அர்ஜுனுக்கும் ஜென்னிக்கும் நடந்த சண்டையில் கௌதம் இப்படி தன்னை விட்டு விட்டு செல்வான் என்று எதிர்பார்க்காதவள் அதிர்ச்சியில் சிலையாய் நின்றாள்.
அடுத்து என்ன செய்வதென்று புரியாமல் திணறினாள்.
“ஜென்னி இப்போ என்ன பண்ண போற?” என்று இனியா கேட்டாள்.
“பஸ் பிடிச்சி போய்க்கிறேன்டி”
“நானும் உன் கூட வரட்டுமா?”
“வீட்டுக்கு தான போறேன். நான் பாத்துக்கிறேன்டி” என்றவள் தட்டு தடுமாறி அங்கிருந்து புறப்பட்டாள்.
இத்தனை நாட்களில் அவன் இப்படி விட்டு விட்டு சென்றதில்லை.
வர முடியாது என்றால் முடியாது என்பவன் அப்போது கூட என்ன செய்கிறாள், பஸ் பிடித்தாளா? வீடு போய் சேர்ந்தாளா? என்று நிமிடத்திற்கு ஒரு முறை அழைப்பு விடுப்பான்.
அவனை அப்போது இவள் சுகமாக சலித்து கொள்வாள். ‘இவ்ளோ போன் பண்றதுக்கு நீயே கூட்டிட்டு போய்டுலாம் கௌதம்’ என்று கிண்டலடிப்பாள்.
“உன்ன ஈவ்னிங் பாக்காம வேலையே ஓட மாட்டேங்குது பொண்ணே” என்பவன் அவள் வீடு சென்ற சேர்ந்த பின்பே நிம்மதி அடைவான்.
அப்படிப்பவனின் இன்றைய செய்கை அவளது இதயத்தை வாள் கொண்டு அறுத்தது.
கௌதமை பற்றிய சிந்தனையோடே வீடு வந்து சேர்ந்தவள் எதும் சாப்பிட தோன்றாமல் அப்படியே படுத்து விட்டாள்.
‘நான் என்ன சொன்னேனு இப்படி கோபம் கௌதம்? அதுவும் என்ன விட்டுட்டு போற அளவு? அப்போ என்ன நீ பாதியில இன்னைக்கு விட்டுட்டு போன மாதிரி என்ன விட்டுட்டு போய்டுவியா? நீ இல்லாம நான் எப்படி இருப்பேன் கௌதம்?’
‘நான் என்ன சொல்ல வர்றேனு கூட கேக்க மாட்டியா? நான் சொல்றத முழுசா கூட கேக்க மாட்டேங்கற?’ என்று நினைத்தவளுக்கு கௌதமின் செய்கையை ஜீரணிக்க முடியவில்லை.
ஏதேதோ யோசனையில் இருந்தவளை அவளது சொந்தங்கள் கவனித்து கேட்டனர். அவர்களிடம் தலைவலி என்று காரணம் கூறியவள் யோசனையில் ஆழ்ந்தாள்.
“ஜென்னி ஸ்டடி ஹாலிடேஸிக்கு ஊருக்கு போறேன்னு சொன்னியே? எல்லாத்தையும் எடுத்து வெச்சிட்டியா?” என்று சாம் கேட்டவுடன் விழுக்கென்று நிமிர்ந்தாள்.
“நான் இப்போ என்ன கேட்டேனு இப்படி உனக்கு தூக்கி வாரி போடுது?” என சாம் கேட்டான்.
“அது ஒண்ணும் இல்லடா. அவ கௌதம் கிட்ட சொல்லாம இருந்துருப்பா. அப்படி தானே பேபி?” என்று கண் சிமிட்டி படியே செலின் கேட்டாள்.
“சும்மா இருடி. அவ மூஞ்சே சரியில்ல. என்ன பேபி ஆச்சு?” என்று ஜென்னியை விசாரித்தாள் ஜெசிகா.
“ஒண்ணுமில்ல ஜெசி” என்று தடுமாறியபடி சமாளித்தாள் ஜென்னி.
“ஒண்ணுமில்லனா ஏம்மா முகத்த ஏழு முழத்துக்கு தூக்கி வெச்சிட்டு இருக்க?”
“ம்… வேற என்ன? கௌதம் கூட சண்ட போட்ருப்பா. அப்படி தானே குட்டிமா?” என கேட்டான் சாம்.
“அதெல்லாம் எதும் இல்லடா. சும்மா எப்ப பாத்தாலும் நாங்க சண்ட மட்டும் தான் போடுவோமா?” என்று உண்மையை மறைத்து சமாளித்தாள் ஜென்னி.
“நல்லா இருந்தா சந்தோஷம் தான். பட் உன் மூஞ்சி வேற ஏதோ சொல்லுதே” என்று சாம் சந்தேகமாக கேட்டவனை முறைத்தாள் ஜென்னி.
“சரி. ட்ரெஸ் பேக் பண்ணியாச்சா?” என்று கேட்டான் சாம்.
நாளை பெண்கள் மூவரும் ஊருக்கு செல்கிறார்கள். சாமுக்கு வேலை இருப்பதால் அவன் செல்லவில்லை. அவன் அந்த வாரத்தில் கான்ஃபிரஸீக்காக டெல்லி செல்லவிருப்பதால் அவனால் எங்கேயும் நகர முடியவில்லை.
“ம்ம்” என்றவள் மேற்கொண்டு அவன் எதுவும் கேட்டு விடுவானோ என்று பயந்து அங்கிருந்து நழுவினாள்.
“இவள பாத்துக்கோ ஜெசி. இவ சரியாவே இல்ல” என்று கவலைக் குரலில் கூறினான்.
“நாங்க இருக்கோம்ல. பாத்துக்கறோம். நீ கான்ஃபிரன்ஸ் போய்ட்டு டெல்லிய நல்லா சுத்திட்டு வா. நான் குடுத்த லிஸ்ட்ல ஞாபகம் இருக்குல?” என்றவளை முறைத்தான்.
“கடுப்படுக்காதீங்கடி. எங்க போனாலும் பெரிய லிஸ்ட்டா எடுத்து குடுத்துட வேண்டியது. உங்களுக்குனு ஒருத்தன் வருவான் பாருங்க. அவன் ரொம்ப பாவம்” என்று கூறினான்.
“டேய் என் புருஷன் கிட்ட எப்டி வாங்கணும்னு எனக்கு தெரியும். நீ ஒண்ணும் ஃபீல் பண்ணாத. நாங்க சொன்னது வாங்கி இருக்கணும்” என்று கூறினாள்.
“உங்கள எல்லாம் திருத்த முடியாது” என்றவன் “செல் என்ன பண்றா?” என விசாரித்தான்.
“அவ தூங்கிட்டா” என்றவளிடம் “நீயும் தூங்கு. நாளைக்கு நேரமா கிளம்பணும்” என்றவன் சொல்ல அவளும் சரி என்று படுக்க சென்றாள்.
அறைக்குள் வந்த ஜென்னிக்கு கௌதமை நினைத்து தூக்கம் வரவில்லை.
அவனை எப்படி சமாதானம் செய்வது என்று யோசித்தாள். அந்த யோசனையோடே அவனுக்கு போன் செய்ய அவனோ போனை எடுக்கவில்லை. அடுத்து என்ன செய்வதென்று புரியாமல் யேசனையிலேயே இருந்தவள் அப்படியே உறங்கி விட்டாள்.
ஜென்னி அடுத்த நாள் காலையில் எழும் போது கௌதம் ஞாபகம் வர பதறியடித்து அவனுக்கு போன் செய்தாள்.
ஏற்கனவே அவள் மேல் கோபத்தில் இருப்பவன் இப்போது இன்னும் என்னென்ன சொல்வானோ என பீதியுடனே போன் செய்தாள்.
அவனோ வேலைகளை முடித்து அப்போது தான் படுத்தவன் கண்களை திறக்க முடியாமல் தூக்க கலக்கத்தில் போனை அட்டென்ட் செய்தான்.
“கௌதம்” என்று ஜென்னி தயங்கியபடியே ஆரம்பித்தாள்.
“சொல்லு அம்மு”
“அது… வந்து… கௌதம் நான் இன்னைக்கு ஊருக்கு போறேன்டா” என்று திக்கி திணறி சொன்னாள்.
“என்னடி சொல்ற திடீர்னு? நான் உன்ன ரொம்ப மிஸ் பண்ணுவனே” என்றவன் போனிலேயே முத்தம் கொடுத்தான்.
அவனது முத்தம் அவளை ஏதோ செய்ய “கௌதம்” என திணறினாள்.
“மிஸ் யூ பொண்ணே” என்றவன் வேறு ஏதேனும் சொல்வானோ என ஜென்னி காத்திருந்தாள்.
அந்த பக்கம் அமைதியாகவே இருக்க “கௌதம்” “கௌதம்” என்று கூப்பிட்டவள் அந்த பக்கம் ஏதும் சத்தம் இல்லாமல் இருக்கவும் கட் செய்தாள்.
பின்னர் பெண்கள் மூவரும் கிளம்ப சாம் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து அவர்களை ரயில் ஏற்றி விட்டான்.
*****
சென்னையில் இருந்து மதுரைக்கு வந்தவர்களை ஸ்டீபன் வந்து கூட்டி சென்றார்.
ரயில் நிலையத்தில் அவரை பார்த்ததும் பெண்கள் மூவரும் சந்தோஷம் பொங்க அவரை அணைத்து கொண்டனர்.
ஜென்னி வீட்டை பொறுத்தவரை ஒரே காம்பவுண்டில் மூவரும் அருகே அருகே உள்ள வீட்டில் வசிக்கினறனர்.
அண்ணன், தம்பி மூவரும் இணைபிரியாமல் இருக்க ஒரே காமபவுண்டில் வசிக்கின்றனர்.
அவர்களது லக்கேஜை டிரைவரை விட்டு எடுக்க சொல்லியவர் அவர்களை பற்றி விசாரிக்க ஆரம்பித்தார்.
“என்னமா ஜர்னி எப்படி இருந்தது? எந்த பிராப்ளமும் இல்லையே?”
“இல்ல பெரியப்பா. பட் உங்க பொண்ணுங்க தொல்ல தான் தாங்கல” என்று முறையிட்டாள்.
“ஏன்டா… அவங்க என்ன பண்ணாங்க?”
“அவங்க ஊரு சுத்துவாங்களாம். நான் வீட்ல படிக்கணுமாம்” என்று சிணுங்கியபடி சொன்னாள்.
“டேய் அவங்க சும்மா உல்லலாய்க்கு சொல்றாங்க. அவங்க உன்ன விட்டுட்டு எப்படி போவாங்க?” என்று சமாதானம் செய்தார்.
“என்னய விட்டுட்டு மட்டும் போகட்டும் பெரியப்பா. அவங்களுக்கு இருக்கு” என்று முறைத்தாள்.
“என்னடி பட்டு இவ்ளோ கோபப்படற? டோன்ட் வொர்ரிடி செல்லம். நம்ம எல்லாத்தையும் என்ஜாய் பண்ணிட்டு தான் ஊருக்கு போவோம். ஓகே” என்றவள் அடுத்த வரும் நாட்களுக்காக இப்போதே பிளான் செய்ய ஆரம்பித்தாள்.
“ஜெசிகா… ஃபர்ஸ்ட் ரெஸ்ட் எடுங்கடா. அப்றம் பாத்துக்கலாம். இந்த டைம் நீங்க வர்றீங்கனு நம்ம மேரி அத்த சேலத்துல இருந்து வரேன்னு சொல்லியிருக்காங்க” என்றதும் “ஹோ” என்று கத்தினார்கள்.
அவர் வந்தால் பெரிய பட்டாளமே வந்துவிடும். அவர் வீட்டில் 4 மகன்கள் அவருக்கு. போன தடவை வந்த போது இரண்டு பேர் மட்டும் தான் வந்திருந்தார்கள். அவர்களது மகன் யாரும் வரவில்லை.
“டேடி யார் யார் வர போறாங்க?”
“எல்லாமே வர்றதா தான்டா சொன்னாங்க. பாக்கலாம்” என்றதும் பெண்கள் மூவருக்கும் ஒரே கொண்டாட்டமாய் இருந்தது.
“சாம் மிஸ் பண்ணிட்டான்” என்று செலின் வருத்தப்பட்டாள்.
“சோ வாட். நம்ம அவன வெறுப்பேத்தலாம்” என்று ஜென்னி கண்ணடிக்க பெண்கள் மூவரும் ஹைபை அடித்து கொண்டார்கள்.
டிரைவர் தனது வீட்டில் காரை கொண்டு நிறுத்த சொன்னதும் அதில் இருந்து இறங்கினார்கள். அவர்களை ஸ்டீஃபனின் மனைவி கிளாரா வரவேற்றாள்.
“என்னடா ஜெர்னி எப்படி இருந்தது? எல்லாம் ஓகேவா?” என்று விசாரித்தார்.
“அதெல்லாம் ஓகேம்மா. நாங்க ரொம்ப டயர்ட். ஃபர்ஸ்ட் ஏதாவது குடிக்க குடேன்” என்று செலினா சொன்னாள்.
“அதெல்லாம் குடுக்கலாம். ஃபர்ஸ்ட் ஒரு ஹக் குடு கிளி. உன்ன ரொம்ப மிஸ் பண்றேன்” என்று ஜென்னி சொன்னதும் அவர் வந்து ஜென்னியை அணைத்தார்.
“என் தங்க கட்டிடி” என்று அவர் கொஞ்ச அதை பார்த்து இரு பெண்களும் கோபமானார்கள்.
“ம்மா… அவ வந்தா நாங்க உங்களுக்கு தெரிய மாட்டோமே” என்று கோபமான குரலில் கேட்டார்கள்.
“சரி தான் போடி. அவங்க என் கிளி. எனக்கு விதவிதமா சமைச்சு தருவாங்க. உன் சமையல ரொம்ப மிஸ் பண்றேன் கிளி” என்று செல்லம் கொஞ்சினாள் ஜென்னி.
“பாத்து கொஞ்சுடி உன் கிளிய. ரொம்ப கொஞ்சினா கொத்திட போகுது” என்று நக்கல் செய்தார்கள்.
“பாரு கிளி இவங்கள” என்று ஜென்னி கோபமாக சொல்ல “விடுடா. அவங்க பொறாமைல சொல்றாங்க. உனக்கு என்னென்ன வேணும்னு சொன்னா அம்மா நான் செஞ்சு தரேன்டா. ஓகேவா?” என்று கனிவுடன் அவள் முகத்தை வருடியபடியே கேட்டார்.
“சோ… சுவீட் கிளி” என்று செல்லம் கொஞ்சினாள்.
“சரி. ஃபர்ஸ்ட் சாப்பிடுங்க” என்று சொன்னார் கிளாரா.
அவரது பெயர் கிளாரா. ஸ்டீபனின் மனைவி. ஜென்னி எப்போதும் அவரை கிளி என்று கூப்பிடுவாள். அவரது சமையலுக்கு இவள் அடிமை.
“ஓகே கிளி. எல்லாம் ரெடி பண்ணுங்க. நான் ஒரு குட்டி தூக்கம் போட்டுட்டு வந்தறேன்” என்றவள் அங்கிருந்து கிளம்பினாள்.
ஜென்னி அவளது வீட்டுக்கு செல்லும் போது அவளை வரவேற்க அவளது பெற்றோர் காத்து கொண்டிருந்தனர்.
“ப்பா” என்று அவளது தந்தையை பார்த்ததும் ஓடி வந்து அவள் கட்டி கொள்ள அவளை ஆதுரமாக கன்னம் வருடி அவளது நெற்றியில் முத்தம் குடுத்தார்.
அவரது அந்த அடைப்பை, பாதுகாப்பை ஆழ்ந்து அனுபவித்தாள் ஜெனிஃபர்.
“என்ன கண்ணா எப்டி இருக்க?”
“ஆம் சோ குட் டேட். டெய்லி வீடியோ கால்ல பாக்குறீங்க? உங்களுக்கு தெரியாதா?” என்று கேட்டாள்.
“இல்லடா. நீ டல்லா இருக்க மாதிரி இருக்கே” என்று யோசனையாக கேட்டார்.
“என்ன டயானா? நான் சொன்னது கரெக்ட் தானே?” என்று மனைவியிடம் அபிப்பிராயம் கேட்டார்.
“ஆமாங்க. பாப்பா இளச்சி போய் இருக்கா. என்னடா ஏதும் பிரச்சனையா?” என்று ஆதுரமாக கேட்ட அன்னையை பார்த்ததும் கௌதமின் நினைவில் கண் கலங்கியது அவளுக்கு.
