27. அவளை மறக்கத்தான்

27.  அவளை மறக்கத் தான்

தினேஷ் ரிலாக்ஸாக ஒரத்தநாடு கிராமத்திலுள்ள மக்களை   வீட்டு வாசலில் நின்றவாறு பார்த்துக் கொண்டியிருந்தான்.

சேவல் ஒன்று அங்குமிங்கும்  உயிருக்கு  பயந்து,பறந்து ஓடிக் கொண்டியிருந்தது. ஒரு 12 வயது சிறுவன்,  அதன் பின்னாலே துரத்திக் கொண்டு ஓடினான்.

ஓரு  பெண்மணி, “என்னடா  இது பின்னாடி ஓடிட்டு இருக்க. ஆத்தா எங்க.”..?

“ஆத்தா ஜாமான் வாங்க போயிருக்கு. சேவக்கோழி கூடைக்குள் இருப்பது தெரியாமல் திறந்து விட்டேன். இது தெரிந்தால் ஆத்தா என்னை வெளுத்து வாங்கிடும்.”என்று ஓடிக் கொண்டே சொன்னான்.

 

தினேஷ் இந்த  காட்சியை பார்த்து சிரித்துக் கொண்டான்.

அப்போது, வெள்ளை நிற துப்பட்டா காற்றில்  பறக்க,  பெண் ஒருவள் வேகமாக தன் டூ வீலரில் போனாள்.

அருகில் இருந்த அம்மாவிடம் “யாரும்மா  இவள்  இப்படி போகிறாளே.”  என்று கேட்க,

“அவள் அமலா  .ரொம்பவும் பரிதாபத்திற்குறிய பெண். நல்ல  படிப்பு. புத்திசாலி.அழகு. எல்லாம் இருந்தும் வாழ்க்கை சரியா அமையல.

கம்ப்யூட்டர் என்ஜினியர்..

“என்னது கம்ப்யூட்டர் என்ஜினியரா

இந்த கிராமத்தில்  என்ன பண்ணுகிறாள்.”

 

“உன் அப்பா தான் அந்த பெண்ணிற்கு  

ஆலோசகர். கம்ப்யூட்டர் சென்டர் வைத்து குழந்தைகளுக்குப் பெரியோர்களுக்கும் சொல்லி  கொடுக்கிறாள்.

நானும் கற்றுக் கொள்கிறேன்.”

“அப்படியா நல்ல விஷயம் மா.”

“சென்னையில் பெரிய கம்பெனியில் வேலை பார்த்தவள். அப்புறம் பல சம்பவங்கள் அவள் வாழ்க்கையில் ஆகிவிட்டது.  உன்னை பார்க்க வர்றேன் என்று சொல்லி  இருக்காள் .”

“சரிம்மா.” என்று சொல்லிவிட்டு அறைக்குள் போய் விட்டான்.

யார் வாழ்க்கை அவர்கள் எதிர்பார்த்தது போல் நடக்கின்றது. ஜெனியும், இவனும் பிரிவார்கள் என்று நினைத்தே பார்த்து இருக்க மாட்டான். 

ஜெனி… பணக்கார வீட்டுப் பெண்.

அவளை ஒரு குறையும் இல்லாமல் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தான்.

அதற்காக உழைக்கவும் தயாராக இருந்தான்.

 

மிகவும் மகிழ்ச்சியான தம்பதிகளாக லண்டனை வலம் வந்தார்கள்.

அதற்கு சாட்சியாக அடுத்த கட்டமாக கருவுற்றாள். அதை மிகவும் மகிழ்ச்சியாக   அவனிடம் சொன்னாள்.

இருவருமே தங்களின் அன்பை , வாரிசை கொண்டாட தீர்மானித்தார்கள்.

அந்த நாளை கொண்டாடித் தீர்த்தார்கள்.

கருவுற் ற பெண்ணை எப்படி கவனித்துக் கொள்வது என்று திணறினாலும்,நல்ல படியாகவே  ஜெனியை தாங்கினான்.

 

“ஜெனிம்மா  நீ கஷ்டப்பட்டு வேலைக்கு இந்த மாதிரி நேரத்தில் போகணுமா.”?

வேலையை விட்டு விடேன்.  அந்த புராஜெக்ட் முடிந்து விட்டதல்லவா.”

“இல்லடா .  எனக்கு மேலும் விசா நீடிப்பு  கொடுத்து, இங்கேய தக்க வைத்துள்ளார்கள் .கடைசி இரண்டு வாரம் லீவு எடுத்துக் கொள்கிறேன்.

நம்மூரில் பஸ்ஸில் வெயிலில் அலுவலகத்திற்கு போகும்   கர்ப்பிணி பெண்களை பார்த்து இருக்கிறேன்.

அதை விட சொகுசாகத் தான் இங்கே இருக்கிறேன்… கார் ஓட்டிக் கொண்டு போறேன். ஒன்று பிரச்சனையில்லை.”

“சரிமா.  “

வாழ்க்கை நல்லா போயிட்டு  இருந்தது.அவள் மேல இன்னும் காதல் அதிகமா ஆச்சு. 

அவனுக்கு பொறுப்பும் கூடியது. 

ஆண்குழந்தை என்று முன்பே சொல்லிவிட்டார்கள்.

“உன் வீட்டிலும்,என் வீட்டிலும் சொல்லலாமா யாராவது உதவிக்கு வருவார்கள்.”

“நாம என்ன முறைப்படியா திருமணம் செய்துக் கொண்டோம், ஓடி வந்து விட்டோம். எந்த முகத்தை வைத்து அவர்களை கூப்பிடுவது. அதுமில்லாமல் நாம தானே குழந்தை பெற்றுக் கொள்ள முடிவு செய்தோம். நம் குழந்தையை நாமதான் பார்த்துக் கொள்ள வேண்டும்.

நம் பெற்றோரை  நம்குழந்தையை பார்த்துக் கொள்ளும் படி சொல்ல மாட்டேன். அது அவர்களே செய்து வைத்த திருமணம் ஆனதாக இருந்தாலும் : நாமே பார்த்துக் கொள்வோம். “

இவனுக்கு அவன் அம்மாவை கூப்பிட பயமாக இருந்தது. சொல்லாமல் பிளைட் ஏறிவிட்டான்.

மாமா பெரிய பிரச்சனை செய்து விட்டாராம்.

“என் தகுதி கீழே உள்ள உங்களிடம் சொந்தம்  ஆச்சே   என்று என் பெண்ணை கொடுக்க வந்தேன் பாரு. என்னை செருப்பால்  அடித்து விட்டு போய் விட்டான் உன் மகன்  “.

அப்பாவும், “அவன் வேண்டாம் என்றான். நீ கேட்கல. நிச்சயதார்த்தம் என்று சொல்லி  விட்டு  திருமணத்திற்கு ஏற்பாடு பண்ணின. அவன் ஏன் வேண்டாம் என்று சொல்கிறான் என்று கூட புரிந்துக் கொள்ள முடியவில்லை.”

“யோவ்.. நீ பேசாமல் இருய்யா.” என்றதும்,

லஷ்மி வெகுண்டாள். 

“யாரை பார்த்து டா யோவ் என்கிற.. உன் மாமா என்று கூட உனக்கு மரியாதை இல்லை. இப்ப சொல்றேன் எனக்கும்

 உன்னுடன் சம்பந்தம் வைத்துக் கொள்ள பிடிக்கவில்லை. அவன் படிக்கத்தான் லண்டன் போயிருக்கான். வெளியே போ”“என்றாள்.

 

அம்மாவுக்கு பெருத்த ஏமாற்றம். மற்றும் அவமானம்..

“சரிம்மா.. உன்  வளர்ப்பு அன்னை ராஜம்மா” என்று இழுக்க

“அவர்  இப்பொழுது தான் திருமணம் செய்து உள்ளார். தன் சொந்த ஊரான கல்லிடைகுறிச்சிக்கே போய் விட்டாராம்..அவர் இப்பொழுது  கை குழந்தையுடன் இருக்கிறார்.”

“ஏண்டா இப்படி பயப்படற .”

“நம்மால் வளர்க்க முடியாதா .”

அவளே முடியும். என்று  சொல்லி அந்த பேச்சுக்கு முற்று புள்ளி வைத்தாள்.

மாசம் ஆக ஆக, இவனுக்கு பயமேற்பட்டது.

ஸ்டேஷனில் காரை விட்டு விட்டு, டிரெயினில்  அலுவலகம்  போய் வந்தாள்.

 

இவனையே சுற்றி சுற்றி வந்தாள்.

 

மருத்துவமனை வேலை  முடிந்ததும் வீட்டிற்கு ஓடோடி வருவான்.  இவளை கவனித்துக் கொள்வான்.

 

மெல்ல, மெல்ல அவனுக்கு மருத்துவ மனையில் டிரெயினிங் முடிந்து வேலை  பளு அதிகமாயிற்று. 

அவனுடைய ஒரே குறிக்கோள்.

பணக்கார வீட்டு பெண்ணான  தன் மனைவி ஜெனியை   வசதியாக வாழ வைக்க வேண்டும். அவளுக்கு எந்த குறையும் வைக்கக் கூடாது  என்பதே.

அதற்காக உழைத்தான்.

மருத்துவ மனையில் ஆரம்பத்திலே எந்த முறைப்படி குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புகிறாய் என்று கேட்டார்கள்.

சிசேரியன், நார்மல், வாட்டர் பர்த் இப்படி கேட்டவுடன்  வாட்டார் பர்த் முறைப்படி பெற்றுக்  கொள்ள விரும்புகிறேன் என்று சொல்லி, கையெழுத்தும் இட்டாள்.

 

அதைப் பற்றி தெளிவாகவும் புரிந்துக் கொண்டாள்.

 

பேறு கால வலி வந்ததும், காரில் மருத்துவ மனை போய், வீல்சேரில் அமரவைத்து பதட்டத்துடன் தள்ளிக் கொண்டு ஓடினான்.

பெரிய  பாத்டப் போல இருந்ததில் மிட்வைப் உதவியுடன் தண்ணீரில்  இறங்கினாள். தினேஷ்ம் கூடவே இருந்தான்.

 

குழந்தை பிறந்தது. 

 

தன் மகனை தூக்கி அப்படியே மிட் வைப்   அவன் கையில் கொடுக்க,அவன் தன் வெற்று மார்பில் குழந்தையை போட்டுக் கொண்டான்.  அந்த உணர்வு சொல்லில் அடங்காது. 

அப்படியே அழும் குழந்தையை மார்பில் போட்டுக் கொண்டு லயித்து உணர்ச்சி குவியலாக இருந்தான்.

மூன்று நாட்கள் கழித்து வீட்டுக்கு வந்தார்கள்.

 

அவள் போன போது  இருந்த  நண்பர்கள் ஒருவரும் இல்லை. இந்தியா அமெரிக்கா என்று பல்வேறு இடங்களுக்குச் சென்று விட்டார்கள்.

 

அங்கே குழந்தையை தனியே படுக்க வைக்க வேண்டும் என்பது விதி.  அதற்காக பேபி காட் ஒன்று  வாங்கி அதை குழந்தை படுப்பதற்காக சகல வசதியும் முன்கூட்டியே திட்டமிட்டு செய்து இருந்தனர்.

இவள், அவனிடம் “என்னால் குழந்தையை தனியே படுக்க வைக்க முடியாது . நம்மருகிலே  படுக்கவைத்துக் கொள்ள வேண்டும்.”

“இந்த இடம் பத்தாதுமா. எதற்காக தனியே படுக்க வைக்க வேண்டும் என்று சொல்கிறார்கள் தெரியுமா”……?

“நாம் குளிருக்கு போர்த்திக கொண்டு தூங்கும் போது, போது  குழந்தையும் சேர்த்து  மூடி விடுவோம் .பல குழந்தைகள் இது போல் குல்ட்டால் மூச்சு திணறி இறந்து இருக்கிறது …அதனால் தன் கவர்மெண்ட்டில்   இப்படி ரூல்ஸ்போட்டு இருக்கிறார்கள்.”

“சரிடா எனக்கும் புரியுது.”

“ஒவ்வொரு முறையும் என்னால் எழுந்து குழந்தைக்கு பால் , நேப்பி மாற்ற முடியாது. அதற்காக சொல்கிறேன் “.

“மிட்வைப் வாரம் ஒரு முறை வருவாள் .அப்போது இதில் படுக்கவைப்போம்.” 

“சரி. மூவருக்கும் இடம் பத்தாது. நீ  கீழே படுத்துக்கொள். “ என்றாள்.

“ம்ம்ம்… உனக்கு மகன் வந்ததும்,என் பொஸிஷன்  டெளன் ஆகிவிட்டது.இதற்கு பெயர்  தான் மருத்துவ உலகில் ‘adjustment Reaction  என்பார்கள். .”

சரி. ஜெனிக்கு குழந்தையை பார்த்துக் கொள்ளவே நேரம் சரியா இருக்கும்.    நம்மை பற்றி எங்கே சிந்திக்க போகிறாள். என்று அவனும்  நினைத்துக் கொண்டான்.

ஒருவாரம் வீட்டிலே இருந்து  ஜெனியை பார்த்துக் கொண்டான்.

இருவரும் ஒரே நேரத்தில் லீவு போட வேண்டாம். 

நீ லீவு முடிந்து கிளம்பும் போது நான் பார்த்துக் கொள்கிறேன் “ என்று சொல்லிவிட்டு மருத்துவமனைக்கு சென்று விட்டான்.

வேலை பளு. அதிகமாகி விட்டது.

களைப்பாக வீட்டுற்கு வந்ததும், தூங்கி விடுவான். மறுநாள் காலையிலே போக வேண்டி வரும். இப்படியே நாட்கள் சென்றது.

ஜெனியால் குழந்தையை தனியே சமாளிக்க முடியவில்லை.  தனியே பார்த்துக் கொள்ளலாம் என்றவள். அழும் குழந்தை.தூங்கா இரவுகள். … இப்படி கஷ்டப்பட்டாள்.

ஹிந்தி பெண்மணி ஒருவரிடம் சாப்பாடு வாங்கிக் கொள்கின்றனர்.

 

இவனால், அவளுக்கு  நேரமே ஒதுக்க முடியவில்லை. மருத்துவமனையே கதியென்று இருந்தான். 

மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வருவான். 

இவளைப் பார்த்ததும்.

“ஹாய் ஜெனி..   நிகேதன் தூங்கினானா,. பால் குடித்தானா”  என்ற சம்பிரயாத கேள்விகள் மட்டுமே கேட்பான்.

இவளைப் பற்றி எதுவும் கேட்க மாட்டான்.

ஜெனி மெல்ல மெல்ல post Natal depression க்கு போய் கொண்டு இருந்தாள்.

ஹார்மேன்   சேன்ஜஸ், 

யார் உதவியும் இல்லாமல் இவளால் இந்த சூழ்நிலையை சமாளிக்க முடியல்லை. இவனிடம் நிறைய எதிர்பார்த்ததாள்.

இவனுக்கே கூடுதல் பொறுப்புக்கள் கூடியது. மருத்துவ மனையிலும் சரி வீட்டிலும் ஜெனியையும், குழந்தையையும் நல்லபடியாக வைத்துக் கொள்ள வேண்டும். என்ற நினைப்பு மட்டும் தான் அவன் நினைவில் இருந்தது

குழந்தை அழுதது. பால் குடிக்க மறுத்தது. மார்பகங்கள் கட்டிக் கொண்டது. வலியால் அவதிப் பட்டாள்.

அதை விட நிகேதன் அழும் போது, எரிச்சல் பட்டாள். என்ன செய்வது ன்று தெரியாமல் தத்தளித்தாள்.

இவனிடம் மார்பகம் கட்டிக் கொண்டது சொன்னதும், பம்ப் பண்ணி வெளியே எடுக்கச் சொன்னான்.

குழந்தைக்கு தவறாமல் பால் கொடு. டைம் வச்சி கொடுக்காதே அழும் போது கொடு “என்றான்.

அவளுடைய எதிர்பார்ப்புகள் என்னவென்பதை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை அதை புரிந்துக் கொள்ளும் தன்மையும் ஆண்களுக்கு கிடையாதே.

 

காலையில் அவன் போனதும்,  நிகேதனை பார்க்க வே பயமாக இருந்தது. எப்பொழுது அழுவான் எப்போது தூங்குவான் என்று  புரிந்துக்கொள்ள முடியாமல்  இருந்தது. 

இவளுக்கு  தூக்கம் என்பதே இல்லாமல் இருந்தது

குழந்தை பிறந்த பிறகு, அந்த அழகான காதல்,இயந்திரத்தனமான வாழ்க்கையாக  மாறத் தொடங்கியது.

எல்லோருடைய இதயத்தை திறந்து பார்த்து, அதிலுள்ள அடைப்புகளை  சரி பண்றவன், தன் மனைவியின் இதயத்திலுள்ள  வலிகளையும், உணர்வுகளையும் அறிந்து கொள்ள தவறிவிட்டான்.

தொடரும்.

 

 

 

 

 

 

 

 

 

எ..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

.

 

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page