காதல்- 37

காதல்-37 
 

 

இரவு உணவை முடித்து தன் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நகத்தை கடித்துக் கொண்டு இன்பாவை திட்டித் தீர்த்தாள்
கீதா.

“அவனுக்கு எவ்வளவு தைரியம் இருக்கும் இந்த அம்முவையே கட்டிப்பிடிச்சு என்ன என்னவோ பேசுறான் பொறுக்கி ராஸ்கல். இதுவரைக்கும் எந்த பொண்ணையும் பார்த்தது இல்லையா? முன்ன பின்ன தெரியாத பொண்ணு கிட்ட இப்படி தான் நடந்துப்பாங்களா? ச்சா..விடியட்டும் நாளைக்கு திரும்பவும் கோவிலுக்கு போவேன். அப்ப மட்டும் என் கண்ணுல பட்டான் அவன் காலி”. என்று தனக்கு தானே கீதா பேசிக்கொண்டு இருந்த நேரம் அவளது மனசாட்சி வெளியே வந்து அவள் கண் முன் நின்றது.

“ஏய்..யாரு நீ என்ன மாதிரி இருக்க?”

அவளது மனசாட்சி  சிரித்துவிட்டு, “நான் உன் மனசாட்சி” என்ற கூறிய மனசாட்சியிடம்,

“ஓ” மட்டும் என்றாள்.

“ஓ வா” என்று மனசாட்சி கேள்வியாக நோக்க,

நிஜமோ “ஆமா, வேற என்ன சொல்ல சொல்ற?” என்று கேட்டது.

“ஏய் நான் உன் மனசாட்சி! ஏன் வந்து இருக்கேனு கேட்க மாட்டியா?”

நிஜமோ சலித்துக் கொண்டு “எப்படி இருந்தாலும் நீ வந்த விசயத்த சொல்ல தானே போற, அப்புறம் என்ன சொல்லிட்டு போ. இதை வேற நான் கேட்கணுமா” என்று கீதா சொல்ல,

“அடிப்பாவி! என்னடி வேண்டா வெறுப்பா சொல்ற. யாருமே அவங்க மனசாட்சி கிட்ட இப்படி பேசி நான் பார்த்தது இல்லை.” என்று கூற,

“சரி..சரி.. என்ன விசயம் சொல்லிட்டு போ, எனக்கு தூக்கம் வருது.”

“என்னது தூக்கம் வருதா? சரி நீ போய் தூங்கு நான் மறுபடியும் உன் மனசுக்குள்ள போறேன்”

“ம்ம் சரி போ குட்நைட்” என்று கூலாக சொன்னவளை முறைத்துக்கொண்டே,

“ம்ம் போறேன்டி போறேன். போனா போகுது, நீ என்னைய போட்டு குழப்பிக்கிட்டு இருக்கன்னு நேரில் வந்தா? என்கிட்டயே திமிரா பேசுறியா. காலையில நீ கோவில்ல பார்த்த ஆளை நினைச்சு கோபமா இருக்க. ஏதாவது சொல்லி உன்னை சமாதானம் செய்யலாம்னு நினைச்சு வந்தேன் பாரு என்னை சொல்லணும்” என்று வேண்டுமென்றே நிஜத்தை உசுப்பிவிட்டது மனசாட்சி.

அதை கேட்டவள் சற்று கடுப்புடன் “காலையில பார்த்த ஆளை பத்தி என்ன சொல்ல போற? அவனை நினைச்சு பார்த்தாவே கோபம் கோபமா வருது” என்று கூறினாள்.

மனசாட்சியோ சிரித்துவிட்டு “கோபம் மட்டும் தான் வருதா? ஏன் நம்பிக்கை வரல?. இத்தனை நாளா இங்க இருக்குறவங்க மீது இல்லாத நம்பிக்கை! அவனை பார்த்ததும் உனக்கு வரல. அவனுடைய அந்த நெருக்கம் உனக்குள்ள தடுமாற்றத்தை தரல, அவன் உன்னை அணைத்த அந்த அணைப்பு உனக்கு பாதுகாப்பு உணர்வு ஏற்படுத்தல, அவன் கண்ணை பார்க்கும் போது உன் மேல அவன் வைத்து இருக்கும் அளவு கடந்த காதல் உனக்கு தெரியல, அவன் உன்கிட்ட பேசும் போது அவன் பேசுன ஒரு ஒரு வார்த்தையும் பொய் இல்லன்னு உனக்கு புரியல” என மனசாட்சி சொல்லிக்கொண்டே போக,

“கொஞ்சம் நிறுத்துறியா” கோபமாக கீதா கத்தித்தியவள், “ஆமா நீ சொன்ன எல்லா உணர்வும் எனக்குள்ள வந்துச்சு தான். ஆனா..ஆனா.. எப்படி பார்த்த உடனே அவனை நம்ப சொல்ற? இல்லை அவனுக்கு என்னை தெரிஞ்சு இருந்தா, அப்புறம் எப்படி காலையில் அப்படி நடந்துக்க முடியும். அவன் கண்ணு முழுக்க காதலும் ஒரு விதமான தவிப்பும் தெரிஞ்சுது தான். அவனுடைய அந்த நெருக்கம் அணைப்பு எல்லாம் எனக்கு வேண்டும் தோன்றுது தான். யாரிடமும் கிடைக்காத பாதுகாப்பு அவன் அருகில் இருந்த அந்த ஐந்து நிமிடம் எனக்கு உணர்த்துச்சு. அப்படியே அவன் கூடவே போகணும்னு தான் நினைப்பு வந்தது. ஆனா அவனை பத்தி எதுவும் தெரியாமல் நான் எப்படி நம்ப முடியும்? அவனை விடு என்னை பற்றி எனக்கே தெரியல. அப்புறம் எப்படி? சொல்லு இப்ப சொல்ல போறியா இல்லையா?” என்று திரும்பி பார்க்க, தான் வந்த வேலை முடிந்தது என்று எண்ணி மறைந்து போனது அவளுடைய மனசாட்சி.

“நீயும் போயிட்டியா. என்னை இன்னும் குழப்பி விட்டு போயிட்ட. ச்சா” என்று நிஜம் எது என்று தெரியாமல் தவித்தவள் அப்படியே கட்டிலில் சாய்ந்தாள். அப்படி இன்பராஜாவின் நினைப்பில் இருந்தவள் மெது மெதுவாக கண்ணயர்ந்தாள்.

அங்கே “ஏன்டா என்னை கொலை பண்றதுக்காகவே இங்க கூட்டிட்டு வந்து இருக்கிங்களாடா?” என்றான் ராம் கடுப்பில்.

“டேய் ராம் கத்தாத. அமைதியா இரு. இப்ப எதுக்கு நீ இப்படி கத்திக்கிட்டு இருக்க?” என்று சூர்யா கேட்க, அருண் நடந்து வர இன்பா இரண்டு அடி இவர்களுக்கு முன்னால் சென்றான்.

ராமோ “ஏன்டா சொல்ல மாட்ட இந்த நடுராத்திரில ஒரு மணிக்கு, இந்த குளிர்ல இப்படி டார்ச்சர் பண்றிங்களேடா.” என்று நடுங்கிக் கொண்டே புலம்பினான்.

சூரியாவோ “டேய் அதான் ஜர்க்கின் போட்டு இருக்கல, அப்புறம் என்ன? மூடிக்கிட்டு வா” என்றான்.

“ஏது மூடிக்கிட்டு வரவா. அடேய்..அடேய் உங்களுக்கு மனசாட்சியே இல்லையாடா? சாதாரண குளிர்கூட எனக்கு ஒத்துக்காதுடா. அப்படி இருக்கிறப்ப, இது கொடைகானல் உடம்பு எல்லாம் வெறச்சிக்கிது மூடிக்கிட்டு வர முடியும். ஆனா முட்டிக்கிட்டு வரத என்னடா பண்றது.” ராம் நடுங்கிக் கொண்டும் நடந்துக் கொண்டும் தன் அவஸ்த்தையை கூறினான்.

“ஐய்ய ச்சீ” என அருண் சொல்ல, அருணிடம் எகிறினான் ராம்.

“என்ன ஐய்ய?. ஏன் உனக்கெல்லாம் வராதா? என்னவோ எனக்கு மட்டும் வர மாதிரி பார்க்கிற” என்றான் சிடுசிடுக்க.

சூர்யா ராம் தலையில் அடித்து விட்டு போயிட்டு வருமாறு சொன்னான்.

“போயிட்டு வரவா? ஏன்டா ஏதோ சினிமாவுக்கு கூட்டிட்டு வந்து இருக்கிற மாதிரி சொல்றிங்க போன்னு. போன்னா எங்க போறது இங்கயேவா”

ராமின் அலப்பறையை கேட்டுக் கொண்டே சென்ற ராஜாவோ “டேய் லூசு பயலே இப்ப நீ ஒழுங்கா வரல அப்புறம் இங்கயே விட்டுட்டு நாங்க போயிடுவோம்” என்று சொல்லிக் கொண்டே நடந்தான்.

ராமோ “ஆமா இவரு காதலியா பார்க்க இவரு மட்டும் போனா போதாதா?. என்னவோ இவன் போனதும் ராஜாவை பார்த்து  இளிச்சிக்கிட்டே வந்து கட்டிப்பிடிக்க போகுது பாரு. அதுக்கே பழசு மறந்து லூசு மாதிரி இருக்கு. இதுல இவன் என்னை லூசுன்னு சொல்றான்” என்று மனதில் பேசுவதாய் நினைத்து வாய் விட்டு பேசிக்கொண்டு வர, அருண் காதில் ராம் பேசியது அனைத்தும் தெளிவாக விழுந்தது.

அருண் “ம்கூம்” என்று கணைக்க,

அருணை திரும்பி பார்த்த ராம் “என்ன பே” என்று கூறினான்.

அதற்கு அருண் “நீங்க மைண்ட் வாய்ஸ்ன்னு நினைச்சு என் காதில் விழுற மாதிரி பேசிட்டிங்க” என்று சொன்னதை கேட்ட ராம் “ஈஈ” என்று இளித்துவிட்டு “அது சும்மா லுல்லுலாய்க்கு” என்று சமாளிதான்.

அருணும் சிரித்துவிட்டு “போனா போகாட்டும்னு விடுறேன்” என்றான்.

சூர்யாவும் இன்பாவும் முன்னால் சென்றதால் அவர்கள் காதில் சரியாக விழவில்லை. ஏதோ புலம்பல் மட்டும் விழுந்தது.

“அங்க என்னடா புலம்பிக்கிட்டு வர” என்று இன்பா கேட்க..

“ஒன்னும் இல்லடா சும்மா பேசிக்கிட்டு வரோம்” என்று ராம் சொல்லவும் கீதா தங்கி இருந்த வீடு வரவும் சரியாக இருந்தது.

சூர்யா ராஜாவிடம் திரும்பி “நம்ம வந்துட்டோம். இப்ப என்ன பண்றது?” என கேட்க,  இன்பா சுற்றிமுற்றி பார்த்துவிட்டு முகத்தில் மலர்ச்சி தெரிய அவனையே பார்த்துக் கொண்டு இருந்த சூர்யா அவன் கண் பார்க்கும் திசையை பார்த்து  சிரித்தான்.

“என்னங்கடா இரண்டு பேரும் சிரிக்கிறிங்க?” என ராம் கேட்க,

“நீ கொஞ்ச நேரம் அமைதியா இருந்து நடக்கிறத பாரு” என்றான் இன்பராஜா.

“சரிடா மச்சி நீ ரெடியா” என்று சூர்யா கேட்க,

ராம் முழித்துக் கொண்டே “என்ன ரெடியா?” என்று கேட்டான். 

“டேய் உன்னை தான் அமைதியா இருக்க சொன்னேன்ல” என்றதும் ராம் கப்சிப் என்று வாயை மூடிக் கொண்டு நடப்பதை வேடிக்கை பார்த்தான்.

இன்பா கம்பத்தை பிடித்துக் கொண்டு மெதுவாக மேலே ஏற, ராம் கத்த, சூர்யா அவன் வாயை பொத்த, அருணோ “சார் நீங்க ஏறுங்க சார் கம்பமும் நீங்களும் விழாமல் நான் பிடிச்சிக்கிறேன்” என்று கம்பத்தை பிடித்தான்.

இப்பொழுது சூர்யா மட்டும் இல்லை மேலே பாதி தூரத்தில் கம்பை பிடித்து ஏறின ராஜாவும் கீழே ராமும் மூன்று பேரும் அவர் அவர்கள் தலையில் அடித்துக் கொண்டு அருணை முறைத்தார்கள்.

“தலையெழுத்து எனக்குனு வந்து வாய்ச்சு இருக்கான்னுங்க” என இன்பா சொல்ல, சூர்யா அவனை மேலே ஏறும் படி சொன்னான்.

முதல் முதலாய் தன் காதலை பற்றி தெரிந்துக்கொள்ள இதே போல் தான் கம்பத்தை பிடித்து ஏறி போனான். அதே மாதிரி இன்றும் செய்ய அவனுக்கு மட்டும் இல்லை. சூர்யாவுக்கும் நினைத்து சிரிப்பு தான் வந்தது.

அன்று கீழே விழாமல் கம்பத்தை பிடிப்பதாக சூரியா சொல்ல, அதே போல் இன்று அருண் சொன்னதை கேட்டு சூர்யாவுக்கு சிரிப்பு தான் அதிகமானது. இன்பராஜா மேலே ஏறி உள்ளே குதித்ததும்,

அருண் சூர்யாவிடம் திரும்பி, “ஏன் இப்போ இப்படி சிரிக்கிறிங்க சூர்யா” என்று கேட்டான்.

சூர்யாவோ அன்று நடந்ததை கூற, அருணும் சிரித்துக்கொண்டு “அன்னிக்கு நீங்க சும்மா விளையாட்டுக்கு சொன்னிங்க. ஆனால் நான் இன்று உண்மையை சொன்னேன்” என்று சூர்யாவின் கையை பிடித்துக்கொண்டு அந்த கம்பத்தை காட்டினான்.

அங்கே கம்பம் விழும் நிலைமையில் தான் இருந்தது. இருட்டில் இதை கவனிக்க தவறினான் சூர்யா. ஆனால் அருண் கவனித்த அடுத்த நொடி கம்பத்தை பிடித்துக்கொண்டான். அருணின் செயலை நினைத்து சூர்யாவுக்கும் ராமுக்கும் மகிழ்ச்சி தந்தாலும் அவசரப்பட்டு உன்னை தப்ப நினைச்சிட்டோம்.. என்று சூர்யா மன்னிப்பு கேட்க, ராம் அந்த பக்கம் திரும்பிக் கொண்டான்.

ஏதோ ஞாபகம் வந்தவனாய் சூர்யாவிடம் வந்து ராம் “அப்போ ராஜா நான் காலையில சொன்ன ஐடியாவை தான் இப்பொழுது ஒர்க் அவுட் பண்ண போய் இருக்கானா? என கேட்க,

சூர்யாவும் அருணும் “காலையில் வாங்குன அடிபத்தலையா இன்னும் வேண்டுமா?” என்று ஒரே போல் இருவரும் கேட்க, ராம் வாய் மேலே கை வைத்துக்கொண்டு அமைதியாக இருந்தான். காலையில் அவன் சொன்ன ஐடியாவை நினைத்துப் பார்த்து.

——————————————————–

கீதாவை பார்த்ததும் இன்பராஜா சீரியஸாக என்ன பண்ணலாம் என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போது ராம் இடையில் புகுந்து,

“மச்சி என் கிட்ட செம ஐடியா ஒன்னு இருக்குடா” என ராம் சொல்ல, இன்பா ஆவலுடன் “என்ன ஐடியாடா” என்று கேட்க, மற்ற இருவரும் அவன் சொல்ல  போகும் விசயத்தை உன்னிப்பாக கேட்க ஆரம்பித்தனர்.

“அது வந்து மச்சி, கீதா இப்ப உன் மனைவி. ஆனா அது உனக்கு தெரியும் அவளுக்கு இப்போ தெரியாதே. நீ என்ன தான் அவளை முன்பு லவ் பண்ண மாதிரி இப்ப அவளுக்கு ஞாபகப்படுத்த அதே மாதிரி பண்ணாலும் அவளுக்கு சுத்தமா ஞாபகம் வராது. அதான் காலையில அடிச்ச அடியிலே தெரிஞ்சிடுச்சு” என்றவனை இன்பா முறைக்க ராம் அதை கவனிக்காமல் தொடர்ந்தான்.

“நீ அவள் பின்னாடியே போய் காதல் அது.. இது..எது.. சொன்னாலும் எல்லாம் டைம் வேஸ்ட் தான். எப்போ அவளுக்கு பழைய ஞாபகம் வருவது, நம்ம எப்போ ஊருக்கு போறது உனக்காவது கல்யாணம் ஆகிடுச்சு. ஆனா எங்களுக்கு? அதானால நான் என்ன சொல்ல வரேன்னா பேசமல் அவ கூட பர்ஸ்ட் நைட் முடிச்சிடுட. அதுக்கு அப்புறம் அவளுக்கு ஞாபகம் வந்த என்ன? வரலனா என்ன?. எப்படி இருந்தாலும் உன் கூட தான்  இருந்தாகணும்னு” என்று சொல்லி முடித்துவிட்டு திரும்பியவன் “எப்படி என் ஐடியா” என்று கேட்டு அவர்களை பார்க்க மூவரும் கொலைவெறியுடன் இருந்தார்கள்.

‘எதுக்கு இவனுங்க இப்படி முறைக்கிறானுங்க’ என மனதில் நினைத்தவன் “ஏன்டா ஐடியா நல்லா இல்லையா? சொல்லுங்கடா என் கைவசம் நிறைய ஐடியா இருக்கு” என ராம் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே மூன்று பேரும் ராமை அடி அடியென அடிச்சு துவைத்து எடுத்துவிட்டார்கள்.

வாங்கிய அடியில் வலியில் இருந்தவனின் ஷார்ட் காலரை பிடித்த ராஜா “ஏன்டா ஐடியாவ சொல்ற, ஐடியா. இனிமேல் ஐடியா கிடியானு ஏதாவது சொன்ன அப்புறம் பேச வாய் இருக்காது. அவளை என் காதலால மாத்தணும்டா. நீ சொல்ற மாதிரி இல்லை. என் கீத்துக்கு ஒரு ஒரு விசயமும் காதலால ஞாபகம் செய்யணும். இதுக்கு அப்புறம் வாயை திறப்பியா?” என்று கையை முறுக்க ராம் வாய் மேலே கையை வைத்துக் கொண்டு அமைதியாக நின்றான். “ம்ம்ம்.. அந்த பயம்” என்று கூறினான் ராஜா.

—————————————————–

நடந்ததை நினைத்து பார்த்த ராம் வாயில் கையை வைத்துக் கொண்டு சிரிக்க, சூர்யாவோ “இப்ப எதுக்குடா சிரிக்கிற?” என்று கேட்டான்.

ராமோ “இல்லை மச்சான் எல்லாரும் லவ் பண்றாவங்களை தான் இப்படி திருட்டு தனமா சந்திக்க போவாங்க. ஆனா இங்க பொண்டாடியையே திருட்டு தனமா போய் பார்க்கிறான். அதுவும் அவன் தான் அவளோட புருஷன்னு தெரியாமல் இருக்கும் போது போறானே. கீதா கத்தி ஊர கூட்டிட்டா? இதுக்கு நம்ம காவல் வேற” என்று சொல்லிவிட்டு சிரிக்க சூர்யாவும் அருணும் முறைப்பதை பார்த்த ராம் அமைதியாக இருந்தான்.

உள்ளே குதித்து ராஜாவோ தன்னவளை பார்த்து மெய்மறந்து நின்றான். குழந்தையை போல் தூங்கும் அழகை ரசித்து அவளின் அருகில் சென்று அமர்ந்து தன்னவளின் கையை எடுத்து தன் கையோடு கைக்கோரத்து தலையை வருடிவிட்டு,

“கீத்துமா இது உண்மை தானா? கற்பனை இல்லையே? நீ…நீ..திரும்பவும் எனக்கு கிடைச்சுட்ட. எங்கே உன்னை இழந்துடுவோமோனு நினைச்சு நான் அழாத நாள் இல்லைடி. நீ எங்க இருக்க? என்ன பண்ற? எப்படி இருக்கனு தெரியாமல் தினம் தினம் தவிச்ச தவிப்பை வார்த்தையால சொல்ல முடியாதுடி” என்று இத்தனை நாள் அவன் பட்ட துயரத்தை மெல்ல எடுத்துச் சொல்ல, அவளிடம் சிறிது அசைவு தெரியவும் சட்டென்று மறைந்துக் கொண்டான் இன்பராஜா.

அவள் திரும்பி படுத்து விட்டதை உணர்ந்து தன்னவளுடன், சிறிது நேரம் இருந்து விட்டு அவள் காதில் காற்றுக்கு கூட கேட்காத படி “நாளைக்கு உனக்காக கோவில்ல வெயிட் பண்ணிட்டு இருப்பேன். நீ வர சரியா”. என்று சொல்லிவிட்டு தன்னவள் நெற்றியில் நீண்ட மாதம் கழித்து அழுத்தமாக இதழ் பதித்தான்.

அவள் அறையில் இருந்து வெளியே வந்து கீழே குதித்தவன் “நாளைக்கு கீதா கோவிலுக்கு வருவா. நம்ம போகலாம் வாங்க” என்று நடக்க போனவனை நிறுத்தி “கீதா கோவிலுக்கு வர ஓகே சொல்லிட்டாலா?” என்று கேட்டான் ராம்.

“இல்லடா அவ தூங்கிட்டு இருந்தா. அவ காதில் சொல்லிட்டு வந்து இருக்கேன்”

“என்னது! தூங்கிட்டு இருக்காலா?” என்று அதிர்ச்சியுடன் கேட்டவன் “அப்போ இவ்வளவு நேரம் நீ அங்க என்ன பண்ணிட்டு இருந்தா?” என்று ராம் கேட்க, இன்பாவும் சூர்யாவும் அவன் தலையில் கொட்டி இழுத்து சென்றார்கள்.

மறுநாள் காலை பொழுதும் விடிய, கோவிலில் நான்கு பேரும் கீதாவுக்காக காத்திருந்தனர். அவர்களின் ஏதிர்ப்பார்ப்பை வீணாக்காமல் வநது சேர்ந்தாள் கீதா.

காரை விட்டு கோவிலை நோக்கி, நடந்தவளின் மீது சட்டென்று பூக்களின் இதழ்கள் விழுவதை ஒன்றும் புரியாமல் முழித்து பார்த்தாள்.

அங்கே..

ராம்.. ட்ரம்ஸ் அடிக்க

அருண் பீப்பி ஊத,

சூர்யா கிட்டாரை வாசிக்க,

இன்பராஜா ரோஜா பூவை தன்னவளின் கையில் கொடுத்து(தினித்து) விட்டு மைக்கை பிடித்துக்கொண்டு நான்கு பேரும் நடனம் ஆட இன்பா பாட தொடங்கினான்.

ஒருத்தி மேலே மீண்டும் மையல் ஆனேன் 
தோழியே நீ தூது போடி 
ஒருத்தி மேலே மீண்டும் காதல் ஆனேன் 
தோழியே நீ தூது போடி 
ஹே… ஆண்டாண்டுகள் கடந்தும் மாறாமலே 
வாசம் ஒன்றை கொண்டாளடி 
கண் சொல்வதை தன் வாயில் கூறாமலே 
என்னை கொன்று சென்றாளடி 
ஒருத்தி மேலே மீண்டும் மையல் ஆனேன் 
தோழியே நீ தூது போடி 
ஒருத்தி மேலே மீண்டும் காதல் ஆனேன் 
தோழியே நீ தூது போடி.

என்ற பாடலை பாடியவனின்
கண்ணத்தில் ஓங்கி ஒரு அறைவிட்டவள், அழுதுக் கொண்டே அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள் கீதா.

ஆனால் மீண்டும் இன்பா கண்ணத்தில் கை வைத்துக் கொண்டே

ஒருத்தி மேலே மீண்டும் காதல் ஆனேன் 
தூது போக யாரும் வேண்டாம். வேண்டாம் 
வெடிக்கும் எந்தன் நெஞ்சின் ஆசை சொல்ல 
கண்கள் போதும் வார்த்தை வேண்டாம்.. வேண்டாம் 
ஏ..ஆண்டாண்டுகள் கடந்தும் மாறாமலே 
காதல் ஒன்றை கொண்டேனடி 
கண் சொல்வதை உன் வாயில் நீ கூறினால் 
நானும் கொஞ்சம் வாழ்வேனடி..

இனி அடுத்த அத்தியாயத்தில் காணலாம். 
 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page