29 அவளை மறக்கத் தான்

29. அவளை மறக்கத் தான்.

சுத்தமல்லி கிராமம் திருநெல்வேலி.

வம்படியாய்  சம்பிராயதயம்  என்று  விசாலம் முத்துவிற்கும், அமலாவிற்கும் ஏற்பாடு செய்த   முதலிரவு அன்று  கடும் மன உளைச்சல், மற்றும் கோபத்தில்  இருந்த அமலா பூக்களை பிய்த்து எறிநது  முத்துவின் தலையில் கொட்டி அவனை அவமானப்படுத்தினாள்.

அவளின் கோபத்தை,  மனதை புரிந்துக் கொண்ட முத்து ,அவள் கோபத்தில் நியாயம் இருப்பதாக எண்ணி, பேசாது இருந்தான்.

 

அவள்  அழுதுக் கொண்டே வெற்றுத்தரையில் தூங்க, இதற்கு ஒரு முடிவு செய்ய வேண்டும் என்று யோசித்தான்.

தான் காதலித்த பெண் … அண்ணனுக்கு மனைவியானதை ஏற்கக் கொள்ள முடியாமல் விரக்தியில் காசிக்கு போகும் இரயிலில் போனதாக பார்த்தவர்கள் சொன்னார்கள்.

அவனுக்கு புரிந்தது. முழுக்க  முழுக்க அவன் செய்த தவறு. சிங்கப்பூரில்  நண்பன் என்று ஏமாந்தது முத்துவின் தவறல்லவா.  அது  தான் இந்த சீர்கேடுகளின் ஆரம்பப் புள்ளி.

தன்னிச்சையாக முடிவெடுத்தான். 

இரண்டு நாட்கள் அமலாவை  கண்டு கொள்ளாமல் இருந்தான்.

அவளும் அறையே கதியென்று இருந்தாள்.

அவளின் அத்தையும், புது பெண்ணல்லவா அப்படித்தான் முரண்டு பிடிப்பாள். போக , போக   முத்துவுடன் இணைந்து  வாழ்வாள்.

என்று நினைத்து அவளை ஒன்றும் சொல்லாமல்  .இருந்தாள்.

இரண்டு நாட்கள் கழித்து, அமலாவை

வெளியே  அழைத்து  போக கூப்பிட்டான்.

வரமாட்டேன் என்றாள்..

“உன்  நல்லதுக்குத் தான் கூப்பிடுகிறேன் “என்றான்.

அம்மாவிடம் அவளை ஹனிமூன் அழைத்து போகப் போகிறேன் என்றான்.

எப்படியோ இருவரும் நன்றாக இருந்தால் சரி. என்று இருவரும் போக அனுமதித்தாள்.

முதலில் அவளை கோவிலுக்கு அழைத்துப் போய்,”  தாலியை கழற்றி உண்டியலில் போடு “என்றான்.

“மாமா… உனக்கு என்ன புத்தி பேதலித்து போய் விட்டதா அத்தை தாலி எங்கே என்று கேட்டால், நான் என்ன சொல்வேன். அதற்கும் அடி உதை எனக்குத் தான் கிடைக்கும்.”

“உன்னை கேட்க மாட்டார்கள் என்னை நம்பு “என்றான்.

“எனக்கும் ஒன்றும் பிரச்சனை இல்லை. என் ஒப்புதல் இல்லாமல் கட்டப்பட்ட தாலி .இது.  உண்டியல் சேர்ப்பது முறைதான்” என்று கழற்றி உண்டியலில் போட்டாள்.

 

“ஏன் மாமா இந்த முடிவை எடுத்த. அதாவது வேண்டுதலா ..இல்லை ஊரறிய கட்டப் போறியா”.

இல்லை என்று தலையாட்டினான்.

“இந்த தாலி நாலு சுவற்றுக்கள் கட்டப்பட்டது. உற்றார் உரவினர் முன்னிலையில் கடவுள் சாட்சியாக கட்டப்பட்டதும்  இல்லை.  மேலும்…  என்று  சொல்லி  நிறுத்தினான்.

அது அவள் அம்மா பிணத்தின் முன்பு கட்டப்பட்து. இதற்கு முக்கியத்துவம் இல்லை.” என்றான்.

அப்போது, வேறொரு கார் வந்தது

அமலாவிடம், போன்  மற்றும் அவளுடைய உடைமைகளை கொடுத்தான்.

அடாவடியாக இவர்களிடமிருந்து பறித்த நிலத்தின் மதிப்பில் பணம் டெபாசிட் செய்த பாஸ் புக்கையும் கொடுத்தான்.

அதுவே ஒரு கோடிக்கு இருந்தது.

“உன் அம்மா இழப்பிற்கு எத்தனை கோடிகள்   கொடுத்தாலும் ஈடாகாது.

இதை வைத்துக் கொள் “என்றான்.

இவர் என்ன செய்கிறார் என்று  புரியாமல் விழித்தாள்.

“அமலா …நீ இந்த ஊரை விட்டு போகப் போற “

இதைக் கேட்டதும், அவளுக்கு அதிர்ச்சியாகவும்,ஆச்சரியமாகவும்  இருந்தது.

 

“என்ன நடக்கின்றது….. ஊரை விட்டு போ” என்கிறார்.

இது நடக்கிற காரியமா. அத்தைக்கு தெரிந்தால் என்னைத் தானே வெட்டுவார்கள். மகனை ஒன்றும் சொல்ல மாட்டாரே.

i”மாமா… நீங்கள் சொல்வது நிஜமா.”

“ஆமாம்.  என் வாழ்வு இப்படித்தான் ..

நீ என்னுடன் இருந்து இந்த வீல் சேரை தள்ளும்  வேலையை செய்ய வேண்டாம்.”

“உன்னை மறக்கத்தான் கதிர் காசிக்கு போய் விட்டான்.”

“என் கூட பிறந்த பிறப்பு இந்த ஊருக்கு வர வேண்டும் .அதை நான் பார்த்துக் கொள்வேன்.”

 

“நீ கிளம்பு- அதோ கார் வந்து விட்டது. உன்னை  சென்னையில்  பத்திரமாக இறக்கி விட்டு விடுவான் .கிளம்பு .”

அவன் அப்படி பேசியது அவளுக்கு ஒரு மாதிரியா இருந்தது. தயக்கமாகவும் இருந்தது.

ஆனால் அவளால் அம்மா இறந்த  அந்த வீட்டில் வாழ முடியாத நிலை  .

அவனுக்கு நன்றி சொல்லிவிட்டு, கிளம்பினாள்..

திரும்பி ஒரு முறை  முத்துவை பார்த்தாள்.

கையசைத்து விடை கொடுத்தான்.

போன் கைக்கு வந்ததும்  ஜெனிக்கு முதலில் போன் செய்தாள். போகவே இல்லை .

‘என்னாச்சே என்று தெரியவில்லையே சரி. ஆபிஸுக்கு போய் பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தாள்.’

 

இவ்வளவு சீக்கிரத்தில் தனக்கு விடுதலை கிடைக்கும் என்று நினைக்கவே இல்லை.

 

அம்மாவுடன் இந்த ஊருக்கு வந்தாள். இப்பொழுது அம்மா இல்லாமல் போகிறாள்.

‘ஏன்மா அவசர பட்ட. நீயில்லாமல் நான் எப்படி மா வாழ்வேன் ‘.

தன் வீட்டில் போய் இறங்கிக் கொண்டாள்

கதவை திறந்து போனதும், வெறுமையாக இருந்த வீட்டில் அம்மாவின் வாசனை அடித்தது.

 

தேற்றக் கூட  ஆளில்லாமல்  அம்மாவின் புடவையை கட்டியணைத்துக் கொண்டு கதறி அழுதாள்.

அக்கம் பக்கத்தலுள்ள  பெண்கள் இவளைத் தேடி வந்தனர்.

 

“உனக்கு திருமணம் ஆனது என்று கேள்விபட்டோமே”…

“ஆமாம்.”

“உன் அம்மா எங்கே”…?

“இறந்து விட்டார்.”

“இதென்ன கொடுமை. “

“எல்லாம் 10 நாட்களில்  நடந்து முடிந்து விட்டது. உன் அம்மாவின் இறப்பு, உன் திருமணம் இரண்டும் ஒரே நாளா” என்று, கேள்வி மேல் கேள்வி கேட்டார்கள். 

“எங்கே கழுத்தில் தாலி இல்லை.

உன் கணவன் எங்கே… ? 

நீ என் தனியாக வந்தாய்”……..?

 

உலகம் எவ்வளவு சின்னது. எப்படி எனக்கு திருமணம் ஆனது  என்று  இவர்களுக்கு தெரிந்தது.

 

அதற்கு விடை அங்கிருந்த ஒருத்தி சொன்னாள்

“என் மச்சினன்  உன்னுடன் வேலை பார்ப்பவன். உன்னைத் தெரியுமாம். .உனக்கு திருமணம்  நடந்து விட்டதாம்.. ரிசைன் பண்ணிவிட்டதாக சொன்னான்.”

அந்த செய்தி  இவளுக்கு புதியதாக இருந்தது. அதிர்ச்சியை காண்பிக்கவில்லை.

 

“சரி. நான் அவசரமாக போக வேண்டும்”. 

வீட்டு ஓனர் “எப்பம்மா வீட்டை காலி பண்ண போற.இந்த வீட்டுக்கு என் உறவுக்கார பெண்ணின் குடும்பம் வரப்போகிறது. “ “ என்றதும் அவளுக்கு புரிந்தது –

 “போய்ட்டு வந்து சொல்றேன்க்கா.”

யார் முகத்தையும்  ஏறிட்டு பார்க்காமல், தன் வண்டியை ஸ்டார்ட் செய்ய,…நல்ல வேளை  ஸ்டார்ட் ஆனது –

தன் அலுவலகத்திற்கு போனாள்.

ஜெனியிடம் நடந்த எல்லாவற்றயையும் சொல்ல வேண்டும்.

அங்கேயும் நிறைய கேள்விகளை எதிர் கொள்ள வேண்டி இருந்தது.

ஜெனி. லண்டன் போய் விட்டாதாக சொன்னார்கள்.

அவள் மேல் மிகுந்த கோபத்துடன் இருப்பதாக சொன்னார்கள்.

அங்கு வேலை இருக்கா என்று கூட கேட்க விருப்பம் இல்லாமல் வெளியேறினாள்.

எங்கே போவது. என்ன செய்வது அம்மா எனக்கு ஒரு நல்ல வழியை காண்பிம்மா” என்று தன்   மனதில்  மனதார கேட்டுக் கொண்டாள்.

 

ஓர்  நல்ல வழி அவள் பள்ளித் தோழி ரூபத்தில் வந்தது.

 

தேன்மொழியிடமிருந்து போன் வந்தது. சுத்தமல்லி கிராமத்தில் கூட படித்தவள். 

12ம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு, திருமணமாகி  போனவள். அதுவரை நெருங்கிய தோழியாக இருந்தவள்,திருமணமானதும் எப்போவாவது போன் செய்வாள். ஆனால் கலகலவென்று பேசுவாள். நட்பு இருந்தது.

 

நலம் விசாரித்து விட்டு அம்மாவைப் பற்றி கேட்க,  “விபத்தில் இறந்து விட்டார்” என்று மட்டும் சொன்னாள்.

 

இவளுடைய அம்மாவும், அவளுடைய  அம்மாவும் பள்ளித் தோழிகள்.

வருத்தப்பட்டு விட்டு”,நீ தனியே அங்கு இருக்க வேண்டாம்..  இங்க வா உனக்கும் ஆறுதலா இருக்கும். என் கணவரும், மாமியாரும் , அவருடைய அப்பத்தா ஊருக்கு போய் இருக்கிறார்கள். என்னுடன்  சின்ன மகள் இருக்கிறாள். பெரியவன் கணவருடன் போய் இருக்கிறான்”. என்றாள்.

 

அமலாவிற்கும், குடித்தன வாசிகளின் பார்வையிலிருந்து தப்பிக்க ஓர்  இடம் போய் வரலாம் என்று   தஞ்சாவூருக்கு பஸ்ஸில் கிளம்பினாள்.

 

 தஞ்சாவூரிலிருந்து டாக்ஸி பிடித்துக் கொண்டு தேன்மொழியின் ஊரான ஒரத்தநாடு சென்றாள்.

 

இவளை மகிழ்ச்சியாக வரவேற்றாள்.

தோழிகள் கதை கதையாக பேசினார்க்கள்.

அவளின் 5 வயது பெண் மிகவும் மிகவும் சூட்டிகையாக இருந்தாள்.

நேரம் போனதே  தெரியவில்லை .மனசும் இலேசாக இருந்தது.

அவளிடம் தனக்கு நேர்ந்த அவலத்தைப் பற்றிச்  சொன்னாள்.

“யாரை நம்புவது என்றே தெரியவில்லை.  கதிர் அண்ணனா அப்படி நடந்துக் கொண்டார்.. உன்னை எவ்வளவு காதலித்தார் எனக்குத் தெரியுமே.”

“அவர் மேல் தப்பில்லை . சூழ்நிலை அவரை அவ்வாறு நடந்து கொள்ள  வைத்தது, “

“விடு. கெட்டதிலும் நல்லது நடந்து இருக்கே. முத்து  அண்ணன்  உனக்கு விடுதலை கொடுத்தது. “ 

“ஆமாம் தேனு. அவர் அப்படி நடந்துக் கொள்வார் என்று எதிர் பார்க்கவில்லை. ஆனாலும் பாவமாகத் தான் இருந்தது.”

“முத்து அண்ணனுக்கு நடந்தது மிகப்பெரிய கொடுமை என்ன செய்வது. பெற்றோர்கள் செய்த பாவம்  மகன்களின் தலையில் விடிந்தது. உன் அத்தை   சரியான சொர்ணாக்கா.”

“பாவப்பட்டெல்லாம் அவருடன் வாழ முடியுமா .நீ தாலியை கோவில் உண்டியலில் போட்டது சரிதான்.”

மெல்ல தயங்கியபடியே, அமலா   அவளிடம், “எனக்கு இந்த ஊர் ரொம்ப பிடிச்சிருக்கு. எனக்கு எதாவது இங்கொரு வீடு பார்த்து கொடுத்தினா, நான் இங்கேயே இருந்து விடுவேன்.”

“ஏய்… நீ படித்த படிப்புக்கு  இங்க என்னடி  பண்ணுவ “

“நான் அதை  அப்புறம் யோசிக்கிறேன்.”

“முதலில் எனக்கு வீடு வேண்டும்.”

தேன்மொழி அவளிடம்”, நானும் இங்கே இருக்க மாட்டேன். ஒரு மாதத்தில் துபாய் கிளம்பறோம். 

 அங்கே அவருக்கு வேலை கிடைத்து விட்டது”.

 

“ம்ம்ம்”..என்றாள் வருத்தமாக,

“சரிடி. நீ இங்கேயே இருக்க ஏற்பாடு  செய்யலாம்”.

“இப்பத் தூங்கு. காலையில் இங்கு ரிட்டயர்டு தாசில்தார் மோகன்  பெரியப்பா இருக்கிறார். ரொம்ப நல்லவர். அவரிடம் சொல்லி உனக்கு வேலையும், வீடும் பார்க்கலாம்.”

மகிழ்ச்சியாக “சரி” என்றாள்.

மோகன் வீட்டிற்கு போனார்கள்|

பெரியப்பா  என்று கூப்பிட்டுக் கொண்டே உள்ளே போனாள்.

லஷ்மி “வாடி தேனு எங்க இந்த பக்கம் ஆளே காணோம்.”

“வேலை  சரியா இருக்கு பெரியம்மா”.

“நீங்கள் இன்று எதுவும் சமைக்க வேண்டாம்.”

“நானோ மொச்சை போட்டு கருவாட்டு குழப்பு வைத்து விட்டேன்”. இந்தாங்க என்று ஒரு கிண்ணத்தில் குழம்பும், ரசமும் கொடுத்தாள்.

“யாரு. … தேனா….. மொச்சைகருவாட்டு குழம்பு மணக்குதே . வாம்மா” என்று  மோகன் வரவேற்றார்.

அப்போது. அமலாவை பார்க்க, “இது யாரு” என்று லஷ்மி கேட்க,

“என் தோழி அமலா .  இவளுக்கு நீங்க ஒரு ஹெல்ப் பண்ணனும்.”

“ உன் தோழி என்று சொல்கிறாய். அவளும் உன்னைப் போல் தான்” .

“என்னைப் போல் போல்  இல்லை ரொம்ப படித்தவள்  IT. கம்பெனியில் வேலை பார்த்தவள்”.

“இந்த ஊரில் ஊரில்  இருக்க வேண்டும்” என்கிறாள்.

“அவள் கதையை அவளே உங்களுக்கு சொல்வாள் .நீங்கத்தான் வீடு பார்த்து கொடுக்க வேண்டும்.”

“அதற்கென்ன,நம்வீடே சும்மாத்தானே பூட்டி வைத்து இருக்கிறேன். அதையே கொடுத்து விடுகிறேன்”.

“ஐயோ.. பெரியப்பா உங்களுக்கு எவ்வளவு பெரிய மனசு  . “

வீட்டை பார்த்தார்கள்.  அவள் ஒருத்திக்கு பெரிய வீடு. நல்ல காற்றோட்டமாக இருந்தது.  

 

பெரிதாக சாமான்கள் எதுவும் இல்லாததால், இங்கிருந்த படியே வீட்டு ஓனரிடம் சொல்லி வண்டியில், ஏற்கனவே தயார் நிலையிலிருந்த சாமான்களை . ஏற்றி விடச் சொன்னாள்.

இரண்டு நாளில் பால் காய்த்து குடியேறினாள்.

 

தொடரும்.

 

.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

.

 

 

  

 

 

.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page