28. அவளை மறக்கத்தான்.
தினேஷின் அப்பா மோகன், தன் மகன் இங்கு வந்ததிலிருந்து, எதோ ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறான். முகத்தில் பொலிவு இல்லை என்பதை கண்டுக் கொண்டார்.
அறையில் படுத்து இருந்த அவனிடம், “வாப்பா வெளியே போகலாம். ஏன் அறையிலே அடைந்து இருக்கிறாய்.
வா” என்று சொல்லி வெளியே அழைத்து போனார்.
மாரியம்மன் கோவிலுக்கு நடந்தே போனார்கள்.
பெருசா தூரமில்லை: கோவிலை சுற்றி வந்தாலே போதும். ஊர் முழுவதும் பார்த்து விடலாம்.
கோவிலுக்கு உள்ளே போனார்கள்.
நடை சாத்தி இருந்தது. அங்கிருந்த படியில் அமர்ந்துக்கொண்டார்கள்.
“ஊர் அப்படியே இருக்குப்பா”.
“நல்ல வேளை வயல்வரப்பை பிளாட் போட்டு விற்க வில்லை. நிலபுலன்களை பாதுகாக்கிறார்கள். “
“தஞ்சை மண்ணுப்பா. நல்ல விளைச்சல் கொடுக்கும். “
செழுமையாக இருந்தது.
காத்துக்கு பஞ்சமில்லாமல் வீசி, குளிர்ந்தது.
“இங்கே இருக்க ரொம்ப நல்லா இருக்குப் பா”
“இங்கேயே இருந்து விடேன்”. என்று மகனிடம் மனு போட்டார்.
“எப்படிப்பா முடியும். நான் கார்டியோலாஜிஸ்ட். அங்க தானே நிறைய பேஷண்ட்ஸ் வருவார்கள். என்னை நம்ப பவுண்டர் சீப் டாக்டரா நியமித்து இருக்கார். போக வேண்டும்ப்பா..ஆனால், வருடத்திற்கு ஒரு முறையாவது கண்டிப்பா இங்கே வந்து விடணும்ப்பா”
“வாப்பா.. உன் மண் இது.”
“உனக்கும், ஜெனிக்கும்”……. என்று இழுத்தார்.
கோவில் வளாகத்தில் காலில் கயிறு கட்டப்பட்ட நிலையில் உள்ள ஓரு ஆடு காலை நடக்க முடியாமல் இழுத்துக்
கொண்டு போனது. மே…மே… மே என்று கத்தியது. தன் இணையை தேடுகிறதோ என்னவோ என்று நினைத்தான்.
“தினேஷ் “….. என்று மோகன் கூப்பிட,
சுயநினைவுக்கு வந்தவளாய்,
“சொல்லுங்கப்பா” ன்றான்.
“எங்களுக்கு இருப்பது ஒரே மகன்.
நீ மகிழ்ச்சியா இருந்தால் தானே, நாங்களும் அதைப் பார்த்து மகிழ்ச்சியா இருக்க முடியும். உன் அம்மா ஊரெல்லாம் பேரபிள்ளை வரப் போறான் என்று சொல்லி வைத்திருந்தாள்.. அவனுக்காக எத்தனை உடைகள் பொம்மைகள் வாங்கி வைத்து இருக்கிறாள் தெரியுமா”!!!
“உங்கள் இருவருக்கும்
இடையில் எதாவதுபிரச்சனையா “…..
“நீ ஒத்தையில வந்ததற்காக கேட்கல . உன் முகத்தில் பழைய பொலிவு இல்லையே. என்னிடம் சொல்லனும் என்றால் சொல்லுப்பா.”
“உங்ககிட்ட சொல்லாமல் நான் யார்கிட்ட சொல்லப் போறேன்.”
“சொல்றேன்ப்பா.”
“நிகேதன் பிறக்கும் வரை நல்லா போச்சிப்பா . ரொம்ப காதலோடு வாழ்ந்தோம். “
“அவன் பிறந்தும் அவனை எங்களால் பார்த்துக்க தெரியல. சமாளிக்கவும் முடியல.
உதவிக்கும் யாருமில்லா. அவளை தனியா விட்டுவிட்டு நான் மருத்துவமனை போய் விடுவேன். எனக்கு அது ரிலீப்பாகத்தான் இருந்தது. ஆனால், அவளுக்கு தனியே குழந்தையை ஹாண்டில் பண்ணத் தெரியல. “.
“மிஸ்அண்டர்ஸ்டாண்டிங்ப்பா.
மகன் வந்ததும், நான் இரண்டாம் இடத்திற்கு போய்ட்டேன் ன்று நினைத்தேன்.அவனை பார்ப்பதே அவளுக்கு சரியா இருக்கும். நாம் அதில் தலையிட வேண்டாம் என்று நினைத்தேன்.”
“மெல்ல மெல்ல, அவள் postpartum Blues தாக்கம் அடைந்தாள். பிரசவத்திற்கு பிந்தைய மனஉளைச்சலில் (ppD) postpartum Depression)
அவதிப்பட்டாள் என்பது டாக்டரான எனக்கு தெரியலப்பா.”
“என்னப்பா எதோதோ சொல்ற .”
“ஆமாம் பா.எனக்கு அப்ப புரியல. ஆனால் புரிந்துக் கொண்டேன் . ஆனால் அதற்குள் நிலமை கைமீறி போய் விட்டது. என் தப்பு தான். அவளை சரியா புரிந்துக் கொள்ளவில்லை.”
“ அந்த டிப்ரஷனால் அவள் எந்த நிலமைக்கு ஆளானாள். என்ன விதமான துன்பத்தை அனுபவித்தாள். சொல்லுடா. “ என்று மோகன் பதட்டத்துடன் கேட்டார்.
“குழந்தை தூங்கினாலும் அவர்களால் தூங்கமுடியாது…குழந்தையை பார்த்தால் பயப்படுவார்கள்.. எக்ஸ்டிரீம் லெவல் போனால். குழந்தை மீது பாசம் காட்ட முடியாத நிலைமை உண்டாகலாம். நல்ல வேளை அப்படி எதுவும் நடக்கவில்லை. நல்ல அம்மாவா என்ற சந்தேகம் அவர்களை உலுக்கும். தேவையில்லாமல் அழுவர்கள்.
“எனக்கும். அவளுக்கும் இடையே பேச்சு வார்த்தை குறைந்தது.”
“அவள் நிறைய நேரம் மௌனமாக இருந்தாள்.
எதற்கெடுத்தாலும் எரிச்சல் அடைந்ததை நான் சோர்வு என்று தவறாக புரிந்துக் கொண்டேன்.”
“நான் அவள் பிரச்சனையை காது கொடுத்து
கேட்டு இருக்கணும். மருத்துவமனையை விட்டு சோர்வா வருவேன். ஒன்றும் கேட்கத் தோணாது. அவ ஆபீஸ் போகும் போது, நான் அவனை பார்த்துக் கொள்ளப் போகிறேனே. இப்பொழுது அவளே பார்த்துக் கொள்ளட்டும் என்று அசட்டையாக இருந்து விட்டேன்.”
“அவள் ரொம்ப இண்டிபென்ட் பெண்ணாக வளர்ந்தவள். சிறுவயதிலே கையில்குழந்தை. நான் என்னோட பங்களிப்பை கொடுக்கல. அவளுக்கு என்னிடம் எதிர்பார்ப்புகள் இருந்தது.”
“காதலாகி கசிந்துருகி வாழ்ந்தோம். ஆனால், குழந்தை பிறந்தபின் எல்லாமே தலைகீழ். “
“ஒரு நாள் லண்டனில் 0 டிகிரி போனது. அந்த குளிரை என்னால தாங்க முடியவில்லை.
மருத்துவமனை போய்ட்டு வீட்டிற்கு வர இரவு 10 ஆகிவிட்டது. கடும் குளிர். அந்த நேரம் பார்த்து, காரில் ஹீட்டர் வேலை செய்யவில்லை. இரவு நடுங்கிக் கொண்டே வீடு வந்து சேர்ந்தேன்.
குழந்தைக்கு சளி பிடித்துக் கொண்டதாம்.
எனக்கு போன் பண்ணி இருக்கா. நீயேன் எடுக்கல. என்று வீட்டுக்குள் வந்ததும் சண்டை.”
“ஜெனி… நான் ஒன்றும் ஜாலியா ஊர் சுத்தல. மேஜர் ஆப்ரேஷனை செய்து விட்டு வருகிறேன்.. அது எவ்வளவு காம்ளிகேட்டடு .தெரியுமா ..இந்த மாதிரி சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் சண்டை போட்டு என் நிம்மதியை கெடுக்கதா .. நீ ஒரு ஜ.டி. புரபஷனல் கேர்ள். படிக்கதா பெண்ணில்லை. நீயே குழந்தையை அழைத்துக் கொண்டு போயிருக்கலாம். எனக்கு ஏன் போன்பண்ண. “
“அவள் பதிலுக்கு, “ஏன் சொல்லமாட்ட. நீ என் காரை எடுத்துக்கொண்டு போயிட்ட. நான்
எப்படி இவனை அழைத்து போவதாம்.”
ஏன் டாக்ஸி இல்ல… என்று சொல்லிவிட்டு, “ என்ன சொன்ன. உன் காரா.. “
பேசாமல் இருந்தாள்.
“நீ தானே சொன்ன.இப்ப நீ கார் வாங்க வேண்டாம். என் கார் சும்மாத்தானே இருக்கு.அதை எடுத்துக் கொள் “ என்றாய்
என்புத்தியை…என்று கோபமாக சொல்லிவிட்டு, அறையில் ஹீட்டர் போட்டு படுத்தான்.
அப்போது தான் யோசித்தாள்.
“நான் நல்ல அம்மா இல்லையயோ. குழந்தையை கவனிக்க, இவனை எதிர்பார்க்கிறேன். அவன் வரவில்லை என்றதும் ஏமாற்றம் அடைந்து கத்துகிறேன். எனக்கு ன்ன ஆச்சு.என் ஸ்மார்ட் நெஸ்.எங்கே போச்சு. “ என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டாள்.
ஆனாலும் ஒன்று யோசித்தாள். இவன் நாம் காதலித்த தினேஷ் வேறு. இப்போது இங்கு வந்த பிறகு இருக்கும் தினேஷ் வேறு. அவனுக்கு நம் மேல் காதலே இல்லை. என்ற முடிவுக்கு வந்தாள்.
“நான் யோசித்து இருக்கணும்பா”
“ஜெனி மாதிரி பெண்கள் டிபென்டன்டா இருக்க மாட்டார்கள். தன்னிச்சையாக செயல் படுவார்கள். இவள் ஏன் என்னை எதிர்பார்த்தாள் என்று யோசித்து இருக்கணும்.”
,டிப்ரஷனில் இருப்பவர்களால் இப்படியெல்லாம் தனித்து செயல்பட முடியாது. யாருக்காவது depend da ஆகிவிடுவார்கள்.”
லஷ்மி போன் செய்தாள்..
“ஹலோ என்னம்மா…”
“எங்கங்க இருக்கிறீர்கள். அப்பாவும், புள்ளயும் எப்படி என்னை தனியே விட்டுட்டு போய் விட்டீர்கள்.
நான் அவனுடன் பேச வேண்டாமா.”
“வருகிறோம். இங்கத்தான் அம்மன் கோவிலில் உட்கார்ந்து காற்று வாங்கிக் கொண்டு இருக்கிறோம்.
“சீக்கிரம் வாங்க. எனக்கு தூக்கம் வருகிறது. “என்று சொல்லி போனை வைத்து விட்டார்.
“சரி. தினேஷ் கிளம்பலாம். உங்கம்மா கத்தறா.”
“போகலாம்பா”
எழுந்து தூசியை தட்டிவிட்டு
வீட்டிற்குச் ‘சென்றார்கள்.
போனதும் “ இந்தடா.இந்த பாலை குடி “கண்ணெல்லாம் சிவந்து இருக்கு.பிளைட்டில் வந்ததா இருக்கும்”.
“நாளை தலைக்கு எண்ணெய் வைத்து தேய்த்து விடுகிறேன். கிணற்றடியில குளித்து விடலாம்.”
“இல்ல என்றால் பம்ப் செட்டில் போய் குளித்து விட்டு வா”.
மோகன், “அது நாளைய பிரச்சனை தானே. பாலை கொடுத்துட்டல .நீ போய் தூங்கு.” என்றதும்,
“உங்களுக்கு என்ன அக்கறை என் பிள்ள மீது. எனக்குத் தானே இருக்கும்.”
“சரிம்மா உன் புள்ள உனக்குத் தான் அவன் மேல் அதிக அக்கறை உண்டு. ஒப்புக் கொள்கிறேன் என்று சரணடைந்தார்.
“தினேஷ் நீ படு. . உன் உள்ளங்காலில் தேங்காய் எண்ணெய் தேய்த்து விடுகிறேன். தூக்கம் நல்லா வருமாம். “ என்று அம்மா எண்ணெய் கிண்ணத்தோடு வந்தாள்.
“அட இது யார் சொன்னா”.
“யூடியூப்பில் கற்றுக் கொண்டு டாக்டராக ஆக வேண்டியது தான்.”
“ஆளாளுக்கு டாக்டராக வைத்தியம் சொல்கிறாரகள்.”
“அப்பா..அந்த காலத்து பாட்டி வைத்தியம். இப்போ டிரண்டு மாறி எல்லோரும் சொல்கிறர்கள்”.
“பாட்டி வைத்தியத்தில் நல்லது இருக்கோ இல்லியோ கண்டிப்பாக கெடுதல் இருக்காது. இப்ப இருக்க யூ-டியூப் திடீர் மருத்துவர்கள் சொல்வதைக் கேட்டால், சங்கு தான் “ என்று மோகன் நக்கலடிக்க, தினேஷ் சிரித்துக் கொண்டே தூங்க போய் விட்டான்.
………….…
அதிகாலையில் சேவல் கூவியது.
அதைத் தொடர்ந்து காகம் கரைந்தது. பறவைகளின் கீச்சொலி கேட்டது.
அதிகாலைக்கென்றே தனித்துவமான வாசனை உண்டு. அதை நுகர்வதில் கொள்ளை பிரியம் தினேஷ்க்கு :
எழுந்தான் .கீழேறங்கி போனான்.
மல்லிகைப்பூ பந்தலிருந்து பூவாசம் நாசியை எட்டியது.
யாரோ மண் தரையில் தண்ணீர் தெளித்ததும், அந்த மண்வாசம் ஈரக்காற்றின் குளிர் வாசம். இப்படி கலவையாக நாசியையும்,மனதையும் ரொம்பியது.
காலையிலே அந்த துப்பட்டா பெண், அதே மாதிரி பறக்க டூவீலரில் பறந்தாள்.
இவன் வாசலில் நிற்பதை பார்த்தவுடன்,
யூ-டர்ன் போட்டு, இவனருகே வண்டியை நிறுத்தினாள்.
“ஹலோ…டாக்டர் …நான் அமலா பக்கத்து தெருவில் இருக்கிறேன்.. பால் வாங்க வந்தேன். உங்களை வாசலில் பார்த்ததும், அப்படியே போக மனம் வரவில்லை.
‘’நேற்றே உங்களை பார்த்தேன்” என்றான்.
“அவசர வேலையா போய்ட்டேன். ஸாரி கவனிக்கல”
லஷ்மி வெளியே வந்தார்.
வாம்மா.அமலா .நீ பால் வாங்க போக வேண்டாம். இந்தா காபி. என்று தினேஷிக்கும், அமலாவிற்கும இரண்டு கோப்பை நிறைய பில்டர் காபி கொடுத்தார்.
ஆஹா…என்று ரசித்துக் கொண்டே குடித்தாள்.
“இவன் என் மகன் டாக்டர் தினேஷ்.”
“ம்ம்ம்- …….தெரியுமா.”
“சரி. இன்னிக்கு இங்கேயே டிபன் சாப்பிட்டு விடு. என் புள்ளக்கு பிடிச்சதெல்லாம் செய்யப்போறேன்.
“நானும் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன்மா.” என்று சொல்லிவிட்டு, மட மடவென்று வடைக்கு ஊறப் போட்ட உளுந்தை அரைத்து கொடுத்தாள்.
ஒரு மணி நேரத்தில் முடிய வேண்டிய காலை உணவு, அரைமணியில் தயார் ஆனது.
.நால்வரும் தரையில் அமர்ந்து சாப்பிட்டார்கள்.
நல்ல கலகலப்பாகவே பேசினாள்.
அவளுக்குள் சோகம் இருக்கு என்று அம்மா சொன்னார். அதையெல்லாம் தூக்கி தூர போட்டு மகிழ்ச்சியாக. இருந்தாள்.
“ கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து விட்டு ஏன் இந்த கிராமத்தில் எதாவது M.N.C கம்பெனிக்கு போனால், நல்ல சாலரி கிடைக்குமே.”என்றான்.
“நானும் H.C.ட ல் வேலை பார்த்தவள்தான்.”
“எங்கே”… என்று அவசரமாக கேட்டதில் புரைக்கேறியது.
“சென்னை டைடல் பார்க். “
‘இவளுக்கு ஜெனியை பற்றி எப்படி தெரிந்திருக்கும் அது ஒரு கடல் ஆச்சே. ‘’
“ஓ …அப்படியா “என்றான்.
தொடரும்.
.
“
…
