26. அவளை மறக்கத்தான்.
லண்டன் ஹீத்ரு விமான நிலையத்திலிந்து சென்னை நோக்கி புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ்விமானம் விடியற்காலை 4 மணிக்கு தரையில் ஒரு குலுக்கு குலுக்கி இறங்கியது.
மக்கள் பரபரப்பாக இறங்க தயாராக இருந்தார்கள்.
தினேஷ் கை, கால்களை நீட்டி ஸ்டெரச் செய்துக் கொண்டான்.
ஏர் ஹோஸ்டஸுக்கு நன்றி சொல்லிவிட்டு வெளியேறினான்.
அவன் முன்பு வேலை பார்த்த K.R. ஆஸ்பிட்ட லிருந்து இவனை அழைத்து போக கார் வந்து இருந்தது.
“சீப் டாக்டரா பொறுப்பேற்றுக் கொள்வதற்கு முன் ஒரத்த நாடு போய் அம்மா, அப்பாவை பார்த்து விட்டு வா” அவனுடைய M.D. சொல்ல, சரி என்றான்.
இரண்டு நான் ஆஸ்பிட்டல் கெஸ்ட் அவுஸில் தங்கியிருந்து விட்டு , காரில் ஒரத்தநாடு கிளம்பினான்.
கார் எந்தவித அதிர்வும் இல்லாமல் சீராக நேஷ்னல் ஹைவேஸ் ரோடில் ஓடிக் கொண்டிருந்தது.
எதிர்ப்பட்ட மரங்கள்,பின்னோக்கி போனது.
இவனின் நினைவுகளும் பின்னோக்கி போனது.
பின்சீட்டில் அமர்ந்துக் கொண்டு கண்களை மூடினான்.
தன் மாமன் மகள் மீனாவை திருமணம் செய்யாமல் இருக்க, எத்தனை சாகஸங்கள் செய்ய வேண்டியிருந்தது.
மதுரையில் நிச்சயதார்த்தம் என்று சொல்லிவிட்டு, தடபுடலாக திருமண ஏற்பாடுகளை செய்ய விழைந்தார்.
அவன் அம்மாவிற்கு எப்படியாவது தம்பியின் உறவு நிலைத்து இருக்க வேண்டும். அது தன் மகனால் முடியும் என்றால், அதை விடக்கூடாதுஎன்று நினைத்து, மாமா சொல்வதற்கெல்லாம் தலையாட்டி இருந்தார்.
தினேஷை தனித்து செயல்பட விடவில்லை.
இவனை அவர் நியமித்த ஆட்கள் கண்காணித்துக் கொண்டே இருந்தனர்.
டெல்லியிலிருந்து வரும் டாக்டரை அழைக்க ஏர்போர்ட்டுக்கு போயிருந்தான். உடனே அவர்கள் சூழ்ந்துக் கொண்டார்கள்.
உங்களுக்கு அனுமதி இல்லை..
“என்ன”…..?
“நீங்கள் தப்பித்து வெளிநாடு செல்கிறீர்களா.”.
“டேய்.. யாருடா நீங்கள். இது அரைவல் (arrival) இடம் டா . இங்கே வந்தவர்களை வரவேற்கத்தான் முடியும். போக முடியாது “என்று விளக்கினான்,
அவர்கள் புரிந்துக் கொள்ளாமல் அடம் பிடித்தார்கள்.
ஒருத்தனை ஓங்கி அறை விட்ட பின்புதான் ,எட்ட நின்றார்கள்.
ஒரு எமர்ஜென்ஸி கேஸுக்காக அமெரிக்காவிலிருந்து மருந்து, மாத்திரைகளுடன் டெல்லியில் இறங்கி,சென்னை வந்த
அமெரிக்க டாக்டரை வரவேற்று, தன் ஹாஸ்பிட்டலுக்கு அழைத்துச் செல்ல வந்து இருந்தான்…
‘சே… இதென்ன இந்த மாமா இவ்வளவு இம்சையாக இருக்கிறார்.’
“ஐயோ… யுகே விசாவை தக்கலில் போட்டு இருக்கலாம். அவசரம் இல்லை என்று நார்மலாக போட்டது எவ்வளவு பெரிய தவறு என்று புரிந்தது.
விசா கையில் வரும் வரை பொறுமையாக இருந்தான்.
ஒரு வழியாக கிடைத்தது.
அதை பெற்றுக் கொண்டதும், அப்பாவிடம், “எனக்கு மீனாவை திருமணம் செய்ய விருப்பமில்லை.
ஜெனியை பற்றி சொன்னான்.
அம்மா தம்பிக்காக என்னையே பணயம் வைக்க தயாராகி விட்டார். ப்ளீஸ் பா இந்த கல்யாணத்தை எப்படியாவது நிறுத்தி விடுங்கள். எல்லோருக்கும் பத்திரிகை கொடுத்து விட போகிறார்கள். பெருத்த அவமானமாக ஏற்படும்.” என்று புலம்பி தள்ளினான்.
தன் அம்மாவின் ஆசை இதுவாக இருப்பதால், அவனால் கடுமையாக சொல்ல முடியவில்லை.
அந்த இரண்டாங்கெட்டான் பெண் மீனா வேறு தினமும் போன் செய்து, பேச செய்தாள்.
“மாமா.. எனக்கு அந்த நடிகரை பிடிக்கும். அந்த படம் பிடிக்கும். என்னை வாரத்துக்கு 3 சினிமாவாவது கூட்டிட்டு போகணும்:” என்று புரியாமல் பேசிக் கொண்டே இருப்பாள்.
ஒரு நாள் கடுமையாக, “இதோ பாரு. என்னால் உன்னை சினிமாக்கெல்லாம் கூட்டிட்டு போக முடியாது. நீ பேசாமல் எந்த வேலைக்கும் போகாமல் வீட்டோடு இருக்கும் மாப்பிள்ளையா உன் அப்பாவை பாார்க்கச் சொல் . இனிமேல் எனக்கு போன் செய்யாதே “ என்று கோபத்தோடு சொல்ல, அவளே அம்மாவிடம் போட்டு கொடுத்து விட்டாள்.
லஷ்மி அம்மாள் அவனிடம், “ஒரு சிறிய பெண்ணிடம் இப்படியா பேசுவது. “ என்று கடிந்துக் கொண்டார். மேலும், “திருமணம் ஆனதும் உன் வேலையைப் பற்றி தெரிந்துக் கொள்வாள்”.அப்புறம் தணிந்தவராக “இப்படி பேசாதேப்பா தம்பி மனதுநோகும்.” என்று சொல்ல,
இவனுக்கு ஆத்திர ஆத்திரமாக வந்தது.
இந்த அம்மாவுக்கு தம்பி பாசம் அப்படியா கண்ணை மறைக்கும்.
அப்போது அவன் ஒரத்தநாட்டில் இருந்தான்.
எப்படியும் லண்டன் போய்விடுவேன். இந்த இயற்கை சூழலில் இருக்க வேண்டும் என்று வந்தான்.
தினந்தோறும் தஞ்சாவூர் சென்று திருமணத்து கென்று எதையாவது வாங்கிக்கொண்டே இருந்தார்கள்.
இவனால் அதையெல்லாம் சகித்துக்கொள்ளவே முடியவில்லை.
இவன் லண்டனுக்கு பயண பட வேண்டிய நாளும் வந்தது.
“மன்னியுங்கள் அப்பா -நான் லண்டன் செல்கிறேன். அம்மாவிடம் சொல்ல வேண்டாம்.”
“உன் விருப்பப்படியே செய்ப்பா” என்று அவர் ஒப்புக்கொண்டார்.
கூடவே கண்காணிக்கும் ஆட்களை எப்படி தவிர்ப்பது என்று குழம்பினான்.
அப்பாவே ஒரு தீர்வை சொன்னார்.
“சரிப்பா “என்றான்.
கும்பகோணம் வரை அரிசிமூட்டை ஏற்றிச் செல்லும் வண்டியில் கிளினர் போல் வேடமிட்டு ஏறிக் கொண்டான். கும்பகோணத்தில் இவரின் அப்பா ஏற்பாடு செய்திருந்த காரில் ஏறி சென்னை விமான நிலயத்திற்குச் சென்றான்
அடியாட்கள் ஒருவரும் பின்தொடர வில்லை.
இதில் மிகவும் பரிதாபமாக இருந்தது அம்மா மட்டுமே.
அம்மாவிடம் சொல்லாமல் பிளைட் ஏறியது மனதை உறுத்தியது. வேறு வழியில்லை.
அம்மாவிடம் சொல்லாமல் ஜெனியை திருமணம் செய்யவிருக்கிறான்.
அதை நினைத்தாலும் மனது வலித்தது.
எப்படியோ விமானத்தில் ஏறிவிட்டான்.
லண்டன் போய் இறங்கியதும் ஜெனி இவனை வரவேற்க வந்து இருந்தாள்.
பார்த்ததும் கட்டியணைத்தாள்.
வட இந்தியர்கள் மற்றும் பெரும்பாலான பஞ்சாபிகள் வசிக்கும் செளத்ஆல் பகுதியில் வீடெடுத்து தங்கி இருந்தாள்..
என் வீட்டார் மற்றும் பிரசாத்தால் தொல்லை இருந்ததா……? என்று காரில் போகும் போது கேட்டாள்.
இல்லை. பிரசாத் மட்டும் ஆஸ்பிட்டல் வந்தான். ‘நான் இருக்கேனா என்று பார்க்க வந்தான். நான் MDயுடன் காரில்போவதை பார்த்தவுடன், ஒன்றும் சொல்லாமல் போய் விட்டான்.
என்னை ஒரு நாள் முழுவதும் கண்காணித்து இருந்து இருக்கிறான்.
ஆனால் பிரச்சனை என் தாய் மாமன் மூலம் வந்தது. சமாளித்து, அப்பாவின் உதவியுடன் இங்கே வந்துவிட்டேன்.”
நடந்தவற்றை சொன்னான்.
“நம் காதலை வீட்டில் சொல்லி இருந்து, அவர்களே நம் திருமணத்தை நடத்தி இருந்தால் எவவளவு நன்றாக இருந்து இருக்கும் “என்று தினேஷ் சொல்ல
“கனவு காணாத . அப்படி சொல்லி இருந்தால் இன்னும் சிக்கலாகி எமோஷனலல் பிளாக் மெயில் செய்து இருப்பார்கள்.”
“விடுடா .நாம இங்கேயே திருமணம் செய்துக் கொள்ளலாம்.’
ஜெனிக்கு பள்ளி தோழிகள் பலர் அங்கு இருந்தனர்.
அவர்கள் மூலம் கிருஷ்ணன் கோவிலில் திருமணம் எளிமையாக நடந்தது.
இவளே புது புடலையும், அவனுக்கு பட்டு வேட்டியும் சட்டையும் எடுத்து வைத்து இருந்தாள்.
“ஹேய்..இது எப்போ வாங்கின”……?
“இங்கேயே கிடைக்கின்றது”
“நானும் உனக்கு ஒன்று கொண்டு வந்து வந்து இருக்கிறேன்.”
“ஹை … கொடு “-
“உன் மாமானார் கொடுத்த அன்பு பரிசு”
அவளுக்கு உள்ளமெல்லாம் பூரித்தது.
தங்க செயினில் கோர்த்த தாலியை
கொடுத்தான்.
வாங்கி கண்களில் ஒற்றிக்கொண்டாள்
இருவரும் வீட்டிலிருந்தே புது புடவை வேட்டி சகிதம் போட்டுக் கொண்டு கிருஷ்ணன்கோவிலுக்கு கிளம்பினர்
அங்கே அவள் நண்பர்கள் எல்லாவற்றையும் தயார்நிலையில் வைத்திருக்க மணமேடையில் அமர்ந்தார்கள்.
மாலை மாற்றிக் கொண்டு தாலியும் கழுத்தில் போட்டான் –
நண்பர்களே அட்சதை தூவினார்கள்.
ஜெனி அங்கிருந்த இந்தியன் ரெஸ்டாரென்டில் உணவு ஏற்பாடு செய்து இருந்தாள்..
அன்றிரவு ஹனிமூனுக்கு ஸ்காட்லாந்து சென்றார்கள்.
ஈருடல் ஓர் உயிராக கலந்தது.
அவர்கள் கணவன், மனைவியானார்கள்.
வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக போய்க் கொண்டியிருந்தது.
தினேஷ்ம் MRCP கிளியர் பண்ணி G.M.C Registrion வாங்கி லண்டன் NHS ஆஸ்பிட்டலில் ஜாய்ன் பண்ணினான்.
மூன்று வருடங்கள் கழித்து ஜெனி கருவுற்றாள்.
ஸார்..ஸார்..என்று குரல் கேட்கவே கண்ணை விழித்து பார்த்தான்.
ஜெட்லாக் அசதியில் தூங்கி போய் விட்டான்.
“ஒரத்த நாடு வந்து விட்டது.
வீடு எங்கே” என்று டிரைவர் கேட்க,
“சொல்றேன் போ” என்றான்.
வழி சொல்ல கார் ஊருக்குள் போனது.
ஊர் பெரிதாக மாற்றம் ஏதும்மில்லை.
அதோ அங்கிருக்கும் மாரியம்மன் கோவில் பக்கமாக ஒட்டியே போ. 3வது தெருவில் நுழைந்து,லெப்ட் எடு. அதோ தெரியுது பார் .நான்காவது பச்சை பெயிண்ட் அடித்த வீடு.
தினேஷ் சொல்ல சொல்ல டிரைவர் சரியாக வீட்டு வாசலில் நிறுத்தினான்.
வாசலில் சாணம் யிட்டு மெழுகி கோலம் போடப்பட்டு இருந்தது.
அம்மாவின் நேர்த்தியான கோலத்தை பார்த்து எத்தனை வருடங்கள் ஆகிவிட்டது.
அதை அப்படியே ஒரு நிமிடம் பார்த்தான்.
அந்த கோலம் இவன் அம்மாவிற்கு சொல்லிகொடுத்த கோலம்.
ஒரு பொங்கல் தினத்தன்று இவன் இதை வரைந்து அதை கோலமாக போடச் செய்தான் .அதை அவன் வரும் போது போட்டு இருக்கிறார்.
கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டவுடன், கொல்லை புறத்திலிருந்த அப்பா ஓடோடி வந்தார்.
தினேஷ் … என்று கட்டி பிடித்து அழுதார்.
எங்கப்பா என் மருமகளும்,பேரனும்……”
“அவளை மறக்கத்தான் இங்கு வந்து இருக்கேன்ப்பா.”
“என்னடா சொல்ற . இதுக்குத்தான் எங்களிடம் சொல்லாமல் பிளைட் ஏறி போனியோ” என்று அம்மா உள்ளிருந்து வெளியே வந்து கோபமாக கேட்டாள்.
“சொல்றேன்மா. நான் தப்பு பண்ணிட்டேன் மா.”
“லஷ்மி பேசாமல் இரு . இப்பத்தான் வந்து இருக்கான் .டிரைவர் மட்டும் ஒரு இடத்தில் நிறுத்தி டீ குடித்து இருக்கான். இவன் எதையும் குடிக்க வில்லை. போ. இரண்டு பேருக்கும் சாப்பாடு எடுத்து வை. அங்கு இலை அறுத்து வைத்து வைத்து இருக்கேன் பார்..”
டிரைவரையும் கூப்பிட இருவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டார்கள்.
இவனுக்கு பிடித்த முருங்கை சாம்பார், உருளைக் கிழங்கு வறுவல், அவியல், காரக்குழம்பு என்று செய்து இருந்தார்.
திருப்தியாக சாப்பிட்டான்.
சாப்பிட்டவுடன் தினேஷ்யிடம் “ஸார் நான் இப்போ பஸ் பிடித்து சென்னை
போறேன். நீங்கள் திரும்பி வரும்போது, போன் செய்தால் போதும் வருகிறேன்” என்றான்.
அவனுக்கு கையில் பணத்தை கொடுத்து அனுப்பி விட்டு வந்தான்.
அப்படியே தெருவில் நடந்து சென்றான்: அவன் சிறு வயதில் ஓடியாடி விளையாடிய ஊர். அந்த மண்ணின் வாசனையை நுகர்ந்தான்.
அந்த தெருவைச் சுற்றி அப்பாவின் சொந்தங்கள் இருக்கும் ஊர்.
வீட்டிற்கு திரும்பிக் கொண்டியிருந்தான்.
அப்போது தெருவில் ஒரு பெண் டூ வீலரில் துப்பட்ட பறக்க போய்க் கொண்டு இருந்தாள்.
அம்மாவிடம், “யாரம்மா இந்தப் பெண். இப்படி போகிறாள்.”
“அவள் பெயர் அமலா. “ என்றார்.
தொடரும்.
..
.
.
