அத்தியாயம்-3

அபி முதல் நாள் கல்லூரிக்கு சென்றவள் உள்ளே  நுழைந்து அனைத்தையும் பார்வையிட்டுக் கொண்டே செல்ல அவளுக்கு பின்பக்கம் இருந்து விசில் சத்தம் கேட்க திரும்பி பார்த்தால். 
 

அங்கே ஒரு பெண் நின்று கொண்டு இருந்தாள்.

அவளைப் பார்த்துவிட்டு மீண்டும் திரும்ப மீண்டும் விசில் சத்தம் கேட்டபடி திரும்ப அந்த பெண் தான் “ஓய் ஃபர்ஸ்ட் இயரா?”  என்றால்.

இவளும் ஆமாம் என்று தலையசைக்க 
 

“இங்க வா !” என்று அழைத்துவிட்டு அங்கே இருந்த திண்டில் ஏறி அமர்ந்து கொண்டாள். 

அபி அவர்களைப் பார்த்துவிட்டு பயத்துடன் அந்தப் பெண் அமர்ந்திருக்கும் இடத்திற்கு அருகே சென்று நிற்க 
 

“என்ன கூப்பிட்டா நிக்க மாட்டியா திரும்பிப் பார்த்துட்டு போற சீனியர் எங்களுக்கு அவ்வளவுதான் மரியாதையா?”  என்றால் அந்த பெண். 
“சா…ரி .. சீனியர்… எனக்கு நீங்க தான் கூப்பிட்டீங்கன்னு தெரியாது இல்லனா கண்டிப்பா நின்றிருப்பேன்!”  என்றால். 
“சரி உன்னோட பெயர் என்ன?  எந்த டிபார்ட்மெண்ட்?”  என்றால் அந்த பெண். 
 

“என் பெயர் அபி ரஞ்சிதா சீனியர் ஃபர்ஸ்ட் இயர் பிஎஸ்சி இன்டீரியர் டிசைனிங் !” என்றால். 
 

“ஓ சரி.. உனக்கு பாட்டு பாட தெரியுமா ?” என்று கேட்க 
 

எந்த பதிலும் சொல்லாமல் அந்த சீனியர் பெண்ணையே பார்த்துக் கொண்டிருந்ததில் அவள் மீண்டும் “உன்ன தான் கேட்கிறேன் பாட்டு பாட தெரியுமா தெரியாதா?”  என்றால். 
 

“தெ…தெரியும்.. சீனியர்!”  என்றால் தட்டித் தடுமாறி. 
 

“நம்ம கிட்ட பேசவே இந்த பயப்படற பொண்ணு எப்படி பாடுவா  சும்மா இரு!” என்றான் அவள் அருகில் அமர்ந்திருந்த இளைஞன்.
 

அப்பொழுதுதான் அவனையும் பார்த்தாள்.  உடனே பார்வை அந்தப் பெண்ணுக்கும் அந்த இளைஞனுக்கும் மாறி மாறி அவள் பார்த்துக் கொண்டிருக்க அதை கண்ட அந்தப் பெண் சிரித்துவிட்டு “என்ன பாக்குற? இதுக்கு முன்னாடி பக்கத்து பக்கத்துல உக்காந்து நீ பார்த்ததில்லையா?”  என்றால். 
 

“இல்ல. அதுக்காக பாக்கல. நீங்க ரெண்டு பேரும் பாய் கேர்ள் ஆ இருக்கீங்க!  ஆனா ஃபேஸ் மட்டும் ஒரே மாதிரியா இருக்கு அதுதான் கன்ஃபியூஸ் ஆயிட்டேன்!”  என்றால் அபி. 
 

“அது நாங்க ரெண்டு பேரும் ட்வின்ஸ். இவன் என்னோட உடன் பிறந்தவன் என்ன எனக்கு ஒரு நிமிஷத்துக்கு முன்னாடி வந்துட்டான் ! அதனால இவன் எனக்கு அண்ணனா போய்ட்டான் . இவன் அண்ணனா இருக்கறதுனால நான் இவனுக்கு தங்கச்சியா போயிட்டேன்!”  என்றாள். 
 

“அது அவளுக்கே தெரியாதா? ஏண்டி அவளை போட்டு குழப்புற?”  என்ற அந்த பையன் ” என்னோட பேரு சுதர்ஷன் தேவன் இவ பேரு சுதர்ஷினி தேவி! எல்லாரும் எங்களை தேவன் தேவி அப்படின்னு கூப்பிடுவாங்க!”  என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டவன்
 

” நான் இன்டீரியர் டிசைன் தான் ஆனா இவ பி பி ஏ படிக்கிறா நாங்க எல்லாம் உனக்கு தேர்ட் இயர் சீனியர்!”  என்றான் தேவன். 
 

“ஓ நீங்களும் எங்க டிபார்ட்மென்ட் தானா சூப்பர் சூப்பர் எனக்கு ஏதாவது டவுட் என்றால் நான் உங்ககிட்ட கேட்கட்டுமா சீனியர் அண்ணா?”  என்றாள். 
 

அதற்கு சிரித்த தேவன் “சரிமா கேளு கண்டிப்பா எனக்கு தெரிஞ்சா சொல்லி தரேன் ஆனா உனக்கு அது புரியுமா என்னன்னு தான் எனக்கு தெரியாது ?” என்றான். 
 

இப்படியே இவர்கள் பேசிக் கொண்டிருக்க அப்பொழுது  “பாட சொன்னா பாடாம என்ன பேசிட்டு இருக்க ?” என்று ஒரு குரல் அபிக்கு பின்னால் கேட்டது. 
 

அவள் திரும்பிப் பார்க்க அவளுக்கு முன் மிகவும் நெருக்கமாக வந்து நின்றவனை பார்த்தவள் பயத்தில் தடுமாறி பின் நகர அதில் விழபோனவலை இடையில் தாங்கி பிடித்துக் கொண்டவன் பழுப்பு நிற கண்களை பார்த்து மாய வலைக்குள் விழுவது போல் அதை நோக்கி கொண்டு இருந்தால் அபி.
 

அவனும் அவளுடைய முட்டை கண்களில் கிட்டத்தட்ட மயங்கி விட்டான் என்றே சொல்லலாம். 
 

இதை பார்த்த சுதர்சன் தன்னுடைய மொபைலில் அழகாக போட்டோ கிளிக் செய்தான் .
 

அந்த சத்தத்தில் இருவரும் தன்னிலை அடைய அபி கரண் கைகளில் இருந்து வேகமாக விலகி குடுகுடு வென்று ஓடி விட்டாள். 
 

“ஏய் அடுத்த முறை  பாக்குறப்போ கண்டிப்பா பாட சொல்லி கேட்போம் பாட்டு பாடாமல் போன அவ்வளவுதான்!”  என்று அங்கிருந்து செல்வவளை  பார்த்து கத்திய கரன் சிரித்துக்கொண்டே நண்பர்கள் அருகில் அமர்ந்தான். 
 

அவனையே வினோதமாக பார்த்த தேவியின் பார்வையை புரிந்து கொண்டவன் அவள் முகத்தை பார்க்காமலேயே திருப்பி விட்டு “எதுக்குடி அப்படி பார்த்துட்டு இருக்க?”  என்றான்.
 

” இல்ல அவளை நாங்க பாட்டு பாட சொல்லி கேக்குறப்போ நீ வரவே இல்ல திடீர்னு எங்க இருந்துடா வந்த அதுவும் அந்த பொண்ணு மேல படற உன் பார்வை வேறு ஏதோ சங்கதி சொல்லுதே!”  என்றாள்  தேவி.
 

“அது ஒன்னும் இல்ல தேவி நீங்க பண்றதெல்லாம் தூரத்தில் இருந்து பாத்துட்டு தான் இருந்தேன் என்னமோ அந்த பச்சைக்கிளி அப்படியே என் மனசுல பச்சைக்குனு ஒட்டிக்கிச்சு!”  என்றான். 
 

“டேய் நீயாடா இது இங்க எத்தனையோ பொண்ணுங்க உன் பின்னாடி சுத்திட்டு இருக்குறப்ப இப்ப பார்த்த ஒரு பொண்ணு பின்னாடி நீ சுத்த ஆரம்பிச்சுட்டியா? அதுவும் பச்சைக்கிளியின் வேற செல்ல பேர் எல்லாம் வச்சுக்கிட்டா?”  என்றான் தேவன். 
 

“அதுக்கு என்னடா பண்ண முடியும் காதல் சொல்லிட்டா வரும் அதுவா திடீர்னு வரும் அப்படியே புடிச்சுட்டு போயிட்டே இருக்க வேண்டியதுதான்! அவ பச்ச சுடிதார் போட்டுட்டு இருந்தா அவ எனக்கு காதல் கிளி அதனால பச்சை கிளி அப்படின்னு ஃபிக்ஸ் ஆயிட்டேன் !”என்றவன்

” நல்லா பிக்ஸ் பண்ணிக்கோங்க அவ இனிமேட்டு என்னோட ஆளு அவளுக்கு இங்கு யார் மூலமா எந்த தொந்தரவும் வராமல் நான் இல்லாத நேரத்தில் நீங்க தான் பாத்துக்கணும்!”  என்று கூறியவன் பெல் அடிக்கும் சத்தம் கேட்டு நண்பர்களுடன் டிபார்ட்மெண்ட் செல்ல தேவனும் அவர்களுக்கு கைகாட்டி விட்டு தன்னுடைய டிபார்ட்மெண்ட் நோக்கி சென்றான். 
 

அபியும் வழியாக தனது வகுப்பறையை தேடி அறைக்குள் நுழைந்தவள்  “எப்பா என்ன கன்னடா சாமி! அப்படியே மூழ்கிடுவேன் போல!” என்று சொல்லி தனது தலையை உலுக்கி கொண்டவள்

அங்கே இருந்த மாணவர்களை பார்த்து தயக்கத்துடன் சென்று ஒரு ஓரமாக இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.

கொஞ்சம் கொஞ்சமாக மாணவர்கள் உள் நுழைந்து அந்த வகுப்பறையை நிரம்ப ஆரம்பித்தது.

அதில் அவள் அமர்ந்திருந்த இருக்கைக்கு அருகில் வந்து இரு பெண்கள் அமர்ந்தனர். 
 

அதில் ஒருத்தியின் பெயர் வந்தனா மற்றொரு பெண் பெயர் சமிக்ஷா.
 

மூவரும் தங்கள் பெயர்களை சொல்லி ஒருவருக் கொருவர் அறிமுகப்படுத்திக் கொண்டனர்.
 

அதன் பிறகு ப்ரொபசர் வந்து தன்னை அறிமுகம் செய்துகொண்டு அனைவர் முன்பும் டிபார்ட்மெண்ட்டை பற்றி பேசி முடித்தவர் வருகை பதிவு  எடுத்துவிட்டு செல்ஃப் இன்றோ கொடுக்க சொல்லி அன்றைய காலை வேலை அப்படியே முடிய மத்திய லன்ச் வேளையில் மாணவர்கள் தங்கள் வகுப்பில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருக்க 
 

சில மாணவர்கள் மட்டும் வகுப்பறையில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருக்க பலர் கேண்டின்னுக்கு சென்று இருந்தனர். 
 

தனக்கு கிடைத்த புது தோழிகளுடன் சகஜமாக பேசிக்கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்தால் அபி. 
 

வீட்டில் படிச்சுட்டி பெண் ஆனால் வெளியே புதிதாக பழகுபவர்களிடம் உடனே பேசி ஐக்கியமாகி கொள்ள மாட்டாள்.  சற்று நாள் எடுத்துக் கொண்டு பழக ஆரம்பிப்பாள் ஆனால் பழகிவிட்டால் வாய் ஓயாத பேச்சுதான். 
 

அதுபோல் தான் தற்பொழுதும் அவள் அமைதியாக சாப்பிட்டு கொண்டிருக்க மற்ற இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். 
 

அப்பொழுது திடீர் என்று வகுப்பறைக்குள் யாரோ வரும் அரவம் கேட்டு திரும்பிப் பார்க்க அங்கே காலையில் பார்த்த தேவன் தேவி நமது ஹீரோ கரண்  அது மட்டுமில்லாமல்  தற்பொழுது தான் காலேஜுக்கு வந்த அவர்களுடைய தோழன் ஸ்ரீ நந்தன்
 

நால்வரும் உள்ளே நுழைந்து நேராக அபி இருந்த இருக்கைக்கு தான் வந்தனர். 
 

அதைக் கண்டவள் பயந்து தனது தோழியை ஒட்டி அமர்ந்து கொள்ள அபியை உரசி கொண்டே வந்து அமர்ந்த கரண்  உரிமையாக அவளது டிபன் பாக்ஸை பிடுங்கி சாப்பிட்டான்.  சாப்பிட்டு முடித்துவிட்டு தான் கேண்டினில் இருந்து வாங்கி வந்த உணவு பொட்டலத்தை அவளிடம்  கொடுத்து சாப்பிட சொன்னான். 
 

மற்றவர்களும் அதை சிரித்த முகமாக பார்த்திருக்க இது எல்லாம் சாப்பிடாமல் பார்த்துக் கொண்டிருந்த வந்தனா மற்றும் சமிக்ஷா இருவரையும் பார்த்த தேவி “என்ன நீங்க ரெண்டு பேரும் சாப்பிடுறீங்களா இல்ல உங்களோடதையும் புடுங்கி நாங்க சாப்பிடனுமா?”  என்று கேட்டவுடன் பெண்கள் இருவரும் குனிந்த தலை நிமிராமல் தங்கள் உணவை சாப்பிட்டு முடித்தனர். 
 

பாதி சாப்பாடு முடித்துவிட்டு அதையே பார்த்துக் கொண்டிருந்தவள் முகத்தின் அருகே கரண் நெருங்க அதில் பயந்தவள் பின்னால் நகர்ந்தால். 
 

“என்ன பாத்து பயப்படாதே முழுசா சாப்பிட்டு முடி!”  என்றான் .
 

“இல்ல என்னால இவ்வளவு சாப்பிட முடியாது ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க.. அதுவும் இல்..லாம நீங்க இப்..படி நெருங்கி உக்காந்துட்டு இருக்கிறது எனக்கு என்னமோ மாறி… இருக்கு ” என்று தட்டு தடுமாறி ஒரு வழியாக சொல்லி முடித்தால். 
 

அதைக் கேட்டு சிரித்த கரண்  “இனிமே இப்படித்தான் எனக்கு உன்னை பார்த்த உடனேயே பிடிச்சு போச்சு. அதனால நான் முடிவு பண்ணிட்டேன் நீயும் முடிவு பண்ணிக்கோ நம்ம ரெண்டு பேரும் கமிட்டட் யாராவது உன்கிட்ட வந்து நீ சிங்கிளான்னு கேட்டா இல்லன்னா கரனோட மிங்கில் ஆயிட்டேன் அப்படின்னு சொல்லிடு!”  என்றான்.
 

அதைக் கேட்டவள் கண்கள் இரண்டும் விரிய அதைப் பார்த்து சிரித்தவன் “இந்த கண்ணுல தாண்டி நான் விழுந்துட்டேன் !” என்றவன் முகம் அவளது கண்களை நோக்கிக் கொண்டு இன்னும் அவளுக்கு மிக நெருங்கி செல்ல அவளும் அவனின் பழுப்பு நிற கண்களை பார்த்துக் கொண்டிருந்தாள். 
 

இப்படியே பார்த்துக் கொண்டிருக்க லன்ச் முடிந்ததற்கான பெல் அடிக்க அதை கேட்டு சுயநினைவு வந்தவர்கள் நெருக்கத்தில் இருந்து பிரிய ” இன்னைக்கு சொன்னது தான் நாளையில் இருந்து எனக்கும் சேர்த்து சாப்பாடு கொண்டு வந்துரு. நீயும் நானும் கமிட்டட் அதை மனசுல வச்சுக்கோ என்ன அவாய்ட் பண்ணலாம்னு மட்டும் நினைக்காத அப்புறம் வேற ஒரு கரணை தான்  நீ பார்க்க வேண்டியது வரும் !” என்று கூறியவன்

அவள் மிச்சம் வைத்த சாப்பாட்டை மூடி எடுத்துக் கொண்டவன் அவளது விரலில் இருந்த சாப்பாட்டை அவன் விரலை சப்பி கொண்டே சாப்பிட்டு விட்டு “சாப்பாடு ரொம்ப டேஸ்டா இருந்தது . அதைவிட உன்னுடைய விரல் இன்னும் சூப்பரா இருந்துச்சு!”  என்று சொல்லிக் கொண்டே அங்கிருந்து சென்றுவிட கண்களில் கண்ணீர் வழிய அமர்ந்திருந்த அபி உடனடியாக வகுப்பறையை விட்டு வேகமாக  வெளியேறினால் இல்லை கிட்டத்தட்ட ஓடினாள்.
 

அவளது தோழிகளும் அவளை பின்தொடர்ந்து செல்ல கழிவறைக்கு சென்று கை கழுவியவள் அங்கே இருந்த சுவற்றில் தனது கையை வேக வேகமாக தேய்த்து தேய்த்து மீண்டும் கை கழுவ

அதை பார்த்த வந்தனா “என்னடி பண்ற எதுக்கு இப்படி பண்ணிட்டு இருக்க கைல இருந்து ரத்தம் வருது பாரு !” என்றாள் .

அவள் அழுத்தி தேய்த்த விதத்தில் தோல் கிழிந்து ரத்தம் வர “எனக்கு பிடிக்கல அவரு இப்படி பண்றது அவரு எச்சை இன்னும் என் கையில ஒட்டிக்கொண்டு இருக்கிற மாதிரி ஒரு பீல் வருது எனக்கு இது பிடிக்கல!”  என்று சொல்லிக் கொண்டே மீண்டும் மீண்டும்  கழுவி சுவற்றில் தேய்த்தால் விரலை. 
 

அதில் கோபமான சமிக்ஷா “ப்ளீஸ் இப்படி பண்ணாத ரத்தம் வருது என்று சொல்லிக் கொண்டே தோழியின் கையைப் பிடித்து நன்கு அதை கழுவி விட்டவள் தன்னுடைய  கர்ச்சிப்பை வைத்து கட்டி விட்டாள். 

“இங்க பாரு  அழுகுறத முதல்ல நிறுத்து நல்ல போல்டா இருக்கணும் புரியுதா?”  என்று வந்தனா கூறினாள். 

“ஆனா எனக்கு பயமா இருக்கு அந்த சீனியர் அப்படி பேசறது எனக்கு சுத்தமா பிடிக்கல !” என்றால். 

“அடுத்தவாட்டி பேசினா உனக்கு பிடிக்கலாங்கறத சொல்லிடு பாத்துக்கலாம்!”  என்று சொன்ன சமிக்ஷாவும் வந்தனாவும் அவளை அழைத்துக்கொண்டு வகுப்பறை சென்றனர். 
 

அன்று மாலை வகுப்புகள் முடிந்தவுடன் மீண்டும் கரன் வந்துவிடப் போகிறான் என்று பயந்த அபி வேகவேகமாக புத்தகங்களை எடுத்துக்கொண்டு ஓட ஆரம்பிக்க

அவளை பின்தொடர்ந்து அவளது தோழிகளும் அதைப் புரிந்து கொண்டவர்கள் சுற்றி பார்த்து கொண்டே  எங்கேயாவது போய் முட்டிக்காத என்று சொன்னவர்கள் சுத்திமுத்தி கரன் வருகிறானா என்று பார்த்துக் கொண்டே ஓடி ஒரு வழியாக கேட்டுக்கு வெளியே   கால் வைக்க அவன் இல்லை என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டு மீண்டும் கல்லூரியை பார்த்துவிட்டு திரும்ப மூவர் முன்பும் நின்று இருந்தான் கரன் கோபமான முகத்துடன்…

இன்றைய எபிசோடு எப்படி இருக்குன்னு சொல்லிட்டு போங்க நட்புகளே….

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page