30. அவளை மறக்கத்தான்.

30. அவளை மறக்கத்தான்.

அமலா, ஒரத்தநாட்டில்  மோகன் அவர்களிடம் வீட்டை பெற்றுக் கொண்டு,  நல்ல நாளில் பால் காய்ச்சினாள்.

அனைவருக்கும் பாலை டம்ளரில் ஊற்றி கொடுத்து விட்டு,  காலை உணவையும் அங்கேயே சாப்பிடச் சொன்னாள்.

 

மோகனிடம் சில ஆலோசனைகளை கேட்டாள்.

 

“கம்ப்யூட்டர் படித்து இருப்பதால், கிராமத்து  இளைஞர்களுக்கும், பெரியோர்களுக்கும் கம்ப்யூட்டர் சொல்லித் தரலாம் என்று இருக்கிறேன்” என்றாள்.

“நல்ல முயற்சி. சொல்லித் தாம்மா. “

மேலும், அவரே “பர்சனாலிட்டி டெவலப்மெண்ட் கோர்ஸ் கூட  இங்கிருக்கும் பள்ளி கூட பிள்ளைகளுக்கும்,  கல்லூரி மாணவ,மாணவிகளுக்கும் சொல்லித்  தரலாம் “என்று ஜடியா கொடுத்தார்.

 

“ஆமாம்பா. அது ரொம்பவும் முக்கியமான  ஒன்று. “

 

“அப்படி யென்றால் என்னவென்று தேன்மொழி கேட்க,

“ பர்சனாலிட்டி டெவலப்மெண்ட் கோர்ஸ் என்பது ஒருவரின் தன்னம்பிக்கை பேச்சுத்திறன் உடல் மொழி, தலைமை பண்புகள் மற்றும் அவர்களுக்கு நேர்மறையான எண்ணங்களை மேம்படுத்த உதவும் ஒரு பயிற்சியாகும்” .

 “நம் கிராமத்து இளைஞர்களுக்கு நேர்காணல்களை எதிர்கொள்ளும் தைரியத்தை வளர்க்கும். ரொம்ப முக்கியம் டைம் மேனேஜ்மென்ட், க்ரூப் டிஸ்கஷனில் எப்படி பேசுவது  என்பது பற்றியும் சொல்லித் தரலாம் . 

 

தேன்மொழி அமலாவிடம் “உன்னால் முடியும். நானும் எனக்குத் தெரிந்த மாணவர்களை, இதில் சேர சொல்லுகிறேன்.”

“பள்ளிகூட மாணவர்களுக்கு   இலவசமாக அவர்கள் பள்ளியிலே போய் சொல்லித் தருகிறேன்.” என்று எமலா சொன்னதும். 

லஷ்மி   கைத்தட்டினார்.

“நல்லப் பெண் .  எனக்கும் இங்கே உள்ள பள்ளிகளின் தாளாளர்களின் மனைவிமார்களைத் தெரியும். அவர்களிடம் சொல்கிறேன்.”

 

“உங்கள் உதவிக்கு மிக்க நன்றி மா” என்றாள்.

“நன்றி சொல்லாதேம்மா. தேன்மொழியைப் போலவே நீயும் எங்களுக்கு மகள் தான்.”

ஒரு மாதத்திற்குள் எல்லா ஏற்பாடுகளையும் விரைவாக செய்தாள்.

முத்து கொடுத்த பணம் இருந்தது ஆனால், அதை எடுத்து செலவு செய்ய ஏனோ மனம் வரவில்லை. அம்மா..இவள் திருமணத்திற்காக பணம் சேர்த்து வைத்திருந்தாள். இனிமேல் .அதெல்லாம் இல்லை என்ற முடிவுக்கு வந்தாள்.. அந்த பணத்தை கம்ப்யூட்டர் வாங்க செலவு செய்தாள்.

மாதங்கள் போனது. தேன்மொழியும் துபாய் சென்றாள்.

அவளுக்கு ஒரே வருத்தம் தான் ஜெனியும் தன்னை தப்பாக நினைத்து விட்டாளே. நான் சொல்லாமல்  திருமணம் செய்வேனா… அது ஏன் அவளுக்கு புரியவில்லை.” என்று குமறினாள்.

தான் இக்கட்டில் இருந்த போது அமலா ஜெனியை தானே நினைத்தாள் .வந்து காப்பாற்ற மாட்டாளா என்று ஆதங்கப்பட்டாள்.

ஆனால் ஜெனியும் அப்படி நினைப்பவள் இல்லையே. அவளுக்கு என்ன சூழலோ நம்மை  நம் செயலை தீர்மானிப்பது  சூழல் தானே.

 

தன்னைப் பற்றி மெல்ல மெல்ல மோகன், லஷ்மியிடம் சொன்னாள் .

லஷ்மியின் கண்களிலிருந்து கண்ணீர் வந்தது. இந்த சிறுவயதில் இவ்வளவு கொடுமையை அனுபவித்து வந்து இருக்கிறாயே .நல்ல வேளை முத்துவின் மனமாற்றம் நல்லதே  உண்டாக்கி இருக்கு..

மோகன் அவளிடம் “ நீ எதைப் பற்றியும் கவலைப்படாமல் நீ செய்யும் நல்ல காரியத்தில் கவனமா இரு: வளரும் தலைமுறையை பிரகாசமாக உருவாக்குவது சிறந்த செயல். அதில் உன் கவனம் இருக்கட்டும் .அந்த ஆண்டவன் நீ கேட்காமலே உனக்கு சகல செளபாக்யத்தையும் கொடுப்பார் “ என்று ஆசிர்வதித்தார்.

இதையெல்லாம் தன் மகன்  தினேஷ்யிடம் சொல்ல, “ கிரேட்பா.அந்தப் பெண். அவருக்கு என்னாலான உதவிகளையும்  செய்யறேன்.”

“சரி. வெளியே வாக் போய்ட்டு வரலாம் வர்றியா “ என்று மோகன் கூப்பிட வர்றேன்ப்பா என்று  ஜாகிங் ஷூஸ் போட்டுக் கொண்டு கிளம்பினான்.

மோகனும், டிராக் சூட், நைக்கி ஷூஸ் சகிதம் கிளம்ப, லஷ்மி “உங்கள் இரண்டு பேரையும் பார்த்தால் அப்பா, புள்ள மாதிரி இல்ல. அண்ணன்,  தம்பி மாதிரிஇருக்கீங்க.”  என்று கையை சொடக்கி திருஷ்டி கழித்தார்.

 

“நீயும் இதே மாதிரி போட்டினா இவனுக்கு தங்கச்சி மாதிரி இருப்ப.”  என்று மோகன் சொல்ல,  வெட்கத்துடன் லஷ்மி “உங்களுக்கு வேலையே இல்லை. “ என்று சொல்லி சிரித்தார்.

“நீங்கள் வருவதற்குள் நான் பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு போய்ட்டு வர்றேன் “என்று  நெய் கிண்ணத்துடன் கிளம்பினாள்.

ஊருக்கு வெளியே  இவர்களுடைய வயலில்   ஓய்வு எடுப்பதற்காக பம்புசெட் அருகில்   ஓர் அறையை மோகனின் அப்பா கட்டி வைத்திருந்தார்.

 

“வா தினேஷ். வயலுக்கு போகலாம். அமைதியா இருக்கும்.”

மெல்ல  வரப்பில்  நடந்து   அறைவாசலில் சேர் போட்டு அமர்ந்தார்கள்.

பம்புசெட்டில் இருக்கும் நீரில் பறவைகள் இந்த வெயிலுக்கு முங்குவதும்,படபடவெடுத்து எழுவதுமாக இருந்தது.

 

மகனே சொல்லட்டும் என்று காத்திருந்தார்.

 

அவனே பறவைகளின் குளியலை  ரசித்து விட்டு “அன்று  குழந்தைக்கு உடம்பு சரியில்லாத போது, நடந்த  வாக்குவாதத்தில் நான் அவளிடம் பேசாது இருந்தேன்.”

 

“நான் செய்த மிகப்பெரிய தவறு அது.

என்னவோ  அவளுக்கு மட்டுமே நிகேதன் பொறுப்பு என்பது மாதிரி நடந்துக் கொண்டேன். 

அவளும் என்னுடன் பேசவில்லை.

நிகேதனை   ஸ்டோரலில் (baby Stroller) தூக்கிக் கொண்டு, மாலைவேளையில் வெளியே போக ஆரம்பித்தாள்.

 

அருகில் இருக்கும் பூங்காவிற்கு மற்றும் மால்களுக்கு போய் வந்தாள்.

அப்படி  ஒருநாள் போகும் போது மழை பெய்தது. அருகில் இருக்கும் காபி ஷாப்பிற்கு சென்றாள்.

அங்கு தான் கல்யானை பார்த்தாள்.

 

கல்யாண் அவளுடைய சைல்ட்வுட் தோழன். அவளோட அப்பா பார்த்த வைத்த மாப்பிள்ளையும்அவனே..

 

இவளைப் பார்த்ததும் அவனே முதலில் அடையாளம் கண்டுக்கொண்டான்.

இவளுக்கு அவன் யார் என்றே தெரியவில்லை

 

தான் கல்யாண் என்று அறிமுகபடுத்திக் கொண்டான்.

 

இவளுக்கும்  ஞாபகம் வந்தது.

என்ன எப்படி அடையாளம் கண்டு பிடிச்ச .”என்று ஜெனி கேட்க

 

“உன் போட்டோவை உன் அண்ணன் 

காண்பித்தார். அதனால் தெரிந்துக் கொண்டேன்” என்றான்.

“ஆனால்,நான் உன்னை மறந்து இருக்கக் கூடாது.  என்னை சின்ன வயதில் நீ புரக்ட் பண்ணுவ.

நான் ரொம்ப சேப்பா (sate) இருப்பேன்.”

 

இருவரும் சேர்ந்து காபி குடித்துக் கொண்டே சிறுவயதில் செய்த குறும்புகளை நினைத்தார்கள்.

 

“நீ  எங்க இங்க “என்று ஜெனி கேட்க, ““புது பிஸினெஸ் இங்க ஸ்டார்ட் பண்ணி இருக்கேன். ‘அதற்காக   இங்க இருக்கிறேன்  “என்றான்.

நீ…. என்று அவளை கேட்க,

“இவன் என் மகன் நிகேதன். வீட்டிலே  இருக்க முடியவில்லை பக்கத்தில் தான் வீடு. மழை பிடித்துக் கொண்டதால் காபி  ஷாப் வந்தேன்.” என்றாள்.

 

நிறைய பேசினார்கள்.

 

மழை விட்டது. 

“கிளம்பறேன் . வீட்டிற்கு வாயேன்” என்றாள்.

 

“ஓ… ஷ்யூர்”என்றான்.

காபிஷாப்பை விட்டு வெளியே  வந்தார்கள்.

 

லேசாக  மழை தூறிக் கொண்டு இருந்தது.

“ஒரு நிமிடம் குழந்தையுடன் உள்ளே இரு.”  என்று சொல்லிவிட்டு அவன் பார்க்  செய்த காரிலிருந்து குடை எடுத்துக் கொண்டு வந்தான் –

 

“ஹேய். தூறல் தானே. “

“இல்ல.. இப்பத்தான்  உனக்கு குழந்தை பிறந்து இருக்கு..2 மாதங்கள் இருக்குமா”..

“ம்ம்ம்”…என்றாள்.

மழையில் நனையக் கூடாது  என்று அவளை நனையாமல் பார்த்துக்கொண்டான்.

 

வீட்டிற்கு போனார்கள்.

வீடு இருந்த அலங்கோலத்தை பார்த்தான்.

அவளால் சமாளிக்க முடியவில்லை. வீட்டு வேலைகள் செய்து பழக்கமில்லை.

குழந்தை வந்ததால் இன்னும் மோசமாகி விட்டது.

வீட்டை ரொம்ப மெஸ்ஸியாக வைத்து  இருக்கேன் .

வேலை செய்ய ஆட்கள் இல்லை.”

என்றாள்.

 

“முதலில் ஒன் அவர்  பேசிக்கில் ஒரு ருமேனியா நாட்டு லேடி ஒருவர் வந்தார்..  குழந்தை பிறந்தவுடன்  அவர்நாட்டுக்கே போய் விட்டார். வருவதும் இல்லை”  .

“பிறகு வேறெரு ஆளை நியமிக்க எனக்கு  யோசனையும் வரவில்லை.”

 

“உனக்கு ஆட்சேபனை இல்லையென்றால் நான்  அனுப்புகிறேன்”என்றான்.

 

PPD பாதித்த பெண்களுக்கு யாராவது தங்களை புரிந்துக் கொள்கிறார் என்ற உணர்வு மிகவும் தேவை.. அந்த உணர்வை கல்யாண் கொடுத்தான்.

வீட்டிற்கு போனதும்,ஜெனிக்கு அவனே  டோஸ்ட்டும், எக் ஆம்லெட்டும் போட்டு கொடுத்தான்.

“என்ன கல்யாண். நீ இதெல்லாம் பண்ற.”

“முதலில் சாப்பிடு. உன்னைப் பார்த்தால் ரொம்ப டயர்டா இருக்கு.”

அப்போது அறையில் படுக்க வைத்த குழந்தை அழுதது.  

“நீ சாப்பிடு ஜெனி. நான் பார்த்துக்கிறேன். அப்பத்தான் நீ டென்ஷன்  இல்லாமல் பார்த்துக்க முடியும்.”

அவன் செய்த டோஸ்டை சாப்பிட்டாள். வயிறு நிரம்பியது.

அவன் குழந்தையை தூக்கிக் கொண்டு நடந்தான்.

மனதார  தன் மகன் நிகேதனுக்கு பால் கொடுக்கச் சென்றாள்.

 

கல்யாண் கதவை அடைத்துவிட்டு, தன் காரில் ஏறி போய் விட்டான்.

 

அவன் சொன்னது  போல் ,   வேலை செய்யும் பெண்மணியை    அனுப்பி வைத்தான்.

அவளுக்கு வேலை பளு குறைந்தது.

அவனும், ஜெனியும்அடிக்கடி சந்தித்து கொண்டர்கள்.

ஜெனியும் மகிழ்ச்சியாக காணப்பட்டாள்.

தினேஷ்க்கு  அவள் மகிழ்ச்சியாக இருக்கிறாள்  என்று. புரிந்தது

 

இரவு தினேஷ் வந்ததும், கல்யானை பார்த்தது. வீட்டிற்கு வந்தது இப்படி எல்லாவற்றையும் சொல்ல வேண்டும் என்று நினைத்தாள்.

இரவு லேட்டாக வந்தான் போலும்.

வேறெரு அறையில் படுத்து உறங்கிவிட்டான்.  காலை எழுந்து   சீக்கரமாகபோய் விட்டான்.

ஜெனிக்கு ரொம்பவும் அலுப்பாக இருந்தது. இரவு லேட்டாக வருகிறான். காலையும்  போய் விடுகிறான். எப்பொழுது அவனுடன் பேசுவது..இந்த லைப் நல்லாவே இல்லை. என்று நினைத்தாள்.

 

அவனோ  ஜெனிக்கு ஒரு சர்ப்ரைஸ் வைத்து இருந்தான். இப்போது இருக்கும் வீடு. வாடகை வீடு. குழந்தையின்  மூவ்மெண்ட்டிற்காக  பெரிய விடு  வாங்க திட்டமிட்டு இருந்தான். முழு முயற்சியில் ஈடுபட்டு ஜெனிக்கு சர்ப்ரைஸ் கொடுக்க காத்து இருந்தான்.

இவள் கல்யாண் வந்ததை சொல்லவில்லை. அவனும் வீடு வாங்கப் போறதையும் சொல்லவில்லை.

இருவருக்கும் சந்தர்ப்பம் அமையவில்லை.

 

ஜெனியும், கல்யாணும். அடிக்கடி சந்தித்து கொண்டர்கள்.

ஜெனியும் மகிழ்ச்சியாக காணப்பட்டாள். சின்ன வயதில் என்னை புரக்ட் செய்தது போல  இப்போதும் செய்கிறான். தினேஷின் அலட்சியம் அவள் மனதை உடைத்தது.

தினேஷ்க்கு  அவள் மகிழ்ச்சியாக இருக்கிறாள்  என்று  புரிந்தது.

அதுபோதும். அவளே என்னை புரிந்துக் கொண்டாள் என்று நினைத்தான்.

 

இந்த ஆறு மாதம் அவள் நிகேதனை பார்த்துக் கொள்வாள்.

பிறகு என் டர்ன். நான் அவனை பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்குள் .வேறு வீட்டுக்கு போக வேண்டும்.

ஜெனி கல்யான்யிடம்  “இந்த சண்டே வீட்டுக்கு வா . உன்னை தினேஷ்க்கு அறிமுக படுத்துகிறேன். என் சிறு வயது தோழன் என்று அவனிடம் சொல்லி இருக்கிறேன்” என்றாள்.

கல்யாணும்   தினேஷ பார்க்க ஆவலாக 

இருக்கிறேன் என்றான்.

 

கல்யான் ஜெனியை  “உன்னை ஒரு இடத்திற்கு அழைத்துக் கொண்டு போகிறேன்..வர்ரியா “என்று 

கூப்பிட்டான்.

“இன்றா”

“ஆமாம். “

“இன்று எனக்கு நிகேதனை செக்கப் செய்ய அழைத்துக் கொண்டு போகிறேன்.

“எத்தனை மணிக்கு. ‘

“காலை 10 மணிக்கு 

 

“நானே வந்து உன்னை அழைத்து போகிறேன். “

“சரி “என்றாள்.

 

குழந்தையின் கார்  சீட் (Seat) இவள் காரில் இருப்பதால் இவள் காரிலே போக முடிவு செய்தார்கள்.

 

டாக்டரிடம் காண்பித்து  விட்டு வெளியே வந்தாள்..

“என்னாச்சி. “

 

“ஒன்றுமில்லை . கொஞ்சம் அவன் வயிறு உப்புசமாக இருந்தது.  அதனால் காண்பித்தேன் .”

“டாக்டர் நோ பிராப்ளம் “என்றார்.

 

.“சரி இப்ப கிளைமேட் நல்லா இருக்கு. ‘போகலாமா “என்றான்.

போனார்கள் .அது பட்டர்பிளை பார்க் விதவிதமாக, கண்ணை கவரும் கலரில் பட்டர்பிளை பார்க்க உற்சாகமானாள். 

“நீ எப்படி  இதை துரத்திக் கொண்டு பிடிக்க ஓடுவ  ..உனக்கு இந்த இடம் பிடிக்கும் என்று தான் அழைத்து வந்தேன்”.

.

இது மாதிரி ஒரு இடம் இருப்பது எனக்குத் தெரியாது.

இயற்கையாக இருக்கு..

அப்படி ஒரு மகிழ்சியை அனுபவித்தாள்.

வெளியே வந்ததும், நண்பன் காரில் போன தினேஷ். ஜெனியையும், கல்யானையும் பார்த்தான்.

 

தொடரும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

  

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

.

 

 

 

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page