22. அவளை மறக்கத்தான்

ஜெனியை கடத்தச் சென்ற அடியாட்கள் போலீசாரிடம் மாட்டிக் கொண்டார்கள்.

அங்கே போலீசார் அவர்களை அடித்து, துவைத்து விட்டு வெறும் ஜட்டியுடன்  குந்த  வைத்தனர்.

“அய்யோ அண்ணே யாரும் கைவைக்க மாட்டார்கள். உடனே எம்.எல்.ஏவுக்கு செய்தி போயிருக்கும் என்று சொன்ன” ‘

“டேய் இருடா. என் வாயை அடிச்சி உடைச்சிதற்கு பதில், உன் வாயை அடிச்சி உடைந்து இருக்கலாம்.”

“போலீஸ் கிட்ட நானா என் மேல் கை வச்ச நடக்கறதே வேற என்று  வீரவசனம் பேசினேன்.”

அந்த வழியாக ஒரு கான்ஸ்டபிள் போகும் போது, லத்தியில் இரண்டு போட்டு “வாயை பொத்திக்கிட்டு இருக்கணும். எவனும் பேசக்கூடாது “ என்று எச்சரித்து போய் விட்டார்.

வேறு ஒரு போலீஸ்காரர் இவர்களை பார்த்து  பைல் தேடும் சாக்கில். அருகே போனான்.

“டேய்… எம்.எல் ஏ. தன் சின்ன  வீட்டு  வளர்ப்பு நாய் செத்து போச்சினு, தூத்துகுடி போய் இருக்கார். வர நான்கு நாட்கள் ஆகும். போனும் எடுக்கல. நீங்களே இன்ஸ்பெக்டர் காலில் விழுந்து  போய் விடுங்கள்.”

வாயில் அடிவாங்கியவன் “ யோவ். மாதமாதம்  சுளையா  பணம் வாங்கற.  எதாவது பண்ணுய்யா”.

 

“டேய் ரொம்ப பேசாத.. புது இன்ஸ்பெக்டர்.  மரியாதையா அவரிடம் பேசி, வெளியே போகப் பாருங்க.”

இன்ஸ்பெக்டர் விறைப்பாக  வந்தார்.

உடனே ஒருவர் அவருக்கு சுடசுட காபி பிளாஸ்க்கிலிருந்து ஊற்றி கொடுத்தான்.

 

“நல்லவேளை மழை விட்டது.  இல்லையென்றால்  நசநசவென்று இருக்கும்.”

 

இவர்கள் நால்வரும் ஸார் என்று அழைத்தார்கள்.

 

“என்னங்கடா”

 

“நாங்க ஒரு தப்பும் பண்ணல ஸார்”.

 

“பண்றதுக்காகத்தானே இவ்வளவு அரிவாள், பட்டாக் கத்தி எடுத்துக் கொண்டு போகிறீர்கள்”

 

“அய்யோ ஸார்……   அப்படி இல்ல  ஸார்.”

 

“எங்க  ஊர் காட்டுப் பகுதியில் இருக்கிறது. அங்கு போகும் போது இதெல்லாம் வேணும் ஸார்.”

“எதுக்குடா    காட்டில இருக்கிற மிருகங்களை  கொல்வதற்கா”…?

“இல்ல. ஸார். காட்டைத் தாண்டி போகணும் வழியில் பாம்பு  தேளு இதெல்லாம் வரும். பாம்பு என்றால் கடுமையான விஷம்  உள்ள பாம்பு. புதர் மாதிரி இருக்கும். அதையெல்லாம் வெட்டுவதற்கு எடுத்துக் கொண்டு போகிறோம். எங்க மேலே எதாவது கிரிமிலை கேஸ்  எதாவது இருக்கா என்று செக் பண்ணுங்க ஸார்.”

“எந்த ஊரு டா”

“நஞ்சுண்டபுரம் ஸார். “

சரி என்று தலையாட்டினார்.

 

அப்போது, டெலிபோன் ஒலித்தது.

 

மந்திரி ஸ்டேஷன் விசிட் வருகிறார் என்ற செய்தி வந்தது..

 

“சரி. இவனுங்களை விட்டு விடுவோம். 

மந்திரி வரும் போது எதாவது பிரச்சனை ஆகிவிடப் போகிறது.”

எஸ்.ஐ கூப்பிட்டு, “இவனுங்களை போட்டோ  எடுத்து வைத்துக்  கொண்டு, கையெழுத்து வாங்கிக் கொண்டு அனுப்பி விடு .” 

 

எல்லோருக்கும் உடை கொடுத்து, போட்டோ எடுக்கப்பட்டது.

 

வெளியே வந்ததும் “அப்பாடா. எப்படியோ தப்பித்து விட்டோம்.”

 

“உங்களை எங்காவது பார்த்தேன். தொலைத்து விடுவேன் போங்கடா”. என்று விரட்டி விட்டார்.

 

“அண்ணே.. சூப்பரா சொல்லி சமாளிச்சேண்ண.”

“ஊர்  பேர் என்ன சொன்ன “

“நஞ்சுண்ட புரம்”…… 

“அது எங்கே அண்ணே இருக்கு.” 

“யாருக்குத் தெரியும்.”

“என் ஆயா டிவியில் டிராமா பார்க்கும். அதுல வரும்டா.”

ஹாஹா என்று சிரித்தார்கள்.

“வாடா சாப்பிட போகலாம்.”

“அப்பாடி இப்பவாவது கூப்பிட்டியே”.

“ஒருவன் அதோ ஒரு தள்ளுவண்டி கடை இருக்கே.”

“அதெல்லாம் . வேண்டாம்.”

“நல்ல ஏஸி ஹோட்டலா பாரு. அந்த அடி அடிச்சிட்டான்.”

 

“போலீஸ் ஸ்டேஷனை விட்டு தள்ளிப்போ. மறுபடியும் ஆள் இல்லை என்று கூப்பிட போகிறார்கள்.”

தங்கள் பொலீரோவில் உட்கார்ந்து போய் விட்டார்கள்.

 

பிரசாத் கொடுத்த பணத்தில் இஷ்டத்திற்கு ஆர்டர் போட்டு சாப்பிட்டார்கள்.

 

அப்போது, பிரசாத்திடமிருந்து போன் வந்தது.

 

“காரியம் சக்ஸஸா.”

 

“இதோ  ஸார்.. இப்ப தூக்கிடுவோம்.”

 

“காலையில் என்னடா பண்ணீர்கள். “

 

“ஸார்..அந்தப் பெண் தனியாக போகும்  என்றீர்கள். அது தனியா போகல. அது கூட அண்ணன், அப்பா போலும்.. .

இருந்தார்கள்.”

 

இப்ப இந்த ஹோட்டல் பேரை பார்த்தான்.

விஹார் என்று இருந்தது.

“அந்தப் பெண் விஹார் ஹோட்டலுக்கு வந்து இருக்கு.”  

“டேய்.. அவ ஏன்டா அங்க வரப்போற. அவ ஆபீஸ் டைடல் பார்க்காச்சே.”

“அங்க  வந்து  இருக்க மாட்டா. நல்லா பாருடா. யாரையாவது தூக்கிட போறீங்க.”

 

டைடல் பார்க் நோட் பண்ணிக் கொண்டான்.

 

“ஸார். கவலைப்படாதீங்க. நான் பார்த்துக் கொள்கிறேன்.”

 

போனை வைத்து விட்டு, சர்வரிடம் ஸ்வீட்ஸ் எடுத்து வரச் சொன்னான்.

 

ஹோட்டலில் பணம் ஜி.பே செய்து விட்டு, காரை  டைடல் பார்க் போகச் சொன்னான்.

 

“எப்படின்னே”!!!!…

 

“பிரசாத் ஸார் சொன்னது .

அந்தப்பெண் அங்கத் தான் வேலை செய்யுது. அண்ணனும். அப்பாவும் பெண்ணை அங்கத் தான் விட்டு இருக்கணும் .அவர்களே வந்து பிக்கப்பா என்று தெரியவில்லை. அந்த கேப்பில் அவளை தூக்கிடணும் என்று புரியுதா. “

“டேய் போட்டோவை நல்லா பார்த்துக் கொள்ளுங்கள். “

“தனி தனியா போறோம். ஆபீஸ் நேரத்தில் கேண்டீன் வராத பெண்களே இருக்க முடியாது.”

“அங்க நான் போறேன்.”

“அண்ணே  கேன்டீனுக்கு நான் போறேன்னே. “

 

“எதுக்கு .. நல்லா திங்கரத்துக்கா”

 

“மூடிட்டு. நான் சொல்ற இடத்துக்கு போ” என்று சொல்லி வியூகம் அமைத்துக் கொடுத்தான்.

 

கார் டைடல் பார்க்கில் நுழைந்தது.

 

……………………….…

ஜெனி ஆபீஸுக்குள் நுழைந்தாள்.

பெய்த மழைக்கு ஏஸி காற்று  மிதமிஞ்சிய குளிரை வழங்கியது.

 

எதிர்பட்டோர் குட்மார்னிங் சொன்னார்கள் பதிலுக்கு  இவளும் சொல்லிவிட்டு, தன் கேபினுக்கு போனாள்.

 

அருகில் இருந்தவர். “ஏன் இன்னிக்கு லேட்டா “என்றார்.

தலையசைப்பில் ஆமாம் என்றாள்.

இவளுக்கு மெஸேஜ் செய்தவன் ., அவசரமாக இவளிடத்தில் வந்தான். 

“பாரு. அமலா மெயில் அனுப்பி இருக்காள்.” படித்தாள்.

அவன் சொன்னது உண்மைதான்..

அவளுக்கு  அழணும் போல  இருந்தது.

 

எதோ ஒன்று உள்ளுக்குள்  உடைந்தது போல் இருந்தது.

கொலீக் ஆறுதல் சொன்னான்.

“விடுப்பா அவளுக்கு  என்ன நிர்பந்தமோ. ஆனால்,ஏன் போனை ஸ்விட்ச் ஆப் செய்து இருக்கிறாள்  .. அது மட்டும் உதைக்குது. திருமணம் மகிழ்ச்சியான விஷயம் தானே..சொல்லி இருக்கலாம்.”

 

மெயில் அனுப்ப தெரிந்தவளுக்கு .ஒரு போன் பண்ணி இருக்கலாமே என்று மருகினாள்.

அப்போது இவளுக்கு ஒரு மெயில் H.R யிடமிருந்து வந்தது

என்னவென்று பார்த்தாள்.

 

ஹுர்ரே என்று  கத்தினாள் .

நல்ல வேளை ஒருவரும் பார்க்கவில்லை.

H.R. அவளை தன் கேபினுக்கு வருமாறு அழைத்தார்.

கே|பினுக்குள்  போனாள்.

நடுத்தர வயது உள்ளவர். ரொம்பவும் தன்மையா பேசுவார். சிடுசிடு என்றெல்லாம் இருக்க மாட்டார். அட்டகாசமாக உடை உடுத்திக் கொண்டு வருவார்.

இவள் உள்ளே போனதும், “வாம்மா ஜெனி” என்றார்.

“லண்டனுக்கு போவதைப் பற்றி முன்பே சொல்லி இருந்தேன். ஒரு வாரத்தில் கிளம்ப வேண்டியிருக்கும் என்று நினைத்தேன்.

ஆனால் ஒரு  பெரிய இஷ்யூ அங்கு இருக்கிறது.

நீ   போய்  சரி பண்ணனும்”

“போறேன் ஸார்.”

“இல்லமா… ஒரு வாரத்தில் இல்லை. இன்றே போக வேண்டும்.

கடைசி நேரத்தில் சொல்றேன் என்று நினைக்காதே.  உனக்குத் தான் விசா பிராஸஸ்  நடந்து கொண்டியிருந்தது. உனக்கு பதில் வேறு யாரையும் அனுப்ப  முடியாது. ஸாரிமா. நீ இன்றே கிளம்ப வேண்டும். வீட்டில் ஒப்புக் கொள்வார்களா.”.

அவளுக்கு பழம் நழுவி பாலில் விழுந்தது போல் இருந்தது.

எப்படி ஒரு வாரம் நடிக்கப் போகிறேன் என்று பயந்துக் கொண்டியிருந்தாள்.

அதுவாகவே சால்வ் ஆகிவிட்டது.

அவரிடம், “ நான் முன்பே வீட்டில் . இந்த வாரம் லண்டனுக்கு போகப் போறேன் என்று சொல்லி விட்டேன். இன்னிக்கே போனால் கூட பிரச்சனையில்லை.”

“ரொம்ப மகிழ்ச்சி மா. உனக்கு அங்கே எல்லா வசதியும் நம் ஆபீஸ் மூலமா கிடைக்கும். உன்னை ரிசிவ் பண்ண ராபர்ட் என்பவன் வருவான். நீ பார்த்துக் கொள் “ என்று கைகுலுக்கி விடை பெற்றார்

அதற்குள் அவள் டீமுக்கு விஷயம் தெரிந்து அவளை வாழ்த்தினார்கள்.

 

எல்லோரும் டிரீட் கேட்டார்கள்.

“இன்றே போவதால்  ஹோட்டலுக்கு அழைத்து போக முடியாது.

நம்ப கேண்டீனுக்கு போகலாம்.செம வெரைட்டி கிடைக்கும்.”

எல்லோரும் மகிழ்ச்சியாக ஒப்புக் கொண்டாரகள்.

ஒகே. லன்ச் பிரேக்கில்  போகலாம். ‘  எனக்கு  இப்ப கொஞ்சம் வேலை இருக்கு.என்று  போனாள்.

முதலில் தினேஷ்க்கு போன் செய்தாள்.

அவனிடம் விஷயத்தை சொல்லி உடனே வர முடியுமா என்று கேட்டாள்.

சரியாக 12 மணிக்கு  வருகிறேன் என்றான்.

ராஜம்மாவிற்கு போன் செய்து, வீட்டில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று கேட்டாள்.

ஒருவரும் இல்லை பாப்பா.  மதி பாப்பா  அவங்க அம்மா  வீட்டிற்கு போயிருக்கு.

அம்மா எப்போதும் போல்  என்றாள்.

அண்ணனும் , அப்பாவும் வீட்டில் இருக்க மாட்டார்கள் என்று இவளுக்கே 

தெரியும். 

“எதுக்கு பாப்பா.. கேட்கற, “

“என் அறையில் ஒரு பெரிய பொட்டி, அப்புறம் சின்ன பொட்டி இருக்கும். அதை அப்படியே எடுத்துக் கொண்டு,பெரிய வண்டியில் டிரைவருடன் நீங்களும் வாருங்கள்” என்றாள்.

“சரி பாப்பா.”

ஜெனி முன்பே லண்டனுக்கு போவதற்கு தயாராக இருந்தாள் என்று ராஜம்மாவிற்கு தெரியும்.

ராஜம்மா டிரைவரை கூப்பிட்டு அந்த பெரிய பெட்டியை காரில் வைக்கச் சொன்னாள்.

வீட்டில் இருந்த  ஸ்னாக்ஸ் அயிட்டங்களை ஒரு ஜிப்லாக் பையில் போட்டு  அழகாக பேக்   செய்துக் கொண்டு சிறிய பெட்டியுடன் காரில் ஏறினாள்.

பாப்பா லண்டனுக்கு போவதை முன்கூட்டியே சொல்லி இருந்தது. இப்போது. அதற்கான வேளை வந்தது. போலும். பாப்பா இல்லாமல் அந்த வீட்டில் எப்படி இருப்பது. மதி பாப்பா நம்மை உண்டு இல்லை என்று பண்ணி விடும்’ என்று மனதிற்குள் நினைத்து கொண்டு கவலையுடன் காணப்பட்டாள்..

ஒருநாள் இந்த  நேரம் வரும் என்று முன்பே தெரிந்து வைத்திருந்தாள். 

 

தினேஷ் வந்தான்.

அங்கிருந்த பெஞ்சில் உட்கார்ந்தார்கள். ஈரமாக இருந்தது. தன் கர்சீப்பில் துடைத்து விட்டு அமர்ந்தார்கள்.

 

“என்ன திடீரன்று அவசரமாக போகிறாய்”.

சொன்னாள்.

“நீ எப்பொழுது வருவாய்”

“நான் உனக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாம் என்று நினைத்திருந்தேன்.

நீ கொடுத்து விட்டாய்.”

“என்ன சர்ப்ரைஸ் “… 

 

“நானும் இன்னும் ஒரே மாதத்தில் வந்து  விடுவேன்.”

“விசா பிராஸஸிங் நடக்கின்றது. அம்மாவையும் அப்பாவையும்  பாதுகாப்பாக அவர்கள் கிராமத்தில் விடவேண்டும். அதையெல்லாம் முடித்துக் கொண்டு வந்து விடுவேன்”

 

“ஹே… சூப்பர் பா.ஆனால்  இந்த விஷயம் ஒருவருக்கும் தெரிய வேண்டாம். என் வீட்டிலிருந்து  வந்தாலும் வருவார்கள் .பிரசாத் கண்டிப்பாக  வருவான். அவனுக்கு மட்டும் நீ லண்டன் வருவது  தெரிய வேண்டாம்.  கேர்புல்ல   இருப்பா.”

 

“அவனை  விடு .உன்னை  விட்டு எப்படி இருக்கப் போகிறேனோ.”

 

“கொஞ்ச நாள் தானே”. இருவரும் பிரிவை எண்ணி நெருக்கமாக  அமர்ந்திருந்தார்கள்.அவன் தோளில் இவள் தஞ்சமடைய, இவன் கை அவள் தோளை அணைத்து இருந்தது.

 

பிரசாத்தின் ஆட்களில் ஒருவன் இவர்களை   உன்னிப்பாக கவனித்தான்.

 

தொடரும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page