அத்தியாயம் 1
இந்த ஆரோன் எந்தப் பொண்ணோட காலையும் போய் பிடிக்க மாட்டான்!
அந்த நடுநிசி இரவிலும் பகல் போல் ஜொலித்துக் கொண்டிருந்தது அந்த ‘பார் வித் ஹோட்டல்’ (Bar cum Hotel). அந்த பாரில் ஆண், பெண் வித்தியாசமின்றி அனைவரும் கையில் மதுக் கோப்பையுடன் ஒருவரோடு ஒருவர் பின்னிப் பிணைந்து நடனமாடிக் கொண்டிருந்தனர்.
“ஹாய் பேபி… ஷல் ஐ டான்ஸ் வித் யூ?” என்று ஒரு ஆடவன், கையில் மதுக் கோப்பையுடன் அரைகுறை ஆடையில் ஆடிக்கொண்டிருந்த பெண்ணிடம் கேட்க, அவனை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்துவிட்டு,
“ம்… எனக்கு ஓகே தான்” என்றவளுடன் சேர்ந்து சிறிது நேரம் பின்னிப் பிணைந்து நடனமாடினான். பின் அவள் காதோரம் குனிந்து ஏதோ கூற, அதற்கு அவளும் யோசித்து,
“ம்… ஓகே, எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை” என்று கூறினாள். அடுத்த சில நிமிடங்களிலேயே அவளை அழைத்துக் கொண்டு, தான் எப்போதும் வந்து தங்கும் அறைக்கு அழைத்துச் சென்றான் அந்த இளைஞன்.
இது ஒன்றும் அதிசயமில்லை; எப்போதும் அந்த ஹோட்டலில் நடக்கும் ஒரு சாதாரண விஷயம் தான். ஆனால், இதைக் கண்டுகொள்ளத்தான் அங்கு யாருமே இல்லை.
அதே ஹோட்டலின் விஐபி பிரிவில், மேல் தளத்தில் அமைந்திருந்த ஒரு தனி அறையில், அந்த அறையையே அடைக்கும் அளவிற்கு இருந்த ‘கிங் சைஸ்’ கட்டிலில் ஒரு பெண்ணுடன் தனது காம யுத்தத்தை நடத்திக் கொண்டிருந்தான் நம் கதையின் நாயகன் ஆரோன் சக்கரவர்த்தி.
அவனின் அந்தக் கூடலில் எந்தவொரு காதலும் இல்லை. அவன் அந்தப் பெண்ணிடம் காட்டியது முழுக்க முழுக்க காமம் மட்டுமே! அதனால் அந்தப் பெண்ணின் உடலில் ஆங்காங்கே சிவந்து தடித்துப்போய் இருந்தது. தன் அருகே படுத்திருந்தவனின் மார்பில் தலைவைத்து,
“என்ன பேபி இப்படி பண்ணிட்டீங்க? இங்க பாருங்க…” என்று தன் உடலில் அவன் ஏற்படுத்திய காயத்தை சுட்டிகாட்டியவள்.
“எனக்கு எப்படி வலிக்குது தெரியுமா? நான் தான் உங்களுக்கு கோ-ஆப்ரேட் பண்றேனே, அப்புறம் ஏன் உங்களுக்கு இவ்ளோ வெறி? உங்களோட டச்ல கொஞ்சம் கூட லவ்வே இல்லை” என்று சிணுங்கியவளின் முடியைக் கொத்தாகப் பிடித்து, தன்னிடம் இருந்து விலக்கி பெட்டில் இருந்து கீழே தள்ளினான். பெண்ணவளோ உடலில் ஆடையின்றி சுருண்டு போய் கீழே விழுந்தாள்.
அவனின் இந்தத் திடீர் தாக்குதலை எதிர்பாராதவள், அவனை பயத்தோடு நிமிர்ந்து பார்க்க, அவனோ எழுந்து ஒரு ஷார்ட்ஸை அணிந்துகொண்டு அவளை நோக்கி வந்தான்.
“இங்க பாரு… என்னைப் பொறுத்தவரைக்கும் இந்தப் பொண்ணுங்க எல்லாம் காசுக்காகவும் பணத்துக்காகவும் எவன் கூட வேணாலும் எப்படி வேணாலும் படுக்குறவளுங்க! நீ கூட அப்படித்தானே? என்கிட்ட இருக்குற பணத்தை பார்த்துத்தானே என்கூட இப்போ படுக்கையில படுத்த?” என்று கேட்ட ஆரோன் அவளை ஒரு கேவலமான பார்வையோடு பார்த்தான்.
அவளோ கண்களில் கண்ணீரோடு,
“ஆரோன்… என்ன பேசுறீங்க? நான் ஒன்னும் மத்த பொண்ணுங்க மாதிரி கிடையாது. நான் உங்களை மனசார விரும்புறேன், அதனாலதான்…” என்று அவள் கூறி முடிக்கும் முன்பே, அவள் கன்னத்தில் ஓங்கி ‘பளார்’ என்று ஓர் அறை விட்டான்.
“இங்க பாரு… வந்தியா, படுத்தியா, பணம் வாங்கிட்டு போய்கிட்டே இருக்கணும்! அதை விட்டுட்டு இந்த காதல் கத்திரிக்காய்னு ஏதாவது உளறிக்கிட்டு இருந்த, உன்னை உயிரோட கொன்னு புதைச்சுடுவேன்!” என்று கண்களில் அதீத கோபத்தோடு கூறியவன், தன் பர்சில் இருந்த பணத்தை எல்லாம் எடுத்து அவள் முகத்தில் தூக்கி வீசினான்.
“இதையெல்லாம் பொறுக்கிட்டு உடனே இங்கிருந்து கிளம்பு! இனி நீ என் முகத்திலேயே முழிக்கக் கூடாது!” என்றான்.
அந்த பெண்ணோ கண்கள் கலங்க தன் முன் நிற்பவனை பார்த்தவள்.
“அப்போ உங்களுக்கு என் மேல எந்தவொரு விருப்பமும் இல்லையா ஆரோன்?” என்று கேட்க, அவளை ஏளனமாக ஒரு பார்வை பார்த்தவன்.
“என்ன கேட்ட? விரும்பலையா வா? முதல்ல நீ யாரு? அதை விடு, நான் யாருன்னு உனக்குத் தெரியும்ல? அப்படி இருந்தும் உன்ன மாதிரி ஒரு பிட்ச் எல்லாம் எவனாவது விரும்புவானா? என்னைப் பொறுத்தவரைக்கும் நீ பணத்துக்காகப் படுக்குறவ, அவ்வளவுதான்! போதும் இனிமே நீ இங்க வர தேவையில்ல, முதல்ல இங்கிருந்து கிளம்பு!” என்று அவன் கூறியதை இவ்வளவு நேரம் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தவள். அவன் இறுதியாகக் கூறிய வார்த்தையை கேட்டதும் மனம் உடைந்து தான் போனால்.
கண்களில் கண்ணீர் தேங்க, கோபம் மேலிட, அவன் தூக்கி வீசிய பணத்தை எல்லாம் எடுத்து அவன் முகத்திலேயே திருப்பி விசிறியடித்தாள்.
“நான் ஒத்துக்குறேன், நான் ஒரு பிராஸ்டிட்யூட் தான்; பணத்துக்காகப் படுக்குறவ தான்! ஆனா என்னைக்கு நான் உன்ன பார்த்தேனோ, அன்னையில இருந்து உன்னைத் தவிர வேற எந்தவொரு ஆணையும் நான் நெருங்க விட்டது கிடையாது. உன்னை என் மனசார விரும்புனேன்… ஆனா நீ…” என்றவளின் கண்களில் இருந்து கண்ணீர் வழிய, பேச முடியாமல் ஒரு நொடி தடுமாறினாள்.
“ஏன், பணத்துக்காகப் படுக்குறவளுக்கு மனசு இருக்கக் கூடாதா? நானும் ஒரு பொண்ணு தானே?” என்றவள் அதீத கோபத்தோடு கத்த, ஆனால் அவளை ஒரு பொருட்டாக கூட மதிக்காத ஆரோன்.
“நீ இன்னும் இங்க இருந்து போகலையா?” என்று அலட்சியமாக கேட்டான். அவன் கேள்வியில் மேலும் கோபம் கொண்ட பெண்ணவள்.
“நல்லா கேட்டுக்கோ! உன்கிட்ட இருக்குற இந்த பணமும் திமிரும் ரொம்ப நாளைக்கு நிலைக்காது! அதே மாதிரி நீ நினைக்கிறியே, பணத்துக்காகப் பொண்ணுங்க என்ன வேணாலும் செய்வாங்கன்னு… உன் மனசுல இருக்குற அந்த நினைப்பை அழிக்க கண்டிப்பா ஒருத்தி வருவா! அவ காதலுக்காக நீ பிச்ச கேட்பே, அவ கால்ல நீ விழுந்து கிடப்ப! அப்போ நான் சொன்ன இந்த விஷயம் உனக்கு ஞாபகம் வரும். அப்புறம் இன்னொன்னு… இனி நீயா கூப்பிட்டாலும் நான் உன்னைத் தேடி வரமாட்டேன்; ஆனா என்னைக்காவது ஒரு நாள் நீயா என்னை தேடி வருவ, அப்போ பேசிக்கிறேன் உன்னை!” என்றவள் தன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தவாறு அந்த அறையை விட்டு வெளியேறினாள்.
போகும் அவளை அலட்சியமாகப் பார்த்துவிட்டு, அங்கிருந்த மது பாட்டிலைக் கையில் எடுத்துக்கொண்டு அந்த அறையின் பால்கனிக்குச் சென்றவன். தன் முன்னே தெரியும் நகரத்தை வெறித்துப் பார்த்தான். அவன் மனத்திரையில் கடந்த காலத்தின் கசப்பான நினைவுகள் வந்து போக, ஒருமுறை கண்களை இறுக்கமாக மூடியவன்.
“எல்லா பொண்ணுங்களும் ஒன்னுதான்! இவ சொல்ற மாதிரி அப்படி எவளும் என் வாழ்க்கையில வரப்போறது கிடையாது! அதோட இந்த ஆரோன் எந்தப் பொண்ணோட காலையும் போய் பிடிக்க மாட்டான்! அப்படி ஒரு நாள் என்னைக்குமே வராது! ஏன்னா… நான் ஆரோன் சக்கரவர்த்தி!” என்று அந்த இடமே அதிரும்படி கத்தியவன், தன் கையில் இருந்த மது பாட்டிலை அப்படியே வாயில் சரித்துக் கொண்டான்.
அடுத்த நாள் காலை…
அந்த ஊரின் மிகப்பெரிய கலை அரங்கத்தில், தன் சலங்கை ஒலியால் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துக் கொண்டிருந்தாள் அக்னி பைரவி.
தன் முன்னே இருந்த நடராஜர் சிலைக்குத் தன் முதல் கண் வணக்கத்தைச் செலுத்திவிட்டு, பின் பார்வையாளர்களைப் பார்த்து ஒரு மெல்லிய புன்னகையைச் சிந்திவிட்டுத் தன் நடனத்தைத் தொடங்கினாள்.
(சிவதாண்டவ ஸ்தோத்திரம்)
ஜடாடவிகலஜ்ஜலபிரவாஹபாவிதஸ்தலே
கலேவலம்பிய லம்பிதாம் புஜங்கதுங்கமாலிகாம்
டமட்டமட்டமட்டமந் நிநாதவட்டமர்வயம்
சகார சண்டதாண்டவம் தனோது நஃ சிவஃ சிவம
ஜடாகடாஹசம்பிரம பிரமணிலிம்பனிர்ஜரீ
விலோலவீசிவல்லரீ விராஜமானமூர்த்தனி
தகத்தகத்தகஜ்ஜ்வலல்லாட பட்டபாவகே
கிஷோரசந்திரசேகரே ரதிஃ பிரதிஷணம் மம
தராதரேந்திரநந்தினீ விலாசபந்துபந்துரா
ஸ்புரத்திகந்தசந்ததி பிரமோதமானமானசே
கிருபாகடாக்ஷதோரணீ நிருத்ததுர்தராபதி
க்வசித்திசம்பரே மனோ வினோதமேது வஸ்துனி
என்ற பாடலுக்குச் சிவதாண்டவம் அவள் ஆட, அந்த அரங்கத்தில் இருந்த அனைவரின் கண்களும் அவளிடம் இருந்து அசைய மறுத்தன. அவளின் அந்தத் தாண்டவ நடனம் பார்ப்பவர்களை மெய்மறக்க வைத்திருந்தது.
தன் நடனத்தை முடித்து மீண்டும் அனைவரையும் புன்னகையோடு ஒரு பார்வை பார்த்து, தன் கைகூப்பி வணங்கிவிட்டு அங்கிருந்து அவள் செல்ல, அந்த கலையரங்கம் முழுவதுமே கைத்தட்டல்களால் அதிர்ந்தது. அவள் மேடைக்கு பின்னால் சென்றவுடன், அவளை ஓடிவந்து அணைத்துக் கொண்டாள் அவளின் உயிர் தோழி தாரா.
“ஏய்… பையூ, செம டான்ஸ்டி! நீ ஆடுறதைப் பார்க்கும்போது மேல கைலாயத்துல இருந்து சிவனும் பார்வதியும் இறங்கி வந்து ஆடுன மாதிரி இருந்ததுடி! அரங்கத்துல இருந்த எல்லாருமே கண்ணைக் கூட சிமிட்டல தெரியுமா? அப்படி ஒரு பெர்ஃபாமென்ஸ்! எனக்கெல்லாம் அப்படியே நீ ஆடுறதைப் பார்க்கும்போது உடம்பெல்லாம் சிலிர்க்குது தெரியுமா? இதோ பாரு, இப்பக்கூட என் உடம்புல இருக்குற முடி எல்லாம் சிலிர்த்துக்கிட்டு நிக்குது!” என்று தன் கையைக் காட்ட, உண்மையாலும் அவளின் கையில் இருந்த முடிகள் அத்தனையும் சிலிர்த்துக் கொண்டு நின்றிருந்தன.
தன் தோழியைப் புன்னகையோடு பார்த்த பைரவி,
“எல்லாமே மேல இருக்குற எம்பெருமான் ஈசனோட அருள்தான்டி” என்று மேடையின் மீது இருந்த நடராஜர் சிலையைக் காட்டினாள்.
“அவரோட அருள் மட்டும் இல்லடி, இதுல உன்னோட திறமையும் தான் இருக்கு! நீ ஒவ்வொரு தடவையும் மேடையில் ஆடும்போது ஏதோ புதுசா ஆடுற மாதிரி இருக்கு” என்று கூறித் தன் தோழியைக் கட்டிக்கொண்ட தாரா,
“சரி… சரி… நீ உள்ள வா, வந்து கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு” என்று அவளை அழைத்துச் சென்றாள்.
அப்போது, “மேடம், உங்களை சதாசிவம் சார் கூப்பிடுறார்” என்று அவர்களின் மேனேஜர் கூற,
“நீங்க போங்க, நான் வர்றேன்” என்று கூறிய பைரவி, தன்னுடன் தன் தோழி தாராவையும் அழைத்துக்கொண்டு மேடைக்குச் சென்றாள். மேடையில் ஏறியவள் அனைவருக்கும் புன்னகையோடு வணக்கம் தெரிவித்துவிட்டு, அங்கே ஓரமாகச் சென்று நின்றுகொண்டாள்.
“இங்கே வந்த எல்லாருக்கும் ரொம்ப பெரிய நன்றி! உங்களுக்கே தெரியும் இந்த நிகழ்ச்சி எதுக்காகனு. இந்த நிகழ்ச்சி மூலமா வர்ற ஒவ்வொரு பணமும் ஏழைக் குழந்தைகளுக்கும், ஆதரவற்ற குழந்தைகளின் படிப்புச் செலவுக்கும் போய் சேர்வதற்காக வருஷ வருஷம் எங்க டிரஸ்ட் மூலமா அரேஞ்ச் பண்றோம். இது ரொம்ப வருஷமா சிறப்பா நடக்குறதுக்கு இன்னொரு காரணம்… பைரவிதான்!” என்ற சதாசிவம், பைரவியை முன்னால் அழைக்க, அவளும் சிறு புன்னகையோடு முன்னால் வந்து நின்று அனைவருக்கும் பணிவோடு வணக்கம் வைத்தாள்.
“இவங்க தான் அக்னி பைரவி. உங்கள்ள பாதி பேருக்கு இவங்களைத் தெரியும்… ஃபேமஸ் கிளாசிக்கல் டான்ஸர்! இவங்களால தான் இந்த டிரஸ்ட் மற்றும் இந்த ஃபங்க்ஷன் எல்லாமே இவ்வளவு நல்லா நடந்துகிட்டு இருக்கு. எங்க டிரஸ்ட் ரொம்ப நல்லா போறதுக்கு பைரவிதான் காரணம். தன்னுடைய நடனம் மூலமா ஆதரவற்ற குழந்தைகளுக்கான பணத்தை அரேஞ்ச் பண்ணி, நிறைய ஆதரவற்ற குழந்தைகளோட படிப்புச் செலவைப் பார்த்துக்கிறாங்க” என்று அவர் கூற, பைரவியும் சிறு புன்னகையோடு அந்த மேடையில் நின்று கொண்டிருந்தாள்.
இங்கே மேடையின் கீழ் இருந்த ஒருவன், பைரவியின் அழகில் மயங்கி அவளை மேலிருந்து கீழாக ரசித்துக் கொண்டிருந்தான். அப்போது சரியாக அவர் கையிலிருந்து மைக்கை வாங்கிய பைரவி,
“இங்கே வந்த எல்லாருக்கும் ரொம்ப நன்றி! இவர் சொன்ன மாதிரி எல்லாம் ஒன்னும் இல்லை… என்னால ஒன்னும் இதெல்லாம் நடக்கல, இது எல்லாத்துக்கும் முக்கியமான காரணமே நீங்கதான்! நீங்க எல்லாரும் என்னோட நடனத்துக்கு இந்த அளவு ஆதரவு கொடுக்காம இருந்திருந்தா இது எதுவும் நடந்திருக்காது. இதே மாதிரி நீங்க தொடர்ந்து ஆதரவு கொடுப்பீங்கனு நம்புறோம். உங்களால நாலு ஆதரவில்லாத குழந்தைங்க அவங்க வாழ்க்கையில முன்னேறுவாங்க” என்று தன் மனதில் இருந்ததை பேசி முடித்த பைரவி, அங்கிருந்து இறங்கி தன் அறையை நோக்கிச் சென்றுவிட்டாள்.
அவள் அங்கிருந்து போன சில நிமிடங்களிலேயே அவள் அறையின் கதவு தட்டப்பட,
“ம்… உள்ள வாங்க” என்று பைரவி கூற, உடனே உள்ளே வந்த மேனேஜர்,
“மேடம், உங்களைப் பார்க்குறதுக்காக ஒருத்தர் வந்திருக்காரு” என்று கூறினார்.
“யாரு?” என்று கேட்டாள்.
“அவரு உங்க டான்ஸைப் பார்த்து உங்களைப் பாராட்ட வந்திருக்காரு” என்று கூறவும், ஒரு நொடி யோசித்த பைரவி,
“சரி, அவரை உள்ள வரச் சொல்லுங்க” என்றாள்.
அவள் கூறியதும் உள்ளே நுழைந்தான் ஆதிகேசவ் என்ற தொழிலதிபர் (Business man).
உள்ளே வந்தவன் முதலில் கண்டது அக்னி பைரவியின் அழகான உடலமைப்பைத் தான்! அவளை மேலிருந்து கீழாக ரசித்தவன்,
‘சும்மா சொல்லக்கூடாது… செம ஃபிகர் தான்!’ என்று தனக்குள்ளேயே முணுமுணுத்துக் கொண்டு அவள் அருகே சென்று,
“ஹாய், ஐ ஆம் கேசவ்!” என்று கூறி கை குலுக்கப் போக, அவளோ ஒரு சிறு புன்னகையோடு,
“வணக்கம், நான் பைரவி… சொல்லுங்க” என்று கூற, அதில் அவன் சற்று கடுப்பானாலும், அதை வெளிகாட்டிக் கொள்ளாமல் தன்னை நிலைப்படுத்திக் கொண்டவன்.
“உங்க டான்ஸ் பார்க்க ரொம்ப நல்லா இருந்தது, எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. அதான் உங்ககிட்ட பேசிட்டு போலாம்னு வந்தேன். நீங்க எனக்காக ஒன்னு பண்ணணுமே…” என்று அவளின் அழகை ரசித்தவாறு கேட்க, அதை கவனிக்காத பைரவியோ,
“ம்… என்ன சொல்லுங்க?” என்று சாதாரணமாகக் கேட்டாள். ஆனால், பைரவியின் அருகே நின்றிருந்த தாராவுக்கு அவனின் பார்வையின் அர்த்தம் தெளிவாகப் புரிந்தது.
“நீங்க இந்த மாதிரி ஸ்டேஜ் ஷோ மட்டும் தான் பண்ணுவீங்களா?… இல்ல வேற மாதிரி…” என்றவனின் பார்வை அவளை மேலிருந்து கீழ் வரை வக்கிரத்தோடு பார்க்க, அப்போதே அவன் பார்வை செல்லும் இடத்தை உணர்ந்த பைரவி.
“வேற மாதிரின்னா?” என்று மார்புக்கு குறுக்கே கைகாட்டிக்கொண்டு ஒற்றை புருவம் உயர்த்தி கேட்க, “அது இந்த மாதிரி ஸ்டேஜ் ஷோ மட்டும் தானா? இல்ல வேற பங்க்சன் மாதிரி எல்லாம் பண்றிங்களான்னு கேட்டேன்.” என்றான். அவன் எங்கு சுற்றி எங்கு வருகிறான் என்று உணர்ந்த பைரவி.
“ம்… ஏதாவது முக்கியமான ஃபங்க்ஷனுக்க கேட்டா ஆடுவேன்” என்று பைரவி கூறினாள். பைரவி கூறியதை கேட்டு தாரா சற்று அதிர்ச்சியோடு அவளை பார்க்க, தன் இமைகளை மூடி திறந்து.
“பொறுமையா இரு… பார்த்துக்கலாம்” என்பது போல் கூறினால்.
“ஓ சூப்பர்! அப்போ ஒரு நாள் நீங்க என் வீட்டுக்கு வந்து பெர்ஃபார்மன்ஸ் பண்ணுங்களேன்” என்றவன், தன் விசிட்டிங் கார்டை அவளிடம் நீட்டினான்.
இவ்வளவு நேரம் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருந்த பைரவியின் கண்கள் கோபத்தில் சிவந்தன. அந்த விசிட்டிங் கார்டை வாங்கி ஒரு பார்வை பார்த்தவள், ஒரு சிறு புன்னகையோடு அதைச் சுக்குநூறாகக் கிழித்துப் போட்டாள்!
அதைப் பார்த்த கேசவின் கண்கள் அதிர்ச்சியில் விரிய,
“ஏய்… என்ன பண்ற நீ?” என்றவன் அவள் கையைப் பிடிக்கப் போக, சட்டென்று அவன் கையைத் தட்டிவிட்டு, ஓங்கி அவன் கன்னத்தில் ‘பளார்’ என்று அறைந்தாள் அக்னி பைரவி!
அந்த பெண் சொன்னது போல் ஆரோன் வாழ்க்கையில் வருவாளா நம் கதையின் நாயகி? பெயருக்கு ஏற்ப நெருப்பாக தகிக்கும் பெண்ணவளை எப்படி நெருங்க போகிறான் நம் நாயகன்? அப்படி அவன் கடந்த காலத்தில் என்ன நடந்தது? அவன் பெண்களை இவ்வளவு கேவலமாக நினைக்க என்ன காரணம்? இந்த கேள்விகளுக்கான விடையங்களை தெரிந்துக் கொள்ள தொடர்ந்து படியுங்கள்…
தீராத காதல் தீயாக மோத….
