24. அவளை மறக்கத்தான்.

24. அவளை மறக்கத்தான்.

சுத்தமல்லி கிராமம். திருநெல்வேலி

அமலா,முத்துவின் திருமணம்  அவள் தாயின் சவமேடையில் நடந்தது..அதைப் பற்றி அங்குள்ளோர்  உமாவின் இரத்தத்தை பார்த்து பயந்தார்களே ஒழிய,அவரின்  இறப்புக்கு யாரும். வருத்தப்படவில்லை.

 

அமலாவிற்கு கதறி அழக் கூட அவகாசம் தரப்படவில்லை.

நாங்கள் உங்களை  என்னடா பண்ணினோம் இப்படி 

வஞ்சம் தீர்ப்பதற்கு. இவர்கள் மனுஷ ஜென்மங்களே இல்லை    என்ற  முடிவுக்கு எப்போதோ வந்து விட்டாள்.

அப்பத்தா மட்டும், தன் மருமகளின் இறப்பைப்  பார்த்து  கண்கலங்கினார். அவளின் இறப்பிற்கு  தானும் ஒரு முக்கியமான காரணம் என்று மனம் உறுத்த,தன் அறையில் சுருண்டு படுத்துக் கொண்டு, அநியாயம் பண்ணி விட்டேனே என்று தலையிலடித்துக் கொண்ட அழுதார்..

 

ஷாலினியும் அவள் குடும்பமும் நமக்கேன் பிரச்சனைன்னு ஓடிய பிறகுதான், கதிரின்   நினைப்பு விசாலத்திற்கு  வந்தது.

 

“கதிர் எங்கடா”…

அனைவரும்  கதிரைத் தேட, அவன் காசிக்கு ரயிலில் போய்க் கொண்டு இருந்தான். 

 

எந்த கங்கையிலும் குளித்தாலும் தன் பாவம் தீராது என்று வீட்டை விட்டு ஓடிவிட்டான்.

 

அமலாவின் ஆபிஸிற்கு அவள் அனுப்பியது போல், கதிரை விட்டு விசாலம்  மெயில் அனுப்பி வைக்கச்  சொன்னாள். எவரும் இவளை தேடி வரக் கூடாது என்று முன்னெச்சரிக்கையாக அனுப்பி வைக்கச்  சொன்னாள். இவனும் அதே போல் செய்தான். தான் உயிருக்கு உயிராய் காதலித்த தன் மாமன் மகளை மீட்க அவன் எதுவும் செய்ய வில்லை. இப்போது  ஓடிக்கொண்டு இருக்கிறான்.

 

இவர்கள் அவனை தேடிக் கொண்டே இருக்கிறர்கள்.

 

விசாலம்,அமலாவை  உமாவிற்கு ஈமச்சடங்கை செய்ய வைத்து தாமிரபரணியில் மூழ்கச் செய்தாள்..

மூன்று நாட்கள்  அவளை தனிமையில் வைத்தாள்.

3 நாட்களுக்குப்   வேலைக்காரி அவளிடம், “எஜமானியம்மா…உங்கள் அறையை மேல் மாடிக்கு மாற்றி விட்டார்கள்.” என்றார்.

ஒன்றும் பேசாமல் இருந்தாள்.

 

முத்து  கட்டிலின் ஓரத்தில் ஒரு உணர்ச்சியற்ற மரக்கட்டைப் போல் சாய்ந்து பரிதாபமாக அமர்ந்திருந்தான்.  

அம்மாவிடம் “இதெல்லாம் வேண்டாம்” என்று எவ்வளவே மன்றாடினான்.

 

அவளோ, “சம்பிராயதம் என்று  ஒன்று இருக்கே அதன்படி நடக்க  வேண்டும்.” என்று சொல்லி அவன் வாயை அடைத்து விட்டாள். 

வேலைக்காரர்கள் நமுட்டு சிரிப்பு சிரித்தனர். அவர்களை பார்க்க முத்துவிற்கு அவமானமாக இருந்தது..

 

வேலைக்காரர்கள்  அமலாவை நினைத்து வருத்தப்பட்டனர்.  எவ்வளவு  துரதிஷ்டசாலி அந்தப் பெண் என்று தனக்குள் பேசிக் கொண்டனர். அவர்களின் பார்வை அமலாவிற்கு அதை உணர்த்தியது

 

அவள்   தலையில் பூ வைக்க வந்தனர்..

வேண்டாம் என்று மறுக்கவே, “துக்கம் பெண்டிர்க்கு மூன்று நாட்கள் தான். எதற்கு மேல் இருந்தால் வாழ வேண்டிய வீட்டிற்கு ஆகாது” என்று  விசாலம் குரல் கொடுத்தாள்.

 

‘அடிப்பாவி அத்தை. என்னை வாழவைக்கவா இந்த திருமணத்தை நடத்துனீர்கள் .உயிரோடு அல்லவா என்னை புதைத்துவிட்டீர்கள்.’

 

அவளை அறைக்குள் தள்ளினார்கள்.

முத்து கட்டிலில் சாய்ந்து இருப்பதை பார்த்தாள்.

ரௌத்திரமானாள்.

 

அறை முழுக்க மல்லிகைப்பூ வாசம். ஆனால்,அமலாவிற்கு  அது  பிணங்களின் மேல் தூவப்பட்ட வாசனை போலத் தெரிந்தது.

 

தன் தலையில் வலுக் கட்டாயமாக சூடப்பட்ட பூக்களையும், படுக்கையின் மேலிருந்த  பூக்களையும், தோரணமாக தொங்கிய பூக்களையும் வெறித்தனமாக பிய்த்து  எறிந்தாள்.

அவற்றை குவியலாக முத்துவின்  மீது கொட்டினாள்.

 

“அமலா”…. என்று அவனின் குரல் தழுத்தது.

“என்னை மன்னித்துவிடு” என்றான்.

“மன்னிப்பா”..

“அதுக்கெல்லாம் இங்க இடமே இல்ல. என் அம்மா ஏன் தன்னை மாய்த்துக் கொண்டாள் தெரியுமா.”.

“நல்லா படிக்க வச்ச பெண்ணை சிறப்பாக வாழ வைப்பேன் என்று தன் கணவனுக்கு செய்து கொடுத்த சத்தியத்தை காப்பாற்ற முடியாமல் ஒரு நடை  பிணத்திற்கு கட்டி வைப்பதை தடுக்க முடியலயே என்ற ஆற்றாமை அவரை தற்கொலைக்கு தூண்டியது.”

“அவர்கள் சாவுக்கு காரணமான இதே வீட்டில் அவங்க இரத்தம் காய்வதற்கு முன்பே என்னை இப்படி அலங்காரம்  பண்ணி வைத்து இருக்கிறார்கள்.   உங்க அம்மாவுக்கும் உங்களுக்கும் மனசாட்சியே இல்லையா”…… 

 

“நான் காதலித்தவனுக்கு  இப்படி நேர்ந்திருந்தால் அவனை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டு இருப்பேன்.  இப்படி ஆனதற்கு விட்டு போய் இருக்க மாட்டேன். உடல் சுகம் இல்லாமல் கணவன், மனைவியா வாழ்ந்து இருப்பேன்.”

“உன் தம்பியை… அந்த கையாலாகாதவனை காதலித்து தொலைத்துவிட்டேனே. இது தெரிந்தும் எப்படி எனக்கு திருமணம் செய்ய ஒப்புக் கொண்டாய்.”

 

முத்து கண்ணீருடன், “நான் சொல்றதைக் கேள்.அவனும் உன்னை வேண்டுமென்று ஏமாற்றவில்லை.

சூழ்நிலை அப்படி ஆனது.”

அவள் அவனை  கை நீட்டிமறுத்து, “நீ எதையும் சொல்ல வேண்டாம்.

எந்த காரணமும் இதற்கு நியாயத்தை சேர்க்காது.”

“நான் வாழ்க்கையில் எப்படியெல்லம் உயரவேண்டும் என்று கனவு கண்டேன்.

அதைவிட என் அம்மா கண்டார்.

எங்களை நய வஞ்சமாக ஏமாற்றி, என்னை தாயில்லா பிள்ளையாக ஆக்கி விட்டீர்கள்.”

“என்  கனவுகளுக்கு  மலர் வளையம் வைத்து விட்டீர்கள்..”

 

“அத்தனை பூக்களையும் வாரி எடுத்து முத்துவின் தலையில் கொட்டினாள்.”

எதிர்த்து பேசாது  இருந்தான்.

 

நன்றாக இருந்தபோது, அவன் எவ்வளவு ஆளுமையாக இருந்தான் என்று நினைத்து பார்த்துக் கொண்டான் 

ஒரு விபத்து, தன் வாழ்க்கையே தலை கீழாக புரட்டி போட்டு விட்டது. அதில்  இந்த சின்னப்பெண்ணையும்  குப்புற தள்ளிவிட்டது…

அம்மாவின் குணங்கள் அவனுக்குள் இல்லாமல் இல்லை. இந்த விபத்து அவனுக்கு சிலவற்றை  போதித்தது.

 

காலம் கடந்து விடவில்லை. இதை எப்படி சரி பண்ணலாம்  என்று யோசித்தான்.

கட்டிலில்  சரிந்து படுத்துக் கொண்டான்.

அமலா அழுதுக் கொண்டே தரையில் சிதறி இருந்த பூக்களின் மீதே  படுத்துக் கொண்டாள்…

 

………………………-..-………..…

காரில்  தினேஷ்டன்,ஜெனி ஏர்போர்ட்டை நோக்கி போய்க் கொண்டிருந்தாள்.

 

“வீட்ல சொல்லிட்டியா”

“இல்லை. நைஸா எஸ் ஆகறேன்.”என்று கண்சிமிட்டி சொல்லி சிரித்தாள்.

 

“அந்த பிரசாத் ஒரு பக்கம். அப்பா பார்த்து வைத்த  பெங்களூர் மாப்பிள்ளை ஒரு பக்கம் , … என்னை இந்த நாட்டை விட்டே ஓட வைத்து விட்டது.”

“நீயும் அங்கே  வந்து விட்டால், நாம அங்கேயே திருமணம் செய்துக் கொள்ளலாம். “

 

“எப்படியும் உன்னை விசாரிக்க வருவார்கள். “

“நான் சமாளித்து  கொள்கிறேன்”.

“நீ  வீட்டில் சொல்லிவிடு.”

“மும்பை போனதும் சொல்கிறேன். அங்கிருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ்ஸில் ஏறும் முன் சொல்லி விடுகிறேன்.”

 

“பயமா இருக்குடா”  என்று   அவன் தோளில் சாய்ந்துக் கொண்டாள். 

“தனியா போக பயமா இருக்கா”?

“இல்லை. உன்னை என்ன செய்வார்களோ என்று பயமா இருக்கு”.

“அடிப்பாவி… அதற்கு முதலில் நான் போன பிறகு   நீ வந்து இருக்கலாமே..”

“நானே எதிர்பார்க்கவில்லை. ஆபர் வந்தவுடன் கிளம்பிட்டேன்.”

“சரி. ரொம்ப அடிப்பார்களோ..”

 

“தெரியாது. . வீட்டில் நீயும்,நானும் காதலிக்கிறோம் என்று தெரியாது.ஆனால்,

பிரசாத்திற்கு தெரியும். அவன் சொல்லி விடுவான். எதற்கும் ஜாக்கிரதையா இரு..”

 

“உயிரோடு இருந்தால் வருகிறேன்.” என்று பாட்டாகவே பாடினான்.

“ச்சீய்…அந்தளவுக்கு மோசம் இல்லை.”

 

ஏர்போர்ட் வந்ததும் அவளை  கட்டியணைத்து,  பிரியாவிடை கொடுத்து, உள்ளே போகும் வரை பார்த்து விட்டு கிளம்பினான்.

 

பின்னால்  பொலீரோ வில் வந்த அடியாட்களுக்கு  ஒன்றுமே புரியவில்லை.

 

“என்னடா… ஆடிகாரில் வந்தவன் கட்டிபிடிச்சிட்டு  அவளை வழியனுப்விட்டு போறான். எங்கடா போறா.”

உடனே பிரசாத்திற்கு போன் செய்ய

“என்னடா தூக்கிட்டிங்களா . நான் நம்ப இடத்துக்குத்தான் வந்துட்டு  இருக்கேன்.”

 

“ஸார்… வர வேண்டாம்.”

“ஏண்டா”…?

விஷயத்தை  சொன்னார்கள்.

“பைக்கில் வந்தானா  “என்று கேட்க,

“இல்லை ஆடி கார். அதுவும் லேட்டஸ்ட்டு மாடல்.”

“ஆடி காரில் வந்தவன், அவளை ஏர்போர்ட்டில்  கிஸ்ஸடித்து விட்டு போறான்.”

“ஆ….அதுபாருடா  . புதுசா”.

யோசித்தான்.

“ஏய்… நீங்க சொல்றது உண்மையா”

“உன் மேல் சத்தியம்  ஸார்.”

“முட்டாள்களா  . அவளை கோட்டை விட்டீர்களோ.”

 

“ஸார்.. காலையிலிருந்து அவள் பின்னால் நாய் மாதிரி சுத்தறோம் ஸார்.

சாப்பிட வே  இல்லை ஸார். எங்களை போய் இப்படி சொல்லிட்டீங்களே”

 

“வைடா போனை” என்று கோபமாக  பிரசாத்  போனை வைத்து விட்டு, அங்கே போன ஆட்டோவை கையமர்த்தி நிறுத்தி “ஆ. எ. புரம்  போ “என்றான்.

 

அந்த ஆட்டோ தடதடா வென்று சத்தம் போட்டதே ஒழிய, ஸ்பீடாக போகவில்லை: அவன் மனது இருந்த கொந்தளிப்புக்கு இந்த ஆட்டோ வேறு எரிச்சல் மூட்டியது.

சே.. என் காரை எடுத்துக் கொண்டு வராமல் போனனே அவளை அடைத்து வைத்திருக்கும் இடத்திற்கு காரில் போனால் மாட்டிக் கொள்வோம் என்று காரை எடுத்துக் கொண்டு வராமல் இருந்தான்.

ஒரு வழியாக   ஆட்டோ ஊர்ந்து ஆர்.எ.புரத்தை அடைந்தது.மதியின் வீட்டில் இறங்கிக் கொண்டான்..

 

வீட்டில்  மதியை தவிர ஒருவரும் இல்லை.

 

“எங்கம்மா எல்லோரும்.”  …

“இன்னும் வரவில்லை அண்ணா”

“உன் மாமியாருக்கு தன் பெண்ணை பார்த்துக் கொள்வதை விட அப்படி என்ன முக்கியமான வேலை இருக்கப் போகுது. அவள் எங்கே போகிறாள். வருகிறாள் என்று கூட அவர்களுக்கு தெரியாது”

“அண்ணா.. இப்போது தான்   பெண் பார்த்து விட்டு வந்து இருக்கிறாய். ஜெனி எங்க போன உனக்கென்ன “?

 

யாரோ வரும் சத்தம் கேட்டது.

“இரு சத்தம் போட்டு பேசாதே”

“அத்தை வருகிறார்கள்.”

 

அவர் உள்ளே வந்ததுதும்அவரை பார்த்தான். வயதுக்கு மீறின மேக்கப் காதில் தொங்கட்டான் வேறு. அவர் சூரிதாரும். அவரும் கேவலமாக இருந்தது.  பெண்ணைப் பற்றி ஒன்றும் தெரியாது. ஊர் சுற்ற மட்டும் தெரியும்.

என்று கோபத்தில்  மனதில் திட்டிக் கொண்டான்.

“ஹலோ  பிரசாத் என்ன பலமாக யோசனை.”

“ஜெனி எங்கே தெரியுமா”…?

“ஜெனியை பற்றி ஏன் கேட்கிறீர்கள்.”

“அவள் ஆபீஸ்  போய் இருக்கிறாள். “

“ஆபீஸா…!! சரி. போன் செய்யுங்கள்.”

கோபமாக சுதா, “அவள் விஷயத்தில் தலையிட வேண்டாம்.”

“நான் காரணமாகத் தான் சொல்கிறேன்”.

 

அவனை ஒரு மாதிரியாக பார்த்துக் கொண்ட போன் செய்ய, ஸ்விச்சுடு ஆப் என்றே வந்தது.

“எங்காவது வந்து கொண்டு இருப்பாள். அல்லது சிக்னல் இருக்காது. இதை ஏன் பெரிது படுத்துகிறாய். மதியைப் பார்த்து,” உன் அண்ணனை அவள் விஷயத்தில் தலையிடாமல் இருக்கச் சொல். இப்போதெல்லாம்  எனக்கே எரிச்சலாக வருகிறது.”

 

இவரிடம் பேசி பிரயோஜனம் இல்லை. மகேந்திரனும்,முரளியும் வரட்டும். அதற்குள் அவள் எங்கு போவாளோ தெரியவில்லையே.

ஒரு வழியாக வந்தார்கள்.

மணி 8 ஆகியது.

“அட… பிரசாத் பெண் பார்த்து விட்டு, தங்கையை விட வந்தியா “என்று மகேந்திரன் கேட்க,

“அங்கிள் ஒரு முக்கியமாக விஷயம். 

ஜெனி இன்னும் வீட்டுக்கு வரவில்லை.” என்றதும்  அவனை ஏற இறங்க பார்த்தார்.

உள்ளே போக இருந்த முரளி திரும்பி பார்த்தான்.

“வருவாள். எதாவது முக்கியமான வேலையா இருக்கும்:. “

“இல்லை அவள் பெட்டியுடன் ஏர்போர்ட் போனதை என்  நண்பன் பார்த்து விட்டுச் சொன்னான்.”

அவன் சொன்னதைக்  கேட்டு அதிர்ந்தார்.

“இருக்காது. காலையில தானே கல்யாண் பற்றி பேசினோம். ஊருக்கு போவதாக இருந்தால் சொல்லிவிட்டு போவாள்.

இவன் எதோ நாடகம் ஆடுகிறான்.”

என்று அவனை  ஒரு மாதிரியாக பார்த்தார்.

முரளி, ஜெனிக்கு போன் செய்ய ஸ்விட்சுடு ஆப் என்றே வந்தது.

‘ராஜம்மா எங்கே “என்று மகேந்திரன் கேட்கும் போதே,

அப்போது தான் கோவிலிருந்து  ராஜம்மா உள்ளே வர, “எங்கே போனாய் “என்று சுதா கேட்க.

“இன்னிக்கு பிரதோஷம் கோவிலுக்கு போய்ட்டு வர்றேன். ஒரே கூட்டம். அதான் லேட்டாகி விட்டது.”

அப்போது ஜெனியிடமிருந்து   வாய்ஸ் மெஸேஜ்  மகேந்திரனுக்கு வந்தது.

 

தொடரும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page