“என்னடா கிளம்பிட்டீங்களா?” என்றவாறு நுழைந்த ஆஷிக்கை,
ஆதர்ஷ், “வாடா புது மாப்பிள்ளை, எப்படி இருக்க? அப்புறம் மச்சான், நேத்து என்ன ம்ம்… ம்ம்ம்ம்… ம்ம்ம்ம்… ம்ம்ஆ…” என்று ராகம் போட, ரோஹித் ஆஷிக்கைப் பார்த்து புன்னகைத்தவாறு அவர்களோடு வந்து அமர்ந்தான்.
ஆதர்ஷ், ஆஷிக்கிடம், “என்னடா பதில் சொல்ல மாட்டிக்கிற?”
“கேள்வி கேட்டா தானே பதில் சொல்ல முடியும்?” என்று நக்கலாகக் கேட்ட ஆஷிக்கைப் பார்த்து முறைத்த ஆதர்ஷ்,
“நான் என்ன கேட்க வரேன்னு உனக்குத் தெரியலை?”
“இல்லைடா…”
“அதான்டா, நைட் ம்ம்… எல்லாம் ஓகே தானே?” என்று கண்ணடித்தவன் மேலும் தொடர்ந்து, “ம்ம்ம் சொல்லுடா, என்னடா நடந்துச்சு? நீ சொல்லி தான்டா ஆகணும், டென்த் ஸ்டாண்டர்ட் படிக்கும் பொழுதே கெமிஸ்ட்ரி புக்ல அடிச்சுச் சத்தியம் பண்ணிருக்கடா.” என்ற ஆதர்ஷிடம்,
“அப்படியா?” என்று ரோஹித்தைப் பார்த்து கண்ணடிக்க,
“இந்தக் கல்யாணம் ஆன பசங்களே இப்படித் தான். போடா, நீ எதுவும் சொல்ல வேண்டாம்.” என்று சலித்துக்கொண்ட ஆதர்ஷைப் பார்த்து சிரித்த ஆஷிக்,
“ஒரு வழியா நடாஷாவும் நீயும் லவ் பண்ண ஆரம்பிச்சுட்டீங்க, அடுத்தது நம்ம ரோஹித் தான். மச்சான் நீ எப்போடா குட் நியூஸ் சொல்ல போற?” என்று ரோஹித்திடம் ஆஷிக் கேட்க, ரோஹித் ஆதர்ஷைப் பார்த்தான்.
அதுவரை அடக்கி வைத்திருந்த சிரிப்பை அடக்க முடியாது வாய்விட்டு சிரித்தபடி ஆதர்ஷ், “மச்சான் அவன்கிட்ட எதுவும் கேட்காத, அவன் கல்யாணம் ஆனாலும் பேச்சலரா தான் இருப்பான் உன்னை மாதிரி.” என்று ரோஹித்தோடு சேர்த்து ஆஷிக்கையும் ஆதர்ஷ் கேலி பேச, “டேய்!” என்றவாறு அவனை அடிக்க ஆஷிக் கை ஒங்க,
“டேய் அடிக்காதடா, சாரி… சாரி…” என்று ஆதர்ஷ் சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கிக்கொள்ள,
ஆஷிக், ரோஹித்திடம், “என்னடா அவன் அப்படிச் சொல்றான், நீ ரியாக்சனே இல்லாம இருக்க?” என்று கேட்டான்.
“டேய், அவனை ஏன் கேட்குற? என்ன கேட்கணுமா, என்னைக் கேளு.” என்ற ஆதர்ஷ் சிரித்துக்கொண்டே,
“டேய், இவனுக்கு லவ் எல்லாம் செட்டாகாது. வீட்ல பார்த்து முடிச்சு வச்சா தான் உண்டு.”
“என்னதான் ஆச்சு?”
“ம்ம்… உன் ரிசெப்ஷன் பார்ட்டி அன்னைக்கு புடிச்ச பொண்ணா பார்த்து நம்பர் குடுத்து உஷார் பண்ணுனு, இவனுக்கு நான் டார்கெட் குடுத்தா இவன் என்ன பண்ணினான்னு தெரியுமா?”
“என்னடா?”
“பொண்ணோட நம்பர் வாங்குடான்னு சொன்னா, கல்யாணம் ஆகி பொண்ணு இருக்கிற ஆன்ட்டி நம்பரை வாங்கிட்டு வந்திருக்கான்டா. அதுவும் எப்படி, வாட்ஸப்புல டிசைனர் சாரீஸ் சேல்ஸ் பண்றோம், உங்க நம்பர் குடுங்கன்னு வாங்கிட்டு வந்திருக்கான். ஒரு நாளாவது இத்தனை வருஷத்துல ஒழுங்கா ஒரு பொண்ணை லவ் பண்ணிருக்கானா? ஒன்னு ஆல்ரெடி லவ் பண்ற பொண்ண காட்டி புடிச்சுருக்குன்னு சொல்லுவான். இல்லைன்னா கல்யாணம் ஆகப் போற பொண்ண சொல்லுவான். சில நேரம் கல்யாணம் ஆன பொண்ணையே சொல்லுவான். இப்போ ஒருபடி மேல போய்க் கல்யாணம் முடிஞ்சி குழந்தை இருக்கிற பொண்ண சொல்லிருக்கான். அதனாலதான் இவன் ஆன்ட்டி ஹீரோவாவே இருக்கான்.” என்று மீண்டும் சிரிக்க,
கடுப்பான ரோஹித், “நான் என்னடா தெரிஞ்சேவா பண்றேன்? இந்த முறை சரியா தான் பண்ணினேன், அந்தப் பொண்ணு என்னை ரொம்ப இன்சல்ட் பண்ணிட்டா.” என்றதும்,
“ஆமா ஆமா… ஆஷிக் உனக்கு இந்த விஷயம் தெரியாதுல… நான் சொல்றேன், பொண்ணு தான் செலக்ட் பண்ண தெரியலை. நீ நல்ல பொண்ணா பார்த்து சொல்லு, நான் பேசி சரி பண்ணிடுறேன்னு சொன்னான். நானும் தாஹிராவை காட்டி நடந்ததெல்லாம் சொல்லி, இப்போ அவ சிங்கிள்தான் போய் ஆதரவா பேசு செட் ஆகிரும்ன்னு சொன்னா, இவன் தாஹிராட்ட பேசாம சரண்யாகிட்ட போய்ப் பேசி பல்ப் வாங்கிட்டு வந்தான்டா.
“சரண்யாகிட்டயா? டேய் அவ என் மச்சினிச்சிடா, உனக்குப் புடிச்சுருக்கா?” என்ற ஆஷிக்கிடம் ரோஹித், “அந்த ஸீன் எல்லாம் இங்க இல்லை, பெரிய பல்ப் குடுத்துட்டு போய்ட்டா.”
“உன்னைத் தாஹிராகிட்ட பேச சொன்னா, ஏன் சரண்யாகிட்ட போன? காட்டும் போதே தெளிவா சொன்னேன்ல ப்ளூ லெஹெங்கான்னு.” என்ற கேட்ட ஆதர்ஷிடம்,
“ஆனா எனக்கு ரெட் லெஹெங்கா தானே புடிச்சுருந்தது. நான் பார்த்தது சரண்யாவை தானே?” என்று முணுமுணுத்தான்.
“அப்போ ஏன்டா அவகிட்ட போய் ஆஷிக்கூட என்கேஜ்மென்ட் நின்ன கதையெல்லாம் சொன்ன?” என்று ஆதர்ஷ் கடுப்பாகக் கேட்க,
“என்ன பேசுறதுன்னு தெரியலை, அதான் முதல்ல இருந்து ஆரம்பிச்சேன். அவ இன்செல்ட் பண்ணிட்டா. என் பேரை முழுசா சொல்றதுக்குள்ள அப்படிச் சொல்லிட்டா.” என்ற ரோஹித்தின் குரலில் கவலை தொனித்தது.
“அப்படி என்னடா சொன்னா?” என்ற ஆஷிக்கிடம்,
“கவலையா தான் இருக்கும், திடீர்னு நாம ஆசைப்பட்டது இல்லாம போனா. கவலைப்படாதீங்க, எல்லாம் சரியாகிரும்ன்னு சொன்னேன். அவ ஒரு மாதிரி வித்தியாசமா பார்த்தா. நீங்க சமீர் சிஸ்டர் தாஹிரா தானேன்னு கேட்டேன். கையை குறுக்கக் கட்டிக்கிட்டு இல்லைன்னு தலையை மட்டும் ஆட்டினா. அப்போ நீங்கன்னு கேட்டேன். என்னை ஏற இறங்க பார்த்தா. அசடு வழிய ஐயம் ரோஹித் குனால்னு முழுசா என் பேரை சொல்றதுக்குள்ள, அப்பாகிட்ட சொல்லிருவேன்னு சொல்லிட்டாடா. அசிங்கமா போச்சு…” என்று பாவமாகக் கூற, இந்த முறை வாய்விட்டுச் சிரிப்பது ஆஷிக்கின் முறையாகி போனது.
ரோஹித் முறைப்பதைப் பார்த்துச் சிரிப்பை அடக்கிக்கொண்ட ஆஷிக், “உனக்குப் புடிச்சுருக்குன்னா, நான் பேசுறேன்.”
“ஒன்னும் வேண்டாம், ஏன் எனக்கு எதுவுமே வேண்டாம். முக்கியமா லவ் வேண்டாம்.” என்று ரோஹித் ஒரு பெரிய கும்பிடாகப் போட, இப்படியே அவர்களது சம்பாஷணை கேலியும் சிரிப்புமாகத் தொடர்ந்தது.
அதைக் கலைக்கும் விதமாய் ஆதர்ஷின் அலைபேசி விடாமல் ஒலித்துக் கொண்டிருக்க, அதைப் பார்த்ததும் அவனது முகம் மாறுவதை உணர்ந்த ஆஷிக்,
“என்னடா, எடுத்து பேசுடா. ஏன் கட் பண்ற? விடாம அடிச்சுட்டே இருக்காங்க, ஏதாவது முக்கியமான விஷயமா இருக்கப் போகுது.”
“அது வந்து… ஆஷிக் அப்புறம் பேசிக்கிறேன்…”
“ஏன் என் முன்னால பேச மாட்டியா? உன் முகம் சரியில்லையே?” என்றதும் ஆதர்ஷ், “ஒன்னும் இல்லடா…” என்று சமாளிக்க, ஆஷிக் அவனையே உறுத்து பார்க்க,
ஆதர்ஷ் அவனிடம், “என்னடா, ஏன் அப்படிப் பார்க்குற? அதெல்லாம் ஒன்னும் இல்லைடா. சத்தியமா தான், நம்புடா. உன் நண்பன் மேல நம்பிக்கையில்லையா?” என்று அவன் கூறிய அனைத்துக்கும் ஆஷிக் பதில் எதுவும் பேசாமல் அவனையே உற்று பார்க்க, ஆஷிக் எதையும் நம்பவில்லை என்பதை உணர்ந்த ஆதர்ஷ்,
“தியாடா…” என்று உண்மையைக் கூறியவன், சிறிது இடைவெளி விட்டு தியா வேலையை ரிசைன் செய்துவிட்டு தன் தாய், தந்தையோடு அமெரிக்காவிலே செட்டில் ஆகப் போவதை கூற,
“இப்போ ஏன் கால் பண்ணிட்டு இருக்கா?” என்று சுள்ளென்று ஆஷிக் கேட்டதில் தயங்கியவாறே ஆதர்ஷ்,
“அவ உன்கிட்ட பேசணும்ன்னு சொல்றா. நேத்துல இருந்து சொல்றா, எனக்குத் தான் உன்கிட்ட எப்படி ஆரம்பிக்கிறதுன்னு தெரியலை.” என்றவன் ஒருவித தயக்கத்துடன்,
“பேசுறியாடா?” என்று கேட்டு, “பேசுடா, இனிமே பார்க்கவா போறோம்?” என்றவாறு அவனது கரத்தில் அலைபேசியைத் திணித்தான்.
இரண்டு, மூன்று நிமிடங்களுக்கு ஆஷிக், தியா இருவருக்கும் இடையே அமைதி மட்டுமே நிலவ, அமைதியை கலைத்த தியா,
“நீ கேட்டுட்டு இருக்கன்னு எனக்குத் தெரியும் ஆஷிக், பதில் சொல்ல வேண்டாம். நான் சொல்றத மட்டும் கேளு, எங்க நீ இல்லாம போயிருவியோன்னு நினைச்சு, உனக்குப் பெரிய கஷ்டத்தைக் கொடுத்துட்டேன். என்னை மன்னிச்சுரு ஆஷிக். நான் போறேன், இனிமே உன் கண்ல படவே மாட்டேன். மார்ச் எட்டாம் தேதி டெல்லில இருந்து கிளம்புறேன். போறதுக்கு முன்னாடி உன்னை ஒருதடவை பார்க்கணும் ஆஷிக்.
ப்ளீஸ் வருவியா? உன்னை எனக்கு ரொம்பப் புடிக்கும்டா. சாரி, சொல்லாம இருக்க முடியலை, ‘ஐ லவ் யு ஆஷிக்!’ ப்ளீஸ். ஒரு தடவை உன்னைப் பார்க்கணும். வித் லவ் தியா!” என்றவள், அவனிடம் இருந்து எந்தப் பதிலும் வராமல் போக, கனத்த மனதுடன் அழைப்பைத் துண்டித்தாள்.
அவள் பேசி முடித்ததில் இருந்து ஆஷிக்கின் முகமே வாடி விட்டது. எப்பொழுதும் ஆஷிக் ஆஷிக் என்று உற்சாகமாக இருக்கும் குரலில் தெரிந்த தளர்ச்சி அவனை எதோ செய்தது. ஆயிரம் இருந்தாலும் சிறு வயது முதல் தொடர்ந்த நட்பாச்சே! அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியுமா என்ன?
தன்னையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த ஆதர்ஷைப் பார்த்து ஆஷிக் கலக்கமான குரலில், “ஏன்டா அவ அப்படிப் பண்ணினா? எவ்வளவு பெரிய துரோகம். தெரிஞ்சே முதுகுல குத்திட்டாளே! தியா மேல உண்மையான அன்போட தானே இருந்தேன், அவளே கெடுத்துகிட்டாளே… எவ்வளவு அழுதிருப்பேன், அப்போ கூட உண்மைய சொல்லலையே? கஷ்டமா இருக்குடா.”
“வருவியாடா?”
“ஜியாகிட்ட சொல்லாம என்னால எதுவும் பண்ண முடியாது. சொல்லி பார்ப்பேன், ஜியா ஓகே சொன்னா வரேன். குரலை கேட்கவே ஒரு மாதிரியா இருக்கு. சரியான லூசுடா, யார்கிட்டயும் ஒழுங்கா பேச கூடத் தெரியாது. அவளுக்கும் நம்மளை விட்டா யாருமே கிடையாதுடா. அவ எப்படிடா இப்படிப் பண்ணினா? அவளை அழவச்சு ஊருக்கு அனுப்புறதுல எனக்கும் விருப்பம் இல்லை. நம்மளை விட்டா டெல்லியில அவளுக்கு யாரு இருக்காங்க? நாம தான் போகணும். ஜியாகிட்ட பேசுறேன், அவ புரிஞ்சிக்கணும். அவ எதுவும் தப்பா நினைச்சுற கூடாது. ஜியாவை என்னால ஹர்ட் பண்ண முடியாது. ஜியா நோ சொன்னா நான் வரமாட்டேன். நீயும் ரோஹித்தும் போயிருங்க.” என்றவன் மேலும் தொடர்ந்து,
“சரி உங்களுக்கு டைம் ஆச்சுல, வாங்க ஏர்போர்ட் போகலாம். இப்போ கிளம்புனா சரியா இருக்கும்.” என்று அவன் அவர்களிடம் கூறவும் ரோஹித், “நீ நாளைக்கு வரணும்னு சொன்னியே, எப்போ வரேன்னு சொல்லு, உனக்கு டிக்கெட் புக் பண்ணிடுறேன்.”
“நாளைக்கே டூட்டில ஜாயின் பண்ண போறியா என்ன?” என்ற ஆதர்ஷிடம்,
“இல்லைடா, டூட்டில ஒருவாரம் கழிச்சுதான் ஜாயின் பண்ணுவேன். வீடு அப்படி அப்படியே கிடக்கும், அதெல்லாத்தையும் சரி பண்ணணும். ஜியாக்கு நீட்டா இல்லன்னா புடிக்காது. திங்ஸ் எதுவும் இருக்காது வாங்கணும்.” என்ற ஆஷிக் அவர்களை வழியனுப்ப அவர்களுடன் ஏர்போட்டிற்கு சென்றான்.
எழுந்ததில் இருந்து ஆஷிக் பற்றிய சிந்தனையிலே இருந்தவளுக்கு, அவன் தன் அருகில் இல்லாதது மனதிற்குள் ஏக்கமாக இருந்தது. ஆஷிக் தனக்காகப் பார்த்து பார்த்து செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் நினைத்து பார்த்தவளுக்கு, மீண்டும் அவனிடம் தன்னைப் பற்றி மறைத்துத் துரோகம் செய்கிறோமோ, என்கின்ற எண்ணம் தொத்திக்கொள்ள, மிகவும் வேதனை அடைந்தாள்.
***
