21. அவளை மறக்கத்தான்.

பிரசாத் இல்லம்.

காலை நேரம்.மழை வெளுத்து வாங்கிக் கொண்டியிருந்தது. வருண பகவானின் ஆக்ரோசத்தில் சூரிய பகவான் என்ன ஆனார் என்று தெரிய வில்லை.  வானம் இருள்  பிரியாதவாறு இருந்தது.

 

கருணாகரனிடம்,ராஜேஸ்வரி  “இன்று  பெண் பார்க்க வருகிறோம் என்று சொல்லியிருந்தேன். இந்த பாழா போன 

மழை நின்றபாடில்லையே.”

“பொறுமையா இரு. நாம  மாலை 4 மணிக்குத் தானே போகப் போகிறோம். அதற்குள் மழை விட்டு விடும்.”

 

“பிரசாத் கிட்ட சொல்லிட்டியா .கடைசி நேரத்தில்  பெண் பார்க்க வரமாட்டேன்  என்று  சொல்லப் போகிறான்.”

 

“அவன் இறங்கி வரட்டும். யாரிடமோ போனில் பேசிக் கொண்டு இருக்கிறான்.”

“அவனை அப்படியே விடக் கூடாது. அவன் தங்கை வாழ்க்கையை அவனே கெடுத்து விடுவான் போல இருக்கு.”

“பார்த்துக்கலாம்ங்க.”

மேலே பிரசாத் தன் ஆட்களிடம், “டேய் இன்னிக்கு மழை ஆனதால் அவள் மினி கூப்பர் காரில் போவாள். சரியா நான் சொன்ன பிளான் படி அவளை கடத்தணும். நான் அவள் போட்டோவும் கார் நம்பரும் அனுப்பறேன். எதுவும்  தப்பாகக்  கூடாது”

மறுமுனையில் “கண்டிப்பாக செய்து விடுவோம் ஸார். எங்களுக்கு இதில் நல்ல எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு.” 

நல்லது.என்று சொல்லி போனை அனைத்து விட்டு கார் நம்பரையும்  ஜெனியின் போட்டோவையும் அனுப்பி வைத்தான்.

 மந்தகாச சிரிப்புடன்,  பெற்றோர்களுக்கு குட்மார்னிங் சொல்லியபடியே  கீழறங்கி வந்தான்.

அவன் முகத்தைப் பார்த்ததும், சரி. நல்ல மூடில் இருக்கிறான் என்று நினைத்துக் கொண்டு ராஜேஸ்வரி,

 சற்று தயங்கிய படி, “இன்னிக்கு பெண் பார்க்க போகிறோம்…”

 

மேலும்,பெண் வீட்டாரின் வசதியை சொன்னார்.

“மால் மற்றும் திருச்சி, மதுரை சென்னையில் தியேட்டர், மற்றும்  திருமணமண்டபங்கள், நிலபுலன்கள் என்று நிறைய இருக்குப்பா. பெண்ணும் அடக்க ஒடுக்கமான இருக்கு. இன்று பார்த்துவிடலாமா” கேட்டு  அவன் முகத்தை பார்த்தாள்.

உள்ளுக்குள் என்ன சொல்வானே மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏறிட போகிறது.

அவன் அப்பா அவ்வளவு எடுத்து சொல்லி இருக்கார். பார்ப்போம்.

 

அவனும் சிரித்துக் கொண்டு,  “அதற்கென்னமா .  போலாம்மா.  இன்னிக்கு எனக்கு எந்த வேலையும் இல்ல. நாள் முழுக்க வீட்டில் தான் இருப்பேன்.” என்று மலர்ச்சியாகவே சொன்னான்.

அவன் முகத்தைப் பார்த்தார். எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை.

“ரொம்ப மகிழ்ச்சி. மதியையும் வரச் சொல்றேன்.” என்று  ராஜேஸ்வரி  அவளை கூப்பிட ஓடினார்.

 

“ஹலோ மதி”…

“சொல்லுமா .”

பெண் பார்க்கப் போகும் விஷயத்தை சொன்னதும், “எப்படிம்மா ஓவர் நைட்டில் திருந்தினான்.அவனை நம்பாதம்மா.”

 

“சும்மா இருடி. எப்பபாரு உன் அண்ணனை சந்தேகப்பட்டுக் கொண்டு, சரி .மாப்பிள்ளை இருக்காரா”

 

“ம்ம்ம்….இருக்கார்.”

 

“அவரிடம் போனை கொடு”.

 

கொடுத்ததும்,  சொன்னார்.

 

“ரொம்ப மகிழ்ச்சி அத்தை.”

 

“நீங்களும், மதியும் 3 மணிக்கெல்லாம் இங்கே வந்துவிடுங்கள்.”

 

“இன்னிக்கா . ஸாரி அத்தை இன்று போர்டு  மீட்டிங் இருக்கு. நான் கண்டிப்பா இருக்கணும் நீங்க பார்த்து விட்டு வாருங்கள்.”

 

ஏமாற்றத்துடன் ராஜேஸ்வரி

“சரிங்க மாப்பிள்ளை. மதி கிட்ட போனை கொடுத்து விடுங்கள்.”

 

கொடுத்தும் “ஹலோ மதி அவர் வரவில்லையாம். நீ வந்து விடு.”

 

சரிம்மா என்று போனை வைத்தாள்.

 

உடனே பீரோவை திறந்து என்ன புடவை,என்ன நகை போடலாம் என்று .

யோசித்தாள்.

 

இப்பவே…ஆரம்பித்து விட்டாயா என்று 

முரளி சொல்ல,

“ஏங்க… இதுவே உங்க தங்கைக்கு மாப்பிள்ளை பார்க்கும் போது, இப்படித்தான்  போர்டு மீட்டிங் போவீர்களா “…?

 

“அது எனக்கு  ஏற்ற நாட்களில் நான் ஏற்பாடு செய்துக்  கொள்வேன். இன்று சொல்லி இன்றே வா என்றால் எப்படி வர முடியும். “

“ம்ம்.. அத்தையும் மாமாவும் நல்லவர்கள் தான். அவர்கள் பெத்தது இரண்டும் தான்.-”…என்று சொல்லிக் கொண்டே அறையை விட்டு வெளியேறினான். 

 

“க்கும்”… என்று முகத்தை  சுழித்து  தன் புடவை செலக்ஷனில் மூழ்கினாள்.

 

ஜெனி ஆபீஸ் போக தயாராக இருந்தாள்.

 

மகேந்திரன் தன் பெண்ணிடம், “இன்று ஆபிஸுக்கு  போறியாம்மா”…

“ஆமாம்பா.”

 

“ரொம்ப மழையா இருக்கு நானே உன்னை கொண்டு விடறேன். வெளியே பிரேக் பாஸ்ட் சாப்பிடலாம்.” என்றார்.

புரிந்துக் கொண்டாள்.எதோ பேச வேண்டும் என்று நினைக்கிறார்.

 

முரளி தன்   BMW காரை எடுத்து வர, பெரிய பிளான் 

 போல என்று நினைத்துக் கொண்டு காரில் ஏறி உட்கார்ந்தாள்..

ஒருவரும் பேசவில்லை.

 

அருகிலே லீலா பேலஸில்  காலை உணவு சாப்பிடச் சென்றார்கள்.

“ஜெனிம்மா.. உனக்கு டைம் இருக்கா.”

“இருக்குப்பா  .உங்கள் இருவருடன் இந்த மாதிரி அவுட்டிங் போய் ரொம்ப நாளாச்சுப்பா.”

 

“சரிமா. உனக்கு பிடிச்சதை ஆர்டர் பண்ணு.”

கொரியன் பிரேக் பாஸ்ட், கிம்சி பான் கேக்,  எக் ரோல்ஸ், கிம்சி டோஸ்ட், மற்றும் டல்கோனாகாபி ஆர்டர் செய்தாள்.

மகள் விரும்பி சாப்பிடுவதை மகிழ்ச்சியாக பார்த்தார்.

முரளியும் அவனுக்கு வேண்டியதை ஆர்டர் செய்துக் கொண்டான்.

மூவரும்  சாப்பிட்டுக் கொண்டே  பொதுவான விஷயங்கள்  பேசினர்.

மகேந்திரன் “நீ திருமணமாகி போய்ட்டா இப்படி நேரம் கிடைக்குமா என்று தெரியல .”

‘வாங்கப்பா. இப்பத்தான் பாயிண்டுக்கு வந்து இருக்கீங்க’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.

“உனக்கு கல்யாண் தெரியுமில்ல…”

“உன் சைல்ட்வுட் தோழன். ஞாபகம் இருக்கா. . நாம முதலில்பெசண்ட் நகரில் இருந்தோமே. எதிர்த்த வீடு. விக்ரம் அங்கிளின் மகன். பெரிய மீசை வைத்து இருப்பாரே.நீயும்,  கல்யாணும் சின்ன வயதில் ஒன்றாகவே  இருப்பீர்களே.”

“தெரியும் அண்ணா.லேசா ஞாபகம் இருக்கு. முகம் மறந்து போய் விட்டது. “

 

“இப்போது, விக்ரம்  அங்கிள் பெங்களூரில் இருக்கிறார். மல்டி மில்லினர். எக்கச்சக்க பிஸினெஸ்.

கல்யாணும் அந்த பிஸினெஸ்ஸில் அப்பாவுக்கு துணையா இருக்கான்.”

“வெரிகுட் அண்ணா”…

“அவனைப் பற்றி  உன் அபிப்பிராயம் என்ன”……?

 

“என் அபிப்பிராயமா… அவனைப் பார்த்து பல வருடம் ஆச்சே. நான் என்ன சொல்வது.”

 

“உன்னை கேட்காமல், கல்யாண் உனக்கு பர்பெக்ட் மேட்ச் என்று  திருமணம் நடத்த, பேசி விட்டு வந்து இருக்கோம்.  நாங்க உனக்கு நல்லது தான் செய்வோம். அது உனக்கு புரியணும் “ என்று  மகேந்திரன் அவள் கை பிடித்து பட்டென்று சொல்ல,

இவளுக்கு  முன்கூட்டியே தெரியும் என்பதால் அதிர்ச்சி காண்பிக்கவில்லை.

“அவருக்கும் என்னைப் பார்க்கணும். நானும் பார்த்து பேசணும்.”

 

“ஷ்யூர். ஷ்யூர் .  பெண் பார்க்க ஏற்பாடு செய்கிறேன்.. இப்ப அவன் பிஸினெஸ் காக வேர்ல்டு டூர்  இன்னிக்கு கிளம்பப் போகிறான். வருவதற்கு இரண்டு அல்லது மூன்று மாதங்கள் ஆகலாம்.

உனக்கு எந்த பிரச்சனை இல்லையே.”என்று மகேந்திரன் சொல்ல,

 

“இல்லபா.அவர் டூர் முடிச்சிட்டு வரட்டும்.”

 

“சரிடா. “ அப்பாவும், மகனும் புன்னகைத்துக் கொண்டனர்.

 

“ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.  வேற எதாவது சாப்பிடறியா.” 

 

“ஒன்றும் வேண்டாம்ப்பா.”

 

முரளி “ டெஸர்ட் எதாவது சாப்பிடு.

இங்கு பிரௌனி நல்லா இருக்கும்.”என்று தனக்கு புட்டிங் ஆர்டர் செய்துக் கொண்டே கேட்க,

 

“ஐயோ அண்ணா.. நிஜமா வேண்டாம்.”

 

“சரி மா உன்னை வற்புறுத்தல.”

தனக்கும் டெஸர்ட் வேண்டாம் என்று ஆர்டரை கேன்சல் செய்தான்.

 

“கிளம்பலாப்பா. லேட்டாகி விடும்.”

 

இவர்களை கண்காணித்து கொண்டியிருந்த  பிரசாத் ஆட்கள், “என்னடா இந்தப் பெண் தனியா போவாள்”. என்றார்.

இவள்  அப்பா, அண்ணன் போல இருக்கே.  இப்போ  இவளை தூக்க முடியாது.  பிரசாத் ஸார்கிட்ட  சொல்லிடலாமா”

 

“டேய்.. இருடா. பொறுத்து பார்க்கலாம். சந்தர்ப்பம் கிடைக்கும்டா . இவளை தூக்கலனா இந்த தொழிலுக்கே முழுக்கு போட்டு விட வேண்டியது தான்.

போடா. அந்த காரை பாலோ பண்ணிட்டு போ..” 

 

“அண்ணே…”

“என்னடா . அவங்க ஹோட்டல் சாப்பிட்டு விட்டார்கள் நாம இன்னும் சாப்பிடலன்னே” .

 

“அடி.கழுதை. சாப்பாடா முக்கியம். சுளையா பணம் வாங்கி இருக்கேன். இவளை இன்னிக்கு தூக்கலனா அப்புறம் கஷ்டம் டா”.

“ஏன்னே. எங்க போயிட போறா .வீடு புகுந்து கூட தூக்கலாம்.”

 

“டேய். மூடிட்டு வாடா. நானே பதற்றத்தில் இருக்கேன்.போ… வண்டி  லெப்ட்ல  போகுது பாரு.” 

கார் இடைவெளி விட்டு தொடர்ந்தது. ஆனால், .டிராபிக் நெரிசலில் தொடர முடியாமல் போனது.

“டேய்.. அந்த வண்டி யூ டர்ன் எடுத்து திரும்பி விட்டதடா.”

“ ம்ம்ம் – விடாதே. நீயும் திரும்பு. ”சர்ரென்று க்ரீச் என்ற ஒலியுடன் திரும்பினான்.

.

போக்குவரத்து போலீசார் விசில் ஊத நிற்காமல் போனது. 

இவ்வளவு வேகம் எதற்கு. உடனே தன் சகாக்களை விட்டு பாலோ பண்ண சொன்னார்.

டிராபிக் போலீஸார் தன் பைக்கில் போய் அவர்களை பிடித்தார்.

 

“ஸார். ஸார்  அர்ஜென்டா போகணும் ஸார்.. விடுங்க ஸார்.”

“இறங்குடா முதலில்.. அதற்குள் இன்ஸ்பெக்டர் டீமும் வந்து விட வண்டியை செக் பண்ணுங்கள்.”

வண்டிசாவியை எடுத்து விட்டு எல்லோரையும் ஓரமாக நிற்க வைத்தார்

 

அவர்கள் வந்த பொலீரோ   பின்னால், பொருள் இருந்ததைக் கண்டு ஸார்…. “பொருள் இருக்கு ஸார்” என்று கான்ஸ்டபிள் சொல்ல,

போய் பார்த்தார்கள்.  

“எதுக்குடா இத்தனை பொருள் வைத்து இருக்கிறீர்கள்.”

 

“எங்கள் பாதுகாப்புக்கும் வைத்து இருக்கிறோம்”.

 

“யாருடா  நீங்க”…?

“நாங்க   ஐ.டி யில் வேலை செய்கிறோம்”  என்று ஒருவன் சொல்ல 

பொளீச் என்று கன்னத்தில் அறை விட்டார்.

“ஜ.டி லா வேலை செய்யற…”.!!!!..

“மூஞ்சியை  பாரு.”

“நடங்க  ஸ்டேஷனுக்கு.”

“கான்ஸ்டபிள் வண்டியை ஸ்டேஷனுக்கு எடுத்துட்டு வாங்க.” 

 

“ஏண்ணே.. சாப்பிட்டு போலாம் என்று சொன்னேன் . கேட்கல.  லாடம் கட்ட போறாங்க .பசில  அடி உதை தாங்க முடியாது.”

“சரிடா வாயை திறக்காதே.”

சரி. என்று சைகை செய்து கொண்டார்கள்.

“ஒரு மணி நேரத்தில் வெளியே வந்து விடலாம். நாம் பார்க்காத போலீஸா.”

“எம்.எல். ஏ அண்ணனுக்கு   இந்த போலீஸ் காரனுக்கு தெரியாமல் மெஸேஜ் போடவா.”

“வேண்டாம். அண்ணனுக்கு செய்தி போயிருக்கும்.வந்து விடுவார். “

முரளியின் கார் ஜெனியின் அலுவலகத்தை நோக்கி  சென்று கொண்டியிருந்தது.

அப்போது, ஜெனிக்கு போன் அலுவலகத்திலிருந்து அவளோட கொலீக் ஒருவன் மெஸேஜ் செய்திருந்தான்.

 ஜெனி   ஒரு முக்கியமான விஷயம்.

சொல்லடா.

“நம்ப அமலாவிற்கு திருமணம் நட்ந்து விட்டதாம். மெயிலில்  ரெஸிக்கேஷன் லெட்டர் அனுப்பி இருக்காள்”.

“என்னது”… என்று அதிர்ந்தாள்.

“டேய்…விளையாடத. எனக்குத்   தெரியாமல் சான்ஸே இல்லை. நான் நம்ப மாட்டேன்..”

“உண்மைதான் ஜெனி”-

“சரி. நான் ஆபீஸுக்கு தான் வந்து கொண்டு இருக்கிறேன்.” என்று சாட்டிங்கை முடித்து விட்டு அமலாவை நினைத்து கலவரமடைந்தாள்.

டிரெயினில் கூட பேசினளே. திருநெல் வேலி இறங்கி விட்டோம் என்று கூட சொன்னாளே. திருமணம் என்று எந்த அறிகுறியும் இல்லையே…அப்படி யிருந்தால் எனக்கு சொல்லாமல் செய்ய  மாட்டாளே.  என்ன நடந்து இருக்கும்.’

‘கடவுளே… அவள் எதாவது இக்கட்டில் மாட்டி இருக்காளோ.’

ஜெனியின் முகம்  கலவரமடைந்தது.

முரளியின் கார்  மெல்ல  டைடல் பார்க்கில் நுழைந்தது.

இறங்கினாள்.

பை என்று சொல்லி விட்டு உள்ளே சென்றாள்.

இது தான் அண்ணனும் ,அப்பாவும் அவளை கடைசியாக பார்ப்பது. 

 

தொடரும்.

(ஜெனிக்கு  என்னவாயிற்று. அமலாவின் திருமண வாழ்க்கை எப்படி போகும். கதிர் எங்கே போனான்.

ஷாலினியின் ஆசைப்படி கதிருடன்  திருமணம்  நடந்ததா. …. இனி வரும் அத்யாயங்களில்.)

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

   

 

.

.

 

.

 

 

 

 

 

 

 

 

 

 

  

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page