20. அவளை மறக்கத்தான்

R.A.புரம் .சென்னை

இரவு12.மணி

நடுஹாலில் சுதா,மதி இருவரும் ஜெனியைப் பார்த்து வெறுப்பாக அவள் உடையை  பற்றி தங்கள் அபிப்பிராயத்தை அள்ளி  தெளித்துக் கொண்டியிருந்தனர்.

ஜெனி எதற்குமே கோபப்படவில்லை.

அந்த பிரசாத் அவமானப்பட்டதே அவளுக்கு போதுமானதாக இருந்தது. 

தினேஷுடன் டைம் ஸ்பெண்ட் பண்ணினது அவளுக்கு மேலும் உற்சாகத்தை அளித்தது. முகம் மெங்கும் சிரிப்பாக காணப்பட்டது. 

இதை அவள் தாய் கவனிக்கத் தவறவில்லை.

இவர்கள் பேசிய பேச்சுக்கு வேறு சமயமாக இருந்தால், கடுப்படித்து இருப்பாள். சுதா புரிந்துக் கொண்டாள். 

பிரசாத் சொல்வது போல், அவள் அந்த டாக்டரை காதலிக்க தொடங்கி இருக்க  வேண்டும்.

என்னவாகப் போகிறதோ. என்று  பெற்ற மனம் கலக்கமுற்றது.

அவள் திருமணத்தில் வீட்டிலுள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு கணக்கு வைத்திருந்தனர்.

பிரசாத் வேண்டாம் என்பதில், இப்போது  சுதாவும் முடிவெடுத்து விட்டார்.

அதற்காக தினேஷை ஒப்புக் கொள்ள வேண்டும் என்று அவசியமில்லை என்றும் நினைத்தார்.

மதியும் விலுக் விலுகென்று கீச்சுக் குரலில், ஜெனியை பார்த்து, கத்தினாள்.

“என் அண்ணனுக்கு அவன் நண்பர்கள் முன்பு பெருத்த அவமானத்தை தேடி தந்துட்ட “அவளுக்கு  ஆத்திரமும், கோபமும் தலைக்கேறியது.

வார்த்தைகள் அவசர அவசரமாக வெளியேறியது.

சுதாவுக்கே அவள் அப்படி தன் பெண்ணை பார்த்து கத்தியது பிடிக்கவில்லை போலும்.

“சும்மா கத்தாத நிறுத்து” . வேலைக்காரர்கள் காதில்  விழப்போகுது.

எப்போதும், தன் பக்கமே இருக்கும் மாமியார் இப்போது ஜெனிக்கு பரிந்து பேசுவதைக் கேட்ட மதியின் கோபம் அதிகமானதில் , எதோ சொல்ல வந்தாள்.

அப்போது கார்  போர்டிகோவில் நிற்கும் சத்தம் கேட்கவே, அவசரமாக மதி அறைக்குள் ஓடினாள்.

ஜெனியும். ஒரே தாவலில் தன் அறைக்கு போய் விட்டாள்.

கணவன் மகேந்திரனும்,மகன் முரளியும்

அசதியாக உள்ளே வந்தனர்.

அம்மாவைப் பார்த்து, முரளி “ நீங்க என்னம்மா பண்ணிக்கிட்டு இருக்கீங்க..அதுவும் ஹாலில் தனி ஆளாக … 

“ஒன்றும் இல்லையடா. உங்கள் கார் சத்தம் கேட்டது. அதனால்  வந்தேன். “

மகேந்திரன் அதை நம்பாமல், அவளை பார்த்துக் கொண்டே,  தன் கழுத்திலிருந்த டையை கழற்ற முயற்சிக்க,சுதா அவரருகில் போய் டையை கழற்றினாள்.

“எங்கே  எதற்கு போய் இருந்தீர்கள்.

பெங்களூர் போனால் ஒரே நாளில் வர மாட்டீர்களே.”

அவள் கேட்டதற்கு பதில் சொல்லாமல்

“நிறைய அதிசயம் நடக்கும் போல இருக்கே”.

“பேசாமல் அறைக்குள் வாருங்கள்.” என்று சுதா சொல்லிவிட்டு,செல்ல முற்பட்டாள். 

முரளி   தன் அப்பாவிடம்  “இப்ப எதுவும் பேச வேண்டாம். நாளை காலை பேசிக் கொள்வோம்”.

“ரொம்ப டயர்டா இருக்கும்மா… ஜெனி, மதியெல்லாம் தூங்கி விட்டார்களா” “என்று தன் அம்மாவப் பார்த்து கேட்க, “ஆமாம்” என்பது போல் தலையாட்டினாள்.

இவனும் தன்னறைக்குப் போக, மதி சுவற்றின் பக்கம் திரும்பி, தூங்குவது போல்  பாசாங்கு செய்துக் கொண்டியிருந்தாள்.

அவளை இலட்சியம் செய்யாமல் பால்கனி போய், ஒரு சிகரட்டை பற்றவைத்துக் கொண்டான்.

பெங்களூரின் பெரிய தொழிலதிபர் விக்ரமின் ஒரே மகன் கல்யாணுடன் ஜெனியின் திருமணம் நடந்தால், இவர்கள் பிஸினெஸ்ஸுக்கு   பேருதவியாக இருக்கும். 

ஷேர்ஸ் எல்லாம் எங்கோ போய்விடும்.

வெளிநாட்டிலும்  நம் பிஸினெஸ் நல்லா போக வாய்ப்பு இருக்கு. இது தெரியாமல் அம்மாவும், மதியும் அந்த உதவாக்கரை பிரசாத்தை ஜெனிக்கு முடிச்சு  போட  பிளான் பண்ணுகிறார்கள்.

அம்மாவைப் பற்றி கவலையில்லை. அப்பா எடுத்து சொன்னால் புரிந்துக் கொள்வார்.

இந்த மதி என்ன செய்வாளே

எதாவது முட்டாள்தனமா செய்து விடப் போகிறாள் என்று மதிக்கு பயந்தான்.

ஜெனியை பற்றி கருத்தில்  கொள்ளவில்லை. 

…………………………….…

சுத்தமல்லி கிராமம்

தாமிரபரணி…. அது எங்கோ தொடங்கி எங்கோ முடிவை நோக்கி தங்கு தடையின்றி சுதந்திரமாக ஓடிக் கொண்டே இருக்கிறது.

ஆனால்  அமலாவின் வாழ்கை இன்றுடன் ஒரு தேக்கத்தை அடையப் போகின்றது. இந்த சுத்தமல்லி கிராமத்திலே முத்துவோடு ஒரு ஜீவ மரணமாக முடக்கப்படப் போகிறாள்.

 

ஷாலினிக்கும், அவளது பெற்றோர்க்கும். அமோக வரவேற்பு விசாலத்திடமிருந்து கிடைத்தது.

 

சிங்கப்பூரில் முத்துவையும் கதிரையும் ஜெயிலுக்கு போகாமல் காப்பாற்றியவள்.

 

இந்தியாவிற்கே போய் விடுகிறோம் என்று  கதிர் முடிவெடுத்தவுடன்,

கடையை நல்ல விலைக்கு ஷாலினி மூலமாக விற்று முத்துவை அழைத்துக் கொண்டு, பிளைட் ஏறினான்.

 

முத்துவிற்கு ஆக்ஸிடென்ட் ஆகிவிட்டது என்று மட்டும் சொன்னான்.

தூத்துக்குடியில் பிளைட் இறங்கியதும்

 முத்து வந்த கோலத்தை பார்த்துக் விசாலம் கதறினாள்.

அங்கேயே முத்துவை அடித்தாள்.

“டேய். என்னடா ஆச்சு. என் பிள்ளைக்கு. உன்னால் தானடா அவனும் சிங்கப்பூர் வந்தான். இந்த மாதிரி முடமாக்கி கொண்டு வந்து இருக்கியே “என்று தன் தலையில் அடித்துக்கொண்டு அழுதாள்.

ஷாலினி அவர்களை தங்களின் அரண்மனை போன்ற பங்களாவிற்கு அழைத்துச்சென்றாள்.

அவரின் அப்பா பெரும்பணக்காரர் தூத்துகுடியின்  பெரும்பகுதியை தன்வசப்படுத்தி இருந்தார்.

விசாலத்திடம் தன் மகளுக்கு கதிரை கேட்டார்.

இவ்வளவு பெரிய இடத்திலிருந்தா என்று திக்கு முக்கடி போனாள்.

கதிர் மேலிருந்த கோபம் போய்விட்டது.

அப்போது  முத்துவிற்கு திருமணம் ஆனால் தான்  கதிரை திருமணம் செய்ய முடியும் என்ற நிபந்தனையை சொன்னாள்.

ஷாலினி நம் வீட்டிற்கு வந்த மகாலஷ்மி என்றே நினைத்தார்.

அவர்களை ஜெயில் தண்டனை யிருந்து காப்பாற்றியவள் என்று தெரிந்த போது,  மதிப்பு பல மடங்கு உயர்ந்தது.

முத்துவின் தலைவிதியை நொந்தபடி பெண் தேடினார்கள்.

ஒருவரும் முன்வரவில்லை.

விவசாய கூலி வேலை செய்பவரின் பெண்ணெருத்தியை அந்தஸ்து பார்க்காமல்,  ஜாதி மட்டும் பார்த்து , இவர்கள் ரொக்கமாக பணம் கொடுப்பதாக பேசி திருமணத்தை  நடத்த முடிவு செய்தார்கள்.

அந்தப்  பெண்ணின் தந்தையும், தன் மகளிடம், “பெரிய வீட்டு  சம்பந்தம்  நமக்கெல்லாம் கிடைக்காது.உனக்கு அதிர்ஷ்டம். திருமணம் செய்துக் கொள். தம்பி,தங்கைகளை கரையேற்றி விடலாம்”.என்று   வற்புறுத்தவே,

“அப்பா. அவருக்கு……. …அவரால் …என்று  இழுக்கவே “ஏம்மா மாப்பிள்ளை பையன் நல்லா யிருந்தால் நம்மை ஏம்மா தேடி வரப்போகிறார்கள். அவர்கள் வசதிக்கு பார்த்து கொள்ள மாட்டார்களா” என்று கேட்க “வேண்டாம்ப்பா” என்று   அழுதாள்.

“நான் டிகிரி முடித்து விட்டால், நல்ல வேலைக்கு போய் உங்களை காப்பற்றுகிறேன்ப்பா “ என்று சொல்ல, அதைப் பார்த்து அவள்  அம்மாவும் அழ, அப்பா  கையில் அவர்கள் வைத்து விட்டு சென்ற பணத்தில் காந்தி தாத்தா   சிரித்துக் கொண்டுயிருந்தார்.

முத்துவிற்கும் இந்த திருமண ஏற்பாடுகள் பிடிக்கவில்லை.

என்ன செய்வது.  நன்றாக இருந்திருந்தால் ஷாலினியை திருமணம் செய்து இருக்கலாம். இப்போது தம்பி கதிரை திருமணம் செய்யப்போகிறாள்.

இல்லையென்றால் எப்படியாவது சிங்கப்பூர் போலீஸிடம் மாட்டி விடுவேன் என்றதும்,ஒப்புக் கொண்டான்

அந்தப் பெண் திருமணம் பிடிக்காமல், ஊரைவிட்டு ஓடிப்போக  முடிவு செய்தாள். அதை தெரிந்துக் கொண்டு  விசாலத்தின் ஆட்கள்   அவளை இழுத்து வந்தார்கள்.

தண்டனையாக தாமிரபரணி ஆற்றில் தலையை வைத்து  அழுங்கப்  பார்க்க,எதிர்பாராமல் மூச்சுத் திணறி இறந்தாள்.

அது ஊராருக்கு  தற்கொலையாகப் செய்தி போனது.

அமலாவின்  சித்தப்பா தன் அக்காவிடம் “கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு ஏன் அலைகிறாய் “என்று கேட்டு அமலாவை கை காண்பித்தான்.

அவர்களுக்கு போக்கிடமும் இல்லை .கேள்வி கேட்பாரும் இல்லை. முடித்து  விடுக்கா   என்று  தன் ஈன புத்தியை அவரிடம் பதிக்க,விசாலமும் அதை ஏற்றுக்  கொண்டாள்.

முத்து பட்டு வேட்டி,  சட்டையில் கழுத்தில்  தடிமனான சங்கிலி போட்டுக் கொண்டு, கைவிரல்களில் மோதிரங்கள் பளபளக்க  கழுத்தில் மாலையுடன்  வேலைக் காரர்கள் அவனது வீல் சேரை தள்ளிக் கொண்டு  .அமலாவின்  அருகில் நிறுத்தினர்.

அவன் முகமும் தொய்ந்து போய் இருந்ததது.

ஷாலினியின் கண்கள்  அமலாவை அளந்தது. யார்  இந்தப் பெண் இவ்வளவு அழகாக இருக்கிறாள்.இவள் எப்படி….? எப்படியோ சம்மதிக்க வைக்கப்பட்டு இருப்பாள்.” என்று அலட்சியமாக எண்ணினாள்.

கதிரை தேடினாள் .

அவன் அந்த வீட்டில் எங்குமில்லை.

எங்கே போய் விட போகிறான். அப்பாவை அடுத்த முகூர்த்ததிலே தனக்கும், கதிருக்கும்   தூத்துக்குடியில் திருமணத்தை  ஜாம் ஜாம் என்று நடத்த சொல்லணும்.  சிங்கப்பூரில் ரிசப்ஷன் என்று அவள்  மனம்   அசை போட்டது.

ஊரிலிருந்து   ஒருவரும் அழைக்கப்படாததால், ஷாலினியின் தந்தையே தாலி எடுத்துக் கொடுத்தார்.

 

தீடீரனறு. முத்து அமலா கழுத்தில் தாலி  கட்டும் நேரத்தில்  “கல்யாணத்தை நிறுத்தல, நான் கழுத்தை அறுத்து செத்து போய் விடுவேன்” என்று   உமாராணி   விறிச் சென்று  அடிவயிற்றிலிருந்து எழும்  குரல்  கணீரென்று  கேட்டது.

அவளின் கழுத்தில் கத்தி வைத்துக்  கொண்டியிருந்த அடியாட்களின் கைகளிலிருந்து  கத்தியை தன் கையில்   பிடுங்கிவைத்துக் கொண்டாள்.

“நிறுத்துடா”..

அமலாவும்  அதிர்ந்து  அவளைப் பார்த்தாள்.

அ..ம்…மா…மா…..என்று  வார்த்தைகளே வரவில்லை.

கொடு. … கொடு.. என்று கத்தியை  பிடுங்கப் பார்க்க,அவர் பின்னால் சாய, சாய்ந்ததில் கீழே விழுந்து கத்தி அவள் கழுத்தை பதம்  பார்த்தது.

அதே நேரத்தில் முத்துவும் அமலாவின்  கழுத்தில் தாலி கட்டினான்.

கீழே விழுந்தவளின் கழுத்திலிருந்து இரத்தம்  குபுக்.. குபுக் என்று கீற்றாக வர, கழுத்து  அறுப்பட்ட  கோழி போல்  

விலுக் விலுக் கென்று தன் உடம்பை உதறி செத்துப்போனாள்.

 

இதைப் பார்த்த அமலா அம்மா என்று கத்திக் கொண்டே மயக்கம் போட்டு விழுந்தாள்

 

ஷாலினியும்,அவளது குடும்பத்தாரும் அவ்வீட்டை விட்டு காரில் ஏறி பறந்தனர்.

கல்யாண வீடு, அமளி துமளி யாகிவிட்டது.

தன் பிள்ளை திருமணத்தில் இப்படி ஒரு சாவை விசாலம் எதிர்பார்க்க வில்லை.

அங்க  அலங்காரத்திற்காக வைக்கப்பட்ட ஜாடியை தூக்கி அடித்தாள் .

சில்லு சில்லாக உடைந்தது.

வேலைக் காரர்கள் மயக்கம் அடைந்த அமலாவை அவளது அறைக்குள் தூக்கிக் கொண்டு மூர்ச்சை தெளிவிக்க போராடினர்.

இன்னொரு சாவு விழ வேண்டாம் என்று டாக்டர் வரவழைக்கப் பட்டார்.

அரும்பாடுபட்டு டாக்டர் அவளின் மூர்ச்சையை தெளிய வைத்தார்.

அவர் போனதும் விசாலம், “துக்கரி உன் ஆத்தா என்  தம்பியை முழுங்கினாள். அவளால தான் என் தம்பி இறந்தான்”. என்று புதிய குண்டை வீசினாள்.

“இப்போது நீ உன் அம்மாவை விழுங்கிவிட்டாய். உன் ராசி இன்றும்  என்ன செய்யுமோ..”

“வீட்டுக்கு வந்த மகாலஷ்மிக்கு ஒரு வாய் கூட சாப்பிட கொடுக்க வில்லை. 

உன்னை யென்ன தாமிரபரணி ஆற்றிலா முக்கினேன். உன் அம்மா என்னவோ, அப்படி   சிலிர்த்து செத்து போய் விட்டாள்..

நான் இப்ப அதுக்கு வேற தண்டம் அழணும் “

அமலா அவள் சொல்வதை எதையும் காதில் போட்டுத் கொள்ளாமல், “ம்மா இப்படி என்னை தனியா  தவிக்க விட்டு போயிட்டியே” என்று முகத்தில் அறைந்துக் கொண்டு அழுதாள்.

விசாலத்திற்கு  கதிரின் ஞாபகம் வந்து,

“அவன் எங்கே”   என்று கேட்டாள்.

 

தொடரும்

 

 

 

 

 

 

.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

  

 

 

 

 

 

 

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page