்றாருல. தெரியாம தான் கேட்கிறேன், இந்த மலை எத்தனை அடி உயரமாவது தெரியுமா இவருக்கு” என்று கேட்டான்.
“ஆமா ஆமா இவருக்கு தெரிஞ்ச மாதிரி தான் நம்மளை கேட்கிறான்” என ராம் கடுக்கடுத்தான்.
“நம்மளை இல்லை மச்சி உன்னை தான் கேட்கிறான்” என்று சூர்யா கிண்டல் செய்தான்.
ராமுக்கு கோபம் வர “ஆமாடா என்னை தான் கேட்டான். எனக்கு தெரியாது தான் அப்படியே இவனுக்கு தெரிந்த மாதிரி பெருசா சிரிச்சானே. அவனையே சொல்ல சொல்லு பார்க்கலாம்” என்று முறைத்தான்.
அருணோ ‘வாடா, வா இதுக்கு தானே ஆசைப்பட்டாய் அருண்’ என்று தன் மனதில் நினைத்து “எனக்கு எல்லாம் தெரியும் சூர்யா, உங்க நண்பருக்கு தான் எதுவும் தெரியாது” அருண் வேண்டும் என்றே ராமை சீண்டினான்.
ராமோ கோபத்துடன் “டேய் சூர்யா இவன் என்னை ரொம்ப கடுப்பேத்துறான். இவ்வளவு சொல்றானே எங்க இந்த கொடைக்கானலை பற்றி சொல்ல சொல்லு. அப்ப தானே இவரு திறமை என்னனு ராஜாக்கு தெரியும். எந்த மாதிரி ஒரு முட்டாளை வேலைக்கு வச்சு இருக்கானு தெரியும். டேய்..ராஜா டேய் இங்க என்ன நடக்குது நீ தூங்கிட்டு வர. எழுந்திருடா, நீ வேலைக்கு சேர்த்து வச்சி இருக்கியே அதுவும் உன் பிஏ அவன் லட்சணம் என்னனு தெரியா வேண்டாம் உனக்கு” என்று ராஜாவை உசுப்பினான்.
ராஜாவோ கடுப்புடன் “டேய் எருமை மாடுகளா, எப்போ பாரு புருஷன் பொண்டாட்டி மாதிரி சண்டை போட்டுட்டு இருக்கிங்க. ஒழுங்கா மூடிட்டு வாங்க இல்ல.. ஏதாவது சொல்லிட போறேன்” என்று கத்திவிட்டு மீண்டும் தன் கற்பனை உலகில் தன்னவளுடன் பேச ஆரம்பித்தான்.
“என்னது புருஷன் பொண்டாட்டியா, ச்சீ கருமம். ஏன்டா உனக்கு போயும் போயும் இவன் கூட சேர்த்து வச்சி பேசுற. நினைச்சு பார்க்க கூட முடிலடா, கருமம். சொல்றது தான் சொல்ற ஒரு நயன்தாரா இல்லையா சமந்தா இவங்க கூட சொன்னா எவ்வளவு நல்ல இருந்து இருக்கும்” என்று ராம் பீலிங்ஸோடா சொல்ல,
“ஏய்..ராம் அவன் தான் ஏதோ கோபத்துல சொல்றானா நீயும் அதை நினைச்சு பார்க்க முடியலனு சொல்ற. கருமம்டா” என்று தலையில் அடித்துக்கொண்டு கவனமாக காரை ஓட்டினான் சூரியா.
“மச்சி.. அதெல்லாம் விடு இவன் பெரிய இவனாட்டும் சொன்னானே. அதை சொல்ல சொல்லு” என்று மீண்டும் விட்ட இடத்தில் ராம் ஆரம்பிக்க,
அருண் திருதிரு முழித்துக்கொண்டு ‘இவன் இதை விட மாட்டான் போல இருக்கே. நான் ராம வெறுப்பு எத்த நினைச்சேன் ஆனா அது இப்படி நமக்கே ரிவிட் அடிக்குதே. என்ன பண்றது பேசாமல் தூங்குற மாதிரி நடிக்கலாமா இல்ல இல்ல வேண்டாம். அப்புறம் கொடைக்கானலில் ஏஞ்சலை தேடி கண்டுபிடிச்சு கொடைக்கானலை விட்டு போகுற வரைக்கும் இவன் நம்மல கலைய்ச்சே சாகடிச்சிடுவானே’ என்று மனதில் நினைத்துக் கொண்டு அருண் அமர்ந்து இருந்தான்.
ராமோ ‘அருணை விட கூடாது. இவன் முழிக்கிற முழியை பார்த்தாவே தெரியுது இவனுக்கு ஒன்னும் தெரியாதுனு. சோ இவன வெறுப்பேத்தி அவன் வாயாலயே என்ன விட்டுடுங்கனு சொல்ல வைக்கிறேன்டா’ என்று ராமும் மனதில் சபதம் எடுத்து அருணை சீண்ட ஆரம்பித்தான்.
ஒருகட்டத்தில் அருணால் பொறுக்க முடியாமல்,
“இப்ப என்ன உங்களுக்கு இந்த கொடைக்கானலை பற்றி சொல்லணும் அவ்வளவு தானே?” என்று கேட்டான்.
ராமோ ‘என்ன இவன் இப்படி கேட்கிறான்’ என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டு “ம்ம் ஆமா சொல்ல சொல்லுடா சூர்யா” என்றான்.
அருணோ “ம்ம் சொல்றேன் சூர்யா நல்லா கேட்டுக்க சொல்லுங்க”
என்று கண்ணை ஒரு முறை மூடி திறந்து வெளியே பார்த்தப்படி சொல்ல ஆரம்பித்தான்.
“சர்வதேச கோடை வாசஸ்தலமான கொடைக்கானல், மேற்கு தொடர்ச்சி மலையில் 7,000 அடி உயரத்தில் உள்ளது. இந்த கொடைக்கானல் மலை 3,800 ஆண்டுகளுக்கு முன் புவியியல் பரிணாம மாற்றத்தால் உருவானதாக புவி அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.”
ராம் மனதில், “என்னது 7,000 அடியா. இவன் சொல்றது உண்மை தானா”..என மனசுக்குள் பேசுறதா நினைச்சு வெளியே சொல்ல, சூர்யாவும் அருணும் சிரித்துக்கொண்டு “ஆமா” என்றார்கள். பின் அருண் தொடர்ந்தான்.
“மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல், தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கொடைக்கானல் என்னும் சொல், காட்டின் முடிவு, கொடிகளின் காடு, கோடை கால காடு, காட்டின் அன்பளிப்பு என பல பொருள் தரும். முன்னர் கொடைக்கானலில் மலை வாழ் மக்களே வாழ்ந்து வந்தனர், பின்னர் ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட பொழுது கோடை காலங்களில் இங்கு தங்கியிருந்தனர்.”
ராம் “என்னது இளவரசியா” என்று கேட்க, அருண்பேசிக்கொண்டே போனான்,
“மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது. இதனால் இங்கு குளுமையான தட்ப வெட்பம் நிலவுகிறது. பொதுவாக இந்த மலைக் கூட்டங்களை பழனி மலைகள் என்று அழைப்பார்கள். தமிழ்நாட்டில் மலைகளின் இளவரசியாக உள்ள கோடை வாசத்தலம் கொடைக்கானல் ஆகும்.
பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர் செடிகள் இங்கே பரவலாக வளர்கின்றன. அதனால் இம்மலையில் உள்ள முருகன் கோவிலுக்கு குறிஞ்சி ஆண்டவர் கோயில் என்றே பெயருண்டு. கடைசியாக இந்த மலர்கள் 2006-ஆம் ஆண்டு பூத்தன.
கொடைக்கானலில் உள்ள சில முக்கிய சுற்றுலா தளங்கள் கோடை ஏரி, குணா குகை, பில்லர் ராக், பிரையண்ட் பூங்கா, சுசைட் பாய்ன்ட் மற்றும் ஏராளமான இடங்கள் இங்கு உள்ளன. கொடைக்கானல் தேனிலவு செல்லும் புதுமணத் தம்பதிகளுக்கும் மிகவும் விருப்பம் உள்ள இடமாக உள்ளது”.
“இவன் சொல்றது எல்லாம் உண்மை தானா” என்று ராம் வாயை பிளந்துக் கொண்டு கேட்க,
சூர்யா ராமை பார்த்து சிரிக்க, அருணோ “அய்யேயோ, நெட்வொர்க் கட் ஆகிடுச்சே” என்று வாய்விட்டு கூற, ராம் அருணை முறைத்துப் பார்த்தான்.
“ஏன்டா நான், நீ சொல்றது எல்லாம் கேட்டு பரவாயில்லை பையனுக்கு எல்லாம் தெரிந்து இருக்குனு ஒரு நிமிசம் உன்னை பத்தி பெருமையா நினைத்தேன்டா. ஆனால் நெட்ல பார்த்து சொல்லி இருக்க? உனக்கு அசிங்கமா இல்லையா?” என்று கேட்டான் ராம்.
அருண் தலையை சொரிந்துக் கொண்டு “ஈஈஈ” என இளித்து “எனக்கு கொடைக்கானலை பத்தி தெரியாது ராம். நீங்க வேற என்னை உசுப்பேத்தினீங்களா அதான் நெட்ல பார்த்து சொன்னேன்.என் கெட்ட நேரம் நெட்வொர்க் போச்சு” என்று வழிந்தான்.
இப்படியே இவர்களின் சின்ன சின்ன விளையாட்டு தனமான சண்டை முறைப்பு பொய்யான கோபம் கொண்டு ஒரு வழியாக மேல் மலை பகுதிக்கு வந்து ஒரு ரூம் எடுத்து சிறிது நேரம் கூட அவர்களை ஓய்வு எடுக்கவிடாமல் குளித்து ரெடியாகி அவர்களை இழுத்துக் கொண்டு, அங்கு இருக்கும் அதிகாரியுடன் தன்னவளை தேடும் பணியில் ஆயத்தம் ஆனான் ராஜா.
இன்பாவுக்கு இருக்கும் செல்வாக்கில் எல்லா மேல் அதிகாரிக்கும் கட்டளை போட்டு தன்னவளை தேடலாம்.ஆனால் அப்படி செய்தால் பரத் மூலமாக கீதாவுக்கு எந்த ஆபத்தும் வந்து விட கூடாது என்ற பயம்.
அதானாலே இரு அதிகாரி மட்டும் அவர்களுடன் போலீஸ் உடையில் இல்லாமல் சாதாரணமான உடையில் அழைத்துக் கொண்டான்.
அவர்களுக்கு தெரிந்த அனைத்து இடத்தையும் அலசி ஆராய்ந்து விட்டார்கள். ஆனால் கீதா மட்டும் இன்பாவின் கண்களில் படவில்லை. பரத்தாவது கண்ணில் படுவானா என்று எதிர்பார்த்து ஏமாந்தது தான் மிச்சம். இந்த தேடலில் இவர்கள் வந்து ஐந்து நாட்கள் கடந்ததை கூட மறந்து போனார்கள்.
சூர்யா தான் இப்படியே விட்டால் இது சரிப்பட்டு வராது..என உணர்ந்து இன்பாவையும் மற்ற இருவரையும் வலுக்கட்டாயமாக கோவிலுக்கு அழைத்துச் சென்றான்.
ராஜாவோ “சூர்யா நான் இங்கயே இருக்கேன்டா, நீங்க போயிட்டு வாங்க” என்றான்.
“மச்சி கோவிலுக்கு வந்துட்டு சாமிய பார்க்க வரமாட்டேனு சொல்ல கூடாது ராஜா” என்று ராம் கூறினான்.
“இல்லடா, கீத்து கிடைக்கிற வரைக்கும் நான் கோவிலுக்குள்ள வரமாட்டேன்டா.சொன்னா புரிஞ்சிக்கோங்க, நீங்க போயிட்டு வாங்க” என்று அவர்களின் பதிலுக்கு கூட காத்திருக்காமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றான்.
மற்ற மூவரும் இதற்கு மேல் அவனை கட்டாயப்படுத்தாமல் சாமி தரிசனம் செய்தார்கள்.
‘கடவுளே, உன்னை எப்படி வணங்குறதுனு கூட எனக்கு தெரியாது. பர்ஸ்ட் டைம் உன் சன்னதிக்கு வந்து இருக்கேன், அதுவும் என் நண்பனுக்காக எத்தனையோ தடவை என் அம்மா சொல்லியும் ஏன் என் ரம்யாவுக்காகவும் கூட உன்னை பத்தி நினைக்காத நான் இப்ப என் நண்பன் படுற கஷ்டத்தை பார்க்க முடியலனு உன்ன பார்க்க வந்துருக்கேன். என் சந்தோஷத்தையும் நிம்மதியும் தான் நீ பறிச்சிக்கிட்ட. அட்லீஸ்ட் என் நண்பனின் சந்தோஷத்தையும் நிம்மதியையும் திரும்ப கொடுத்துடு சாமி. அவனை பார்த்தா பாவமா இல்லையா, இல்ல கீதாவ பார்த்தாவது உனக்கு இரக்கம் வரவில்லையா. பாவம் அந்த சின்ன பொண்ணு இன்னும் எவ்வளவு கஷ்டத்தை தான் தருவ. கொஞ்சமாவது இரக்கம் காட்டு ஆண்டவா’ என்று மனதுருக தன் நண்பனுக்காக வேண்டினான் சூரியா.
கோவிலில் கூட ராமும் அருணும் முறைத்துக்கொண்டு இருக்க, சூர்யா வேண்டுதல் இம்முறை கடவுளின் காதில் விழுந்து இருக்கும் போல. அவன் கண்களை திறக்க முதலில் ரம்யாவின் உருவம் அவன் கண்முன் தோன்றியது.
அதை பார்த்தவன் “நீயாவது உன் தோழி எங்க இருக்கானு காட்ட கூடாதா. ஒரு ஆத்மாவா இருந்து இவங்கப்படுற கஷ்டத்தை பார்த்துக்கிட்டு தான இருக்க” என வாய்விட்டு சொல்லி கண்களை மூடி திறந்தான்.
பல வருடம் கழித்து ரம்யாவின் உருவத்தை பார்த்தவன் மனபாரம் சிறிது குறைந்தது போல் உணர்ந்து அருணை பார்க்க, அவன் வாயை பிளந்துக்கொண்டு உறைந்துப் போய் நின்று இருந்தான்.
‘என்னாச்சு இவனுக்கு’ என நினைத்து ராமை பார்க்க அவனும் அதே போல் நிற்க, தலையில் அடித்துக்கொண்டு ‘இவனுங்க கோவிலுக்கு வந்தும் அடங்கலையா. எப்போ பாரு சின்னபிள்ளைங்க மாதிரி சண்டைப் போட்டுக்கிட்டு’ என புலம்பிக்கொண்டே அவர்கள் அருகில் சென்று என்ன நடந்தது என்று கேட்டான்.
அதற்கு ராம் “மச்சி இத்தனை நாளா நம்ம ராஜாவுக்கு மட்டும் தெரிந்த கற்பனை உருவம் இப்ப எனக்கும் தெரியுதுடா” என்று வாயை பிளந்து நின்று கொண்டே கூறினான்.
அருணும் “ஆமா சூர்யா, ராஜா சாருக்கு இப்ப தெரியுற கற்பனை உருவம் நமக்கும் தெரியுமா சூர்யா?” என்று அருண் கேட்க,
“என்னடா உளறிங்க” என்று அவர்கள் பார்க்கும் திசையை சூர்யாவும் பார்க்க மகிழ்ச்சியின் உச்சிக்கே சென்றான்.
“டேய் பக்கிங்களா, அது கற்பனை இல்லடா, உண்மை. எருமை மாடுங்களா ஒரே மாதிரி கற்பனை உருவம் எப்படிடா, எல்லாருக்கும் தெரியும்” என்று ராஜாவை நோக்கி செல்ல அதற்குள் அவர்கள் பார்த்த உருவம் ராஜாவின் கண்ணத்தில் ஓங்கி அறைந்துவிட்டு விரல் நீட்டி திட்டி விட்டு காரில் ஏறி பறந்தாள்.
மூவரும் கத்திக்கொண்டே ஓடி வர, இன்பா கன்னத்தை தேய்த்துக் கொண்டு சூர்யாவை பார்த்து,
“டேய் மச்சி என்னடா இவ எப்பவும் கற்பனையில் வந்து கொஞ்சிட்டு போவா. இன்னிக்கு அடிச்சுட்டு திட்டிட்டு போறா” என்று பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்க, சூர்யா தலையில் அடித்துக்கொண்டு,
“கடவுளே இவன் கற்பனைக்கும் நிஜத்துக்கும் வித்தியாசம் தெரியாம இருக்கானே. இவனை சொல்லி என்ன பண்றதுடா ஆரம்பத்திலயே இவனை கற்பனை உலகத்துக்கு அனுப்பாம இருந்து இருந்தா இப்படி கையில் கிடைச்ச வெண்ணெயை நழுவ விட்டு இருப்பானா” என ராம் சொல்ல,
அவனை முறைத்துவிட்டு சூரியா”அங்க மட்டும் என்ன நிஜத்தை கற்பனைனு தான நினைச்சிங்க இரண்டு பேரும்” என சொல்ல “ஆமா அருண் எங்க காணோம்” என்று கேட்டான்.
“இங்க இருக்கேன் சூர்யா” என்று மூச்சி வாங்க வந்து நின்றான்.
“எங்கடா போன” என்றான் சூரியா.
அருணோ “அந்த கார் நம்பரை நோட் பண்ண போனேன் சூர்யா” என்று சொன்னான்.
ராம் ஆவலுடன் “நோட் பண்ணியா” என்று கேட்க, சூர்யாவுக்கும் அவன் என்ன சொல்ல போகிறான் என்று ஆவலுடன் அருணை நோக்க,
அருணோ “முடியல சூர்யா” என அவன் சொல்ல, ராம் அவன் கன்னத்தில் அறைந்தான்.
அருணோ அதிர்ச்சியுடன் “ஏன்டா, என்னை அடிச்ச” என்று கோபத்துடன் கேட்டான்.
ராமோ “ஒரு கார் நம்பரை கூட நோட் பண்ண முடியல அதான் அடிச்சேன்.” என்க,
“டேய் ராம் நான் சொன்னது அந்த முடியல இல்லடா, கார் பின்னாடி ஓடிப்போயிட்டு நம்பரை நோட் பண்ணிட்டு திரும்பவும் ஓடி வந்தேன். அதான் மூச்சி வாங்குது முடியல சொன்னேன்.அதுக்கு போய் அடிப்பியா” என அருண் கோபப்பட்டான்.
அதை கேட்ட சூர்யா அருணை கட்டிக்கொண்டு கார் நம்பரை வாங்கி போலிஸிடம் தகவல் கொடுத்தான். அவள் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்குமாறு.
அருண் ராமை முறைத்துக் கொண்டு இருக்க, ராம் அருணிடம் சாரி சொல்ல, அருண் முறைத்துக் கொண்டே இந்த “சாரிய கண்டுபிடிச்சவன் மட்டும் என் கையில கிடைச்சான் அவன் காலி, அவன் நொந்து நொந்து சாகுற வரைக்கும் சாரி..சாரினு எழுத சொல்லுவேன். அப்ப தான் ஏன்டா அந்த வார்த்தையை கண்டுபிடிச்சேனு நினைச்சு சாவான்” என்று கடுப்புடன் கூறினான்.
இதுவரை அமைதியாக எதையோ நினைத்துக் கொண்டு இருந்த இன்பா, சூர்யாவை தன் புறம் திருப்பி “நீங்க என்ன பேசுறிங்க என்ன சொல்றிங்க எனக்கு எதுவும் புரியல சூர்யா” என கேட்டான்.
சூர்யா தன் நண்பனை கட்டிக்கொண்டு “நீ இதுவரைக்கும் பார்த்த கீதா உருவம் கற்பனை. ஆனால் நீ இன்னிக்கு பார்த்த உருவம் உண்மையானது ராஜா” என்று சொல்லி அந்த ஆண்டவனுக்கு நன்றி தெரிவித்து தன் காதலி ரம்யாவுக்கும் நன்றி தெரிவித்தான்.
இன்பாவுக்கு ஒன்றும் புரியவில்லை சூர்யாவிடம் கோவிலுக்குள் வரவில்லை என்று சொல்லிவிட்டு அருகில் இருந்த மரத்தின் அருகில் அமர அங்கேயும் கீதா சிரித்துக்கொண்டே அவனை நோக்கி அருகில் வந்த உருவத்தை கற்பனை என்று நம்பி எப்போதும் போல் அவள் கையை பிடித்து, தன் அருகில் இழுத்து ஒற்றை கையால் அவள் இடுப்பை வளைத்து பிடித்து,
“ஏன்டி இப்படி தினம் தினம் என் கண் முன்னாடி தோன்றி மறைந்து போற. ஏய்.. கீத்து இப்ப எதுக்கு நெளிந்துக்கிட்டு இருக்க, அமைதியா நில்லுடி அப்புறம் கோவில்னு கூட பார்க்க மாட்டேன் கிஸ் பண்ணிடுவேன்” என்று அவள் கையை பார்க்க அவள் கைக்குள் வைத்து இருந்த குங்குமத்தை பார்த்து அதை தன் கையால் எடுத்து அவள் நெற்றியில் வைத்தான்.
ராஜா இவ்வாறு செய்த அடுத்த நொடி இன்பாவின் கண்ணத்தில் அறைந்து “யாருடா நீ? என்ன தைரியம் இருந்தா, என் கிட்ட இந்த மாதிரி நடந்துப்ப. இதுவே நான் உன்னை பார்க்கிற கடைசி நாளா இருக்கணும்” என்று விரல் நீட்டி எச்சாரித்துவிட்டு சென்றவளின் நினைவு வர இன்பாவுக்கு சந்தோஷமும் அதிர்ச்சியும் ஒன்றாக வந்தது.
“ஆனா மச்சி, கீதா ஏன் உன்னை அடிச்சா?” என்று ராம் கேட்க, இன்பாவின் தோள் மேல் கை வைத்து சமாதானம் செய்தான் சூர்யா. டாக்டர் சொன்னதை நினைத்து நான்கு பேரும் வருந்தினார்கள்.
‘கீதாவுக்கு நினைவு திரும்பினாலும் அவங்களுக்கு பழைய நினைவு இருக்குமா தெரியாது’ என அவர் சொன்னதை நினைத்து வருந்தினர்.
இனி அடுத்த அத்தியாயத்தில்.
