25. அவளை மறக்கத் தான்

25. அவளை மறக்கத்தான்

3 வருடங்களுக்குப் பிறகு…

“அப்பா உங்களுக்கு ,அம்மாவிற்கு அண்ணாவிற்கும் போன் செய்து  இருந்தேன். மூவரும்.  எடுக்கவில்லை. அதனால் மெஸேஜ் செய்கிறேன்…என்னை புராஜெக்ட்க்காக  அவசரமாக  லண்டனுக்கு அனுப்பி உள்ளார்கள்  .இன்றே போக வேண்டும் என்றதால்  நேரில் சொல்ல முடியவில்லை . புராஜெக்ட் முடிந்தவுடன் வருகிறேன். பை அப்பா. பை  அம்மா,அண்ணா .அண்ணியிடம் சொல்லி விடுங்கள்

லவ் யூ அப்பா.”

 

மகேந்திரன்  திரும்ப திரும்ப தன் மகளின் குரலை  கேட்டுக் கொண்டே இருந்தார்.

சுதா  அவரின் போனை பிடுங்கி, அதை அணைத்தாள்.

இதை எத்தனை தடவை தான் கேட்பீர்கள்.

“நாம தான் நம் பெண்ணை சரியா புரிந்துக்  கொள்ளவில்லையோ .” என்று மகேந்திரன்  விரக்தியாக சொல்ல,

“அவளுக்கு என்ன குறை வைத்தோம். படிப்பு, வசதி,  பணம், சுதந்திரம் எப்படி எல்லாம் இருந்ததே.”

“ராஜம்மாவிடம் இருந்த நெருக்கம் கூட அம்மாவான உன்னிடம் இல்லையே”

 

“நான் என்ன 24 மணி நேரம் வீட்டிலே இருந்து அவளை பார்த்துக் கொண்டு இருக்க வேண்டுமோ.”

 

முரளி வந்தான்.

“டாட்.. விடுங்க அவளுக்கு மிகப் பெரிய தொழிலதிபர் கல்யானை திருமணம் செய்யநினைத்தோம். அவளுக்கு விருப்பம் இல்ல .அதை நேராகவே சொல்லி இருக்கலாம்.

இப்படி போய் விட்டாள். அங்கேயும் நல்லாத் .தானே இருக்கிறாள்.

 

கல்யான்னும்,விக்ரமும்   ஜென்டில்மேன்கள்  . “ஜெனியை திருமணம் செய்தால் தான் உங்களிடம் பிஸினெஸ்  செய்வேன் என்று இல்லை..

ஜெனிக்கு அதில் விருப்பம் இல்லையென்றால்  விட்டுவது தான் நல்லது” என்று பெருந்தன்மையாக கூறினாரகள்.. சேர்ந்தே பிஸினெஸ் செய்தார்கள். அதனால முரளிக்கு பெரிதாக ஜெனியின் மீது கோபம் இல்லை.

 

சுதா  தன் கணவனிடமும்,மகனிடமும் “இனிமேல் அவளைப் பற்றி பேசாதீர்கள். திரும்பி வராமலா போய் விடுவாள்”.

 

இருவரும் பேசாது இருந்தார்கள்.

மதிவதனி, “எப்படியோ அத்தை, ஜெனி போனது, என் அண்ணனுக்கு நல்லதா போச்சு. அவன் என் அண்ணி பிருந்தாவை திருமணம் செய்துக் கொண்டு, பொறுப்பாக இருக்கிறான்..அவன் விட்ட  பிஸினெஸ்ஸை  அண்ணி மூலம் மீட்டெடுத்து விட்டான். அம்மாவும், அப்பாவும் மகிழ்சியாக இருக்கிறார்கள்.”

 

முரளி அவளைப் பார்த்து முறைத்தான்.

“எந்த நேரத்தில் எதை சொல்வது என்று விவஸ்தை இல்லையா. அவன் பண்ண காரியம் எனக்கு தெரியாது என்று நினைச்சியா. ஜெனி போனதால், உன் கொங்கண்ணன் தப்பிச்சிட்டான்… .போடி உள்ளே “ என்று கடுப்படித்தான்.

………………….…

ஜெனியை  பிளைட் ஏற்றி விட்டு, தினேஷ் வீட்டிற்கு வந்தவுடன், அவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது., வாசலில் அம்பாசிடர் கார் நின்றுக் கொண்டு இருந்தது.

‘யாரு வந்து இருக்கா ‘….?

 

அந்த அதிர்ச்சி, தன்  தாய்மாமன் ரூபத்தில் இருந்தது.

இவன் டாக்டர் ஆகும்வரை, பெரிதாக அக்காவை கண்டு கொள்ளாமல் இருந்தவர்,தீடீர்  பாசமாக வீட்டிற்கு தன் குடும்பம் சகிதமாக வந்து இருந்தார்.

 

அனைவரையும் பார்த்த அதிர்ச்சியை வெளிக்காட்டாமல் “வாங்க மாமா, வாங்க மாமி” என்றான். 

அவர்களின் பெண் மீனா, மகன் ஆனந்தையும் பார்த்து “ஹாய்” என்றான்.

“வாங்க மாப்பிள்ளை” என்று வாய் நிறைய கூப்பிட்டார்.

 

அம்மாவிற்கு அவர்கள் வருவது முன்பே தெரியும் போல .   தடபுடலாக விருந்து தயார்  பண்ணி இருந்தாள்.

அம்மா லஷ்மி அவனிடம், “  உனக்கு எத்தனை தடவை போன் செய்வது. மாமா வரும் விஷயத்தை சொல்ல பண்ணி இருந்தேன்.”

“நான் ஆப்ரேஷன் தியேட்டரில் இருந்தேன் மா .கவனிக்கலா”

 

“இரும்மா.. பிரஷ் அப்  ஆகி விட்டு வருகிறேன்..”

அவன் அறைக்கு போனதும்  அப்பா ரிட்டையர்டு தாசில்தார் மோகன் பின்னாலே வந்தார்.

“பார்த்தியா உன் அம்மா பண்ற அலம்பல். இத்தகை வருடங்கள் இருக்கிறோமா இல்லையா என்று பார்க்க வில்லை .இப்ப என்ன தீடீர் பாசமாம் உன் மாமனுக்கு.”

“தெரியல்லயேப்பா”..

 

“சரி. அம்மா நோகாமல் பார்த்துக்கொள்ளுங்கள்”.

 

இவன் கீழே இறங்கும் வரை சாப்பிடாமல் காத்திருந்தார்கள்.

இவன் வந்ததும், அவனை மீனாவின் பக்கத்தில் அமர வைத்தார்.

அவளோ சிறு பெண் +2 தான் எழுதி இருக்கிறாள்.மிட்டாய் கலர் சூரிதாரில்

அசட்டு தனமாக இருந்தாள்.

 

மீனா தினேஷை  வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தாள்.

இவன்  அவள் பார்வையை மாற்றுவதற்காக, “ என்ன மீனா உன்னை குட்டி பெண்ணாக பார்த்தது. இப்போது. இப்படி வளர்ந்து. விட்டாய்.” 

“ஆமாம் மாப்பிள்ளை கல்யாண வயது வந்து விட்டதே.  “ என்று மாமா சொல்ல,

நாணினாள்.

மாமா சொல்வதை  காதில் போட்டுக் கொள்ளாமல், “ எக்ஸாம் நல்லா  எழுதி இருக்கியா  .மேற் கொண்டு  என்னபடிக்கப்   போற”என்று அக்கறையாக கேட்க,  மீனா பதிலேதும் சொல்லாமல் அவள் அப்பாவை பார்த்தாள்.| 

“சொல்றேன் மாப்பிள்ளை”

சாப்பிட்டு விட்டு எல்லோரும் ஹாலில் அமர்ந்து பேசுவோம்.

பேசாமல் சாப்பிட்டார்கள்.

மீனாவையும், ஆனந்தையும் மேல்  மாடி  அறைக்கு அனுப்பினார்கள்.

 

எதோ வில்லங்கமா பேசப் போகிறார் என்று மட்டும் தெரிந்தது.

 

அம்மா,அப்பா, இவன், மாமா, மாமி ஐவரும் அமர்ந்தனர்.

மாமா எல்லோரையும் பார்த்தார்.

“என்னடா இத்தனை நாள் வராதவன் வந்து இருக்கிறேன் என்று பார்க்கிறீர்களா…….!!!!

வர சந்தர்ப்பம் அமையல. அதற்காக உறவு விட்டு போகுமா..”

“எனக்கு சுத்தி வளைத்து பேசத் தெரியாது. நேரிடையா கேட்கிறேன். அக்கா, தம்பி உறவோடு நிற்காமல் அக்காவிற்கு சம்பந்தி ஆக வேண்டும் என்ற நினைப்பில் வந்துள்ளேன். என் மகள் மீனாவை தினேஷ்க்கு கொடுக்கலாம் என்று இருக்கிறேன்.” என்று பெருமிதத்தோடு சொல்ல,

இதைக் கேட்டதும், லஷ்மிக்கு முகமெல்லாம் பல்பு எரிந்தது.

 

‘ஐய்யோ… இது என்னடா. புது கதையா இருக்கு.’

தினேஷ் முகத்தில் ஈயாடவில்லை.

 

சுதாரித்துக் கொண்டு. ““மாமா  மீனா ரொம்ப சின்னப் பெண்  அவளை மேற் கொண்டு படிக்க வையுங்கள். அது  தான்  அவள் எதிர் காலத்துக்கு நல்லது.” என்றான்.

 

“மாப்பிள்ளை.. எனக்கும் என் அக்கா மவன் உன்னை மாதிரி டாக்டருக்கு படிக்க வைக்க வேண்டும் என்று 

 ஆசை தான். ஆனால் அவளுக்கு படிப்பு ஏறினால் தானே.  அதான் கல்யாணம் பண்ணிடலாம் என்று பார்க்கிறேன்  . அக்காவே மாமியாராக வந்தால் அவளை நல்லா பார்த்துக் கொள்வார்.  எனக்கும் டாக்டர் மாப்பிள்ளை கிடைக்கும். “

“சொந்தம் விட்டு போகக் கூடாதுல்ல.” 

மேலும், “சொந்தம் என்று  விட்டு விட மாட்டேன். என்சொத்தில் சரிபாதி அவளுக்கு. நகை 500 பவுன் போட்டு   வெள்ளி 10கிலோ. கொடுக்கிறேன்.

என் மருமகனுக்கு காரும் வாங்கித் தருகிறேன். “என்றார்.

 

அம்மாவுக்கு இதில் டபுள் சந்தோஷம். அப்பா முகத்தில் எந்த ரியாக்ஷனும் இல்ல.

தினேஷ்ம் தன்மையாக “மாமா சொல்கிறேன் என்று தப்பாக நினைத்துக் கொள்ளாதீர்கள். 

எனக்கு இப்போது திருமணம் வேண்டாம்.

நான் லண்டன்  போகப் போகிறேன்.”

“தெரியும் மாப்பிள்ளை  அக்கா சொன்னார்கள்.”

 

“எப்போ திரும்பி வருவேன் என்று தெரியாது. அதுவுமில்லாமல் மீனா என்னை விட பத்து வயது இளையவள்.”

“ஐயோ  மாப்பிள்ளை அதை  நாங்க  தானே யோசிக்கணும்.  நீங்க ஏன்  யோசிக்கிறீர்கள்.” என்று சொல்லி சிரித்தார்.

 

அக்கா எல்லாம் சொன்னார்கள். சென்னையிலிருந்து தஞ்சாவூர் ஒரத்தநாடு மாமாவின் சொந்த ஊருக்கு போகப் போகிறீர்களாம். நல்லது.”

 

மாமா மதுரைகாரர். அம்மாவின் பூர்வீகம் மதுரை: அப்பா ஒரத்தநாடு. 

தஞ்சாவூர்.

அப்பாவைப் பார்த்து  “மாமா முதலில் தினேஷ்க்கும்,  மீனாவிற்கும் நிச்சயம் மதுரையில் பண்ணி விடலாம். நான் எல்லா ஏற்பாடுகளையும்  போய். கவனிக்கிறேன்.”

 

தினேஷ்க்கு சுறுசுறு வென்று கோபம்  வந்தது. ‘விஷயத்தை சொன்னார். நாம அபிப்ராயம்  சொல்வதற்குள் நிச்சயம் ஏற்பாடு பண்ணப்  போறாராம்.இதென்ன அராஜகமா இருக்கு.’

‘என்னப்பா இது’ ……என்று கோபமாக முகத்தை வைத்துக் கொள்ள, 

அப்பா மெல்ல கண் ஜாடை காண்பித்தார். 

 

 அப்பா தொண்டையை செருமிக் கொண்டு, “மச்சான்… என்று கனிவாக கூப்பிட்டு  ,”இதோ பாருப்பா.தினேஷ் வெளிநாடு போய்ட்டு வரட்டும். அங்க அவன் நிம்மதியா படிக்கணும். பிறகு வேலை பார்க்கணும் .  நிச்சயம் பண்ணிட்டால், மறுபடியும் திருமணத்திற்கு வரணும். அப்படியெல்லாம் பணம், நேரம் செலவழிக்க முடியாதே. “

 

அவர் கொஞ்சம் கூட யோசிக்காமல், “அப்ப கல்யாணத்தை முடித்து விட்டு போகட்டும். எப்ப வரணுமோ, நானே என் மாப்பிள்ளையை கூப்பிட்டுக் கொள்கிறேன். எல்லா சொத்தும் அவனுக்கு தானே.”

இது சரியா வராது என்று எழுந்து போய் விட்டான்.

லஷ்மி தன் கணவனை அடக்கினாள்.

 

“என்னங்க இவ்வளவு தூரம் தம்பி கேட்கிறான். நீங்க இப்படி சொன்னால் எப்படி. அவனுக்கு எடுத்து சொல்லுங்க.

அவன் நீங்கள் சொன்னால் புரிந்துக் 

கொள்வான்”.

 

“சரிம்மா. “என்று சொல்லி எழுந்து போனார்.

 

லஷ்மியிடம்,அவள் தம்பி “அக்கா உங்களைத் தான் நம்பி இருக்கிறேன்.தினேஷ் மாதிரி ஒரு மாப்பிள்ளை எனக்கு கிடைக்காது. உன் மேலேயும் நம்பிக்கை இருக்கு. என் பெண்ண நன்றாக வைத்துக் கொள்வாய்.”

 

முகமெல்லாம் மகிழ்ச்சியாக “பார்த்துக் 

கொள்கிறேன்  தம்பி நீ கவலைப் படாதே. எல்லாம் நல்லா நடக்கும். என்று உறுதிமொழி கொடுத்தாள்.

தினேஷ் மேலே உள்ள அறைக்கு போக, எங்க   மீனாவும்,அவள் தம்பியும் ஒருத்தரை ஒருத்தர் தலகாணியால் அடித்துக் கொண்டியிருந்தார்கள்.

 

இரண்டு பேர் தலையிலும் குட்டு வைத்தான்.

“அடச்சீ… விவஸ்தை இல்ல. உங்கப்பா என்னடா ன்னா உனக்கு கல்யாணம்பண்ண வேண்டும் என்று தீவிரமாக இருக்கிறார்.

நீ இங்கே சின்னப்பெண் மாதிரி சண்டை போட்டுட்டு இருக்கே.”

“ஐயோ..மாமா எனக்கு வெட்கமா இருக்கு.”

மறுபடியும் தலையில் கொட்டினான்.

“அசட்டுத்  தனமா எதையாவது  பேசாதே.

அப்பாக்கிட்ட  போய் எனக்கு கல்யாணம் வேண்டாம். நான் படிக்கப் போறேன் என்று சொல்லணும். “

 

ஆனந்த் சிரித்தான். “இவளுக்கு  படிப்பே ஏறல. எப்படியோ 10வது பாஸ் பண்ணிட்டாள். +2. பெயில்  கன்பர்ம்.”

 

“சரி. முயற்சி பண்ணால் வரும். அப்படி சொல்லனா உன் கண்ணை தோண்டி எடுத்துபிடுவேன்.”

அவள் முழிக்க ,

ஆனந்தையும் பார்த்து “உன்கண்ணையும் தான்.” என்று பயமுறுத்தி விட்டு, மொட்டைமாடிக்கு போய் விட்டான்.

 

மீனா ஆனந்திடம், “டேய்.. இரண்டு பேரும் கண்ணு இல்லாமல்  எப்படிடா இருப்போம்.”

 

“போடி… நான் ஏன் கண்ணு இல்லாமல் இருக்கணும்.

நாளை காலையே இந்த இடத்தை விட்டு, நம்மூர் போகணும்.”

 

அப்பாவிடம்   “நாளை புட்பால் மேட்ச் இருக்குப்பா. நாளையே மதுரை போகணும் ‘என்றான்.

 

“இருடா. நிச்சயத்துக்கு ஜவுளி வாங்கணும்.” 

“எல்லாம் மதுரையிலே வாங்கிக் கொள்ளலாம் “என்று  பிடிவாதமாக கூறவே ஒப்புக் கொண்டார்.

அக்காவிடம், “நீ எப்பக்கா ஒரத்தாடு போற”..?. 

“நாளை சாமான் எடுக்க பேக்கர்ஸ் & Movers வரச் சொல்லி இருக்கேன். நீ இங்கு இருப்பதால், வர வேண்டாம் என்று சொல்லப் போகிறேன்.”

“இல்லக்கா.  நாங்கள் நாளை காலையே கிளம்பறோம்.  ஆனந்துக்கு  மேட்ச் இருக்காம். நான் மதுரை போய்  ஒரு நல்ல நாள் பார்த்து உடனே சொல்றேன். நீ   குடும்பத்தோடு வந்து விடு”. என்றார்.

“சரி. தம்பி”. என்றார்.

 

தினேஷ்க்கு அப்பாடா என்று இருந்தது.

 

அவர்கள் போன பின்பு  சாமான்களை ஏற்றி விட்டு,அம்மாவையும் அப்பாவையும் ரயில் ஏற்றி விட்டான்.

விசா வந்ததும் எப்படியாவது லண்டன் போக வேண்டும்.

ஜெனி போய்விட்டாள்.

இவன் போவது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை.

இவனை கண்காணிக்க அவனின் தாய்மாமா ஆட்களை நியமித்து இருந்தார்.

 

தொடரும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

.

 

 

 

 

 

 

 

 

 

 

.

 

.

 

 

.

 

 

.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page