23. அவளை மறக்கத் தான்.

23. அவளை மறக்கத்தான்.

சூரியன் மெல்ல எட்டிப்பார்த்ததும்,  நோ நோ என்று மேகம், சென்னை மக்கள் பிழைத்து போகட்டும் என்ற கரிசனத்தில்  சூரியனை மூடிக்கொண்டது.

சூரியனும் போனால் போகிறது என்று 

மேகங்கள் ஆடிய கண்ணாமூச்சி விளையாட்டில் ஒளிந்துக் கொண்டார்.

ஜெனியும், தினேஷ்ம் அந்தவெய்யில்லா பகல் வேளையில்  ஒரு பெஞ்சில் அமர்ந்து  பேசிக் கொண்டு இருந்தனர்.

அதைப் பார்த்த பிரசாத்தின் அடியாட்களின் ஒருவன்  காதல் புரியும் காதலர்களை ஆர்வமிகுதியால் உன்னிப்பாக பார்த்தான்.

அவனுக்கு அவர்களின் காதல் தெரிந்ததே ஒழிய, ஜெனியை அடையாளம் தெரியவில்லை.

ரொம்ப உற்று பார்த்தால்  தர்ம அடி விழுப் போகிறது என்று நகர்ந்து விட்டான்.

 

ஜெனியும், தினேஷ்ம்   டைடல் பார்க்  புட்கோர்ட்டுக்குச் சென்றார்கள்.

அங்கு ஏற்கனவே  டீம் நண்பர்கள் காத்துக் கொண்டியிருந்தனர்..

 

இவர்கள் போனதும், ஹோ.. என்ற கூச்சலைத் தொடர்ந்து  கைத்தட்டினார்கள்.

தினேஷை அறிமுக படுத்தினாள்..

என் நண்பர் டாக்டர்  தினேஷ் என்று மட்டும் சொன்னாள் .

 

அவர்கள் டீமில் முதன்முதலில் ஜெனியே வெளிநாடு செல்வதால்,

கேக் வெட்டச் செய்தார்கள்.

 

அவர்களுக்கு பிடித்த உணவை   அவர்களை ஆர்டர் செய்யச் சொன்னாள்.

 

இந்த கலாட்டாவில் தினேஷ் கலந்து கொண்டாலும், அவளை விட்டு பிரிய போகிற  வருத்தம் முகத்தில இருந்தது.

இவள் அதை புரிந்துக் கொண்டு யாருக்கும் தெரியாமல் அவன் கையை கோர்த்துக் கொண்டாள்.

 

இதற்கிடையில், பிரசாத்தின் அடியாட்களில்   அந்த சாப்பாட்டு ராமன்

,தன் கையில் போனை வைத்துக் கொண்டு ஒவ்வொரு பெண்ணாக பார்த்துக் கொண்டு வர, பாப் தலை கட்டிங்குடன் இருந்த ஒரு பெண்ணை உற்று பார்க்க,  அவள் யாருக்கோ போன் செய்தாள்.

செக்யூரிட்டி நால்வர் வந்தனர்.

அவர்களிடம் அவனை கை  காண்பித்து, சொல்ல, அவர்கள் அவனிடம்  போய்..  யார் வேண்டும், யாரை பார்க்க  வேண்டும் என்று கேட்க , “நான் யாரை வேண்டுமானாலும் பார்ப்பேன். உனக்கெதற்கு  வாட்ச்மேன்” என்றான்.

“என்னது வாட்ச் மேனா…….!!

“ஆமாம். இந்த உடை அது தானே”.

 

,அவன் அந்த டைடல் பார்க்கிலுள்ள எந்த அலுவலகத்திற்கும் சம்பந்தம் இல்லாதவன்  என்று புரிந்ததும்  அவனை வெளியேற்ற முயற்சி செய்தனர். 

 

அவன் முரண்டு பிடித்ததால், இழுத்துக்கொண்டு போயினர்.

போகும் போது, அவர்களின் தலைவனை பார்த்தான்.

“பாஸ்,என்னை இப்படி இழுத்துக் கொண்டு போகிறர்களே நீங்கள் பார்க்காததுபோல் இருக்கிறீர்களே.” என்று அவனையும் கோர்த்து விட்டான்.

 

“யாருடா உன் பாஸ்’. என்று  கேட்க அவனை காண்பித்தான்.

அவனையும் இழுத்துக்கொண்டு வெளியே தள்ளினர்.

 

அவன் மண்டையிலே நாலு கொட்டுகொட்டினான்.

“நான்தான் உன்னை புட் கோர்ட் பக்கம் வரக்கூடாது என்றேனே. ஏண்டா வந்த”.

 

“எனக்கு அது புட் கோர்ட் என்று தெரியாது பாஸ்.”

 

“அடப்பாவி காரியத்தை கெடுத்திட்டடா”

“அவ இப்ப தான்டா உள்ளே நுழைந்தாள்.”

 

“அப்பாவுக்கு ஆக்ஸிடென்ட் என்று தனியே வரவழைத்து இருக்கலாம்.”

 

மற்ற இருவரையும் கூப்பிட்டான்.

 

“போதும்டா. நீங்க பார்த்த  இலட்சணம்.

வாங்கடா”…

 

அவர்கள் வந்தார்கள். தங்கள் காரிலே அமர்ந்திருந்தார்கள்.

“டேய்…தடிமாடுகளா..உன்னிப்பா கவனிக்கனும் அவ வந்தால்  வாயை பொத்தியாவது காரில் ஏற்றி விட வேண்டும்.”

 

“ஓகே பாஸ்”. என்று  .வைத்த கண் வாங்காமல் நால்வரும் ஒரே திசையை யே பார்த்துக்கொண்டியிருந்தார்கள்.

ஜெனிக்கு ராஜம்மா போன் செய்து தான் வந்து விட்டதாக சொன்னார்.

 

கலகலப்பா, சிரித்து மனது நிறைவாக சாப்பிட்டு  தன் டீமிடம், “ ஒகே  கைஸ்..எனக்கு பிளைட்டுக்கு நேரமாச்சு. கிளம்பறேன்.  “ என்றதும்,

“ஒருவன் உன் புராஜெக்ட் 3,4 மாதங்களில் முடிந்து விடும் அல்லவா. பார்ப்போம் “ என்றான்.

 

“ஆமாம்”என்றாள். வேறு எதுவும் சொல்லவில்லை.

 

அனைவரும் கார் வரை வருவதாக சொன்னார்கள்.

 

ராஜம்மாவை பார்த்தவுடன், கட்டி பிடித்துக் கொண்டாள்..

 

“என்ன பாப்பா.. வெளிநாடு போறியா”?

“ஆமாம்”  என்றதும்,

அவருக்கு  கண் கலங்கி  விட்டது.

 

“இதோ பாருங்க ராஜம்மா என்னை, என் அம்மாவை விட நல்லா பார்த்துக் கொண்டீர்கள். அதற்கு நான் என்றென்றும் கடமைபட்டு உள்ளேன்.

நீங்க, சீக்கிரம் கல்யாணம் பண்ண வேண்டும்”.

“என்னோட சிறு அன்பளிப்பு  உங்க போனில் பாருங்கள்” என்றாள்..

“என்ன பாப்பா.. பணம் அனுப்பி இருக்கே. ஒன்றுக்கு பக்கத்தில் இத்தனை சைபர் வருகிறதே.”

“ஒரு லட்சம் ரூபாய். என் திருமண பரிசு என்னால் முடிந்தது.”

“இவ்வளவா …….? எனக்கு எதற்கு இவ்வளவு  பணம்.”

“உங்களவருடன் புதிதாக வாழ்க்கை ஆரம்பிக்க வேண்டாமா”

ராஜம்மாவிற்கு வெட்கம் வந்து, ஜெனியின் பாசம் பார்த்து அழுதாள்.

“அழாதீர்கள் . நான் கிளம்புகிறேன்.” 

 

டிரைவரிடம் சூட்கேஸையை தினேஷ் கொண்டு வந்த ஆடி காரில் வைக்கச் சொன்னாள்.

டிரைவர் கையில் 10,000 ரூபாய் கொடுத்தாள்.

மிக்க நன்றி மேடம் ன்று சொல்லி பெற்றுக் கொண்டான்.

 சிரிப்பு சத்தமும் சலசலப்பு கேட்கவே,  அது வந்த திசையில் அடியாட்கள் பார்க்க, ஜெனி நண்பர்கள் புடை சூழ நின்று கொண்டியிருந்தாள்.

“பாஸ்… அவ வாயை பொத்தி காரில் ஏற்றலாமா?”

“யாருடா இவன். இத்தனை பேர் மத்தியில் நிற்கிறாள். இப்ப போய் வாயை பொத்தப் போறானாம். லூசு பயலே.”

எல்லோரிடமும்  பை சொல்லி தினேஷ்டன் காரில் ஏறி அமர்ந்தாள்.

கையசைத்து விடை பெற்றாள்..

கார் நார்ந்தது.

“டேய்.. வண்டியை எடுங்கடா”.

இவர்கள் கார் அவர்களை பாலோ செய்தது.

“ஒருத்தன் தான் இருக்கிறான் அவன் மண்டையிலே ஒரே போடு போட்டாவது அவளை தூக்க வேண்டும்.”.

வண்டி ஓட்டுபவனிடம், “இதோ பாருடா உன் சாகசத்தை காண்பித்து  போலீஸிடம் மாட்டி விடாதே. பார்த்து வண்டியை ஓட்டு.”.

 

கார் ஏர்போர்ட்டை நோக்கி போய்க் கொண்டியிருந்தது.

 

அங்கே, பிரசாத், தன் அம்மா, அப்பா,

தங்கையுடன் அப்பா  பார்த்து வைத்த

பெண்ணை பார்க்க போய் கொண்டியிருந்தான்.

 

அவனுக்குள் பதட்டமாக இருந்தது. அதை வெளியே காண்பிக்கவும் முடியவில்லை : அகத்தில் ஒன்றை வைத்து முகத்தில் இயல்பான இருப்பது போல் காண்பிக்க பிரயதனப்பட்டுக்கொண்டியிருந்தான்.

பாம்பின் கால் பாம்பறியும்  என்பது போல்

மதிவதனி.”என்னண்னா  முகம்  ஒரு மாதிரி இருக்கே. எதோ தீவிர யோசனையுடன் இருக்கிறாய் போல இருக்கே.”

திடுக்கிட்டு விழித்த அவன்  “என்ன  கேட்டாய்  “என்று கேட்க,

மறுபடியும் சொன்னாள்.

“அதெல்லாம் ஒன்றுமில்லை”.

“பேசாமல் வாடி.  பெண் பார்க்க போனால் நெர்வஸாக இருக்காதா” என்று அம்மா சொல்ல,

 

“ஆமாம்மா. லைட்டா நெர்வஸா இருக்கு’என்று தன் கர்சீப்பால் முகத்தை அழுந்த துடைத்துக்கொண்டான்.

 

“போட்டோ பார்த்தியாடா.” 

 

“இல்லம்மா.”

மதி, “எனக்கு காண்பிக்க வே இல்லையே.”என்று முகத்தை கோணினாள்.

“பரவாயில்லை அதான் நேரிலே பார்க்க போகிறோமே. அப்பொழுது தான் த்ரிலிங்க இருக்கும்.”என்று ராஜேஸ்வரி சொல்ல,

 

“அதுவும் சரிதான்.”என்றாள்..

 

பனையூரில் பெரிய  பங்களா முன் கார் நின்றது.

 

கார் ஹார்ன் சத்தம் கேட்டதும்,அந்த

பிரம்மாண்டமான  கேட்டினை வாட்ச் திறந்து சல்யூட் அடித்தான்.

 

“வீட்டைப் பார் பிரசாத்”.

மதி.” என்னம்மா இவ்வளவு பெரிய வீடா இருக்கு.முரளி வீடும்  பெரியது. நம் வீடும் பெரியது. இது அதையெல்லாம் விட பெரியதாக இருக்கிறதம்மா”.

போர்டிகோவில் கார் நின்றதும், வாசலில் நின்று இவர்களை வரவேற்றார்கள்.

 

சம்பிரயாதமான விசாரிப்பிற்குப்பின்

பெண் வரவழைக்கப் பட்டாள்.

 

சாதாரணமாக இருந்தாள். பெரிய அழகி எல்லாம் கிடையாது.

 

எவ்வளவு பெரிய அழகியாய் இருந்தாலும், அவன்  அவளை திருமணம் செய்யும் நோக்கில் பெண் பார்க்க வரவில்லை.

 

ஜெனியை அவன் ஆள் வைத்து கடத்தும் போது,  அவன் மேல் சந்தேகம் எதுவும் வராமல் இருக்க வேண்டும். அதற்காக வந்தான்.

 

பெண்ணிடம் பெயர் என்ன மதி கேட்க

“பிருந்தா”  என்றாள்.

 

அவளின் அப்பா “எனக்கு இரண்டு முறை ஹார்ட் அட்டாக்  வந்தது. அப்போதிலிருந்து  என் மகள் தான் எங்கள் பிஸினெஸ்ஸை கவனித்து கொள்கிறாள்.

லண்டனிலில் M.B.A முடித்து இருக்கிறாள்”…

பிரசாத்தின்  தந்தை கருணாகரன்  பிருந்தாவிடம் பிஸினெஸ் பற்றி பேச, அவளின் பதிலில் அசந்து போனார்.

இவ்வளவு தெளிவுடன் இருக்கிறாள். நல்ல ஞானம் என்று ஓபனாகவே மெச்சினார். இவள் தான்  பிரசாத்திற்கு கட்டி வைக்க வைக்க வேண்டும்.  எப்படியும் உதவாக்கரையாக இருப்பவனை  மேலே கொண்டு வருவாள் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. அவன் அடிப்படையில் கெட்டவன் கிடையாது.  சேர்க்கை அவனை தடம் புரண்ட வைத்து விட்டது. தனக்குப் பின்

அவன்  தானே பிஸினெஸ்லை பார்த்துக் கொள்ள வேண்டும்.ஏற்கனவே சிலது லாஸ்ஸில் போகிறது.

இந்த திருமணம் நடந்தால், சரிபண்ணி விடலாம் என்று மனதிற்குள் நினைத்தார்.

 

“மாமா.. காபி எடுத்துக் கொள்ளுங்கள்”. என்று  வாய் நிறைய பாசமாக கூப்பிட்ட பிருந்தாவின் குரல் அவரின் எண்ணவோட்டத்தை தடுத்தது.

 

பிறகு வீட்டை சுற்றி பார்த்தார்கள்.

 

ஒவ்வொரு அறையிலிருந்தும்  கடற்கரையின்  முழு அழகும் தெரிவது  போல் அமைத்து இருந்தார்கள்.

 

பார்க்கவே மனதிற்கு ரம்மியமாக இருந்தது.

 

பிருந்தா தன் லைப்ரரி அறையை காண்பித்தாள்.

 

“இத்தனை புத்தகங்கள் நீ  படிப்பியாம்மா” என்று  ராஜேஸ்வரி கேட்க, “ஆமாம் அத்தை. எனக்கு புத்தகங்கள் என்றால் விருப்பம். என் சுவாசம் மாதிரி,”என்றதும், தன் மகளையும், மகனையும் ஒரு முறை பார்த்தாள்.

 

இவ்வளவு சூட்டிகையான பெண், தன் மகனுக்கு பொருத்தமா என்ற  சந்தேகம் அவருக்கு வந்து  விட்டது.

 

பிரசாத் பெரிதாக சுவாரஸ்யம் காட்டவில்லை.

 

ஜெனி அழகுக்கு ஈடாக மாட்டாள். அவன் அழகை மட்டுமே பார்த்தான்.

பெண் பார்க்கும்  வைபவம் முடிந்ததும், விடை பெற்றுக் கொண்டார்கள்.

 

காரில் போகும் போது, “என்னடா சொல்ற” என்று ராஜேஸ்வரி கேட்க,

“ஜெனியை விட அழகாக இருந்தால் பரவாயில்லை .இவள் அவளை விட எல்லா விதத்திலும் கம்மியாகவே இருக்கிறாள்” என்று சொல்ல, 

“ஜெனி அழகிதான் ஆனால், அந்த அழகிக்குத்தான் இந்த பேரழகனை பிடிக்கவில்லையே. என்ன செய்வது. மறுபடியும் ஜெனி என்றால் எப்படி. அவளை விடுடா. உன் வாழ்க்கையை பாழாக்கி கொள்ளாதே”…என்று கருணாகரன் சொல்ல,  

மதியும்., “அவளை விடுஅண்ணா

ரொம்ப  கர்வம் பிடித்தவள். வீட்டில் யார் பேச்சையும் மதிக்கவே மாட்டாள். ‘அவள் செய்வது தான் சரி என்று  நினைக்ககூடியவள் “  என்று ஜெனியை பற்றி அவதூறு சொல்ல,

  கருணாகரன்  கோபமாக “ஸ்டாப்பிட் மதி” என்றார்.

“உன் நாத்தனாரை பற்றி நீயே இப்படி பேசலாமா.ஒரு நாளும் அவள் மரியாதை   குறைவா நடந்ததே இல்லை.”

 

“பிரசாத் இவ்வளவு கஷ்டம் அவளுக்கு கொடுத்தாலும், அவள் அதைப் பற்றி மனதில் நினைக்காமல், அன்று சூப்பர் மார்கெட்டில்   எங்களுக்கு எவ்வளவு உதவி செய்தாள் தெரியுமா. அவ்வளவு மரியாதையுடன் நடந்துக் கொண்டாள்.

இன்னொருமுறை நீ யாரைப்பற்றியும் இப்படி பேசக் கூடாது. புரிந்ததா” என்றார்.

\”சரிப்பா….அம்மா என்னை   என் வீட்டில் விட்டு விடுங்கள்”.

“கோபித்துக் கொள்ளாதே .வீட்டிற்கு வா”..

“இல்லை மா”  என்றாள்.

 

பிரசாத்தும், “அப்பா நான் இங்கேயே இறங்கிக் கொள்கிறேன்.” என்றான்.

 

“ஏண்டா, உன் கார்  இல்லையே.”

“பரவாயில்லை பா,என் நண்பன் அலுவலகம் . அவனே என்னை டிராப் செய்து விடுவான் “என்று சொல்லி ஒரமாக நிறுத்தி  இறங்கிக்  கொண்டான்.

கார் மறையும்வரை பார்த்திருந்து விட்டு   அவசரமாக அடியாட்களுக்கு போன் செய்ய, 

 

“ஸார்.. அந்தப் பெண் ஏர்போர்ட்டுக்குள் போகுது ஸார்”…

 

“என்னது”!!!!…….

 

தொடரும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page