காதல்- 36
ஆறு மாதத்தில் இருந்து ஆறு வருடத்திற்கு முன்பு..
————————————————-
ஆறு வருடத்திற்கு முன்
பரத் தன் நண்பர்களுடன் சிரித்து பேசிக்கொண்டு புதிய மாணவர்களை கிண்டல் செய்துக்கொண்டு கண்களை அலைப்பாய விட்டான்.
அப்போது தான் கீதா, ரம்யாவுடன் சிரித்து பேசி நடந்து
வந்ததை கவனித்தான். சூர்யாவிடம் சொல்லி அவர்களை அழைத்து கிண்டல் செய்ய சொன்னான்.
பரத்தின் பார்வை தன்னை நோக்கி வந்து கொண்டு இருந்த கீதாவின் மீதே இருந்தது.
கீதாவையும் ரம்யாவையும் கிண்டல் செய்ய,
“டேய், பரத் என்னடா உன்ன அண்ணா சொல்றா.”
“சொல்லிட்டு போட்டும் விடுடா” பரத்தின் பார்வை கீதாவின் மேல் இருந்ததால் ரம்யா சொன்னதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
“ஏன் மேடம் அவங்க நேம் சொல்ல மாட்டாங்களா?. கீதாவும் இவர்களுக்கு தகுந்தாற் போல் பதில் அளிப்பதை ரசித்துக் கொண்டு இருந்தவனுக்கு ‘தான் ராஜாவுடைய ஆளு’ என சொன்னவுடன் இவனும் மற்ற நண்பர்களை விட அளவுக்கு அதிகமான அதிர்ச்சியுடன் இன்பாவை பார்க்க, அதற்கு இன்பா சிரித்து கீதாவை அனுப்பிவிடுமாறு சைகை செய்தான்.
கீதா சென்ற திசையை வெறித்துப்பார்த்துக் கொண்டு இருந்தான். தன் மனதில் பார்த்தவுடன் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்தவளை விட்டுக்கொடுக்க முடியாமல் தவித்தான்.
பின் தன் நண்பர்கள் கீதாவை ராஜாவுடன் சேர்த்து பேசுவதை பொறுக்க முடியாமல் தன் நண்பனின் மனதில் ஆசையை வளர்த்து விட கூடாது என்று.. இன்பாவுக்கு அதிகமாக புத்திமதி வழங்கினான். ஆனால் எல்லாம் வீண் தான் என்று புரிந்து இன்பாவை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகி கீதாவின் பின்னால் சுற்ற ஆரம்பித்தான் பரத்.
அதே போல் ஒரு நாள் கீதா இன்பாவுக்கு சாப்பாட்டை
ஊட்டுவதையும் பின் சீண்டி, ஓடிப் பிடித்து விளையாடுவதைப் பார்க்க முடியாமல் தவித்த போனான். நண்பன் மீதே வன்மையை வைத்தான் பரத். இப்படியே மாதங்கள் கடந்தன.
ஒரு நாள் சூர்யாவும் இன்பாவும் இருவர் மட்டும் அங்கு இருக்க, சில நாட்களுக்கு பிறகு தன் நண்பர்களை பார்த்த மகிழ்ச்சியில் அவர்கள் அருகில் சென்று பேசிக்கொண்டு இருந்த போது கீதாவும் ரம்யாவும் வர அவர்களுடன் சகஜமாக பேசி கிண்டல் செய்து விளையாட, தனக்கு யாரும் இல்லை என்று சொன்னதும் தன் நண்பர்கள் நாங்கள் இருக்கிறோம்..என்று சொல்லி அவனை சமாதானம் செய்ததை நினைத்து மகிழ்ச்சி அடைந்தவன் தன் நண்பனுக்காக கீதாவை மறக்க முடிவு செய்ய நினைத்தான். இல்லை.. இல்லை.. முயற்சி செய்தான்.
ஆனால் அதன் பலன் அடுத்த நாளே வீணாகி போனது. கீதாவுக்கும் தன் நண்பனுக்கும் ஒரே நாளில் பிறந்தநாள் அதுவும் காதலர் தினத்தன்று..என்று கேட்கும் போதே உடைந்துவிட்டான் பரத்.
மறுநாள் கீதாவின் வீட்டிற்கு போன பிறகு தன் நண்பனும் கீதாவும் ஒன்றாக பேசி சிரிப்பதை பார்க்க முடியாமல் தவித்தவன் அவர்களிடம் சொல்லிவிட்டு கிளம்பி தன் ரூமுக்கு வந்து என்ன செய்வது ஏது செய்வது என்று புரியாமல் தன்னை தானே தண்டித்துக் கொண்டான்.
எவ்வளவு யோசித்தாலும் கீதா மேல் பரத் வைத்த காதலை மனதில் இருந்து அழிக்க முடியாமல் தவித்து என்ன செய்வது என்று புரியாமல் குழம்பி ஒரு முடிவுக்கு வந்தான்.
அப்போது தான் புரிந்தது பரத்திற்கு. ‘என்ன தான் மனதை கட்டுப்படுத்தினாலும் அவளை மறக்க முடியாது’ என்று உணர்ந்தவன், ‘இனிமேல் என்ன நடந்தாலும் பரவாயில்லை தன் காதலை மனதில் பூட்டி வைப்பதை விட, அதை கீதாவிடம் சொல்வதே மேல். அதன் பிறகு அவள் தன்னிடம் பேசாமல் இருந்தா கூட பரவாயில்லை மன பாரம் போகும் அல்லவா’ என்று முடிவு செய்து ஒரு நல்ல சந்தர்பத்துக்காக காத்திருந்தான்.
தன் காதலை சொல்ல அதற்கான சூழ்நிலையும் அமைந்தது இன்பாவும் கீதாவும் பேசாமல் இருந்த அந்த ஒருவாரம் அப்பொழுது பரத் கீதாவிடம்,
“ஹாய்..கீதா என்ன தனியா இருக்க? எங்க மீதி மூன்று பேரும்” விசயமும் தெரிந்தே வேண்டும் என்று கேட்டான்.
“ஹாய்..பரத்,எல்லாரும் கொஞ்சம் பிசியா இருக்காங்க அதான்” என தன் காதலனையும் சரி, தன் தோழியையும் சரி விட்டு கொடுக்க முடியாமல் பொய் உரைத்தாள் கீதா.
பரத்துக்கு இவள் பொய் உரைக்கிறாள் என்று தெரிந்தது. சரி எப்படியாவது போகட்டும். நம்ம விசியத்துக்கு வரலாம் என்று முடிவு செய்து கீதாவிடம் பேச ஆரம்பித்தான்.
“கீதா உன்கிட்ட ஒன்னு சொல்லணும்” என்று தயங்க,
“ம்;சொல்லு பரத் என்ன விசியம்”என்று கேட்டாள்.
பரத்தோ தன் நெற்றியில் வழிந்த வியர்வையை துடைத்துக் கொண்டு “அது.. அது வந்து நான் நா..உ..ன்னை…உன்னை..காதலிக்கிறேன்” என்று திக்கித்திணறி சொல்லி முடித்தான்.
அவன் சொன்னதை கேட்ட கீதாவிற்கு கோபம் பொற்றிக் கொண்டு வர, அடுத்த கணம் பரத்தின் கன்னம் பழுத்தது.
ஏற்கனவே, இன்பாவையும் சூர்யாவையும் நினைத்து வேதனையில் இருந்தவளிடம் தன் காதலை சொல்ல அதை தாங்கி கொள்ள முடியாமல் அடித்து விட்டாள் பாவையவள்.
“பரத் உனக்கு வெட்கமா இல்லை. உன் நண்பனின் காதலிக்கிட்ட வந்து இப்படி கொஞ்சம் கூட, ச்சீ” என்று முகத்தை திருப்பிக் கொண்டாள்.
அவளின் புறக்கணிப்பு பரத்தை வாட்டியது. அவள் இரு கரங்களையும் பிடித்து தன் நெஞ்சோடு வைத்து “பிளீஸ் கீதா என் காதலை புரிந்துக்கோ. நீ இல்லாமல் என்னால வாழ முடியாதுடா, எனக்கு தெரியும் நான் செய்வது தப்பு தான். ஆனால் என்னை என்னால கட்டுப்படுத்த முடியல, உன்னை விட்டு விலகி தான் போகணும்னு நினைக்கிறேன். ஆனா முடியல. பிளீஸ் என் காதலை ஏத்துக்கோ” என அவன் கெஞ்சி அவளை அணைக்க போகும் போது,
“பரத்” என கத்தி தன் காலில் இருந்து செருப்பை கழட்டி அடித்தே விட்டாள்.
இருக்கும் இடம் பொருள் ஏவல் என்று இவ்வளவு நேரம் தாக்கு பிடித்தவள் இதற்கு மேல் தாக்கு பிடிக்க முடியாமல் வேறு வழியின்றி அடித்துவிட்டு, “இனிமேல் என் கண்ணு முன்னாடி கூட வராத. அப்படி நீ என் கண்ணுல பட்ட அடுத்த நொடி என் இன்பாக்கிட்ட எல்லா விசயத்தையும் சொல்ல வேண்டியது வரும்” என்று எச்சரிக்கை விட்டு திரும்பி கூட பாராமல் சென்று விட்டாள் கீதா.
கீதா போகும் திசையை பார்த்தவன் கோபத்துடன் தன் ரூமுக்கு வந்து ஆத்திரம் போகும் வரை தம் அடித்து தன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு இருந்தான்.
‘எவ்வளவு திமிரு அவளுக்கு ச்சா.. என்னை செருப்பால அடிச்சிட்டல்ல. இதுவே அந்த ராஜா வந்து உன் கிட்ட காதலை சொல்லி இருந்த..ஈஈ இளிச்சிட்டு நின்னு இருப்ப. நாங்க காதலை சொன்னா செருப்பால அடிப்பல. இருடி எல்லாத்துக்கும் சேர்த்து உனக்கு இருக்கு” என்று தன் மனதில் குரூரத்தை வளர்த்துக் கொண்டு இருந்தான். என்ன தான் கீதாவின் மீது கோபம் இருந்தாலும் அதை ஒரு நாளும் அவளிடம் காட்டியது இல்லை. பிறகு வந்த நாட்களில் அவளிடம் இருந்து தள்ளி இருந்தான்.
ஒரு நாள் ரம்யாவின் இறந்த சேதி வர, கொஞ்சம் தவித்து தான் போனான். பார்த்த முதல் நாளே அண்ணா என்று அழைத்தவள் தினமும் தனக்கு சாப்பாட்டை எடுத்து வந்து கொடுப்பவள், அப்படிப்பட்ட பொண்ணு தற்கொலை செய்துக் கொண்டது அவனை கொஞ்சம் பாதிக்க தான் செய்தது. தன் நண்பன் சூர்யாவை நினைத்து வேதனை அடைந்தான்.
பின் ஒரு மாதத்திற்கு பிறகு ராம் மூலம் கீதாவுக்கும் ராஜாவுக்கும் ரிஜிஸ்டர் திருமணம் என்று கேள்விப்பட்டதும் சுக்கு நூறாக உடைந்து விட்டான்.
இதற்கு மேல் தன்னால் இந்த இடத்தில் இருக்க முடியாது என்று உறுதிசெய்து தன் ஊருக்கே (கொடைக்கானல்) போய்விடலாம் என முடிவு செய்து கிளம்பிய போது தான், ‘கடைசியாக கீதாவை பார்த்துவிட்டு போகலாம். இதற்கு பிறகு அவள் தனக்கு இல்லை. அட்லீஸ்ட் தூரமாக இருந்து பார்த்துவிட்டு கிளம்பலாம்’ என்று தான் அன்னிக்கு ரிஜிஸ்டர் ஆபிசுக்கு கிளம்பினான். பாவம் அவன் கெட்ட நேரம் இந்துவின் தந்தையிடம் சிக்கி கொண்டான்.
“நீ பரத் தானே? ராஜா கூட படிக்கிற பையன் தானே? இங்க இருந்து மறைந்து என்ன அங்க பார்த்துட்டு இருக்க?” என்று கேட்டார்.
அவரின் குரல் கேட்டு திடுக்கிட்டவன், சட்டென்று சுதாரித்து “அதெல்லாம் ஒன்னும் இல்லை சார். சும்மா தான் பார்த்துட்டு இருந்தேன்” என்று கிளம்ப போனவனை தடுத்து நிறுத்தினார் கணேஷ்.
அவன் என்ன என்பது போல் பார்த்தான்..
கணேஷ் மனதிலோ ஒரு விஷமமான யோசனை ஒஸ்ரீறு உதிர்க்க, குரலை சொருமிக் கொண்டு “உன்னை பத்தி என் பொண்ணு சொல்லி இருக்கா. நீயும் அந்த கீதா பின்னாடி சுத்திட்டு இருந்தியாமே அப்படியா?” என்று கேட்க, பரத் திருத்திருவென விழித்தான்.
அவன் அதிர்ச்சியை பார்த்ததும் ‘தன் திட்டத்தை முடிக்க இவன் தான் சரியான ஆளு’ என்று நினைத்து அவன் கையில் ஒரு ஊசியை திணித்து அதை ராஜாவுக்கு போட்டு விடும் படி கட்டயாப்படுத்தினார்.
பரத் பயந்து போனாலும் அவரிடம் ஏதோ தப்பாக தோன்ற “என்ன சார் இது. யாரு நீங்க.. நீங்க சொல்றதை நான் ஏன் கேட்கணும். அதுவும் இல்லாமல் அவன் என் நண்பன். அவனுக்கு எதுவும் ஆக நான் விடமாட்டேன். உங்களை எதையும் செய்ய விடமாட்டேன். என்ன தான் நான் கீதாவை காதலிச்சு இருந்தாலும் என் நண்பனை வெறுத்தது இல்லை. எதிரியாகவும் பார்த்தது இல்லை. ஒழுங்கா இங்க இருந்து கிளம்புற வழியை பாருங்க” என்று பரத் கோபத்துடன் கூறினான்.
அதை கேட்டகணேஷ் சிரித்து விட்டு வன்மத்துடன் “நீ இதை தான் சொல்லுவனு எனக்கு தெரியும். நீ உன் நண்பனை எதுவும் செய்ய வேண்டாம். ஆனா நான் உன் காதலியை அதாவது ராஜாவுடைய இப்போதைக்கு இருக்குற மனைவியை எது வேண்டுமானால் செய்ய முடியும்”.என சொல்ல,
பரத் நக்கலாக ஒரு புன்னகை வீசி, “அது உங்களால முடியாது சார்” என்று நிமிர்வுடன் கூறினான்.
கணேஷ் புரியாமல் பார்த்தார். பரத்தோ “என்ன சார் குழப்பமா இருக்கா?” என்று கேட்டவன் ஒரு முறை திரும்பி ராஜாவை பார்த்துவிட்டு “ராஜா இருக்கிறவரை கீதாவுக்கு எதுவும் ஆகாது. என் நண்பன் ஆகவும் விடமாட்டான்” என்றான்.
அதை கேட்ட கணேஷ் பலமாக சிரித்துவிட்டு ஆத்திரத்துடன் “அதுக்கு ராஜா இருந்தா தானே?” என்று கூறினார்.
பரத் அதிர்நதேவிட்டான். “என்ன சொல்றிங்க” என்று அதிர்ச்சியுடன் கேட்க,
கணேஷே “ம் இங்க பாரு நான் சொல்ற வேலையை நீ செய்யலனாலும் கண்டிப்பா வேறு ஒருத்தனை வச்சு பண்ணிடுவேன். அதுக்கு அப்புறம் பாவம் அந்த சின்ன பொண்ணு வாழ்க்கை. அவளை எங்கயாவது வித்துட்டேன்னு வை, அவளை சின்னப்பின்னமா ஆக்கிடுவாணுங்க” என கணேஷ் சொல்லிக் கொண்டே இருக்கும் போதே அவரின் சட்டையை பிடித்து கோபமாக,
“அவளுக்கு ஏதாவது ஒன்னு ஆச்சுனா நான் உங்களை சும்மா விட மாட்டேன்” என்று பரத் அனல் கக்கும் பார்வையோடு கர்ஜீத்தான்.
கணேஷோ அவனை சாதாரணமாக விலக்கி விட்டு தன் சட்டையை சரி செய்துப்படி “அப்போ நான் சொல்ற வேலையை செய்டா” என மயக்க ஊசியை கொடுத்தார்.
பரத் கையில் ஊசியை வைத்துக் கொண்டு தன் நண்பனையும் கீதாவையும் மாறி மாறி பார்த்தான்.
அவனுக்கு அப்போது பெரிதாகப்பட்டது தன் நண்பனின் உயிரை விட கீதாவின் மானம் தான் முக்கியம் என்று நினைத்து தன் மனதை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு நண்பனின் முதுகில் குத்தினான். பிறகு கீதாவின் பார்வையை தாங்க முடியாமல் அங்கே இருந்து கிளம்பி சென்றான்.
கொடைக்கானலுக்கு சென்று சுயமாக ஒரு தொழிலை ஆரம்பித்து ஆறு வருடத்தில் அதில் வெற்றியும் அடைந்தான் பரத். ஆனால் பாவம் அவனுக்கு அதன் பிறகு கீதாவுக்கு என்ன நடந்தது என்று கூட தெரியாமல் இருந்தது.
என்ன தான் செய்தது தப்பாக இருந்தாலும் தினமும் அதிகாலை கீதாவுக்கு போன் செய்வதை நிறுத்தவில்லை. அவள் குரலாவது கேட்டால் போதும், அவள் நன்றாக இருக்கிறாள் என்று நிம்மதி அடைந்துவிடுவான்.
ஒரு நாள் அவன் கூட படித்த நண்பன் கொடைக்கானலுக்கு குடும்பத்துடன் வந்ததை பார்த்து அவனிடம் பேச அவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போது தான் பரத்துக்கே தெரிந்தது அன்று அவன் அந்த ஊரை விட்டு வந்த பிறகு கீதாவின் வாழ்க்கையில் என்ன நடந்தது. இன்பாவின் வாழ்க்கையில் என்ன நடந்தது சூர்யா யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் ஊரை விட்டு போனது என்று நண்பனின் மூலம் அறிந்தவன் சுக்கு நூறாக உடைந்தான்.
அன்று தான் செய்த செயலால் கீதாவின் குடும்பமே உருக்குலைந்து போய்விட்டது. தன் நண்பன் வாழ்க்கையை தானே அழித்துவிட்டோமே என்று எண்ணி வருந்தினான். பின் யோசித்து கீதாவையும் இன்பாவையும் பார்த்து உண்மையை கூற முடிவு செய்து ஊருக்கு கிளம்பி வந்தவன் வழியில் கீதாவை சந்திக்க நேர்ந்தது.
——————————————————
ஆறு வருடத்திற்கு பிறகு அதாவது கீதாவிடம் நடந்த உண்மையை சொல்லிக்கொண்டு இருந்த நாள்..
பரத் சொன்னதை கேட்டு கீதாவால் நம்ப முடியவில்லை அதே சமயம் நம்பாமலும் இருக்க முடியவில்லை.
“இப்ப சொல்லு கீதா. யாரு நம்பிக்கை துரோகம் செய்தது?” என்று விரக்தியாக கேட்டான்.
அவள் என்ன சொல்வது என்று புரியாமல் குழம்பினாள். அப்போ தன்னிடம் இப்போது
நடந்துக் கொண்ட விதம் என்ற எண்ணம் மனதில் தோன்ற அதை பரத்திடமே கேட்டாள்.
பரத் சிரித்து விட்டு “நான் சும்மா உங்கிட்ட விளையாட தான் அப்படி செய்தேன். நீ இன்னும் என் மீது கோபத்தில் தான் இருக்கிறியா என்று சோதித்து பார்த்தேன்” என பரத் சொல்ல கீதாவின் முகம் இன்னும் தெளிவாகாமல் இருப்பதை பார்த்து “உனக்கு இன்னும் என் மீது நம்பிக்கை வரவில்லை போல”. அவள் அமைதியாக இருக்க “சரி நீயும் ராஜாவும் இப்ப ஒரே ஆபிஸில் தான் இருக்கிங்க” என்று கேட்டான்.
கீதா ஆம் என்று தலையாட்டா,
“சரி வா போலாம் நானே வந்து என் நண்பனிடம் நடந்த உண்மை சொல்லி மன்னிப்பு கேட்டுக்கிறேன். அதுக்கு அப்புறம் அவன் எனக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் ஏத்துக்கிறேன்” என்று அழுத்தமாக பேசிய பரத்தை பார்த்த கீதா,
“இல்ல வேண்டாம் நீ சொன்னதயே என்னால இன்னும் நம்ப முடியல. சோ என் இன்பா கிட்ட நானே பக்குவமா எடுத்து சொல்றேன். அதுவும் இல்லாமல் நீ வந்து சொன்னா, இன்பா உன்னை என்ன பண்ணுவான்னு கூட தெரியாது. அதை யோசனை செய்து பார்க்க முடியவில்லை” என்று கீதா சொல்லிவிட்டு புறப்பட்டாள்.
கீதா போவதை பார்த்த பரத் ஆழ்ந்த மூச்சை ஒன்றை எடுத்துக் கொண்டு அவனும் அங்கே இருந்து கிளம்பினான்.
பரத் சொன்ன விசியத்தை நம்ப முடியாமல் அதே சமயம் நம்பாமலும் இருக்க முடியாமல் ராஜாவை காண அலுவலகம் போனவளுக்கு, அங்கு அவன் இல்லாதத்தை நினைத்து நொந்துக்கொண்டாள்.
இன்னிக்கு எப்படியாவது பிரச்சனைக்கு முடிவு கட்டணும்னு நினைத்தவளுக்கு அனைத்தும் தலைகீழாக நடந்து முடிந்தது.
கீதாவிடம் நடந்த உண்மை சொன்ன நிம்மதியில் பரத் ஊருக்கு கிளம்ப தயாரானவனுக்கு இன்பராஜாவை மருத்துவமனையில் சேர்த்து இருப்பதாக தகவல் வர, அதிர்ச்சி அடைந்து அடித்துப்பிடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு வந்தவன்,
வெளியே கணேஷ் இரண்டு ரவுடிகளிடம் பேசிக்கொண்டு இருப்பதை பார்த்து கண்ணை சுருக்கிக் கொண்டு “இவரு இங்கே என்ன பண்றாரு. ஏதோ சரியில்லாத மாதிரி இருக்கு. கீதாவுக்கு ஏதாவது பிரச்சனை வர போகுதா” என்று நினைத்து மெதுவாக கணேஷின் கண்ணில் படாமல் அருகில் சென்று அவர்கள் பேசியதை கேட்டான்.
“இங்கே பாருங்கடா, என் மகள் வாழ்க்கையையும் என் கனவையும் அழித்தவள் இவள் தான்” என்று ஒரு புகைப்படத்தை காட்ட, மறைந்து இருந்த பரத்துக்கும் அதில் கீதாவின் முகம் தெளிவாக தெரிந்தது. அதை பார்த்த பரத்திற்க்கு பதற்றம் வர இன்னும் உண்ணிப்பாக அவர்கள் பேசியதை கேட்டான்.
“இந்த பொண்ணு இப்ப அடிப்பட்டு ஐ.சி.யூ ல இருக்கா. நாளைக்குக்குள்ள இவளுக்கு நினைவு வரலனா கோமாவுக்கு போயிடுவா. ஒரு வேலை நினைவு வந்தாலும் இவளுக்கு பழைய நினைவு எதுவும் இருக்காது. அவள் பேரு கூட ஞாபகம் இருக்காது. அதனால நீங்க என்ன பண்றிங்கன்னா இன்னிக்கு நைட் இவள இங்க இருந்து தூக்கிடுங்க,
ஒரு வேலை இவள் நாளைக்கு கண்ணை திறந்தா! ஆந்திராவோ இல்லை ஹைதரபாத் கூட்டிட்டு போய் வித்துடுங்க. அந்த பணத்தை நீங்களே வச்சிக்கோங்க” என்று பழி வாங்கும் உணர்ச்சியில் சொன்னார்.
அதில் ஒருவனோ “அது சரி சார், நீங்க சொல்றது நல்லா தான் இருக்கு. ஆனா நாளைக்கு இந்த பொண்ணு கண்ணை திறக்காலனா என்ன பண்றது” என்று கேட்டான்.
கணேஷ் சிரித்துக்கொண்டே “இந்த ஜென்மத்தில் இனி இவள் கண்ணே திறக்காத அளவுக்கு பண்ணிடுங்க” என சொல்ல அவர்கள் புரியாமல் முழிக்க, “கொலை பண்ணிடுங்கடா” என்று அவர்கள் கையில் கீதாவின் போட்டோவையும் இரண்டு லட்சம் பணத்தையும் கொடுத்துவிட்டு, “அப்புறம் ஒரு முக்கியாமான விசயம் கீதா இந்த ஹாஸ்பிட்டல இருந்ததுக்கு ஒரு சின்ன அடையாளம் கூட இருக்க கூடாது புரியுதா” என்று எச்சரிக்கை விட்டு சென்றார். அவர் சென்றதும் இவர்களும் நகர்ந்து போனார்கள்.
பரத்துக்கு ஸப்தநாடியும் அடங்கியது. அவன் தன்நிலை வரவ் கிட்டதட்ட சில நேரம் ஆனது.
‘இவர்கள் என்ன பேசுகிறார்கள், ராஜாவுக்கு தான் கத்திகுத்துப்பட்டு ஹாஸ்பிட்டல இருக்கானு என் நண்பன் ஒருத்தன் சொன்னான். ஆனா இந்த ஆளு கீதா ஐ.சி.யூ ல இருக்கா. இன்னும் என்ன என்னவோ சொல்லிட்டு இருக்காரு. நான் யாருக்காக என் நண்பன் என்று பாராமல் அவன் முதுகில் குத்தி துரோகம் செய்தேனோ அவளுக்கு மீண்டும் இன்று ஆபத்து அதுவும் எப்படி எல்லாம் பேசிட்டு போறான். அவனுக்கும் ஒரு பொண்ணு இருக்கு தானே, அப்படி இருக்கும் போது எப்படி பணத்துக்காக இந்த ஆளு இப்படி யோசிக்க முடியுது. இப்போ என்ன செய்றது கீதாவுக்கு என்னாச்சு’ என்று யோசனை செய்துக் கொண்டு உள்ளே போய் விசாரித்தான். அங்கே இருந்தவர்கள் கீதாவுக்கு என்ன நேர்ந்தது என்று சொன்னார்கள்.
பரத்துக்கு என்ன செய்வது ஏது செய்வது என்று புரியாமல் வெளியே வர மீண்டும் அந்த ரவுடிகள் ஒருவன் டாக்டர் உடையில் இன்னொருவன் கம்போன்டர் உடையில் சென்றதை பார்த்தான். பரத்தும் அவர்களுக்கு சந்தேகம் வராதப்படி பின் தொடர்ந்தான்.
அங்கே ராஜாவின் அறையில் அனைவரும் இருக்க ரவுடிகளுக்கு அது வசதியாகி போனது.
கடகடவென கீதாவை தூக்கி ஸ்டெச்சரில் போட்டு வெள்ளை துணியால் முகத்தை மூடிவிட்டு இழுத்து சென்றார்கள்.
அவர்களை பார்ப்பவர்களுக்கு இறந்து போனா ஒருவரை அழைத்துக் கொண்டு போவது போல் தான் தோன்றும்.
அந்த மாதிரி கீதாவை அழைத்துக்கொண்டு போனார்கள்.
பரத்திற்க்கு பதற்றமாக இருந்தது ‘எப்படியாவது கீதாவை காப்பாற்ற வேண்டும்’ என நினைத்துக் கொண்டு எவ்வாறு இவர்களிடம் இருந்து காப்பாற்றுவது என்று யோசனை செய்துக் கொண்டு அவர்கள் பின்னாலே சென்றான்.
வெளியே வந்ததும் ஆம்புலன்ஸில் கீதாவை ஏற்றிவிட்டு, கம்போன்டராக இருந்தவன் மட்டும் வண்டியை எடுத்துக்கொண்டு சென்றான்.
டாக்டர் உடையில் இருந்தவன் மீண்டும் உள்ளே செல்ல, பரத் தன் காரில் ஆம்புலன்ஸை பின் தொடர்ந்தான்.
ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் ஆம்புலன்ஸை நிறுத்தி தன் கூட்டாளிக்காக காத்திருந்தான் அந்த ரவுடி.
அந்த நேரம் பரத்தின் மூளை வேகமாக செயல்பட ஆரம்பித்தது. தன் காரை ஆம்புலன்ஸ் பின்பக்கமாக நிறுத்தினான்.
அந்த கம்போன்டருக்கு கார் சத்தம் கேட்டு கீழே இறங்கி வர, அவனை ஒரு நிமிடம் கூட யோசிக்க விடாமல் பரத் முதலில் ரவுடியின் மூக்கில் குத்திவிட்டு பிறகு வயிற்றில் குத்தினான். பின் ரவுடியின் ஒரு காலை மடக்கி உடைக்க, அதில் வலி தாங்க முடியாமல் ரவுடி கீழே விழுந்த அந்த நேரம் மின்னல் வேகத்தில் கீதாவை அவன் காரில் ஏற்றிக் கொண்டு பறந்தான் பரத்.
ரவடி செய்வது அறியாமல் கார் போன திசையை பார்த்தவன், கூட்டாளிக்கு அழைப்பு கொடுக்க அவன் எடுக்கவில்லை.
அவன் கூட்டாளி மருத்துவமனையில் சிசிடிவி அறையில் இருந்தவனை பொய் சொல்லி வெளியே அனுப்பிவிட்டு கீதா சம்மந்தப்பட்ட அனைத்து வீடியோவையும் அழித்தான்.
அவனும் வந்த சுவடே இல்லாமல் தன் கூட்டாளி இருக்கும் இடத்துக்கு செல்ல அங்கே நடந்தத்தை அவன் கூறினான்.
யார்..ஏன்.. என்று எதுவும் தெரியாமல் குழம்பியவர்கள், அதற்கு மேல் எதுவும் செய்ய முடியாது என்று சென்றுவிட்டனர்.
பரத் கீதாவை அழைத்துக்கொண்டு கொடைக்கானலுக்கு சென்றான்.
கொடைக்கானலுக்கு அழைத்து வந்து தனக்கு மிகவும் நெருக்கமான டாக்டர் நண்பனை அழைத்து கீதாவிற்கு தேவையானதை செய்தான்.
அதன் பலனாக மறுநாளே அவள் கண்விழிக்க தான் யார் என்று எதுவும் புரியாமல் கத்தி ஆர்ப்பாட்டமே செய்துவிட்டாள். அவளை சமாதானம் செய்வதற்குள் பரத்திற்கு போதும் போதும் என்று ஆகிவிட்டது.
தன் பெயர் என்னவென்று கேட்டதுக்கு, கீதா என்று சொல்ல விருப்பம் இல்லாமல் அம்மு என்று சொன்னான் பரத்.
ஆனால் கீதாவிற்கு பரத்தின் மேல் துளி கூட நம்பிக்கை இல்லாமல் போனது. அதை புரிந்துக்கொண்ட பரத், அந்த ஊரில் நம்பிக்கையான ஒரு ஆள் தேவை, கீதாவுக்கு இருக்கும் ஆபத்தை நினைத்து கவலையாக அவன் நண்பன் ஒருவனிடம் சொல்ல.. அவருக்கு தெரிந்தவர் மூலமாக மணி அறிமுகம் ஆனான்.
அவர்களை பார்த்ததும் அவர்களிடம் கீதா ஒட்டிக் கொண்டதை பார்த்து நிம்மதி அடைந்தான். மணியையும் அவர் மனைவியையும் தன் வீட்டில் தங்கிக் கொள்ளுமாறும் தான் அவ்வப்பொழுது வேலை விசயமாக வெளியூர் போகும் சூழ்நிலை வரும் என்று அங்கேயே தங்க வைத்தான். இப்படியே ஆறுமாதம் கடந்தது.
இன்று…
“ஐயா அம்மா என்னவோ மாதிரி இருக்காங்க.” என்று கூற,
இந்த பக்கம் இருந்த பரத்தோ “ஏன் என்னாச்சு?” என்று கேட்டான்.
“என்னனு கேட்டேன் எதுவும் சொல்லல” என்று பதில் அளித்தான் மணி.
பரத் சிறிது நேரம் அமைதியாக இருந்தவன் பின் “சரி நான் நேருல வந்து பேசிக்கிறேன்.” என்று கூறினான்.
மணி பணிவுடன் “சரிங்க ஐயா, எப்போ வருவீங்க?” என்று கேட்க, அதன் பதிலையும் கேட்டவன்
“இன்னும் இரண்டு, மூன்று நாள் ஆகும். அதுவரைக்கும் அம்முவை எந்த கேள்வியும் கேட்காதீங்க.” என்றான்.
“ம்ம் சரிங்க ஐயா வச்சிடுறேன்” என்று மணி அழைப்பை துண்டிட்டான்.
பரத்தோ ‘கீதாவை அழைத்துக்கொண்டு வந்து ஆறுமாதம் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் ஏன் ராஜா கீதாவை தேடி வரவில்லை. கீதா கேட்கிற கேள்விக்கு எத்தனை நாள் தான் பொய் சொல்வது. இது இப்படியே தெடர்ந்தால் என்னாவது’ என்று நினைத்தவன், ‘இந்த ஆட்டத்திற்கு முடிவுக்கட்ட வேண்டும், என்ன நடந்தாலும் பரவாயில்லை பார்த்துக்கொள்ளலாம்’ என மனதில் யோசித்து தன் நண்பனை பார்க்க பரத் சென்ற நேரம் இன்பராஜா தன் காதல் தேவதையை தேடி அங்கு வந்தான்.
பரத்தின் நல்ல நேரமா! இல்லை இன்பாவின் நல்ல நேரமா! தெரியவில்லை. இன்னும் ஒருவரை ஒருவர் சந்திக்காமல் இருக்கிறார்கள். அப்படி சந்தித்தால் என்னவாகும்.
அடுத்த அத்தியாயத்தில் காணலாம்.
