விரகதாபம் தீருமோ விதுரா

“ரஞ்சித் உங்களுக்கும் கலாவுக்கும் பிறந்த பையன்னு  எப்படி எனக்கு தெரியும்னு தானே பாக்குறீங்க, கலா சாவுறதுக்கு கொஞ்ச நாள்களுக்கு முன்னாடி எல்லாம் உண்மையும் என்கிட்ட சொல்லிட்டா! உங்களுக்கும்  கலாவுக்கும் பொறந்த பையன் தான் ரஞ்சித்னு. அந்த நேரத்துல நான் எந்த அளவுக்கு உடைஞ்சு  போனேன்னு எனக்கு மட்டும் தான் தெரியும். உங்க சட்டையை புடிச்சு எனக்கு ஏன் இப்படி ஒரு துரோகத்தை பண்ணுனீங்கன்னு கேட்கலாம்னு தோணுச்சு, ஆனாலும் எனக்கு உண்மை தெரிஞ்சுச்சுன்னு உங்களுக்கு தெரிஞ்சால் நீங்க இயல்பா இருக்க மாட்டீங்க! வருத்தப்படுவீங்க நினைச்சு அமைதியா இருந்துட்டேன்.

நான் நினைச்சிருந்தால் அப்பவே ரஞ்சித வேண்டான்னு திரும்பவும் ஆசிரமத்துல விட்டிருக்கலாம். ஆனால் ஏன் நான் அப்படி செய்யல தெரியுமா? கலாவுக்கு நான் செஞ்சு கொடுத்த சத்தியம் தான்” என சரஸ்வதி சொல்ல திகைத்தார் ரஞ்சித்தின் அப்பா.

‘உனக்கு குழந்தை பிறந்துருச்சுன்னால் என் குழந்தையை அனாதையா விட்ராத! நான் தோழினு கூட யோசிக்காம உனக்கு பண்ணின பாவத்துக்கு தான்  எனக்கு கேன்சர் வந்திருக்கு. என் பையனை கூட வளர்க்க முடியாம அனாதைய விட்டுட்டு சாகப் போறேன். என்னை மன்னிச்சிடு, என் பையனையும் உன் பையன் மாதிரி பாத்துக்கனு கடைசி நேரத்துல உயிர் போற தருவாயில் என்கிட்ட கேட்டா! நானும் வேற வழி இல்லாம அவளுக்கு சத்தியம் பண்ணி கொடுத்துட்டேன்,

எனக்கு உங்க மேல கோபம் இருந்தாலும் ரஞ்சித்துக்காகவும், கலாவுக்காகவும் நான் இதுவரை இந்த உண்மையை யார்கிட்டயும் சொல்லல. ஏன் உங்க கிட்ட கூட இது என்னன்னு கேட்கவே இல்லை,அதனால வார்த்தையை விடாதீங்க!” என்று சரஸ்வதி சொல்ல அப்படியே அதிர்ந்து போனார் ரஞ்சித்தின் அப்பா  ராம்தேவ்.

“என்னை மன்னிச்சிடு சரஸ்வதி?” என்று கேட்க, ” என்கிட்ட நீங்க மன்னிப்பு கேட்க வேண்டிய இந்த அவசியமும் இல்லை, இனிமேலாவது சரியா நடந்துக்கிருங்க. பிரதிக்ஷாவும் விதுரனும் ஒன்னு சேர்ந்து வாழணும்ங்கறது தான் விதி அதனால தான்  ரஞ்சித்தோட பெரியவங்க நம்ம நிச்சியம் பண்ணுன  கல்யாணம் நின்னு விதுரனோட பிரதிக்ஷாவுக்கு கல்யாணம் நடந்திருக்கு. அத எல்லாரும் ஏத்துக்கிட்டு தான் ஆகணும். ரஞ்சித் விதுரனோட  வீட்டிலேயே இருந்து  ஏதாவது குடைச்சல் கொடுப்பான்.  நீங்க சொன்னால் தான் மறுப்பு எதுவும் பேசாம அடுத்த நொடியே இங்க வந்து நிப்பான் வரச்சொல்லுங்க. விதுரன் வாழ்க்கை எந்த பிரச்சனையும் இல்லாமல் நல்லபடியா மாறவும், ரஞ்சித்துக்கும் வேற பொண்ண பார்த்து கல்யாணம் பண்ணி வைப்போம்! ” என்ற சரஸ்வதி சொல்ல  சரி என்ற தலை அசைத்தார் ரஞ்சித்தின் அப்பா.

சரஸ்வதி எதுவும் சொல்லாமல் அவரின் அறைக்கு சென்று விட்டார்.  சென்று விட்டார். இத்தனை வருஷம் சரஸ்வதி உண்மையை தெரிந்து கொண்டு தன்னுடன்  வாழ்ந்திருக்கிறாள் நினைக்க மனம் உடைந்து போனார் ரஞ்சித்தின் அப்பா. பல விஷயங்களில் எப்போதும் வீம்பாக செயல்படும் குணம் ராம்தேவிற்கு உண்டு. அதே குணம் தான் ரஞ்சித்துக்கும், தந்தையின் செல்ல பிள்ளை ஆயிற்றே ரஞ்சித்! அப்படி என்றால் பிடிவாத குணம் அதிகம் தானே, ரஞ்சித் இப்படி வன்மம் நிறைந்த குணம் உடையவனாக வளர்ந்ததற்கு ராம்தேவும் காரணம் தான். அதை எல்லாம் நினைக்க அவரின் மனம் வெதும்பியது. இத்தனை வருடத்திற்கு முன்னால் உண்மைகளை அறிந்து கொண்ட சரஸ்வதி ராம்தேவ் மாதிரி வன்மத்தோடு வாழ்ந்திருந்தால் இத்தனை வருட திருமண வாழ்க்கையும் பிள்ளைகளின் நிலையும் எப்போதோ கேள்விக்குறி ஆகிய விட்டிருக்குமே என்று நினைக்க  கண்கலங்கினார். இதற்குமேல்  இப்படி இருக்கக் கூடாது என்று நினைத்து,

ரஞ்சித்திற்கு அழைப்பை மேற்கொண்டார். தன் அலைபேசியின் தொடுதிரையில் தன்னுடைய தந்தையின் எண்ணை பார்க்கவும், ” சொல்லுங்க டாடி எப்படி இருக்கீங்க? என்ன திடீர்னு போன் பண்ணி இருக்கீங்க!” என்று கேட்டான் ரஞ்சித்.

“நீ இப்ப எங்க இருக்க?” என்று  ரஞ்சித்தின் அப்பா கேட்க, ” விதுரனோட வீட்ல தான்  இருக்கேன்!” என்று கூறினான் ரஞ்சித்.

“சரி உடனே  அங்க இருந்து கிளம்பி வா!” என்று ரஞ்சித்தின் அப்பா சொல்ல அதிர்ந்து போனான் ரஞ்சித்.

“ஏன் டாடி என்ன ஆச்சு எதுவும் பிரச்சனையா? என்னை எதுக்கு அங்க கிளம்பி வர சொல்றீங்க?”என்று ரஞ்சித் கேட்க, ” நீ உடனே கிளம்பி வா ரஞ்சித் உன்கிட்ட கொஞ்சம் பேச வேண்டியதிருக்கு!” என்று ரஞ்சித்தின் அப்பா கூறினார்.

“சரிப்பா கிளம்பி வர்றேன்!” என்று சொல்லிவிட்டு அழைப்பை அணைத்தான் ரஞ்சித்.

“என்னாச்சு இப்ப இங்க இருந்து கிளம்ப போறியா? ” என்ற மனிஷா கேட்க, ” வேற வழி இல்ல அப்பாவே வர சொல்லிட்டாரு! கண்டிப்பா போய் தான் ஆகணும்!” என்று கூறினான்  ரஞ்சித்.

“இப்ப விதுரனையும் பிரதிக்ஷாவையும் என்ன பண்றது?” என மனிஷா கேட்க, “அதான் நீ இருக்கியே, எல்லாத்தையும் பாத்துக்க விதுரன  பிரதிக்ஷா கிட்ட நெருங்க விடாமல் பாத்துக்குறது தான் தான் உன் வேலை, நான் ஊருக்கு போயிட்டு  அப்பா என்ன சொல்றாரு பாத்துட்டு உனக்கு போன் பண்றேன்!” என்று கூறினான் ரஞ்சித்.

“சரி போயிட்டு சீக்கிரமா வந்து சேரு, அதுவரை நான் பார்த்துக்கிறேன்” என்று மனிஷா சொல்ல ரஞ்சித் அங்கிருந்து ஊருக்கு கிளம்பினான்.

இங்கு,

சில மணி நேரங்கள் தண்ணிக்குள்ளயே இருந்து அழுது  தன்னை ஆற்றுப்படுத்தி வெளியே வந்தாள்  பிரதிக்ஷா.

‘அவள் வருவதற்கு முன்னால் இவ உள்ள போய் இவ்வளவு நேரம் ஆயிருச்சு என்ன பண்றா’என்று நினைத்துக் கொண்டு கட்டிலுக்கும்  வாஸ்ரூமின் வாசலுக்கும் ஐந்து ஆறு முறையாவது நடந்திருப்பான் விதுரன்.

அவள் அறையில் இருந்து வெளியே வரும்  அருவம் தெரிய அலட்சியமாய் அமர்ந்து கொண்டிருந்தான்.

‘ஆனாலும் அவனின் உள் மனமோ  அவள ரொம்ப பேசிட்டோம்’ என்று தோன்ற அவளின் முகத்தை பார்க்க வேண்டும் என்ற உந்தித்தள்ள மெதுவாக அவளின் கால்களில் இருந்து  மேலாக பார்க்க அவள் கண்கள் சிவந்து அழுது அழுது முகம் எல்லாம் வீங்கி  இருந்தது.

‘இப்ப என்ன சொன்னேன்னு இவ இப்படி அழுது இருக்கா, இந்த நடிப்புக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை’  என்று மீண்டும் அவள் மேல் கோபப்பட்டான்.

அறையில் இருந்து வெளியே வந்தவள், படுப்பதற்கு தேவையான தலையணை அனைத்தையும் எடுத்து வைத்து படுக்க ஆரம்பித்தாள்.

“சாப்பிடலையா?” என்ற விதுரன் கேட்க எதற்கும் பதில் சொல்லவில்லை பிரதிக்ஷா.

பிரதிக்ஷாவின் அலட்சியப் போக்கு விதுரனை மேலும் கோபப்படுத்த,  “உன்கிட்ட தாண்டி  சாப்பிடலையானு கேட்டுக்கிட்டு இருக்கேன், நீ என்னமோ அலட்சியமா பதில் சொல்லாம இருக்க!” என்று விதுரன் கேட்க, ” எனக்கு பசிக்கல!” என்று அவனை பாராமலே கூறினாள் பிரதிக்ஷா.

“உனக்கு பசிக்கல எனக்கு பசிக்குது, போயி எடுத்து வை” என்று விதுரன் அதிகாரமாக சொல்ல அவனை நிமிர்ந்து பார்த்தாள் பிரதிக்ஷா.

“என்ன பாக்குற நீ சொன்ன அக்ரீமெண்ட உனக்கே ஞாபகப்படுத்தணுமோ, புருஷன் பொண்டாட்டி மாதிரி நடந்துக்கணும்னு சொன்ன  இந்த ஆறு மாசம்  வரை அது உனக்கு ஞாபகம் இருக்கா?” என்று கேட்க, பிரதிக்ஷா அமைதியாக நின்று கொண்டிருந்தாள்.

“இப்ப சாப்பாட்டை எடுத்து வைக்கிறியா? இல்லையா?” என்று விதுரன் கோபமாக கேட்க, எதுவும் சொல்லாமல் மாடியிலிருந்து இறங்கி டைனிங் டேபிளிற்கு சென்றாள் பிரதிக்ஷா.பிரதிக்ஷாவின் பின்னால் விதுரனும் சென்றான்.

அங்கு பிரதிக்ஷா ஒரு தட்டை எடுத்து வைத்துவிட்டு ஹாட் பாக்சில் என்ன இருக்கிறது என்று பார்க்க அங்கு சில சப்பாத்திகள் செய்து வைக்கப்பட்டிருந்தது. பிரதிக்ஷா அதை எடுத்து விதுரனின் தட்டில் வைக்க போக 

“எனக்கு சப்பாத்தி வேண்டாம் தோசை தான் வேணும் போய் தோசை சுட்டு எடுத்துட்டு வா?” என்று விதுரன் சொல்ல, அமைதியாக விதுரனை பார்த்துக்கொண்டே சமையல் அறைக்குள் நுழைந்தாள்.

சமையலறையில்  எந்த பொருள் எங்கிருக்கிறது என்று தெரியாமல் பிரதிக்ஷா  திணறிக் கொண்டிருக்க உள்ளே நுழைந்தார் அம்பிகா.

“என்னம்மா என்னாச்சு?” என்று கேட்க, “அவருக்கு தோசை வேணுமாம்!”என்று கூறினாள் பிரதிக்ஷா.  “தோசையா, அதுவும் விதுரனுக்கா?”என்று அதிர்ந்து போனார் அம்பிகா.

“சப்பாத்தி செஞ்சு வச்சிருக்கேனே, அதை நீ பாக்கலையா?” என்று தன்னுடைய சந்தேகத்தை தீர்த்துக் கொள்வதற்காக அம்பிகா கேட்க, “அவருக்கு சப்பாத்தி பிடிக்காதாம் தோசை தான் வேணுமாம்!” என்று பிரதிக்ஷா  பாவமாக கூறினாள். பிரதிக்ஷா கூறியதை கேட்டுவிட்டு உனக்கு தோசை பிடிக்குமா? என்று அம்பிகா தன் சந்தேகத்தை கேட்க , “ரொம்ப புடிக்கும் அத்தை! அதுவும் சுடச்சுட இருந்தால  ஆறு ஏழு தோசை சாப்பிடுவேன்!” என்று ரசித்து கூறினாள் பிரதிக்ஷா.

பிரதிக்ஷா கூறியதை கேட்கவும் அம்பிகா சிரித்துக்கொண்டே, “ அப்போ சரி, நீ தோசை ஊத்தி விதுரனுக்கு குடு!” என்று சொல்லிக்கொண்டு  மாவையும் அதற்கு தேவையான மற்ற பொருட்களை எல்லாம் பிரதிக்ஷாவின் கைகளில் எடுத்துக் கொடுத்தார்.

அதை வாங்கிய பிரதிக்ஷா தோசையை ஊற்றி விதுரனின் கையில் கொண்டு போய் கொடுத்தாள்.

விதுரன்  தோசையை வாங்கி  விட்டு நீ உட்காரு என்று சொல்ல , “நானா?”  என்று அதிர்ந்து கேட்டாள்  பிரதிகிஷா.   

“உன்னைய தான் சொன்னேன்,உன்னை தவிர வேற யாராவது இங்கே இருக்காங்களா?” என்று கேட்டான் விதுரன்.

இவர்கள் இருவரும் என்ன செய்கிறார்கள் என்று பார்த்துக் கொண்டிருந்தார் அம்பிகா. விதுரனா இப்படி செய்கிறான் என்பதை எல்லாம் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார்.

விதுரன் தன் தட்டில் சப்பாத்தியை எடுத்து வைத்து சாப்பிட தொடங்க “தோசை கேட்டீங்க இப்ப சப்பாத்தி எடுத்து சாப்பிடுறீங்க?” என்று கேட்க, “தோசை எனக்கு பிடிக்காது, அதை நீ சாப்பிடு!” என்று விதுரன் சாதாரணமாய் சொல்லிவிட்டு சப்பாத்தியை வைத்து சாப்பிட ஆரம்பித்து விட்டான். பிரதிக்ஷாவோ அதிர்ந்து அவனை பார்த்தாள்.

“அப்புறம் எதுக்கு என்னைய தோசை சுட வச்சு சட்டினி தான் வேணும்னு கேட்டீங்க?” என்று பிரதிக்ஷாகோபமாக கேட்க, 

“அப்ப கேட்டேன்,ஆனால் இப்ப எனக்கு சாப்பிட பிடிக்கல நீயே சாப்பிடு!”என்று சொல்ல இப்போ கோபம் வந்தது.

“என் முகத்தையே பாத்துக்கிட்டு இருக்காம முதல்ல சாப்பிடு சூடு ஆறிருச்சுன்னால் தோசை நல்லா இருக்காது, அதுவும் நீ சுட்ட தோசை வேற!” என்று விதுரன் கிண்டலாக பேச அவனை முறைத்தாள்.

இதையெல்லாம் வீட்டுக்குள் நுழைந்த கொண்டிருந்த மனிஷா கோபமாக பார்த்துட்டு  கொண்டிருந்தாள்.

திடீரென்று டைனிங் டேபிள் அருகே வந்து “எனக்கும் பசிக்குது, என்ன இருக்குது என்று  சொல்லி பார்த்துவிட்டு,” எதுவும் இல்லையா? ” என  கேட்டுக்கொண்டே என்றே விதுரனின் தட்டில் இருந்த சப்பாத்தியை எடுத்து சாப்பிட ஆரம்பித்தாள்.

‘மனிஷா இப்படி செய்வாள்’ என்று நினைக்காத விதுரனும் அதிர்ந்து பிரதிக்ஷாவை பார்க்க பிரதிக்ஷாவும் விதுரனை பார்த்து முறைத்துக் கொண்டிருந்தாள்.

 

 

 

 

 

 

 

 

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page